Tag: captain vijayakanth

  • எந்த நடிகரும் பண்ணாத விஷயங்களை துணிந்து செய்த விஜயகாந்த்!.. கேப்டன்தான் கெத்து!..

    Vijayakanth: ரஜினி, கமல், மோகன் போன்ற முன்னணி நடிகர்கள் தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டிருந்த போது நம்பிக்கையுடன் புதுமுக நடிகராக சினிமாவில் நுழைந்தவர்தான் விஜயகாந்த். துவக்கத்தில் இவரை தமிழ் சினிமா கண்டுகொள்ளவில்லை என்றாலும் ஒருகட்டத்தில் தனக்கென ரசிகர்களை உருவாக்கி வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

    சினிமா நடிகர்களிலேயே அதிக துணிச்சலோடு பல விஷயங்களை செய்தது விஜயகாந்த் என்பது பலருக்கும் தெரியாது. தன் மீது இருந்த நம்பிக்கை, நல்லதே நடக்கும், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் போன்ற எண்ணம் போன்றவையே விஜயகாந்தை பல புது விஷயங்களை செய்ய வைத்தது.

    விஜயகாந்தை பற்றி எப்போதும் கிண்டலாகவும், நக்கலாகவும் பேசுபவர்களுக்கு திரைத்துறையில் அவர் என்னவெல்லாம் செய்தார் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி விஜயகாந்த் செய்த சில முக்கிய விஷயங்கள் பற்றி இங்கு பார்ப்போம். அரவிந்த்ராஜ் இயக்கத்தில் 1986ம் வருடம் வெளியாகி ஹிட் அடித்த படம்தான் ஊமை விழிகள்.

    இந்த படம் ரசிகர்களுக்கு திரில்லரான புது அனுபவத்தை கொடுத்தது. நடிப்பு கல்லூரி மாணவர்கள் சினிமாவில் நுழைந்த நேரம் அது. விஜயகாந்த் அப்போது உச்சத்தில் இருந்தார். பல படங்களில் நடித்து கொண்டிருந்தார். ஆனாலும், அவர்களை நம்பி அந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். அப்போது விஜயகாந்துக்கு 34 வயது. ஆனால், வயதான போலீஸ் அதிகாரி போல நடித்தார். இதைத்தான் பல வருடங்கள் கழித்து சூது கவ்வும் படத்தில் விஜய் சேதுபதி செய்தார்.

    மணிரத்னம் கதை, வசனம் எழுதி சுபாஷ் எழுதி இயக்கிய படம்தான் சத்ரியன். இந்த படத்தில் மனைவியை இழந்து 2 குழந்தைகளுக்கு தந்தையாக விஜயகாந்த் நடித்திருப்பார். விஜயகாந்த் அப்படி நடித்தபோது ரஜினி, கமல், சத்தியராஜ் போன்ற சக நடிகர்கள் கதாநாயகிகளுடன் சிங்கிளாக டூயட் பாடிக்கொண்டிருந்தார்கள்.

    சரத்குமாரை ஹீரோவாக போட்டு விஜயகாந்த் தயாரித்த படம்தான் தாய் மொழி. அப்போது வருடத்திற்கு 4 படங்கள் நடிக்கும் பிஸியான நடிகராக விஜயகாந்த் இருந்தார். ஆனாலும், அந்த படத்தில் 15 நிமிடம் வரும் ஒரு சின்ன வேடத்திலும் விஜயகாந்த் நடித்திருந்தார். ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய வைதேகி காத்திருந்தாள் படத்தில் எந்த ஹீரோயிசமும் காட்டாமல் விஜயகாந்த் நடித்திருந்தார்.

    அதேபோல், நானே ராஜா நானே மந்திரி படத்தில் படிப்பறிவில்லாத, எந்த பக்குவமும் இல்லாத ஒரு கிராமத்து முரடனாக நடித்திருந்தார். இதுபோல இன்னும் விஜயகாந்தை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். பாக்ஸ் ஆபிஸில் கிங்காக இருக்கும் போதுதான் இந்த எல்லா கதாபாத்திரங்களிலும் விஜயகாந்த் நடித்தார் என்பதில் நினைவில் கொள்ள வேண்டும்.

  • ஊமை விழிகள் படத்துக்கு விஜயகாந்த் செய்த உதவி!.. அதையும் எப்படி செஞ்சிருக்கார் பாருங்க!…

    Vijayakanth: விஜயகாந்த் ஒரு ஆக்சன் ஹீரோவாக பார்க்கப்பட்டாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள பல கதைகளிலும் நடித்திருக்கிறார். வெறும் ஆக்சன் கதைகளில் மட்டுமே நடித்துகொண்டிருந்தபோது சுந்தர்ராஜனின் இயக்கத்தில் வைதேகி காத்திருந்தாள் படத்தில் நடித்திருந்தார். விஜயகாந்தால் இப்படியும் நடிக்க முடியும் என அப்படம் காட்டியது. எனவே, அவ்வப்போது நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளிலும் தொடர்ந்து நடித்து வந்தார்.

