Tag: sarathkumar

  • முருங்கைக்காயால ஒண்ணும் செட்டாகலயா? எப்படி சொல்லலாம்? பாக்கியராஜை சீண்டும் நாட்டாமை!..

    கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்க, இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நடிக்க உள்ள படம் ‘ஹிட் லிஸ்ட்’. இதற்கான ஆடியோ லாஞ்ச் சமீபத்தில் நடந்தது. அதில் பல்வேறு நடிகர்களும், இயக்குனர்களும் கலந்து கொண்டனர். நடிகர் சரத்குமார் கலந்து கொண்டு இவ்வாறு பேசினார்.

    பொதுவா பாடி வந்து வெயிட் போட போட முட்டிலாம் வலிக்க ஆரம்பிச்சிரும். எல்லாரும் ஹெல்த்த நல்லா வச்சிருங்கன்னு தான் நான் சொல்வேன். இந்த 75 வயசுலயும் நான் திடமா இருக்கேன்னு சொன்னா ஒழுங்கா உடற்பயிற்சி செய்து உடலை ஆரோக்கியமா வச்சிக்கறது தான் காரணம்.

    இதையும் படிங்க… இரண்டு ரசிகர்கள் எழுதிய கடிதம்!.. சிவாஜிக்கு நடிகர் திலகம் பட்டம் வந்தது இப்படித்தான்!..

    சௌத்ரி சார் கலையுலகிற்கு மிகப்பெரிய பொக்கிஷம். அவரு கூட 13 படம் பண்ணியிருக்கேன். 100வது படம் பண்ணலாம்னு சொல்லிருக்கலாம்னு நினைக்கிறேன். ரிஜிஸ்டர் பண்ணிறது பெட்டர். சூர்யவம்சம் 2 பண்ணலாம்னு பேசிருக்கிறோம். அது சரியா அமையல. சூர்யவம்சம் 2வா இருக்கட்டும். 3, 4 ஆகக் கூட இருக்கட்டும். எனக்கு 150 வயசானாலும் நடிப்பேன். ஏன்னா பத்திரிகையாளர் ரெடியா ஆயிட்டாங்க. சரத்குமார் மென்டல் ஆயிட்டான். 150 வயசு வரைக்கும் வாழ்வார்னு போடுவாங்க. சந்தோஷம் எனக்கு.

    150 வயசு வரை வாழறதை நினைச்சி சந்தோஷப்படுறதை விட்டுட்டு, வாழ்வானான்னு கிண்டல் பண்றது தான் இப்ப அதிகம். அதுதான் அவங்களுக்கு நியூஸ். எது நியூஸைக் கொடுக்குமோ அதை முதல்ல கொடுத்துடணும். அப்போ தான் அவங்க சந்தோஷப்படுவாங்க.

    இதையும் படிங்க… கிட்டத்தட்ட 15 மணி நேரம் நிக்கனும்! ‘குக் வித் கோமாளி’ தாமுவுக்கு இப்படி ஒரு பிரச்சினையா?

    ‘சரத்குமார் 150 வருஷம் எப்படி வாழமுடியும்?’னு சொல்வாங்க. ரஜினி சார் பார்க்குற பாபாவே 4000 வருஷமா வாழ்ந்துருக்காரு. புரட்சித்தலைவர் மக்கள் திலகம் இல்லேன்னாலும் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அதுதான் வாழ்க்கை. நம்ம நடந்து சென்ற பாதையில் அடுத்தவர் பயணிக்கிறாரான்னு பின்னாடி பார்க்கணும். உள்ளத்தால் இளமையாக இருப்பவர்கள் தான் இயக்குனர்களாக இருக்க முடியும். மற்றவர்களை இயக்குபவர்களாக இருக்க முடியும். அதுக்கு உடல் ஆரோக்கியம் தேவை. ஆல்கஹால், போதை பொருள் எல்லாம் தேவையில்லாதது. சுவர் இருந்தால் தான் சித்திரம்.

    ஒண்ணே ஒண்ணு தான் பாக்கியராஜ் சார் பல பேரு மனசை உடைச்சிட்டாரு. அவரு என்ன சொன்னாருன்னா ‘3 நாள் முருங்கைக்காய் கொண்டு வந்தாங்க. முருங்கைக்காய் கீரைக் கொண்டு வந்தாங்க. சாம்பார் வச்சிக் கொடுத்தாங்க. ஆனா ஒண்ணும் செட்டாகல’ன்னாரு. ‘அவரு சீன் செட்டாகல’ன்னு சொன்னாருன்னு நினைக்கிறேன். நான் எதையும் நேரடியா கேட்டுருவேன். என்ன சார் உங்களுக்கு இந்த முருங்கைக்காயாலா பிரச்சனைன்னு கேட்பேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • 60 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த சரத்குமார்.. 6 மாத சிகிச்சை!. அந்த படத்துக்கு அவ்வளவு கஷ்டப்பட்டாரா?!

