Category: throwback

  • அல்லி நகரம் பண்ணைபுரத்துடன் இணைந்தது எப்படி? பாரதிராஜா குறித்த சுவாரசிய தகவல்

    அல்லி நகரம் பண்ணைபுரத்துடன் இணைந்தது எப்படி? பாரதிராஜா குறித்த சுவாரசிய தகவல்

    இன்று இயக்குனர் இமயம் பாரதிராஜா தன் உடல் நலக்குறைவால் காலமானார். அவர் இளையராஜாவுடன் இணைந்தது குறித்த ஒரு தகவல். தமிழ்சினிமா உலகில் இயக்குனர் இமயம் உருவாக்கிய தாக்கம் சாதாரணமானது கிடையாது. ஸ்டூடியோவுக்குள் உழன்ற சினிமாவைக் கிராமத்துக்குள் அழைத்துச் சென்று மண்வாசனையுடன் படங்களைக் கொடுத்தார். கதாநாயகனுக்கான வரையறைகளை மாற்றியவர். நாயகனுக்குக் கோவணம் கட்டி வெத்தலை சொதப்பி சப்பாணியாக மாற்றிக் காட்டியவர். தமிழ் சினிமா உலகில் அவர் வருகைக்கு முன் அவர் வருகைக்குப் பின் என்று சொல்லும் அளவுக்கு தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து இந்தியத் திரை உலகையே திரும்பிப் பார்க்கச் செய்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. அவர் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மரணம் நீண்ட பயணம். 

    பாரதிராஜாவின் சொந்த ஊர் தேனி மாவட்டத்தில் உள்ள அல்லி நகரம். அவரது தந்தை பெயர் பெரிய மாயத்தேவர். தாயார் பெயர் மீனாட்சி என்கிற கருத்தம்மா. 1941ம் ஆண்டு ஜூலை மாதம் 17ம் தேதி பிறந்தார். இவருக்கு 3 சகோதரிகள். 3 சகோதரர்கள். பாரதிராஜாவின் இயற்பெயர் சின்னச்சாமி. படைக்கும்போதே நடிக்கும் ஆர்வம் அவருக்கு வந்தது. நாடகங்கள் பார்க்கும் ஆர்வம் அவருக்கு இருந்தது. நாடகம் போடும் அளவுக்கு கதை எழுதினார். சுகாதார ஆய்வாளராக வேலை கிடைத்தது. ஊர் ஊராகச் சென்று மக்களிடம் நோய் பற்றி விசாரித்து ரிப்போர்ட் செய்யும் வேலை.

    அப்படி ஒருமுறை பண்ணைபுரம் சென்று இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கர் ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நண்பர்கள் ஆனார்கள். கம்யூனிஸ்ட் மேடைகளில் இசை வாசிக்க அண்ணன் பாவலர் வரதராஜனோடு சென்றவர்கள் பாரதிராஜாவின் நாடகத்துக்கு இசை அமைக்க மதுரை சென்றார்கள். பாரதிராஜாவின் ஊர் சிரிக்கிறது, சும்மா ஒரு கதை போன்ற நாடகங்கள் புதுமையாக இருந்தன. இவரது நாடக ஆர்வத்தைப் பார்த்த கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யாவின் மகன் அன்னக்கிளி செல்வராஜ் இவர்களுடன் நண்பர் ஆனார். 

    சினிமாவுக்கு சென்றால் பெரிய அளவில் புகழை அடையலாம் என்றனர். முதலில் அன்னக்கிளி செல்வராஜ் சினிமாவில் சேர சென்னைக்கு வந்தார். அதன் பின்பு பாரதிராஜா வந்தார். சினிமாவில் உடனே வாழ்க்கை அமையவில்லை. வாழ்க்கை நடத்துவதே பெரும்போராட்டமாக இருந்தது. திரைப்படங்களுக்கு இசை அமைத்து வந்த ஜிகே.வெங்கடேசன் அறிமுகம் கிடைக்க அவரிடம் கிதார் வாசிக்கச் சென்றார் இளையராஜா. 

  • பாரதிராஜா இயக்கத்தில் நடிக்கவிருந்த ஜெயலலிதா.. எந்த படம் தெரியுமா?

