Category: throwback

  • நடிகவேளைப் பாராட்டிய பெரியார்… என்ன சொன்னாருங்கறதுதான் விசேஷம்!

    நடிகவேளைப் பாராட்டிய பெரியார்… என்ன சொன்னாருங்கறதுதான் விசேஷம்!

    தமிழ்சினிமா உலகில் நடிகவேள் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படுபவர் எம்.ஆர்.ராதா. இவரைத் தந்தை பெரியார் மனம் திறந்து பாராட்டியுள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

    தந்தை பெரியாருக்கும், சினிமாவுக்கும் உள்ள தூரம் எவ்வளவு என்பது எல்லாரும் அறிந்த விஷயம். சினிமாவே பிடிக்காதவராக இருந்த தந்தை பெரியார், ஒரு நடிகரின் பெயரில் மன்றத்தைத் தன்னுடைய பெரியார் திடலிலே திறந்தார்  என்றால், அது நடிகவேள் எம்ஆர்.ராதாவின் மன்றம் மட்டுமே. நான் எப்படி சமுதாயத்தில் மாறுதல்களையும், புரட்சிக்கருத்துகளையும் கொண்டு வருவதற்காக பாடுபட்டு வருகின்றேனோ அதே மாதிரி ராதா அவர்களும், நல்ல நல்ல கருத்துகளை லிடாப்பிடியாக கொண்டு வருவதற்குப் பாடுபட்டு வருகின்றார்.

    அதே மாதிரி நாடகத்துறையிலும் நல்ல நல்ல கருத்துகளை விடாப்பிடியாக நடத்திக் கொண்டே வருபவர். பொதுவாக எல்லா நடிகர்களும் ரசிகர்கள் பின்னாடியே போவாங்க, ஆனால் ரசிகர்கள் தன்பின்னால் வர வேண்டும் என்று நினைத்தவர் நடிகவேள் எம்ஆர்.ராதா. ரசிகர்களுக்குப் பிடிச்ச கருத்தை அவர் மேடையில் எப்பவும் பேச மாட்டார். ரசிகர்களுக்குப் பிடித்த கருத்தை எந்நாளும் அவர் மேடையில் பேச மாட்டார். தான் என்ன கருத்தைச் சொல்லணும்னு நினைக்கிறாரோ அந்தக் கருத்தைத் தான் எல்லா மேடைகளிலும் அவர் ஒலிப்பார்.

    நான் நாடகங்களை ரொம்பவே ரசிப்பேன். அந்த நாடகங்களில் நடிக்கிறவங்க கூட எனக்கு எந்தக் காலத்திலும் உறவு இருந்தது இல்லை. அதையெல்லாம் தாண்டி ஒரு நாடகக்கலைஞரோடு எனக்கு உறவுன்னா, அது எம்ஆர்.ராதாவுடன் மட்டுமே என்று பல பத்திரிகைப் பேட்டிகளில் பதிவு செய்துள்ளார் தந்தை பெரியார். 

  • கண்ணதாசன் சொன்ன அந்த டைட்டில்…சந்தோசத்தில் துள்ளி குதித்த கமல்ஹாசன்

    கண்ணதாசன் சொன்ன அந்த டைட்டில்…சந்தோசத்தில் துள்ளி குதித்த கமல்ஹாசன்

    தமிழ் சினிமாவில்  நடிப்பு பல்கலை கழகம் என்றால் சிவாஜிக்கு அடுத்து கமல்ஹாசனுக்கு தனி இடம் உண்டு. அவர் ஏற்காத வேடங்களே இல்லை. இப்போது நடக்கும் சபவஙகளை தன் படத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பே கூறுவார். ஆளவந்தான், அன்பே சிவம், மும்பை எக்ஸ்பிரஸ் என அவரது புதிய முயற்சிகள் ஏராளம் உண்டு. 

