Tag: TVK

  • Kamal vs Vijay: நான் இங்க ஆட வரல! விஜயை மறைமுகமாக தாக்கிய கமல்.. தரமான அடி

    விஜயின் அரசியல் ஒரு பக்கம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்க அவரை தாக்கி பல தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. எந்தக் கூட்டணியிலும் சேர மாட்டேன் என்று விஜய் சொன்னதிலிருந்து ஒட்டுமொத்த எல்லா கட்சிகளும் விஜய்க்கு எதிராக அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் விஜயை பொறுத்தவரைக்கும் ஆரம்பத்திலிருந்து தன்னுடைய ஒரே எதிரி திமுக என்றுதான் கூறி வருகின்றார்.

    அதைப்போல மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவை எதிர்த்தும் அவருடைய விமர்சனங்களை வைத்து வருகிறார். விஜய் ஒரு நடிகராகவும் இருப்பதால் சினிமா துறையில் இருந்தும் அவருக்கு ஆதரவாகவோ எதிராகவோ யாரும் குரல் கொடுக்க முன் வருவதில்லை. ஆதரவாக குரல் கொடுத்தால் எங்க நம் படத்திற்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று ஒரு சில பேர் நினைக்கிறார்கள். இந்த நிலையில் விஜயை மறைமுகமாக தாக்கி ஒரு மேடையில் கமல் பேசி இருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

    இதே கமல்தான் ஒரு விழா மேடையில் விஜய்க்கு விருது கொடுக்கும் பொழுது சீக்கிரம் உங்களை எதிர்பார்க்கிறோம் என கூறி அந்த விருதை விஜய்க்கு வழங்கியிருப்பார். நேற்று கமல் அவருடைய மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தி இருந்தார். அப்போது கீழே இருந்த ரசிகர் ஒருவர் ஒரு கேள்வி கேட்க அதற்கு கமல் கூறிய பதில் இதோ : இல்லைங்க நான் நடிக்க வரல. அந்த ரசிகர் ஒரு சினிமா ரசிகர்.

    அதாவது சதிலீலாவதி படத்தில் கோயம்புத்தூர் பாஷையில் அற்புதமாக பேசி நடித்திருப்பார் கமல். அதை நேற்று அந்த மேடையில் பேச சொல்லி அந்த ரசிகர் கேட்க அதற்கு கமல் இல்லைங்க நான் நடிக்க வரல. அதை பாக்கணும் என்றால் யூடியூபில் அந்த படத்தை போட்டு பாருங்க. இங்கே உங்கள் எதிர்காலத்தை மட்டும் பற்றி பேச வந்திருக்கிறேன். இங்கே என்னை நடிக்க சொல்லாதீங்க. டான்ஸ் ஆட சொல்லாதீங்க.

    இங்கே பாட சொல்லாதீங்க. அப்படி நான் பாடணும் ஆடணும் என்றால் டிக்கெட் வாங்கிக்கோங்க. நான் வந்தது அந்த வேலையெல்லாம் நிறுத்தி வைத்துவிட்டு வந்திருக்கிறேன். இன்னைக்கு ஏதோ ஒரு கோடியில் பிடிபட்டது என்று சொல்கிறார்கள். நான் ஒரு நாள் வேலை செய்தால் அந்த கோடியை நான் சம்பளமாக பெற முடியும். யார்கிட்ட கதை விடுகிறீர்கள் என மிக ஆக்ரோஷமாக அந்த மேடையில் பேசியுள்ளார். இதை நெட்டிசன்கள் விஜயை மறைமுகமாக தாக்கி கமல் பேசியதாக இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

  • அஜித் விஜய் எவனும் லாயக்கில்ல!.. கோபத்தில் பொங்கிய காமெடி நடிகர்!….

    சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது 1960 களிலிருந்தே தொடர்கிறது. அறிஞர் அண்ணா தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தில் அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்றவர்கள் இணைந்தார்கள்.

    இன்னும் சொல்லப்போனால் திமுகவில் எம்எல்ஏ ஆன முதல் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்தான். எம்ஜிஆர் கூட பல வருடங்கள் திமுகவில் இருந்துவிட்டுதான் அதிமுகவை தொடங்கினார். ஆனால் எம்ஜிஆருக்கு பின் அரசியல் கட்சி துவங்கியவர்கள் பெரிதாக அரசியலில் சாதிக்கவில்லை. சிவாஜி கணேசன், பாக்கியராஜ், டி.ராஜேந்தர், விஜயகாந்த், கமல்ஹாசன், சரத்குமார் என ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கிறது.

