Tag: ajithkumar

  • என்னது லியோ ஃபேக்கா? அஜித் வாழ்க்கை ஸ்டோரியே இங்க Fakeஆ இருக்கே… வைரல் வீடியோ!…

    Ajithkumar: தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் பொய்யா இருக்கலாம். ஆனால் ஒரு பிரபலத்தின் வாழ்க்கையே பொய்யா இருந்தா? அஜித் ரசிகர்களுக்கான ஷாக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    கேரளாவை பூர்வீகமாக கொண்ட தஞ்சாவூரை சேர்ந்த தந்தைக்கும், சிந்தி தாயுக்கும் மகனாக பிறந்தவர் அஜித். இவருக்கு ஒரு அண்ணனும், தம்பியும் உள்ளனர். 10வது படிக்கும் போது அஜித் தன் பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்டார். என்பீல்ட் கம்பெனியில் ஆறு மாத இண்டர்ன்ஷிப்புடன் மெக்கானிக்காக இவருக்கு வேலை கிடைத்தது.

    இதையும் படிங்க: கூலி டீசர் வீடியோவில் லோகேஷ் செஞ்ச வேலைய கவனிச்சீங்களா?!.. அட இது தெரியாம போச்சே!…

    ஆனால் அவர் தந்தைக்கு இதில் உடன்பாடு இல்லையாம். அவருக்கு அஜித் வொயிட் காலர் வேலையில் இருக்க வேண்டும் என்றே விரும்பினாராம். இதனால் மெக்கானிக் வேலையை விட்டு தந்தையின் நண்பர் கம்பெனியில் கார்மெண்ட் தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்தார்.

    அதன்பின், அந்த வேலையைவிட்டு நண்பர்களுடன் இணைந்து ஒரு டெக்ஸ்டைல் பிசினஸை தொடங்கினார். அந்த நேரத்தில் தான் மாடலிங் செய்து கொண்டு இருக்கும் போது அஜித்துக்கு நடிக்கும் வாய்ப்பு வந்தது. இதனால் நடிப்பின் மீது ஆர்வம் அதிகரிக்க தன்னுடைய கவனத்தினை படத்தின் பக்கம் திருப்பினார்.

    இதையும் படிங்க:ராதிகா கர்ப்பத்தால் மனம் உடைந்து போன பாக்கியா… இருக்கும் தானே!… ஆனா?

    அஜித் மெக்கானிக்காக வாழ்க்கையை தொடங்கியதால் அவர் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் அஜித்தின் அண்ணன் அமெரிக்காவில் வேலை பார்த்ததாகவும், தம்பி அமெரிக்காவில் படித்ததாகவும் அஜித்தே ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். அப்போ மெக்கானிக்கா போனது அவருக்கு படிப்பு வராம தானா?

    லியோ கதை ஃபேக்குனா சொன்னீங்க? இங்க பாருங்கப்பா அஜித்தின் வாழ்க்கையே ஃபேக்கா இருக்கு. கஷ்டத்தால் நடந்தது இல்லையா என விஜய் ரசிகர்கள் ஒரு பக்கமும், தல நீங்க சும்மா இருங்க. உங்களுக்கு எதுவும் தெரியாது என அஜித் ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

    அஜித்குமார் பேட்டியை காண: https://www.instagram.com/reel/C3tzwIARl85

  • எல்லோரும் பயந்த டைட்டில்!.. துணிச்சலாக நடிச்ச ரஜினிகாந்த்!.. அஜித்துக்கும் வாழ்க்கை கொடுத்த படம்!..

    செண்டிமெண்ட் எல்லா துறைகளிலிலும் இருந்தாலும் திரையுலகில் அது மிகவும் அதிகம். பல விஷயங்களுக்கும் செண்டிமெண்ட் பார்ப்பார்கள். குறிப்பாக படத்தின் தலைப்பில் நிறைய செண்டிமெண்ட்டுகளை பலரும் வைத்திருந்தனர். டி.ராஜேந்தர் தனது படங்களின் தலைப்பை 9 எண்களில் வைப்பார்.

    அதுதான் அவரின் செண்டிமெண்ட். மைதிலி என்னை காதலி, உறவை காத்த கிளி, என் தங்கை கல்யாணி, என் தாயின் சபதம், உயிருள்ள வரை உஷா என உதாரணங்களை சொல்ல முடியும். படத்திற்கு தலைப்பு என்பது மிகவும் முக்கியம். அதனால்தான் இயக்குனரும், தயாரிப்பாளரும் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

    இதையும் படிங்க: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வெள்ளி விழா படங்கள்… வருடக்கணக்கில் ஓடிய சந்திரமுகி..

