Tag: sarathkumar

  • துரந்தர் மாதிரி இல்லை… ஆனால் ட்ரை செய்திருக்காங்க…Mr X பப்ளிக் விமர்சனம்

    துரந்தர் மாதிரி இல்லை… ஆனால் ட்ரை செய்திருக்காங்க…Mr X பப்ளிக் விமர்சனம்

    ஆர்யா, கௌதம் கார்த்திக்,மஜ்சு வாரியர் மர்றும் சரத்குமார் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் மிஸ்டர் எக்ஸ். FIR வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் மனு ஆனந்தின் இரண்டாவது படமிது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

    இந்த நிலையில் இன்று இப்படம் வெளியாகியுள்ளது. இப்படம் குறித்து மக்கள் கூறுகையில், இனி ஆர்யவை ஆர்யா அலி அம்சா மசாரி என்றுதான் கூப்பிட வேண்டும். ஆர்யா ரா ஏஜெண்டாக இப்படத்தில் நடித்துள்ளார். படம் நன்றாக உள்ளது. நியூக்ளியர் வெப்பனை வெடிக்கவிடாமல் தடுப்பதுதான் படத்தின் கதையே. துரந்தர் மாதிரி இருக்குமா என்று கேட்டல் அப்படி இல்லை . ஆனால் ட்ரை செய்துள்ளார்கள்.படம் நன்றாக உள்ளது. குறிப்பாக மஞ்சு வாரியர், சைரா வில்சன் வேடங்கள் நன்றாக உள்ளது. ஆர்யா, கௌதம் கார்த்திக் மிரட்டுயுள்ளார்கள். ஒரு மாஸ் ஹீரோ நடித்திருந்தால் நிச்சயம் 500 கோடி வசூல் வந்திருக்கும் என்றார்.

    மற்றொரு ரசிகர் கூறுகையில், தமிழில் ஒரு நல்ல முயற்சி, கிளைமேக்ஸ் ட்விஸ்ட் நன்றாக உள்ளது என்று கூறியுள்ளார். மொத்தட்ய்ஹ்தில் இந்த படத்தின் விமர்சனங்கள் பாசிடிவாக வருவதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளனர்.

  • Aazhi movie review: தாய்கிழவியை வென்றாரா ஆழி? – விமர்சனம் இதோ

    Aazhi movie review: தாய்கிழவியை வென்றாரா ஆழி? – விமர்சனம் இதோ

    கடலோர மக்களின் வாழ்வியலோடு, நிழலுலகக் குற்றங்களையும் கலந்து ஒரு ‘த்ரில்லர்’ கதையைத் தர முயன்றிருக்கிறது ஆழி. தந்தை-மகள் பாசம் மற்றும் காதல் என்று ஒரு நல்ல கதை கையில் இருந்தும், அது திரையில் எப்படி எடுபட்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

    கதைச் சுருக்கம்

    மீன்பிடி படகு மெக்கானிக்காக வலம் வரும் சரத்குமாருக்கு ஒரு இருண்ட பக்கமும் உண்டு. ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் அவர், தன் ஒரே மகள் தேவிகா சதீஷின் காதலுக்குத் தடையாக நிற்கிறார். காதலன் இந்திரஜித் ஜெகஜித்தை ஆழ்கடலுக்கு அழைத்துச் சென்று தீர்த்துக்கட்ட நினைக்கும் சரத்குமாரிடமிருந்து, அந்தப் பயங்கரமான சூழலில் இருந்து காதலன் தப்பித்தாரா? இல்லையா? என்பதுதான் விறுவிறுப்பான மீதிக்கதை.

    சரத்குமார் ஹீரோ மற்றும் வில்லன் என இரு பரிமாணங்களை பிரதிபலிக்கிறார். ஆனால் ஏற்கெனவே இவரை இந்த வேடங்களில் பார்த்ததால் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இளம் நாயகன வரும் இந்திரஜித் ஜெகஜித் நடிப்பில் இன்னும் கவனம் செலுத்தினால் நல்லது. இளம் நாயகியாக நடித்துள்ள தேவிகா சதீஷ் அழகாக உள்ளார். ஓரளவிற்கு வேடத்தை புரிந்து நடித்துள்ளார்.

