Tag: sarathkumar

  • நடிக்க வந்த முதல் நாளே துரத்திவிட்ட இயக்குனர்!.. நயன்தாராவுக்கு நடந்த அசிங்கம்!..

    Nayanthara: கேரளாவை சேர்ந்த நயன்தாராவின் உண்மையான பெயர் டயானா மரியம் குரியன். அங்கு டிவியில் வேலை பார்த்துகொண்டிருந்தார். சில விளம்பர் படங்களிலும் நடித்தார். தமிழில் ஐயா திரைப்படம் மூலம் நடிக்க துவங்கினார். ரஜினியுடன் சந்திரமுகி, சிம்புவுடன் வல்லவன் என சில படங்களில் நடித்தார். ஆனால், அவரால் முன்னணி நடிகையாக மாற முடியவில்லை.

    ஏனெனில், அப்போது அசின், திரிஷா போன்ற நடிகைகள் பெரிய ஹீரோக்களுடன் நடித்துக்கொண்டிருந்தார்கள். எனவே, நயன்தாராவுக்கு செகண்ட் ஹீரோயின் கதாபாத்திரம் மட்டுமே கிடைத்தது. அசின் கதாநாயகியாக நடித்த கஜினி படத்தில் நயன்தாராவுக்கு செகண்ட் ஹீரோயின் வேடம்தான் கிடைத்தது.

    எனவே, குண்டாக இருந்த உடலை குறைத்து அழகாக மாறி பில்லா போன்ற படங்களில் பிகினி அணிந்து ரசிகர்களை கிறங்க வைத்தார். அதன்பின் தொடர்ந்து கதாநாயகியாக நடிக்க துவங்கினார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்தார். ராஜா ராணி திரைப்படம் இவரை முன்னணி நடிகையாக மாற்றியது. அதுவும், நடிப்புக்கு முழுக்கு போடுகிறேன் என அறிவித்துவிட்டு சிறிது இடைவெளிவிட்டு மீண்டும் நடித்த படம் அது.

    அந்த படத்திற்குபின் நம்பர் ஒன் நடிகையாகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் மாறினார். ஒருகட்டத்தில் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க துவங்கினார். அப்படி அவர் நடித்த அறம்,மாயா, நெற்றிக்கண், நானும் ரவுடிதான் போன்ற படங்கள் ஹிட் அடித்தது.

    இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதோடு, வாடகைத் தாய் மூலம் 2 குழந்தைகளுக்கும் அம்மா ஆகிவிட்டார். இப்போது நயன் படப்பிடிப்புக்கு வரும்போது 10 பேர் அவருடன் வருவார்கள். அவர்களுக்கும் சேர்த்து தயாரிப்பாளர் காசு கொடுக்கவேண்டும். அதோடு, புரமோஷனுக்கு வரமாட்டேன், சென்னையில் மட்டுமே ஷூட்டிங் என ஏகப்பட்ட கண்டிஷன்களை போட்டுவிட்டுதான் நடிக்க ஒப்புகொள்கிறார்.

    இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய சரத்குமார் ’ஐயா படத்தில் நயன்தாரா நடிக்க வந்த முதல் நாள் மாடர்ன் டிரெஸ்ல வந்து இறங்குனாங்க. அதை பார்த்து கோபப்பட்ட இயக்குனர் ஹரி ‘இந்த பொண்ண கூட்டிட்டு போங்கய்யா’ என சொல்லி துரத்திட்டார். இந்த படத்துக்கு இவங்க செட் ஆக மாட்டாங்க.. வெயிட் பண்ண சொல்லுங்க. சாயங்காலம் வேற காஸ்டியூம் கொடுத்து பார்க்கலாம்’ என சொன்னார். அதன்பின் பாவாடை தாவணியில் நயன்தாராவை பார்த்துவிட்டு ‘சரி இவரே நடிக்கட்டும்’ என சொல்லிவிட்டார்’ என சொல்லியிருக்கிறார்.

    ஐயா படத்தில் நடிக்க வரும்போது அம்மாவுடன் ஆம்னி பஸ்ஸில் சென்னை வந்த நயன்தாரா இப்போது தனி விமானத்தில் கணவர் விக்னேஷ் சிவனுடன் ஜாலியாக பறந்து செல்வது குறிப்பிடத்தக்கது.

