Tag: captain vijayakanth

  • முடிஞ்சா என்னைத்தாண்டி போங்க! சவுக்குக்கட்டைய கையில் எடுத்த விஜயகாந்த் – அமைதியான மாணவர்கள்

    Actor Vijayakanth: தமிழ் சினிமாவில் என்றென்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் நடிகராக இருப்பவர் நடிகர் விஜயகாந்த். எப்படி எம்ஜிஆரை இன்றளவும் பேசி கொண்டிருக்கிறோமோ அதே போல விஜயகாந்தின் புகழையும்  நாம் காலங்காலமாக பேசிக் கொண்டுதான் இருக்கப் போகிறோம்.

    இந்த நிலையில் வலைப்பேச்சு பிஸ்மி ஒரு சுவாரஸ்ய தகவலை கூறினார். அதாவது அரசியலுக்கு வந்த பிறகு விஜயகாந்த் அதிகமாக திமுக- வைக் குறித்தே தன்னுடைய எதிர்ப்பை காட்டி வந்தார். கலைஞர் பேசுவது மாதிரி ஒரு சில வீடியோக்களில் கிண்டல் பண்ணி பேசுவதையும் நாம் பார்க்க முடிந்தது.

    இதையும் படிங்க: துண்டக் காணோம் துணியக் காணோம்னு திரியும் துஷாரா விஜயன்.. மார்கழி குளிருக்கு இதமான மசால் வடை!..

    ஆனால் உண்மையிலேயே திமுக வெறியனாக ரசிகனாகத்தான் விஜயகாந்த் இருந்திருக்கிறார். அதற்கு உதாரணமாக பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அந்த காலத்தில் விஜயகாந்துடன் இணைந்து மொத்தம் 5 பேர் கொண்ட குழுவாகத்தான் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.

    ராதாரவி, மண்வாசனை பாண்டியன், எஸ்.எஸ். சந்திரன், வாகை சந்திரசேகர், தியாகு என எந்த போராட்டமானாலும் எந்த பிரச்சினையானாலும் இவர்கள்தான் முதல் ஆளாக வந்து நிற்பார்கள். விஜயகாந்துக்கு மிக நெருக்கமானவர்களும் கூட.

    இதையும் படிங்க: ஓடிடியில் முட்டிக்கொள்ளும் சதீஷ் vs நானி.. ஹாய் நன்னாவா? கான்ஜுரிங் கண்ணப்பன்? உங்க சாய்ஸ் என்ன?

    தஞ்சாவூரில் உள்ள பூண்டி கலைக்கல்லூரியில் ஒரு விழாவுக்கு கேப்டனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாம். அவரோடு இந்த ஐந்து பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அந்த நேரம் அதிமுக ஆட்சி நேரம். மேடையில் வந்து பேசிய சந்திரசேகர் திமுகவிற்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.

    உடனே பொங்கி எழுந்த மாணவர்கள் மேடையில் இருந்தவர்களை அடிக்க ஓடி வந்தார்களாம். இதை பார்த்துக் கொண்டிருந்த ராதாரவி, எஸ்.எஸ், சந்திரனுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க வேட்டியை மடித்துக் கொண்டு கீழே இறங்கினாராம் விஜயகாந்த்.

    இதையும் படிங்க: ஒரு செல்ஃபியால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை – நிவாரணம் கொடுக்க வந்த விஜய்க்கு எதிராக திரும்பிய சம்பவம்

    ஒரு படத்தில் வரும் காட்சியை போல் மாணவர்களை அமைதியாக இருக்கும் படி கூறியிருக்கிறார். ஆனாலும் மாணவர்கள் அடங்கவில்லையாம். உடனே அருகில் இருந்த ஒரு சவுக்குக் கட்டையை கையில் எடுத்து என்னைத்தாண்டி போய் அடிங்க. ஒரு ஆள் அப்படி தாண்டி போனாலும் கூட அவர்களுக்கு இந்த சவுக்குக் கட்டையால் அடி விழும் என்று விஜயகாந்த் சொல்லியிருக்கிறார். அதன் பிறகுதான் மாணவர்கள் அமைதியானர்களாம்.

