Tag: ajithkumar

  • போட்றா வெடியா! ரிலீசான அஜித்- ஆதிக் படத்தின் டைட்டில்… என்னங்க இப்படி எல்லாம் இறங்கிட்டீங்க?

    Ajithkumar: நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்தபடத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. டைட்டிலை பார்த்த விஜய் ரசிகர்களே கொஞ்சம் ஷாக்கில் தான் இருக்கின்றனராம்.

    மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதை உறுதி செய்யும் விதமாக ஏகே63 திரைப்படத்தினை தெலுங்கின் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க இருக்கிறது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருக்கிறார்.

    இதையும் படிங்க: இதுதான் கேப்புல கெடா வெட்றதா?!. சிவாஜி படத்தில் தன்னை பற்றி பாடல்களை எழுதிய கண்ணதாசன்!..

    விடாமுயற்சி ஷூட்டிங் கடந்த மாதமே முடிந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அஜர்பைஜானின் கால நிலை மாற்றத்தால் அப்படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து கேன்சல் ஆனது. இதை தொடர்ந்து தற்போது விடாமுயற்சி திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிச்சமாகி இருக்கிறது.

    ஏற்கனவே வேட்டையன், இந்தியன்2 மற்றும் விடாமுயற்சி திரைப்படங்களை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதனால் வேட்டையன் முடிந்த பின்னரே விடாமுயற்சியின் இறுதிக்கட்ட பணிகள் நடக்க இருக்கிறது. இதனால் அப்படம் முடியவே இரண்டு மாதம் வரை ஆகும் எனவும் கூறப்படுகிறது.

    இதை தொடர்ந்து, அஜித்தின் அடுத்த படத்தின் டைட்டிலை இன்று அறிவிப்போம் என மைத்ரி மூவி மேக்கர்ஸ் தெரிவித்து இருந்தனர். இதனால் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் அந்த ஆசையை மண்ணை போடும் விதமாகவே டைட்டிலை படக்குழு ரிலீஸ் செய்துள்ளது. அதாவது, அஜித் நடிப்பில் உருவாகும் 63வது படத்துக்கு குட் பேட் அக்லி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே விஜயின் படத்துக்கு ஆங்கில பெயர் வைக்கப்பட்ட போது பலரும் அதிருப்தி தெரிவித்தனர். அந்தவகையில் தற்போது அந்த லிஸ்ட்டில் அஜித்தும் இணைந்து இருக்கிறார். பல வருடமாக சுத்த தமிழ் பெயரில் நடித்து வந்த அஜித் பெயரை ஆதிக் கெடுத்துவிட்டதாகவும் ரசிகர்கள் ஆதங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இப்படம் 2025 பொங்கலுக்கு ரிலீஸாகும் எனவும் படக்குழு அறிவித்து இருக்கிறது.

    இதையும் படிங்க: ஆசைப்பட்ட ஃபாரின் சரக்கு கிடைக்கலயே!.. கோபத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள்..

  • அஜித்தின் அடுத்த பட டைட்டில் இதுதானா? புதுசா இருக்கு தல இதெல்லாம்…

    Ajithkumar: நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் அப்டேட் குறித்து ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    அஜித் விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்த போது அவர் வழக்கமான சிகிச்சைக்கு அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு மூளையில் செல்லும் நரம்பில் பிரச்னை இருப்பதாக உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது வைரலான நிலையில் ரசிகர்கள் உட்பட பிரபலங்கள் பலர் அவருக்கு ஆறுதல் தெரிவித்து இருந்தனர்.

    இதையும் படிங்க: இதுதான் கேப்புல கெடா வெட்றதா?!. சிவாஜி படத்தில் தன்னை பற்றி பாடல்களை எழுதிய கண்ணதாசன்!..

    மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங்கை விரைவில் முடித்து விடும் அஜித் உடனடியாக தன்னுடைய அடுத்த படத்தில் இணைய இருக்கிறார்.