  • Sarathkumar: ஷூட்டிங்கில் கெட்டுப் போன சாப்பாட்டை கொடுத்த படக்குழு!… நாட்டாமை செய்த தரமான சம்பவம்!..

    Sarathkumar: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த சரத்குமார் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ஆனால் அவர் ஹீரோவாக இருந்தபோது தன்னுடைய படத்திற்காக கொடுத்த அதீத ஈடுபாடு குறித்த தகவல் ஒன்றை இயக்குனர் தன்னுடைய பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

    சரத்குமார் படங்கள்: பல கட்ட போராட்டத்திற்கு பின்னர் தமிழில் சரத்குமார் நடிக்க இருந்த சின்ன பூவே மெல்ல பேசு திரைப்படத்தின் வாய்ப்பு பறிபோனது. இதைத்தொடர்ந்து சில படங்கள் நடித்தாலும் அவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. மேக்கப் மேன் மூலம் விஜயகாந்தின் அறிமுகம் கிடைத்தது.

    இதையும் படிங்க: Ramyapandian: திருமணம் முடிந்த கையோட ஹனிமூன்!… கணவருடன் ரம்யா பாண்டியன் எங்க போயிருக்காங்க தெரியுமா?!..

    அதைத் தொடர்ந்து புலன் விசாரணை திரைப்படத்தில் நடித்தார். படம் சரத்குமாருக்கு மிகப்பெரிய வாய்ப்பு கோலிவுட்டில் உருவாக்கிக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து சில படங்களில் ஹீரோவாக நடித்தாலும் அப்படங்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதைத்தொடர்ந்து வில்லனாகவே கோலிவுட்டில் தொடர்ந்தார் சரத்குமார்.

    மீண்டும் ஹீரோ அவதாரம்: இதைத்தொடர்ந்து மீண்டும் ஹீரோவாக சூரியன் திரைப்படத்தில் நடித்தார். திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியாக அமைய ஹீரோவாகவும் தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார். சரத்குமார் நடிப்பில் பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்தது.

    தொடர்ச்சியாக ஹீரோவாக நடித்து வந்த சரத்குமார் வெற்றி நாயகன் வரிசையில் அமர்ந்தார். அந்த நேரத்தில் அவருக்கு சூரியவம்சம் படத்தில் நடிக்க வாய்ப்பு அமைந்தது. 1997 ஆம் ஆண்டு பூவே உனக்காக படத்தின் வெற்றிக்கு பின்னர் மீண்டும் விக்ரமனை சூப்பர் குட் பிலிம்ஸ் படம் இயக்க வாய்ப்பு கொடுத்தது.

    முதலில் அந்த நிறுவனத்திடம் விக்ரமன் வானத்தைப்போல கதையை தான் கூறினாராம். ஆனால் சரத்குமாரை வைத்து தான் அந்த படத்தை இயக்க வேண்டும் என்பதால் அந்த கதையை மாற்றி தான் சூர்யவம்சம் படத்தின் கதையை கூறியிருக்கிறார்.

    இதையும் படிங்க: Kanguva: கங்குவா ட்ரெய்லரில் வந்த நம்பர்!… இதுல இப்படி ஒரு நியூமராலஜி இருக்கா?!… பயங்கரமா இருக்கே!…

    அந்த காட்சி ஷூட்டிங்கிற்காக இயக்குனர் விக்ரமன் பட குழுவிடம் இரவு சரத்குமார் சாப்பிட பிரெஷ் ஆன சாப்பாட்டை தயார் செய்து வைக்க கூறியுள்ளனர். அது போல் ஷூட்டிங் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் சரத்குமார் சாப்பிட்டுக்கொண்டே பின்பக்கம் திரும்பி அதைத் துப்பிக் கொண்டே இருந்தாராம்.

