Tag: sarathkumar

  • அந்த ஹீரோவால் மார்க்கெட்டை இழந்த நடிகை ஹீரா!.. இவ்வளவு விஷயம் நடந்திருக்கா?

    90களில் இதயத்தில் ரசிகர்களைத் தொலைத்த ஹீரோயினாக வலம் வந்தவர் ஹீரா. பேண்ட்மாஸ்டர், திருடா திருடா போன்ற படங்களின் மூலம் தனக்கான தனியிடத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

    சதீலீலாவதி படத்தில் இருந்து தான் அவருக்கு மார்கெட் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்ததாம். படத்தில் ரமேஷ் அரவிந்த்துக்கு இவர் தான் ஜோடி. கமலிடம் ரமேஷ் அரவிந்த் கன்னடத்தில் இருந்து தெரியாத யாரையாவது தனது ஜோடியாகக் கொண்டு வர வேண்டும் என்றார்.

    இந்த ரோலில் நடிக்க கௌதமி, சங்கீதா, சுஹாசினி உள்பட பலரும் மறுத்து விட்டார்களாம். கடைசியாக ஹீரா இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தாராம். 90களின் மத்தியில் வந்த மீனா, தேவயாணி, சுவலட்சுமி ஆகியோர் புடவைகளில் வந்து ரசிகர்களை சுண்டி இழுத்தனர். இந்த இழுப்பால் ஹீராவின் மார்க்கெட் முடிந்து போனது.

    KK
    KK

    அதன் பிறகு அவருக்கு பெரிய பிரேக் கொடுத்த படம் திருடா திருடா. இந்தப் படத்தில் இவரது நடிப்பு மாஸாக இருந்தது. காதல் கோட்டையில் அஜீத்துடன் அவரது கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட்டானது. அவ்வை சண்முகியில் ஒரு சிறு வேடத்தில் நடித்தார். அஜீத்துடன் ஹீராவுக்கு பயங்கரமான காதல் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அவர் அதை அலட்சியம் செய்தாராம். அதைத் தொடர்ந்து பெங்களூருவுக்கு சென்று விட்டார். அங்கு கன்னடம், தெலுங்கு படங்களில் 2வது கதாநாயகியாக நடித்தார்.

    கே.எஸ்.ரவிகுமார் அவரை அழைத்து சுயம்வரத்தில் நடிக்க வைத்தார். தொடர்ந்து கார்த்திக் நடித்த பூவேலி பட வாய்ப்பும் கிடைத்தது. அந்த நேரத்தில் சரத்குமார் ஹீராவை விரும்புகிறார் என கூறப்பட்டது. ஆனால் கல்யாணம் முடிந்தவர் என்ற காரணத்திற்காக அதிலிருந்து மீண்டு வந்தாராம் ஹீரா. சூர்யவம்சம், நட்புக்காக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போது அந்தக் காரணத்திற்காகவே மறுத்துவிட்டாராம். அதன்பிறகு அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியாக படங்கள் வரவில்லை. சதிலீலாவதியில் கள்ளக்காதலி வேடத்தில் நடித்ததால் ஹீராவின் மார்க்கெட் சரிந்து போனதாம்.

  • அரசியல்வாதிகளுக்கு வாழ்க்கை கொடுக்கிறது இல்லப்பா!… ராதிகா பையனிடம் திமிராக பேசிய வடிவேலு!…

    Vadivelu: தமிழ் சினிமாவில் புத்தியுள்ள சிலர் திமிராக நடந்து கொள்வார்கள் என்றால் அதில் வடிவேலுவும் சேர்வார். அப்படி தன்னிடம் பேசுபவர்கள் நிலையை கூட அறியாமல் நாசுக்காக சொல்லாமல் முகத்தில் அடித்து அவர்களை கவலைக்கொள்ள வைப்பதில் முதலிடம் அவருக்கு தான்.

    கலைஞர்100 நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு பேட்டரி கார் இருந்தது. அதில் தான் பிரபலங்கள் ஏற்றி செல்லப்பட்டனர். அப்போது வடிவேலுவுடன் ராஜ்கிரண் அமர்ந்து இருந்தார். இதனால் கடுப்பான வடிவேலு பாதியில் காரை நிறுத்தி இறங்கிவிட்டாராம். வடிவேலுவை வளர்த்துவிட்ட ராஜ்கிரணுக்கே இந்த கதி என்றால் மற்றவர்கள் நிலையை நினைத்து பாருங்கள்.

    இதையும் படிங்க: கண்ணதாசன் வாழ்வில் அதிசயத்தை நிகழ்த்திய பாடல்!.. கவிஞர் வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடந்திருக்கா!..

    நடிகர் விஜயகாந்தை அவர் பேசிய வார்த்தை எல்லாம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் கூட கேப்டன் அவரை எங்குமே இகழவில்லை. ஆனால் எல்லாராலும் சும்மா இருக்க முடியுமா? நடிகை ராதிகா ஒரு மேடையில் அவரை வெளுத்துவிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    அதில், வடிவேலு பத்தி நான் பேச விரும்பலை. பாவம் அவர் காமெடி பண்ணிக்கிட்டு இருக்காரு. நான் அவரை கடைசியா சந்திச்சது ஒரு விமானத்தில் என் கணவர் சரத்குமார் படம் குறித்து பேசிக்கொண்டு வந்தேன். அப்போ என் மகன் ராகுல். அவனுக்கு வடிவேலுவை ரொம்ப பிடிக்கும்.

    எனக்கும் தான் பிடிக்கும். நீங்க என் டேடிக்கூட நடிக்கிறீங்களா? எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் எனக் கேட்டான். அப்போ அவரோ சிரித்துக்கொண்டே அரசியல்வாதிக்கெல்லாம் வாழ்க்கை கொடுப்பதில்லை எனச் சொன்னார். நீங்க நடிச்சா வாழ்க்கை வந்துருமா? நாங்க எங்க இருக்கோம். நீ எங்க இருக்க. என் ஆபிஸ் முன்பு வடிவேலு காணவில்லை என்ற போஸ்டர் இருந்தது.

    இதையும் படிங்க: பாலிவுட்டால் கதிகலங்கிய கோலிவுட் நடிகர்கள்! லெஃப்ட் ஹேண்டில் கையாண்ட மக்கள் செல்வன்