    ரசூல்பூக்குட்டியின் ஒலிப்பதிவு சொல்லிகொள்ளும்படி இல்லை. இசை ஜாஸி கிப்ட். பாடல்கள் சொல்லிகொள்ளும்படி இல்லை. முதல்பாதியைவிட இரண்டாம் பாதியால்தான் படம் ஓரளவிற்கு தப்பி உள்ளது.

    மொத்தத்தில் ஆழி திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார் இயக்குனர்.

  • இயக்குனராக அவரதாரம் எடுத்த ஹீரோக்கள்- படங்கள் பற்றிய ஒரு அலசல்

    தமிழ் திடையுலகில் இன்று முதல் இன்று வரை முன்னணி நடிகர்கள் பல்ர் நடிப்பதுமட்டுமின்றி சில படங்களை இயக்கவும் செய்துள்ளனர். எம்.ஜி.ஆர் சந்திரபாபு இதற்கு உதாரணம். அதற்கு அடுத்தகால கட்டங்களில் கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் மற்றும் சரத்குமார் இயக்குனர்களாக அவதாரம் எடுத்தனர். இதில் கமல்ஹாசனி தவிர்த்து மற்ற நடிகர்களில் படங்கள் மற்றும் அதன் வெற்றி தோல்வி குறித்து இங்கு காண்போம்.

    விஜயகாந்த்:

    தமிழ் சினிமாவின் ‘கேப்டன்’ என்று அழைக்கப்படும் விஜயகாந்த், நூற்றுக்கணக்கான படங்களில் நடித்திருந்தாலும், தனது திரையுலகப் பயணத்தின் பிற்பகுதியில் ‘விருதகிரி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

    படத்தின் பின்னணி மற்றும் கதைக்களம்:

    2010-ம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் கதையாகும். இதில் விஜயகாந்த் ‘விருதகிரி’ என்ற நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களைக் காப்பாற்றும் ஒரு சர்வதேசக் கடத்தல் கும்பலுக்கு எதிரான போராட்டமே இப்படத்தின் மையக்கரு. இந்த படத்தில் சண்டைகாட்சிகள் பிரமாண்டமாக எடுத்திருந்தார். பல காட்சிகள் வெளி நாடுகளில் எடுக்கப்பட்டன. பரபரப்பான திரைக்கதை இப்படத்திற்கு கூடுதல் பல சேர்ந்தது. விருதகிரி ஓரளவிற்கு வெற்றியும் பெற்றது. இந்த படமே விஜயகாந்த் ஹீரோவாக நடித்த கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: மன்சூர் அலிகான்னா அடிப்பீங்க!.. நயினார் நாகேந்திரன்னா பயமா?.. திரிஷா மௌனம் ஏன்?…

    சத்யராஜ்:

    வில்லனாகத் தொடங்கி கதாநாயகனாக உயர்ந்து, பின் குணச்சித்திர நடிகராகப் கலக்கிகொண்டிருக்கும் சத்யராஜ், தான் உச்சத்தில் இருந்த காலத்தில் இயக்கிய ஒரே திரைப்படம் வில்லாதி வில்லன்.

    படத்தின் பின்னணி மற்றும் கதைக்களம்:

    1995-ம் ஆண்டு வெளியான இப்படம் சத்யராஜின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல். இதில் அவர் மூன்று விதமான வேடங்களில் நடித்திருப்பார். ஒரு ஊழல்வாதி அரசியல்வாதிக்கும், அவருக்கு எதிராகப் போராடும் இளைஞனுக்கும் இடையிலான மோதலை நகைச்சுவை கலந்த ஆக்ஷனாக அவர் இயக்கியிருந்தார்.
    இயக்குநராக இருந்துகொண்டே மூன்று சவாலான கதாபாத்திரங்களைச் கையாண்டது சத்யராஜின் திறமைக்குச் ஒரு சான்று.
    வழக்கமான கவுண்டமணியுடன் இணைந்து தனது ‘லொள்ளு’ பாணி நகைச்சுவையைத் திரைக்கதையில் அழகாக பயன்படுத்தியிருந்தார். நக்மாவின் கவர்ச்சி மர்றும் வித்யாசாகரின் பாடல்கள் என அனைத்தும் படத்தின் வணிக ரீதியான வெற்றிக்கு கை கொடுத்தது.