    பாரதிராஜா இயக்கத்தில் நடிக்கவிருந்த ஜெயலலிதா.. எந்த படம் தெரியுமா?

    தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவர் பாரதிராஜா. அதுவரை அரங்கத்திலேயே படப்பிடிப்பு நடந்த தமிழ் ச்னிமாவை வெளியுளத்திற்கு கொண்டு சென்றவர் இவர். கிராமத்து மக்களின் உணர்வுகளை வாழ்க்கை முறைகளை தத்ருபமாக தனது படங்களில் கொண்டு வந்தார் பாரதிராஜா. இவரது படங்களில் பதினாறு வயதினிலே, மண் வாசனை, கடலோர கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை, கிழக்கே போகும் ரயில் என கிராமத்து மணம் மாறாமல் சொன்ன கதைகள் ஏராளம். கிராமத்து கதைகள் மட்டுமல்லாமல் சிகப்பு ரோஜாக்கள், ஒரு கைதியின் டைரி , டிக் டிக் டிக் என வித்யாசமான வெற்றிப் படங்ளையும் கொடுத்துள்ளார்.

    puthumai pen

    பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1984ம் ஆண்டு வெளியான படம் புதுமைபெண். ஏவிஎம் தயாரித்த இந்த படத்தில் ரேவதி நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. முதலில் அந்த வேடத்தில் நடிக்க பாரதிராஜா முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நாடினார். அவருக்கும் அந்த கதை பிடித்து நடிக்க சம்மதித்தாராம். ஆனால்  ஏனோ திடீரென அந்த படத்தில் நடிக்கவில்லை.

  • 50 வருஷம் நான் எழுதிய பாடல்களில் பெஸ்ட் அதுதான்!.. வாலி சொன்ன அந்த பாட்டு!…

    50 வருஷம் நான் எழுதிய பாடல்களில் பெஸ்ட் அதுதான்!.. வாலி சொன்ன அந்த பாட்டு!…

    1958ம் வருடம் முதல் 2013ம் வருடம் வரை தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக கோலோச்சியவர் கவிஞர் வாலி. கருப்பு வெள்ளை காலம் முதல் கலர் சினிமா வரை மூன்று தலைமுறைகளுக்கு பாடல்களை எழுதியிருக்கிறார். திருச்சியை சொந்த ஊராகக் கொண்ட வாலி பாடலாசிரியராகும் ஆசையில் சென்னை வந்து பல முயற்சிகளுக்கு பின் திரைப்படங்களில் பாடல்களை எழுதும் வாய்ப்பை பெற்றார்.

    வாலியின் பல பாடல்களை பலரும் அது கண்ணதாசன்தான் எழுதியதுதாக நினைத்த காலம் உண்டு. அப்படி கண்ணதாசனுக்கு இணையாக பாடல்கள் எழுதியிருக்கிறார் வாலி. குறிப்பாக எம்.ஜி.ஆரின் ஆஸ்தான பாடலாசிரியராக வாலி இருந்தார். எம்.ஜி.ஆர் அரசியல்ரீதியாக தன்னை மக்களிடம் புரமோட் செய்வதற்கு வாலியின் பாடல்கள் பெரிதும் உதவின.

    அதேநேரம் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று வாலி சொல்லியிருப்பது மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவான மௌன ராகம் படத்தில் எழுதிய ஒரு பாடலைத்தான். பல வருடங்களுக்கு முன்பு ஒரு சினிமா மேடையில் பேசிய வாலி ‘தமிழ் சினிமாவின் பெருமையை முதன் முதலாக இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்தது மணிரத்தினம்தான். அது யாராலும் மறக்க முடியாத உண்மை. நிறைய பேர் ஹிந்திக்கு சென்று படம் எடுத்தாலும் இவரை போல் அங்கு ஹிட் கொடுத்தது இல்லை.