    சரத்குமார் – கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணி என்றாலே அது சூப்பர்ஹிட் தான். புரியாத புதிர், சேரன் பாண்டியன், பேண்ட் மாஸ்டர், நாட்டாமை, நட்புக்காக, ஜக்குபாய் என சரத்குமாரை வைத்து பல படங்களை இயக்கியுள்ளார். இவற்றில் நாட்டாமை படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.

    சமீபத்தில் சரத்குமார் ‘ஹிட் லிஸ்ட்’ படத்தின் ஆடியோ லாஞ்சில் கலந்து கொண்டு கே.எஸ்.ரவிகுமாரின் முதல் பட அனுபவங்கள் குறித்து இவ்வாறு பேசினார்.

    ரவிக்குமார் இயக்கிய முதல் படம் ‘புரியாத புதிர்’. அந்தப் படத்தில் ‘நான் வில்லன்’னு என்னை புக் பண்ணிட்டார். நீங்க வரணும்னு சொன்னார். நானும் சரின்னு சொல்லிட்டேன். ஆனால் துரதிர்ஷ்டவசமா 60 அடியில் இருந்து கீழே விழுந்துட்டேன்.

    பலத்த அடி பட்டு 6 மாசமா சிகிச்சையில இருந்தேன். கழுத்துல அடிபட்டு இருந்தது. கழுத்தை ஓப்பன் பண்ணி சி4 சி5 டாக்டர்கள் வந்து சர்ஜரி பண்ணினாங்க. இடுப்புல இருந்து ஒரு எலும்பை எடுத்து கழுத்துல வச்சி, இரும்பு ராடை வச்சி, நாலு ஸ்க்ரூவை வச்சி டைட் பண்ணி கழுத்தை நிக்க வச்சிட்டாங்க.

    அப்படி பார்த்தா நான் தான் அயர்ன்மேன். அதுக்கு அப்புறம் 6 மாதம் பெட்ல தான் இருந்தேன். வீட்டுக்கு வந்தேன். அதுக்கு அப்புறம் சொல்ல வேண்டிய ஒன்று உள்ளது. எதுவுமே நிலையானது அல்ல. கலையுலகிற்கு மட்டுமல்ல. வாழ்க்கையும் அப்படித்தான்.

    PP
    PP

    என்னால பேச முடியாது. அப்போ பிசியான வில்லனா நடிச்சிக்கிட்டு இருந்தேன். 11 படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கி இருந்தேன். அந்த நேரத்துல தான் இப்படி ஒரு விபத்து. அப்போ ரவிக்குமார் என்னைப் பார்க்க வந்தாரு. அப்போ நான் பேச முடியாதுங்கறதால பேப்பர் எழுதி கேட்டேன். ‘தங்கள் முன்பணத்தைத் திரும்பப் பெற வந்து இருக்கிறீர்களா?’ என்று. ‘இல்ல நீங்க நடிக்கிறீங்க’ன்னு சொன்னாரு.

    அப்போ தயாரிப்பாளர் சௌத்ரி சாரும் சொல்லியிருக்கலாம். அது ஒரு இன்ஸ்பெக்டர் கேரக்டர் தானே எதுக்கு ஒரு நடிகனுக்குப் போயி வெயிட் பண்றீங்கன்னு. அவரும் என் குருநாதர் தான். ஆனா, ரவிக்குமார் ‘நீங்க தான் என் படத்துல நடிக்கிறீங்க. என்னோட முதல் படம். உங்களை புக் பண்ணிட்டேன். அது 6 மாசமா ஆனாலும் சரி. ஒரு வருஷம் ஆனாலும் சரி’ என்று சொல்லிவிட்டார்.

    இதையும் படிங்க… எம்ஜிஆர் நடித்து 1200 கோடிக்கு மேல் வசூல் செய்த படம்!. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!..

    அப்போ 20 கிலோ வெயிட் குறைஞ்சி இருந்தேன். அவங்க எதிர்பார்த்த சரத்குமாரா நான் இல்ல. அந்தப் படத்துல நடிக்கும்போது ரெண்டு பேருக்கும் பெரிய தகராறு. கலையுலகமே பார்த்திருக்க முடியாது. எனக்கு பஞ்சாயத்து பண்ணித் தர்ற ஒரே நாட்டாமை ரவிக்குமார் தான். சண்டை எவ்வளவு போட்டாலும் முடிஞ்சபிறகு ‘வாங்க வண்டியில உட்காருங்க. பேசிக்கிட்டே போகலாம்’னு சொல்வாரு. அப்படி ஒரு தங்கமான மனிதர் ரவிக்குமார் தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • அந்த படத்தில் நான் நடிக்கவா? ஆசையாக கேட்ட சரத்குமார்… முடியவே முடியாது என மறுத்த இயக்குனர்!…

    Sarathkumar: தமிழ் சினிமாவின் சூப்பர்ஹிட் திரைப்படம் ஒன்றில் நடிக்க ஆசைப்பட்டு அதற்கு இயக்குனர் முடியவே முடியாது என மறுத்துவிட்ட சம்பவம் நடந்ததாம். அதற்காக அவருக்கு ஒரு திரைப்படத்தினையும் செய்து அதையும் ஹிட்டடிக்க கொடுத்தாராம் இயக்குனர்.