    இதையும் படிங்க: இது இருந்தால் எதுவும் தேவையில்லை… விக்னேஷ் சிவன் சொன்ன காதலர் தின வாழ்த்து..

    சரத்குமார்:

    ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்த சரத்குமார், தனது 100-வது திரைப்படமான ‘தலைமகன்’ மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார்.

    படத்தின் பின்னணி மற்றும் கதைக்களம்:

    2006-ம் ஆண்டு வெளியான இப்படம் ஒரு புலனாய்வுப் பத்திரிகையாளரின் போராட்டத்தை மையமாக கொண்ட கதை களம். நிலத்தடி நீர் சுரண்டல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற முக்கியமான சமூகப் பிரச்சினைகளை மையமாக வைத்து இபடத்தின் கதையை வைத்திருந்தார். இப்படத்திற்குப் பால் ஜேக்கப் இசையமைத்திருந்தார். ஒரு நடிகராகத் தான் விரும்பிய வேகத்தைத் திரைக்கதையில் கொண்டு வர சரத்குமார் முயன்றார். ஆனாலும் படம் தோல்வியையே சந்தித்தது.

  • Jananayagan: ஜனநாயகன் பற்றி கேட்காதீங்க! விஜய் குறித்த கேள்விக்கு பொங்கிய சரத்குமார்

    ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா:

    இன்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக நேற்று சென்னையில் இருந்து திரைப்பிரபலங்கள் பலரும் மலேசியா நோக்கி படையெடுத்து வருகின்றனர். இது வெறும் இசை வெளியீட்டு விழா மட்டும் இல்லாமல் தளபதி கச்சேரியாகவும் சேர்ந்து நடைபெற இருக்கிறது.

    அதனால் திரைப்பட பாடகர்கள் பலரும் இந்த விழாவிற்கு சென்று உள்ளனர். இதில் விஜய் இதுவரை நடித்த படங்களில் இருந்து குறிப்பிட்ட சில படங்களின் பாடல்களை தேர்ந்தெடுத்து அந்த கச்சேரியில் பாடகர்கள் பாட இருக்கிறார்கள். அதனால் இது ஒரு பெரிய பிரம்மாண்ட கச்சேரியாகவும் நடைபெற இருக்கிறது. எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கடைசி படம் ஜனநாயகன் என்பதாலும் விஜய் ரசிகர்கள் இதை உற்சாகமாக கண்டு களிக்க ஆயத்தமாகி வருகின்றனர்.

    கோலாகலமாக இருக்கும் மலேசியா:

    விஜயின் பெற்றோர் மற்றும் நாசர் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் என அடுத்தடுத்து வரிசையாக மலேசியா நோக்கி படையெடுத்து வருகின்றனர். மலேசியா முழுவதும் விஜய்க்கு உற்சாக வரவேற்பை கொடுத்து வருகின்றனர் அங்குள்ள விஜய் ரசிகர்கள். இந்த நிலையில் இன்று தூத்துக்குடிக்கு வருகை புரிந்த சரத்குமாரை பத்திரிக்கையாளர்கள் சந்தித்தபோது அவரிடம் விஜய் குறித்த சில கேள்விகளை கேட்டனர்.

    இதற்கு முன் விஜயை நான் ஒரு அரசியல்வாதியாகவே பார்க்கவில்லை என்று சரத்குமார் கூறியிருந்தார். அதைப் பற்றிய கேள்விக்கு இன்னும் அரசியல் களத்தையே சந்திக்காத ஒருவர் தேர்தலை சந்திக்காத ஒருவரை எப்படி அரசியல்வாதியாக பார்க்க முடியும்? அவரின் நிலைப்பாடு என்ன? கொள்கை என்ன என்பது வரும் தேர்தலில் தான் தெரியும். அதன் பிறகு தான் அவர் எப்படிப்பட்ட ஒரு நிலைப்பாட்டை கொண்டுள்ளார் என்று அனைவருக்கும் தெரியவரும்.

    ஜனநாயகன் எடுபடுமா?