    இதையும் படிங்க: Vijay Trisha: விஜய் இத மாத்திக்கிட்டா நல்லா இருக்கும்.. அப்பவே சொன்ன திரிஷா! அதுக்கு விஜய் பதில பாருங்க

    உடனே விக்ரமன் என்னப்பா ஆச்சு ஏன் உனக்கு அரிசி சாப்பாடு பிடிக்காதா என கேட்கிறார். சரத்குமாரோ இல்லை இந்த சாப்பாடு ரொம்ப மோசமான அளவு கெட்டுப் போய்விட்டது. யூனிட் ஆட்களிடம் கேட்டேன் அவர்கள் இயக்குனரிடம் இதை சொல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டார்கள்.

    sarathkumar
    suryavamsam

    அவர்களை காப்பாற்ற வேண்டிதான் இந்த சாப்பாடு சாப்பிட்டு கொண்டிருக்கிறேன். வாயில் அடக்கி வைத்துக் கொண்டு காட்சி முடிந்ததும் அதை துப்பிக் கொண்டிருப்பதாக கூறி இருக்கிறார். சாப்பாடு மற்றும் சாம்பார் மோசமான அளவு தாண்டி கெட்டுப் போயிருந்ததாகவும், ஷூட்டிங்கை கெடுத்து விடக்கூடாது என்பதால் சரத்குமார் அதை பொறுத்துக் கொண்டு நடித்துக் கொடுத்ததாகவும் இயக்குனர் விக்ரமன் தெரிவித்திருக்கிறார்.

  • கேப்டன் மாதிரியே துப்பாக்கியை தூக்கிய சண்முக பாண்டியன்!.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தாறுமாறு!…

    தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் பொன்ராம். தமிழில் ரஜினி முருகன், சீமா ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற பல படங்களை இயக்கியவர் தான் பொன்ராம். இவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் டிஎஸ்பி.

    ஆனால் அந்தப் படம் எதிர்பார்க்காத அளவுக்கும் படுதோல்வி அடைந்தது. படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருப்பார். இந்த நிலையில் இவருடைய அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகி இருக்கிறது. சரத்குமார் விஜயகாந்த் மகனான சண்முக பாண்டியனை வைத்து ஒரு படம் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியானது.

    அது சம்பந்தமான பூஜையும் போடப்பட்டது. இன்று அந்த படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன்மூலம் சண்முக பாண்டியன் சரத்குமாரும் முதன்முறையாக இணைந்து நடிக்கும் படமாக இந்த படம் அமைய இருக்கிறது.

    இந்த படம் தேனி மாவட்டத்தில் அமைந்த ஒரு கிராமத்தில் நடந்த உண்மை கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. படத்தில் கமர்ஷியல் அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் படத்தின் போஸ்டரை பார்க்கும் போதே ஏதோ ஒரு ஆழமான கருத்தை சொல்ல வருவதாகவே தெரிகிறது.

    விறுவிறுப்பும் கலகலப்பும் நகைச்சுவையும் நிறைந்து கூடவே சண்டை காட்சிகளும் இருக்கும் ஒரு கமர்ஷியல் படமாக இந்த படம் மிகப்பெரிய அளவில் உருவாக போகிறது. இந்த படத்தில் ஹீரோயினாக புதுமுக நடிகை தார்னிகா நடிக்க இருக்கிறார்.

    இவர்களுடன் இணைந்து முனீஸ்க்காந்த் காளி வெங்கட் போன்ற பல நடிகர்கள் நடிக்கிறார்கள். படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். தேனி மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி மற்றும் ஆண்டிப்பட்டி போன்ற கிராமங்களை சுற்றி இருக்கும் மக்களின் வாழ்க்கையைப் பற்றி இந்த படம் பேசப்போகிறது.

    சமீபத்தில் இதனுடைய படப்பிடிப்பு தேனியில் நடைபெற்ற் வருகிறது இயக்குனர் பொன்ராமுக்கு உரிய நகைச்சுவையும் சண்டைக் காட்சிகளும் இந்த படத்தில் இருக்கும் என படக் குழு தெரிவித்துள்ளது. படத்திற்கு கொம்புசீவி என பெயரிடப்பட்டுள்ளது. போஸ்டரில் கம்பீரமாக கையில் கத்தியுடன் சண்முகப்பாண்டியனும் சரத்குமாரும் நிற்பது பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது.

  • Vijy TVK:அதே டெய்லர்… அதே வாடகை..! இணையத்தில் வைரலாகி வரும் விஜய் போட்டோ..!