    இந்த லிஸ்டில் விஜயகாந்த் மட்டுமே அரசியலில் ஓரளவுக்கு சாதித்து எதிர்க்கட்சித் தலைவராக மாறினார். மற்றவர்களால் ஒரு எம்.எல்.ஏ சீட்டை கூட வாங்க முடியவில்லை. சினிமா நடிகர்களுக்கும், மக்களுக்கான இடையே பெரிய இடைவெளி இருக்கும். அவர்கள் மக்களோடு மக்களாக இறங்கி பழக மாட்டார்கள். அவர்களின் கால்கள் எப்போது ஆகாயத்தில் இருக்கும். நடிகர் விஜய் கூட தற்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். ஆனால் அவர் வேனில் இருந்து பிரச்சாரம் செய்து விட்டு சென்று விடுகிறாரே தவிர களத்தில் நிற்கவில்லை.

    நடிகர்கள் அப்படித்தான் சொகுசாக வளர்வார்கள். அரசியலுக்கு வர வேண்டுமெனில் மக்கள் பிரச்சினைகளை பேசி களத்தில் அவர்களுக்காக நிற்க வேண்டும். பல வருடங்கள் சமூக சேவை செய்ய வேண்டும். அப்படி செய்தால் மக்களே அவர்களை தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் இப்போதுள்ள நடிகர்கள் வீட்டிலிருந்து நேராக கோட்டைக்கு போய்விட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அரசியலில் படிப்படியாக வளராமல் ஒரே தேர்தலில் முதலமைச்சராகி விட வேண்டும் எனவும் ஆசைப்படுகிறார்கள்.

    இந்நிலையில், தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்த நடிகர் ஜெயமணி ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘எம்ஜிஆர்ய்க்கு அப்புறம் அரசியலில் எந்த நடிகராலும் பெருசாக வர முடியவில்லை. எம்ஜிஆர் மக்களோடு மக்களாக இருந்தார். அவருக்கு பின் கேப்டன் விஜயகாந்த் சினிமா நடிகர்களுக்கு அவ்வளவு செஞ்சார்..

    ஆனா இப்ப இருக்க விஜய் ஆகட்டும் அஜித் ஆகட்டும்.. எவனும் லாயக்கில்லை.. கேரியரை கொண்டு போய் கேரவானில் தனியா தின்னுட்டு எவன் எப்படி போனா என்னனு இருக்காங்க.. முதல்ல சினிமாவில் இருக்கவங்கள ஒழுங்கா பாத்துக்க.. அப்புறம் நீ மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வா’ என பொங்கி இருக்கிறார்.

    இதே ஜெயமணிதான் சில மாதங்களுக்கு முன் ‘ஒரு நடிகர் இருக்கிறார்.. ரொம்ப பெரிய ஹீரோ. நான் நேராவே பார்த்திருக்கேன்.. நாங்க ஷாட் முடிஞ்சு உட்கார்ந்து இருந்தோம். அப்போது அந்த நடிகரை பார்க்க ரசிகர்கள் வந்தாங்க.. உடனே பவுன்சர்களை கூப்பிட்டு அவங்களை அடிச்சி விரட்டுங்கன்னு சொன்னாரு. ஆனா அந்த ரசிகர்கள் அவர் பக்கத்தில் வந்தவுடனே ‘வாங்க போட்டோ எடுத்துக்கலாம்’னு சொன்னாரு.. அப்படியே நடிப்பாங்க.. அவர் சிஎம் ஆகவும் ஆசைப்படுறாரு’ என சொல்லியிருந்தார்.

  • விஜய் யார் கண்ட்ரோல்ல இருக்கார்னு திரிஷாகிட்ட கேளுங்க!.. முன்னாள் மேனேஜர் பேட்டி..

    நடிகர் விஜயின் வளர்ச்சிக்கு பலரும் முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்கள். குறிப்பாக அவரின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர். விஜயை சினிமாவில் அறிமுகப்படுத்தியது, அவரின் ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து அதை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி விஜயையும், அவரின் ரசிகர்களை அரசியல்படுத்தியது எஸ்.ஏ.சந்திரசேகர்தான்.