    அப்படத்தினை இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்க இருக்கிறார்.இப்படத்தை தெலுங்கின் பிரபல நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க இருக்கிறது. தேவி ஶ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

    இப்படத்தின் முக்கிய அப்டேட்ஸ் இன்று மாலை வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ஏகே63 படத்தின் டைட்டிலை பேன் இந்தியா வார்த்தை யாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. எல்லா மொழிகளுக்கும் பொதுவான வார்த்தையாக இருக்கும் என்கின்றனர். மைத்திரி மூவி மேக்கர்ஸின் எக்ஸ் தளத்தில் ஏகே63 என்ற புகைப்படத்தினை வெளியிட்டு இருக்கின்றனர்.

    இதையும் படிங்க: சித்தர் மனநிலையில் கண்ணதாசன் எழுதிய அற்புத வரிகள்!.. எம்.ஜி.ஆருக்கு ஒரு தத்துவ பாடல்!..

    விடாமுயற்சி படத்தின் டைட்டில் வெளியாகி 300 நாட்களை தாண்டி இருக்கும் நிலையில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகாமல் இருக்கிறது. இதை தொடர்ந்து அடுத்த படத்தின் டைட்டில் ரிலீசாக இருக்கிறது. இது அஜித்தின் கேரியரில் முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • அஜித்தின் தற்போதைய நிலைமை என்ன?.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த வீடியோ!…

    Ajithkumar: நடிகர் அஜித்குமாருக்கு மூளையில் ஆபிரேஷன் என பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இதனால் அவர் உடல்நலம் தேறி வரவேண்டும் என பலரும் வேண்டுதல் வைத்து வந்த நிலையில் ஒரு வீடியொ தற்போது லீக்காகி இருக்கிறது.

    விடாமுயற்சி படப்பிடிப்பில் பிசியாக இருந்த நடிகர் அஜித் திடீரென அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் பின்னர் அது அவரின் வழக்கமான செக் அப் என பல தரப்பிலிருந்து தகவல் வந்ததை அடுத்து ரசிகர்கள் ஆஸ்வாசமாகினர்.

    இதையும் படிங்க: மஞ்சும்மெல் பாய்ஸ் இயக்குனர் மீது Metoo புகாரளித்த நடிகை.. பிரபலம் ஆகிட்டாலே பிரச்னை தானா?…

    திடீரென அவருக்கு மூளையில் கட்டி இருந்ததாகவும் அதற்கான ஆபரேஷன் நடந்திருப்பதாகவும் ஒரு தகவல்கள் கசிய ரசிகர்கள் அப்டேட் எதுவும் தெரியாமல் தவித்தனர். இதனை தொடர்ந்து பலரும் அது பொய் என்றும் உண்மை என்றும் பல்வேறு குழப்பங்கள் நிலவியது.

    இதைத்தொடர்ந்து நேற்று அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தரப்பிலிருந்து அஜித்துக்கு காதுக்கு பக்கத்தில் சிறு வீக்கம் இருந்ததாகவும் அதற்கான சிகிச்சை நடந்ததாகவும் தெரிவித்தார். இதை தொடர்ந்து அஜித் நல்ல முறையில் இருக்கிறார் விரைவில் வீட்டுக்கு திரும்புவார் என தெரிவித்திருந்தார்.

    இதையும் படிங்க: குருநாதர் பாக்கியராஜ் மாதிரி படங்களை எடுக்கக்கூடாது!… இப்படியெல்லாம் யோசித்தாரா பார்த்திபன்!..

    இருந்தும் ரசிகர்கள் மத்தியில் அஜித்தின் உடல்நலக் குறித்த குழப்பம் தொடர்ந்து நீடித்து வந்தது. ஆனால் தற்போது பிரபல திரை விமர்சகர் பிரசாந்த் ட்விட்டர் கணக்கிலிருந்து அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

    அதில் எப்போதும் போல கோட் சூட் அணிந்த அஜித் அமர்ந்து விளையாட்டு போட்டியை ரசித்து வருகிறார். அருகில் ஷாலினியும் இருக்கிறார். லேட்டஸ்ட் எனச் சொல்லப்படுவது உண்மை என்ற குழப்பம் இருந்தாலும் ரசிகர்கள் அஜித்தை பார்த்ததே போதும் என்பதால் சந்தோஷமாகி விட்டனர். சில தினங்கள் ரெஸ்ட் எடுத்துவிட்டு விரைவில் ஷூட்டிங்கிற்கு அஜித் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: குடிச்சு கூத்தடிக்கிறது ஒரு படமா? மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை கடுமையாக விமர்சித்த பிரபலம்

  • அஜித்துக்கு என்ன ஆச்சு? வாய் திறக்காத சுரேஷ் சந்திரா… உண்மையை உடைத்த பிரபலம்..