    கமல்ஹாசன் 100வது படம் ராஜபார்வை. தனது சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக  தயாரித்த அந்த படத்தை சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கியிருந்தார். இளையராஜா இசையமைத்திருந்தார். 

    rajaparvai

    அந்த படத்திற்கு  ராஜபார்வை என்று பெயர் வைத்தது எப்படி தெரியுமா? அந்த படத்தின் பாடல்களை  இளையராஜா கம்போஸ் செய்துகொண்டிருந்தார். உடன் கமல்ஹாசனும்  இருந்தாராம். படத்தின் பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதினார். அப்போது இருவரும் இந்த படத்திற்கு தலைப்பு அமையவில்லை,  நீங்கள் ஏதாவது யோசனை சொல்லுங்களேன் என்று கண்ணதாசனிடம் கூறியுள்ளனர்.  உடனே கண்ணதாசன் ராஜ பார்வை என்று வையுங்கள் ஏனென்றால் கண் தெரியாதவந்தான் ராஜா மாதிரி  நடந்து சென்றுகொண்டிருப்பான் என்றாராம். இதனை கேட்ட இருவரும் அந்த டைட்டிலயே இறுதி செய்தார்களாம்.

  • 4 Years of Vikram: கமலுக்கு கம்பேக் கொடுத்த விக்ரம் !

    4 Years of Vikram: கமலுக்கு கம்பேக் கொடுத்த விக்ரம் !

    சரியான வெற்றிக்காக காத்திருந்த கமல்ஹாசனுக்கு பெரிய பிரேக்கை  கொடுத்த படம் விக்ரம்.  நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (ஜூன் 3, 2022) இப்படம் வெளியானது.

    ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அனிருத் இசையில் பத்தல பத்தல  என உலக நாயகன் போட்ட ஆட்டம் திரையரங்குகளை அதிரவைத்தது. கைதி  படத்தின் தொடர்ச்சியாக (LCU) இந்தப் படம் அமைந்தது ரசிகர்களுக்கு புதிதாக இருந்தது.

    விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு கமல்ஹாசன் மட்டுமே காரணமல்ல, அதில் நடித்த மற்ற நட்சத்திரங்களின் பங்களிப்பும் அளப்பரியது:
    அமர் என்ற கதாபாத்திரத்தில் அவரது புலனாய்வு மற்றும் நடிப்பு படத்திற்குத் தூணாக அமைந்தது. சந்தனம்  என்ற கொடூரமான வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருந்தார்.

    படத்தின் கடைசி 5 நிமிடங்களில் ரோலக்ஸ் ஆக சூர்யா கொடுத்த என்ட்ரி, இன்று வரை தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த தியேட்டர் மொமண்டுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இப்படம் உலகம் முழுவதும் சுமார் 450 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

    vijay sethupathi

    தமிழகத்தில் மட்டும் 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து, அப்போதைய நிலையில் பாகுபலி 2 படத்தின் சாதனையை முறியடித்து முதலிடத்தைப் பிடித்தது.
    இந்த வெற்றியின் மூலம் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மிகப்பெரிய லாபத்தை ஈட்டியது.

    ‘விக்ரம்’ வெறும் ஆக்ஷன் படம் மட்டுமல்ல; அது ஒரு மல்டி-ஸ்டாரர்  கலாச்சாரத்தைத் தமிழ் சினிமாவில் மீண்டும் கொண்டு வந்தது. அனிருத்தின் பின்னணி இசை, கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு எனத் தொழில்நுட்ப ரீதியாகவும் இப்படம் உலகத் தரத்தில் இருந்தது.

    surya

    நான்கு ஆண்டுகள் கடந்தாலும்,  ஏஜென்ட் விக்ரம்  மற்றும்  ரோலக்ஸ்  இடையேயான அந்த மோதலுக்காகவும், விக்ரம் 3-ம் பாகத்திற்காகவும் ரசிகர்கள் இன்றும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர்

  • படங்களுக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டுவது எப்படி? தயாரிப்பாளர் சொன்ன அபூர்வ தகவல்!

    படங்களுக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டுவது எப்படி? தயாரிப்பாளர் சொன்ன அபூர்வ தகவல்!