    தெலுங்கு சினிமாவில் எண்ட்ரி கொடுத்தவர் சரத்குமார். ஆனால் அங்கு அவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து தமிழில் புலன் விசாரணை படத்தில் நடித்தார். தொடக்கமே நல்ல முறையில் அமைந்தது. இதனால் தமிழில் தனக்கான ஒரு அடையாளத்தினை உருவாக்கினார்.

    இதையும் படிங்க: புரட்சித்தளபதி தளபதி ஆக வேண்டாமா? ஆசையை தூண்டி விஷாலின் அரசியலுக்கு முட்டுக்கட்டை போட்ட பிரபலம்

    ஆனால் அவர் ஹீரோவாக நடித்த திரைப்படங்களை விட வில்லன் வேடத்தில் மாஸ் காட்டினார். இதை தொடர்ந்து 2000களில் இருந்து கேரக்டர் வேடத்தில் நடித்து வந்தார். அப்படங்களும் சூப்பர்ஹிட்டானது. ஆனால் சரத்குமாரின் கேரியரில் ஹிட் படம் என்றால் அது சூர்யவம்சம். ஆனால் இப்படத்தினை விக்ரமன் இயக்கியதே சரத்குமாரை சமாதானம் செய்வதற்கு தானாம். 

    முதலில் வானத்தை போல கதையை விக்ரமன் எழுதி விட்டார். அந்த கதையை கேட்டதும் சரத்குமார் நானே இந்த படத்தில் நடிக்கிறேன் எனக் கூறினாராம். தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரிக்கும் அதுவே சரியென தோன்றியது. ஆனால் விக்ரமன் தற்போது நாட்டாமை திரைப்படத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்துவிட்டார்.

    இதையும் படிங்க: இமான் வருவதற்குள் போய்விட்டார் அமரன்!.. எஸ்.கே.வை கலாய்த்த பிரபலம்!.. இது செம நக்கல்யா!..

    அவர் இந்த படத்தில் நடிப்பது அவ்வளவு சரியாக இருக்காது. அதனால் இந்த படத்தில் விஜயகாந்த் நடிக்க வேண்டும் எனக் கூறினாராம். பின்னர் தான் சூர்யவம்சம் கதை உருவானது. அதில் முதலில் அப்பா கேரக்டருக்கு விஜயகுமாரை கேட்கலாம் என்ற பேச்சு எழுந்தது. ஆனால் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தான். இரட்டை வேடத்திலும் சரத்குமாரே நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம். இதை தொடர்ந்து வெளியான அப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.

  • ஆனந்தராஜை ஹீரோவாக நினைத்த சூப்பர் ஹிட் பட இயக்குனர்… ஆனால் இடையில் புகுந்த மாஸ் ஹீரோ!…

    Anantharaj: தமிழ் சினிமாவின் கிளாசிக் வில்லன்களில் நடிகர் ஆனந்தராஜுக்கும் இடம் உண்டு. வில்லனாக ஹிட்டடித்தவருக்கு ஹீரோ வாய்ப்பும் கிடைத்தும் அது நடக்காமல் போன அதிர்ச்சி சம்பவம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

    சிவில் சர்ஜனுக்கு மகனாக பிறந்தவர் நடிகர் ஆனந்தராஜ். அவரை போலீஸாக்க வேண்டும் என்ற ஆசையில் தந்தை இருந்தாராம். ஆனால் ஆனந்தராஜுக்கு வேறு எதுவும் செய்ய வேண்டும் என்ற ஆசை. இதையடுத்து அவர் பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்தார். அவரின் வகுப்பு தோழர் கன்னட நடிகர் சிவராஜ் குமார் தானாம்.

    இதையும் படிங்க: உங்களுக்கு எப்படி இது தெரியும்?!. அஜித்துக்கு வாலி எழுதிய வரிகள்!. வாயடைத்து போன இயக்குனர்…

    ஆனால் படிப்பை முடித்துவிட்ட ஆனந்தராஜுக்கு முதலில் வாய்ப்பு சரியாக அமையவில்லையாம். பாசிட்டிவ் ரோல் என்பதால் பெரிய அளவில் ரீச் கொடுக்கவில்லை. பின்னர் விஜயகாந்துடன் நடித்து ஹிட்டடிக்க பல படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. நிறைய வாய்ப்புகள் வந்தாலும் சரியான வரவேற்பு அமையவில்லை.