    மணி மணியா ஷாட் எடுப்பார்.. ரத்தின சுருக்கமா வசனம் எழுதுவார். அவரின் மௌன ராகம், அஞ்சலி, தளபதி அக்னி நட்சத்திரம் உள்ளிட்ட பல படங்களுக்கும் நான் பாடல்கள் எழுதியிருக்கிறேன். பாட்டை கேட்டு வாங்குவது என்பது ஒரு பெரிய சாமர்த்தியம். திறமையை குறைத்து மதிப்பிடும்படி பேசினால் கவிஞர்களுக்கு கோபம் வந்துவிடும். ஆனால், அதையெல்லாம் சமாலித்து நல்ல வார்த்தைகளை நம்மிடமிருந்து வாங்கி விடுவார்.

    என்னிடம் நண்பர் ஒருவர் ‘50 வருடங்களாக நீங்கள் சினிமாவில் எழுதுகிறீர்கள். நீங்கள் எழுதியதிலேயே சிறந்தது என்று நீங்கள் நினைக்கும் பாடல் எது?’ என்று கேட்டார். அதற்கு நான் சொன்ன பதில் ‘மௌனராகம் படத்தில் எழுதிய மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ’ பாடல்தான்’ என வாலி பேசியிருந்தார்.

  • மகேந்திரனிடம் எம்ஜிஆர் சொன்ன விஷயம்… பெரிய இயக்குனராக இதுதான் காரணமா?

    மகேந்திரனிடம் எம்ஜிஆர் சொன்ன விஷயம்… பெரிய இயக்குனராக இதுதான் காரணமா?

    கதாசிரியரும், இயக்குனருமான மகேந்திரன் மக்கள் திலகம் எம்ஜிஆருக்காக எழுதியதுதான் அனாதையில் என்ற நாடகம். அந்த நாடகத்தை என்றைக்கு திருச்சியில் அரங்கேற்றம் செய்ய வேண்டும் என்று நினைத்து இருந்தாரோ அதற்கு முதல் நாள் தான் கனமழை. மறுநாள் திருச்சி முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில அனாதையில் நாடகத்தை நடத்த முடியாது என்றதால், நாடகக்கலைஞர்கள் எல்லோரும் சென்னைக்குத் திரும்பி விட்டார்கள்.

    தன்னோட முதல் நாடகமே அரங்கேற்ற முடியலயே என்ற வருத்தம் மகேந்திரனுக்கு நிச்சயமாக இருந்தது. அதைத் தெரிந்து கொண்ட எம்ஜிஆர் மகேந்திரனை தன்னுடைய இல்லத்துக்கு அழைத்தார். இந்த நாடகத்தை அரங்கேற்றலையேன்னு கவலைப்படாதீங்க. நிச்சயமாக இந்த நாடகம் ஒருநாள் அரங்கேறும். அதுக்கு முன்னால நீங்க சினிமாத் தொழிலில் பயிற்சி பெற வேண்டும் என்று நான் விரும்புறேன். அடுத்து காஞ்சித்தலைவன் என்கிற படத்தில் நான் நடிக்க இருக்கேன்.

    அந்த படத்தை டைரக்ட் பண்ணப் போறவர் ஏ.காசிலிங்கம் ஜெயக்குமார். அவரைப் பொருத்தவரைக்கும் மெத்தப் படித்தவர். அது மட்டுமல்லாமல், உலக சினிமாவில் நல்ல ஞானம் உண்டு. அவருக்கிட்ட உதவி இயக்குனராக நீங்க கொஞ்சம் பணியாற்றினால் நல்ல சினிமாவைப் பற்றிய அறிவு இன்னும் விசாலமாகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு என்று சொல்லி அந்தப் படத்தில் உதவி இயக்குனராக மகேந்திரனை சேர்த்து விட்டார் எம்ஜிஆர். பின்னாளில் ஒரு கதை வசனகர்த்தாவாகவும், இயக்குனராகவும் மகேந்திரன் மிகப்பெரிய இடத்தைத் தொட்டார் என்றால் அதற்கு விதைப் போட்டது புரட்சித் தலைவர் எம்ஜிஆர். 

  • தளபதில் படத்தில் நான்தான் நடிக்க வேண்டியது!.. வருத்தமா இருக்கு!.. ஜெயராம் ஃபீலிங்!..

    தளபதில் படத்தில் நான்தான் நடிக்க வேண்டியது!.. வருத்தமா இருக்கு!.. ஜெயராம் ஃபீலிங்!..

    மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்தவர் ஜெயராம். தமிழில் கோகுலம் என்கிற திரைப்படம் மூலம் விக்ரமன் இவரை அறிமுகம் செய்துவைத்தார். நடிகராக மட்டுமில்லாமல் மிமிக்கிரி கலைஞராகவும் வலம் வருபவர் ஜெயராம். பொன்னியின் செல்வன் பட விழாவில் இவர் மணிரத்தினம் போலவும், பிரபு போலவும் பேசி காட்டிய வீடியோ ரசிகர்களிடம் பிரபலமானது.

    90களில் கதாநாயகனாக நடித்து வந்து ஜெயராம் ஒரு கட்டத்தில் குணச்சித்திர நடிகராக மாறினார். அதேபோல் பல படங்களில் வில்லனாகவும் ஜெயராம் நடித்திருக்கிறார். காந்தாரா 2 படத்தில் கூட வில்லனாக நடித்திருந்தார். சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய ஜெயராம் தன் திரை வாழ்க்கை தொடர்பான பல அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். அப்போது தளபதி படத்தில் நடிக்க முடியாமல் போனது பற்றியும் வருத்தமாக கூறியிருந்தார்.

    மணிரத்தினம் இயக்கிய தளபதி படத்தில் அரவிந்த்சாமி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு என்னை தேடி வந்தது. மம்முட்டிதான் அது பற்றி என்னிடம் முதலில் பேசினார். மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக கால்ஷீட் கேட்டார்கள். ஆனால் அப்போது நிறைய மலையாள படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் தளபதி படத்தின் நடிக்க முடியாமல் போய்விட்டது.

    ரஜினி, மம்முட்டியுடன் பல முக்கிய காட்சிகள் இருந்தும் தேதிகள் ஒத்து வராததால் அரவிந்த்சாமி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தேன்.. அது எப்போதும் எனக்கு வருத்தம்தான்’ என ஜெயராம் கூறியிருக்கிறார்.

  • 80களை தமிழ்சினிமா உலகின் பொற்காலம்னு சொல்றாங்க… அட இதுதான் காரணமா?

    80களை தமிழ்சினிமா உலகின் பொற்காலம்னு சொல்றாங்க… அட இதுதான் காரணமா?

    தமிழ்சினிமா உலகின் பொற்காலம்னா அது 1980 காலகட்டம்தான். அப்போ அப்படி என்னதான் நடந்தது? வாங்க பார்க்கலாம். 

    1980களை தமிழ்சினிமா உலகின் பொற்காலம்னு சொல்றாங்க. அப்படி சொன்னாங்கன்னா அதுக்கு பல காரணங்கள் இருக்கு. அதுல முதல் காரணம் அந்தக் காலத்துல தயாரிக்கப்பட்ட படங்கள் மிகப்பெரிய அளவில் ஓடலன்னா கூட தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய பொருட்சுமை இருக்காது.

    அதைத் தாண்டிப் பார்த்தா, படப்பிடிப்பு நடத்துறதே ஒரு இனிமையான அனுபவமா இருக்கு. அந்தளவுக்குப் படத்துல பணியாற்றிய நடிகர், நடிகைகள் எல்லாரும் தயாரிப்பாளர்களோடு ஒன்றிணைந்து செயல்பட்டார்கள். அதனால்தான் அந்தக் காலத்தைப் பொற்காலம்னு இன்று வரை எல்லோரும் சொல்லிக் கொண்டு இருக்காங்க என்கிறார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன். 

    இந்த பொற்காலத்தில் தான் பல நடிகர்கள் முன்னணி கதாநாயகர்கள் ஆனார்கள். கமல், ரஜினி, விஜயகாந்த், பிரபு, கார்த்திக், மோகன், டி.ராஜேந்தர், பாக்கியராஜ், முரளி, ராம்கி, மம்முட்டி, சிரஞ்சீவி, தியாகராஜன்னு பலரையும் சொல்லிக் கொண்டே போகலாம். இதே காலகட்டத்தில் தான் ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா, ராதா, அம்பிகா, ஊர்வசி, ராதிகா, ரதி, நதியா, ரேவதி, அமலான்னு பல முன்னணி கதாநாயகிகளும் வலம் வந்தனர்.