    அதேபோல் விஜயிடம் 30 வருடங்களுக்கு மேல் பணிபுரிந்தவர் அவரின் மேனேஜராக இருந்த பிடி செல்வகுமார். இவரின் தயாரிப்பில் விஜய் புலி என்கிற திரைப்படத்திலும் நடித்தார். அந்த படம் வெளிவந்தபோது வருமானத்துறை சோதானையிலும் செல்லக்குமார் சிக்கினார். அப்போது விஜய் அவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை என செய்திகள் வெளியாகின.

    சமீபத்தில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார் பிடி செல்வகுமார். மேலும் அப்போதே அவர் விஜயை பற்றி பரபரப்பான புகார்களை கூறினார். விஜய்க்காக உழைத்த பலரும் இப்போது அவரிடம் இல்லை. அவர் அப்பா எஸ்.ஏ.சந்திரசேக்ரை ஒதுக்கினார். என்னையும் ஒதுக்கினார். இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள் என்று பேசி இருந்தார். இந்நிலையில் இன்று செய்தியாளிடம் பேசிய பிடி செல்வகுமார் மீண்டும் பல புகார்களை அடுக்கினார்.

    எஸ்.ஏ.சி இல்லாமல் விஜயின் வளர்ச்சி கிடையாது. ஆனால் அவர் அதை மறந்துவிட்டார். நானும் அவருடன் தான் இருந்தேன். ரசிகர் மன்ற தலைவர் ஜெய்ஸ்ரீதரன், மாநில ரசிகர் மன்ற செயலாளர் ரவி ராஜன் என எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டனர். புலி படத்தை தயாரித்து எனக்கும் அவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட சிலர் காரணமாக இருந்தர்கள். நடிகரென்றால் கூட்டம் கூடத்தான் செய்யும். சில்க் ஸ்மிதா வந்தாலே கூட்டம் கூடியது. சினேகா, நமீதா வந்தாலும் அவர்களை பார்க்க ரசிகர்கள் வருவார்கள். அதுவெல்லாம் ஓட்டாக மாறாது.

    கிளாமருக்காக சிலர் அவருக்கு ஓட்டு போடலாம் ஆனால் எல்லோரும் அப்படி செய்ய மாட்டார்கள் என்று பேசினார். அப்போது ‘விஜய் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்? என ஒரு செய்தியாளர் கேட்டார். அதற்கு பதில் சொன்ன செல்வகுமார் ‘அது எனக்கு எப்படி தெரியும்?.. திரிஷாவிடம் கேளுங்க அவருக்கு வேணா தெரியும்’ என்று பதில் சொன்னார்.

  • விஜய் பவர் எனக்கு தேவையில்ல!.. அது என்னோட பணம்!.. தெறிக்கவிட்ட சிவ ராஜ்குமார்

    கன்னட சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் சிவராஜ் குமா. இவர் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மூத்த மகன். பல வருடங்களாகவே சினிமாவில் நடித்து வருகிறார். ஆந்திராவில் பிரபல நடிகர்கள் சிரஞ்சீவி, பவன் கல்யாண், பாலகிருஷ்ணா உள்ளிட்ட பலரும் அரசியலுக்கு வந்தார்கள். ஆனால் கர்நாடகாவில் உச்ச நடிகராக இருக்கும் சிவராஜ்குமார், சுதீப் போன்றவகள் அரசியல் பக்கமே செல்லவில்லை.

    சிவ ராஜ்குமார் அரசியல் பக்காம் போகாமல் இருப்பதற்கு காரணம் அவங்க அப்பா ராஜ்குமார் வாங்கிய சத்தியம் என சொல்லப்படுகிறது. நம் குடும்பத்திலிருந்து யாரும் அரசியலுக்கு போகக்கூடாது என அவர் சொல்லியதை இப்போதும் அவரது மகன்கள் பின்பற்றி வருகிறார்கள். சிவ ராஜ்குமார் கடந்த சில வருடங்களாகவே தமிழ் படங்களிலும் நடிக்க துவங்கி விட்டார். ரஜினியின் ஜெயிலர் படத்தில் ஒரு கேமியோ செய்திருந்தார். தற்போது உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்திலும் அவர் நடித்திருக்கிறார்.

    இந்நிலையில், சமீபத்தில் சென்னை வந்த அவரிடம் ‘விஜய் உள்ளிட்ட பல நடிகர்கள் அரசியலுக்கு வந்திருக்கும் நிலையில் நீங்கள் ஏன் வரவில்லை?’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் சொன்ன சிவ ராஜ்குமார் ‘முதலில் எனக்கு அரசியல் தெரியாது. ஆனால் நான் என்ன உதவி செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டுதான் இருக்கிறேன்.. அந்த உதவி செய்வதற்கு எனக்கு பவர் தேவை இல்லை.. நான் யாருக்கு வேண்டுமானாலும் உதவி செய்வேன்.. பாகுபாடு பார்க்காமல் எல்லா மக்களுக்கும் என்னால் உதவி செய்ய முடியும்..