    தமிழ்சினிமா உலகில் சுப்ரீம் ஸ்டார் என்று போற்றப்பட்டவர் சரத்குமார். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்து இருப்பார். சூரியன் படம் இவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது. கே.எஸ்.ரவிகுமாரின் இயக்கத்தில் நாட்டாமை, சூர்யவம்சம் படங்கள் அதிரிபுதிரி ஹிட் அடித்தன. அரசியல் ஆசை யாரைத்தான் விட்டது? இவரும் கட்சி ஆரம்பித்தார்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்று பெயரிட்டார். எம்.பி.ஆனார். 2011ல் தென்காசி தொகுதியில் வெற்றி பெற்றார். தற்போது பிஜேபியில் இணைந்து விட்டார். ஆரம்பத்தில் 1996ல் திமுகவில் இணைந்தார். 1998ல் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

    2001ல் எம்.பி.ஆனார். 2006ல் கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறியவர் 2007ல் கட்சியைத் தொடங்கினார். அப்போது மஞ்;சளும், சிகப்பும் கலந்த கொடி தான் அவரது கட்சிக்கொடியாக இருந்தது. அந்த சிகப்பில் ஒரு ஸ்டார் இருக்கும். மஞ்சளும், சிகப்பும் கலந்த நிறமுள்ள துண்டை தோளில் அணிந்து இருப்பார்.

    விஜயும் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியைத் தொடங்கி விட்டார். விஜயின் கட்சிக் கொடியும் அதே கலர் தான். நடுவில் மஞ்சளும், இரு புறமும் சிகப்பு கலரும் இருக்கும். மஞ்சள் கலரில் இரட்டை யானையும், வாகைப்பூவும் இருக்கும். விஜயின் துண்டிலும் சிகப்பு மற்றும் மஞ்சள் நிறம் தான் இருந்தது. கட்சி மாநாட்டில் அவர் ரேம்ப் வாக் பண்ணும்போது தொண்டர்கள் வீசிய துண்டை லாவகமாகக் கேட்ச் செய்து தோளில் அணிந்தபடி நடந்து வந்தார். அது பலராலும் விமர்சனத்திற்குள்ளானது.

    விஜய் மாநாட்டில் பேசிய பேச்சை லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்து கண்டு ரசித்தனர். பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்களும் அதை விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் விஜயை ரொம்பவே தாக்கிப் பேசியுள்ளார். அவரது கொள்கை கருவாட்டு சாம்பார் என்றும் திராவிடம், தமிழ்தேசியத்துக்கு விளக்கம் சொல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    தற்போது விஜய் அதே நிறமுள்ள துண்டை அணிந்து இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. இதைப் பார்க்கும் நெட்டிசன்கள் ‘அதே டெய்லர், அதே வாடகை’ என கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

  • மகள் திருமணத்திற்கு வராத சரத்குமாரின் முதல் மனைவி… சீக்ரெட் சொன்ன பயில்வான்!

    சரத்குமார் மகள் வரலட்சுமியின் திருமணம் சமீபத்தில் தாய்லாந்தில் தடபுடலாக பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு வரலட்சுமியின் அம்மா சாயாதேவி வரவில்லையாம். இதுகுறித்து பிரபல யூடியூபர் பயில்வான் ரங்கநாதன் அதிர்ச்சி தரும் சில தகவல்களைத் தெரிவித்துள்ளார். என்னன்னு பார்ப்போமா…

    வரலட்சுமி மும்பை தொழில் அதிபர் கோடீஸ்வரர் நிக்கோலஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது. சரத்குமார் சம்மதிக்கவில்லை என்றாலும் நிக்கோலஸை வரலட்சுமி திருமணம் செய்து இருப்பார். தாய்லாந்தில் திருமணம் செய்ய ஏகப்பட்ட விதிமுறைகள் இருக்கு. மும்பையில் ஏன் திருமணம் வைக்கவில்லை என தெரியவில்லை. சென்னையில் தாஜ் கோரமண்டலில் திருமணம் நடந்தது. ராதிகாவை திருமணம் செய்த போது வரலட்சுமி அம்மா சாயாதேவியை விவாகரத்து செய்தார் சரத்குமார்.