    Ajithkumar: நடிகர் அஜித்குமார் மூளையில் ஆபிரேஷன் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் கசிந்த நிலையில் ரசிகர்களை அதிர்ச்சி ஆக்கியது. இதை தொடர்ந்து பலரும் என்ன நடக்கிறது என தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வந்த நிலையில் பிஆர்ஓ ரமேஷ் பாலா முக்கிய தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்.

    நடிகர் அஜித்குமாருக்கு நடிப்பின் மீது இருந்தே அதே ஆர்வம் ரேஸ் ஓட்டுவதிலும் இருந்தது. இதனால் அவருக்கு அடிக்கடி விபத்துக்கள் நடந்து பல ஆபரேஷன்கள் செய்யப்பட்டு இருக்கிறது. 16க்கும் அதிகமான ஆபரேஷன்கள் அவர் முதுகுத்தண்டிலே செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    இதையும் படிங்க: ரஜினி ரசிகர்களை கிளப்பிவிட்ட வேட்டையன் பட நடிகர்!.. கொஞ்சம் சும்மா இருங்க பாஸ்!…

    இந்நிலையில் நேற்று அஜித் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அது அவரின் வழக்கமான செக்கப் தான் என முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென இரவில் இருந்து அஜித்துக்கு மூளையில் கட்டி இருந்ததாகவும் அதற்கான ஆபிரேஷன் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்தது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியாகினர்.

    இதையும் படிங்க: 10 ரூபாய் வாங்கி தரேன்னு சொல்லி செந்தில் வாழ்க்கையையே மாற்றிய கவுண்டமணி!.. நடந்தது இதுதான்!…

    இதை தொடர்ந்து, பிஆர்ஓ ரமேஷ்பாலா கூறுகையில், வழக்கமான சிகிச்சைக்காக அப்போலோ சென்ற அஜித்துக்கு நரம்பு மற்றும் இதய சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டது. ரசிகர்களும், நலவிரும்பிகளும் அவர் ஆரோக்கியம் குறித்து கவலைக்கொள்ள வேண்டாம். அஜித் நல்லா தான் இருக்கிறார் என்றார்.

    இதைத்தொடர்ந்து, ஏற்கனவே கவலையில் இருக்கும் அஜித் ரசிகர்கள் சுரேஷ் சந்திராவை டேக் செய்து இப்பையாது வாயை திறங்கள். மத்த விஷயமுனா பரவாயில்லை. இப்படி ஒரு சென்சிட்டிவ் விஷயத்துக்கு எதுவும் சொல்லாமல் இருப்பது சரியா எனக் கடுப்படித்து வருகின்றனர்.

  • எந்த நடிகரும் செய்யாத விஷயத்தினை யோசித்து செய்த அஜித்… தல எப்போவும் மாஸ் தானுங்கோ!…

    Ajith: நடிகர் அஜித் மீது கோலிவுட் ரசிகர்களுக்கு இருக்கும் பெரிய வருத்தமே அவர் மற்றவர்களிடம் காட்டும் ஒதுக்கம் தான். அப்படி இருக்க அஜித்குமார் தன்னுடைய திருமணத்தில் பிறர் செய்யாமல் மிஸ் செய்த விஷயத்தினை யோசித்து செய்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    தெலுங்கில் பிரேம புஸ்தகம் படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்த சமயத்தில் தமிழில் அமராவதி திரைப்படத்தில் நாயகன் வேட்டை நடந்து வருகிறது. உடனே அஜித்தை பரிந்துரை செய்கிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அவர் பேச்சை கேட்ட இயக்குனர் செல்வா அஜித்தை கோலிவுட்டுக்குள் அழைத்து வருகிறார்.

