Tag: ajithkumar

  • ஏகே63 படத்தில் அதிகரிக்கும் தெலுங்கு கூட்டம்!.. இது அந்த படம் மாதிரியே இருக்கே!… அதுச்சரி!…

    Ajithkumar: அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்தடுத்த படத்தின் அப்டேட்டால் என்னப்பா அக்கட தேசத்து நெடி எக்கசக்கமாக அடிக்கிறதே என்ற குரல் தொடர்ந்து ஒலிக்க தொடங்கி இருக்கும் நிலையில் தற்போது மற்றுமொரு அப்டேட்டும் வெளியாகி இருக்கிறது.

    அஜித் விடாமுயற்சி படத்துக்கே பல மாதங்கள் படக்குழுவை வெயிட் செய்ய வைத்து கடைசி இரண்டு மாதமாக தான் ஷூட்டிங் வந்துகொண்டு இருக்கிறார். இந்த படமே 50 சதவீதம் மட்டும் முடிந்துஇருக்கும் நிலையில்  கால்ஷீட் பிப்ரவரி வரை தான் இருக்கிறது. அதற்கு மேல் நீட்டிக்க முடியாது எனவும் கறாராக கூறிவிட்டாராம்.

    இதையும் படிங்க: ஜவ்வா இழுக்கிறதுனா இதானா? எப்பங்க இந்த டைவர்ஸ் கேஸ முடிப்பீங்க!… புலம்பும் ரசிகர்கள்

    இதனால் மகிழ் திருமேனி அஜித் போர்ஷன்களையாவது முடித்துவிட வேண்டும் என்ற வேகத்தில் ஓடிக்கொண்டு இருக்க தற்போது அஜித்தின் 63வது பட அப்டேட்களும் தொடர்ச்சியாக குவிந்து வருகிறது. தெலுங்கில் பிரபலமான மைத்ரி மூவிஸ் இப்படத்தினை தயாரிக்க இருக்கின்றனர்.

    இப்படத்தின் பூஜை சமீபத்தில் முடிந்து இருக்கும் நிலையில் படத்தின் வேலைகளை ஆதிக் ரவிசந்திரனும் தொடங்கிவிட்டார். விரைவில் படக்குழு குறித்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங்கை மார்ச் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கவும் படக்குழு திட்டமிட்டு இருக்கின்றனர். இப்படத்திற்கு தற்போது இசையமைக்க தேவி ஸ்ரீ பிரசாத்தை படக்குழு ஓகே செய்து இருப்பதாக படக்குழு திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

    இதையும் படிங்க: சத்யராஜிடம் இப்படி ஒரு வேண்டுகோளை விடுத்த விஜய்சேதுபதி! கட்டப்பா மனசு வைப்பாரா?

  • அஜித்தை பார்க்க முடியாமல் அழுத ஷாலினி!. அப்பதான் அவங்க லவ்வே புரிஞ்சது!. ரகசியம் சொன்ன இயக்குனர்..

    Ajithkumar: அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அஜித். பல திரைப்படங்களிலும் சாக்லேட் பாயாக நடித்து ஒரு கட்டத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி பின்னர் மாஸ் ஹீரோவாகவும் மாறினார். அமர்க்களம் படத்தில் நடிக்கும் போது அப்படத்தில் அவருடன் நடித்த ஷாலினியை அஜித் காதலித்தார்.

    படப்பிடிப்பு தளத்தில் மறைமுகமாக தன்னுடைய காதலை வெளிப்படுத்திகொண்டே இருந்தார் அஜித். ஒருநாள் அப்படத்தின் இயக்குனர் சரணிடம் ‘ஷூட்டிங்க சீக்கிரம் முடிச்சிடுங்க.. இல்லனா நான் ஷாலினியை லவ் பண்ணிடுவேன்’ என சொல்லி சிரித்தாராம். இதைக்கேட்டு வெட்கப்பட்டு சிரித்திருக்கிறார் ஷாலினி.

    இதையும் படிங்க: பைக்கையே தொடக் கூடாதுனு சொன்னவர் ஷாலினி! இப்போது அஜித்தை அவர் விருப்பப்படி விட என்னக் காரணம் தெரியுமா?