    அப்படி அவர் நடித்த ஒரு திரைப்படம்தான் ஊமை விழிகள். இந்த படத்தில் டி.,எஸ்.பி தீன தயாளனாக கலக்கி இருப்பார் விஜயகாந்த். 1986ம் வருடம் வெளியான இந்த படம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இப்போது வரை பேசப்படுகிறது. இந்த படத்தை அரவிந்த்ராஜ் இயக்க ஆபாவணன் தயாரித்திருந்தார்.

    இந்த படத்தில் அருண் பாண்டியன், சந்திரசேகர், இளவரசி, ஜெய் சங்கர், செந்தில், ரவிச்சந்திரன் என பலரும் நடித்திருந்தனர். ஒரு பெண்ணால் பாதிக்கப்பட்ட ரவிச்சந்திரன் பல இளம்பெண்களையும் கடத்தி அவர்களின் கண்களை பறித்துக்கொண்டு அவர்களை கொலை செய்வார். இதற்கு அரசியல்வாதி ஒருவரும் அவருக்கு துணையாக இருப்பார்.

    இந்த விவகாரத்தை அருண்பாண்டியன், சந்திரசேகர், ஜெய் சங்கர் ஆகியோர் எப்படி வெளியே கொண்டு வருகிறார்கள்?, விஜயகாந்த் அவர்களுக்கு எப்படி உதவி செய்கிறார்? என கதையை அமைத்திருந்தார்கள். இந்த பட வாய்ப்பு வந்தபோது ‘பிலிம்ஸ் இன்ஸ்டியூட் பசங்க ஆர்ட் பிலிம் எடுப்பாங்க. என்னால் முடியாது’ என சொன்னார் விஜயகாந்த். அதன்பின், அவரின் நண்பர் எஸ்.ஏ.சந்திரசேகர் அவரை சம்மதிக்க வைத்து நடிக்கவைத்தார்.

    இந்த படம் பற்றி ஊடகம் ஒன்றில் பேசிய இயக்குனர் அரவிந்த்ராஜ் ‘ இந்த படத்திற்காக விஜயகாந்திடம் 10 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கேட்டேன். ஒரு பக்கம் படத்தை எடுக்க பணம் இல்லாமல் தயாரிப்பாளரும் கஷ்டப்பட்டார். எனவே, படத்தை சுருக்கி சுருக்கி எடுத்தோம். இதைப்பார்த்த விஜயகாந்த் ‘10 நாட்கள் மட்டுமே நான் நடிப்பேன் என்பதால் காட்சிகளை சுருக்க வேண்டாம். எவ்வளவு நாள் வேண்டுமானாலும் நடித்து கொடுக்கிறேன். நீங்கள் விரும்பிய படி படத்தை எடுங்கள்’ என சொல்லி நடித்து கொடுத்தார்.

    மேலும், பணம் இல்லாமல் நாங்கள் கஷ்டப்படுகிறோம் என்பதை புரிந்துகொண்டு எங்களுக்கு உதவ முடிவெடுத்தார். நேரிடையாக அதை செய்தால் நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என நினைத்து மதுரையில் ஒரு வினியோக உரிமை அலுவலகத்தை துவங்கி ஊமை விழிகள் படத்தின் மதுரை உரிமையை வாங்கிகொண்டார். மேலும், அதற்கான அட்வான்ஸ் என சொல்லி ஒரு தொகையை கொடுத்தார். அந்த பணத்தை வைத்து பல காட்சிகளை எடுத்தோம். அவரை போல ஒரு மனிதரை பார்க்கவே முடியாது’ என நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.

  • 25 அடியிலிருந்து கீழே விழுந்த விஜயகாந்த்!.. கேப்டன் பிரபாகரன் ஷூட்டிங்கில் நடந்த ஷாக்!…

    Vijayakanth: விஜயகாந்த் சண்டை காட்சிகளில் நடிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். துவக்கம் முதலே தன்னை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாகத்தான் ரசிகர்களிடம் காட்டிக்கொண்டார். எம்.ஜி.ஆரை போல ஆக்‌ஷன் ஹீரோவாக வேண்டும் என்பதுதான் அவரின் ஆசையாக இருந்தது. அதனால்தான் அவரின் ரூட்டிலேயே விஜயகாந்த் போனார்.

    போலீஸ் வேடம்: விஜயகாந்த் பெரும்பாலான படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அது அவருக்கு மிகவும் பிடித்த வேடம். ஏனெனில், தப்பை தட்டிக்கேட்கும் தைரியமும், அதிகாரமும் போலீஸுக்கே இருக்கிறது என்பது அவரின் எண்ணம். அதனால்தான் போலீஸ் அதிகாரி வேடத்தில் பல படங்களிலும் நடித்தார்.

    பொதுவாக சண்டைக்காட்சிகளில் பெரிய நடிகர்கள் டூப் போட்டு நடிப்பார்கள். அதாவது, ரிஸ்க்காக இருக்கும் காட்சிகளில் ஹீரோவுக்கு பதில் இன்னொருவரை வைத்து எடுப்பார்கள். இது காலம் காலமாக இருப்பதுதான். ஆனால், விஜயகாந்துக்கு பதில் டூப் நடிகரை போட்டு இதுவரை யாரும் எடுத்தது இல்லை. ஏனெனில், எல்லா காட்சியிலும் விஜயகாந்தே துணிந்து நடிப்பார்.