    இதையும் படிங்க: அட எனக்கே ஸ்கெட்ச்சா?… விஜய் செட்டை பார்த்து குழம்பிப் போன கே.பாலசந்தர்… ஷாக் தந்த இயக்குனர்…

    முதல் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் தொடர்ச்சியாக அஜித்துக்கு வாய்ப்பு கிடைக்கிறது. தோல்விகளை பல கடந்து அஜித் தன்னை கோலிவுட்டில் அடையாளப்படுத்தி கொண்டார். அவருக்கென தனி ரசிகர் பட்டாளமும் உருவானது. ஆனால் ஒரு கட்டத்தில் மொத்த ரசிகர் மன்றத்தினையும் கலைத்தார்.

    இனிமேல் என்னை தல என்று கூப்பிடக்கூடாது. அஜித்குமார் அல்லது ஏகே என அழைக்கும்படி கேட்டுக்கொண்டார். தன்னுடைய படத்தின் புரோமோஷன்களை மொத்தமாக தவிர்த்தார். அப்படி தனித்து இருக்கும் அஜித்குமார் யாருக்குமே உதவியே செய்யமாட்டார். மறைந்த விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தினை கூட தவிர்த்தார். ஆனால் அதே அஜித்குமார் தன்னுடன் நடித்த ஷாலினியை திருமணம் செய்து கொண்டார்.

    இதையும் படிங்க: அஜித்துக்கு கார் ரேஸ் மீது ஆர்வம் வந்தது இப்படித்தானாம்!. இதுவரை வெளிவராத தகவல்!..

    சென்னை கன்னிமாரா ஹோட்டலில் 2000ம் ஆண்டு ஏப்ரல் 24ந் தேதி அஜித் – ஷாலினி திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்தில் அரசியல், திரையுலகப் பிரபலங்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அவர்களுக்கு விருந்து ஒரு பக்கம் நடந்தது. அதுப்போல அந்த பிரபலங்களில் கார் டிரைவர்களுக்கு தரமான உணவை ஒரு வாட்டர் பாட்டிலோடு ஒரு பாக்கெட்டில் கொடுக்க வேண்டும் என்று விரும்பிய அஜித், அதை செய்தும் காட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • தனக்கு வாழ்க்கை கொடுத்த இயக்குனரை அசிங்கப்படுத்திய அஜித்… ஆனா இப்படிலாமா பேசுவீங்க?..

    Ajithkumar: சமீபகாலமாவே அஜித் குமார் செய்யும் எல்லா விஷயங்களும் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட தன்னுடைய இமேஜை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்   இதில் அஜித் குமார் தனக்கு வாழ்க்கை கொடுத்த ஒரு பிரபல இயக்குனரை அசிங்கமாக விமர்சித்த ஒரு அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது.

     அமராவதி திரைப்படம் மூலம் கோலிவுட்டுக்குள் வந்தவர் அஜித் குமார். சின்ன சின்ன படங்களில் தொடங்கிய அவர் பயணம் இன்று தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார், தல என பல அடையாளங்களை அவருக்கு பெற்று கொடுத்திருக்கிறது. இருந்தும் ஒரு கட்டத்தில் தன்னுடைய மொத்த ரசிகர் மன்றத்தையும் கலைத்தவர். 

    இதையும் படிங்க: பாக்கியாவை வச்சி வாங்கும் ஈஸ்வரி…உங்களுக்கு தேவை தான்.. வம்பை இழுத்துவிட்டுக்கிறதே வேலையா போச்சு…

    என்னை எந்த அடையாளம் கொண்டும் அழைக்க வேண்டாம் என அறிக்கை விட்டவர். மொத்தமாக மீடியாக்களில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இருந்தும்  சமீப காலமாக அவரின் பல புதிய புகைப்படங்கள் தொடர்ந்து ரிலீசாகி கொண்டே இருக்கிறது.  இதில் அவர் ரசிகர்கள் ரொம்பவே குஷியாகி  விடுவார்கள் என அவரின் கணிப்பு இப்போது பொய்த்து விட்டது.