    அதனால் தான் நான் அவரை அரசியல்வாதியாகவே பார்க்கவில்லை என்று கூறினேன் என விளக்கம் அளித்தார். ஜனநாயகன் எடுபடுமா எடுபடாதா என்ற ஒரு கேள்வியும் அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு சரத்குமார் நாம் ஜனநாயகன் நாட்டில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது எப்படி எடுபடாமல் போகும். படத்தைப் பற்றி கேட்பதாக இருந்தால் அதை என்னிடம் கேட்காதீர்கள். அந்த படத்தை பார்த்து மக்கள் பதில் சொல்வார்கள் என்று சரத்குமார் பதிலளித்தார்.

  • கேப்டன் சொன்ன வார்த்தை!.. சண்முக பாண்டியன் படத்தில் நடித்தேன்!.. சரத்குமார் ஃபீலிங்!….

    சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்திருக்கும் திரைப்படம்தான் கொம்பு சீவி. இந்த திரைப்படத்தில் சரத்குமாரும் முக்கிய இடத்தில் நடித்திருக்கிறார்.

    இந்த படம் தொடர்பான விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பேசிய சரத்குமார் விஜயகாந்த் தொடர்பான நினைவுகளை பகிர்ந்து கொண்டார். கொம்பு சீவி படத்தில் நான் நடிச்சதுக்கு முக்கிய காரணம் கேப்டன்தான். என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர். நான் மிகவும் கஷ்டமான நிலையில் இருந்த போது சினிமாவில் நடிக்க முடிவெடுத்தேன். அவரிடம் சென்று வாய்ப்பு கேட்டேன். எனக்கு புலன் விசாரணை படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கொடுத்தவர் அவர்தான்.

    என்னை பார்த்த உடனே அந்த படத்தில் நடிக்க இவர் சரியாக இருப்பார் என அவர் முடிவெடுத்தார். உடனே ஆர்கே செல்வமணியையும், இப்ராஹிம் ராவுத்தரையும் போய் பாருங்கள் என்றார். அப்போதே இந்த படத்தில் நான்தான் என முடிவு செய்துவிட்டேன். அதேபோல் அடுத்து கேப்டன் பிரபாகரன் படத்திலும் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்.

    சில காட்சிகள் நடித்தபின் எனக்கு கழுத்தில் அடிபட்டு அறுவை சிகிச்சை செய்து ஆறு மாசம் என்னால் பேச முடியவில்லை. மருத்துவமனையில் இருந்தேன். என்னை வைத்து சில காட்சிகள் எடுக்க வேண்டியிருந்தது. வேறு ஒருவரை வைத்து எடுத்துக்கொள்ளலாம் என இயக்குனர் சொன்னபோது ‘வேண்டாம் சரத்குமார்தான் இதை செய்ய வேண்டும்.. ஆறு மாதம் ஆனாலும் பரவாயில்லை’ என்று சொல்லி எனக்காக காத்திருந்தார்.. அதுதான் விஜயகாந்தின் மனது. அதனால்தான் இந்த படத்தில் சண்முக பாண்டியன் நடிக்கிறார் என சொன்னதுமே நான் நடிக்க ஒப்புக்கொண்டேன்’ என்று பீலிங்காக பேசியிருக்கிறார் சரத்குமார்.

    கொம்பு சீவி திரைப்படம் வருகிற 19ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

  • Vijayakanth: சரத்குமாருக்காக படத்தையே நிறுத்திய கேப்டன்! விஷயத்தை கேட்டதும் ஷாக்கான சண்முக பாண்டியன்

    கொம்புசீவி புரோமோஷன்:

    விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் கொம்புச்சீவி படத்தின் புரோமோஷன் தற்போது நடந்து வருகிறது. இந்தப் படத்தை பொன்ராம் இயக்கியிருக்கிறார். படத்தில் சரத்குமார் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இந்த நிலையில் கொம்புச்சீவி படத்தின் புரோமோஷனில் சரத்குமார் பல விஷயங்களை பேசியுள்ளார். குறிப்பாக விஜயகாந்த் பற்றி நிறைய விஷயங்களை பேசியுள்ளார் சரத்குமார்.

    ஆரம்பகாலங்களில் சரத்குமாரின் கலையுலக பயணத்தில் மிகவும் உறுதுணையாக இருந்தவர் விஜயகாந்த். ஒவ்வொரு முறை சரத்குமார் சரிவை எதிர்நோக்கும் போதும் அவருக்கு கைக் கொடுத்து தூக்கி விட்டவரும் விஜயகாந்த்தான். ஒரு சப்போர்ட் சிஸ்டமாகத்தான் விஜயகாந்த் இருந்திருக்கிறார். புலன் விசாரணை படத்தில் தான் விஜயகாந்தை முதன்முதலாக சரத்குமார் சந்திக்கிறார்.

