Tag: Vijay

  • தகுதி இல்லாதவன் எல்லாம் நாட்டை ஆள நினைக்கிறான்…மதுரையில் அஜித் ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு

    தகுதி இல்லாதவன் எல்லாம் நாட்டை ஆள நினைக்கிறான்…மதுரையில் அஜித் ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் தற்போது தவெக என்னும் கட்சியை துவங்கி முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். சினிமாவை பொறுத்தவரை விஜய்க்கு எப்போதும் போட்டி அஜித் மட்டுமே. இவர்கள் இருவருக்கும் அதிக அளவில் ரசிகர்கள் உண்டு. சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது விஜய்க்கு அஜித் ரசிகர்கள் விஜ்ய அஜித் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்களை பரிசாக அளித்தனர்.

    இந்த நிலையில் நாளை அஜித் பிறந்த நாளையொட்டி மதுரை நகரில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் தகுதி இல்லாதவன் எல்லாம் நாட்டை ஆள நினைக்கிறான்…தமிழக மக்களை அறிவார்ந்த சமூகமாக மாற்ற விரைவில் முடிவெடு தல வா என குறிப்பிடப்பட்டுள்ள போஸ்டர்களால் அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • மக்களை அவமானப்படுத்துகிறாரா விஜய்?.. கோயிலுக்குப் போறது குத்தமா?.. பிரபலம் என்ன இப்படி பேசுறாரு?

    மக்களை அவமானப்படுத்துகிறாரா விஜய்?.. கோயிலுக்குப் போறது குத்தமா?.. பிரபலம் என்ன இப்படி பேசுறாரு?

    தேர்தலுக்கு முன்னதாக எம்மதமும் சம்மதம் என நடிகர் விஜய் பல்வேறு கோயில்களுக்கு சென்றுள்ளார். விஜய் கிறிஸ்துமஸ் விழாவுக்கு செல்கிறார், சர்ச்சில் போய் மண்டியிடுகிறார், ரம்ஜான் நோன்பு திறப்புக்கு செல்கிறார் என சர்ச்சையை கிளப்பினர். அம்மன் கோயில் முதல் திருச்செந்தூர் முருகன் கோயில், ஷீரடி சாய் பாபா கோயில் என தற்போது இந்து மக்களை மொத்தமாக கவர முயற்சி செய்து வருகிறார்.

    இந்நிலையில், பத்திரிகையாளர் பிஸ்மி தனது எக்ஸ் தள பக்கத்தில், தற்போது, ”நேற்று திருச்செந்தூர் முருகன் கோவில். இன்று ஷீரடி சாய்பாபா கோவில். தேர்தல் முடிந்த பிறகு கோவில் கோவிலாக சென்று கொண்டிருக்கிறார் விஜய். ஒருவேளை… தேர்தலில் தவெக வெற்றியடைந்தால், அதற்கு காரணம் விஜய்யின் பிரார்த்தனையா? அல்லது அவருக்கு வாக்களித்த மக்களா? கோவிலுக்கு சென்றதே வெற்றியைத் தேடிக்கொடுத்ததாக விஜய் நினைத்தால், அது அவருக்கு வாக்களித்த மக்களை அவமானப்படுத்துவதாகத்தானே அர்த்தம்?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

    இந்தியா மதச்சார்பற்ற நாடாகவே உள்ளதே தவிர, மதங்களோ, கோயில்களோ அல்லாத நாடு கிடையாது. மேலும், எந்த கோயிலுக்குச் செல்வது, என்ன சாமி கும்பிடுவது, கும்பிடாமல் இருப்பது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம்.

    விஜய் கோயிலுக்குச் சென்று வழிபடும் போது அங்குள்ளவர்களிடம் தனக்கு ஓட்டுப் போடுங்க என்றோ தவெக கட்சிக்கு வந்து சேர்ந்துடுங்கோ என்று பிரச்சாரம் செய்தால் தான் தவறு.

  • ”முதலமைச்சர்” டைட்டில் கார்டு வருமா?.. ஜன நாயகன் ரிலீஸ் தேதி இதுதானாம்?.. நம்பலாமா?