    அதேபோல், அஜித்துக்கு பிறந்தநாள் வந்தபோது அவருக்காக சில பரிசு பொருட்களை வாங்கிய ஷாலினி அதை இயக்குனர் சரணிடம் கொடுத்து ‘இதை இன்று இரவு ஒரு மணிக்கு அஜித்தின் அறையில் வைத்துவிடுங்கள்’ என சொல்லியிருக்கிறார். சரணும் அப்படியே அந்த பொருட்களை வைத்துவிட்டார்.

    ajithshalini

    பிறந்த நாள் அன்று காலை அந்த பரிசு பொருட்களை பார்த்த அஜித் ஆச்சர்யப்பட்டிருக்கிறார். அது எல்லாமே அவருக்கு பிடித்த பொருட்களாக இருந்தது. அப்போதே ஷாலினி தன்னை விரும்புகிறார் என்பதை அஜித் புரிந்துகொண்டாராம். இதுபற்றி இயக்குனர் சரண் ஊடகம் ஒன்றில் பேசியபோது மேலும் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

    இதையும் படிங்க: ஷாலினி சொன்ன ஒரு வார்த்தை!.. முரட்டு கோபக்காரரான அஜித் சாதுவாக மாறிய அந்த சம்பவம்!.

    அமர்க்களம் படத்தின் படப்பிடிப்பு மூனாறில் நடந்தது. நானும் அஜித்தும் கொச்சின் சென்று அங்கிருந்து 3 மணி நேரம் பயணித்து படப்பிடிப்பு தளத்திற்கு போனோம். கொச்சினை தாண்டியபின் போன் செய்து பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒருவழியாக போய் சேர்ந்தேம். எங்களுக்கு முன்பே ஷாலினி அங்கே வந்துவிட்டார்.

    எங்களை பார்த்ததும் ‘ஏன் எனக்கு ஒரு போன் கூட செய்யவில்லை. அஜித்துக்கு என்னவானது என பயந்துவிட்டேன்’ என அழத்துவங்கி விட்டார். அப்போதுதான் இருவரும் அவ்வளவு நெருக்கமாகிவிட்டார்களா என நான் புரிந்துகொண்டேன். நான் நினைத்தபடியே இருவரும் திருமணம் செய்துகொண்டு விட்டனர்’ என அவர் கூறியிருந்தார்.

    இதையும் படிங்க: அஜீத்துக்காக பார்த்து பார்த்து சட்டையை வடிவமைத்த ஷாலினி… காதலிக்கே சஸ்பென்ஸ் வைத்த தல…!

  • அந்த ஹீரோவால் மார்க்கெட்டை இழந்த நடிகை ஹீரா!.. இவ்வளவு விஷயம் நடந்திருக்கா?

    90களில் இதயத்தில் ரசிகர்களைத் தொலைத்த ஹீரோயினாக வலம் வந்தவர் ஹீரா. பேண்ட்மாஸ்டர், திருடா திருடா போன்ற படங்களின் மூலம் தனக்கான தனியிடத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

    சதீலீலாவதி படத்தில் இருந்து தான் அவருக்கு மார்கெட் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்ததாம். படத்தில் ரமேஷ் அரவிந்த்துக்கு இவர் தான் ஜோடி. கமலிடம் ரமேஷ் அரவிந்த் கன்னடத்தில் இருந்து தெரியாத யாரையாவது தனது ஜோடியாகக் கொண்டு வர வேண்டும் என்றார்.

    இந்த ரோலில் நடிக்க கௌதமி, சங்கீதா, சுஹாசினி உள்பட பலரும் மறுத்து விட்டார்களாம். கடைசியாக ஹீரா இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தாராம். 90களின் மத்தியில் வந்த மீனா, தேவயாணி, சுவலட்சுமி ஆகியோர் புடவைகளில் வந்து ரசிகர்களை சுண்டி இழுத்தனர். இந்த இழுப்பால் ஹீராவின் மார்க்கெட் முடிந்து போனது.

    KK
    KK

    அதன் பிறகு அவருக்கு பெரிய பிரேக் கொடுத்த படம் திருடா திருடா. இந்தப் படத்தில் இவரது நடிப்பு மாஸாக இருந்தது. காதல் கோட்டையில் அஜீத்துடன் அவரது கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட்டானது. அவ்வை சண்முகியில் ஒரு சிறு வேடத்தில் நடித்தார். அஜீத்துடன் ஹீராவுக்கு பயங்கரமான காதல் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அவர் அதை அலட்சியம் செய்தாராம். அதைத் தொடர்ந்து பெங்களூருவுக்கு சென்று விட்டார். அங்கு கன்னடம், தெலுங்கு படங்களில் 2வது கதாநாயகியாக நடித்தார்.