    விஜயகாந்திடம் கற்றுக் கொள்ள வேண்டியது:

    அந்த படத்திற்காக சரத்குமாரின் மேக்கப்புக்கு விஜயகாந்த் தன்னுடைய மேக்கப் உதவியாளர் அர்ஜூன்கிட்ட அழைத்துக் கொண்டு போயிருக்கிறார். விஜயகாந்தை பொறுத்தவரைக்கும் ஒரு இயக்குனருக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்று நன்கு அறிந்தவர். அதை விஜயகாந்திடம் இருந்து பல பேர் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம். புலன் விசாரணை திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்.

    அதன் பிறகு மீண்டும் கேப்டன் பிரபாகரன் படத்தில் சரத்குமாரும் விஜயகாந்தும் சேர்ந்து நடித்தார்கள். அந்தப் படத்தின் போது சரத்குமாருக்கு ஒரு மேஜர் ஆக்ஸிடெண்ட் நடக்க கிட்டத்தட்ட ஆறு மாத காலம் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறி விட்டார்களாம். கேப்டன் பிரபாகரன் படத்தில் சரத்குமார்தான் நடிக்க வேண்டும் என விஜயகாந்த் சரத் மீண்டு வரும் வரை ஆறு மாதம் காத்திருந்து கேப்டன் பிரபாகரன் படத்தை எடுத்திருக்கிறார்.

    சிபாரிசு செய்வார்:

    ஆனால் இன்றைய காலகட்டத்தில் இப்படியொரு நடிகர்கள் இருப்பார்களா என்று சரத்குமார் கூறினார். மேலும் நடிகர் சங்கத்தில் விஜயகாந்த் தலைவராக இருக்கும் போதும் இருவருக்குமிடையே நல்ல ஒரு நட்பு இருந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் விஜயகாந்துக்கு இயக்குனர்கள் ஒரு கதை சொல்ல போகிறார்கள் என்றால் அந்தக் கதை அவருக்கு செட் ஆகுதோ இல்லையோ? ஏய் இது சரத்குமாருக்கு செட் ஆகும்ப்பா என்று சொல்லி இவரிடம் அனுப்பி வைப்பாராம்.

    அப்படி பல படங்கள் என்னை தேடி வந்திருக்கின்றன. எனக்கும் போன் செய்து விஜயகாந்த் சொல்லிவிடுவார் என்று சரத்குமார் கூறினார். அன்றைய காலகட்டம் ஒரு கோல்டன் ப்ரீயட் என்றும் பழைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் சரத்குமார்.

  • சரத்குமாரும் சித்தார்த்தும் சொந்த வீடு வாங்கினார்களா?.. 3 BHK படம் எப்படி இருக்கு?.. இதோ விமர்சனம்!

    சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்கிற கனவுடன் இருக்கும் சரத்குமாருக்கு இந்த படத்தில் மனைவியாக தேவயானி நடித்திருக்கிறார். மகனாக சித்தார்த்தும் மகளாக குட் நைட் பட ஹீரோயின் மீதா ரகுநாத் நடித்திருக்கிறார்.

    8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் என ஆக்‌ஷன் படங்களை இயக்கி வந்த ஸ்ரீகணேஷ் துப்பாக்கி தோட்டாக்கள் சத்தமும் ரத்தமும் இல்லாமல் ஒரு அழகான குடும்ப டிராமா படத்தை எந்தளவுக்கு எமோஷன் கலந்துக் கட்டி கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு கொடுத்திருக்கிறார்.

    வாசுதேவனாக குடும்ப பாரத்தை தாங்கி நிற்கும் குடும்பஸ்தன் கதாபாத்திரத்தில் நாட்டாமை சரத்குமார் நச்சென நடித்திருக்கிறார். வானம் கொட்டட்டும் படத்துக்குப் பிறகு இந்த படத்திலும் அவரது நடிப்பு பலராலும் பாராட்டுக்களை பெறும்.