    ”முதலமைச்சர்” டைட்டில் கார்டு வருமா?.. ஜன நாயகன் ரிலீஸ் தேதி இதுதானாம்?.. நம்பலாமா?

    விஜய் நடித்த “ஜன நாயகன்” திரைப்படம் மத்திய தணிக்கை வாரியத்தின் சான்றிதழுக்காக காத்திருக்கிறது. இன்று அல்லது நாளைக்குள் சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், படம் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.

    முதலில் ஏப்ரல் 30ஆம் தேதி படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதே நாளில் தனுஷின் “கர” திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட உள்ளதால், அந்த தேதியில் “ஜன நாயகன்” வெளியாவதற்கான வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதற்கிடையில், சூர்யா நடித்த “கருப்பு” திரைப்படம் மே 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனால் “ஜன நாயகன்” மற்றும் “கருப்பு” திரைப்படங்கள் மோதுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்நிலையில், மே 4ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. விஜய் நல்ல முன்னிலை பெறுவார் என்ற பேச்சுகள் பரவி வரும் நிலையில, இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனம் செய்ததுள்ளார்.

    “ஜன நாயகன்” படம் முழுவதும் இணையத்தில் கசிந்ததால் தயாரிப்பு தரப்புக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் தணிக்கை சான்றிதழ் தாமதமாகிக் கொண்டிருப்பது குறித்து கேள்விகள் எழுகின்றன. விரைவில் சான்றிதழ் கிடைக்கும் எனக் கூறப்படுகின்றது.

    புதிய தகவல்களின் படி, மே 8ஆம் தேதி ஜனநாயகன் படம் வெளியாக நிறைய வாய்ப்புகள் அதிகம் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. மேலும், தேர்தல் முடிவிற்கு பிறகு படம் வெளியாவதில் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது எனக் கூறப்படுகிறது. தேர்தலில் கிடைத்த வரவேற்பை விட படத்தில் அதிகமான வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    தணிக்கை குழு சென்சார் சர்டிபிகேட் கொடுத்த உடன் படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக ஜன நாயகன் படக்குழு அறிவிக்கும் என்கின்றனர். ஒருவேளை மேலும் தாமதமானால் கருப்பு படத்துடன் மோத அதிக வாய்ப்புகள் ஏற்படும் என்கின்றனர்.

  • ”கருப்பா கூட வா”.. ரசிகர்களை சாமியாட வைக்கப் போகும் சூர்யா!.. ஆர்ஜே பாலாஜி அப்டேட்!

    ”கருப்பா கூட வா”.. ரசிகர்களை சாமியாட வைக்கப் போகும் சூர்யா!.. ஆர்ஜே பாலாஜி அப்டேட்!

    ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள கருப்பு படம் வருகின்ற மே 14ம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் இன்று மாலை அப்படத்தின் பாடல் ஒன்று வெளியாகப் போவதாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள கருப்பு படத்தில் சூர்யா, த்ரிஷா, சுவாசிகா, இந்திரன்ஸ், நடராஜன் சுப்பிரமணியம், ஷிவதா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இப்படத்தில் அவரே வில்லனாக நடித்துள்ளார். இப்படத்திற்கு எ.ஆர். ரஹ்மான் இசையமைக்க இருந்த நிலையில் அவர் விலகியதால் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

    மேலும், கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மதுரையில் நடப்பெற்ற நிலையில், படக்குழு அனைவரும் பங்கேற்றனர். ஆனால், ஹீரோயின் த்ரிஷா இசை வெளியீட்டு விழாவுக்கு போகவே இல்லை. இப்படம் முழுக்க முழுக்க கம்ர்ஷியல் படமாக இருக்கும் என் தெரிவித்தார் ஆர்.ஜே.பாலாஜி. பின்னர் நடிகர் சூர்யா இந்த படத்தில் நான் ஹீரோ இல்லை கருப்பு சாமி தான் ஹிரோ என பேசியிருந்தார். சமீபத்தில் சூர்யா நடிப்பில் சில படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்து வந்த நிலையில் இப்படமாவது வெற்றி படமாகுமா என ரசிகர்கள் பலரும் எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர்.