  • பலகோடி மதிப்புள்ள சொத்தை ஏழைகளுக்கு தானமாக கொடுத்த விஜயகாந்த்!.. அந்த மனசுதான் கடவுள்!..

    Vijayakanth: வாழ்ந்தவர் கோடி.. மறைந்தவர் கோடி.. மக்களின் மனதில் நின்றவர் யார்?.. என்கிற கண்ணதாசனின் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்தவர் வெகு சிலர் மட்டுமே. காமராஜர், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், சிவாஜி, அப்துல் கலாம், பின்னணி பாடகர் எஸ்.பி., நகைச்சுவை நடிகர் விவேக், மயில்சாமி, பின்னணி பாடகர் பாலசுப்பிரமணியம் என வெகு சிலரின் இறப்பு மட்டுமே மக்களை அதிகம் பாதித்தது.

    இதில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது குரலால் மக்களின் மனதில் இடம்பிடித்தார் என்றால் மற்ற அனைவரும் மக்களின் நலன் பற்றி யோசித்தவர்கள். மயில்சாமி தன்னால் முடிந்த உதவிகளை எல்லோருக்கும் செய்து வந்தவர். அவரை பற்றி கேள்விப்பட்டே மக்களுக்கு அவர் மீது அன்பு ஏற்பட்டது.

    இதையும் படிங்க: அம்மாடியோவ் இவ்ளோ சொத்துக்களுக்கு அதிபதியா கேப்டன்? கேட்டா வாயடைச்சு போய்டுவீங்க

    அந்தவகையில் விஜயகாந்தின் மரணம் மக்களை பாதித்தது எனில் அது அவரின் எளிமையான மற்றும் மற்றவர்களுக்கு உதவிய அவரின் குணம்தான். விஜயகாந்த் தான் சம்பாதித்த பணத்தில் மட்டுமல்ல, அவரின் எதிர்காலத்திற்காக அவரின் அப்பா வாங்கி வைத்திருந்த சொத்தையும் மக்களுக்கே கொடுத்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது. அதை எப்போதும் எங்கேயும் அவர் சொல்லிக்கொண்டதும் இல்லை.

    திருப்பரங்குன்றம் பெரிய ஆலங்குளம் எனும் இடத்தில் கிருஷ்ணன் என்பவரிடம் விஜயகாந்தின் அப்பா அழகர் சாமி 7 ஏக்கர் நிலத்தை மகனின் எதிர்காலத்திற்காக வாங்கினார். விஜயகாந்த் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடித்ததும் அந்த இடத்தை ஏழைகளுக்கு அரசு மூலம் தானமாக கொடுக்க முடிவு செய்தார்.

    இதையும் படிங்க: மீண்டும் திரையில் விஜயகாந்த்!.. விரைவில் வெளியாகும் ஊமை விழிகள் 2.. குட் நியூஸ் சொன்ன இயக்குனர்…

    1998ம் வருடம் அந்த இடம் மாவட்ட கலெக்டர் மூலமாக ஏழைகளுக்கு கொடுக்கப்பட்டது. அதன் இன்றைய மதிப்பு 21 கோடியாகும். அந்த இடத்தில் குடியிருக்கும் சோனைமுத்து, துரைப்பாண்டி ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசியபோது ‘விஜயகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முன்பே இந்த இடத்தை எங்களுக்கு கொடுத்தார். அதில்தான் நாங்கள் வீடு கட்டி வாழ்ந்து வருகிறோம்.

    அவர் இப்போது மறைந்துவிட்டாலும் அவர் எங்களுக்கு இருப்பிடம் கொடுத்த வாழ்வளித்த கடவுளாகவே காட்சி அளிக்கிறார்’ என மிகழும் நெகிழ்ச்சியுடன் பேசினர். இப்படி வெளியே தெரியாமல் விஜயகாந்த் பலருக்கும் உதவி இருக்கிறார். பலரை படிக்கவும் வைத்திருக்கிறார். இதைப்பற்றியெல்லாம் எங்கேயும், எப்போதும் அவர் பெருமையாக பேசிக்கொண்டதே இல்லை’ என்பது குறிப்பிடத்தக்கது.

    image

  • குழந்தைக்காக ஷூட்டிங்கை நிறுத்திய விஜயகாந்த்!.. நடிகர் சொன்ன நெகிழ்ச்சி சம்பவம்..

