Tag: TVK

  • மாநாட்டில் விஜய் இவ்ளோ நேரமா பேசறாரு? அப்போ தெறிக்க விட்டுருவாரே..!

    தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டி ‘வி’ சாலையில் நடைபெற உள்ளது. மாநாடு மாலை 4 மணி முதல் 10 மணி வரை நடைபெறுமாம். ஆனால் அரசு 9 மணிக்குள் முடித்துவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளதாம்.

    மாநாட்டில் ஒரு மணி நேரம் விஜய் பேசப் போகிறாராம். அவருடன் 8 பேர் உரையாற்ற உள்ளார்களாம். முதலில் கட்சிக்கொடியை ஏற்றியதும் அதற்கான விளக்கத்தைப் பற்றிப் பேசுவார் என்றும், கொள்கைகள் பற்றியும் அடுத்தடுத்துப் பேச உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    மாநாட்டுத் திடலைச் சுற்றி 650 அடி நீளம் 50 அடி உயரம் கொண்ட கோட்டை முகப்பு செட் அமைக்கப்பட்டு வருகிறது. இரட்டை யானை படமும் வருகிறது. 1400 கொடிக்கம்பங்கள், 20 ஆயிரம் ஒளி விளக்குகள் என தடபுடலான ஏற்பாடுகள் நடக்கிறது.

    பள்ளங்களை சமன் செய்தல், ரேம்ப் வாக்கிற்கான ஏற்பாடுகள் என பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. குடிநீர் விநியோகம், மொபைல் டாய்லெட்டுகள் என பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 4 பார்க்கிங் வசதிகளும் நடந்து வருகிறது. மாநாட்டில் உள்ளே இருப்பவர்களுக்காக எல்இடி திரைகளும் அமைக்கப்பட்டு வருகிறது.

    மாநாட்டுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாநாட்டுக்கான அலுவலகமும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு முகப்பில் வாசலின் உயரத்துக்கு விஜயின் படமும் வைக்கப்படும். முன்னேற்பாட்டுப் பணிகளைப் பார்த்தால் ரொம்ப பிரம்மாண்டமான மாநாடாக இருக்கும் என்றே தெரிகிறது.

    மாநாட்டின்போது தான் விஜய் அரசியல் ரீதியான அவரது கொள்கைகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்த எல்லா விஷயங்களையும் பேசுவார் என்பதால் இப்போதே அதற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தீபாவளி நெருங்கும் நேரம் என்பதாலும், அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதாலும் போலீசாரின் கட்டுப்பாடுகள் மிகத் தீவிரமாகவே இருக்கும் என்றும் தெரிகிறது.

  • ‘சோறு சாப்பிட்டா தான் பசியாறும்… சொல்றதால அல்ல…’ ரஜினி, போஸ்வெங்கட்டுக்கு விஜய் சூசக பதில்

    அரசியலுக்கு ரஜினி வருவேன் வருவேன்னு சொல்லி பூச்சாண்டிக் காட்டுனாரு. கடைசியில வரலன்னு சொல்லிட்டாரு. அதனால ரசிகர்களின் விமர்சனத்துக்கு ஆளானார். அப்புறமா தன்னோட உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஒதுங்கி விட்டதாக அறிக்கைக் கொடுத்தார்.

    அப்புறம் சமாதானமானாங்க. அதே போல நடிகர் போஸ்வெங்கட் கங்குவா படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில சூர்யா தான் ரசிகர்களுக்கு படிப்புல இருந்து எல்லாம் படிப்படியாக் கத்துக் கொடுக்காரு.

