Category: throwback

  • வாழ்க்கையில் சந்தித்த அந்த அவமானம்… ஆக்ஷன் கிங்குக்கே இந்த நிலைமையா?

    வாழ்க்கையில் சந்தித்த அந்த அவமானம்… ஆக்ஷன் கிங்குக்கே இந்த நிலைமையா?

    ஆக்ஷன் கிங் அர்ஜூன் பேட்டி ஒன்றில் ஒரு முறை தன் வாழ்க்கையில் ஏற்பட்ட அவமானங்களையும், கஷ்டங்களையும் இப்படி சொல்லி இருக்கிறார். அவர் சொல்வதைப் பார்த்தால் ஆக்ஷன் கிங்குக்கே இந்த நிலைமையா என்று எண்ணத் தோன்றுகிறது. முதல்வன், ஜென்டில்மேன், தாயின் மணிக்கொடி, ஆயுத பூஜை, சுதந்திரம் என பல அதிரடி படங்களில் நடித்தவர். கட்டுமஸ்தான உடலுக்குச் சொந்தக்காரர். சிறந்த நாட்டுப்பற்றாளர்.

    அவரது படங்களில் இந்தியாவை அந்தளவுக்கு நேசிப்பதாகக் காட்டி இருப்பார். தேசத்துரோகம் பண்ணுபவர்களைத் துவம்சம் செய்வார். இவர் நடிக்கும் சண்டைக் காட்சிகள் ரொம்பவும் ரிஸ்க் ஆக இருக்கும். ரசிகர்களைப் பெரிதும் கவரும் வகையில் இருக்கும். முதல்வன், ஜென்டில் மேன் படங்களில் இவருடைய நடிப்பும், ஆக்ஷனும் செம மாஸாக இருக்கும்.

    அதே நேரம் ரிதம், கோகுலம் போன்ற மென்மையான காதல் மற்றும் குடும்பப் படங்களிலும் நடித்துள்ளார். சரி. விஷயத்துக்கு வருவோம். அப்பேர்ப்பட்ட ஆக்ஷன் கிங் அர்ஜூனுக்கு அப்படி என்னதான் அவமானம் நடந்தது? வாங்க அவரே என்ன சொல்றாருன்னு பார்க்கலாம். 

    ஒரு கட்டத்தில் தொடர்ந்து படங்கள் சரியாக போகவில்லை. அதனால் மிகப்பெரிய பைனான்ஸ் பிரச்சனை வந்தது. என்னிடம் இருந்த சொத்துக்களையே விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சம்பாதித்த பணம் எல்லாம் போய் விட்டது. அப்போது என்ன செய்வது என்றே தெரியாமல் இருந்தேன். நடிப்பை விட்டு விட்டு டிரைவராக வேலைக்குப் போய்விடலாமா என்று கூட யோசித்தேன் என்கிறார் அர்ஜூன். 

  • பாசமலர் வெளியாகி 65 ஆண்டுகள் நிறைவு: சிவாஜி – சாவித்ரி நடிப்பில் உருவான காவியம்

    பாசமலர் வெளியாகி 65 ஆண்டுகள் நிறைவு: சிவாஜி – சாவித்ரி நடிப்பில் உருவான காவியம்

    தமிழ் திரையுலகின் எவர்கிரீன்  பாசமலர்  திரைப்படம் வெளியாகி இன்றுடன்  65 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 1961-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியான இத்திரைப்படம், அண்ணன் – தங்கை பாசத்திற்கு இலக்கணமாக இன்றும் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

    தமிழ் சினிமாவின் நடிப்பு பல்கலை கழகம் சிவாஜியும், பெண் சிவாஜி  என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சாவித்திரியும் இணைந்து நடித்த படம் பாசமலர். ஏ.பீம்சிங் இயக்கிய அந்த படத்தில் ராஜசேகரன் – ராதா என்ர கதாபாத்திரத்தில் அண்ண தங்கையாக வாழ்ந்திருப்பர்கள் சிவாஜிய்ஜ்ம் சாவித்திரியும்.இவர்களுடன் ஜெமினி கணேசன், எம்.என். ராஜம் ஆகியோரின்  நடிப்பும் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

    pasa malar

    இத்திரைப்படத்தின் வெற்றிக்கு எம்.எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் இசையும் மிகப்பெரிய பலமாக இருந்தது.  மலர்ந்தும் மலராத பாதியைப் போல , எங்களுக்கும் காலம் வரும் ,  பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் மற்றும் வாராய் என் தோழி வாராயோ  போன்ற பாடல்கள் இன்றும் வானொலிகளிலும் சரி வீடு விசேசங்களிலும் காலம் கடந்தும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. கண்ணதாசனின் வரிகள் அண்ணன்-தங்கை உறவின் ஆழத்தை அற்புதமாக உணர்த்தின.