    கே.எஸ்.ரவிகுமார் அவரை அழைத்து சுயம்வரத்தில் நடிக்க வைத்தார். தொடர்ந்து கார்த்திக் நடித்த பூவேலி பட வாய்ப்பும் கிடைத்தது. அந்த நேரத்தில் சரத்குமார் ஹீராவை விரும்புகிறார் என கூறப்பட்டது. ஆனால் கல்யாணம் முடிந்தவர் என்ற காரணத்திற்காக அதிலிருந்து மீண்டு வந்தாராம் ஹீரா. சூர்யவம்சம், நட்புக்காக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போது அந்தக் காரணத்திற்காகவே மறுத்துவிட்டாராம். அதன்பிறகு அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியாக படங்கள் வரவில்லை. சதிலீலாவதியில் கள்ளக்காதலி வேடத்தில் நடித்ததால் ஹீராவின் மார்க்கெட் சரிந்து போனதாம்.

  • அதுக்கு மட்டும் உங்களுக்கு டைம் இருக்கா?… அஜித்குமாரை கழுவி ஊற்றும் பிரபலம்…

    Ajithkumar: தமிழ் சினிமாவில் தனக்கென எந்தவொரு விளாம்பரமும் தேடாதவர் நடிகர் அஜித்குமார். பொதுவாக இவர் எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை என்பது அனைவரும் அறிந்ததே. தன்னுடைய படமே என்றாலும் அவர் அதற்காக எந்தவொரு விளம்பரத்தையும் தேடி கொள்வதில்லை.

    தற்போது இவரின் இந்த செயல்  பெரிய அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடிகர் விஜயகாந்த் இறப்பிற்கும் கூட அஜித் வரவில்லை. என்னதான் தான் எந்தவொரு விளம்பரத்தையும் விரும்பாதவர் என்றாலும் அஜித்குமார் இந்த நிகழ்வுக்கு வந்திருக்க வேண்டும் என பல நெட்டிசன்களும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் வாசிங்க:நான் சொல்ற சம்பளத்துல நீங்க நடிப்பீங்களா?!.. விஜயகாந்திடம் எகிறிய வடிவேலு..

    அஜித்குமாருக்கு தல என்கிற பெயரும் ரசிகர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் தன்னுடைய பெயரை தல என உச்சரிக்க வேண்டாம் எனவும் மேலும் தன்னை அஜித்குமார் என அழைத்தாலே போதும் எனவும் சில வருடங்களுக்கு முன் அஜித் குமார் அறிவித்திருந்தார்.

    தற்போது அவரின் இந்த பேச்சு பிரபலங்களிடையே விமர்சிக்கப்பட்டு வருகிறது. அப்போது தன்னுடைய பெயருக்காக வெளி உலகத்துடன் பேசிய அஜித் தற்போது சினிமாவில் தன்னை போன்ற சக நடிகரான விஜயகாந்தின் இறப்பிற்கு மட்டும் வர முடியவில்லையா என பல பிரபல யூடியூபரான வலைபேச்சு அந்தணன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

    இதையும் வாசிங்க:கொலைமிரட்டல் விட்ட தயாரிப்பாளர்.. பயந்து கண்ணீர்விட்ட நடிகர்… கேப்டன் செஞ்ச தரமான சம்பவம்..

    மேலும் நடிகர் விஜய்யின் வளர்ச்சிக்கு விஜயகாந்த் மிகப்பெரியதளவில் பங்காற்றியவர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் விஜய் விஜயகாந்த் இறப்பிற்கு இரவில்தான் வந்தார். அதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் விஜய் மீது பல வன்மத்தை காட்டியிருந்தனர்.

    இந்நிலையில் இதுபோன்ற செயல்களினாலேயே பல நட்சத்திரங்களும் இது போன்ற பொது இடங்களுக்கு வருவதில்லை எனவும் இன்னொரு தரப்பு கருத்தினை தெரிவிக்கின்றன. எனினும் ரஜினி போன்ற முன்னணி நட்சத்திரங்கள் வருகை தந்த நிலையில் அஜித் வராதது மக்களிடையே அவர் மீது ஒரு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    ஆனால், இதே அஜித் புதுவருடத்தை குடும்பத்துடன் ஜாலியாக அசர்பைசானில் கொண்டாடியதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் வாசிங்க:விஜயகாந்துக்கு ‘புரட்சிக் கலைஞர்’ பட்டம் எப்படி வந்தது தெரியுமா?!.. ஒரு சுவாரஸ்ய தகவல்…