     

    சாயாதேவியுடன் சரத்குமார் வாழ்ந்து வந்தார். வரலட்சுமி தன் அப்பாவுக்குப் போட்டியாகத் தான் சினிமாவில் நடிக்க வந்தார். நடிக்கத் தொடங்கிய முதல் படம் போடா போடி. சிம்புவுடன் காதல் கிசுகிசு வந்தது. அப்புறம் விஷாலைக் காதலித்தார். அதுவும் பிரேக் அப் ஆனது. அவரது திருமணத்திற்கு சாயாதேவி வரவில்லை. சாயாதேவியும் ராதிகாவை ஏற்றுக்கொள்ளவில்லை. வரலட்சுமியும் ராதிகாவை அம்மா என ஏற்றுக்கொள்ளவில்லை.

    பத்திரிகையாளரிடமே நான் ராதிகாவை ஆன்ட்டின்னு தான் சொல்வேன் என்றார் வரலட்சுமி. திருமண சம்பந்தமான எந்த புகைப்படத்திலும் சாயாதேவியைப் பார்க்க முடியவில்லை. நிக்கோலஸ் ஏற்கனவே விவாகரத்தானவர். 18 வயதில் அவருக்கு மகள் உள்ளார். மாமனாரும், மருமகனும் பாடி பில்டர்ஸ் தான். திருமணத்திற்குப் பிறகு வரலட்சுமி நடிக்கலாம் என பச்சைக்கொடி காட்டிவிட்டாராம் நிக்கோலஸ். சினிமாவிலும் வரலட்சுமிக்கு எதிர்பார்த்த வேடம் கிடைக்காது. அக்கா, அண்ணி மாதிரின்னா நடிக்கலாம். ஏன்னா அவர் முத்தின கத்திரிக்காய்.

    இந்தக் கல்யாணத்துக்கு நடிகர், நடிகைகள் வந்தது குறைவு தான். அழைப்பிதழும் குறைவாகத் தான் கொடுத்தார்களாம். வரலட்சுமியின் அம்மா திருமணத்திற்கு வராதது அதிர்ச்சி தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • வயதான மாப்பிள்ளைக்கு 2வது மனைவி… வரலட்சுமி சம்மதிக்க என்ன காரணம்? ரகசிய டீலை உடைத்த பிரபலம்

    சமீபத்தில் நடந்து முடிந்த வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் இணையதளத்தையே புரட்டிப் போட்டுவிட்டது. வலைதளத்தைத் திறந்தால் எங்கு பார்த்தாலும் அந்த நியூஸ் தான். அதில் என்ன விசேஷம் என்றால் இவ்வளவுக்கும் இது மாப்பிள்ளைக்கு 2ம் திருமணம். வரலட்சுமி பிரபல நடிகை. எப்படி சம்மதித்தார்? அவரது தந்தை சரத்குமார் இதற்கு எப்படி சம்மதித்தார் என்றெல்லாம் பல்வேறு கேள்விகள் எழுகிறது. வாங்க பார்க்கலாம்.

    சரத்குமார் மகள் வரலட்சுமியின் திருமணம் தாய்லாந்தில் வெகுவிமரிசையாக நடந்தது. ராதிகா, சரத்குமார் எல்லாம் ஆட்டம் போட்டார்கள். கல்யாணத்தில் என்ன விசேஷம்னா வரலட்சுமியை விட வயதில் மூத்த மாப்பிள்ளையான நிக்கோலைக்கு 2வது திருமணம் தான் இது. இவருக்கு 18வயதில் ஒரு மகள் இருக்கிறாராம். அப்படி இருந்தும் வரலட்சுமி இந்தத் திருமணத்திற்கு சம்மதிக்க என்ன காரணம் என பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா…

    Also Read… திலோத்தமா கொடுத்த நம்பிக்கை… அஜித்துடன் ஷாலினி இணைய இவங்க தான் காரணமா?

    வரலட்சுமி வந்து மாப்பிள்ளைக்கு 300 கோடியும், குட்டித்தீவையும் வரதட்சணையாகக் கொடுத்தார் என்று சொல்கிறார்களே என செய்தியாளர் கேள்வி எழுப்பினார்;. அதற்கு அப்படி சொல்வதை எல்லாம் நம்ப முடியாது. அது எப்படிங்க சாத்தியம் எனறார் அந்தனன். அவர் மேலும் சொன்னது இதுதான்.