    1961ம் ஆண்டு மே மாதம் 27ம் தேதி வெளியான இத்திரைப்படம்  அக்காலத்திலேயே திரையரங்குகளில் நீண்ட நாட்கள் ஓடி மாபெரும் வசூல் சாதனை படைத்தது. அதுமட்டுமின்றி இப்படம் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் சிங்களம் உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.  இன்றும் அண்ணன் – தங்கை பாசம் என்று சொன்னாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது இந்தப் படம்தான்.

    pasa malar

    65 ஆண்டுகள் கடந்த பின்னரும், தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த இந்தக் காலத்திலும்,  கதையாலும் அழுத்தமான நடிப்பாலும் மக்களைக் கட்டிப்போட முடியும் என்பதற்கு  பாசமலர்  ஒரு மிகச்சிறந்த உதாரணம். இப்படம் வெறும் திரைப்படம் மட்டுமல்ல, தமிழ் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது என்பதுதான் உண்மை.

  • சிவாஜி பாடலில் மட்டும் அவ்ளோ தத்துவம்… எல்லாத்துக்கும் காரணம் இதுதானா?

    சிவாஜி பாடலில் மட்டும் அவ்ளோ தத்துவம்… எல்லாத்துக்கும் காரணம் இதுதானா?

    கண்ணதாசன் எம்ஜிஆர், சிவாஜி உள்பட பலருக்கும் பாடல்கள் எழுதி உள்ளார். அவை எல்லாமே சூப்பர்ஹிட்கள் தான். அவரது பாடல்களின் வரிகள் எளிமையானவை. மிகவும் ரசிக்கும் வகையிலும், சிந்திக்கும் வகையிலும் இருக்கும். அதே நேரம் சிவாஜியின் பாடலில் மட்டும் அது காதல் பாடல் ஆனாலும் சரி. சோகப்பாடல் ஆனாலும் சரி. வாழ்ந்து காட்டி இருப்பார் கண்ணதாசன். வாழ்க்கையில் நடக்கும் அத்தனை விஷயங்களுக்கும் விடை கொடுத்த வகையில் அவரது பாடல்கள் இருக்கும். காரணம் அனைத்தும் அவரது வாழ்க்கையோடு பொருந்தியவை. எப்படின்னு பாருங்க.

    கவியரசர் கண்ணதாசனின் பாடல்களில் சிவாஜியின் பாடலில் மட்டும் தத்துவங்கள் நிரம்பி வழியும். இதுக்கு என்ன காரணம்னா அவற்றில் பெரும்பாலான பாடல்கள் கண்ணதாசனின் வாழ்க்கையோடு பொருந்தியவை. வசந்த மாளிகையில் வரும் கலைமகள் கைப்பொருளே உன்னை கவனிக்க ஆளில்லையோ பாடல், மயக்கம் என்ன ஆகிய பாடல்களைச் சொல்லலாம். இந்தப் படத்தில் வரும் ஆனந்த் கதபாத்திரம் கூட கண்ணதாசனின் குணங்களுக்கு பொருந்தும் வண்ணம்தான் உள்ளன.

