Tag: TVK

  • வாரிசு அரசியல்: விஜய் புலியா, பூனையா? சரமாரியாகக் கேள்வி கேட்கும் பிரபலம்…

    தளபதி விஜய் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தினார். லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்தனர். அந்த மாநாட்டில் பேசிய விஜய் திமுக தான் எதிரின்னு வெட்ட வெளிச்சம்போட்டுக் காட்டினார். திராவிட மாடல் என்ற பெயரில் பெரியார், அண்ணா புகைப்படங்களை வைத்துக் கொண்டு தமிழகத்தை சுரண்டும் குடும்ப சுயநல அரசியல் செய்பவர்கள் தான் எதிரின்னு சொன்னார். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    விஜய் கட்சி குறித்து ஸ்டாலின் மறைமுகமாகப் பேசியுள்ளார். அதாவது புதிது புதிதாக கட்சித் தொடங்குறவங்க எல்லாம் திமுக அழியணும்னு சொல்றாங்க. அவர்களுக்கு எல்லாம் நான் கேட்பது இந்த ஆட்சி செய்திருக்கிற நான்கு ஆண்டு சாதனைகளை எண்ணிப்பாருங்க. அண்ணா கூறுவது போல ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் வாழ்க வசவாளர்கள்.

    அதைத்தான் நானும் சொல்ல விரும்புகிறேன். தேவையில்லாமல் எல்லாருக்கும் நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. மக்களுக்காக பணி செய்றதுக்கே எங்களுக்கு நேரம் போதவில்லை என்றார்.

    இப்போது பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி விஜய் பேசிய பேச்சுக்குப் பதிலடி கொடுத்துள்ளார் என்னன்னு பார்க்கலாமா…

    புதுசா வந்தக் கட்சிக்காரங்க எல்லாம்னு ஸ்டாலின் ஒரு வார்த்தை விட்டுருக்காரு. உடனே இதுக்கு விஜய் பதில் சொல்ல மாட்டாராம். கட்சில உள்ள ஒருத்தர் பதில் சொல்லிருக்காரு. ரெண்டு வருஷத்துல கட்சில உள்ள குடும்ப ஆட்சியை ஒழிச்சிக் காட்டுறோம்னு சொல்றாங்க.

    நான் கேட்குறேன். இவர் ஆரம்பத்துல சினிமாவுக்கு எப்படி வந்தாரு? அவங்க அப்பா தானே இவரைத் தாங்கிப் பிடிச்சாரு. அப்படின்னா இவரு வாரிசு இல்லையா? கட்சி ஆரம்பிச்சி 75 வருஷம் ஆச்சு. அவங்க குடும்ப அரசியல் நடத்துறது பெரிய விஷயமல்ல.

    ஆனா கட்சி ஆரம்பிச்சதும் மாநாட்டுல அப்பா, அம்மாகிட்ட போய் ஆசிர்வாதம் வாங்குறாரு. இது வாரிசு இல்லையா? ஒரு இயக்குனர் பையன் தானே. அப்புறம் ஏன் நடிக்க வர்றீங்க? வேற வேலைக்குப் போயிருக்கலாமே. 10 வருஷம் உங்க அப்பா தாங்கித் தாங்கிப் பிடிச்சாரு.

    அப்புறம் பல இயக்குனர்கள் வந்து தூக்கிவிட்டாங்க. இவரு மட்டும் வாரிசு பண்ணலாம். அவங்க பையன் இன்னும் மீசையே முளைக்கல. இயக்கப் போறேன்னுட்டு வர்றாரு. வாரிசுக்குக் கொஞ்சம் பணம் சேர்ந்ததும் கட்சி ஆரம்பிச்சிட்டேன்னு சொல்லலாம். இதுக்குப் பேரு வாரிசு இல்லையான்னு விஜய் கட்சியைச் சேர்ந்தவங்க யாராவது பதில் சொல்லுங்க.