    சரத்குமாரின் மனைவியாக தேவயானி படத்துக்கு என்ன தேவையோ அதை கொடுத்து நடித்திருக்கிறார். எப்போதும் போல அவர் வந்தாலே ஸ்க்ரீனே பாசிட்டிவ் ஆகிவிடுவது போல இந்த படத்திலும் அவர் பிரெசன்ஸ் பாசிட்டிவாகவே உள்ளது.

    படிப்பு வராத மாணவனாக யங் பாய் லுக்கில் இருந்து எப்படியாவது கஷ்டப்பட்டு வேலை செஞ்சாவது அப்பா நினைச்சதை நாம நிறைவேத்தனும் என தோனி ஃபேன் என சொல்லிக் கொண்டு அதற்கு ஏற்ப தனது கதாபாத்திரத்தில் பிரபுவாக கச்சிதமாக பிரமாதப்படுத்தியிருக்கிறார் சித்தார்த்.

    சித்தா, 3பிஎச்கே என சித்தார்த் சமீப காலமாக எடுத்துள்ள ரூட் நல்லா இருக்கு, இதையே அவர் தொடர்ந்தால் அடுத்தடுத்த வெற்றிகளை ருசிக்கலாம். சொந்த வீடு வாங்க பல வருடங்களாக சரத்குமார் கஷ்டப்பட்டது போதாது என அடுத்து அவரது மகனும் கஷ்டப்பட கடைசியில் வீடு வாங்கும் தருவாயில், அப்பா சரத்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட சேர்த்து வைத்த காசெல்லாம் செலவாகும் இடங்கள் எல்லாம் பலரையும் கண் கலங்க வைத்துவிடும்.

    கடைசியாக வீடு வாங்கினார்களா? இல்லையா? என்கிற கிளைமேக்ஸ் உடன் பக்காவாக முடித்திருக்கும் இந்த படத்தை தாராளமாக தியேட்டரில் பார்க்கலாம். ஒரு சில இடங்களில் ஒரு சில காட்சிகள் ஒட்டாமல் போகலாம். அல்லது, மிகைப்படுத்தலாக தெரியலாம். ஆனால், இயக்குனர் கதைக்கு தேவையான விஷயங்களே எழுதி இயக்கியிருக்கிறார். சொந்த வீடே சொர்க்கம்!

    ரேட்டிங்: 3.75/5.

  • எப்படிலாம் யோசிச்சு அடிக்குறாங்க? 3BHK படத்தின் கனவு இல்லத்தை பந்தாடிய நெட்டிசன்கள்

    ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சரத்குமார், சித்தார்த், தேவயானி ஆகியோரின் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் 3 பி ஹெச் கே. சராசரி மனிதனாக ஒவ்வொருவருக்கும் இருக்கும் கனவு எப்படியாவது சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதுதான். மாத வருமானம் பெறும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சொந்த வீடு பற்றிய கனவு இருக்கத்தான் செய்யும். எவ்வளவு நாள் தான் வாடகை வீட்டிலேயே இருக்கிறது .எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் சரி போராட்டமாக இருந்தாலும் சரி அந்த போராட்டங்களுக்கு மத்தியில் எப்படியாவது ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்றுதான் அனைவரும் நினைப்பார்கள்.

    அப்படிப்பட்ட ஒரு படமாக தான் இந்த 3 bhk திரைப்படம் அமைந்திருக்கிறது. தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சரத்குமார் தன்னுடைய மனைவி தேவயானி மகன் சித்தார்த், மகள் மேத்தா ரகுநாத் ஆகியோருடன் ஒரு வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார். மூன்று படுக்கையறை கொண்ட சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதுதான் சரத் குமாரின் நீண்ட நாள் கனவாக இருக்கிறது. எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் செலவுகளை மீறி சேமிக்க முடியாத வகையாக அவருடைய வாழ்க்கையில் போராட்டமாகவே இருக்கிறது .