    அந்தக் காலத்தில் படத்தின் பெயரே கதை எப்படி என்று சொல்லி விடும். படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டும். அந்தளவுக்கு ஒரு ஈர்ப்புடன் இருக்கும். ஆனால் இன்று வரும் படங்களில் பெரும்பாலானவை ஆங்கிலத் தலைப்புகள் தான். அடிப்படைக் கருத்தை ஒட்டியும் அந்தத் தலைப்புகள் அமைவதில்லை. அந்த விஷயத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தனி ரகம் தான். அவரது படங்ளுக்கு அவர் தான் பெயர் சூட்டுவாராம். எப்படின்னு பார்க்கலாமா…

    புரட்சித்தலைவர் எம்ஜிஆரைப் பொருத்தவரைக்கும் அவர் நடிக்கின்ற திரைப்படங்களின் கதை, பாடல்கள் மட்டும் இல்லாம படத்தின் தலைப்பிலும் மிகுந்த கவனம் செலுத்தினார். அவர் படங்களுக்குப் பெயர் சூட்டும் விதத்தைப் பற்றிச் சொல்ல வருகிற போது தன்னுடைய படங்கள் சொல்ல வருகின்ற அடிப்படைக் கருத்தை உணர்த்தி, மக்களிடம் அதைக்கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலே அவர் கொண்டு போய் சேர்ப்பார் என்று அவர் பெயர் வைக்கிற திறமையைப் பற்றிப் பல பத்திரிகைப் பேட்டியில் பதிவு செய்துள்ளார் ஏவிஎம்.சரவணன்.

    உதாரணமாக அவரது படங்கள் பலவற்றின் பெயரைச் சொல்லலாம். நீதிக்குத் தலைவணங்கு, நீதிக்குப் பின் பாசம், தாய் சொல்லைத் தட்டாதே, தாய்க்குப் பின் தாரம், தர்மம் தலைகாக்கும், அன்னமிட்ட கை, ஊருக்கு உழைப்பவன், சிரித்து வாழ வேண்டும், இன்று போல் என்றும் வாழ்க, நாளை நமதே, பெற்றால் தான் பிள்ளையா?, திருடாதே என்று தான் சொல்ல நினைக்கிற கருத்துகளையே படங்களுக்குப் பெயராகச் சூட்டியவர்தான் எம்ஜிஆர். அவர் தன் திரைப்படங்களுக்கு சூட்டிய அந்த அழகான பெயர்களைப் போல இப்போ எந்தப் படத்திலாவது பார்க்க முடிகிறதா? 

  • என்னது எம்ஆர்.ராதா கிருஷ்ணர் வேஷத்துல நடிச்சாரா? இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?

    என்னது எம்ஆர்.ராதா கிருஷ்ணர் வேஷத்துல நடிச்சாரா? இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?

    நடிகவேள் எம்ஆர்.ராதா எப்படிப்பட்ட ஆற்றல் மிக்க நடிகர் என்பது நமக்குத் தெரியும். அதே நேரத்தில் அவர் எப்படிப்பட்ட கொள்கைகளுக்குச் சொந்தக்காரர் என்பதும் நாம் அறிந்ததே. அதுல முக்கியமாக இருந்தது கடவுள் மறுப்புக் கொள்கை. திராவிட கழகத்தின் மீது தீவிர பற்றாளராக இருந்தார். அதனால் கடவுள் மறுப்பு கொள்கைiயிலும் தீவிரமாக இருந்தார். அப்படி இருந்தவருக்கு நாடகத்துல முதன் முதலாகக் கிடைத்தது கிருஷ்ணர் வேடம்.

    இதுபற்றி அவரது மனைவி தனலெட்சுமி ஒரு பேட்டியில் அழகாக விவரித்துள்ளார். என் கணவருடைய குடும்பத்தினருக்கு பூர்வீகம் ஆந்திராவில் உள்ள சித்தூர். அவரது அப்பா ராணுவத்தில் இருந்தார். என் கணவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை. வேதகிரி மேஸ்திரி தெருவில்தான் அவருடைய வீடு இருந்தது. 8 வயசுல வீட்டை விட்டுக் கோபித்துக் கொண்டு போனவர் ஒரு நாடகக் கம்பெனியில் சேர்ந்து விட்டார். அங்கே போனதும் அவருக்குக் கிடைத்தது கிருஷ்ணர் வேஷம்.