    ஆனால் அரசியலுக்கு போயிட்டா அப்படி பண்ண முடியாது.. குறிப்பிட்ட சிலருக்கு மட்டும்தான் செய்ய முடியும்.. ஆனால் நான் யாருக்கு வேணாலும் பண்ணுவேன்.. அந்த சுதந்திரம் எனக்கு இருக்கு.. யாருக்கும் பயப்பட தேவையில்லை.. யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை.. ஏன்னா அது என்னோட பணம்’ என தெறிக்கவிட்டிருக்கிறார்.

  • Vijay: என் ஆதரவு விஜய்க்குதான்!.. தவெகவில் இணையும் பிரபல நடிகர்!..

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி கடந்த சில வருடங்களாகவே அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே அவரின் நோக்கம். கரூர் சம்பவம் அவரை ஒரு மாத காலம் முடக்கிப்போட்ட நிலையில் தற்போது அதிலிருந்து விஜய் மீண்டுவிட்டார். வருகிற 9ம் தேதி புதுச்சேரியில் பொதுக்கூட்டமும் நடைபெறவிருக்கிறது. ஒருபக்கம், 2026 தேர்தலை சந்திக்க கூட்டணி வியூகத்தையும் தவெக வகுத்து வருகிறது.

    எங்கள் கட்சியில் இணைந்தால் ஆட்சி, அதிகாரம் இரண்டிலும் பங்கு கொடுப்போம் என விஜய் ஏற்கனவே அறிவித்திருக்கிறார். ஒரு பக்கம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சில நாட்களுக்கு முன்பு தவெகவில் தன்னை இணைத்துக்கொண்டார். கட்சியில் அவருக்கு முக்கிய பதவியும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

    இந்நிலையில் பிரபல சீரியல் நடிகர் ஜீவா ரவி இன்று கோபிசெட்டிபாளையம் சென்று செங்கோட்டையனை சந்தித்து அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். அதன்பின் செய்தியாளரிடம் பேசிய ஜீவா ரவி ‘செங்கோட்டையன் சார் எங்க குடும்பத்திற்கு காட் ஃபாதர் போல.. அவர் இல்லை என்றால் நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன்.

    அவர் எந்த வழியில் பயணிக்கிறாரோ.. அதே வழியில் நானும் பயணிப்பேன்.. விஜய் சார் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.. எங்கள் துறையை சேர்ந்த ஒருவர் நல்ல எண்ணத்துடன் அரசியலுக்கு வந்திருக்கிறார்.. அவருக்கு துணை நிற்போம்.. நானும் விரைவில் தவெகவில் இணைவேன்.. அது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.. அதுபற்றி கண்டிப்பாக உங்களுக்கு தெரிவிப்பேன்’ என்று கூறியிருக்கிறார்.

  • விஜய்யை நான் அப்படி செய்திருக்க கூடாது.. ஃபீல் பண்ணி பேசி பாரதிராஜா..

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். குழந்தைகள் முதல் பெரியோர் வரை இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இன்றைய தமிழ் சினிமாவில் இவருடைய மார்க்கெட் பிசினஸ் ரஜினி, கமலை விட பல மடங்கு முன்னிலை பெற்று வசூலில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார் விஜய். தொடர்ந்து தனக்கான இடத்தை தக்க வைத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று யாரும் எதிர்பார்க்காத வகையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலில் களமிறங்கியுள்ளார்.