    நெகட்டிவ் ரோலுக்கு மாறிய பின்னரே ஆனந்தராஜ் அடையாளம் கிடைக்கும் நடிகராக மாறினார். இதையடுத்து, ரஜினிகாந்த், சரத்குமார் உள்ளிட்டோருக்கு வில்லனாக நடித்து புகழ் பெற்றார். அதை தொடர்ந்து சமீபத்திய காலமாக வில்லன் டூ காமெடியன் ரோலுக்கு தன் ரூட்டை மாற்றி கொண்டுவிட்டார்.

    இதையும் படிங்க: முதல்வராகி முதன் முதலாக சொந்த ஊருக்கு போன எம்.ஜி.ஆர்!.. மனம் கலங்கி நின்ற நெகிழ்ச்சி தருணம்!..

    இந்நிலையில், காமெடி, வில்லன் என தொடர் ரோல் கிடைத்த ஆனந்தராஜுக்கு ஹீரோ ரோலும் வந்ததாம். இயக்குனர் பவித்ரன் முதன்முதலாக சூரியன் படத்தின் கதையை தயார் செய்து வைத்து இருந்தார். அந்த கதையை படித்த தயாரிப்பாளர் ஒருவர் நடிகர் ஆனந்தராஜை இப்படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்கலாமே எனக் கேட்டாராம். 

    ஆனால் பவித்ரனுக்கு நண்பனான ஆனந்தராஜை விட அப்படத்திற்கு சரத்குமார் நடித்தால் தான் சரியாக இருக்கும் என தோன்றவே அவரை பார்த்து கதை சொல்லி ஓகே செய்தாராம். இதையடுத்து, சரத்குமார் நடிப்பில் வெளியான சூரியன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.

  • 19 முறை விஜயகாந்துடன் மோதிய சரத்குமார் படங்கள்… ஜெயித்தது யாரு? வாங்க பார்க்கலாம்…

    விஜயகாந்த், சரத்குமார் ஆகிய இருவரது படங்களுமே பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பும். இவர்களது படங்கள் மோதிக்கொண்டால் அது எப்படி இருக்கும்? ஜெயித்தது யாரு? வாங்க, பார்க்கலாம்.

    1988ல் விஜயகாந்த்தின் உள்ளத்தில் நல்ல உள்ளம், சரத்குமாரின் கண் சிமிட்டும் நேரம் படங்கள் ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர். 1990ல் விஜயகாந்தின் புதுப்பாடகன், சரத்குமாரின் சீதா படமும் ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர்.

    அதே ஆண்டில் விஜயகாந்தின் எங்கிட்ட மோதாதே, சரத்குமாரின் பாலைவனப்பறவைகள் ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர். அதே ஆண்டில் விஜயகாந்தின் சத்ரியன், சரத்குமாரின் சிறையில் சில ராகங்கள் ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர்.

    இதையும் படிங்க… எதிர்ப்பை மீறி அந்த மாதிரி பொண்ணை நடிக்க வைத்த பாக்கியராஜ்!.. ரிசல்ட் என்னாச்சு தெரியுமா?..

    1992ல் விஜயகாந்துக்கு சின்னக்கவுண்டர், சரத்குமாின் இளவரசன் படங்கள் ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர். அதே ஆண்டில் சரத்குமாரின் தாய்மொழி, விஜயகாந்தின் காவியத்தலைவன் படங்கள் ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர்.

    1993ல் விஜயகாந்த்தின் கோயில் காளை, சரத்குமாரின் ஆதித்யன் படங்கள் ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர். அதே ஆண்டில் விஜயகாந்தின் ராஜதுரை, சரத்குமாரின் ஐ லவ் இந்தியா படங்கள் ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர்.

    அதே ஆண்டில் சரத்குமாரின் கட்டபொம்மன், விஜயகாந்தின் எங்க முதலாளி படங்கள் ரிலீஸ். இதுல சரத்குமார் தான் வின்னர். 1994ல் விஜயகாந்தின் ஆனஸ்ட்ராஜ், சரத்குமாரின் இந்து படங்கள் ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர்.

    அதே ஆண்டில் விஜயகாந்தின் என் ஆசை மச்சான், சரத்குமார் நடித்த கில்லாடி மாப்பிள்ளை படம் ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர். அதே ஆண்டில் விஜயகாந்தின் பெரிய மருது, சரத்குமாரின் நாட்டாமை படங்கள் ரிலீஸ். சரத்குமாருக்கு 200 நாள்கள் ஓடி வெற்றி பெற்றது. இதுல சரத்குமார் தான் வின்னர்.