     முன்னாள் நடிகர் சங்க தலைவர் விஜயகாந்தின் இறப்புக்கு வராமல் இருந்ததும் அந்த நேரத்தில் துபாயில் அவர் போட்ட  டான்ஸ் வீடியோ வைரல் ஆனது என அஜித் மீதான சர்ச்சை தொடங்கியது. சினிமாவில் இருக்கும் அஜித் நன்றி என்பதே இல்லாமல் இருப்பதாகவும் அதை மறந்தே செயல்படுவதாகவும் பிரபல விமர்சகர் அந்தணன் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: டிடியால் கதறி அழும் சகோதரி! கடைசில என் மடியிலேயே கைவச்சிட்டீங்களே – ஐயோ இப்படி ஆகிப் போச்சே

    அஜித்துக்கு முதல் முதலாக தல என்ற பட்டத்தை வாங்கி கொடுத்த திரைப்படம் தீனா. அப்படத்தினை இயக்கியவர் ஏ ஆர் முருகதாஸ்.  படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் ஆனது ஆனால் படத்துக்கு முருகதாஸுக்கு கிடைத்த சம்பளம் சொற்ப இலட்சங்கள் மட்டுமே.  ஆனால் அதன் பின்னர் அஜித் மற்றும் முருகதாஸின் சினிமா கேரியர் உச்சத்துக்கு போனது.

    இதைத்தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் இருவரும் இணையலாம் என முடிவெடுக்கப்பட்டது அதற்கு முருகதாஸின் சம்பளமாக ஒரு கோடி ரூபாய் பேசப்பட்டிருந்தது.  அந்த பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் அஜித்திடம் இந்த விஷயத்தை தயாரிப்பு நிறுவனம் சொல்லினர். தனக்கு வாழ்க்கை கொடுத்த ஒரு இயக்குனர் இவ்வளவு உயர்ந்திருக்கிறார் என நினைத்திருக்கலாம்.

     ஆனால் அஜித் அந்த ஒரு கோடி ரூபாய் பணத்தை கட்டு கட்டாக அடுக்கி பாருங்கள் அதன் உயரத்துக்கு கூட முருகதாஸ் வரமாட்டார் அப்படி வந்தா அவருக்கு இந்த சம்பளத்தை கொடுங்க என மோசமாக விமர்சித்ததாக குறிப்பிட்டுள்ளார்.  குறிப்பிட்ட அந்த படம் நடக்காமலே போனதாக தற்போது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    இதையும் படிங்க: ஃபிலிமே இல்லாம ஷூட்டிங்! வடிவேல் காமெடி மாதிரில்ல இருக்கு!. கமலுக்கே விபூதி அடிக்க பார்த்த பாரதிராஜா!

  • விடாமுயற்சியால் சிக்கலில் சிக்கிய ரஜினிகாந்த்… இது என்னங்க சூப்பர்ஸ்டாருக்கு வந்த சோதனை!…

    Rajinikanth: தமிழ் சினிமாவுக்கு இந்த வருடமே சோதனை காலமாகிவிட்டது போல. ஆரம்பத்தில் இருந்து வருவது எல்லாமே நெகட்டிவ் செய்திகளாகவே வரும் நிலையில் இப்போ ரஜினிகாந்தின் வேட்டையன் படத்துக்குமே ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

    அதாவது ரஜினிகாந்த் வேட்டையன், அஜித்தின் விடாமுயற்சி உள்ளிட்ட படங்களை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. கிட்டத்தட்ட தற்போதைய நிலையில் கோலிவுட்டின் டாப் நிறுவனங்களில் ஒன்று தான் லைகா. அதன் மதிப்பு எப்படி என்றால்? கத்தி படத்தில் பிரச்னை நடந்த போது. உலகம் முழுவதில் இருக்கும் இருக்கும் எங்க ஊழியர்களின் ஒரு வேளை டீ செலவு தான்.

    இதையும் படிங்க: ஒரே மெட்டில் ரெண்டு கதைகளை சொன்ன கண்ணதாசன்.. எந்தப் படத்தில் தெரியுமா?..

    தூக்கிப் போட்டுவிட்டு போவதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றனர். அப்படிப்பட்ட லைகா இன்று ஒரு செட்டுக்கு காசே கொடுக்க முடியாத நிலைக்கு வந்து இருக்கின்றனர். சமீபத்தில் ஹைதராபாத்தில் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் ஷூட்டிங் ப்ளான் செய்யப்பட்டு இருந்தது. கிட்டத்தட்ட ரஜினிகாந்தும் கிளம்பி சென்றுவிட்டார்.