    குடும்ப அரசியல் இல்லையான்னு கம்ப்யூனிஸ்ட் கட்சிக்காரங்க கேட்கலாம். அண்ணன் திருமாவளவன் பேசலாம். உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? விஜய் எந்த பேசிக்கும் இல்லாம எம்ஜிஆர் மாதிரி நானும் பண்றேன்னு சொல்றாரு. புலியைப் பார்த்து சூடு போட்டதாம் பூனை. ஆனா புலியா, பூனையான்னு முடிவு பண்ணாம இறங்கிட்டாரு. வாரிசு அரசியல் பத்தி பேச என்ன தகுதி இருக்கு? என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஆலங்குடி வெள்ளைச்சாமி.

  • தவெகவின் ‘ஒரிஜினல்’ சதுரங்க வேட்டை… வீடியோ உள்ளே!

    தமிழக வெற்றிக் கழகம் கட்சியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருப்பதால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

    கடந்த சில வருடங்களாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஜயின் கட்சி தொடக்கம் இந்தாண்டு நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து தன்னுடைய கொடி மற்றும் பாடல் ஆகியவற்றை விஜய் ஆகஸ்ட் மாதம் அரங்கேற்றம் செய்தார்.

    வருகின்ற 23-ம் தேதி கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது. இதற்காக தற்போது விஜய் கட்சியினர் அனுமதி கேட்டு கடிதம் அளித்துள்ளனர்.

     

    என்றாலும் மாநாட்டுக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. இதற்கிடையில் விஜய் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கி இருக்கிறது. கோட் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் அங்கீகாரம் கிடைத்து இருப்பதால் விஜய் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

    இந்தநிலையில் விஜய் படத்துடன் மாணவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கி கட்சியினர் வசூல் வேட்டை நடத்தி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

    கோட் படத்தின் ரிலீஸ்க்கு முன்பு ரசிகர்கள் மிகுந்த பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என விஜய் தன்னுடைய கட்சியினருக்கு ஆலோசனை வழங்கி இருந்தார்.

    வினோத் இயக்கத்தில் நடிக்கும் அடுத்த படம் தான் விஜயின் கடைசி படமாக இருக்கும் என தெரிகிறது. இந்த விஷயத்தில் உறுதியாக இருக்கும் விஜய் இதேபோல கட்சியினர் வசூல் வேட்டை நடத்துவதையும், கட்சிக்கு கெட்ட பெயர் எற்படுத்துவதையும் தடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

    https://x.com/siva_geth5/status/1831243292744532064

  • கொடிதான் பிரச்னைனு பாத்தா… இப்போ கட்சி பாடல் கூட இந்த பாட்டின் காப்பிதானா?

    TVK: விஜய் தன்னுடைய கட்சி கொடி மற்றும் பாடலை அறிமுகம் செய்து வைத்தார். இதில் ஏற்கனவே கட்சி கொடி மீது பிரச்னை இருக்கும் நிலையில், தற்போது கட்சி பாடல் குறித்து புது சர்ச்சை கிளம்பி இருக்கிறது.

    நடிகர் விஜய் நடிப்பில் இருந்து விலகி அரசியல் களம் இறக்க இருக்கிறார். இதற்காக தன்னுடைய கட்சியை இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே அறிவித்தார். தமிழக வெற்றி கழகம் என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பின் கட்சி குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.

    இதையும் படிங்க: இயக்குனராவதற்கு முன் மாரி செல்வராஜ் என்னென்ன வேலையெல்லாம் செஞ்சிருக்கார் பாருங்க!..

    இந்நிலையில் தன்னுடைய தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை முடித்துக் கொண்ட நடிகர் விஜய், கட்சியில் தன் கவனத்தை திருப்தி இருக்கிறார். அந்த வகையில் கட்சியின் பெயர் மற்றும் கட்சிக்கொடி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    tvk

    கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி பனையூர் தலைமை நிர்வாக அலுவலகத்தில் நடத்தப்பட்டது. முதலில்  தவெக கட்சி கொடி பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. ஃபெவிகால் நிறுவனத்தின் லோகோ என்றும், தமிழகத்தின் இன்னொரு கட்சியின் அடையாளம் எனும் பல விமர்சனங்கள் குவிந்து வருகிறது.

    இதையும் படிங்க: சூப்பர் ஹிட் படத்தில் ராமராஜன் நடிக்காமல் போனதற்கான காரணம்!.. எம்.ஜி.ஆருக்கு அப்புறம் இவர்தான்!..