    இதை அடுத்து தந்தையின் கனவை எப்படியாவது நிறைவேற்றும் முயற்சியில் சித்தார்த்தும் மீத்தா ரகுநாத்தும் களமிறங்குகிறார்கள். இருவரும் உழைத்து பணம் சேமிக்கிறார்கள். ஆனால் சேமிக்கும் பணம் ஏதோ ஒரு சூழ்நிலையில் செலவாகி போகிறது .அதனால் அப்பாவின் கனவை நிறைவேற்றினார்களா இல்லையா என்பது தான் படத்தின் மீதி கதை. இதில் சரத்குமாரின் எதார்த்தமான நடிப்பு அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது .அவருக்கு இணையான நடிப்பை வழங்கி இருக்கிறார் தேவயானி. இந்தியன் 2 படம் வரைக்கும் சித்தார்த்தை கழுவி ஊற்றிய ரசிகர்கள் இந்த படத்தில் அவரின் நடிப்பை பாராட்டி வருகிறார்கள்.

    அதனால் படம் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனத்தையே பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தை பற்றி வழக்கம்போல நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வச்சு செய்து வருகின்றனர். இந்த படத்தின் கதை சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதுதான். ஆனால் பொதுவாக பார்க்கும் பொழுது ஒரு வீடு வாங்குகிறோம் அல்லது ஒரு நிலத்தை வாங்கி வீடு கட்டுகிறோம் என்றால் அதற்கான செலவு போக ஜிஎஸ்டி என்பதுதான் நம் கண் முன்னே வந்து அச்சுறுத்துகிறது.

    ஜிஎஸ்டி எனும் போது நம் நினைவுக்கு முதலில் வருபவர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம். ஒவ்வொரு ஆண்டும் அவர் பட்ஜெட் போடும்போது அனைவருமே திக் திக் பயத்துடன் தான் இருப்பார்கள் .எதை விலை உயர்த்தி இருக்கிறார் எதை விலையை குறைத்து இருக்கிறார் என்பதை பார்க்க ஒவ்வொரு பட்ஜெட்டின் போதும் காத்திருப்பார்கள். அப்படி ஒரு வீடு வாங்க வேண்டும் என்று நீங்க நினைச்சா மட்டும் போதாது நான் நினைக்க வேண்டும் என நிர்மலா சீதாராம் கூறியதைப் போல காமெடியாக அந்த வீடியோவை நெட்டிசன்கள் வைரல் ஆக்கி வருகின்றனர் .அதுதான் இப்போது சோஷியல் மீடியாக்களில் டிரெண்டாகி வருகின்றது.

  • 3 BHKல ஹீரோ சரத்குமாரா, சித்தார்த்தா? இது படமா, விளம்பரமா? புளூசட்டை மாறன் விமர்சனம்

    ஸ்ரீகணேஷ் இயக்கிய 3பிஎச்கே நேற்று வெளியானது. சரத்குமார், சித்தார்த், மீரா ரகுநாத், தேவயானி, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் விமர்சனம் குறித்து பிரபல யூடியூபர் புளூசட்டை மாறன் என்ன சொல்றாருன்னு பாருங்க.

    படத்துல சரத்குமார் சாதாரண மிடில் கிளாஸ் ஃபேமிலி மேன். அவருக்கு ஒரு பொண்ணு. ஒரு பையன். சாதாரணமா மிடில் கிளாஸ் ஃபேமிலில என்ன நினைப்பாங்க? எப்பாடுபட்டவாது புள்ளைங்களை நல்லா படிக்க வச்சிரணும். அவங்களை எப்படியாவது ஒரு நல்ல வேலைல சேர்த்து விடணும். எப்படியாவது வாழ்நாள்ல சொந்தமா ஒரு வீடு வாங்கிடணும்னு நினைக்கிறாரு ஹீரோ. இந்த நியாயமான ஆசை நிறைவேறுச்சா இல்லையாங்கறதுதான் படத்தோட கதை.

    முடிஞ்சளவு இயக்குனர் இந்தக் கதையை நேர்க்கோட்டுல சொல்லிருக்காரு. இந்தப் படத்தோட பிளாட்டே ரொம்ப ஈசியா நம்மை எல்லாரையும் கனெக்ட் பண்ணிடுது. குடும்பத்தோட கஷ்டம், பிள்ளைங்க படிக்கிற விதம், வாடகை வீட்டுல இருக்குற பிரச்சனைகள், அதை எப்படி சமாளிக்கிறாங்க?