    சரத்குமார் வசதியானவர். ராதிகா வசதியா இருக்காங்க. அதெல்லாம் வேற. ஆனால் ஒரு தீவை வாங்கிக் கொடுக்கற இடத்தில் எல்லாம் அவர்கள் இல்லை. சரத்குமார் நிக்கோலைக்கு இரண்டாம் தாரமாக தனது மகளைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறார். அப்படி என்றால் அவர் எவ்வளவு பெரிய நபராக இருக்க வேண்டும்? பார்த்துப் பார்த்து வளர்த்தப் பொண்ணு. நடிகை.

    Also Read… வரலட்சுமி திருமணத்தின் மொத்த செலவு எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா… இத்தனை கோடியா!

    காதலும் அல்ல. லவ் அண்ட் அரேஞ்சுடு மேரேஜ்னு எல்லாம் ஏதேதோ கதை சொல்றாங்க.. மணமகன் மிகப்பெரிய நபராக பொருளாதார ரீதியில் இருந்தால் தான் இது சாத்தியமாக மாறும். நியாயமா அவங்க தான் இவருக்கு தீவு எல்லாம் வாங்கிக் கொடுக்க வேண்டும். நீங்க ஏதோ மாற்றி சொல்றீங்க என்கிறார் வலைப்பேச்சாளர் அந்தனன்.

  • சரத்குமாரை பழிவாங்கத் துடித்த வரலட்சுமி… அதுக்காக இப்படியா பண்றது?

    சமீபத்தில் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியின் திருமணம் தான் மீடியாக்களில் பேசுபொருளானது. ஆனால் அவருக்கும், வரலட்சுமிக்கும் இடையே பெரிய பகை இருந்ததாம். அதனால் சரத்குமாரைப் பழிவாங்க வரலட்சுமி துடித்தாராம். அடுத்து என்ன செய்தார் என பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு இப்படி சொல்கிறார்.

    Also Read: காட்டுக்குயிலு மனசுக்குள்ள’ பாட்ட நானும் யேசுதாஸும் சேர்ந்து பாடவே இல்ல!.. பகீர் தகவலை சொன்ன எஸ்.பி.பி

    தன் அம்மா சாயாதேவியை தனியாகத் தவிக்க வைத்து விட்டு போய்விட்டார் சரத்குமார் என்று வரலட்சுமிக்கு அவர் மீது கோபம் உண்டு. அவருக்கு பூஜா என ஒரு தங்கையும் உண்டு. அது மட்டுமில்லாமல் அவரை நாமும் சினிமாவில் இறங்கி பழிவாங்க வேண்டும் என்று நினைத்தாராம்.

    அதனால் தான் அவரும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தாராம். அந்த நேரத்தில் பாய்ஸ் படத்திற்கு ஷங்கர் புதுமுகங்களை தேர்வு செய்து கொண்டு இருந்தார். நகுல் செலக்ட் ஆயிட்டாரு. நல்ல டான்ஸ் ஆடுவார்னு பரத் செலக்ட், மணிரத்னம் அசிஸ்டண்ட்னு சித்தார்த் செலக்ட், தமன் என அனைவரும் தேர்வு செய்யப்பட்டனர்.

    கதாநாயகிக்கு சரத்குமாரின் மகள் வரலட்சுமி இருக்காங்கன்னு சொன்னதும் அந்த விஷயம் சரத்குமாரின் காதுகளுக்கு எட்டியதாம். உடனே அவர் அதற்கு சம்மதிக்கவில்லையாம். அதனால் தான் அவருக்கு அந்த வாய்ப்பு போனதாம். இதனாலும் வரலட்சுமிக்கு சரத்குமார் மீது கோபம். அதனால் தான் போடா போடி படத்தில் வரலட்சுமியே அந்த சான்ஸ வாங்கினாராம்.

    Also Read: எங்கே போனாலும் விடமாட்டேன்… விடாது கருப்பு என துரத்திய ஜெயம் ரவி மனைவி… நடந்தது இதுதான்..!

    அந்தப் படம் ஹிட்டானால் வரலட்சுமி தமிழ் திரை உலகில் பெரிய லெவலுக்கு வந்து விடுவாராம். அந்தப் படம் ஓடாததால் ராசி இல்லாத நடிகை என பெயர் எடுத்து விட்டார். அது மட்டும் ஓடியிருந்தால் இன்று லேடி சூப்பர்ஸ்டார் அவர் தான்…! இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • பார்க்கத்தான் முரட்டு ஆள்… ஆனா பேச்சு தங்கம்… சரத்குமார் மருமகனால் ஆச்சரியத்தில் ரசிகர்கள்

    சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமிக்கு சமீபத்தில் தாய்லாந்தில் வெகுவிமரிசையாக திருமணம் நடந்து முடிந்தது. தொடர்ந்து இன்று வரலட்சுமி தன்னுடைய கணவர் மற்றும் தந்தை சரத்குமார் உடன் செய்தியாளர்களை சந்தித்து இருக்கிறார்.