    ஏற்கனவே கட்சி விழாவில் தன்னுடைய தாயை விஜய் அவமதித்தார் என சில வீடியோக்கள் வெளியானது. ஆனால் தற்போது விஜய் மற்றும்  சோபா இருவரும் இணைந்து இருக்கும் காட்சிகளை அவர் அப்படி நடந்துக்கொள்ளவில்லை எனவும் விஜய் ரசிகர்கள் சில வீடியோக்களை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

  • அம்மாவை கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்திய தளபதி…வெளியான பரபரப்பு வீடியோ!..

    நடிகர் விஜயின் கட்சி கொடி அறிமுக விழா இன்று நடந்த முடிந்துள்ளது. விழா முடிந்திருக்கும் நிலையில் தாய் சோபாவிடம் அவர் நடந்து கொண்ட விதம் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    பிரபல  இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் பாடகி ஷோபா இருவரின் ஒரே மகனாக சினிமா துறைக்குள் கால் பதித்தவர் நடிகர் விஜய். முதலில் பெரிய தடுமாற்றங்கள் இருந்தாலும் தொடர்ச்சியாக தன் மகனுக்கு படங்களை இயக்கி வந்தார் சந்திரசேகர். பின்னர் அவருக்காக பல இடங்களில் சென்று வாய்ப்புகளையும் தேடி தந்தவர்.

    இதையும் படிங்க: இத விட ஒரு கிஃப்ட் எதுவும் இல்ல! தாய் ஷோபாவிடம் இருந்து விஜய்க்கு பறந்த செய்தி

    மெதுவாக தொடங்கிய தளபதியின் பயணம் இன்று கோலிவுட்டின் உச்சம் நட்சத்திரமாக அமர வைத்துள்ளது. தமிழில் 200 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முன்னணி இடத்தில் இருக்கும் விஜய் தன்னுடைய நடிப்பை விட்டு அரசியல் பயணத்திற்குள் அடியெடுத்து வைக்கிறார்.

     இந்த பயணத்திற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது அவர் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தான். ஆனாலும் இருவருக்கும் துப்பாக்கி படத்தில் இருந்து மனகசப்பு இருந்துவந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு உடல்நல பிரச்னை ஏற்பட்டதை தொடர்ந்து தாய் மற்றும் தந்தையை விஜய் தொடர்ந்து சந்தித்து வந்தார். அதன் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.

    tvk

    இந்நிலையில் விஜயின் கட்சிக்கொடி மற்றும் பாடல் அறிமுக விழா இன்று சென்னையில் அவருடைய தலைமை நிர்வாக அலுவலகத்தில் நடந்தது. அதற்கு தந்தை சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபா இருவரும் நேரில் சென்று கலந்து கொண்டனர். இதில் அவர்களுக்கு இரண்டாவது இருக்கை கொடுக்கப்பட்டிருந்தது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியது.

    இதையும் படிங்க: முத்து-மீனா பிரச்னை முடிஞ்சிது… அரசுவேலைக்கு தயாராகும் செந்தில்.. எழில் பிறந்தநாளுக்கு வருவாரா?

    சில நிமிடங்களில் விழா முடிந்து சோபா விஜய் அழைக்கும் போது பார்க்காமல் அவர் திரும்பிக் கொண்டு சென்றதாக வீடியோ காட்டபட்டது. ஆனால் சில நொடிகளில் அந்த வீடியோ மாற்றப்பட்டு இன்னொரு கோணத்திற்கு கேமரா திருப்பட்டதையும் ரசிகர்கள் ஸ்கிரீன்ஷாட்களாக எடுத்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    கட்சியின் முதல் அதிகாரப்பூர்வ விழாவிலேயே இப்படி ஒரு பிரச்சினையுடன் தொடங்கி இருக்கும் நிலையில், விஜய் தன்னுடைய குடும்பத்தை மதிப்பதே இல்லை எனவும் ரசிகர்களிடம் விமர்சனங்கள் தொடர்ச்சியாக இருந்து வருகிறது.

     

  • ஹே.. அண்ணன் வரார் வழிவிடு… தவெக கழக தலைவர் வெளியிட்டதை கவனிச்சீங்களா?

    தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கி அரசியலில் களமிறங்க இருக்கும் நடிகர் விஜய் தன்னுடைய கட்சியின் சார்பாக ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    தமிழ் சினிமாவில் 200 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் முதல் நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். ஒவ்வொரு திரைப்படத்தின் வருமானமும் 600 கோடியை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.  கோட் திரைப்படத்தின் வசூல் ஆயிரம் கோடியை கூட தொடும் என பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    இதையும் படிங்க: அந்த படம் பிரசாந்துக்கு சொன்னது… மொக்க காரணத்தால் மிஸ்ஸான அஜித்தின் சூப்பர்ஹிட் திரைப்படம்..

    பொதுவாக சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் பல நடிகர்கள் தங்கள் மார்க்கெட் மொத்தமாக முடிந்த பின்னரே உள்ளே வருவார்கள். ஆனால் எம்ஜிஆர் பின்னர் கோலிவுட்டின் உச்சத்தில் இருக்கும் விஜய் நடிப்பில் இருந்து மொத்தமாக விலகி அரசியலுக்குள் வர இருக்கிறார்.

    இது பலருக்கு ஆச்சரியமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. தன்னுடைய அரசியல் கட்சியை தமிழக வெற்றிக்கழகம் என அறிவித்தார். அதன் பின்னர் முக்கிய நிகழ்வுகளுக்காக அறிக்கையை தலைவராக வெளியிட்டார். கட்சிக்கான பிரத்யேக ஆப்பும் வெளியிடப்பட்டது.

    TVK

    இருந்தும் தான் ஒப்புக்கொண்ட திரைப்படங்களை முடித்துவிட்டு தான் வருவேன் என அவர் கூறிக்கொண்டது போல கோட் திரைப்படத்தில் தன்னுடைய முழு கவனத்தையும் பதித்திருந்தார். தற்போது அப்படத்தின் வேலைகள் முடிந்துவிட்ட நிலையில் கட்சிப் பணிகளில் விஜய் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் முதல் நிகழ்வான கொடி அறிமுகம் குறித்த அறிக்கை வெளியாகி இருக்கிறது.

    அந்த அறிக்கையில், நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள். தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு, கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன்.

    இதையும் படிங்க :அவார்டு படம் எடுக்கணும்னு இப்படியா எடுப்பீங்க… கொட்டுக்காளியா… கொட்டும் காளியா?

    நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்வு நாளை 22.08.2024 காலை 9.15 மணியளவில் தலைமை நிலையச் செயலகம், பனையூர், சென்னை 600119ல் நடைபெறுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த மாநாடு குறித்த முக்கிய அறிவிப்பும் நாளை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • விஜய் ரசிகர்களுக்கு இன்னும் 2 நாளில் அடுத்த சேதி காத்திருக்கு… ஆனால் ஃபீல் பண்ணுவீங்க!..

    TVK: கோட் திரைப்படத்தின் ட்ரெய்லர் பெரிய அளவில் ரசிகர்களிடம் ஹிட்ட அடித்திருக்கும் நிலையில் தற்போது ரசிகர்களுக்கு ஒரு கெட்ட செய்தியும் காத்திருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் இருந்து பேச்சுக்கள் அடிப்படை தொடங்கி இருக்கிறது. 

    கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தன்னுடைய கோத் திரைப்படத்தின் சூட்டிங் முடித்திருக்கிறார். அடுத்து அவர் 69 ஆவது படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்களுக்கு பெரிய அளவிலான அதிர்ச்சியை கொடுக்க இருக்கிறார்.

    இதையும் படிங்க: வா வா டியரு பிரதரு… கேப்டனுக்காக கோட் படக்குழுவினர் செய்த செம மேட்டரு இதான்!