    இந்நிலையில் இன்று ஆர்.ஜே.பாலாஜி கருப்பு படத்தின் பாடல் ஒன்று வெளியாக உள்ளதாக போஸ்டை பகிர்ந்துள்ளார். சாய் அபயங்கர் இசையில் ”கருப்பா கூட வா” எனும் பாடல் கருப்புசாமியை நம்பும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் முக்கியமான பாடலாக இருக்கப் போகும் என்ற பதிவையும் பதிவிட்டுள்ளார். இப்பாடலை எப்போது கேட்டாலும் புல்லரிக்க வைப்பதாக கூறியுள்ளார்.

  • கேரளாவின் அண்ணன் விஜய் : மோகன்லால், மம்மூட்டி கூட ஒதுங்கி நிற்கிறார்கள் – பிருத்விராஜ்

    கேரளாவின் அண்ணன் விஜய் : மோகன்லால், மம்மூட்டி கூட ஒதுங்கி நிற்கிறார்கள் – பிருத்விராஜ்

    தமிழ் சீமாவில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் விஜய். தமிழ் நாட்டில் ரஜினியை விட அதிக ரசிகர்களை கொண்டவர் இவர். தற்போது சினிமாவை விட்டு விலகி அரசியலில் நுழைந்துவிட்டார். விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் ரசிகர்கள் அதிகம்.

    இந்த நிலையில், தற்போது மலையாள திரையுலகின் முன்னணி நடிகரும் இயக்குநருமான பிருத்விராஜ் தெரிவித்துள்ள கருத்துக்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

    கேரளாவில் விஜயின் படங்கள் வெளியாகும் போது, அங்குள்ள ரசிகர்கள் அவரை வெறும் ஒரு நடிகராக பார்க்காமல், தங்கள் வீட்டு அண்ணனாக கருதி கொண்டாடுகிறார்கள். அவருடைய படங்களுக்கு கேரளா ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு அளப்பரியது. பொதுவாக கேரளாவின் சூப்பர் ஸ்டார்களான மோகன்லால் மற்றும் மம்மூட்டி ஆகியோரது படங்கள் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகும். ஆனால், விஜயின் படம் வெளியாகும் தேதிகளில் தங்கள் படங்களை வெளியிடுவதை இந்த ஜாம்பவான்களே கூட தவிர்க்கிறார்கள் என்று பிருத்விராஜ் குறிப்பிட்டுள்ளார்.

  • இன்னும் நாளு இருக்கே.. அதுக்குள்ள ஆரம்பிச்சாச்சா! நண்பர்களுடன் ‘ப்ரீ-பர்த்டே பார்ட்டியில் சில் செய்யும் திரிஷா!

    இன்னும் நாளு இருக்கே.. அதுக்குள்ள ஆரம்பிச்சாச்சா! நண்பர்களுடன் ‘ப்ரீ-பர்த்டே பார்ட்டியில் சில் செய்யும் திரிஷா!

    லேசா லேசா படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை திரிஷா. ஆரம்பங்காலங்களில் தொட்ர்ந்து நடித்தாலும் அவருக்கு ஸ்டார் அந்தஸ்தை கொடுத்தது விஜயுடன் நடித்த கில்லி படமே. அதன்பின் அவ்ர் நடித்த பல படங்கள் வெற்றிகளி குவித்தன. விஜய், அஜித், சூர்யா, விக்ரம், ரஜினி, கமல் என அனைத்து நடிகர்களுடனும் நடித்த நடிகை இவர் மட்டுமே.


    திரையுலம் வந்து 25 ஆண்டுகள் கடந்த நிலையிலும் தற்போதும் முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக மட்டும் நடித்து வருகிறார். இவர் பெரிதாக கிசுகிசுக்களில் சிக்காமல் இருந்து வருபவர். ஆனல் சமீப காலமாக விஜய் விவகாரங்களில் இவரை இணைத்து பல கிசுகிசுக்கள் வந்தவண்ணம் இருந்தன. அதுபோல் புதிய படங்கள் எதையும் ஒப்பந்தம் செய்யவில்லை என்றும் வதந்திகள் பரவின. ஆனால் அதற்கு திரிஷா உங்கள் கற்பனைக்கு ஒரு எண்டே இல்லையா என்று பதில் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் திரிஷா அவரது நண்பர்களுடன் அட்வான்ஸாக பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். திரிஷாவின் பிறந்த நாள் மே 4ம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.