    அதனால் இந்தப் படத்தில் வரும் அத்தனைப் பாடல்களும் தரமாக உள்ளன. அவன் தான் மனிதன் படத்தில் வரும் மனிதன் நினைப்பதுண்டு, பாலும் பழமும் படத்தில் வரும் போனால் போகட்டும் போடா, பார் மகளே பார் படத்தில் வரும் அவள் பறந்து போனாளே, புதிய பறவை படத்தில் வரும் எங்கே நிம்மதி, நிச்சய தாம்பூலம் படத்தில் வரும் படைத்தானே, குங்குமம் படத்தில் வரும் மயக்கம் எனது தாயகம், ஆண்டவன் கட்டளை படத்தில் வரும் ஆறு மனமே ஆறு, ஆலயமணி படத்தில் வரும் சட்டி சுட்டதடா, பாவ மன்னிப்பு படத்தில் எல்லோரும் கொண்டாடுவோம், வந்த நாள் முதல், பார்த்தால் பசி தீரும் படத்தில் உள்ளம் என்பது ஆமை ஆகிய பாடல் வரிகளை உற்று நோக்குங்கள். அத்தனையும் கண்ணதாசனின் வாழ்வியலோடு பொருந்தும் வண்ணம் இருக்கும். 

  • யாரையும் விமர்சிக்க தயங்காத கவிஞர் கண்ணதாசன்… கெத்துன்னா இப்படி இருக்கணும்!

    யாரையும் விமர்சிக்க தயங்காத கவிஞர் கண்ணதாசன்… கெத்துன்னா இப்படி இருக்கணும்!

    கவிஞர் கண்ணதாசனைப் பொருத்தவரையில் ஒரு வித்தியாசமான மனிதர் என்று தான் சொல்ல வேண்டும். பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று பல அரசியல் ஆளுமைகளுடனும், பல கலையுலக ஆளுமைகளுடனும் மிக நெருக்கமாகப் பழகுகின்ற வாய்ப்பைப் பெற்றவர் கவிஞர் கண்ணதாசன். யாருடன் எல்லாம் நெருக்கமாகப் பழகுகின்ற வாய்ப்பைப் பெற்றாரோ, அவர்களில் ஒருவரைக்கூட விமர்சிக்காமல் கண்ணதாசன் விட்டதே இல்லை.

    அவங்க நல்லது பண்ணும்போதெல்லாம் வாயார வஞ்சனை இல்லாமல் பாராட்டிய கவிஞர் கண்ணதாசன் அவங்க தப்பு பண்ணுனாங்கன்னு தெரிஞ்சா போதும். கடுமையாக அவர்களை விமர்சிப்பதை பழக்கமாக வைத்து இருந்தார். அப்படி அவரால் விமர்சிக்க முடிந்தது என்றால் அதற்கு காரணம் இருக்கிறது. தனக்கு வேண்டியவர்கள் என்பதற்காக எக்காலத்திலும் அவர்களிடம் உதவி கேட்டு நின்றது இல்லை.

    அதே மாதிரி தான் அரசியல் வாழ்க்கையிலும் அரசியல் பிரமுகர்களிடம் தனக்கு இருந்த செல்வாக்கைக் கொண்டு தன் நிலையை உயர்த்திக் கொள்ள எக்காலத்திலும் அவர் பயன்படுத்தியது இல்லை. இதுபோன்ற அவரது குணங்கள் காரணமாகத் தான் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் எல்லோர் மீதும் அவரால் விமர்சனம் செய்ய முடிந்தது. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார். 

  • நடிப்பை விட்டு ஆக்டிங் டிரைவர் வேலை பார்க்க நினைச்சேன்!.. அர்ஜூன் சொல்லும் பிளாஷ்பேக்..

    நடிப்பை விட்டு ஆக்டிங் டிரைவர் வேலை பார்க்க நினைச்சேன்!.. அர்ஜூன் சொல்லும் பிளாஷ்பேக்..

    துவக்கத்திலேயே ஆக்சன் ஹீரோவாக அறிமுகமானவர் அர்ஜுன். தொடர்ந்து பல படங்களில் ஆக்சன் ஹீரோவாக நடித்ததால் இவருக்கு ஆக்சன் கிங் என்கிற பட்டமும் கிடைத்தது. பல ஹிட் படங்களை கொடுத்து முன்னேறினார் அர்ஜூன்.

    ஆனால், ஒரு கட்டத்தில் இவருக்கு மார்க்கெட் இல்லாமல் போனபோது சொந்த தயாரிப்பில் அவரே திரைப்படங்களை இயக்கத் தொடங்கி அதில் அவரே ஹீரோவாக நடித்தார். அப்படி வெளியான ஜெய்ஹிந்த், பிரதாப் போன்ற திரைப்படங்கள் வெற்றியை பெற்று அர்ஜுன் கம் பேக் கொடுக்க காரணமாக அமைந்தன..

    ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்து வெளியான முதல்வன் திரைப்படம் அர்ஜுனை ஒரு முக்கிய நடிகராக மாற்றியது. கோட் படத்தில் விஜயுடனும், விடாமுயற்சி படத்தில் அஜித்துடனும் இணைந்து நடித்திருந்தார் அர்ஜுன். இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ‘என் வாழ்வில் குறிப்பிட்ட காலத்தில் தொடர்ச்சியான நிதி நெருக்கடி ஏற்பட்டு என்னிடம் இருந்த சொத்துக்களை கூட விற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். பணம் அனைத்தும் நஷ்டமாகிவிட்டது. எனக்கு நன்றாக வண்டி ஓட்ட தெரியும் அதனால் நடிப்பை கைவிட்டு விட்டு பேசாமல் டிரைவிங் வேலைக்கு சென்று செல்லலாம் என்று கூட யோசித்தேன்.

    அத்தனை தோல்விகளுக்கு பிறகும் ‘நீ ஒரு நல்ல படம் கொடுத்தால் நாங்கள் பார்க்க தயாராக இருக்கிறோம்’ என்று ரசிகர்கள் என் மீது வைத்து நம்பிக்கையை என்னை மீண்டும் சினிமாவில் நிலை நிறுத்தியது.. இந்த நேரத்தில் எனக்கு ஆதரவு அளித்த பொதுமக்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என ஃபீலிங்காக பேசியிருக்கிறார் ஆக்சன் கிங் அர்ஜூன்.

  • ஜெயலலிதா தான் எனக்கு வில்லி… தயாரிப்பாளரிடம் பிடிவாதம் பிடித்த எம்ஜிஆர்!

    ஜெயலலிதா தான் எனக்கு வில்லி… தயாரிப்பாளரிடம் பிடிவாதம் பிடித்த எம்ஜிஆர்!

    எம்ஜிஆரின் நாடக மன்றத்திலும் அவரது திரைப்பட நிறுவனத்திலும் நிர்வாகியாக இருந்தவரும், எம்ஜிஆரின் அமைச்சரவையில் இருந்தவருமான ஆர்எம்.வீரப்பன் எம்ஜிஆரை வைத்து 6 திரைப்படங்களைத் தயாரித்து இருக்கிறார். அதுல 4 வது திரைப்படம் கண்ணன் ஒரு காதலன். சத்யா மூவீஸ் எம்ஜிஆரை வைத்து எடுத்த படங்களிலேயே மிகப்பெரிய தோல்வியைத் தழுவிய படம்னா கண்ணன் என் காதலன் படம் தான். அப்படி தோல்வியைத் தழுவியதற்குக் காரணம் எம்ஜிஆரின் தலையீடு தான் என்று ஒரு பத்திரிகைப் பேட்டியில் பதிவு செய்துள்ளார் ஆர்எம்.வீரப்பன்.

    அந்தப் படத்தைப் பொருத்தவரை 2 கதாநாயகிகள். அதுல ஒரு கதாநாயகியை எம்ஜிஆர் விரும்புவார். இன்னொரு கதாநாயகி எம்ஜிஆரை விரும்புகின்றவர். எம்ஜிஆர் வேறு பெண்ணை விரும்புகிறார் என்று தெரிந்ததும் தான் நொண்டியாக ஆகிவிட்டதைப் போல நடித்து நாடகமாடி அந்தக் கதாநாயகனுடைய அன்பையும், கருணையையும் பெற்று அவனைத் திருமணம் செய்து கொள்வது போன்ற கதாபாத்திரம். எம்ஜிஆரை ஏமாற்றுகின்ற கதாபாத்திரத்துல ஜெயலலிதா நடிச்சா சரியா இருக்காதுன்னு நினைச்ச ஆர்எம்.வீரப்பன், எம்ஜிஆர் விரும்புகின்ற கதாநாயகி வேடத்துல ஜெயலலிதாவை நடிக்க வைத்தார்.