    சண்டை காட்சிகளில் டூப்: பட இயக்குனரோ, ஸ்டண்ட் இயக்குனரோ அவரிடம் சென்று ‘உங்களுக்கு ஏதேனும் ஆகிவிட்டால் என்ன செய்வது?’ எனக்கேட்டால், ‘அப்போ அவனுக்கு ஏதாவது ஆனா பரவாயில்லையா?.. அவனுக்கு மட்டும் குடும்பம் இல்லையா?’ என கேட்பார். அதுதான் விஜயகாந்த். அப்படி ரிஸ்க் எடுத்து நடிக்கும்போது பலமுறை அவருக்கு காயங்கள் ஏற்பட்டிருக்கிறது.

    அவரின் வலது தோள்பட்டையே சற்று கீழே இறங்கிவிட்டது. அதற்கெல்லாம் அவர் கலங்கியதே இல்லை. தலைகீழாக பல மணி நேரம் தொங்கி கூட அவர் சண்டை காட்சிகளில் நடித்திருக்கிறார். இந்நிலையில்தான், இயக்குனர் செல்வமணி ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டார்.

    கீழே விழுந்த விஜயகாந்த்: கேப்டன் பிரபாகரன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை எடுத்தபோது ஒரு பெரிய பாறை மீது விஜயகாந்த் ஏறுவது போல காட்சியை எடுத்தோம். அப்போது விஜயகாந்தின் உடலில் கட்டியிருந்த கயிறு அறுந்துவிட்டது. 25 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தார். ஆனாலும், அவர் அசரவில்லை. மீண்டும் அந்த காட்சியில் நடித்து கொடுத்தார். அந்த இடத்திற்கு 40 கிலோ மீட்டர் நடந்தே சென்றோம். அந்த 40 கிலோ மீட்டர் தூரமும் கேப்டன் தனது சொந்த செலவில் ரோடு போட்டு கொடுத்தார்’ என சொல்லியிருக்கிறார்.

  • 100 படங்கள் நடிக்கும் வரை கூரை வீட்டில் தங்கிய விஜயகாந்த்!.. யாருக்காவது தெரியுமா?!..

    Vijayakanth: சினிமாவில் வெற்றி என்பது சுலபமில்லை. ஏனெனில், புதிதாக வரும் ஒருவருக்கு வாய்ப்பு என்பது சீக்கிரத்தில் கிடைத்து விடாது. பல இயக்குனர்களிடமும், தயாரிப்பாளர்களிடமும் சென்று வாய்ப்பு கேட்க வேண்டும். பல அவமானங்களை சந்திக்க வேண்டியிருக்கும். சாப்பாட்டுக்கு கஷ்டப்பட வேண்டியிருக்கும்.

    ஒருநாள் வாய்ப்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை மட்டும் போதாது. உழைப்பு, விடாமுயற்சியும் முக்கியம். அதோடு, சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருக்கவேண்டும். அதனால்தான் அதை அதிர்ஷ்டம் என்கிறார்கள். அந்த நேரம் வரும்வரை காத்திருக்க வேண்டும்.

    கேப்டன் விஜயகாந்தும் அப்படி காத்திருந்து, வாய்ப்பு தேடி அலைந்து, அவமானங்களை சந்தித்து சினிமாவுக்கு வந்தவர்தான். இனிக்கும் இளமை என்கிற படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். பெரிதாக கிளிக் ஆகவில்லை. சில படங்களில் நடித்தாலும் ஓடவில்லை. அதன்பி எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சட்டம் ஒரு இருட்டறை என்கிற படத்தில் நடித்தார். அது அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

    அதன்பின் பல சறுக்கல்கள், ஏற்றம் என சந்தித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். விஜயகாந்தின் படங்கள் ரஜினி, கமல் படங்களை விட அதிக வசூல் செய்த சம்பவங்களும் நடந்தது. விஜயகாந்த் மிகவும் எளிமையானவர். அவரை சுலபமாக அணுக முடியும். ஆடம்பரத்தை விருப்பமாட்டார். என்ன உணவு கிடைத்தாலும் சாப்பிடுவார்.

    இந்நிலையில், விஜயகாந்துடன் நெருங்கி பழகியவரும், தயாரிப்பாளருமான டி.சிவா ஊடகம் ஒன்றில் பேசும்போது ‘100 படம் முடியும் வரைக்கும் ஒரு கூரை கொட்டகையில்தான் கேப்டன் தங்கினார். அங்கு 20க்கு 15 அளவில் ஒரு பெட் இருக்கும். அதில் நான், விஜயகாந்த், இப்ராஹிம் ராவுத்தார் மற்றும் அவரின் சில நண்பர்கள் எல்லோரும் படுத்துக்கொள்வோம். ஷூட்டிங் முடிந்துவந்து அந்த பெட்டில் எங்கு இடம் இருக்கிறதோ அதில் படுத்து தூங்குவார்.