    ஆனால் அங்கு ஷெட் போட டீமுக்கு பேமெண்ட் வராததால் அங்கு ஷூட்டிங் நடத்த முடியவில்லையாம். இதனால் ரஜினிகாந்தை கிளம்பிவிட தயாரிப்பு தரப்பு கோரிக்கை விடுத்து இருக்கிறது. அவரும் சென்னை திரும்பிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதற்கு காரணம் அஜித் எனவும் கிசுகிசுக்கின்றனர். விடாமுயற்சியை எந்த ரசிகர்களும் வரக்கூடாத இடத்தில் ப்ளான் செய்தவர் அஜித் தான்.

    இதையும் படிங்க: கார் அனுப்புறதுல கூட இப்படி ஒரு கொள்கையா?!.. கண்ணதாசனுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்..

    அது ஒரு புறமிருக்க விடாமுயற்சி படக்குழுவும் ஏகத்துக்கு செலவை அதிகரித்து வைத்திருக்கிறார்கள். இதனால் வேட்டையன் கடைசிக்கட்ட படப்பிடிப்பே அடிப்பட்டு இருக்கும் நிலை உருவாகிவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் உருவாகி இருக்கிறது. இதனை சீக்கிரம் சரி செய்து வேட்டையன் முடித்தால் மட்டுமே அடுத்தக்கட்ட படங்களை தொடங்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

  • வளர்ப்பு அப்பாவாக மாறிய ராஜ்கிரண்.. கேட்ட ஒரே உதவியால் தூக்கி எறிந்த அஜித்… பாவமுங்க..

    Ajith: தமிழ் சினிமாவில் அஜித் என்றால் வித்தியாசம் என்னும் வார்த்தை பொறுத்தமாகி விட்டது. அப்படி இருக்க தன்னுடன் நட்பாக பழகினால் அவர்கள் தன்னிடம் ஆதாயமே தேடக்கூடாது என்பதும் அவரின் வழக்கமாம். அப்படி ஒரு விஷயம் ராஜ்கிரணுடன் நடந்து இருக்கிறது.

    சினிமாவில் கஷ்டப்பட்டு மேலேறி வந்தவர் நடிகர் அஜித்குமார். ஒரு கட்டத்தில் தன்னுடைய ரசிகர் மன்றத்தினை கலைத்தார். மேடையிலேயே ரசிகர்கள் மிரட்டப்படுகிறார்கள் என கறாராக பேசினார். அப்படி ஓபனாக இருந்த அஜித் ஒரு கட்டத்தில் மொத்தமாக தனிமைக்குள் சென்றார்.

    இதையும் படிங்க: இறப்புக்கே வராத அஜித்… நன்றிக்கடனுக்காக சாதாரண மனிதரின் இறுதிச் சடங்கில் கடைசி வரை ஆச்சரிய பின்னணி…

    பொதுநிகழ்வுகளில் தலைக்காட்டாமல் இருந்து வந்தார். ஆனாலும் அவருக்கென்று ஒரு தனி டீம் இருந்ததாம். தனக்கு நெருக்கமானவர்களை நேரில் சென்று காத்திருக்கும் பழக்கம் அஜித்திடம் இருந்தது. அப்படி தான் நிறைய நண்பர்களை அவர் தன்னிடம் வைத்து இருந்தார். ஆனால் அது வெறும் நட்பாகவே இருக்கும்.

    இப்படி ஒருமுறை க்ரீடம் படத்தில் ராஜ்கிரணுடன் இணைந்து நடித்தார். படத்தில் தொடங்கிய நட்பு இருவருக்கும் அதிகமாகியது. ஒருகட்டத்தில் ராஜ்கிரணை தன்னுடைய வளர்ப்பு அப்பாவாக கருதும் நிலையில் இருந்தார் அஜித். அடிக்கடி அவரை நேரில் போய் பார்த்தார். டப்பிங்கில் கூட அவர் முடிக்கும் வரை காத்திருந்து பேசிவிட்டு செல்வாராம்.

    இதையும் படிங்க: தமிழ்ப்படங்களில் அதிக முறை தேசிய விருதுகளை வென்ற இயக்குனர் யார் தெரியுமா?