    அந்த வேடத்துக்கு வாணிஸ்ரீ என்ற நடிகையை நடிக்க வைத்தார். வாணிஸ்ரீ அப்போதுதான் திரையுலகில் வளர்ந்து கொண்டு இருந்த ஒரு புதுமுகம். வாணிஸ்ரீ நடித்தா தான் அந்தக் கதாபாத்திரம் சிறப்பாக அமையும் என்பது அவருடைய கருத்தாக இருந்தது. ஆனால் கதையைக் கேட்ட ஜெயலலிதாவோ வாணிஸ்ரீ என்ன கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தாரோ அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பினார். அப்படிப்பட்ட தன்னோட கருத்தை எம்ஜிஆரிடமும் வலியுறுத்தி இருக்கிறார். அப்படி அவர் வலியுறுத்தியதன் காரணமாக அந்தக் கதாபாத்திரத்தில் அம்மு நடிக்கட்டும். அவங்க நடிச்சா தான் சரியா இருக்கும் என்றார் ஜெயலலிதா.

    உங்களோட பல படங்கள்ல ஜெயலலிதா ஜோடியா நடிச்சிருக்காங்க. அதனால அவங்க அந்தக் கதாபாத்திரத்துல நடிச்சா சரியா வராதுன்னு ஆர்எம்.வீரப்பன் பலமுறை எம்ஜிஆரிடம் சொல்லி இருக்கிறார். ஆனால் எம்ஜிஆர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அந்தக் கதாபாத்துக்குத் தான் படத்துல நடிப்பதற்குக் கொஞ்சம் வாய்ப்பு இருக்குன்னு அம்மு பலமுறை எங்கிட்ட சொல்லிருக்காங்க. அவங்களும் விரும்புறாங்க. அதனால அவரே நடிக்கட்டும் என்றாராம் எம்ஜிஆர்.

    அந்த முடிவை மட்டும் அன்று நான் ஏற்றுக் கொள்ளாம இருந்துருந்தா நிச்சயமாகக் கண்ணன் என் காதலன் வெற்றிப்படமாக அமைந்து இருக்கும். அந்த முடிவை நான் ஒத்துக்கொண்டதால்தான் அந்தப் படம் வெற்றிப்படமாக அமையவில்லை என்று தன்னோட கருத்தை பத்திரிகைப் பேட்டி ஒன்றில் ஆர்எம்.வீரப்பன் தெரிவித்துள்ளார்.
     

  • சிவாஜியின் 2 நிறைவேறாத ஆசை… ஒண்ணு அது… இன்னொன்னு எது?

    சிவாஜியின் 2 நிறைவேறாத ஆசை… ஒண்ணு அது… இன்னொன்னு எது?

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ் சினிமா உலகின் சிம்ம சொப்பனம். அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை எனலாம். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் உயிரோட்டமாக நடிப்பதில் வல்லவர். அவருடைய நடிப்பைத் தான் பார்த்து இன்று வரை உள்ள தமிழ்சினிமா நடிகர்கள் கற்று வருகிறார்கள். எந்த ஒரு காட்சியிலாவது எப்படி நடிக்க வேண்டும்? இந்தக் காட்சியில் கையை எப்படி வைப்பது? எப்படி நடப்பது? முகபாவனையை எப்படி வைப்பது என்று சந்தேகம் வந்துவிட்டால் பழைய சிவாஜி படங்களைப் பார்த்துக் கற்றுக் கொள்வார்களாம்.

    அப்பேர்ப்பட்ட சிவாஜியே 2 கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்பி அது நிறைவேறாமல் போயுள்ளது. அப்படி என்ன கதாபாத்திரம் அதுன்னு பார்க்கலாமா… இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் இப்படி தெரிவித்துள்ளார்.

    நடிகர் திலகம் சிவாஜியைப் பொருத்தவரை தந்தை பெரியார் வேடத்திலே நடிக்க வேண்டும் என்பது அவரது தீராத ஆசையாக இருந்தது. அந்த ஆசை அவரால் கடைசி வரை நிறைவேறவில்லை. பெரியார் மாதிரி சிவாஜி நடிக்க ஆசைப்பட்டதைப் போல மூதறிஞர் ராஜாஜி சிவாஜி திப்புசுல்தான் வேடத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். இந்த 2 ஆசைகளையுமே சிவாஜியால் நிறைவேற்ற முடியவில்லை என்று கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றில் பதில் அளித்துள்ளார் சித்ரா லட்சுமணன்.