    அதை ரொம்ப நல்லா பண்ணிருக்காரு. கையில் காப்பு, மோதிரம் எல்லாம் போட்டு அவரை மிகச்சிறப்பாகக் கவனித்திருக்கிறார்கள். 2 வருஷம் அந்த நாடகக்கம்பெனியில இருந்தவருக்கு அவரது அம்மா நினைவு வந்தது. அதனால் தான் சென்னைக்கு அவர் மீண்டும் திரும்பி வந்தார். நாடகக்கலைஞரான அவருக்குப் பின்னாளில் திரைப்படங்களில் நடிக்க பல வாய்ப்புகள் வந்தன என்றாலும் அவரைப் பொருத்தவரைக்கும் நாடகக்கலையைத் தான் அவர் உயிராக மதித்தார்.

    எண்ணற்ற நாடகங்களில் நடித்த அவரைத் தேடி பல திரைப்பட வாய்ப்புகள் வந்தன. திரைப்படங்களில் எப்படிப்பட்ட திறமையாளராக இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. பல வெற்றிப்படங்களில் நடித்து இருந்தபோதும் அவர் உயிருக்கு உயிராக மதித்ததுன்னா நாடகக்கலையைத் தான் என்று ஒரு பத்திரிகைப் பேட்டியில் பதிவு செய்துள்ளார் அவரது மனைவி தனலெட்சுமி. 

  • சிவக்குமார் சொன்ன அந்த ரெண்டும் அப்படியே பலித்ததே… ரஜினிகாந்த் ஆச்சரியம்!

    சிவக்குமார் சொன்ன அந்த ரெண்டும் அப்படியே பலித்ததே… ரஜினிகாந்த் ஆச்சரியம்!

    சிவக்குமாரோடு கவிக்குயில், புவனா ஒரு கேள்விக்குறி ஆகிய 2 படங்கள்ல தான் ரஜினிகாந்த் இணைந்து நடித்துள்ளார். அவரோட நான் நடிச்சது 2 படங்கள் தான் என்றாலும் அந்தப் படத்துல நடிக்கும்போது நான் அவருக்கிட்ட இருந்து கத்துக்கிட்ட நல்ல விஷயங்களை ஒரு நாளும் என்னால மறக்க முடியாது என்கிறார் ரஜினிகாந்த்;. வேறு என்னவெல்லாம் சொல்றாருன்னு பாருங்க. 

    படங்களில் நடிக்கும்போது மது, புகைப்பிடிப்பது போன்ற பழக்கங்கள் எனக்கு இருந்தன. சிவக்குமார் என்னைப் பார்க்கும்போதெல்லாம் இதெல்லாம் விட்டுரு. நிச்சயமா எதிர்காலத்துல நீ மிகப்பெரிய நடிகனா வருவ. அதனால உன் உடம்பைக் கெடுத்துக்காதன்னு தினமும் எங்கிட்ட சொல்வாரு. என்னடா இந்த மனுஷனோட ரொம்ப தொல்லையா போச்சுன்னு பலமுறை நான் சலிச்சிக்கிட்டு இருக்கேன். என் மேல இருந்த அக்கறையில தான் அவரு அப்படி சொல்லிக்கிட்டு இருந்தார்.

    அந்தளவுக்கு என் மேல அன்பு, பாசம், மரியாதை எல்லாம் வச்சிருந்தார். அவர் ஒரு நல்ல மனிதர். நல்ல உள்ளம் கொண்டவர். ஒழுக்கமானவர். நேர்மையானவர். ஆண்டவனால ஆசிர்வதிக்கப்பட்டவர். இதுபோன்ற மனிதர்கள் சொல்றது எல்லாம் பலிக்காமல் இருக்குமா? நீ பெரிய நடிகனா வருவன்னு அவரு சொன்னது அப்படியே பலித்தது. அது மாதிரி இன்னொன்னு சொன்னாரு. இதுபோன்ற தீய பழக்கங்களால உன்னோட உடம்பு கெடும்னு. அதுவும் பலித்தது.