    அதுமட்டுமில்லாமல் தான் தற்போது நடித்து வரும் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஜனநாயகன்” படம் தான் தனது கடைசி படம் என்று தெரிவித்துள்ளார். இதன் பிறகு இனி படங்களில் நடிக்கப் போவதில்லை எனவும் என்னுடைய முழு கவனத்தையும் இனி அரசியலில் செலுத்துப் போவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவிப்பு கொடுத்தார். அதன்படி ஜனநாயகன் படத்தை நடித்து முடித்துவிட்டு எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுக்கான தேர்தலுக்காக களப்பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    கட்சி ஆரம்பித்ததும் தனது முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடத்தினார். அதில் கொள்கை, கோட்பாடு, யார் யார் எங்களுடைய கட்சி தலைவர்கள் என பலவற்றை அறிவித்தார். ஒரு பக்கம் விஜய் மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்தாலும் மறுபக்கம் அதற்கு பல விமர்சனங்கள் வந்ததுண்டு. இந்நிலையில் தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் விஜயை பற்றி இயக்குனர் இமயம் பாரதிராஜா சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். எண்பதுகளின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் போக்கை மாற்றி அமைத்தவர் பாரதிராஜா. சீர்திருத்த சினிமாவாக மக்களின் வாழ்வியலோடு படங்களை எடுத்து அதன் மூலம் வெற்றி அடைந்தார். பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட பல நடிகர்கள் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக ஜொலிக்கிறார்கள்.

    எந்த ஒரு நடிகர், நடிகைக்கும் பாரதிராஜாவின் இயக்கத்தில் ஒரு முறையாவது நடித்து விட வேண்டும் என்பது அவர்களின் கனவாக இருக்கும். இந்நிலையில் விஜய் பற்றிய சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார் பாரதிராஜா அதில் ”ஆரம்பத்தில் நான் விஜயை ரிஜெக்ட் பண்ணிட்டேன். இன்னைக்கு அவர்தான் நாம்பர் 1 ஹீரோ. இன்றைக்கு சினிமாவில் ஜெயிச்சுட்டாரு, நாளைக்கு கண்டிப்பா அரசியலிலும் ஜெயிப்பார்”. என பாரதிராஜா சமீபத்திய பேட்டியில் விஜய்யை புகழ்ந்து பேசியுள்ளார்.

  • Vijay: அப்ப மட்டும் இனிச்சிது… இப்போ என்ன? விஜயின் அரசியல் சிக்கல்தான்.. பொளக்கும் பிரபலம்

    Vijay: நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் கட்சியை இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவித்தார். அதைத்தொடர்ந்து அவருடைய ஒவ்வொரு செயலும் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மீண்டும் மிகப்பெரிய சிக்கல் ஒன்றில் சிக்கிருக்கிறார்.

    தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம்

    பெரும்பாலும் பிரபலங்கள் அரசியலுக்கு வரும்போது அவர்களுடைய கேரியர் உச்சத்திலிருந்து பாதாளத்தில் சென்று இருக்கும். ஆனால் எம்ஜிஆர் பின்னர் தன்னுடைய கேரியரில் முதலிடத்தில் இருக்கும் தளபதி விஜய் அதை துறந்து அரசியலுக்குள் உள்ளே வர இருக்கிறார்.

    இதையும் படிங்க: Gossip: விரல் வித்தை நடிகரின் மாஸ் கம்பேக்… நம்பர் நடிகையின் வீழ்ச்சி!… இப்படி ஆகிப்போச்சே!

    இதற்கான முன்னேற்பாடாக முதலில் தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார். அதைத்தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையில் பல விஷயங்களை குறிப்பிட்டு தன்னுடைய சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தொடர்ந்து அவரின் மாநில மாநாடு சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார்.

    Vijay
    Vijay

    ஃபெங்கல் புயல் நிவாரணம்

    சமீபத்தில் தமிழ்நாட்டை உலுக்கிய ஃபெங்கல் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை தன்னுடைய இருப்பிடத்திற்கு அழைத்து விஜய் வழங்கியது தற்போது சர்ச்சையாக மாறியிருக்கிறது. பலரும் அவருக்கு எதிராகவும் அவருடைய ரசிகர்கள் அவருக்கு ஆதரவாகவும் தொடர்ச்சியாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

    நேரடியாக இருப்பிடத்திற்கு செல்லாமல் அவர்களை பல கிலோமீட்டர் தாண்டி அழைத்து வந்து கொடுப்பது எப்படி நிவாரணமாகும். அரசியலுக்கு வர நினைக்கும் விஜய் இதை செய்யலாமா என்ற கேள்விகளும் எழுந்து இருக்கிறது. ஆட்சியில் இருக்கும் கட்சியினர் செய்யாமல் தன்னுடைய சொந்த பணத்திலிருந்து செய்யும் விஜய் கேள்வி கேட்பது எப்படி நியாயமாகும் என ரசிகர்களும் கொந்தளித்து வருகின்றனர்.