    அவரு தான் அரசியலுக்குப் பொருத்தமானவர். வரணும் என்றெல்லாம் பேசி விஜயை மறைமுகமாக சாடினார். அதற்கும் விஜய் இந்த மாநாட்டில் சூசகமாகப் பதிலடி கொடுத்துள்ளார். என்னென்ன சொன்னாருன்னு பார்க்கலாமா…

    அரசியல் நமக்கு ஒத்து வருமான்னு பூதக்கண்ணாடியை வச்சி யோசிச்சா சரிவராது. ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரத்தை எதிர்ப்பது தான் நமது கோட்பாடு. பிளவு வாத கட்சிகளைக் கூட ஈசியா கண்டுபிடிச்சிடலாம். ஆனால் இந்த ஊழல் இருக்கே அது எங்கே ஒழிஞ்சிருக்குன்னு கண்டுபிடிக்கவே முடியாது.

    அந்தக் கரெப்ஷன் கபடதாரிகள் தான் இப்போ ஆண்டுக்கிட்டு இருக்காங்க. மகத்தான அரசியல்னா அது மக்களுக்கான அரசியல் தான். சோறு சாப்பிட்டா தான் பசியாறும். சொல்றதால பசியாறாது. ‘மீன்பிடிக்கக் கத்துக்கொடுக்கணும்’னு சொல்வாங்க. ஆனா எங்க ரூட்டே வேற. முடிஞ்சவங்க மீன் பிடிச்சி சாப்பிடட்டும். முடியாதவங்களுக்கு நாம மீன் பிடிச்சி கொடுத்து வாழ வைப்போம்.

    உங்கள்ல ஒருவனா இருந்து நான் உழைக்கணும். எல்லாத்தையும் யோசிச்சித் தான் ஒவ்வொரு அடியா எடுத்து வைப்பேன். ஒரு முடிவோடு தான் வந்துருக்கேன். மாபெரும் சக்தியோடு சேர்ந்து எடுத்த முடிவு. இது கொள்ளை அடிக்க வந்த கூட்டம் இல்ல. பக்கா பிளானோடு வந்த கூட்டம்.

    சோசியல் மீடியாவுல கம்பு சுத்த வந்த கூட்டம் அல்ல. சொசைட்டிக்காக வாளேந்த வந்த கூட்டம். மீடியா ட்ரோல், ஆபாசம், அல்லு சில்லு, பயாஸ்கோப் காட்றது இதெல்லாம் வச்சி இந்தப்படையை வீழ்த்தலாம்னு கனவு கண்டுறாதீங்க.

    இவங்க மட்டும் தான் நம்ம கூட்டம்னு நினைச்சிடாதீங்க. இன்னும் நல்லாட்சிக்காக ஏக்கத்தோடு வர முடியாதவங்க நிறைய பேர் இருக்காங்க. இவ்வாறு அவர் பேசினார்.

  • சயின்ஸ் மட்டும் தான் மாறணுமா? மாற வேண்டியது அரசியல்… பொளந்து கட்டிய விஜய்

    தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்த விஜய் சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் மாஸ் காட்டியுள்ளார். முதல் மாநாட்டிலேயே அதுவும் அரசியலில் இது தான் இவருக்குக் கன்னிப்பேச்சு. ஆனால் மெய்சிலிர்க்க வைத்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். அப்படி என்ன சொன்னாருன்னு பார்க்கலாமா…

    குழந்தையைப் போல உணர்கிறேன். பாம்பு தான் அரசியல். அதுக்கு நாம குழந்தை தான். ஆனா பாம்பா இருந்தா கூட எனக்குப் பயமில்லை. பாம்பைப் பிடித்து விளையாட ஆரம்பிச்சிருக்கேன்.

    சீரியஸோடு கொஞ்சம் சரிப்பையும் கலந்து போறது தான் நம்ம ரூட்டு. எதுக்கு இந்த அவர்களே அவர்களே…. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று பேசிட்டு எதுக்குங்க இந்த அவர்களே…. இதுல யாரு மேல… யாரு கீழன்னுலாம் கிடையாது. எல்லாருக்கும் என்னோட உயிர் வணக்கங்கள்.