    அனைவரது படங்களும் சக்கை போடு போட்டன. அனைத்து படங்களுமே தயாரிப்பாளர்களின் கையைக் கடிக்காமல் குறைந்தபட்சம் போட்ட முதலையாவது திருப்பித் தந்தன. பெரும்பாலான படங்கள் ஹிட் அடித்தன. யார் நடிகர்னு கூட பார்க்க மாட்டாங்க. கதை நல்லாருந்தா படம் ஓடும் என்ற கான்செப்ட் இந்தக் காலகட்டத்தில் தான் தமிழ்சினிமா உலகில் வந்தது.

  • கோபத்தில் இருந்தேன்.. ஜென்டில்மேன் பண்ண முடியாதுன்னு சொன்னேன்!.. அர்ஜூன் சொன்ன பிளாஷ்பேக்!..

    கோபத்தில் இருந்தேன்.. ஜென்டில்மேன் பண்ண முடியாதுன்னு சொன்னேன்!.. அர்ஜூன் சொன்ன பிளாஷ்பேக்!..

    கர்நாடகாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்தவர்களில் அர்ஜுனன் ஒருவர். இவரை நிஜப் பெயர் ஸ்ரீநிவாஸ். தமிழில் அறிமுகமான முதல் படத்தில் இவர் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் அர்ஜுன். ‘இந்த பேர் உனக்கு பொருத்தமா இருக்கு.. இதையே நீ பேரா வச்சிக்கோ’ என அப்படத்தின் இயக்குனர் சொன்னதால் அதுவே அவரின்  பெயராக மாறிவிட்டது. இதை அவரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

    அர்ஜுன் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் அவரது கெரியரில் முக்கியமான படங்களாக அமைந்தது ஒன்று ஜென்டில்மேன், மற்றொன்று முதல்வன். இந்த இரண்டுமே ஷங்கர் இயக்கியவை..ஜென்டில்மேன் கதையை எழுதி ரஜினி, கமல் உள்பட பலரிடமும் கதை சொல்லி யாரும் நடிக்காமல் இறுதியாக அர்ஜுனை வைத்து அந்த படத்தை இயக்க ஷங்கர் முடிவெடுத்தார். இந்த படத்தில் நடித்தது தொடர்பாக ஊடகம் ஒன்றில் பேசிய அர்ஜுன் ‘தொடர் தோல்வி காரணமாக என்னை வைத்து படம் எடுக்க யாரும் முன் வரவில்லை. எனவே நானே கதை எழுதி, நானே நடித்து, நானே தயாரித்து நானே இயக்க முடிவெடுத்தேன். பிரதாப், சேவகன் போன்ற படங்கள் அப்படி வெளியானது.

    gentleman

    அப்படி நான் இயக்கிய முதல் படமான சேவகன் சூப்பர் ஹிட். எனவே இனிமேல் மற்ற தயாரிப்பாளர் படங்களில் நடிக்கக் கூடாது என முடிவெடுத்திருந்தேன். நான் கஷ்டப்படும்போது எனக்கு யாரும் உதவவில்லை. யாரும் நமக்கு வேண்டாம் என்கிற வைராக்கியத்தில் இருந்தபோதுதான் எனக்கு ஜென்டில்மேன் வாய்ப்பு வந்தது.

    அந்த படத்தில் நடிக்கக் கூடாது என முடிவெடுத்தேன். ஆனால், ஷங்கர் நான் செல்லும் பல இடங்களுக்கும் வந்து என்னிடம் அது பற்றி பேசினார். ஒரு டெக்னீசியனை அப்படி நடத்தக்கூடாது என்பதால் அவரை அழைத்து கதை கேட்போம்.. கதை கேட்டுவிட்டு நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிடலாம் என முடிவெடுத்து அவரிடம் கதை கேட்டேன். கதையை கேட்டு முடித்த பின் இவ்வளவு நல்ல கதையை எப்படி ரிஜெக்ட் செய்வது என்று யோசித்த நான் ’நான் நடிக்கிறேன்’ என சொல்லிவிட்டேன்’ என கூறியிருக்கிறார்.

  • சிவாஜிக்கு இணையாக 2வது படத்திலேயே கிடைத்த அனுபவம்… நெகிழ்ந்த சிவக்குமார்!