    அவருக்கென தனி தலயணை, பெட் கிடையாது. 2 ரூபாய் சோப் மட்டுமே பயன்படுத்துவார். எந்த பார்ட்டிக்கும் போகமாட்டார். பிலிம்பேர் விருது கொடுப்பார்கள். அதை வாங்க கூட போகமாட்டார். எந்த பார்ட்டியிலும் கலந்துகொள்ளமாட்டார். ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அவர் சாப்பிட்டதே இல்லை. அதை ஒரு பாலிசியாகவே வைத்திருந்தார். தனது வாழ்நாளில் ஒரு பிராண்டட் டிரெஸ் கூட அவர் போட்டது இல்லை. என்ன சாப்பாடு, என்ன உடை என எதைப்பற்றியும் அவர் கவலைப்பட்டதே இல்லை. கல்யாணம் செய்த பின்னரே தனி வீட்டில் குடியேறினார். அவரை போல ஒருவரை பார்ப்பது அபூர்வம்’ என பேசினார்.

  • அப்பாவிடம் பொய் சொல்லி சினிமாவுக்கு வந்த விஜயகாந்த்!. அவரே சொன்ன பிளாஷ்பேக்!…

    Vijayaknth: சினிமாவில் வாய்ப்பு என்பது யாருக்கும் சுலபமாக கிடைத்துவிடாது. அதுவும் எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் வரும்போது சினிமாவின் இரும்பு கதவுகள் திறக்கவே திறக்காது. பல இடங்களுக்கும் சென்று வாய்ப்பு கேட்டு அலைய வேண்டும். அப்போது அவமானத்தையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

    அதையும் மீறி வாய்ப்பு கிடைத்தாலும் அதை பறிக்க பலரும் வருவார்கள். அந்த வாய்ப்பை தக்க வைக்க வேண்டும். இயக்குனரும், தயாரிப்பாளரும் நம்ப வேண்டும். பாதி படத்தில் ஹீரோவை மாற்றிய கதையெல்லாம் கோலிவுட்டில் நிறைய நடந்திருக்கிறது. மதுரையிலிருந்து சென்னை வந்த வாய்ப்பு தேடி அலைந்த விஜயகாந்தும் பல அவமானங்களை சந்தித்தார்.

    அப்பாவின் ரைல்ஸ் மில்: இதுபற்றி பல வருடங்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றில் பேசிய அவர் ‘மதுரையில் என் அப்பாவின் ரைஸ் மில்லை நான் நடத்தி வந்தேன். என்னிடம் 100 பேர் வேலை செய்வார்கள். என்னை சின்ன முதலாளி என்றே அழைப்பார்கள். அப்பாவிடம் பொய் சொல்லிவிட்டுதான் சினிமாவுக்கு வந்தேன். ஏனெனில் என் அப்பா என்னை நல்லாவே வைத்திருந்தார்.

    என் வீட்டில் மற்ற எல்லோரும் படித்து கொண்டிருக்க நான் படிப்பை விட்டுவிட்டு ரைஸ் மில்லை கவனித்து வந்தேன். சென்னை வந்து வாய்ப்பு கேட்டபோது எனக்கு யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. இவர்கள் முன் நாம் நடித்து காட்ட வேண்டும் என நினைத்து நான் ஏறாத வாசல் இல்லை. எல்லா இடத்திலும் சுத்தினேன். அப்போது நான் தி.நகரில் பாண்டி பஜாரில் தங்கியிருந்தேன்.

    சந்தித்த அவமானங்கள்: அங்கிருந்து ஜெமினி பாலம் வரை நடந்தே வருவேன். வரும்போது பவுடன் பூசிக்கொண்டு பஸ்ஸில் வருவேன். போகும்போது நடந்து போவேன். ஏனெனில் கொஞ்சம் ஃபிரஸ்ஸாக இருந்தால்தான் கதாநாயகன் வாய்ப்பு கிடைக்கும் என நினைத்தேன். நான் வசதியானவன் என தெரிந்துகொண்டு என்னிடம் பலரும் பணம் கேட்டார்கள். பல அசிங்கங்களை சந்தித்தேன்.

    சின்ன முதலாளி: 100 பேர் என்னை சின்ன முதலாளி என அழைப்பதையெல்லாம் விட்டுவிட்டு இங்கு நாம் சாதித்துகாட்ட வேண்டும் என்கிற பிடிவாத குணம் என்னிடம் இருந்தது. இனிக்கும் இளமை படத்தில் வில்லன் கம் ஹீரோ என நடித்தேன். என்னை பலரும் துச்சமாக தூக்கி எறிந்தனர். ‘கருப்பா இருந்துட்டு நீ ஏன் சினிமாவுக்கு வர?. அதான் ஏற்கனவே இங்க ஒருத்தர் (ரஜினி) இருக்காரே’ என பேசுவார்கள். இப்படி பலரும் பேசி அவமானப்பட்டு என் மனம் கல்லாகி இறுகிபோய்விட்டது’ என சொல்லியிருக்கிறார்.