  • விஜய் மீண்டும் நடிக்க வரணும்!.. அவரோட கனவு நனவாகலைன்னா!.. ஃபேவரைட் டைரக்டர் கோரிக்கை!..

    விஜய் மீண்டும் நடிக்க வரணும்!.. அவரோட கனவு நனவாகலைன்னா!.. ஃபேவரைட் டைரக்டர் கோரிக்கை!..

    நடிகர் விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி என 2 வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் பேரரசு விஜய் மீண்டும் நடிக்க வரவேண்டும் என பேசியுள்ளார். இந்த வாரம் அஜித் – ஷாலினியின் திருமண நாளை முன்னிட்டு அமர்க்களம் திரைப்படம் வெளியானது.

    அந்த படத்துக்குப் போட்டியாக விஜய், அசின், பிரகாஷ் ராஜ் நடித்த சிவகாசி படத்தை ரீ ரிலீஸ் செய்தனர். தேர்தல் பிசியில் ரசிகர்கள் இந்த வாரம் பெரிதாக தியேட்டர் பக்கமெல்லாம் போகவே இல்லை. அதனால், 2 படங்களும் பெரிதாக வசூல் அள்ளவில்லை என்கின்றனர்.

    இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் பேரரசு, விஜய் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுவிட்டால் அவர் அரசியலில் தொடரட்டும். ஆனால், ஒருவேளை அவரது கனவு நனவாகவில்லை என்றால் மீண்டும் நடிக்க வரவேண்டும்.

    அரசியலில் விஜய்க்கு இவ்வளவு மக்கள் அவர் சென்ற இடத்துக்கெல்லாம் ஆதரவு கொடுக்க காரணமே அவரது சினிமா வாழ்க்கையும் அவர் நடித்த படங்களும் தான். அந்த ரசிகர்களை அவர் எப்போதுமே கைவிட்டு விடக் கூடாது என பேரரசு பேசியுள்ளார்.

    அரசியலுக்கு வந்த பிறகும் கமல்ஹாசன், பவன் கல்யாண், சீமான் உள்ளிட்ட பலர் நடித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். விஜய்யும் அரசியலுக்கு வந்தாலும் சினிமாவில் தொடர வேண்டும் என்றும் ஜன நாயகன் படம் லீக் ஆன நிலையில், கேவிஎன் நிறுவனத்துக்கு இன்னொரு படம் பண்ணித் தர வேண்டும் என்றும் ரசிகர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

  • ஒண்ணும் தெரியாது!.. விஜய்யின் அரசியல் குறித்த கேள்விக்கு.. ஒரே போடாக போட்ட மம்மூக்கா!..

    ஒண்ணும் தெரியாது!.. விஜய்யின் அரசியல் குறித்த கேள்விக்கு.. ஒரே போடாக போட்ட மம்மூக்கா!..

    நடிகர் விஜய் அரசியலில் நுழைந்தது தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை உருவாக்கியிருக்கிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது. விஜயின் அரசியல் குறித்து பலரும் பல விதமாக தங்களது கருத்துக்களை முன் வைத்த நிலையில் தற்போது மலையாள நடிகர் மம்மூட்டியிடம் மைக்கை நீட்டி கேள்விக் கேட்க அவர் சொன்ன வார்த்தை வைரலாகி வருகிறது.

    2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜயின் தவெக கட்சி தனியாக போட்டியிட்டது. கடைசி வரை கூட்டணிக்கு முயன்றும் யாரும் வரவில்லை. திமுக பல கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து வைத்திருந்தது. ஆனாலும், அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி திமுக மற்றும் அதிமுக என்ற பாரம்பரிய போட்டிக்கு மூன்றாவது பெரிய போட்டியாக மாறியது. இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களிடையே விஜய்க்கு அதிக ஆதரவு காணப்பட்ட நிலையில் அவரது ரசிகர் மன்றம் அரசியல் அமைப்பாக மாறி வலுவான அடிப்படை உருவாக்கியுள்ளது.