    என்னுடைய உடல் நலம் பாதிக்கப்பட்டது என்றால் அதுக்குக் காரணம் அப்போது என்னிடம் இருந்த பழக்கங்கள்தான். இன்றைக்கும் நான் அவருடன் நடித்த படங்களை எல்லாம் பார்க்கும்போது அவர் சொன்னது என்னோட மனத்திரையில் அப்படியே ஓடும் என்று ஒரு பத்திரிகைப் பேட்டி ஒன்றில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பதிவு செய்துள்ளார்.   

  • நேரத்துக்கு வரச் சொன்ன கம்பெனி… லெப்ட் அண்ட் ரைட் கொடுத்த ஸ்ரீதர்!

    நேரத்துக்கு வரச் சொன்ன கம்பெனி… லெப்ட் அண்ட் ரைட் கொடுத்த ஸ்ரீதர்!

    நாராயணன் கம்பெனி பட்டண்ணாகிட்ட இவர்தான் ஸ்ரீதர் ரத்த பாசம், எதிர்பாராதது படத்துக்கு எல்லாம் வசனம் எழுதியவர். ரொம்ப பிரமாதமா எழுதுவார்னு அறிமுகம் செய்து வைத்தார் ஜெமினிகணேசன். அந்த அறிமுகத்துக்குப் பின்னால ஸ்ரீதர் எழுதுவது என்று முடிவானது. வசனத்துக்கு ஏதாவது மாறுதல் தேவைப்பட்டா நீங்க வந்து எழுதிக்கொடுக்கணும்னு பட்டண்ணா ஸ்ரீதரைக் கேட்டுக்கொண்டார்.

    அதுவும் அவருக்கு நியாயமாகப்பட்டது. ஸ்ரீதருக்கு அதுல எந்த ஆட்சேபனையும் இல்லை. நிச்சயமாக நான் மாற்றிக் கொடுக்குறேன்னு ஒப்புக்கொண்டார். அதுக்கு அப்புறம் பட்டண்ணா போட்ட ஒரு நிபந்தனை தான் அந்த நிறுவனத்துல ஸ்ரீதர் பணிபுரிய முடியாத அளவு ஒரு சூழலை ஏற்படுத்தியது.

    நீங்க தினமும் காலைல 9மணிக்கு ஆபீஸ் வந்துடணும்னு சொன்னார் பட்டண்ணா. அதைக் கேட்ட உடனே ஸ்ரீதருக்கு வந்த ஆத்திரத்துக்கு அளவே இல்லன்னு தான் சொல்லணும். நான் இங்கே கதாசிரியர் வேலை பார்க்கப் போறேனா, குமாஸ்தா வேலை பார்க்கப் போறேனா? கதையைப் பொருத்த வரைக்கும் பகல்ல எழுதுவேன். ராத்திரி எழுதுவேன். எப்போ வேணாலும் எழுதுவேன். நினைச்ச நேரத்துல எழுதுவேன்.

    அதனால உங்க ஆபீஸ் கிளார்க் மாதிரி தினமும் காலைல 10 மணிக்கு எல்லாம் வர முடியாதுன்னு தெளிவாகச் சொல்லிவிட்டார் ஸ்ரீதர். அதன்பிறகு நடந்தது என்னனன்னு சொல்லவா வேணும்? ஸ்ரீதருக்கு அங்கு வேலை செய்யக்கூடிய வாய்ப்பு கிடைக்கல. நாராயணன் கம்பெனியைத் தொடர்ந்து மாடர்ன்ஸ் தியேட்டர்ல இருந்து அழைப்பு வந்தது. அதன் அனுபவம் இன்னும் சுவாரசியமானது. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார். 