    இந்த அரசியல்னாலே கோபமா கொந்தளிச்சா புரட்சிப் பண்ண வந்தவங்கன்னு ஒரு கான்செப்ட் இருந்தது. நமக்கு எதுக்குங்க அதெல்லாம். சொல்ல வந்ததை சுவீட்டா சொல்லிட்டுப் போயிடணும்.

    சயின்ஸ் மட்டும் தான் மாறணுமா… மாற வேண்டியது அரசியலும் தான். ஆல்ரெடி இருக்குற அரசியல்வாதிகளைப் பற்றிப் பேசி டைம் வேஸ்ட் பண்ணப் போறதும் இல்லை. அதுக்காக மொத்தமா கண்ணை மூடிக்கிட்டு இருக்கப் போறதுமில்லை.

    இப்ப என்ன வேலை? அதை எப்படி தீர்த்து வைக்கிறது? அரசியல்ல நம்பிக்கை தர்றது கொள்கைக் கோட்பாடுகள் தானே. அதை யாருக்கிட்ட இருந்து எடுத்து அப்ளை பண்ணப் போறோம் என்பது நம்ம சொல்ல வேண்டிய கடமை இல்லையா…

    அரசியலில் விஜய் இதுவரை பேசியது இல்லையே… அவரால 10 வார்த்தையை சேர்ந்தாப்புல பேசவே திணறுவாருன்னு எல்லாம் சோஷியல் மீடியாவுல விமர்சனம் பண்ணினாங்க. ஆனால் முதல் மாநாட்டிலேயே அனைத்துக் கட்சியினரையும் வாயைப் பிளக்க வைத்து விட்டார்.

    அப்போது விஜய் சொன்னது உண்மையிலேயே மாஸ் என்று தான் சொல்ல வேண்டும். துணிந்து பல கருத்துகளை சகட்டுமேனிக்குப் போகிற போக்கில் விளாசினார் விஜய். கொள்கைகளைப் பற்றிப் பேசியதும் இப்போ இதைக் கேட்குற போது மற்ற கட்சிக்காரங்களோட கதறல் இனி கேட்கும் என்றார்.

  • ஆரவாரத்துக்கு மத்தியில் மாஸ் என்ட்ரி… ஆரம்பமானது விஜயின் அரசியல் ஆட்டம்… எகிறிய எதிர்பார்ப்பு…!

    தமிழ் சினிமாவில் பலரின் செல்ல பிள்ளையாக, பல ரசிகர்களுக்கு மாஸ் ஹீரோவாக வளம் வந்த விஜய் தமிழக அரசியலில் ஒரு மாற்றம் தேவை என்பதற்காக அரசியல் கட்சியை தொடங்கி இருக்கின்றார். இதற்காக சினிமாவை தள்ளி வைத்துவிட்டு தமிழக மக்களுக்காக அரசியலில் குதித்து இருக்கின்றார். தமிழக வெற்றி கழகம் என்கின்ற கட்சியை தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கின்றார்.

    இந்த கட்சியின் கொடி மற்றும் பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் மாநாடு இன்று இனிதே துவங்கியிருக்கின்றது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள விசாலையில் மிகப்பிரம்மாண்டமாக மேடை அமைக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.

    காலை முதலே தொண்டர்களின் கூட்டம் ஆர்ப்பரித்து வந்தது. ஆரம்பமே அசத்தல் என்பது போல் கட்டவுட்டில் மாஸ் காட்டத் தொடங்கி அனைத்தையும் மிகச் சிறப்பாக செய்து இருக்கின்றார். மாநாட்டுக்கு மட்டும் 80 கோடி ரூபாய்க்கு மேல் தனது சொந்த பணத்தை செலவு செய்திருக்கின்றார் நடிகர் விஜய். 5 நுழைவாயில், 500க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள், எல் இ டி திரைகள், 150 க்கு அதிகமான மருத்துவ குழுவினர், ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவ பாதுகாப்பு குழு என ஏராளமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

    காலை முதலே தொண்டர்களின் கூட்டம் ஆர்ப்பரித்ததால் காவல்துறையினர் இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறினர். தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாட்டிற்கு இதுவரை 8 லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகின்றது. இந்த மாநாட்டில் அனைவரும் எதிர்பார்ப்பது நடிகர் விஜயின் வருகை மற்றும் அவரின் பேச்சை தான். நேற்று இரவே மாநாட்டிற்கு கேரவனில் வருகை தந்த நடிகர் விஜய் இரவு முழுவதும் கேரவனில் தான் தூங்கினார்.

    இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு அதாவது 4 மணிக்கு மேடைக்கு வருகை தந்த நடிகர் விஜய் மேடைக்கு நடுவே போடப்பட்டிருக்கும் ரேம்ப் வாக் மேடையில் ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் மாஸ் என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து நம் நாட்டின் சுதந்திரத்திற்கு பாடுபட்ட அனைவருக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தி விட்டு கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார்.

    தொடர்ந்து அனைத்து நிகழ்வுகளும் நடைபெற்று வரும் நிலையில் அனைவரும் எதிர்பார்க்கும் நடிகர் விஜய்யின் பேச்சுக்காக பலரும் காத்திருக்கிறார்கள். ஒவ்வொரு நிமிடமும் அவர் என்ன பேசப் போகிறார் என்பதுதான் அனைவரிடத்திலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

  • பாரம்பரிய கலைநிகழ்ச்சியுடன் தொடங்கிய மாநாடு… விஜய் போடும் 19 தீர்மானங்கள்

    தமிழக வெற்றிக்கழக கட்சியின் தலைவர் தளபதி விஜய் இன்று விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமான மாநில மாநாட்டை நடத்தி வருகிறார். பறை இசை உளளிட்ட நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்கியுள்ளது.

    விஜய் மாலை 4 மணிக்கு மேடைக்கு வந்து 4.30 மணிக்கு 100 அடி உயர கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியை ரிமோட் மூலம் ஏற்றுகிறார். அரசியல் ரீதியான கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக விஜயின் பேச்சு இருக்கும் என்று தெரிகிறது.

    விஜயின் கொள்கை என்ன என்பதே இப்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. கட்சிக்கான கொள்கைப் பாடல் லேசாக சில விஷயங்களைத் தெரிவித்துள்ளது. மாநாட்டில் 19 தீர்மானங்கள் இருக்குமாம்.

    இரு மொழிக் கொள்கைகள் மற்றும் பெண்களுக்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இருக்கும் என்று தெரிகிறது. விஜயின் பெற்றோர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா கலந்து கொள்கின்றனர். மாநாட்டுக்காக லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடியுள்ளனர்.

    10 கிலோ மீட்டர் தூரத்திலேயே வாகனங்கள் இடவசதி இல்லாமல் நிறுத்தப்பட்டதால் நடந்தே வருகிறார்களாம். மேலும் குடிக்க தண்ணீர் வசதி இல்லாமல் கழிப்பறைக்கான தண்ணீரைக் குடிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சமீபகாலமாக படங்களில் அரசியல் சார்ந்த வசனங்களைத் தெறிக்க விட்ட விஜய் இந்த மாநாட்டில் என்ன சொல்லப் போகிறார் என்றே அனைவரும் எதிர்பார்க்கின்றனர். குழந்தைகள், மகளிர் பாதுகாப்புச்சட்டம் கொண்டு வர தீர்மானம், ஆளுநரைக் கண்டிப்பது என சில முக்கிய விஷயங்கள் மாநாட்டில் இடம்பெறும் என்றும் தெரிகிறது.

    விஜய் கட்சியைத் தொடங்கியதில் இருந்தே தனது கொள்கை என்ன? அரசியல் நிலைப்பாடு என்னன்னு இதுவரை சொல்லவில்லை. எல்லாம் மாநாட்டில் தான் என்று சொல்லிவிட்டார்.