    கோலிவுட்டில் 200  கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் முதல் நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். தளபதியின் ஒவ்வொரு திரைப்படமும் 800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வரும் நிலையில் தன்னுடைய அரசியல் பயணத்தை திடீரென அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

    அவர் வெளியிட்டு இருந்த முதல் அறிக்கையிலேயே தான் ஒப்புக்கொண்ட திரைப்படங்களை முடித்துக் கொண்டு முழுவதுமாக அரசியலில் ஈடுபடுவேன் எனவும் தெரிவித்திருப்பார். அதனால் அடுத்து அவர் தளபதி 69 இல் தான் இணைவார் எனக் கூறப்பட்டது. ஆனால் தற்போது தன்னுடைய அரசியலின் முதற்கட்ட வேலைகளை தொடங்கிவிட்டாராம்.

    தவெக கொடி

    தளபதி 69 ஐ தொடங்குவதற்கு இருக்கும்  இடைப்பட்ட காலத்தில் அரசியல் முதல் மாநாட்டை நடத்த முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன் கட்சி கொடி அறிவிப்பு என்பது முக்கியமான விஷயம். இதனால் அவரின் கொடி எப்படி இருக்கும் என பலரிடம் பல எதிர்பார்ப்பு நிலவியது.

    இதையும் படிங்க: வாயா பேசுற நீ? திரிஷாவுக்கு கவுண்டர் கொடுத்த உதவி இயக்குனரை நடிக்க வைத்த மணிரத்னம்!..

    இந்நிலையில் நேற்று ஒத்திகை நிகழ்வில் அவருடைய கட்சியின் கொடி இணையதளங்களில் வெளியானது. முழு மஞ்சள் நிறத்தில் நடுவில் விஜயின் படம் பொறிக்கப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ரசிகர்கள் கொடி படத்தை பல இடங்களில் வைரலாக்கி வருகின்றனர். இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விஜய்

    விஜயின் கட்சி பிரத்யேக பாடலையும் விவேக் எழுத தமன் இசையமைத்து செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து அடுத்த மாத இறுதிக்குள் மாநாடும் நடத்தப்பட்டு விடும் எனவும் பேச்சுக்கள் அடிபட்டு வருவதாக கூறப்படுகிறது. இன்னும் சில மாதங்கள் விஜய் அரசியல் பணியே அதிகம் இருக்கும் என்பதால் நடிகர் விஜயின் அப்டேட் குறைவு தான். இது கண்டிப்பாக ஃபீல் பண்ணுற விஷயம்தான்.

  • விஜய் காசு கொடுக்கலைன்னு உங்களுக்குத் தெரியுமா?.. டெரர் மோடுக்குப் போன புஸ்ஸி ஆனந்த்!..

    வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடிகர் விஜய் நடித்த வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையில் அந்தப் படத்திற்கான பாடல்கள் உருவாகி வருகிறது. ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவதாக ஒரு பாடல் விரைவில் வெளியாக காத்திருக்கிறது.

    அந்தப் பாடலை ஸ்ருதிஹாசன் பாடி இருப்பதாகவும் கங்கை அமரன் அதற்கு பாடல் வரிகளை எழுதி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தாறுமாறாக இசையமைத்து வருவதாக சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.

    ஒரு பக்கம் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய் இன்னொரு பக்கம் அரசியலில் பெரும் ஆர்வத்தை செலுத்தி வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்துள்ள விஜய் மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரம்மாண்டமாக கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் நடத்தி இருந்தார்.

    வைர நெக்லஸ், வைர மோதிரங்கள் என தனது சொந்தக் காசை செலவழித்து விஜய் உதவி வருவதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். விஜயின் விலையில்லா வீடுகள் திட்டத்திற்கு வழங்கப்படும் வீடுகள் ரசிகர்களிடம் வசூல் செய்யும் தொகையை வைத்து கட்டப்படுகிறதா என்கிற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    செய்தியாளர் சந்திப்பின் போது அது தொடர்பான கேள்விக்கு கடுப்பான பிஸியான தளபதி விஜய் இதற்கெல்லாம் காசு தரவில்லை என உனக்குத் தெரியுமா? என பதிலுக்கு கேட்க ஆரம்பித்து கர்ஜிக்க ஆரம்பித்து விட்டார்.