  • கணவர் கேட்காமலேயே 15 லட்சம் கொடுத்த எம்ஜிஆர்… தேங்காய் சீனிவாசனின் மனைவி பளிச் தகவல்!

    கணவர் கேட்காமலேயே 15 லட்சம் கொடுத்த எம்ஜிஆர்… தேங்காய் சீனிவாசனின் மனைவி பளிச் தகவல்!

    எம்ஜிஆரின் ரசிகர் மட்டுமல்ல. அபிமானி. முரட்டுப் பக்தர். எம்ஜிஆர் மேல உயிரையே வச்சிருந்தார். அதனால் அவரை ரொம்ப பிடிக்கும். எவ்வளவு போராட்டம் வாழ்வில் வந்தாலும் யாரிடமும் எந்த உதவியும் கேட்கமாட்டார். இது எம்ஜிஆருக்கும் தெரியும். அவரே கேட்டு தான் உதவி செய்தார் என்கிறார் பிரபல நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசனின் மனைவி லட்சுமி. இவர் மேலும் என்னென்ன சொல்கிறார்னு பாருங்க.

    சொந்தப் படம் தயாரிக்கும்போது தேங்காய் சீனிவாசனை ஏன் இவ்ளோ ரிஸ்க் எடுக்குறேன்னு எம்ஜிஆர் அட்வைஸ் பண்ணினாராம். ஆனாலும் தேங்காய் சீனிவாசன் படம் தயாரித்து பெருத்த நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளார். ஒரு முறை அவர் மஞ்சள்காமாலை நோயால் பாதிப்புக்குள்ளாகி உடல் நலம் குன்றியும் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார். அந்த சமயத்தில் தேங்காய் சீனிவாசன் நண்பர் ஒருவருக்காக எம்ஜிஆரைப் பார்க்க சென்றபோது, எம்ஜிஆர் அவரைப் பார்த்ததும் என்ன இப்படி இருக்கே? இப்படி உடல் நிலை சரியில்லாம இருந்துக்கிட்டு ஏன் இங்கே வந்தேன்னு கேட்டுள்ளார்.

    அப்புறம் என்ன உடலுக்குன்னு அக்கறையுடன் விசாரிக்க அவரோ தான் படம் தயாரித்து 10 லட்சம் வரை நஷ்டம் ஆனதையும் எடுத்துச் சொல்லி இருக்கிறார். அதன்பிறகு அவரைக் கவனித்த டாக்டர் இன்னும் அதிகமாகக் கவனித்து சிகிச்சை அளித்தாராம். அதே போல் எம்ஜிஆரும் 15 லட்சம் வரை தேங்காய் சீனிவாசனுக்கு பண உதவி செய்தாராம். 
     

  • சிவாஜிக்கே தெரியாமல் அறிமுகமான பிரபு… அப்படி என்னதான் நடந்தது?!

    சிவாஜிக்கே தெரியாமல் அறிமுகமான பிரபு… அப்படி என்னதான் நடந்தது?!

    நடிகர் திலகம் சிவாஜி தமிழ்த்திரையுலகில் ஒரு சிம்ம சொப்பனம். அவரது நடிப்பை மெச்சாத கலைஞர்களே இல்லை எனலாம். அவரது சாயல் ஒவ்வொருவரின் நடிப்பிலும் நிச்சயம் இருக்கும். அது அவரது மகனுக்கு எப்படி இருக்கும்? இதுகுறித்து சிவாஜி என்ன சொல்கிறார்னு பாருங்க.

    நடிகர் திலகம் சிவாஜியின் கலைவாரிசான இளையதிலகம் பிரபு 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததோடு மட்டும் இல்லாமல் பல லட்சோப லட்ச மக்களின் இதயங்களையும் இன்று கொள்ளை கொண்டுள்ளார். அவரை சினிமா உலகிற்கு அழைத்து வர வேண்டும் என்பது சிவாஜியின் ஆசையாக இருந்ததா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. நான் அவனை ஒரு போலீஸ் ஆபீசரா ஆக்கணும்னுதான் நினைச்சிருந்தேன்.