    1995ல் விஜயகாந்துக்கு கருப்பு நிலா, சரத்குமாருக்கு வேலுச்சாமி படங்கள் ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர். 1996ல் விஜயகாந்துக்கு அலெக்சாண்டர், சரத்குமாருக்கு நேதாஜி ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர்.

    Vijayakanth, Sarathkumar
    Vijayakanth, Sarathkumar

    1998ல் விஜயகாந்துக்கு உளவுத்துறை, சரத்குமாருக்கு மூவேந்தர் படமும் ரிலீஸ். இருவருக்கும் வெற்றி.
    அதே ஆண்டில் சரத்குமாருக்கு நட்புக்காக, விஜயகாந்தின் தர்மா ரிலீஸ். இதுல சரத்குமார் தான் வின்னர். அதே ஆண்டில் விஜயகாந்தின் வீரம் வௌஞ்ச மண்ணு, சரத்குமாரின் சிம்மராசி படங்கள் ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர்.

    2004ல் விஜயகாந்தின் நெறஞ்ச மனசு, சரத்குமாரின் சத்ரபதி படங்கள் ரிலீஸ். இரண்டுமே பிளாப். 2006ல் விஜயகாந்தின் தர்மபுரி, சரத்குமாரின் தலைமகன் ரிலீஸ். இதுல ரெண்டுமே சுமார் ரகம்.

     

  • நமக்கெல்லாம் இது எப்போ நடக்கும்!.. ஷூட்டிங் ஸ்பாட்டில் ஃபீல் பண்ணி சாதித்து காட்டிய சரத்குமார்!..

    வினியோகஸ்தர், தயாரிப்பாளர் என சினிமாவில் அறிமுகமானவர்தான் சரத்குமார். பாடி பில்டிங் செய்து மிஸ்டர் மெட்ராஸ் பட்டம் பெற்றவர். இவர் சினிமாவில் நடிக்க துவங்கியது வில்லனாகத்தான். புலன் விசாரணை படத்தில் இவரை வில்லனாக அறிமுகம் செய்து வைத்தவர் விஜயகாந்த்.

    அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் வில்லனாக நடித்த இவரை ஹீரோ ஆக்கியதும் விஜயகாந்துதான். அவரின் சொந்த தயாரிப்பில் உருவான தாய் மொழி என்கிற படத்தில்தான் முதன்முதலாக ஹீரோவாக நடித்தார் சரத்குமார். அதன்பின் ஹீரோ, வில்லன் என மாறி மாறி நடித்து வந்த சரத்குமார் ஒருகட்டத்தில் ஹீரோவாக மட்டுமே நடிக்க துவங்கினார்.

    இதையும் படிங்க: எத்தனை ஹீரோக்கள் நடிக்க வேண்டிய படம் தெரியுமா? ஆனால் சொன்ன காரணம்.. அதான் லேடி சூப்பர் ஸ்டார்

    அப்போது அவருக்கு கை கொடுத்தவர்தான் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். சேரன் பாண்டியன், நாட்டாமை, நட்புக்காக என சரத்குமாரை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். அதேபோல், விக்ரமனின் இயக்கத்தில் சரத்குமார் நடித்த சூர்ய வம்சம் படமும் சூப்பர் ஹிட் அடித்தது. 100 படங்களுக்கும் மேல் நடித்தார். கடந்த சில வருடங்களாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

    sarathkumar

    இந்நிலையில், சரத்குமாரை வைத்து பல திரைப்படங்களை தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவன அதிபர் ஆர்.பி.சவுத்ரி ஊடகம் ஒன்றில் பேசிய போது ‘நான் சரத்குமாரை வைத்து பல திரைப்படங்களை தயாரித்திருக்கிறேன். அவரை வைத்து நான் எடுத்த எல்லா படங்களுமே சூப்பர் ஹிட்தான்.

    இதையும் படிங்க: எனக்கு பட்டை நாமம் போட்டாங்க!. உனக்கு நாமக்கட்டி!.. சிவக்குமாரை அதிரவைத்த சிவாஜி!..

    அவரின் 100வது படத்தை நான் தயாரிக்க ஆசைப்பட்டேன். ஆனால், அது நடக்கவில்லை. சேரன் பாண்டியன் படப்பிடிப்பு நடக்கும் போது படப்பிடிப்பில் ஆனந்த்பாபுவிடம் ரசிகர்கள் ஆட்டோகிராப் வாங்குவார்கள். அதை ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார் சரத்குமார். ஆனால், மெல்ல மெல்ல உயர்ந்து முன்னணி நடிகராக மாறி அவரும் ரசிகர்கள் பலரையும் பெற்றார். அவரின் வளர்ச்சி அசுரத்தனமானது’ என கூறியிருந்தார்.