    தேர்தலுக்குப் பிறகு, இது ஆரம்பமே என்று தெரிவித்துள்ள விஜய் உண்மையில் ஆட்சியை பிடிப்பாரா அல்லது கிங்மேக்கராக இருப்பாரா? என்பது வரும் தேர்தல் முடிவுகளால் தான் தெளிவாகும்.

    இந்நிலையில், தனுஷ் படத்தில் நடித்து வரும் மம்மூட்டி படப்பிடிப்பு வேலைக்காக சென்னை வந்திருந்த நிலையில், செய்தியாளர்கள், தமிழக தேர்தல் சூழல், கேரள அரசியல் நிலைமை மற்றும் விஜயின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து கேள்விகள் எழுப்பினர். இதற்கு பதிலளித்த மம்மூட்டி, “ஒண்ணும் தெரியாது” என்று சுருக்கமாக கூறி, சிரித்தபடியே அங்கிருந்து விலகினார்.

    அவரின் இந்த குறுகிய பதில் எந்தவித அரசியல் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தாததாக இருந்தாலும், சமூக வலைதளங்களில் பல்வேறு விளக்கங்களுடன் பரவி வருகிறது. சிலர் இதை நேரடியாக கருத்து தெரிவிக்காமல் நுணுக்கமாகத் தவிர்த்த பதிலாகக் கருத, மற்றவர்கள் விஜயின் அரசியல் குறித்து கருத்து சொல்ல விரும்பாத அணுகுமுறையாகவும் பார்க்கின்றனர். விஜய்க்கு ஒண்ணும் தெரியாது என மம்மூட்டி கூறிவிட்டார் என்றும் திமுகவினர் கிளப்பி வருகின்றனர்.

  • ஜன நாயகன் லீக் பிரச்சனை.. தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் விஜய் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியது என்ன?

    ஜன நாயகன் லீக் பிரச்சனை.. தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் விஜய் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியது என்ன?

    தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் விஜயின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பாளர் சங்க பொதுக்கூட்டத்தில் நடந்து முடிந்த தேர்தலை பற்றி பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

    1980–90களில் பல வெற்றி படங்களை இயக்கிய எஸ்.ஏ.சந்திரசேகர் சமூக பிரச்சினைகள், அரசியல், இளைஞர் கருத்துகள் போன்றவை அவரது படங்களில் அதிகம் இடம்பெறும். புதிய நடிகர்களை அறிமுகப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகித்தவர். கேப்டன் விஜயகாந்தை வைத்து பத்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். விஜய்யை சினிமாவில் அறிமுகப்படுத்தி பல படங்களையும் இயக்கினார்.

    சமீப ஆண்டுகளில் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் விஜய் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்ததாக செய்திகள் வெளியாகின. மேலும், சந்திரசேகர் அரசியல் கட்சி தொடங்கியபோது, விஜய் அதிலிருந்து தன்னைத் தூரப்படுத்திக் கொண்டதாகவும் இருவரும் தனித்தனியாக அரசியல் மற்றும் தொழிலில் செயல்பட ஆரம்பித்ததாக கூறப்பட்டது.

    விஜயின் சினிமா பயணத்தின் அடித்தளத்தை அமைத்தவர் அவர் தந்தை அதன் மேல் தனது முயற்சியால் வளர்ந்தவர் விஜய். இயக்குநர் , தந்தை , வழிகாட்டி என்ற மூன்று நிலைகளிலும் முக்கியமான பங்களித்துள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர். விஜய் தற்போது நடிகராக மட்டுமல்லாமல் அரசியல்வாதியாகவும் உருவெடுத்திருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வரலாறு காணாத வாக்கு எண்ணிகைக்கு காரணமாகவும் விஜய் அமைந்துள்ளார் என தவெகவினர் கூறுகின்றனர்.

    இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்கூட்டத்தில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர் இந்த தேர்தலில் மக்கள் எவ்வளவு விழிப்புணர்வாக இருந்தார்களோ அதே போல் நீங்களும் இருக்க வேண்டும். முதலில் பொதுக்கூட்டத்தில் எல்லாரும் கலந்துக்கொள்ள வேண்டும். மேலும், தங்களின் அறிக்கைகளும், திட்டங்களும் வார்த்தை வடிவில் மட்டுமல்லாமல் செயல் வடிவிலும் இருக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

    ஜன நாயகன் படம் இணையத்தில் திருட்டுத் தனமாக லீக் ஆன விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் நடவடிக்கை என்ன என்பது குறித்த கேள்விக்கு படத்தின் எடிட்டர் ராகவ் பிரதாப்பை இடைக்கால நீக்கம் செய்துள்ளதாக சங்க நிர்வாகிகள் பதில் அளித்தனர்.

    ஓடிடி நிறுவனங்களின் தலையீடு, நடிகர்கள் அதிக சம்பளம் கேட்பது போன்ற பல விசயங்கள் இந்த சங்க கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. லாபத்தில் வரும் ஷேர் அடிப்படையிலேயே முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்க வேண்டும் என்கிற தீர்மானமும் மற்ற மாநில தயாரிப்பாளர்களுக்கு பதில், தமிழ்நாட்டில் உள்ள தயாரிப்பாளர்களுக்கு முன்னணி நடிகர்கள் கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டது.

  • மே 4ம் தேதி த்ரிஷா பிறந்தநாளை கொண்டாட விஜய் வெளிநாடு போறாரா?.. சிடிஆர் நிர்மல் ஒரே அடி!..

    மே 4ம் தேதி த்ரிஷா பிறந்தநாளை கொண்டாட விஜய் வெளிநாடு போறாரா?.. சிடிஆர் நிர்மல் ஒரே அடி!..

    தேர்தல் முடிந்த கையோடு உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்துடன் துபாய்க்கு கிளம்பிச் சென்றுவிட்டார். அடுத்ததாக கோடை வெயிலை சமாளிக்க கொடைக்கானலுக்கு ஸ்டாலினும் தனது மனைவியுடன் கிளம்பிச் சென்றுவிட்டார்.

    இந்நிலையில், வரும் மே 4ம் தேதி தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் வரும் நாளில் தவெக தலைவர் விஜய் வெளிநாட்டுக்கு டூர் கிளம்பிச் செல்லப் போகிறாரா? என செய்தியாளர்கள் சிலர் எழுப்பிய கேள்விக்கு தவெகவை சேர்ந்த சிடிஆர் நிர்மல் குமார், இதெல்லாம் பென் மீடியாவின் நரேட்டிவ் தான் என்றும் விஜய் எங்கேயும் போகவில்லை, அனைத்தும் பொய்யாக கிளப்பப்படும் வதந்திகள் மட்டுமே எனக் கூறியுள்ளார்.

    தமிழ்நாட்டு தேர்தல் முடிவுகள் வரும் மே 4ம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதே நாளில் தான் நடிகை த்ரிஷாவின் பிறந்தநாளும் மே 4ம் தேதி வரவுள்ள நிலையில், நடிகை த்ரிஷாவுடன் விஜய் வெளிநாட்டுக்கு கிளம்பிப் போக போகிறார் என சோஷியல் மீடியாவில் சில வதந்திகள் பரவத் தொடங்கி உள்ளன.

    ஆரம்பத்தில் இருந்தே விஜய்க்கு எதிரான போலியான செய்திகளை தொடர்ந்து திமுக தரப்பு பரப்பி வருவதாக கூறுகின்றனர். விஜய் அதிமுகவில் இணைந்து விடுவார், பாஜகவின் பி டீம், தேர்தலில் போட்டியிட மாட்டார், அவரது வேட்பு மனு செல்லாமல் போய்விடும், சங்கீதா விஜய் மீடியாக்கள் முன்பாக பேட்டிக் கொடுத்து விஜய் அரசியலுக்கே வேட்டு வைப்பார் என பல விதமான போலியான செய்திகளை திமுகவின் ஆதரவு ஊடங்களே பரப்பின எனக் கூறுகின்றனர்.

    வரும் மே 4ம் தேதி விஜய் எந்தளவுக்கு வாக்கு சதவீதத்தை பெறுகிறார் என்பதை காண ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.