    அந்த சந்திப்பில், வரலட்சுமி கணவர் நிக்கோலாய் சச்தேவ் கூறுகையில், என் மனைவி வரலட்சுமி என்னிடம் அவருடைய பெயரை மாற்ற வேண்டும் என கூறினார். ஆனால் அவர் பெயர் வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என்று தான் இருக்க வேண்டும்.

    அவருக்காக நான் என்னுடைய பெயரை நிக்கோலாய் வரலட்சுமி சரத்குமார் சத்தேவ் என மாற்ற இருக்கிறேன். சரத்குமார் என்பது லெகசி. அதை மாற்றக்கூடாது. வரலட்சுமி நாளிலிருந்து ஷூட்டிங்கில் கலந்து கொள்ள இருக்கிறார். எதுவும் மாறவில்லை.

    நான் அவருடைய முதல் காதலும் இல்லை பிடித்த காதலும் இல்லை. ஏனெனில் வரலட்சுமிக்கு சினிமா தான் முதல் காதல். அதனால் அவர் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்துவார். அதற்கு நானும், அவர் தந்தையும் எப்போதும் உறுதுணையாக இருப்போம். வந்தவர்கள் சாப்பாடு, தண்ணி குடித்துவிட்டு செல்லுங்கள் என கூறினார்.

    அவர் சாதாரண தண்ணியை சொன்னார் என பின்னால் வரலட்சுமி சிரித்துக் கொண்டே அதை சரி செய்த விதம் பார்ப்பவர்களை கலகலப்பில் ஆழ்த்தியது. இதைத் தொடர்ந்து பேச எழுந்த வரலட்சுமி, நிக்கோலாய் தான் என் காதல். ஆனால் சினிமா தான் என் உயிர்.

    நான் திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து நடிப்பேனா என கேள்வி அடிக்கடி எழுந்தது. தற்போது அதற்கு அனைவருக்கும் பதில் கிடைத்திருக்கும் என நினைக்கிறேன். கண்டிப்பாக நான் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருவேன் எனவும் குறிப்பிட்டார். வரலட்சுமி திருமண அறிவிப்பு வந்ததில் இருந்தே நிக்கோலாய் உருவம் குறித்து பல விமர்சனம் எழுந்த நிலையில் தற்போது அவர் பேச்சு பலரிடமும் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

  • தப்பு தப்பா போட்டுட்டு இருக்கீங்க! மகள் திருமண விருந்தில் பத்திரிக்கையாளரை எச்சரித்த சரத்குமார்

    தமிழ் சினிமாவில் ஒரு சுப்ரீம் ஸ்டார் ஆக இன்றுவரை மக்கள் மனதில் மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகர் சரத்குமார். 90களில் இருந்து தன்னுடைய ஆக்சன் சார்ந்த நடிப்புகளாலும் அசாத்திய நடிப்பாலும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்ற ஒரு ஹீரோவாக சூப்பர் ஹிட் ஸ்டாராக இருந்து வந்த சரத்குமார் சமீப காலமாக குணச்சித்திர நடிகர் ஆகவும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களிலும் நடித்து இன்றளவும் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் சமீபத்தில் தான் இவருடைய மகள் வரலட்சுமியின் திருமணம் தாய்லாந்தில் உறவினர்கள் முன்னிலையில் மிக விமர்சையாக நடந்து முடிந்தது. அதற்கு முன்னதாக இவர்களுடைய வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

    மும்பையைச் சேர்ந்த நிக்கோலை என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் வரலட்சுமி சரத்குமார். தாய்லாந்தில் கிராப்பில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் இவர்களுடைய திருமண விழா நடைபெற்றது. சமீபத்தில் தான் தனது மகள் திருமண விருந்தாக பத்திரிகையாளர்களுக்கு பிரியாணியுடன் தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்திருந்தார் சரத்குமார்.