    வேறு மொழி படங்கள்: மேலும், ‘வேறு மொழியில் நீங்கள் ஏன் நடிக்கவில்லை?’ என்கிற கேள்விக்கு பதில் சொன்ன விஜயகாந்த் ‘முதலில் எனக்கு தமிழை தவிர வேறு மொழிகள் தெரியாது. அப்படி நடித்தாலும் காசுக்குதான் நடிக்க வேண்டும். நான் எப்போதும் காசுக்கு ஆசைப்பட்டது இல்லை. அதனால் அந்த ஆர்வம் வரவில்லை. கதைகளில் நான் தலையிட மாட்டேன். தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடம் சில கருத்துக்களை சொல்வேன். அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் கட்டாயப்படுத்த மாட்டேன்.

    ஆனால், வசனங்களில் தலையிடுவேன். குறிப்பாக துதி பாடுவது போன்ற வசனங்கள் வேண்டாம் என சொல்லிவிடுவேன். அது எனக்கு பிடிக்காது. சில நேரங்களில் சில கதைகளை நான் தேர்ந்தெடுப்பேன். சும்மா காதலித்தேன், டூயட் பாடினேன் என இல்லாமல் அதில் சமுதாயத்திற்கு சொல்வது போல ஒரு நல்ல கருத்து இருக்கிறதா என பார்ப்பேன்’ என பேசியிருக்கிறார் கேப்டன் விஜயகாந்த்.

  • ஜெயலலிதாவை விட்டு கொடுக்காமல் பேசிய விஜயகாந்த்… எல்லாத்துக்கும் காரணம் அந்தக் கேள்விதான்!

    கேப்டன் விஜயகாந்த் நடித்த படங்களில் அவர் அரசியல் வசனம் பேச ஆரம்பித்தால் அனல் பறக்கும். மனிதர் புள்ளி விவரங்கள் கொண்ட நீண்ட டயலாக்கையும் அசால்டாகப் பேசி அசத்துவார். அது தான் அவரோட தனி ஸ்டைல். அப்படி பேசுவதற்கு இனி யாரும் இல்லை. வரவும் மாட்டார்கள்.

    கேப்டன் பிரபாகரன், ரமணா, ஏழை ஜாதி, அரசாங்கம் ஆகிய படங்களைப் பார்த்தால் தெரியும். அவரது கம்பீரமான குரலும் அந்த டயலாக்கும் படம் பார்க்கும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்து விடும்.

    Also read: ஆக்சன் கிங்.. கலெக்‌ஷன் கிங்.. டயலாக் டெலிவரி கிங்!.. ரஜினி யாரை சொல்லியிருக்கார் பாருங்க!…

    அரசியல் கதைகளில் எல்லாம் நல்லா நடிக்கிறீங்க. ஏன் நீங்க சிஎம்மா ஆகக்கூடாதுங்கறது தான் எங்களோட ஆசை. லண்டன்ல இருந்து இங்க வந்துருக்கும்போது ஜெயலலிதாவைப் பத்தி சொல்றேன்னு கோவிச்சுக்காதீங்க.

    அவங்க வீட்டை விட்டே எழுந்திருச்சிக்க மாட்டாங்க. ஆனா 5 மணி நேரத்துக்கு முன்னாடியே ரோடு பிளாக். ரொம்ப கஷ்டப்பட்டோம். அப்படி ஒரு நடிகையா இருந்து வந்தவங்க தான் சிஎம்மா ஆகியிருக்காங்கன்னு ரசிகை ஒருவர் கேட்கிறார்.

    அதற்க கேப்டன் விஜயகாந்த் சொன்ன பதில் தான் இது. அதாவதுங்க… நாம வெளியே இருந்து பார்க்குறதுக்கு ஒரு மாதிரியா இருக்கும். அவங்க பாதுகாப்புக்கு. நாம அந்த இடத்துல இருந்தா தானே எதையும் சொல்ல முடியும். அவங்க அவங்களுக்குன்னு சில காரணங்கள் இருக்கு. அதை வெளியேயும் அவங்க சொல்ல முடியாது. வீட்டுக்கு வீடு வாசப்படி.

    Yelai jaathi
    Yelai jaathi

    அது எல்லாருக்குமே இருக்கு. ஏதோ ஒரு இதுல பிரச்சனை இருக்கும். அந்தப் பிரச்சனைகளைப் பேசணும். கதைகளைப் பேசணும். கால்ஷீட்டைப் பேசணும்.

    நடிகர்களுக்கே இவ்வளவு இருக்கும்போது ஒரு அரசியல்வாதிக்கு எவ்வளவு இருக்கும்னு நீங்க யோசிச்சிப் பாருங்க. அதிகாரிகள் வரலாம். அவங்களோட டிபார்ட்மென்ட் கரெக்டா இருக்கணும்கறதுக்காக அந்த அதிகாரிகளுக்கு திருப்திப்படுத்தணும்கறதுக்காக முன்கூட்டியே இருக்கலாம்.

    அவங்களுக்கு என்ன வேலை இருக்குங்கறது நமக்குத் தெரியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இப்போதெல்லாம் சுயநலவாதிகள் பெருகி வரும் நிலையில், ஒரு சாதாரண நடிகராக இருந்த விஜயகாந்த் அப்போதே அடுத்தவர்கள் நிலையில் இருந்து யோசித்துப் பதில் சொல்லி இருக்கிறார் என்றால் அவர் எவ்வளவு பெருந்தன்மை மிக்கவர் என்பது தெரிகிறது அல்லவா.