    கட்சிக் கொடி அறிமுகவிழாவில் கூட சொல்லவில்லை. அதுதவிர இதுவரை மக்கள் மத்தியில் அவர் எந்த மேடையிலும் அரசியல் குறித்துப் பேசியது இல்லை. இப்போது தான் முதல் மாநில மாநாடு. அதுவும் மெர்சலாக நடந்து வருகிறது.

  • TVK கொள்கை விளக்கப் பாடலுக்கு இசை அமைக்க சான்ஸ் கிடைச்சது எப்படி? அப்படியா சொன்னாரு தளபதி?

    விஜய் அரசியலில் இறங்கியதும் அவரது முதல் மாநில மாநாட்டை அனைவரும் எதிர்பார்த்தனர். பூச்சாண்டி காட்டுற வேலை இல்லை. இது இறங்கி அடிக்கிறதுன்னு நிரூபித்துள்ளார் தளபதி விஜய். அரசியல்னு வந்துட்டா எடுத்த முடிவுல இருந்து பின்வாங்கப் போறதில்லை.

    ஒரு முடிவோடத் தான் வந்துருக்கேன். அப்படின்னும் இந்த அவர்களே, இவர்களே எல்லாம் எதுக்கு? நான் பாம்பைக் கையில பிடிச்சிருக்குற குழந்தை மாதிரி. எனக்குப் பயம்னா என்னன்னு தெரியாது.

    அதனால இப்போ நான் அந்த அரசியல்ங்கற பாம்பைக் கையில புடிச்சிட்டேன். இனி விடப்போறதில்லை என்கிற மாதிரி துணிச்சலுடன் பேசி அவரது லட்சக்கணக்கான தொண்டர்களை ஆர்ப்பரிக்க வைத்தார்.

    அவரது பேச்சைக் கேட்டுப் பலரும் வியந்தனர். வலைப்பேச்சு அந்தனனோ இது சர்கார்; 2 மாதிரி இருக்கு. இப்படி பேசுவாருன்னு நினைச்சிக் கூட பார்க்கலை என்று வியந்துள்ளார். அவரது அரசியல் எதிரி யாருன்னு தெளிவாகச் சொல்லிவிட்டார். இனி தான் அவரை இனி தான் குறி வைப்பாங்கன்னு கூடவே பூச்சாண்டியும் காட்டி விட்டார்.

    எல்லாம் சரி. அந்த வெற்றி வெற்றி என்ற கொள்கை முழக்கப்பாடல் படு மாஸாக இருந்ததே. அதுவும் ஒன்ஸ்மோர் எல்லாம் போட்டாங்களே. அதுக்கு இசை அமைப்பாளர் யார் என்று பலரது மனதிலும் கேள்வி எழுந்து இருக்கலாம். அதற்கு அந்த இசை அமைப்பாளரே அந்தப் பாடலுக்கு எப்படி கமிட் ஆனேன்னு பேட்டி கொடுத்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

    ‘த.வெ.க.வின் சித்தாந்த பாடலை இசை அமைக்க என்னை தேர்ந்தெடுத்தது ஏன்?’னு விஜய் சார்கிட்ட கேட்டேன். ‘உன்னால மட்டும் தான் முடியும்’னு சொன்னார்.

    ‘என்ன நம்புனதுக்கு நன்றி விஜய் சார். உங்க குரலை பதிவு செய்றது என் வாழ்க்கையோட மிகப்பெரிய கனவாக இருக்கும். உங்க அரசியல் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்’ என்று தெருக்குரல் அறிவு நெகிழ்ச்சியுடன் பதிவை வெளியிட்டுள்ளார்.

  • விஜய் அரசியல்ல நீடிக்க முடியாது… நடிகர் போட்ட அணுகுண்டு… என்ன தாம்பா சொல்றாரு?

    தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பாக விஜய் சமீபத்தில் விக்கிரவாண்டியில் நடந்த தன் முதல் அரசியல் மாநில மாநாட்டில் முக்கால் மணி நேரம் பேசி அனைத்துக் கட்சியினரையும் வாயடைக்க வைத்து விட்டார். அவரது பேச்சு அவ்வளவு சுவாரசியமாக இருந்ததாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.