    இப்படி இருக்கும் நிலையில் ராஜ்கிரண், அஜித்திடம் எனக்கு நிறைய கடன் இருக்குப்பா. உன்னை மாதிரி ஒரு பெரிய ஸ்டார் நடித்து கொடுத்தால் ஒரே படத்தில் எல்லாத்தையும் சரி செய்துவிடுவேன் எனக் கேட்டு இருக்கார். அப்பாவாக நினைத்தவரை அன்றோடு தூக்கி போட்டாராம் அஜித்.

    அதன்பின்னர் ராஜ்கிரணை தன்னுடைய வட்டத்தில் இருந்து விலக்கினார். நேரில் பார்ப்பதை கூட தவிர்த்து வருகிறாராம். என்னுடன் நட்பாக இருந்தால் அதனுடன் மட்டுமே இருக்க வேண்டும். ஆதாயம் எதுவும் எதிர்பார்க்க கூடாது என்பது தான் அஜித்திடம் இருக்கும் பெரிய கெட்ட பழக்கமே என பிரபல விமர்சகர் அந்தணன் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: உங்களை சேர்த்தது தப்புதான்..கடிந்துக்கொண்ட பிரபல நடிகர்… இனி செய்ய மாட்டேன்.. வாக்கு தந்த ரஜினிகாந்த்

  • நன்றி கடனுக்காக சாதாரண மனிதரின் இறுதிச்சடங்கில் உச்சி வெயிலில் கலந்து கொண்ட அஜித்!. காரணம் இதுதான்!..

    Ajithkumar: நடிகர் அஜித்குமார் சினிமாவில் இருக்கும் நடிகர்களுக்கெல்லாம் அப்பாற்ப்பட்டவர். அவர் என்ன நினைக்கிறார் என்பதை யாருமே புரிந்துக்கொள்ள முடியாது. இறுதி அஞ்சலிக்கு கூட வர மாட்டார் என்ற எண்ணம் தான் பலரிடமும் இருக்கும். ஆனால் அஜித் நன்றிக்கடனுக்காக் செய்த ஒரு ஆச்சரிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

    முன்னணி நடிகராக இருக்கும் அஜித் சிலர் வீட்டு துக்க நிகழ்வுக்கு ஓடோடி வருவது. மக்கள் வருவார் என நினைக்கும் போது சத்தம் இல்லாமல் இருப்பது தொடர்கதையாகி இருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த போது இரண்டு ப்ளைட் மாறி ஓடோடி வந்தார். ஆனால் எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை.

    இதையும் படிங்க: தமிழ்ப்படங்களில் அதிக முறை தேசிய விருதுகளை வென்ற இயக்குனர் யார் தெரியுமா?

    அப்படி இருக்க ஒருமுறை ஏவிஎம் ரத்னம் அஜித்துக்கு 10 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து இருந்தார். அந்த நேரத்தில் ஃபெஃப்சி தொழிலாளர்களும், படைப்பாளிகளும் இரண்டு தரப்பில் சண்டையிட்டு கொண்டனர். அப்போ ஃபெஃப்சி தொழிலாளர்களுக்கு அஜித் மற்றும் கமல்ஹாசனும் தான் ஆதரவாக தோல் கொடுத்தார்கள். இதை அறிந்த ரத்னம் நான் கொடுத்த அட்வான்ஸை உடனே கொடு என்றாராம்.

    இதையும் படிங்க: வெங்கட் பிரபு தொடங்கி விட்டது… விஜய் ரூட்டையே ஃபாலோ செய்யும் ரஜினிகாந்த்… இந்த விஷயமுமா?

    ஆனால் வாங்கிய காசை முதலீட்டாக்கி விட்டதால் அஜித்திடம் அப்போ காசு என்பது இல்லை. நிறைய பேரிடம் கேட்டும் அஜித்துக்கு யாரும் பணம் கொடுக்க முன்வரவில்லை. அப்போ வடசென்னையை சேர்ந்த சேட் ஒருவர் எந்தவித பில்லும் வாங்காமல் நீ எதோ பிரச்னையில் இருக்க அதை சரி பண்ணு என பணத்தை கொடுத்து அனுப்பிவிட்டாராம்.