    ஏராளமான பத்திரிகையாளர்கள் அதில் கலந்து கொண்டனர். அப்போது விருந்து நடைபெறும் இடத்தில் அனைவரையும் சிறப்பாக கவனித்துக் கொண்ட சரத்குமார் நேராக ஒரு நிருபரிடம் வந்து எச்சரிக்கும் விதமாக அவருடைய கருத்தை தெரிவித்து சென்றார்.

    அதாவது அந்த நிரூபரை பார்த்து சரத்குமார் ‘பாஸ் நம் சந்தித்து பேச வேண்டும். தனியாக உங்களிடம் நிறைய பேச வேண்டும்.என்னை பற்றி நிறைய செய்திகள் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். அதை குறைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும்.

    பாசிட்டிவாக இருங்கள். என்னை ஆரம்பத்திலிருந்து உங்களுக்கு நன்றாக தெரியும். என்னுடைய பயணம் என்ன என்பதும் என் கூடவே இருந்த நீங்கள் பார்த்து வருகிறீர்கள். அதனால் இனிமேல் இப்படி எழுதுவதை குறைத்துக் கொள்ளுங்கள்’ என அந்த நிரூபரை பார்த்து சொல்லிவிட்டு சென்றார்.அந்த வீடியோ தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

  • அரசியல் பண்ண மட்டும் தான் தமிழ்நாடு!.. பொண்ணோட கல்யாணத்த ஃபாரீன்ல நடத்தும் சரத்குமார்?..

    நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் திருமணம் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள நிலையில், அந்த திருமணம் தமிழ்நாட்டில் நடைபெறாது என்றும் வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தமிழ்நாட்டில் நடிகராகவும் அரசியல்வாதியாகவும் சரத்குமார் மற்றும் ராதிகா இருவரும் வலம் வரும் நிலையில், தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார் வட இந்தியாவைச் சேர்ந்த நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து வரும் நிலையில் தனது திருமணத்தை தாய்லாந்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதையும் படிங்க: போங்காட்டம் ஆடி பிரியாணி வாங்கி கொடுத்த விஜயகாந்த்!. நம்ம கார்த்தி பருத்தீவீரன்ல பண்ணுவாரே அதேதான்!

    நடிகர் சரத்குமார் மகள் ராதிகா சரத்குமாரின் திருமணத்துக்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல் தமிழ்நாட்டில் உள்ள முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், நயன்தாரா, சித்தார்த் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு தொடர்ந்து குடும்பத்துடன் சென்று வரலட்சுமி சரத்குமார் பத்திரிகை வைத்து வருகிறார்.

    ஆனால், அந்த திருமண அழைப்பிதழ் திருமணத்துக்கான அழைப்பிதழ் இல்லை என்றும் திருமணத்துக்கு முன்பாக தமிழ்நாட்டில் நடைபெற உள்ள ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் என்றும் தற்போது தகவல்கள் கசிந்துள்ளன. கடந்த மார்ச் 1-ஆம் தேதி மும்பையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஜூலை 2ஆம் தேதி தாய்லாந்தில் திருமணத்தை நடத்த வரலட்சுமி சரத்குமார் மற்றும் அவரது வருங்கால கணவரான நிக்கோலாய் சச்தேவ் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறுகின்றனர்.

    இதையும் படிங்க: கல்யாணத்துக்கு போகலனா என்ன?!.. பிரேம்ஜிக்கு பெரியப்பா இளையராஜா செய்த சிறப்பான சம்பவம்!…

    திருமணத்துக்கு முந்தைய ஹல்தி, மெஹந்தி மற்றும் சங்கீத் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சென்னையில் நடைபெறும் என்றும் தாலி கட்டும் திருமணம் மட்டும் தாய்லாந்தில் நடைபெறும் என்றும் கூறுகின்றனர். மேலும், சினிமா பிரபலங்கள் பங்கேற்கும் திருமண வரவேற்பு விழா சென்னையில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.

    வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ராயன் திரைப்படம் வரும் ஜூலை 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த ஆண்டு லட்சுமி நடித்த ஹனுமான் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

    இதையும் படிங்க: சிவகார்த்தியேனுக்கு கோடிகளை கொட்டி கொடுத்த 3 படங்கள்!.. 100 கோடி வசூலை தொட்ட டான்!…