  • இதுக்காகத்தான் அரசியலுக்கு வந்தீங்களா?!.. சிறுமி கேட்ட கேள்வி!. கேப்டன் சொன்ன நச் பதில்…

    நடிகராக சினிமாவில் நுழைந்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து உச்சம் தொட்டவர் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த். இவரின் பயணம் எல்லாமே எம்.ஜி.ஆரை பின்பற்றியே இருக்கும். ஆக்‌ஷன் படங்களில் நடித்து அப்படியே அரசியலில் ஆர்வம் காட்டி ஒரு கட்டத்தில் தனியாக அரசியல் கட்சியை துவங்கி அரசியலிலும் ஒரு இடத்தை பிடித்தார்.

    பிரச்சனை என்றால் தீர்த்து வைப்பது, தவறுகளை தட்டி கேட்பது என்பதுதான் விஜயகாந்தின் இமேஜாக மக்களின் மனதில் பதிந்து போனது. எனவே, அவர் அரசியலுக்கு வந்தபோது குறிப்பிட்ட சதவீத மக்கள் அவருக்கு ஆதரவு கொடுத்தனர். ஒருகட்டத்தில் எதிர்கட்சி தலைவராகவும் விஜயகாந்த் அமர்ந்தார்.

    இதையும் படிங்க: மங்காத்தா அஜித்துக்கு டஃப் கொடுக்கும் சிம்பு!.. தக் லைஃப் வீடியோ வெறித்தனம்!…

    அவரின் கட்சியில் பலரும் எம்.எல்.ஏ. ஆனார்கள். ஆனாலும், அரசியல் விளையாட்டுகளால் அவர் நம்பிய சில எம்.எல்.ஏக்களை அவரின் கட்சியிலிருந்து விலகி வேறு கட்சியை ஆதரித்தனர். இது மனதளவில் விஜயகாந்தை பெரிதும் பாதித்தது. அதோடு, அவரின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டதால் தீவிர அரசியலில் இருந்து விலகினார்.

    கடந்த 10 வருடங்களுக்கும் மேல் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். அவரின் நெருங்கிய நண்பர்கள் கூட அவரை பார்க்க அனுமதி கொடுக்கப்படவில்லை. கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி அவர் மரணமடைந்தார். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த 15 லட்சம் மக்கள் வந்ததாக சொல்லப்படுகிறது.

    vijayakanth

    நல்ல மனிதர்.. எல்லோருக்கும் உதவி செய்தவர். சுயநலம் இல்லாதவர் என்கிற இமேஜை மக்களின் மனதில் ஏற்படுத்திவிட்டு போயிருக்கிறார் விஜயகாந்த். இந்நிலையில், அவர் அரசியல் கட்சியை துவங்கி இருந்த புதிதில் ஒரு பள்ளி மாணவி அவரிம் ‘மக்களிடம் பிரபலமாக வேண்டும் என்பதற்காகத்தான் அரசியலுக்கு வந்தீர்களா?’ என ஒரு கேள்வி கேட்டார்.

    அதற்கு பதில் சொன்ன விஜயகாந்த் ‘இப்போது நான் பிரபலம் இல்லையா?. அரசியல் கட்சி துவங்கிதான் நான் பிரபலமாக வேண்டுமா?.. மக்களுக்கு நல்ல செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் அரசியலுக்கு வந்திருக்கிறேன். உங்களுக்கு படிப்பு செலவுக்கு பணம் இல்லை எனில் நான் கொடுப்பேன். இன்னும் 10 பேருக்கு கொடுப்பேன். ஆனால், நாட்டில் எத்தனை ஏழை மாணவ, மாணவிகள் இருக்கிறார்கள். எல்லோருக்கும் உதவ வேண்டும் எனில் அதிகாரத்தில் இருக்கவேண்டும். அதற்காகத்தான் அரசியல்’ என தெளிவாக சொன்னார் கேப்டன் விஜயகாந்த்.

  • விஜயகாந்த் படம் பார்த்தாலே நான் அழுதிடுவேன்!.. பல நினைவுகள்!. ஃபீலிங்ஸ் காட்டும் நடிகர்!..

    Vijayakanth: படப்பிடிப்பிலும் சரி.. ஷூட்டிங் முடிந்த பின்னரும் சரி.. எப்போதும் நண்பர்கள் புடை சூழ இருந்தவர்தான் விஜயகாந்த். ஏனெனில் நட்புக்கு அவர் கொடுத்த முக்கியத்தும் அப்படி. அவர் எல்லோருடன் நன்றாக பழகினாலும் அவருக்கு நெருக்கமான நண்பர்களாக இருந்தவர்கள் ராதாரவி, வாகை சந்திரசேகர், தியாகு, பாண்டியன், எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோர்தான்.