    பிரபல திரை விமர்சகர் பிஸ்மியின் கருத்து

    இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், கூட்டம் எப்பயுமே விஜய்க்கு புதிது கிடையாது. இதற்கு முன்னர் தூத்துக்குடி துப்பாக்கி சூடு, ஜல்லிக்கட்டு போராட்டம், அனிதாவின் மரணம் என பல முக்கிய விஷயங்களுக்கு முதல் ஆளாக போய் நின்றவர். அப்போதெல்லாம் அரசியல் ஆசை இருந்ததால் தான் இதை செய்தார்.

    இப்போது மட்டும் இது கசப்பது ஏன்? அரசியலுக்குள் நுழைந்த சமயத்தில் விஜய் இப்படி நடந்து கொள்வது அவருக்கு மிகப்பெரிய சிக்கலை உருவாக்கும். இதற்கு விஜய் இரண்டு விஷயங்களை தான் செய்திருக்க வேண்டும். தைரியம் இருந்தால் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி இருக்க வேண்டும்.

    Vijay
    Vijay

    இல்லை தன்னுடைய கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பி இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ரூமில் அமர்ந்து கொண்டு நிவாரணம் வழங்குவது சரியாக இருக்காது. நாளை ஓட்டு கேட்க வரும் போது இதே வழியை அவரால் செய்ய முடியுமா?

    இதையும் படிங்க: படத்துல 3 ஹீரோயின்களா?.. புஷ்பா 2 எப்படி இருக்கு?.. பயில்வான் என்ன இப்படி சொல்லிட்டாரு!..

    தைரியமாக சைக்கிள் ஓட்டு போட சென்ற விஜய் இதை கூறலாமா? கூட்டத்தை தவிர்க்க நினைக்கும் உங்களுக்கு எதற்கு அரசியல். சினிமாவில் நடித்துவிட்டு கேரவனிற்குள் உட்கார்ந்து கொள்ளலாமே. அரசியல் களத்துக்குள் இறங்கினால் தான் உங்களுடைய எதிர்காலத்திற்கு நல்லது. அதை விடுத்தால் இப்பவும் நேரம் ஆகவில்லை பின்வாங்கிக் கொண்டு தளபதி 70, 71 என நடிக்க செல்லுங்கள்.

    இந்த நேரத்தில் விஜய் இதைப் போன்ற விமர்சனங்களை எதிர்கொள்வது நல்லதாக தான் நான் பார்க்கிறேன். அப்பொழுது தான் அவர் இதை எல்லாம் கணித்து தன்னை எப்படி மாற்றிக் கொள்ளலாம் என முடிவெடுப்பார். நீங்கள் மக்களுக்கு நல்ல விஷயங்களை விதைக்காமல் போனால் நாளை உங்களுடைய தேர்தல் சமயத்தில் அது பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். 

  • விஜய் கட்சி இதைத் தான் சொல்லுதா? காலில் விழும் கலாச்சாரம் இங்கும் விடலையே! விளாசிய பிரபலம்

    விஜய் புதிதாக ஆரம்பித்துள்ள கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம். மாநாட்டுக்கான வேலைகள் ஜரூராக நடந்து வருகிறது. அக்டோபர் 27ம் தேதி தீபாவளியை நெருங்கும் சமயம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள ‘வி’ சாலையில் நடக்கிறது.

    விஜய் மற்ற கட்சியை மாதிரி இதை நினைச்சிடாதீங்க. இது ஏதோ பேருக்கு ஆரம்பிச்சது இல்ல. மற்றவங்களுக்கு அரசியலை சொல்லித் தரும் என்று எல்லாம் பீடிகை போட்டுள்ளார். மாநாடு வரட்டும் பார்ப்போமே என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

    அந்த வகையில் பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமியும் ஒரு கருத்தை முன்வைத்துள்ளார். அதில் இப்படி சொல்கிறார். விஜயைப் பொருத்த வரை அவர் எந்த அரசியல் மேடையையும் பார்த்தது இல்லை. பேசியது இல்லை. ஏதோ எழுதிக் கொடுத்ததை சொல்றாரு. கூடுற கூட்டத்தை வச்சி அதெல்லாம் ஓட்டா மாறிடும்னு சொல்ல முடியாது.

    விஜய் கட்சியோட பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த். இவர் எந்த வித அரசியல் அனுபவமும், பண்பாடும் இல்லாதவர். இவர் காலில் நான் கட்சியில சேருகிறேன்னு நடிகர் தாடி பாலாஜி விழுகிறார். பெரியவங்க காலில விழுந்தா தப்பில்ல. இப்படி விழுந்ததால என்ன வெங்காயம் நடந்துடப் போகுது?