    சிவாஜிக்கு இணையாக 2வது படத்திலேயே கிடைத்த அனுபவம்… நெகிழ்ந்த சிவக்குமார்!

    சிவக்குமாருடைய அந்தப் புகைப்படங்களுக்கும் அவரது திரைவாழ்க்கைக்கும் மிக நெருக்கமான சம்பந்தம் இருக்கிறது. இந்தப் புகைப்படங்களை எடுத்தவர் அவரது நெருங்கிய நண்பர் ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸ். இந்தப் புகைப்படங்களைப் பார்த்து விட்டுத் தான் சித்ரா பௌர்ணமி என்ற படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பை சிவக்குமாருக்க வழங்கினார் கிருஷ்ணன் பஞ்சு. அந்தப் படம் சில காரணங்களால் வளரவில்லை. அதே போல தான் ஏவிஎம்.நிறுவனம் காக்கும் கரங்கள் படத்துக்காக புதுமுகத்தைத் தேடிக்கொண்டு இருந்தது. அப்போது சிவக்குமாரை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் கிருஷ்ணன் பஞ்சு.

    அந்தப் படத்தில் நடிக்கிறதுக்கு சிவக்குமாருக்கு 1000 ரூபாய் தான் சம்பளம். அந்தப் படத்தைத் தொடர்ந்து மோட்டார் சுந்தரம்பிள்ளை படத்தில் நடிக்கும் வாய்ப்பு சிவக்குமாருக்குக் கிடைத்தது. நடிகர் திலகம் சிவாஜியோடு சிவக்குமார் இணைந்து நடித்த முதல் படம் இதுதான். முதல் படத்தில் 1000 ரூபாய் சம்பளம் வாங்கிய அவருக்கு இந்தப் படத்தில் நடிக்க 1500 ரூபாய் சம்பளம். அது தவிர, உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி என்று ஒரு கடிதமும் அவருக்கு வழங்கப்பட்டது. மோட்டார் சுந்தரம்பிள்ளை எனக்கு 2வது படம் என்றபோதும், என்னை ரொம்ப கவுரவமாக ஜெமினி ஸ்டூடியோ நிறுவனத்தினர் நடத்தினர்.

    அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் சிவாஜி. கதாநாயகியாக நடித்தவர் சவுகார் ஜானகி. அவங்க ரெண்டு பேரும் நண்பகல் உணவுக்கு ஸ்டார் ஓட்டல்ல தங்களது உணவுகளை எல்லாம் ஆர்டர் பண்ணுவாங்க. அவங்க பெரிய நடிகர்கள். அவங்க ஸ்டார் ஓட்டல்ல ஆர்டர் பண்ணினா ஜெமினி நிறுவனம் வாங்கித் தரும். அது சரி. ஆனால் என்னைப் போன்ற புதுமுகங்கள் ஸ்டார் ஓட்டல்ல உணவை ஆர்டர் பண்ணியபோதும் அதை வாங்கித் தந்த பெருந்தன்மை ஜெமினி நிறுவனத்துக்கு இருந்தது. அதைப் பார்த்து பலமுறை நான் ஆச்சரியப்பட்டு இருக்கிறேன் என்று ஒரு பத்திரிகைப் பேட்டியில் பதிவு செய்துள்ளார் சிவக்குமார்.

  • எம்ஜிஆர் கொடுத்த யோசனை… சிவாஜி ஏற்ற பதவி… அப்புறம் நடந்ததுதான் விசேஷம்!

    எம்ஜிஆர் கொடுத்த யோசனை… சிவாஜி ஏற்ற பதவி… அப்புறம் நடந்ததுதான் விசேஷம்!

    நடிகர் சங்கத்துக்கு என்று தனியாக ஒரு கட்டடம் உருவானது என்றால் அது நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிகர் சங்க தலைவராக இருந்த காலகட்டத்தில் தான். அந்த சங்கத்தில் தலைவராகப் பணியாற்றக்கூடிய வாய்ப்பு எப்படி அமைந்தது என்பது குறித்து தன் சுயசரிதை நூலில் மிக விளக்கமாகத் தெரிவித்துள்ளார். என்னன்னு பாருங்க. 