    ஆனால் என்னுடைய நம்பிக்கையையும், ஆசையையும் அவன் அழிச்சிட்டான் அப்படின்னு சிவாஜியே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். நான் நடித்த சங்கிலி படத்தில் அவனை அறிமுகப்படுத்தப் போறாங்க. அதுவும் வில்லன் வேடத்துலன்னு எனக்கு தெரியவே தெரியாது. என்னுடைய தம்பியான சண்முகமும், இயக்குனர் சி.வி.ராஜேந்திரனும் செய்த வேலை. பிரபுவுக்கு என்று தனித்திறமை உண்டு. ஆனாலும் பல பேர் என்னை மாதிரியே அவன் நடிக்கிறான்னு சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

    என்னுடைய பையன் இல்லையா அவன்? அதனால எல்லோரும் பார்க்கும் பார்வை அப்படி இருக்கிறது. என்னை மாதிரியே அவன் நடிக்கிற மாதிரி எல்லோருக்கும் தோணுது. அவனைப் பொருத்தவரைக்கும் ஒரு விஷயத்தைச் சொல்லியே ஆக வேண்டும். அவன் ஒரு திறமையான ஆள் என்று ஒரு பேட்டியில் சிவாஜி பதிவு செய்துள்ளார். 

  • என் வயிற்றை அழுத்தி பார்த்து விஜயகாந்த் செய்த செயல்- மனம் திறந்த தவசி ராஜ்

    என் வயிற்றை அழுத்தி பார்த்து விஜயகாந்த் செய்த செயல்- மனம் திறந்த தவசி ராஜ்

    தமிழ் திரையுலகில் கேப்டன் என்று அழைக்கப்பட்டவர் விஜய்காந்த். 80, 90 களில் ரஜினிக்கு இணையாக ரசிகர்களை கொண்டிருந்தார். சொல்லப்போனால் கிராமப்புறங்களில் ரஜினியை விட விஜயகாந்திற்கு ரசிகர்கள் அதிகம்.  150 படங்களுக்கு மேல் திரைப்படங்களில் நடித்துள்ளார் கேப்டன். பின்னர் அரசியல் கட்சி துவங்கி எதிர்கட்சி தலைவர்பதவி  வரை சென்றவர் இவர்.

    திரையுலகில் ஹீரோவிலிருந்து  லைட் பாய் வரை ஒரே சாப்பாடு என்ற முறையை கொண்டுவந்தவரும் விஜயகாந்த் மட்டுமே. இவரை பின்பற்றியே பலரும் அதனைச் செய்தனர். அதேபோன்று டி நகரில் இருந்த தனது அலுவலகத்தில் வருபவர்களுக்கு சாப்பாடு போடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

    இந்த நிலையில் ஸ்டண்ட் மாஸ்டர் தவசிராஜ் விஜய்காந்த் குறித்த நினைவுகளை யூடியூப் சேனல் ஒன்றில் பகிர்ந்திருந்தார். அதில் அவர் கூறுகையில், வீரம் வெளஞ்ச மண்ணு படம் சண்டைக் காட்சி முடித்துவிட்டு நான் போய் படுத்திருந்தேன். அப்ப்போது அங்கு வந்த விஜயகாந்த் சார் என் வயிற்றில் கையை வைத்து அழுத்தி பார்த்தார். அயிறு கொஞ்சம் உள்ளே போயிருந்தது. உடனே என்னடா வயிறு இவ்வளவு உள்ளே ப்போயிருக்கு என்று கூறிவிட்டு எழுந்து வாடா சாப்பிடலாம் என்று கூறி தனக்கு வண்டஹ் சாப்பபட்டை எனக்கு போட்டாரு. அதனை என் வாழ்க்கையில் மறக்க முடியாது என்று கூறியிருந்தார். 

    கேப்டன் விஜயகாந்த் இந்த உலகை விட்டு சென்றாலும் அவரது உயர்ந்த குணத்தை இந்த உலகம் இருக்கும் வரை பேசிக்கொண்டே இருக்கும் என்பதுதான் உணமை.