    தலைப்பு தொடர்பாக பல ஆலோசனையும் செய்வார்கள். ஒரு இயக்குனர் படம் முடிவடையும் தருவாயில் படத்திற்கு 4, 5 தலைப்புகளை யோசிப்பார். அதை தனது உதவியாளர்கள், நலம் விரும்பிகள் ஆகியோருடன் ஆலோசனை செய்வார். ஏனெனில், ஒரு படத்தின் அடையாளமே அதன் தலைப்புதான். காலத்திற்கு அப்படம் ரசிகர்களால் நினைவு கூறப்படுவது தலைப்பை வைத்துதான்.

    மிகவும் நெகட்டிவாக தலைப்பு வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் படம் ஓடாது என்கிற செண்டிமெண்ட்டை விஜய் ஆண்டனி தனது பிச்சைக்காரன், எமன், சைத்தான் ஆகிய படங்கள் மூலம் உடைத்தார். தொடர்ந்து அவர் தயாரித்து நடிக்கும் படங்களில் அப்படித்தான் தலைப்பும் வைத்து வருகிறார்.

    இதையும் படிங்க: பாட்ஷா படத்துல ரஜினி ஆட்டோ டிரைவரா நடிக்க காரணமே வடிவேலுதான்!.. என்னப்பா சொல்றீங்க!..

    ரஜினி நடிப்பில் 1980ம் வருடம் வெளிவந்த திரைப்படம்தான் பில்லா. இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த ஒரு படத்தின் தமிழ் ரீமேக் இது. இந்த படம் உருவான போது இதற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என யோசித்திருக்கிறார்கள். 78 காலகட்டத்தில் பில்லா, ரங்கா என 2 கொடூரமான கேங்ஸ்டர்கள் இருந்தார்கள். ஒரு ராணுவ அதிகாரியின் மகனையும், மகளையும் கடத்தில் கொலை செய்தார்கள்.

    அப்போது தயாரிப்பாளர் பாலாஜி தான் எடுத்த படத்திற்கு பில்லா என பெயர் வைத்தார். ரஜினியின் நலவிரும்பிகள் அவரிடம் ‘இந்த தலைப்பு நெகட்டிவாக இருக்கும். மாற்ற சொல்லுங்கள்’ என சொல்ல, ரஜினியோ கூலாக ‘என்னை குடிகாரன், பைத்தியக்காரன் என்றெல்லாம் பத்திரிக்கையில் எழுதுகிறார்கள். இது மட்டும் என்ன?. இந்த தலைப்பிலேயே நான் நடிப்பேன்’ என்ப சொல்லி துணிச்சலாக நடித்திருக்கிறார். இந்த படம் சூப்பர் ஹிட். இந்த படத்திற்கு பின் ரங்கா என்கிற தலைப்பிலும் ரஜினி ஒரு படத்தில் நடித்தார். அதேபோல், அஜித்தும் அதே படத்தை ரீமேக் செய்து பில்லா என்கிற தலைப்பிலேயே நடித்தார். அதுவும் வெற்றிப்படமாக அமைந்தது.

  • நான் ஊர் ஊரா போறேனா? என்னை பாத்து இப்படி சொல்லிட்டீங்களே… மனமுடைந்த அஜித்..

    Ajithkumar: கோலிவுட்டில் நேற்றுலிருந்து விடாமுயற்சி படப்பிடிப்பின் காட்சிகள் தான் பெரிய அளவில் வைரலாக பரவி வருகிறது. இந்த காட்சியை திடீரென வெளியிட்டதற்கு பின்னால் அஜித்தின் ஒரு மனக்குமுறலை காரணம் என பிரபல விமர்சகர் பிஸ்மி தெரிவித்திருக்கிறார்.

    இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் பேட்டியில் இருந்து. விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் பாதி முடிந்த நிலையில் அஜித் தன்னுடைய அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். இதை தொடர்ந்து அவர் விடாமுயற்சியை கைவிட்டு விட்டார் என்ற பேச்சுகள் இணையத்தில் வைரல் ஆகியது.