    Vijayakanth: நடிகர் விஜயகாந்த் ஒரு நடிகராக மட்டும் இருந்திருந்தால் இந்த அளவுக்கு புகழ் அடைந்திருக்க மாட்டார். சினிமா துவங்கியது முதல் எத்தனையோ நடிகர்களை இந்த திரையுலகமும், ரசிகர்களும் பார்த்திருக்கிறார்கள். ஆனால், எல்லோர் மனதிலும் சிம்மாசனம் போட்டு எத்தனை பேர் அமர்ந்தார்கள் என்பதுதான் வரலாறு.

    அப்படி பார்த்தால் எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு பின் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் விஜயகாந்த் என்றே சொல்லலாம். அதற்கு காரணம் பாகுபாடு பார்க்காமல் எல்லோரிடமும் பழகிய விதம், சக மனிதனுக்காக துடிக்கும் அந்த மனசு, தன் முன்னால் யாரும் பசியோடு இருக்கக் கூடாது, யாரும் அவமானப்படக்கூடாது என நினைக்கும் அந்த உயர்ந்த எண்ணம், மற்றவர்களுக்கு உதவும் குணம், எல்லோரிடமும் சகஜமாக, எளிமையாக பேசும் அவரின் சுபாவம் ஆகியவைத்தான்.

    இதையும் படிங்க: கே. ராஜனிடம் கோபப்பட்டு கத்திய விஜயகாந்த்!.. அதுக்கு அப்புறம் நடந்ததுதான் ஹைலைட்!…

    கடந்த சில வருடங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் ஆக்டிவாக இல்லாமல் இருந்து வந்தார். அதோடு, பேச முடியாமலும், நடக்க முடியாமலும் இருந்து வந்தார். சில சமயம் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கூட உணர முடியாமலும் இருந்தார்.

    கடந்த 28ம் தேதி அவர் மறைந்தார். அவர் இறந்தபின்னர் திரையுலகை சேர்ந்த பலரும் அவருடன் பணிபுரிந்த அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர். சத்ரியன், ஏழை ஜாதி ஆகிய படங்களில் அவருடன் நடித்த வின்சண்ட் ராய் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘ஏழை ஜாதி படத்தில் ஒரு காட்சியில் சைதாப்பேட்டை பாலத்தை அவர் கடந்து செல்வது போல காட்சி. அது மதிய வெயில் நேரம். அப்போது ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. உடனே படப்பிடிப்பை நிறுத்த சொன்னார். விசாரித்ததில் அது ஒரு துணை நடிகையின் குழந்தை. அந்த பெண்ணை அழைத்து ‘வெயில்ல எதுக்குமா குழந்தையோடு வந்தீங்க?’ என கேட்டார்.

    இதையும் படிங்க: இதுவும் திருட்டு ஆடு தானா!.. ஓடிடியில் இருந்து உருவிட்டாராம் வெங்கட் பிரபு!.. விஜய் படம் இவரோட கதையா?

    350 கொடுப்பதாக சொன்னார்கள் அதனால் வந்தேன் சார் என அப்பெண் சொல்ல, உடனே புரடெக்‌ஷன் மேனேஜரை அழைத்து ‘இந்த பொண்ணுக்கு தினமும் 1000 ரூபாய் கொடுங்கள்’ என்றார். மேலும் அவரின் கைப்பையில் இருந்த பையில் இருந்த பிஸ்கட், ஜூஸ் ஆகியவற்றை அந்த பெண்ணுக்கு கொடுக்க சொன்னார். இந்த அம்மாவ நிழல் இருக்க இடமா பாத்து தங்க வை’ என சொல்ல்விட்டு படப்பிடிப்பை மீண்டும் நடத்த சொன்னார்.

    viincent

    படப்பிடிப்பின்போது துணை நடிகர்கள், நடிகைகள் என யாருக்கேனும் பிரச்சனை எனில் உடனே படப்பிடிப்பை நிறுத்திவிடுவார். அவர்களின் பிரச்சனையை சரி செய்த பின்னரே மீண்டும் நடிப்பார். சினிமாவில் எந்த நடிகரும் இப்படி இருக்க மாட்டார்கள்’ என வின்செண்ட் ராய் கூறியிருந்தார்.