    இப்போது பல படங்களில் சரத்குமார் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் ஹிட் அடித்த பொன்னியின் செல்வன் படத்திலும் சரத்குமார் நடித்திருந்தார். அதோடு, போலீஸ் அதிகாரியாக அவர் நடித்திருந்த போர்த்தொழில் படமும் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

  • குலதெய்வ கோயில் கும்பாபிஷேகம்!.. ராதிகா சரத்குமார் எந்த ஊரில் இருக்காங்க பாருங்க!..

    சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் தங்கள் குலதெய்வ கோயிலின் கும்பாபிஷேகத்திற்காக ஊருக்குச் சென்றுள்ளனர். அங்கே அவர்கள் எடுத்துக் கொண்ட  புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் தற்போது பதிவிட்டுள்ளார்.

    61 வயதாகும் நடிகை ராதிகா சரத்குமார் பிரதாப் போத்தன், ரிச்சர்ட் ஹார்டி உள்ளிட்டோரை திருமணம் செய்து விவாகரத்து செய்த நிலையில், கடைசியாக சரத்குமாரை கடந்த 2001ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.

    இதையும் படிங்க: யாரும் கவலைப்படாதீங்க!.. விஜய் இடத்தை நான் நிரப்புறேன்.. வின் ஸ்டார் விஜய் சொன்னதை கேட்டீங்களா?

    சரத்குமாருக்கும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில், ராதிகா சரத்குமாரை திருமணம் செய்துக் கொண்டார். பல ஆண்டுகளாக கணவன் மனைவியாக வாழ்ந்து வரும் இருவருமே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டுள்ளனர்.

    69 வயதாகும் சரத்குமார் இந்த வயதிலும் பெரிய பழுவேட்டரையராக ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடித்து மாஸ் காட்டுகிறார். கடந்த ஆண்டு வெளியான போர் தொழில், வாரிசு படங்கள் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தன.

    இதையும் படிங்க: தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்!.. பாலா இயக்கத்தில் இருந்து தெறித்து ஓடிய சூர்யா!.. இதுதான் காரணம்?

    இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிராவயல் எனும் கிராமத்தில் உள்ள குலதெய்வக் கோயிலின் கும்பாபிஷேகத்தில் நடிகர் சரத்குமாரும் நடிகை ராதிகாவும் கலந்து கொண்டனர். அதன் புகைப்படத்தை தான் தற்போது ராதிகா பகிர்ந்துள்ளார்.

    சந்திரமுகி 2 படத்தில் குலதெய்வ கோயிலை சீர்ப்படுத்தி பூஜை நடத்தும் கதாபாத்திரத்தில் தான் ராதிகா சரத்குமார் நடித்திருப்பார். தற்போது தங்களது சொந்த குலதெய்வ கோயிலில் நடைபெறும் கும்பாபிஷேகத்தில் கணவருடன் கலந்து கொண்டிருக்கிறார்.

    சமீபத்தில் அனிமல் படம் குறித்து ராதிகா சரத்குமார் போட்ட ட்வீட் வைரலான நிலையில், பேட்டி ஒன்றில் சரத்குமார் அந்த படத்தை பலரும் பாராட்டுகின்றனர் என்றால் நம்முடைய பார்வை தப்பா கூட இருக்கலாம் என அனிமல் படத்துக்கு ஆதரவாக பேசி அங்கேயே மனைவி ராதிகாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்.

  • காதலியை ஆட்டையை போட பார்த்த சரத்குமார்!.. நாட்டாமையை கடுப்பேத்த அஜித் செஞ்ச காரியம்…

    Ajithkumar: தனிமையை மட்டுமே விரும்பும் இப்போதைய அஜித்துக்கு சற்று நேரெதிரானது அவரின் ஆரம்பகாலம். அந்த கட்டத்தில் அவரை பார்த்தவர்களுக்கு ‘இவரா இப்படி?’ என்ற சந்தேகமே வரும் அளவுக்கு சேட்டை செய்தவர் தான் அஜித். அவர் தன்னுடைய சக நடிகரான சரத்குமாரை வெறுப்பேற்றிய ஒரு சுவாரஸ்ய சம்பவம் வெளியாகி இருக்கிறது.

    அஜித் சினிமாவில் உயர்ந்து கொண்டு இருந்த போது அதே வேகத்தில் சினிமாவில் வளர்ந்தவர் நடிகை ஹீரா. இதயம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் வந்தவருக்கு தொடர் வாய்ப்புகள் குவிந்தது. நல்ல நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். அந்த நிலையில் சரத்குமாருக்கு ஹீரா மீது காதல் கசிந்தது. ஆனால் இது ஹீராவுக்கு பிடிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: நன்றி கடனுக்காக சாதாரண மனிதரின் இறுதிச்சடங்கில் உச்சி வெயிலில் கலந்து கொண்ட அஜித்!. காரணம் இதுதான்!..