    இதையும் படிங்க: மங்காத்தா ஹிட்டை ட்ரீட் வைத்து கொண்டாடிய விஜய்!.. என்னப்பா சொல்றீங்க!..

    அதே நேரத்தில் சன் ரைசஸ் அணியின் பந்துவீச்சாளர் நடராஜை சந்தித்து அவர் பிறந்த நாளை கொண்டாடியதோ நெகட்டிவாக அஜித்தின் மீது வன்மத்தை கக்கும் விஷயமாக மாறிவிட்டது. இதனால் அஜித் தரப் பெரிய மனக் குமறலில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இதன் வெளிப்பாடாக தான் விடாமுயற்சியின் அந்த குறிப்பிட்ட காட்சி ரிலீஸ் செய்யப்பட்டதாம்.

    அஜித் வேகமாக வண்டி ஓட்டி சென்று திடீரென ஏற்பட்ட தடங்களில் 20 அடி பள்ளத்தில் கார் தடம் புரண்டது. அது ஹாமர் கார் என்பதால் அஜித்துக்கும் அவருடன் இருந்த ஆரவிற்க்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. இதுவே வேறொரு காராக இருந்தால் அஜித்தின் உயிருக்கே பெரிய ஆபத்தாகி இருக்கும்.

    இதையும் படிங்க: ஆத்தி எல்லாமே குலுங்குதே!.. ஆரஞ்சு புடவையில் அட்டகாசமான ஆட்டம்!.. கிச்சா பொண்டாட்டி செம டான்ஸ்!..

    இப்படி கடின உழைப்பை போட்டு நடித்துக் கொண்டிருக்கும் ஒரு படத்தின் மீது தனக்கு ஆர்வம் இல்லை என ரசிகர்கள் தெரிவிப்பது அஜித்துக்கு பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம். இது ஒரு புறம் இருக்க, ஏற்கனவே மங்காத்தா திரைப்படத்தில் அஜித் பைக் விபத்து குறித்து ஒரு காட்சியை ரிலீஸ் செய்திருந்தனர். இப்படி தொடர்ந்து அஜித்தின் விபத்து குறித்த வீடியோக்களை வெளியிட்டால் அது அவரின் இமேஜை பெரிய அளவில் பாதிக்கும். 

    கேரியர் முக்கியம்தான். அதே அளவில் உயிரின் மீதும் கவனம் இருப்பது ரொம்ப முக்கியமான விஷயம். அஜித் போன்ற ஒரு பெரிய முன்னணி நடிகருக்கு சின்ன விபத்து ஏற்பட்டால் கூட அது ரசிகர்களை பெரிய அளவில் பாதிக்கும். இதை அஜித் இனிமேல் கருத்தில் கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வது அவருக்கும் சரி ரசிகர்களுக்கும் சரி பெரிய ஆதரவாக இருக்கும் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

  • விடாமுயற்சி படத்தில் நடந்த மிகப்பெரிய விபத்து… ஆனா இதான் கஷ்டமா இருக்கு… ஓபனாக சொன்ன சுரேஷ்சந்திரா..

    Vidamuyarchi: அஜித் நடிப்பில் வெளியாக இருக்கும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் காட்சிகள் ரிலீஸான நிலையில் அதுகுறித்து மேலும் சில சுவாரஸ்ய தகவல்களையும் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

    இயக்குனருக்கே அத்தனை களேபரம். விடாமுயற்சி என்ற டைட்டிலை மட்டுமே ரிலீஸ் செய்து விட்டு படக்குழு ஷூட்டிங் செல்லாமல் பல மாதங்களாக சும்மா இருந்தது. ஒருவழியாக ஷூட்டிங் கிளம்பிய அஜித் ரசிகர்களே இல்லாத இடத்துக்கு செல்ல வேண்டும் என தயாரிப்பு தரப்பிடம் கோரிக்கை வைத்தார்.  லைகா புரோடக்‌ஷன் இப்படத்தினை தயாரித்து வருகிறது.

    இதையும் படிங்க: 33 முறை விஜயகாந்துடன் மோதிய பிரபு படங்கள்!.. அதிகமுறை ஜெயித்தது இளைய திலகமா? புரட்சிக்கலைஞரா?..