    அந்த சேட் திடீரென இறந்துவிட அவருக்கு அஞ்சலி செலுத்த அஜித் நேரடியாக சென்று இருக்கிறார். மாலை போட்டுவிட்டு வராமல் சுடுகாடு போகும் வரை உச்சிவெயிலில் உடன் இருந்து இறுதி காரியம் முடித்துவிட்டே திரும்பினாராம். அப்படி இருந்தவர் மனோரமா இறுதி நிகழ்வில் கலந்துக்கொண்ட போது ரசிகர்கள் மல்லுக்கட்ட கடுப்பாகியே பல நிகழ்வுகளை தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

  • அமராவதி படத்தில் நடிக்க இருந்தது இந்த சீரியல் நடிகரா? எஸ்.பி.பி கொடுத்த வாய்ப்பை பிடித்துக்கொண்ட அஜித்..!

    Amaravathi: அஜித்தின் தமிழ் அறிமுக படம் என்றால் அமராவதி தான். ஆனால் அந்த வாய்ப்பு முதலில் அவருக்கு கிடைக்கவில்லை. இன்னொரு சீரியல் நடிகருக்கு கிடைத்த வாய்ப்பை அவர் தவறவிட்டதையே அஜித் தட்டி தூக்கி இருக்கிறார் என்ற தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

    தலைவாசல் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் செல்வா ரெடி செய்து வைத்திருந்த திரைப்படம் தான் அமராவதி. ஆனால் அப்படத்தில் புதுமுகங்களை போட வைக்கலாம் என்ற ஐடியாவில் இருக்கிறார். சோழா பொன்னுரங்கம் அப்படத்தினை தயாரிக்க இருந்தார்.

    இதையும் படிங்க: நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா?!.. கோபப்பட்ட வாலிக்காக விழாவை கேன்சல் பண்ண சொன்ன எம்.ஜி.ஆர்!..

    முதலில் இந்த வாய்ப்பு சீரியல் நடிகர் விஜய் அதிராஜுக்கு தான் சென்றதாம். ஆனால் அவர் போனை எடுக்காமல் மிஸ் செய்துவிட்டார். பின்னர் தான் செல்வா அவரின் நண்பரான எஸ்.பி.பாலசுப்ரமணியனிடம் ஒரு புதுமுக நடிகரை நடிக்க வைக்கலாம் எனப் பேசிக்கொண்டு இருக்கிறார்.

    கொஞ்சம் ஸ்மார்ட் மற்றும் யங்கான ஒரு நடிகர் வேண்டும் எனக் கேட்டாராம். அப்போது எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான் தெலுங்கில் இப்போ பிரேமபுஸ்தகம் என்ற படம் வெளியாகி இருக்கிறது. அதில் நடித்திருக்கும் புதுமுக நடிகர் அஜித்தை கேட்டு பார்க்கலாம் என்றாராம்.

    ஆனால் அப்போ அழகா இருந்த அஜித்துக்கு தமிழ் முழுதாக தெரியாதாம். டான்ஸ் கூட சரியாக தெரியாதவரை அவர் அழகுக்காக மட்டுமே ஓகே செய்து தமிழுக்கு அழைத்து வந்து இருக்கிறார் செல்வா. இருந்தும் தயாரிப்பாளருக்கு அதில் துளியும் விருப்பமே இல்லையாம். அந்த படத்தில் போஸ்ட் படத்தில் கூட அஜித் விபத்தில் சிக்கினார்.

    அதனால் சில மாதங்கள் படுக்கையில் தள்ளப்பட்டார். இதனால் அந்த படத்தில் அஜித்துக்கு நடிகர் விக்ரம் தான் டப்பிங் பேசி இருந்தார். படம் வெளியாகி நல்ல ரீச்சை கொடுத்தது. பாசிட்டிவான வசூலையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. அங்கு தொடங்கிய தன்னுடைய கோலிவுட் பயணத்தினை இன்று சிகரமாக மாற்றி இருக்கிறார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: வாலிக்காக வரிகளை மாற்ற சொன்ன எம்.ஜி.ஆர்!.. கடுப்பாகி கத்திய கண்ணதாசன்!.. நடந்தது இதுதான்!..