    அந்த வீடியோவை ஷேர் செய்து விலையில்லா வீடுகள் கட்டுவதற்கு நடிகர் விஜய் தான் காசு கொடுக்கிறார் என தளபதி ரசிகர்கள் தண்டோரா போட ஆரம்பித்து விட்டனர். விஜய் கட்டித் தரும் வீடுகளின் தரம் சரியாக இல்லை என்றும் இதற்கு முன்னதாக கடுமையான விமர்சனங்கள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

  • பாண்டிச்சேரிக்கு அடிக்கடி செல்லும் விஜய்!.. பேக்கிரவுண்டில் இப்படியொரு மேட்டரு இருக்கா?..

    நடிகர் விஜய் அடிக்கடி பாண்டிச்சேரிக்கு சென்று வருவதற்கு பின்னணியில் இப்படியொரு விஷயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாண்டிச்சேரி முதலமைச்சரை நடிகர் விஜய் சந்திக்கவும் அதுதான் காரணம் என்கின்றனர்.

    தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்துள்ளார் நடிகர் விஜய். கோட் படத்தில் நடித்து வரும் விஜய் அந்த படத்தை முடித்த நிலையில், அடுத்ததாக தளபதி 69 படத்தில் நடிக்கப் போகிறார். அதுதான் அவரது கடைசி படம் என சொல்லப்படுகிறது.

    இதையும் படிங்க: மெட்ராஸ் படம் எடுத்துட்டா என்ன வேணாலும் பேசுவியா!.. பா. ரஞ்சித்துக்கு பதிலடி கொடுத்த இயக்குனர்!..

    அதன் பின்னர் சினிமாவில் நடிக்காமல் இருந்தால் வெறும் அரசியலில் எப்படி விஜய் சம்பாதிப்பார் என்கிற கேள்வியும் எழுந்து வரும் நிலையில், பாண்டிச்சேரியில் பிரம்மாண்டமாக தியேட்டர் ஒன்றை விஜய் கட்டி வருவதாக கூறுகின்றனர்.

    அதற்காகத்தான் அடிக்கடி விஜய் பாண்டிச்சேரிக்கு போய்விட்டு வருவதாக கூறுகின்றனர். சமீபத்தில், சென்னையில் உள்ள பட்டினப்பாக்கத்தில் பிரம்மாண்ட பெண்ட் ஹவுஸை நடிகர் விஜய் வாங்கியுள்ளதாக கூறப்பட்டது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் த்ரிஷா, ரம்பா, ஆர்யா, துல்கர் சல்மான் என ஏகப்பட்ட நடிகர்கள் வீடு வாங்கியிருப்பதாக கூறுகின்றனர்.

    இதையும் படிங்க: இந்தியாவின் டாப் 10 பணக்கார நடிகர்கள்… கமல், ரஜினி, விஜய், அஜீத் எந்தெந்த இடம்னு தெரியுமா?

    வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலருடன் நடித்து வருகிறார் விஜய். குடிய சீக்கிரமே பிரம்மாண்டமாக கட்சி மாநாட்டையும் நடத்தப்போகிறார் என்கின்றனர்.

    புஸ்ஸி ஆனந்த் பாண்டிச்சேரியில் அரசியல் செய்து வந்த நிலையில், அவருடைய இடத்தில் தான் விஜய் தற்போது தியேட்டர் கட்டி வருவதாகவும் கூறுகின்றனர். ஆனால், விஜய் தியேட்டர் குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு விஷயங்களில் விஜய் அதிரடியாக இன்வெஸ்ட்மெண்ட் செய்து வருகிறார் என்கின்றனர்.

    இதையும் படிங்க: பால்மேனியை காட்டி தமன்னாவுக்கு டஃப் கொடுக்கும் லாஸ்லியா!.. சும்மா அள்ளுது!…

  • எம்ஜிஆர் என்ன!.. விஜய்யால் விஜயகாந்தாக கூட முடியாது!.. சொல்றது யாருன்னு பாருங்க!..

    பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் அரசியல் குறித்து பேசியது சமூக வலைத்தளங்களில் கண்டனங்களை எழுப்பியுள்ளது. நடிகர் விஜய் தனது சுயநலத்திற்காக மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாற்றுகிறார் என்றும் கல்வி விருது விழா என்று நடத்தி மாணவர்களே நீங்கள் அடுத்த முதல்வராக வேண்டும் என பேசுவதை கேட்டு ஆனந்த படுகிறார்.