    அஜர்பைஜானின் காலசூழ்நிலை சரியில்லாமல் போக அடிக்கடி ஷூட்டிங் கேன்சல் ஆனது. இதனால் படப்பிடிப்பு கால்ஷூட் நாட்களையும் தாண்டி போனது. பொறுமையிழந்த அஜித் தன்னுடைய அடுத்த படத்துக்கு தாவினார். ஆதிக்ரவிசந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க இருக்கிறார்.  

    படப்பிடிப்பில் ஓவர் செலவு, லைகா நிதி பிரச்னை என விடாமுயற்சி முடியுமா? முடியாதா என்ற சந்தேகம் பலரிடமும் இருந்தது. இந்நிலையில் இன்று அஜித் மற்றும் ஆரவ் நடிப்பில் விடாமுயற்சியின் சில காட்சிகள் லீக்கானது. அதில் அதிவேகமாக கார் ஓட்டிவரும் அஜித் நிலைதடுமாறி விபத்தில் சிக்குவார். ரிஸ்கான இந்த காட்சிகளை எந்த டூப்பும் போடாமல் அஜித்தே நடித்து இருந்தது பலரிடம் லைக்ஸை குவித்தது.

    இதையும் படிங்க: கண்ணாடி போல சேலை!.. கண்ட அழகையும் காட்டி இழுக்கும் ஸ்ருதிஹாசன்!..

    இந்த  வீடியோவை ரிலீஸ் செய்த சுரேஷ் சந்திரா கூறுகையில், இந்த காட்சியின் போது கார் தவறி 20 அடியில் விழுந்தது. நல்லவேளையாக அஜித்துக்கு பெரிய அளவில் காயம் எதுவும் ஏற்படவே இல்லை. இந்த வீடியோவை ரிலீஸ் செய்ய காரணம் இருக்கிறது. நாங்கள் கடுமையாக உழைக்கிறோம்.

    ஆனால் படம் கைவிடப்பட்டதாக பொய்யான தகவல்கள் நிறைய பரவி வருகிறது. அந்த விஷயம் தான் எங்களை ரொம்ப கஷ்டப்படுத்துகிறது. இது ரசிகர்களுக்கும், படக்குழுவுக்கும் உத்வேகமாக இருக்கும் என்பதற்காகவே இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கோம் என்றார்.

  • ரசிகர்கள் முட்டாளா? புரோமோஷனில் இறங்கினாலும் உங்க கெத்த விடமாட்றீங்களே அஜித் சார்…

    Ajithkumar: நடிகர் அஜித்குமார் தற்போது தொடர்ச்சியாக தான் குறித்த புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடும் ஆர்வத்தில் இருக்கிறார். ஆனால் அவரின் வாய் தான் சும்மா தான் இருக்க மாட்டேன் என்கிறது. அப்படி வெளியாகி இருக்கும் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    தமிழ் சினிமாவில் பிரபலங்கள் பெரும்பாலும் புகழுக்காக ஏங்குபவர்கள். ஆனால் இதில் ரொம்பவே வித்தியாசமானவர் நடிகர் அஜித்குமார். ஒருகட்டத்தில் தன்னுடைய திரைப்படங்களின் புரோமோஷனுக்கே செல்வதை நிறுத்தினார். தன்னுடைய ரசிகர் மன்றங்களை மொத்தமாக கலைத்தார். இது பலருக்கு ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: ரஜினிக்கு பயத்தை காட்டிய ராமராஜன்… ரகசியத்தை கசிய விட்ட கே.எஸ்.ரவிக்குமார்!..

    முன்னணி நடிகரான அஜித்துக்கு ரசிகர்கள் ஏராளம். ஆனால் அவர் குறித்த அப்டேட் எதுவும் ரசிகர்களுக்கு கிடைக்காமலே இருந்தது. அவரின் ஒரு புகைப்படம் கிடைக்க கூட ஏங்கும் நிலை தான் இருந்தது. அப்படி ரிலீஸானால் கூட தெளிவில்லாத படமாகவே வெளிவந்தது.

    ஆனால் இப்போதெல்லாம் ஆச்சரியப்படும் விதமாக அஜித் குறித்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் வரிசையாக வெளியாகி வருகிறது. மோட்டர் பைக் கத்துக்கொடுக்கும் வீடியோ, பைக் ஓட்டும் வீடியோ, சமைக்கும் வீடியோ, லேட்டஸ்ட் புகைப்படங்கள் என விஜயை தாண்டி அஜித்தின் லேட்டஸ்ட் விஷயங்களே தற்போது அதிகமாக இணையத்தில் உலா வருகிறது.