  • இவனை எங்க இருந்து புடுச்சீங்க… கமலை பார்த்து கேட்ட மனோரமா

    இவனை எங்க இருந்து புடுச்சீங்க… கமலை பார்த்து கேட்ட மனோரமா

    தமிழ் சினிமாவின் நடிப்பு பல்கலை கழகம் என்றால் சிவாஜிக்கு அடுத்து கமல்ஹாசன்தான். அவரது நடிப்பில் வந்த ராஜ பார்வை, அபூர்வ சகோதரர்கள், அன்பே சிவம் தசாவதாரம் போன்ற படங்கள் சிறு உதாரணம் மட்டுமே. தமிழ் சினிமாவில் அவர் ஏற்று நடிக்காத வேடங்களே கிடையாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

    kamal

    இந்த நிலையில் பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தசாவதாரம் படப்பிடிப்பில் நடந்த சம்பவம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அவர் கூறியபோது, தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஆச்சி மனோரமாவும் நடித்திருந்தார். அந்த படத்தில் கமல்ஹாசன் ஒரு வெள்ளைக்காரன் வேடத்தில் நடித்திருப்பார்.  அந்த வேடத்தில் நடித்தவர் கமல் என்றே அவ்ருக்கு தெரியாது. ஒருநாள் மனோரமா என்னிடம் தம்பி அந்த வெள்ளைக்கரன பார்த்தால் மட்டும் ரொம்ப பயமா இருக்கு. அவனை எங்கே இருந்து பிடித்துக் கொண்டு வந்தீர்கள் என கேட்டாங்க. அதுவும் கமல் சார்தான் என்று நான் சொன்னேன். அய்யய்யோ கமல் சாரானு சொல்லிவிட்டு அவர் அருகே சென்று நீயாப்பா என்று அழுதுட்டாங்க. யாருண்ணே தெரியத அளவிற்கு பண்றதுல கமல் சார் கில்லாடி என்று கே.எஸ்.ரவிக்குமார் கூறியிருந்தார்.

  • 40 ஆண்டுகளை கடந்த விக்ரம்! இன்றும் குறையாத மிரட்டல்!

    40 ஆண்டுகளை கடந்த விக்ரம்! இன்றும் குறையாத மிரட்டல்!

    திரையுலகில் துரந்தர்,  மிஸ்டர் எக்ஸ் போன்ற ஸ்பை-த்ரில்லர் படங்கள் தற்போது வெளிவந்து வரவேற்பை பெற்று வருகின்றன. ஆனால் 40 ஆண்டுகளுக்கு முன்பே அப்படியொரு படம் வெளிவந்துள்ளது இபோதைய தலைமுறையினருக்கு தெரிய வாய்ப்பில்லை. கடந்த 1986-ஆம் ஆண்டு மே மாதம் 29-ஆம் தேதி வெளியானது  விக்ரம் . கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்  தயாரிப்பில் உருவான இப்படம், தொழில்நுட்ப ரீதியாகவும் கதையம்சத்திலும் அன்றைய காலகட்டத்தை விட பல ஆண்டுகள் முன்னோக்கிச் சென்ற ஒரு படைப்பாக பார்க்கப்படுகிறது.  இப்படம் வெளியானபோது இந்தியத் திரையுலகையே வியப்பாக பார்த்தது.

    இப்படத்தை அப்போதைய கமர்ஷியல் வெற்றிப்பட இயக்குனர் ராஜசேகர் இயக்கியிருந்தார். பிரபல எழுத்தாளர் சுஜாதா மற்றும் கமல்ஹாசன் இணைந்து திரைக்கதை அமைத்தனர். இசைஞானி  இளையராஜா. இப்படத்தில் அவர் பயன்படுத்திய கணினி இசை  மற்றும் பின்னணி இசை இன்றும் ஒரு பாடப்புத்தகமாக உள்ளது.

    பி.எஸ். நிவாஸ் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலமாக இருந்தது. வெளிநாட்டு லொகேஷன்களையும், ஆக்ஷன் காட்சிகளையும் சர்வதேசத் தரத்தில் படம்பிடித்தார் அவர்.