    பணத்தை சேமிக்க எப்படி முயற்சிக்கிறாங்க? இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் பர்ஸ்ட் ஆஃப்ல ரொம்ப கரெக்டா சொல்லிருக்காங்க. ஆனா செகண்ட் ஆஃப்ல இவங்களே குழப்பி வச்சிருக்காங்க. பர்ஸ்ட் ஆஃப்க்கு உண்டான செகண்ட் ஆஃப்பா படம் இல்லை. கதையை விட்டு விலகி எங்கெங்கோ போகுது.

    தேவையில்லாம பொண்ணோட குடும்பப் பிரச்சனை, பையன் தேர்ந்தெடுத்த தொழில் சரியில்லன்னு குழப்பம்னு கதை போகுது. இதுல ஹீரோ சரத்குமாரா, சித்தார்த்தாங்கற குழப்பம் வருது. மிடில்கிளாஸ்ல இருக்குற சரத்குமார் அவ்ளோ கஷ்டத்துலயும் பிள்ளைங்களை எப்படி படிக்க வச்சாரு? வளர்த்தாருன்னு சொல்றது நியாயமாகத் தான் இருக்கு.

    ஆனா கதையில என்ன சொல்ல வர்றாங்கன்னா அவரு எடுத்த தப்பான முடிவுல தான் பிள்ளைங்க வாழ்க்கை கெட்டுச்சுன்னும் அதனால தான் வாழ்க்கையை அவங்களே மாத்தி அமைச்சாங்கன்னும் கொண்டு போயிருக்காங்க. இது ரொம்ப குழப்பமாயிருக்கு. படத்தை உண்மைக்கு நெருக்கமா எடுக்குறேன்னு நாடகம் மாதிரி எடுத்து வச்சிருக்காங்க.

    அதிலும் கிளைமாக்ஸை எல்லாம் பார்க்கும்போது பெரிய அதிர்ச்சியா இருந்தது. நாம இவ்ளோ நேரம் பார்த்தது விளம்பரமா? அப்படின்னு தோணுது. எல்லாருக்கும் கனெ;டாக்குற கதையை வச்சிட்டு யாருக்குமே கனெக்டாகாத படத்தை எடுத்து வச்சிருக்காங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • தடபுடலாக நடந்த தாணுவின் பேரன் திருமணம்!.. அடேங்கப்பா இவ்ளோ பிரபலங்கள் வந்துருக்காங்களே!..

    தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவின் பேரன் ஏ.என். ஆதித்யன் மற்றும் டாக்டர் ப்ரித்திகா பாலாஜி ஆகியோரது திருமணம் இன்று நடைபெற்றது. நேற்று எழும்பூரில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பல அரசியல் மற்றும் திரை பிரபலங்களில் பலர் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

    எஸ். தாணு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர், மற்றும் விநியோகஸ்தர் என பன்முகத்தன்மை கொண்டவர். தமிழ் திரையுலகில் “கலைப்புலி” என்று அழைக்கப்படுகிறார். தனது தயாரிப்பு நிறுவனங்களான வி கிரியேசன்ஸ் மற்றும் கலைப்புலி பிலிம்ஸ் இன்டர்நேசனல் மூலம் பல வெற்றிகரமான திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார்.

    எஸ். தாணு திரைப்படத் துறையில் விளம்பர வடிவமைப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, 1985ஆம் ஆண்டு வெளியான யார்? என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். அதை தொடர்ந்து நல்லவன், அசுரன், கபாலி, தெறி, விசாரணை, வேலைக்காரன், நானே வருவேன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். தாணு நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு “சூப்பர் ஸ்டார்” என்ற பட்டத்தை முதலில் வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தாணு, கலா என்பரை திருமணம் செய்துக்கொண்டார், இவர்களுக்கு கலாபிரபு என்ற மகனும், கவிதா என்ற மகளும் உள்ளனர். இதில் கலா பிரபு சக்கரகட்டி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்நிலையில், தாணுவின் மூத்த பேரனான ஏ.என். ஆதித்யன் என்பவருக்கு தான இன்று காலை திருமணம் நடைப்பெற்றது.

    இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திக்கேயன், பிரசாந்த், தியாகராஜன், பார்த்திபன், வெற்றிமாறன், சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, நாசர், மிஸ்கின், சூர்யா, சிபி சத்யராஜ், ஷோபா சந்திரசேகர், ரம்பா, பிரபு உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.