    இதையும் படிங்க: ஆறடி சந்தக்கட்ட போல உடம்பு!.. அழகை காட்டி இழுக்கும் மாஸ்டர் பட நடிகை மாளவிகா!…

    சமீபத்தில் கூட அஜித் மற்றும் ஷாலினியின் லவ் அனிவர்சரி வீடியோ இணையத்தில் வெளியாகி லைக்ஸ் குவித்தது. அந்த வகையில் தற்போது ஒரு லேட்டஸ்ட் வீடியோ கசிந்து இருக்கிறது. ரசிகர்கள் கையெழுத்து வாங்கும் அந்த வீடியோவில் அஜித் ரசிகர்களை பார்த்து என்ன முட்டாள் தினத்தில் வந்து இருக்கீங்க என நக்கலாக சொல்கிறார். என்னங்க புரோமோஷனு இறங்கியாச்சு. அப்புறம் உங்க ரசிகர்களை நீங்களே இப்படி பேசலாமா எனவும் கேள்விகள் எழுந்து வருகிறது.

    அந்த வீடியோவைக்காண: https://twitter.com/iammoviebuff007/status/1775039931578302606

  • நீ பெரிய ஆளா மாறுவ? இது நடந்தா எனக்கு கால்ஷீட் வேணும்!.. அஜித்தை லாக் செய்த இயக்குனர்….

    Ajithkumar: தமிழ் சினிமாவில் வாரிசு பிரபலங்கள் அதிகம். ஆனால் யாரின் துணையும் இல்லாமல் தனியாக நுழைந்து போராடி தனக்கென ஒரு இடத்தினை பிடித்து வைத்து இருக்கும் நடிகர்  அஜித் தான். ஆனால் அவருக்கே சரியாக குறி சொன்ன இயக்குனர் குறித்த ஆச்சரிய தகவல் வெளியாகி இருக்கிறது.

    பிரேம புஸ்தகம் என்ற தெலுங்கு படத்தில் நடித்து எண்ட்ரியானவர் அஜித்குமார். அதை பார்த்து தமிழில் அமராவதி படத்துக்கு அவரை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பரிந்துரைக்க தமிழிலும் நடிக்க வந்தார். ஆரம்பத்தில் அவருக்கு கோலிவுட் எண்ட்ரி கஷ்டமானதாகவே இருந்தது. 

    இதையும் படிங்க: சிவகார்த்திகேயனா? சூர்யாவா?!.. விஜயின் இடத்தை பிடிக்க ஸ்கெட்ச் போடும் நடிகர்கள்!..

    இருந்தும் தொடர்ச்சியாக நடித்து கொண்டு இருந்தார். பைக் ரேஸில் ஆர்வம் இருந்த அஜித் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்வார். இதுவும் அவருக்கு நிறைய பின்னடைவுகளை கொடுத்தது. ஆனாலும் நடிப்பை சரியாக கையாண்டதால் தமிழில் உச்ச நட்சத்திரமாக இன்றும் இருக்கிறார்.

    ஆனால் இவர் இத்தனை பெரிய நடிகராக உயருவார் என்பதை நடிகரும், இயக்குனருமான அனு மோகன் அவரின் ஆரம்ப காலத்திலேயே சொல்லிவிட்டாராம். பவித்ரா படத்தின் போது இயக்குனர் சுபாஷுடன் பேசிக்கொண்டு இருக்க அனு மோகன் அங்கு போவாராம். அப்போது அஜித்துடன் பழக்கம் ஏற்பட்டதாம்.

    அப்போ அனு மோகனுக்கு ஜோசியம் தெரியும் என்பதால் அஜித்துக்கு எப்படி இருக்கும் என்பதை சுபாஷ் அவரிடம் பார்க்க சொல்லி இருக்கிறார். கைரேகை, பிறந்தநாள், நேரத்தினை கேட்டு தெரிந்து கொள்கிறார். இதே நேரம் அடுத்த வருடம் உன் வீட்டில் பத்து தயாரிப்பாளர் காத்திருப்பார்கள் என்றாராம்.