    அந்த நேரத்தில் தான் தொடரும் படத்தில் அஜித்துடன் ஹீரா இணைந்து நடித்தார். இருவருக்கும் அதில் காதல் மலர்ந்தது. ஒரு கட்டத்தில் அவருக்காக அதிகம் உருகியது அஜித் தானாம். கிட்டத்தட்ட தொடர் லவ் லெட்டரை எழுதிக்கொடுத்து கொண்டே இருப்பாராம். இப்படியே இருவரும் லவ்வில் கசிந்துருகினர்.

    இந்த நேரத்தில் சரத்குமார் ஹீராவை விரும்பும் விஷயத்தினை கேள்விப்பட்ட அஜித்துக்கு ஒரு ஐடியா தோன்றியதாம். முட்டுக்காட்டில் சரத்குமாரின் ஷூட்டிங் நடந்து கொண்டு இருக்கிறது. ஹீராவை காரின் முன்சீட்டில் அமர வைத்து நேராக கூட்டிப் போய்விட்டார். அங்கே போனதும் சரத்குமாருக்கு தெரிய வேண்டும் என்பதற்காக லைட்டை போட்டு இருவரும் கொஞ்சி கொண்டனராம். இதில் கடுப்பான சரத்குமார் அப்போதே பேக்கப் என கத்திவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

    இதையும் படிங்க: உங்களை சேர்த்தது தப்புதான்..கடிந்துக்கொண்ட பிரபல நடிகர்… இனி செய்ய மாட்டேன்.. வாக்கு தந்த ரஜினிகாந்த்

    இப்படி கசிந்துருகியும் ஹீரா வீட்டினருக்கும், அஜித் வீட்டினருக்கும் மனகசப்பு ஏற்பட்டதால் இவர்கள் காதல் கைக்கூடவில்லை. அதன் பின்னரே ஷாலினியுடன் காதல் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். ஆனால் இன்னமும் ஹீரா சிங்கிளாக தான் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

  • எக்கசக்க கடன்… தப்பித்து சென்னை வந்த சரத்குமார்… எப்படி ஹீரோவானார் தெரியுமா?

    Sarathkumar: வயசானாலும் உங்க ஸ்டைல் அப்படியே இருக்கு என்ற டயலாக்குக்கு சொந்தக்காரர் நடிகர் சரத்குமார் தான். ஆனால் அவர் நடிகராக ப்ளான் செய்யாமல் தான் எண்ட்ரி கொடுத்தார். அதுவும் பெங்களூரில் இருந்து சென்னை வந்ததுக்கே ஒரு பெரிய கடன் பிரச்னை தான் காரணம் என்று தன்னுடைய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

    அவர் பேட்டியில் இருந்து, ஆல் இந்தியா ரேடியோவில் நியூஸ் வாசித்த வாசிப்பது ராமநாதன் என்னுடைய அப்பா தான். நான் டெல்லியில் தான் பிறந்து அங்கையே முதற்கட்ட பள்ளியை தொடங்கினேன். எனக்கு இந்தி, இங்கிலிஷ், கன்னடா, மலையாளம், ரஷ்யன் ஆகிய மொழிகள் தெரியும். அதுக்கு என் அப்பா தான் காரணம். அவர் நிறைய மொழிகளை கற்றுக்கொள்ள ஊக்கப்படுத்தினார்.

    இதையும் படிங்க: புஸ்ஸி ஆனந்த் ஒரு மகா முட்டாள்!. விஜய் அரசியல் வேலைக்கு ஆவாது!.. போட்டு தாக்கும் பயில்வான் ரங்கநாதன்..

    நான் ஐஏஎஸ் அகாடமியில் படித்து கொண்டு இருந்தேன். அப்போ அரசியலில் இருந்த என்னுடைய மாமா தான் இது வேண்டாம். எதுவும் பிசினஸ் செய் என்றார். அதையடுத்தே நான் சின்னதாக ரிப்போட்டர் வேலைக்கு வந்தேன். அதுவும் பெரிய ரீச் இருக்காது. ட்ரன்க் கால் கொடுத்து அந்த தகவலை சொன்னதுக்கே 30 நிமிடம் வரை ஆகும். பேப்பர் போடும் வேலையை கூட செய்து இருக்கேன்.

    அந்த சமயங்களில், கிரிமினல் ரிப்போட் கொடுக்கும் வேலைகளை செய்தேன். 6 வருடம் வேலை செய்து வந்தேன். அதை தொடர்ந்து என்னை வளர்த்துக்கவே டெலிவிஷன் ஸ்டோர் வைத்தேன். டெலிவிஷன் பிசினஸ் செய்யும் போது பெரிய அளவில் 150 டிவிகளை வாங்கி குவித்தேன். அதில் நமக்கு கொஞ்சம் டிஸ்கவுண்ட் தருவார்கள். அதை நம்பி வாங்கினேன்.