    அடுத்த எம்ஜிஆர் ஆக வேண்டும் என விஜய் நினைத்து அரசியலில் இறங்கியுள்ள நிலையில் அவரால் அடுத்த விஜயகாந்த் ஆக கூட ஆக முடியாது என்கிற தொனியில் பாடலாசிரியர் சினேகன் விஜயகாந்த் பற்றி கூறிய ஒரு த்ரோபேக் ஸ்டோரி அமைந்துள்ளது.

    ஒருமுறை விஜயகாந்த்தை பார்க்க ஒரு பஸ் முழுவதும் கல்லூரி மாணவர்கள் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்துவிட்டனர். முதலில் அவர்கள் ஊர் சுற்றிப் பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் என நினைத்த விஜயகாந்த் அவர்களை சந்தித்து நலம் விசாரித்து சாப்பிட்டுப் போங்க என்றார். அப்போது அவருடன் நான் இருந்தேன்.

    கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் அந்த விஜயகாந்த் அந்த மாணவர்களை பார்த்து ஊரெல்லாம் சுத்தி பார்த்து விட்டீர்களா எனக் கேட்க, உங்கள பார்க்க தான் வந்திருக்கிறோம். நீங்கள் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள நிலையில், அதில் இணைவதற்காக வந்திருக்கிறோம் என்றார்.

    உடனே விஜயகாந்துக்கு கோபம் வந்துவிட்டது, அடிச்சு பல்ல எல்லாம் பேத்துடுவேன். முதல்ல படிக்கிற வழியை பாருங்க, படித்து முடித்த பிறகுதான் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். படிக்கும்போது இப்படித் தேவையில்லாமல் டைவர்ட் ஆகிடாதீங்க என கண்டித்து அனுப்பினார் விஜயகாந்த் என சினேகன் சிலாகித்து பேசியுள்ளார்.

  • வைர மோதிரம் எல்லாம் போடுறாரே!.. விஜய்யின் தவெகவுக்கு எங்க இருந்து பணம் வருது தெரியுமா?..

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை ஆரம்பித்த நிலையில் தொடர்ந்து மக்களை சந்தித்தும் மாணவர்களுக்கு விருது கொடுத்தும் வருகிறார். கடந்த ஆண்டு கல்வி விருது விழா என எஸ்எல்எல்சி மற்றும் +2 மாணவர்கள் முதல் 3 இடங்களை பொதுத் தேர்வில் பெற்ற நிலையில், தொகுதி வாரியாக தேர்வு செய்து வழங்கினார்.

    அதே போல இந்த ஆண்டும் ஜூன் 28ம் தேதி மற்றும் ஜூலை 3ம் தேதி என 2 கட்டங்களாக நிகழ்ச்சியை நடத்தி முடித்தார். ஒரேயடியாக நடத்தினால் 15 மணி நேரத்துக்கு மேல் நிற்க வேண்டும் என்பதால், 2 கட்டங்களாக பிரித்து விருது விழங்கினார் விஜய்.

    கடந்த முறை நந்தினி எனும் மாணவிக்கு மட்டும் வைர நெக்லஸ் பரிசாக வழங்கப்பட்ட நிலையில், இந்த முறை அதிக மதிப்பெண்களை பெற்ற சில மாணவர்களுக்கு வைர மோதிரங்களை பரிசாக விஜய் வழங்கினார்.

    அதுமட்டுமின்றி மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஒவ்வொரு ஊரில் இருந்தும் வருகை தரவும், அவர்கள் தங்கவும், அவர்களுக்கான உணவுகள் என அனைத்து செலவுகளையும் விஜய் செய்து வந்த நிலையில், இதற்கெல்லாம் எங்கே இருந்து பணம் வருகிறது என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

    இந்நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த இயக்குனர் பிரவீன் காந்தி நடிகர் விஜய் தனது சொந்த காசுல தான் கட்சி செலவுகளையும் கல்வி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிக்கான செலவுகளையும் செய்கிறார் என்றும் மற்ற யாரும் அவருக்கு நிதி வழங்கவில்லை என்றும் பேசியுள்ளார்.