    இதையும் படிங்க:இளையராஜாவை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? அவரு எப்படிப்பட்ட ஆள் தெரியுமா? வெடித்த பிரபலம்…

    இதை கேட்ட அஜித் சிரித்துவிட்டு ‘அட போங்க சார்’ என்கிறார். ‘அப்படி நடந்தா எனக்கு நீ கால்ஷூட் தரணும்’ என்றாராம். அஜித்தும் ஓகே எனக் கூறிவிட்டார். அதுப்படியே, இரண்டு வருடத்திற்குள் அவர் காதல் கோட்டை நடித்து உச்சத்துக்கு செல்கிறார். அந்த நேரத்தில் அனு மோகனை சந்தித்தாராம்.

    சார் நீங்க சொன்ன மாதிரியே நடந்துட்டு, என் சம்பளம் இப்போ இவ்வளோ. நீங்க பாதி தந்தா போதும். கதை கூட கேட்க மாட்டேன். எப்போ படம் செய்யலாம் என்றாராம். ஆனால் அது கடைசியில் நடக்காமல் போய்விட்டதாம். இருந்தும் சொன்ன வார்த்தையை அஜித் தவறாமல் செய்வேன் எனச் சொன்னதுக்கே அவர் பெரிய மனிதர் எனவும் புகழ்ந்து பேசி இருக்கிறார்.

    இதையும் படிங்க: இது எதுக்குடா வம்பு? நைசாக நழுவி நின்ன ரஜினி.. எல்லா களத்துலயும் கிங்னு நிரூபிச்ச விஜய்

  • குட் பேட் அக்லி படத்தில் அஜித்துக்கு இத்தனை கெட்டப்பா?!.. தல தெறிக்கவிடுவாரே!…

    Good Bad Ugly: விடாமுயற்சி திரைப்படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித் ஒரு முக்கிய விஷயத்தை கையில் எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இது ரசிகர்களிடம் ஹிட் கொடுக்குமா காலை வாருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    பைக் ரேஸ்சில் பிஸியாக இருந்த அஜித் கடந்த சில மாதங்களாக தான் விடாமுயற்சி திரைப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். ஆனால், அஜர்பைஜானில் கால சூழ்நிலையால் ஷூட்டிங் தொடர்ந்து தள்ளிப்போனது. இன்னும் படத்தின் பெருவாரியான காட்சிகள் படமாக்க வேண்டிய நிலை இருக்கிறது.

    இதையும் படிங்க: குழப்பத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கும் விஜய்! தளபதி 69 அவ்ளோதானா?

    ஆனால் அஜித் விடாமுயற்சி திரைப்படத்திற்கு கொடுத்த கால்ஷீட் பிப்ரவரியுடன் முடிந்து விட்டதாம். ஏற்கனவே அஜித் இன்னும் தேதிகளை தர முடியாது என கறார் காட்டிய நிலையில் அவரின் அடுத்த படமாக குட் பேட் அக்லி படத்தின் அறிவிப்பு வெளியானது.

    இதனால் தற்போது ஒரே நேரத்தில் அஜித் இரு படங்களுக்கும் தேதியை ஒதுக்க வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன்  இயக்க இருக்கும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் முடிந்துவிட்டதாம். படக்குழு ஷூட்டிங்கிற்கும் தயாராகி விட்டதாம்.

    இதையும் படிங்க: புறநானூறுக்கு வச்சாச்சு ஃபுல் ஸ்டாப்! கோலிவுட்டுக்கு டாட்டா.. வெளியான சூர்யாவின் உண்மையான முகம்

    இப்படத்தில் மார்க் ஆண்டனி ஹிட்டுக்கு முக்கிய காரணமான எஸ்.ஜே.சூர்யா இணைந்து இருக்கிறார். இதனால் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தற்போதைய தகவலின்படி அஜித் மூன்று வேடங்களில் நடிக்க இருக்கிறாராம். இப்படம் அஜித்தின் கேரியரிலிருந்து மிகப்பெரிய மாற்றமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

    சமீபத்திய காலமாக அஜித் நடிப்பில் வெளியான எல்லா திரைப்படங்களும் சீரியஸ் டோனில் இருந்தது. ஆனால் குட் பேட் அக்லி திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக அமையும் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது. ஏற்கனவே வரலாறு திரைப்படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதுக்கு இத்தனை வீடியோவா? பிசினஸை தூக்கி நிறுத்தி அஜித் போட்ட சிம்பிள் ப்ளான்!…

    Ajithkumar: நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் தற்போது தொடர்ச்சியாக ஒரு விஷயத்துக்கு புரோமோஷனை செய்து வருகிறார். இதை கேட்கும் ரசிகர்கள் அட இவரே இப்படி இறங்கிட்டாரே என ஷாக்கில் இருக்கின்றனர்.