    தனது மொத்த கோப தாபங்களையும் உணர்ச்சிப் பெருக்குடன் பேசி அசத்தியுள்ளார். அவருடைய கோபமும் நியாயம் தான் என்று பலரும் சொல்லி வருகின்றனர். ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணேப் வாழ்த்து தெரிவித்துள்ளார். துறவிகளும், சித்தர்களும் அதிகமாக வாழ்ந்த தமிழகத்தில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி உள்ளார் விஜய். அவருக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் என்று வாழ்த்தியுள்ளார்.

    பொதுவாக சினிமாக்காரங்கன்னாலே கூத்தாடி என பலரும் கேவலமாகப் பேசுவாங்க. அவங்களுக்கு எல்லாம் அரசியல் தேவையான்னு சொல்வாங்க. அவங்களுக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.

    கூத்தாடிக்கு விளக்கம் கொடுத்து இருக்கும் விஜய் இப்படி பேசியுள்ளார். இல்ல நான் தெரியாம தான் கேக்குறேன். கூத்தாடி அப்படின்னா கேவலமான பெயரா? இல்ல கெட்ட வார்த்தையா? கூத்து அது சாதாரண வார்த்தை இல்ல. ஏன்னா கூத்து சத்தியத்தைப் பேசும்.

    கொள்கையைப் பேசும். கோட்பாட பேசும். கோவத்தைப் பேசும். சோகத்தைப் பேசும். அரசியலைப் பேசும். அறிவியலைப் பேசும். நல்லதைப் பேசும். உள்ளதைப் பேசும். உண்மையைப் பேசும். உணர்வைப் பேசும். இதை எல்லாத்தையும் கொஞ்சம் கூட சோர்வு இல்லாம கொண்டாட்டமா பேசும் என பேசி அதிரவைத்தார்.

    அந்தவகையில் நடிகர் கிளி ராமச்சந்திரன் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து ஒரு கருத்தை முன்வைத்துள்ளார். அதில், விஜய் சார் அரசியல்ல நீடிக்க முடியாது. ஏன்னா மக்களுக்கு நல்லது செய்யணும்னு நினைக்கிறாரு.

    ஆனால் கூட நடித்த நடிகர்களுக்கு உதவி செய்ய எந்தப் பெரிய ஹீரோவும் முன்வரவில்லை. முதலில் கூட நடிக்கும் நடிகர்களுக்கு உதவுங்க. அப்புறம் மக்களுக்கு உதவுங்கன்னு தெரிவித்துள்ளார். இது தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

  • ஒரு லட்சம் வாங்கிட்டு இத்தனை வருஷமாவா கால்ஷீட் கொடுக்காம இழுத்தடிச்சாரு விஜய்.. இது எப்போ நடந்தது?

    தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியைத் தொடங்கி மிகப்பெரிய அளவில் மாநில மாநாட்டையும் நடத்தி அசத்தியவர் தளபதி விஜய். இந்த மாநாட்டைப் பார்த்து தமிழகத்தில் பல அரசியல்வாதிகளும் பிரமித்துப் போய் உள்ளனர்.

    ‘என்னடா ஒண்ணுமே பேசத் தெரியாதுன்னு நினைச்சோம். சினிமா மாதிரி பெரிய சம்பவமே நடத்திட்டாரே’ன்னு ஆச்சரியப்பட்டாங்க. அதிலும் வெற்றி வெற்றி என்ற கொள்கைப் பாடலும் செம மாஸாக இருந்தது. விஜய் என்றாலே வெற்றி என்று ஒரு பொருளும் உண்டு.