    தமிழ் சினிமாவில் பாடல்களுக்கும், பின்னணி இசைக்கும் முதன்முதலில் கணினி இசை  பயன்படுத்தப்பட்டது இப்படத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.  விக்ரம்.. விக்ரம்.  என்ற டைட்டில் பாடல் இப்போது கேட்டாலும் புது உணர்வை கொடுக்கும்.

    vikram movie

    ஒரு கடத்தப்பட்ட ஏவுகணையை மீட்பதுதான் படத்தின் மையக்கதை. ஒரு ஏவுகணையைச் சுற்றி ஒரு முழுப்படத்தின் கதையை அமைத்தது அப்போது ரசிகர்களுக்குப் பெரும் பிரமிப்பை ஏற்படுத்தியது. இப்படத்தின் பெரும்பகுதி ராஜஸ்தான் மற்றும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டது. ஒரு உலகளாவிய உளவாளி எப்படி இருப்பார் என்பதை  ஏஜென்ட் விக்ரம்  கதாபாத்திரத்தின் மூலம் கமல் நிரூபித்தார். சத்யராஜ் , அம்பிகா, லிசி, டிம்பிள் கபாடியா மற்றும் சாருஹாசன் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது. 

    40 ஆண்டுகளைக் கடந்தும், இன்றைய நவீன தொழில்நுட்பக் காலத்திலும்  விக்ரம் (1986)  ஒரு முன்னோடித் திரைப்படமாகத் திகழ்கிறது என்பது மிகையாகாது.

  • விக்ரமனிடமே முறைத்துக்கொண்டு கிளம்பிய விஜய்!.. எஸ்.ஏ. சந்திரசேகர் புட்டு புட்டு வச்சிட்டாரு!..

    விக்ரமனிடமே முறைத்துக்கொண்டு கிளம்பிய விஜய்!.. எஸ்.ஏ. சந்திரசேகர் புட்டு புட்டு வச்சிட்டாரு!..

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகனும் நடிகருமான விஜய் குறித்து பல சுவாரஸ்யமான நினைவுகளை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். இந்த பேட்டியில், விஜயின் ஒழுக்கம், வளர்ச்சி, ஆரம்பகால சவால்கள் மற்றும் ஒரு நடிகராக அவர் உருவாகிய விதம் குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

    இயக்குனர் சித்ரா லக்ஷ்மணன், “விஜய் படப்பிடிப்பு தளங்களில் நேரத்தை மதித்து செயல்படுவது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” எனக் கேட்டபோது, எஸ்.ஏ.சந்திரசேகர் தனது அனுபவங்களை பகிர்ந்தார்.

    அவர் கூறுகையில், “நான் தொடர்ந்து அவருடன் ஐந்து படங்கள் பணியாற்றியிருக்கிறேன். என்னைப் பார்த்துதான் அவருக்கு அந்த பழக்கம் வந்திருக்கலாம். ஆரம்ப காலங்களில் சில தவறுகளும் நடந்திருக்கின்றன. ஒரு முறை விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருந்த போது, கருத்து வேறுபாடு காரணமாக யாரிடமும் சொல்லாமல் படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியேறிவிட்டார். ஆனால் ஒரு இயக்குநர் ‘பேக் அப்’ சொல்லாமல் அந்த இடத்தை விட்டு வரக்கூடாது. அந்த நேரத்தில் நான் கவுன்சிலில் வைஸ் பிரசிடெண்டாக இருந்ததால், இப்படிச் செய்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை அவருக்குப் புரியவைக்க விஜயை கவுன்சிலில் உட்காரவைத்தேன்,” என்றார்.

    மேலும், “கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்தின் படப்பிடிப்பு விஜிபியில் நடைபெற்ற போது, இயக்குநர் ரங்கநாதன் விஜயை சாலையோரத்தில் உட்கார வைத்து மேக்கப் போட்டதாக அவர் கோபத்தில் அங்கிருந்து வெளியேறிவிட்டார். பின்னர் கோபி சார் என்னை அழைத்து கூறியதும், விஜய், கோபி மற்றும் ரங்கநாதன் ஆகிய மூவரையும் அழைத்து பேசினேன். அப்போது விஜயை அவர்களிடம் மன்னிப்பு கேட்கச் சொன்னேன். இப்படியாக ஒருவர் வெளியேறிவிட்டால், ஒரு நாள் முழு செலவு வீணாகும். தயாரிப்பாளர்களின் கஷ்டத்தையும் ஆரம்பத்திலேயே அவருக்குப் புரிய வைத்தேன். அதன் பிறகு அவர் மிகவும் கட்டுக்கோப்பாக நடந்துகொண்டார்,” என்று தெரிவித்தார்.