    முன்னணி நடிகராக இருந்தாலும் அஜித் பொது இடங்களில் இருந்து விலகியே இருந்தார். அவரின் ஒரு சின்ன புகைப்படத்தையாவது பார்த்து விடமாட்டோமா என ரசிகர்கள் காத்திருந்த காலம் கூட இருக்கிறது. பல இடங்களில் ரசிகர்களுடன் எடுத்த புகைப்படமும், சில மங்கலான புகைப்படம் மட்டுமே அஜித் இருக்கிறார் என்பதை காட்டும்.

    இதையும் படிங்க: குழப்பத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கும் விஜய்! தளபதி 69 அவ்ளோதானா?

    ஆனால் சமீபத்திய காலமாக அஜித்தின் புகைப்படங்களும் வீடியோக்களும் சில மணி நேரங்களுக்கு ஒன்றாக தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது. இதை அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திராவை வெளியிடுவது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.

    இது குறித்து விசாரிக்கும் போது,  பைக் ரேஸில் ஆர்வம் இருக்கும் அஜித் குமார் மோட்டார் பைக் டூரிங் கம்பெனி ஒன்றை தொடங்கியிருந்தார். அவரின் சொந்த நிறுவனம் என்பதால் அஜித்தை எப்படியாவது பார்த்து விடலாம் என சிலர் அங்கு இணைந்தனர்.

    ஆனால் அங்கு சேர்ந்தும் அஜித்துக்கும் அதற்கும் சம்பந்தமில்லாதது போலவே இருக்க ரசிகர்களுக்கு அது பெரிய ஏமாற்றம் ஆனதாம்.  இதனால் ஒருவர் இன்னொருவரிடம் சொல்லி அந்த கம்பெனி சறுக்களை சந்தித்து வந்தது. இந்த பிரச்சினையை சரிகட்டும் விதமாக தான் அஜித் தற்போது களத்தில் இறங்கி இருக்கிறார்.

    இதையும் படிங்க: புறநானூறுக்கு வச்சாச்சு ஃபுல் ஸ்டாப்! கோலிவுட்டுக்கு டாட்டா.. வெளியான சூர்யாவின் உண்மையான முகம்

    அஜித்தே பைக் சொல்லிக் கொடுப்பது, அவர்களுக்கு பிரியாணி செய்து கொடுப்பது என தொடர்ச்சியாக வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் மீண்டும் கம்பெனியில் இணைவார்கள் என்பது அஜித் தரப்பின் திட்டமாக இருக்கும் என பிரபல விமர்சகர் அந்தணன் தெரிவித்திருக்கிறார் 

  • வருஷத்துக்கு ஒரு படம்.. ஆனா அஜித் சொத்து மதிப்பு மட்டும் இவ்வளவு கோடியா?!.. கண்ண கட்டுதே!..

    Ajithkumar: நடிகர் அஜித்குமார் சினிமாவில் பெரிய நடிகராக இருந்தாலும் தன்னுடைய கவனத்தினை ரேஸ் பக்கமே வைத்திருக்கிறார். அந்த வகையில், அவரிடம் இருக்கும் சொத்துக்களிலும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் நடிகர் அஜித்குமாரின் கடைசி திரைப்படம் துணிவு. தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு சம்பளமாக 150 கோடி வரை வாங்கியதாக கூறப்படுகிறது. அஜித்தின் சொத்து மதிப்பு 350 கோடி வரை இருக்கும் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

    இதையும் படிங்க: அஜித்திடம் கால்ஷீட் வாங்க ஒரே வழி இதுதான்!. நடிகையை வச்சி ரூட்டு போட்ட இயக்குனர்…

    61 கோடி ரூபாயிற்கு அஜித்திடம் ஆடம்பர கார்கள் மற்றும் பைக்குகள் இருக்கிறதாம். இதில், பிஎம்டயுள்யூ பைக், அப்ரியல்லா பைக், பிஎம்டயுள்யூ எஸ் பைக், பிஎம்டயுள்யூ, லம்போர்கினி கார்கள் இருக்கிறதாம். 25 கோடி மதிப்பில் பிரைவேட் ஜெட் ஒன்றையும் வைத்து இருக்கிறார்.