    ஆரம்பகாலகட்டத்தில் தான் பட்ட அவமானங்களையும் அதன்பிறகு அவர் உழைத்து முன்னேறிய கதையையும் உணர்ச்சிப் பெருக்குடன் மேடையில் கூறினார். அந்தவகையில் தற்போது விஜய் குறித்த ஒரு செய்தி அதிகமான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. அது இதுதான்…

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பைரவி படத்தை இயக்கியவர் எம்.பாஸ்கர். இவரது மகனும் தயாரிப்பாளருமான பாலாஜி பிரபு விஜய் குறித்தும் அவருடன் இணைந்து தயாரித்த விஷ்ணு படம் குறித்தும் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

    விஜய் சாரையும் ரெண்டு மூணு தடவை பார்த்தோம். ஒருலட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தோம். அப்போ மூணு பேரும் (விஜய், எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா) இதுக்குத் தான் பணத்தை வாங்கினாங்க.

    அப்போ ஷோபா அம்மா சொன்னாங்க. ‘அண்ணே நீங்க தான் விஜய் தம்பிக்கு வாழ்க்கைக் கொடுத்தாங்க. நாங்களே சொந்தப்படம் எடுத்துக்கிட்டு இருந்த காலகட்டத்துல வெளித்தயாரிப்பாளர் யாராவது வர மாட்டாங்களான்னு நினைச்சிக்கிட்டு இருந்தோம்.

    நீங்க வந்து விஷ்ணுங்கற ஹிட் படத்தைக் கொடுத்தீங்க. அந்த நன்றியை நாங்க மறக்க மாட்டோம். கண்டிப்பா அடுத்தப் படம் பண்ணித்தரோம்’னு சொன்னாங்க. இது உண்மை. உண்மைக்குப் புறம்பா நான் எதையும் சொல்ல மாட்டேன்.

    அந்தப் பணத்தைக் கொடுத்ததுக்கு அப்புறம் 96, 97, 98ன்னு காலங்கள் தான் ஓடுதே தவிர விஜய் சாரோட டேட் கிடைக்கல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    1995ல் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் பாலாஜி பிரபு தயாரித்த படம் விஷ்ணு. தேவா இசை அமைத்துள்ளார். விஜய் உடன் சங்கவி, ஜெய்சங்கர், எஸ்.எஸ்.சந்திரன், செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

  • விஜய் ரொம்ப புத்திசாலி…. அவர் எடுக்கற முடிவு நல்லா தான் இருக்கும்… வைரலாகும் குஷ்பூ வீடியோ

    தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி மாநாட்டையும் நடத்தி முடித்துள்ள விஜய்க்கு பல்வேறு விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.

    முதல் மாநாட்டில் விஜய் எப்படிப் பேசப் போகிறார்? அவருக்கு தொடர்ந்து 10 வார்த்தைகள் கூட சேர்ந்தாற்போல பேசத்தெரியாதேன்னு சொன்னவங்களை எல்லாம் வாயடைக்க வைத்து விட்டார் விஜய். ஒரு சினிமாவே பார்த்தது மாதிரி இருந்தது. நிறைய விஷயங்களைப் பேசிருக்காருன்னு இன்னும் சிலர் சொன்னாங்க.

    அப்படி இருக்கையில் இப்போது அவரைப் பற்றி குஷ்பு பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

    இந்நிலையில் விஜய் கட்சி தொடங்கிய போது குஷ்பூ பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் விஜயை மிகவும் புகழ்ந்து தள்ளியுள்ளார் குஷ்பூ.

    இதுக்குப் பின்னாடி ஏதும் ஐஸ் வைக்கிற வேலை இருக்கான்னு நாம யோசிக்கும்போது அதே மாதிரியான கேள்வியை நிருபரும் கேட்டுள்ளார். அதற்கு குஷ்பூவும் பதில் சொல்கிறார். என்னன்னு பார்க்கலாமா…

    குஷ்பூ விஜய் குறித்துப் பேசியது இதுதான். ‘அவர் நண்பர் அல்ல. எனக்குத் தம்பி. ரொம்ப புத்திசாலி. அவருக்கு அட்வைஸ் தேவையில்லை. அவர் எடுக்கற முடிவு நல்லா தான் இருக்கும். அரசியலுக்கு வந்துருக்காரு. வரட்டும். யார் வேணாலும் அரசியலுக்கு வரலாம். அவருக்கு என்னோட வாழ்த்துக்கள்’ என்ற குஷ்புவிடம் நிருபர் மேலும் கேள்விகளை முன் வைத்தார்.