    “விஜய் இந்த அளவிற்கு உயர்வார் என்று ஆரம்பத்திலேயே உணர்ந்தீர்களா?” என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் அவரை இயக்கிய முதல் படம் தோல்வியடைந்தபோதும், அவருள் ஒரு நடிகனை பார்த்தேன். அதன்பிறகு தொடர்ந்து படங்கள் எடுத்து அவரை முன்னேற்ற முயற்சி செய்தேன். ஆனால் ரசிகன் திரைப்படம்தான் அவரை மக்கள் திரும்பிப் பார்க்க வைத்தது. அதுவரை ‘சந்திரசேகரிடம் நிறைய பணம் இருக்கிறது; அதனால் தான் மகனை வைத்து படம் எடுக்கிறார்’ என்று பலரும் கிண்டல் செய்தனர்,” என்று கூறினார்.

    தொடர்ந்து அவர் உணர்ச்சிபூர்வமாக, “இப்படி தொடங்கியவர் இன்று எங்கேயோ வளர்ந்து விட்டார். இப்போது நான் அவரிடம்தான் பல விஷயங்களை கற்றுக்கொள்கிறேன். ஒவ்வொரு படத்திலும் அவருடன் பணியாற்றும் இயக்குநர்கள், ‘இவ்வளவு ஒழுக்கமான பிள்ளையை எப்படி வளர்த்தீர்கள்?’ என்று கேட்கும்போது, அதுவே என் வாழ்க்கைக்கு பெரிய சந்தோஷமாக இருக்கிறது,” என்றார்.

    விஜயின் நடிப்பில் தமக்கு மிகவும் பிடித்த படம் குறித்து பேசும்போது, “எனக்கு மிகவும் பிடித்த படம் சச்சின். அந்த படம் வெளியான சமயத்தில் சந்திரமுகி வெளியானதால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால் அந்த படத்தில் விஜய் அசத்தலாக நடித்திருந்தார். குறிப்பாக அவரது பாடி லாங்குவேஜ் அருமையாக இருந்தது. பல இடங்களில் வடிவேலுவையே ஓவர்டேக் செய்திருந்தார். நான் மிகவும் ரசித்து பார்த்த படம் அது,” என்று பாராட்டினார்.

    விஜய்க்கு எந்த நடிகை பொருத்தமாக இருப்பார் என்ற கேள்விக்கு, “அவருடன் நடித்த எல்லா நடிகைகளும் அந்த கதைக்கேற்ற வகையில் பொருந்தியுள்ளனர். ஸ்டார் வேல்யூ அடிப்படையில் பார்த்தால் நயன்தாரா பொருத்தமாக இருப்பார். ஆனால் அனைவரும் அவருடன் நன்றாகவே இணைந்துள்ளனர்,” என்றார்.

    இறுதியாக விஜயின் வளர்ச்சி குறித்து அவர் கூறியதாவது: “நான் அவரை அறிமுகப்படுத்தினேன். ஆனால் இன்று குழந்தைகள் கூட அவருடைய நடனத்தை ரசிக்கிறார்கள் என்றால் அது சாதாரண விஷயம் இல்லை. அதற்காக அவர் கடுமையாக ரிஹர்சல் எடுத்திருக்க வேண்டும். உழைத்தால்தான் பலன் கிடைக்கும். இன்று அவர் இந்த அளவிற்கு வளர்ந்ததற்கு முக்கிய காரணம் இயக்குநர்கள்தான். அவர்கள் அனைவரும் சேர்ந்து விஜயை செதுக்கியுள்ளனர்,” என்று பெருமையுடன் தெரிவித்தார்.