    இவங்க ரெண்டு பேரும் தான் கட்சியோட முகமா அறியப்படப் போறாங்க. சிவாஜி, விகே.ராமசாமி எல்லாரும் மக்கள்கிட்ட இருந்து சம்பாதிச்ச பணத்தை ஒரு அளவுக்கு மேல இருந்தா நாம கொடுத்துடணும். இல்லன்னா அது நிக்காதுன்னு சொல்வாராம். அப்படித் தான் படம் எடுத்து எல்லா பணத்தையும் அவரு காலி பண்ணினாரு.

    என்எஸ்கே மாதிரி ஒண்ணு எல்லா பணத்தையும் மக்களிடம் நேரடியா கொடுத்துடணும். இல்லன்னா அந்தப் பணம் நிக்காது. அடுத்த தலைமுறை காலி பண்ணிடும். அப்படித் தான் விஜயும். அவர் வாங்குற 200 கோடி மக்கள் பணம் தான். அவரால் கொடுக்க முடியலன்னு கட்சி ஆரம்பிச்சிருக்காரு போல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • விஜய் அரசியலுக்கு லாய்க்கில்லாதவர்… பிரபலம் சொல்ற காரணத்தைப் பாருங்க…!

    விஜய் தற்போது மாநாட்டுக்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். முதல் கட்சி மாநாடு என்பதால் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்து வருகிறார். மாநாடுக்கு யார் யாரெல்லாம் வரணும், வரக்கூடாது, எப்படி நடக்கணும்? என்னென்ன பேசணும்னு பல விஷயங்களை எடுத்துச் சொல்கிறார். இதுகுறித்து பிரபல வலைப்பேச்சு பிஸ்மி என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.

    விஜய் மாநாட்டுக்கு தொடர்ந்து நெருக்கடிகள் வந்தவண்ணம் உள்ளன. காவல்துறை விதிக்கிற நிபந்தனைகளும் ஏற்கக்கூடியது தான். மாநாடு நெருங்கும்போது புதுசு புதுசா நிபந்தனைகளும் தொடர்ந்துகிட்டே இருக்கு. அரசு டிஸ்டர்ப் பண்றதுன்னா அதை ஏற்க முடியாது. மக்களோட நலன்கருதி தான் இப்படி நிபந்தனைகளை விதிக்கிறாங்க.

    விஜய் அரசியல்ல எப்போ இறங்குனாரோ அப்பவே இருந்தே பேச ஆரம்பிச்சிருக்கணும். ஆனா விஜய் மாநாடுக்கு அப்புறம் முழுநேர அரசியல்வாதியா களமிறங்கலாம்னு இருக்காரு. அது சரியான அணுகுமுறை இல்லை. அக்டோபர் 27க்கு அப்புறமும் அவர் டெய்லி அறிக்கை விடப்போறது இல்லை.

    தமிழ்நாட்டையேக் கலங்கடிக்கப்போறவரும் இல்லை. 10 வார்த்தையைத் தொடர்ந்து பேசுறதுக்கு தயங்கற கேரக்டர். ரொம்ப சங்கோபி. சாப்டான கேரக்டர். விஜயோட கேரக்டருக்கு அரசியல் எல்லாம் லாய்க்கே கிடையாது. அதுதான் உண்மை. அரசியலுக்கு நிறைய சூழ்ச்சிகளும், நிறைய பிராடுத்தனங்களும் பண்ணனும். அதெல்லாம் அவருக்கு வராது. ஆனா கட்சியோட கொள்கைகளை எல்லாம் அவர் சொல்லித்தான் ஆகணும். ஆனா தொண்டைக்கிழிய கத்திப் பேச மாட்டாரு. உரையை சுருக்கிப் பேசுவாரு.

    விஜய் அரசியலில் எம்எல்ஏவுக்குப் போட்டிப் போடுகிறார்னா அவருக்கிட்ட என்ன சொத்து இருக்குன்னு கேட்கலாம். தவெக மாநாட்டுக்கு செலவு செய்யப் போறது யாரு? உங்களுக்காக வேற யாரும் செலவு பண்றாங்களா? அப்படி பண்ணினா அவரோட நோக்கம் என்ன? உங்களுக்கு செலவு பண்றதை அவர் ஒரு முதலீடா நினைக்கிறாரா? அவரிடம் உங்களுக்கு உள்ள எதிர்பார்ப்பு என்னன்னு நிறைய கேள்விகளைக் கேட்கலாம்.