    ‘தம்பியைக் கூட்டணிக்கு அழைக்கிறீங்களா’ன்னு? நிருபர் கேட்டதுக்கு ‘நிச்சயமா கிடையாது. மேலிடத்துல முடிவு பண்ணுவாங்க’ என்றார். ‘கட்சி சார்பா சொல்லும்போது தனிப்பட்ட விருப்பம் எல்லாம் சொல்ல முடியாது. அதை மேலிடம் பார்த்துக் கொள்ளும்’. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது எதற்கு வைரலாகிறது என்பது தான் தெரியவில்லை.

    2010ல் திமுகவிலும், 2014ல் காங்கிரஸ் கட்சியிலும் இருந்த அவர் தற்போது பிஜேபியில் உள்ளார். அதனால் அடுத்து எங்கு போக இருக்கிறார் என்பதே கேள்விக்குறியாக உள்ளது. ஒருவேளை விஜயை என் தம்பி. அவர் ரொம்ப புத்திசாலி. அவருக்கு அட்வைஸே தேவையில்லை. அவர் எடுக்குற முடிவு நல்லா தான் இருக்கும்னு சொன்னதால தவெகவுக்குத் தாவக் கூட வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

  • Vijay TVK 26: விஜய் போட்ட 26 அதிரடி தீர்மானங்கள்…. இனி தான் அரசியலே களைகட்டப் போகுது..!

    தமிழக வெற்றிக்கழக கட்சியைத் தொடங்கி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார் விஜய். இதற்குப் பல்வேறு பாராட்டுகளும், கண்டனங்களும் வந்தன. இதன்பிறகு விஜய் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக செயற்குழுவைக் கூட்டியுள்ளார். அதில் விஜய் கொண்டு வந்த அதிரடி தீர்மானங்கள் தான் இவை. என்னென்னன்னு பாருங்க.

    26 தீர்மானங்கள்: திமுகவை கண்டித்து எதிர்ப்பும் விமர்சனமும் கொடுக்கப்பட்டுள்ளது. மாநாடு நடந்து முடிந்த பிறகு அடுத்தக்கட்ட நகர்வு பற்றி விவாதிக்க தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது. மின்கட்டணம் உயர்வைக் குறைக்க வேண்டும். அதற்கான முறையை மாற்றி அமைக்க வேண்டும்.

    நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மதுக்கடைகளைக் கால நிர்ணயம் செய்து மூட வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சட்ட ஒழுங்கு சீர்கேட்டையும் மாநில அரசுக்கு எதிராக முன்வைத்துள்ளார். மாநாட்டில் நிறைவேற்ற முடியாத தீர்மானங்களை இந்த செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    சில மாநிலங்களில் மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்போது, மத்திய அரசைக் காரணம் காட்டி சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இருக்கும் மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். ஈழத்தமிழர்கள் உரிமையைப் பாதுகாக்கும் தீர்மானம், இலங்கைக்கான இந்தியத் தூதராக தமிழரை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தத் தீர்மானத்திலும் திமுக, பிஜேபி தான் அவர் தனது எதிரியாக சுட்டிக்காட்டியுள்ளார்.

    விஜயை ட்ரோல் செய்து சமீபகாலமாக பல விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் கடுமையாகச் சாடியுள்ளார். இதை எல்லாம் கருத்தில் கொண்டு தான் இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்றும் எண்ணத் தோன்றுகிறது.

    இனி விஜய் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கவனமாக இருக்க வேண்டும். அப்போது தான் வெற்றியின் பாதையை நோக்கி அவர் செல்ல முடியும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.