    எந்த விழாவுக்கு போனாலும் இவர்கள் இல்லாமல் போகமாட்டார் விஜயகாந்த். அதேபோல் படப்பிடிப்பு முடிந்தபின் அவர் நேரம் செலவழித்தது அவர்களோடுதான். சீட்டு விளையாடுவது கூட அவர்களோடுதான். ஆனால், திருமணத்திற்கு பின் அந்த நெருக்கம் குறைந்து போனது.

    இதையும் படிங்க: இளையராஜாவை பார்த்து மிரண்டு போன ஜெயலலிதா! அம்மாவுக்கே ஜெர்க் காட்டிய இசைஞானி

    விஜயகாந்தை சந்திக்க வேண்டுமெனில் பிரேமலதாவிடம் அனுமதி வாங்க வேண்டும் என்கிற நிலைமை வரவே ராதாரவி, தியாகு போன்றவர்கள் விஜயகாந்திடமிருந்து விலகி இருந்தனர். விஜயகாந்துடன் பல திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகர் ராதாரவி. இவரும் விஜயகாந்தும் ‘வாடா போடா’ நண்பர்கள்.

    விஜயகாந்தின் பல படங்களிலும் வில்லனாக நடித்திருக்கிறார் ராதாரவி. விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு சினிமா மற்றும் அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் இருந்தபோது அவரை ராதாரவி போய் சந்திக்கவில்லை. அவர் பலமுறை அனுமதி கேட்டும் பிரேமலதா அனுமதி கொடுக்கவில்லை. தற்போது விஜயகாந்த் இறந்தும் போய்விட்டார்.

    இதையும் படிங்க: உங்க பொண்ணு ஒழுங்கா? ஷகீலா கேட்ட கேள்வியில் வெட்கி தலைகுனிந்த பயில்வான்!. செம பஞ்சாயத்து!..

    இந்த நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய ராதாரவி ‘விஜயகாந்தை கடைசி வரை பார்க்க முடியவில்லை. ஒருகட்டத்தில் ‘எப்படி இருந்த விஜயகாந்த் இப்படி ஆகிவிட்டானே.. அவனை பார்க்க வேண்டாம்’ என நானே முடிவெடுத்து விட்டேன். அவனை அந்த நிலையில் பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை.

    radharavi

    ‘நடிகர் சங்கத்துக்கு தலைவராக வா’ என அவனை நான்தான் அழைத்தேன். ‘என்னோடு நீ இருப்பாயா?’ என கேட்டான். நான் கமிட்டியில் இருக்கிறேன் என சொன்னேன். டிவியில் விஜயகாந்த் படம் போட்டால் பார்த்துவிட்டு என் அறைக்கு போய் அழுவேன். அவனுடன் எனக்கு பல இனிமையான நினைவுகள்’ என மனமுடைந்து பேசினார் ராதாரவி.

  • உங்களை திட்டுபவர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?!.. கேப்டன் விஜயகாந்த் சொன்ன கூல் பதில்!…

    பொதுவாழ்க்கையான அரசியல் மற்றும் சினிமாத்துறை ஆகியவற்றில் பிரபலமானலே கடுமையான விமர்சனங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். விமர்சனம் என்றால் பரவாயில்லை, தனி மனித தாக்குகல், கிண்டல், கேலி, நக்கல், பகடி என எல்லாவற்றையும் சந்திக்க வேண்டி இருக்கும்.

    அதையெல்லாம் தலையில் ஏற்றிக்கொண்டால் நாம் அடுத்த அடி நகர முடியாது. இதை உணர்ந்தவர்கள் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் வாழ்வில் சாதிப்பார்கள். மனம் உடைந்து போகும் மனிதர்கள் காணாமல் போவார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த் என யாரும் இதற்கு தப்பியது இல்லை.

    இதையும் படிங்க: விஜய்க்கு அவர் நோ சொல்லி இருக்கவே மாட்டார்… அதான் இதை செய்தோம்.. சீக்ரெட் சொன்ன பிரேமலதா விஜயகாந்த்!…

    எம்.ஜி.ஆரை கடுமையான விமர்சனம் செய்ததோடு அவருக்கு ஏற்பட்ட குரல் பாதிப்பை வைத்து அவருக்கு பிடிக்காதவர்கள் நக்கலடித்தார்கள். ஆனால், அதையெல்லாம் அவர் கண்டுகொண்டதே இல்லை. சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் ரஜினியை இப்போது வரை கடுமையாக விமர்சிக்கிறார்கள். அது பெரும்பாலும் தனி மனித தாக்குதல்களாகவே இருக்கிறது.

    சினிமாவில் பல அவமானங்களை சந்தித்து மேலே வந்தவர்தான் விஜயகாந்த். அதனால்தான் தன் பட்ட கஷ்டங்களை மற்றவர்கள் சந்திக்கக் கூடாது என நினைத்து பலருக்கும் உதவிகளை செய்தார். விஜயகாந்தை நல்ல மனிதர் என எல்லோரும் பாராட்டுகிறார்கள் அதற்கு முக்கிய காரணம் அவரின் நல்ல குணம்தான்.

    இதையும் படிங்க: 22 முறை கமலுடன் மோதிய விஜயகாந்த் படங்கள்… ஜெயித்தது கேப்டனா? உலகநாயகனா?..