    என்னைப் பொருத்தவரை 2026 தேர்தலுக்குப் பிறகு விஜய் நடிக்க வருவார் என்பது தான் எனது அழுத்தமான நம்பிக்கை. கமல் ஆரம்பத்தில் கட்சியில் இறங்கும்போது என்னுடைய எஞ்சிய காலங்கள் உங்களுக்காகத் தான் என்று சொன்னார். ஆனால் அரசியல் வேலைக்கு ஆகாதுன்னு தெரிஞ்சதும் திரும்பவும் சினிமாவுக்கு வந்துவிட்டார்.

    அதே போன்ற நிலைமையில் தான் விஜயும் இருக்கிறார். விஜய் 69 தான் கடைசிபடம். அதுக்கு அப்புறம் மக்கள் பணி செய்யப் போறேன்னு சொல்றாரு. விஜய் தேர்தலில் ஜெயிக்குற வாய்ப்பு மிக மிகக் குறைவு. ஏன்னா 2 பெரிய கட்சிகள் இருக்காங்க. அவங்களோட வாக்கு வங்கி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு. அதை உடைச்சிக்கிட்டு ஆட்சிக்கு வரமுடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • என்னது விஜய் கட்சி மாநாட்டுல மாம்பழம் தரப்போறாங்களா…? வைரலாகி வரும் மாநாட்டுப் போஸ்டர்…!

    தளபதி விஜய்க்கு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியதில் இருந்தே பிரச்சனை மேல் பிரச்சனை தான். ஆரம்பத்தில் அவரது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று தான் பெயர் வைத்து இருந்தார்கள். ‘க்’ கை விட்டுட்டீங்களேன்னு பல தரப்பினரும் சொல்ல அதன்பிறகு ‘க்’ கை சேர்த்து விட்டார்கள்.

    இப்போது காரைக்குடியில் விஜய் கட்சி மாநாடு சார்பாக ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்தப் போஸ்டரில் மாபெறும் மாநில மாநாடு என்று போடப்பட்டுள்ளது. இது எத்தகைய தவறு என்பதை கதிரவன் என்ற ஆசிரியர் சுட்டிக் காட்டியுள்ளார். அதாவது ‘மா’ என்றால் விலங்கு. ‘மா’ என்றால் பெரிய. ‘மா’ என்றால் மாம்பழம் என்று 3 அர்த்தங்கள் வருகிறது.

    தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டு போஸ்டர்களில் மாபெறும் மாநில மாநாடு என்று போடப்பட்டு இருக்கிறது. ‘மா’ என்பது ஓரெழுத்து ஒரு மொழி. ‘மா’ என்றால் விலங்கு. பெரிய, மாம்பழம் என்றெல்லாம் பொருள் இருக்கிறது. ‘மா’ என்றாலே மாம்பழம் என்கிற பொருள் வருகிறது.

    போஸ்டரில், ‘மாபெறும்’ என்று வல்லின றகர ‘று’ போட்டு இருக்கிறார்கள். அப்படி என்றால் ‘மாம்பழம் பெறக்கூடிய மாநில மாநாடு’ என்கிற பொருளைக் குறிக்கும். ‘விலங்கு பெறக்கூடிய மாநில மாநாடு’ என்கிற பொருளைக் குறிக்கும். ‘மாபெரும்’ என்று இடையின ரகர ‘ரு’ போட வேண்டும் என்று அந்த ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    இதை எல்லாம் பார்க்கும்போது ‘சோதனை மேல் சோதனை போதுமடா சாமி’ என்ற பாடல் தான் நம் நினைவுக்கு வருகிறது. விஜய் ஸ்டைலில் இந்தப் பாட்டு என்றால் ‘மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்’ என்று ரசிகர்கள் பாடிக் கொண்டாடலாம்.

    மற்ற கட்சிகளுக்கு ரோல்மாடலாக இருக்கும் எங்கள் கட்சியின் மாநாடு என்றெல்லாம் விஜய் முழக்கமிட்டாரே… இதுக்குத் தானா இவ்வளவு பில்டப்பு என்பது போல் போஸ்டரில் பிழை வைரலாகி விட்டதே… என்று சொல்ல வைத்துள்ளனர் அவரது கட்சியினர்.எது எப்படியோ ஆனது ஆகட்டும். போனது போகட்டும்… விஜய் நினைத்தபடி மாநாடு வெற்றிகரமாக நடந்தால் சரிதான்..!