    இதையும் படிங்க: பணத்தாசை பிடிச்ச இளையராஜா! மகள் கடைசி நாள்களை எண்ணிக் கொண்டிருந்த நிலையிலும் ஆசை விடலயே

    கண்ணதாசன் என்பவர் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். பின்னர் இதை தொடர்ந்து கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு தெலுங்கில் நடிகராக அறிமுகமானார். அதற்கடுத்த வருடமே சின்ன பூவே மெல்ல பேசு என்ற தமிழ் படத்தில் முக்கிய வேடத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • விஜயகாந்த் நடிக்க மறுத்த 15 திரைப்படங்கள்!.. அவருக்கு பதில் நடித்த நடிகர்கள் யார் தெரியுமா?..

    Vijayakanth: 80,90களில் பல திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் விஜயகாந்த். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் சமீபத்தில் மரணமடைந்தார். விஜயகாந்த் நடித்த படங்கள் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவர் நடிக்க மறுத்த திரைப்படங்கள் பற்றித்தான் இங்கே பார்க்கபோகிறோம்.

    ஏவிஎம் தயாரிப்பில் ரஜினி ஹீரோவாக நடித்த முரட்டுக்காளை படத்தில் வில்லன் வேடத்தில் விஜயகாந்த் நடிப்பதாக இருந்தது. இப்படத்தில் நடிப்பதற்காக விஜயகாந்த் அட்வான்ஸும் வாங்கிவிட்டார். ஆனால், இப்ராஹிம் ராவுத்தர் அறிவுரையின்படி அந்த பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு அதிலிருந்து விலகினார். அதன்பின் அவருக்கு பதில் ஜெய்சங்கர் அந்த வேடத்தில் நடித்தார்.

    இதையும் படிங்க: விஷாலையே ஓவர்டேக் செய்த சிம்பு!.. இன்னும் அஜித் மட்டும் தான் பாக்கி.. விஜயகாந்த் வீட்டில் எஸ்டிஆர்!

    ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் உருவான படம்தான் அரசியல். இதில் விஜயகாந்த் நடிப்பதாக இருந்தது. சில காரணங்களால் அவர் நடிக்கவில்லை. எனவே, அவருக்கு பதில் மம்முட்டி இப்படத்தில் நடித்தார். அதேபோல், மம்முட்டி நடித்த மறுமலர்ச்சி படத்திலும் விஜயகாந்த் நடிப்பதக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அவர் நடிக்கவில்லை.

    ஷங்கர் இயக்கிய முதல்வன் பட கதையும் விஜயகாந்துக்கு சொல்லப்பட்டது. ஆனால், அவர் நடிக்கவில்லை. அதன்பின் அர்ஜூன் அந்த கதையில் நடித்தார். மக்களாட்சி என்கிற படத்திலும் விஜயகாந்த் நடிப்பதாக இருந்தது. ஆனால், மம்முட்டி நடித்தார். பார்த்திபன் முதன் முதலில் இயக்கி நடித்த புதிய பாதை படத்தின் கதையை அவர் சொன்னது விஜயகாந்துக்குதான். ஆனால், அவர் நடிக்கவில்லை.

    இதையும் படிங்க: விஜயகாந்த் இறப்பதற்கு 2 மணி நேரத்துக்கு முன் நடந்தது இதுதான்!.. உண்மையை சொன்ன பிரேமலதா..

    பவித்ரன் இயக்கத்தில் சரத்குமார் நடித்த சூரியன் படத்திலும் விஜயகாந்த் நடிப்பதாக இருந்தது. ஆனால், கால்ஷீட் இல்லாததால் அவர் நடிக்கவில்லை. ஹரி இயக்கிய ஐயா படத்திலும் விஜயகாந்த் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அவர் நடிக்கவில்லை. தளபதி படத்தில் மம்முட்டி வேடத்தில் மணிரத்னம் நடிக்க வைக்க ஆசைப்பட்டது விஜயகாந்தைத்தான். ஆனால், அவர் ஒத்துக்கொள்ளவில்லை.

    அதேபோல், சத்தியராஜ் நடித்த வள்ளல், மம்முட்டி நடித்த ஆனந்தம் ஆகிய படங்களில் நடிக்கவிருந்தது விஜயகாந்துதான். மேலும், இணைந்த கைகள் படத்தில் விஜயகாந்தும், ரகுவரணும் நடிக்கவிருந்தது. ஆனால், விஜயகாந்த் தவிர்த்துவிட்டார். அதன்பின் ராம்கியும், அருண்பாண்டியனும் நடித்தனர். இதிலிருந்து விஜயகாந்த் நடிக்க மறுத்த பல படங்களில் மம்முட்டியும், சரத்குமாரும் நடித்திருப்பார்கள் என்பது தெரியவரும்.

    இதையும் படிங்க: விஜயகாந்த் நினைவிடத்தில் விஜய்க்கு வச்ச செக்! – தளபதிக்கு கேட்குற மாதிரி சொன்ன அம்பிகா