    அதேநேரம், வடிவேலு போன்ற சிலர் விஜயகாந்தை கடுமையாக திட்டியதும் நடந்தது. விஜயகாந்தின் மீது இருந்த தனிப்பட்ட பகையை தீர்த்துக்கொள்வதற்காகவும், அவரை திட்டுவதற்காகவுமே ஒரு அரசியல் கட்சிக்குக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போனார் வடிவேலு. அப்போது விஜயகாந்தை மிகவும் மோசமாகவும், அசிங்கமாகவும் விமர்சித்தார். ஆனால், அதற்கு விஜயகாந்த் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. யாரும் வடிவேலுவுக்கு எதிராக பேசவேண்டாம் என அவரின் கட்சியினருக்கு கட்டளை போட்டவர்தான் விஜயகாந்த்.

    ஒருமுறை அவரிடம் ‘நீங்கள் பலருக்கும் உதவி செய்திருக்கிறீகள். சில நடிகர்களுக்கு உதவி செய்ய முடியாமல் போயிருக்கும். அப்போது அவர்கள் உங்களை திட்டினால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?’ என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கூலாக பதில் சொன்ன விஜயகாந்த் ‘ இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிடுவேன்’ என பதில் சொன்னார் விஜயகாந்த்.

  • கேப்டனின் உண்மையான வாரிசு இவர்தான்!.. அட அவரே சொல்லிட்டாரே!.. ஒருவகையில் சரிதான்!..

    விஜயகாந்த் மற்றவர்களுக்கு எப்படி உதவுவார் என்பது எல்லோருக்கும் தெரியும். கஷ்டப்படுபவர்களை பார்த்தால் உடனே அவர்களிடம் அதுபற்றி விசாரித்து அவரால் என்ன செய்ய முடியுமோ அதை செய்வதுதான் விஜயகாந்தின் பழக்கம். அதற்கு காரணம் தன் முன்னால் யாரும் கஷ்டப்படக்கூடாது என நினைப்பவர்.

    தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பில் எல்லோருக்கும் ஒரு மாதிரியான சாப்பாடை போட சொல்லி அதற்கான செலவை தனது சம்பளத்தில் பிடித்து கொள்ளுமாறு தயாரிப்பாளரிடம் சொன்ன ஒரே நடிகர் விஜயகாந்த் மட்டுமே. அதனால்தான் விஜயகாந்தை போல ஒரு மனிதரை பார்க்க முடியாது என திரையுலகில் எல்லோரும் சொல்கிறார்கள்.

    இதையும் படிங்க: ஹாலிவுட் பட கதையில் மகனுடன் நடிக்க ஆசைப்பட்ட விஜயகாந்த்!.. அட நடக்காம போச்சே!…

    திரையுலகில் விஜயகாந்த் போல உதவி செய்பவரை பார்க்கவே முடியாது. எல்லோருக்கும் வாரி வாரி வழங்கிய வள்ளல் அவர். வள்ளல் என்கிற பட்டம் எம்.ஜி.ஆருக்கு பின் விஜயகாந்துக்குதான் கிடைத்தது. அதனால்தான் அவர் மரணமடைந்தபோது அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான பொதுமக்கள் சென்றார்கள்.

    பொதுவாகவே மற்றவர்களுக்கு உதவுபவர்களை எல்லோருக்கும் பிடிக்கும். அவர்களை எல்லோரும் பாராட்டுவார்கள். இப்போது அந்த பெயர் விஜய் டிவி ‘கலக்கப் போவது யாரு’ பாலாவுக்கு கிடைத்திருக்கிறது. சாதாரண மனிதர்களுக்கு அவர் செய்து வரும் உதவிகள் எல்லோரையும் நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.

    பொதுவாக சம்பாதிப்பதில் குறிப்பிட்ட சதவிதம் சிலர் மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள். ஆனால், பாலாவோ சம்பாதிப்பது எல்லாவற்றையும் மற்றவர்களுக்கு செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு மலை கிராமங்களுக்கு 3 ஆம்புலன்ஸ் வண்டிகளை வாங்கி கொடுத்தார்.

    இதையும் படிங்க: 22 முறை கமலுடன் மோதிய விஜயகாந்த் படங்கள்… ஜெயித்தது கேப்டனா? உலகநாயகனா?..

    உடல் ஊனமுற்ற சிறுமியை பள்ளிக்கு அழைத்து செல்வதற்காக அவரின் அம்மாவுக்கு ஸ்கூட்டி ஒன்றை வாங்கி கொடுத்தார். இப்போது நடிகர் ராகவா லாரன்ஸுடன் இணைந்து பலருக்கும் பல உதவிகளை செய்து வருகிறார். இதனால் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்கள்.

    kpy bala

    இந்நிலையில், விஜயகாந்துடன் நெருங்கிய பழகியவரும், அவரை வைத்து மரியாதை உள்ளிட்ட சில படங்களை தயாரித்த டி.சிவா ஒரு சினிமா விழாவில் பேசிய போது ‘பாலாதான் கேப்டனின் வாரிசு’ என பேசினார். அதோடு, விடுதலை 2 படத்தில் வெற்றிமாறன் அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.