    அப்போது எம்ஜிஆர் தமிழகத்தின் முதல் அமைச்சராக இருந்தார். நடிகர் சங்கத்துக்கு யாரைத் தலைவராகப் போடுவது என்று எல்லோரும் யோசித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் சிவாஜியைப் பிடிங்க. அவர்தான் இதுக்கு சரியான ஆளு. முதல்ல மாட்டேன்னு சொல்வாரு. ஆனா விடாதீங்க. கெட்டியாகப் பிடித்து அவரைத் தலைவராக ஆக்கி விடுங்கள் என்று எம்ஜிஆர் பலரிடம் சொல்லி இருக்கிறார். அவர் இப்படி சொன்ன உடனே மற்றவங்க விடுவாங்களா?

    அவங்க எல்லாரும் என்னைத் தேடி வந்தாங்க. அண்ணன் இப்படி சொல்றாருன்னு எங்கிட்ட சொன்ன உடனே, அவர் சொன்னதுக்காகவும், மற்றவர்கள் கேட்டுக் கொண்டதற்காகவும் அந்த சங்கத்தின் தலைவர் பொறுப்பை நான் ஏற்றேன். நடிகர் சங்கத்துக்குத் தலைவர் ஆனால், அந்த சங்கத்துக்கு ஏதாவது செய்ய வேண்டாமா? அதனால நடிகர் சங்கத்துக்கு ஒரு கட்டடமும், நாடக அரங்கமும் கட்ட வேண்டும் என்று நான் நினைத்தேன்.

    அந்தக் கட்டடம் கட்டுவதற்கு எம்ஏஎம்.ராமசாமி, நடிகர் நாகேஸ்வரராவ், கன்னட நடிகர் ராஜ்குமார் போன்ற பலரும் உதவினர். அந்தக் கட்டடத்தை நான் கட்டி முடிச்ச உடனே, இவனை எப்படி இந்த சங்கத்தை விட்டு வெளியேற்றுவது? என்று சிலர் யோசிக்கத் தொடங்கினர். ஒரு காலகட்டத்தில் அவர்களது முயற்சி வெற்றி பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். நான் நடிகர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வெளியே வந்து விட்டேன்.

    என் வாழ்க்கையில இதெல்லாம் புதுசு இல்லை. விதைக்கும்போது என்னைப் பக்கத்துல வச்சிக்குவாங்க. ஆனா அறுவடையின்போது, நான் இல்லாம பார்த்துக்குவாங்க. இதெல்லாம் எனக்குப் பழக்கமாகி விட்டது என்று குறிப்பிட்டுள்ளார் நடிகர் திலகம் சிவாஜி. 

  • ரோஜா கூட்டம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவரா? : சசி சொன்ன தகவல்

    ரோஜா கூட்டம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவரா? : சசி சொன்ன தகவல்

    தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் சசியும் ஒருவர். முதல் படமான ரோஜா கூட்டம் படத்தில் தொடங்கி, பூ, பிச்சைக்கரன், டிஷ்யூம், சொல்லாமலே என பல வெற்றிபடங்களை கொடுத்துள்ளார். இவரது இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா நடித்த நூறுசாமி இந்த மாதம் வெளியாக உள்ளது.

    சசியின் முதல் படமான ரோஜா கூட்டம் படத்தினை வானத்தை போல, ரமணா, தசாவதாரம் போன்ற பிளாக்பஸ்டர் படங்களை தயாரித்த அப்போதைய முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. 

    prabhu deva

    இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த இயக்குனர் சசி கூறியபோது, ரோஜாகூட்டம் படத்தில் முதலில் நான் பிரபுதேவாவைதான் நாயகனாக நடிக்க வைக்க முடிவு செய்திருந்தேன். அவரது அப்பா வேடத்தில் பிரகஷ் ராஜை அணுகினேன். ஆனால் அவர் தெலுங்கில் பிஸியாக இருந்ததால் நடிக்க முடியவில்லை. ஆனால் அவ்ர் இந்த படத்தை புதிய நடிகர்களை வைத்து எடுங்கள் என்று கூறினார். இதையடுத்தே ஸ்ரீகாந்த் இப்படத்தில் நடித்தார் என்று சசி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.