    இஞ்சம்பாக்கம் மற்றும் திருவான்மியூர் பகுதியில் ஆடம்பர பங்களாக்கள் 15 கோடி மதிப்பில் இருக்கிறதாம். மோட்டோர்பைக் டூரிங் கம்பெனி ஒன்றையும் சொத்தமாக நடத்தி வருகிறார். கோக்கோலா, சன் ரைஸ் நிறுவனங்களுக்கு 3 கோடி மதிப்பில் புரோமோட் செய்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: ரசிகர்கள் விரும்பாத நாகேஷ் – பத்மினி ஜோடி!.. அதே கதையை வேறலெவலில் காட்டி ஹிட் கொடுத்த பாலச்சந்தர்

  • என்னங்க இவரு மறுபடியும் கிளம்பிட்டாரு போலயே… அஜித்தால் புலம்பும் ஆதிக்…

    Ajithkumar: அஜித்குமார் புரோமோஷனுக்கு நோ சொல்லுப்பவர் எனக் கிசுகிசுக்கப்பட்டாலும், தற்போது அவரே தன்னை தொடர்ச்சியாக புரோமோஷன் செய்து வருவது பார்ப்பவர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் அமைந்து இருக்கிறது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்குமார். எப்போதுமே ஒதுங்கியே இருப்பார். அவ்வப்போது அவரின் புகைப்படங்கள் ரசிகர்களால் லீக்காகும். அதுவே ரசிகர்களுக்கு போதுமானதாக இருந்தது. இது ஒரு புறமிருக்க சினிமாவில் மட்டுமே தொடர்ந்து நடித்து வந்தார்.

    இதையும் படிங்க: அஜித் ஒரு சுயநலவாதி!. பெருசா உதவிலாம் பண்ணது கிடையாது!.. காமெடி நடிகர் பேட்டி…

    ஆனால் விடாமுயற்சி படத்தில் இருந்து அவரிடம் நிறைய மாற்றங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட ஆறு மாதம் பைக் ட்ரிப் சென்றவர். வருடத்தின் கடைசியில் தான் நடிப்புக்கே வந்தார். இதை தொடர்ந்து அவரின் ஸ்பெஷல் ஸ்டில்கள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டே இருந்தது. இதை பார்த்த அஜித் ரசிகர்களே அதிர்ச்சி ஆகினர்.

    பொதுவாக அஜித்தின் படங்கள் லீக்கானால் கூட அது கிளியராக இருக்காது. இது அஜித்தே போஸ் கொடுத்தது போல இருந்ததால் அவரின் அனுமதியுடன் தான் புகைப்படம் வெளியிடப்பட்டது என்பது பலருக்கும் புரிந்து போனது. இந்த நிலையில் தான் திடீர் உடல்நல கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதையும் படிங்க: என்னங்கப்பா… ரோகினி நாலா பக்கமும் லாக்கை போடுறீங்க… ஆட்டம் சூடு பறக்கும் போலயே!

    ஏடாகூடமாக நிறைய தகவல்கள் வெளிவந்தது. பின்னர் அவரின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா, அஜித் நலமுடன் இருப்பதாக அறிவித்தார். முன்பு போல இருந்தால் அஜித்தின் புகைப்படமே வராமல் ரசிகர்கள் தவித்து இருப்பார்கள். ஆனால் இதை ஒப்பிடும் போது அடுத்த நாளே அஜித்தின் வீடியோ வெளிவந்து ஷாக் கொடுத்தது.

    தற்போது அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா, ஏகே பேக் ஆன் ட்ராக் என்ற ஹாஸ்டேக்குடன் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தினை வெளியிட்டு இருந்தார். தற்போது மென் அண்ட் தி மெஷின்ஸ் என்ற டேக்குடன் அஜித் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படத்தின் நிறைய பைக்குகள் இருக்கும் படமும் வெளியாகி இருக்கிறது.

    இதை பார்க்கும் போது, அஜித் மீண்டும் பைக் ட்ரிப் செல்ல இருக்காரா? அப்படி சென்றால் ஆதிக்கின் நிலை தான் அந்தோ பரிதாபமாகிவிடுமே எனவும் ரசிகர்கள் கிசுகிசுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: என்ன அடுத்த கல்யாணமா? நீங்க உருட்டுறது முழுசுமே தேவையில்லாத ஆணி தான்!