Tag: vijayakanth

  • வலியில் துடித்த விஜயகாந்த்!.. டேய் மனுஷனாடா நீ!.. கோபத்தில் கத்திய இப்ராஹிம் ராவுத்தர்!…

    வலியில் துடித்த விஜயகாந்த்!.. டேய் மனுஷனாடா நீ!.. கோபத்தில் கத்திய இப்ராஹிம் ராவுத்தர்!…

    வசதியான குடும்பத்தில் இருந்து வந்தாலும் வசதியான வாழ்க்கையை வாழாதவர் விஜயகாந்த். சினிமா ஆசையில் சென்னை வந்து சென்னையில் தி.நகரில் ஒரு லாட்ஜில் தங்கி வாய்ப்பு தேடினார்.
    நண்பர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுப்பதற்காக சீட்டு விளையாடுவார்.. அதில் ஜெயித்த பணத்தில் சாப்பாடு வாங்கி கொடுப்பார். அதேபோல் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்து பெரிய நடிகரானதும் பல புதிய தயாரிப்பாளர்களையும், இயக்குனர்களையும், நடிகர்களையும் உருவாக்கினார். பலருக்கும் வாய்ப்பு வாங்கி கொடுத்தார்..

    ஒருபக்கம் விஜயகாந்த் மிகவும் எளிமையானவர்.. மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர். அதனால்தான் அவரை எல்லோருக்கும் பிடித்தது.. அதேபோல், ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு ஷூட்ங்கிற்கு வந்துட்டால் பெரிய இயக்குனர், அறிமுக இயக்குனர் என்றெல்லாம் பாரபட்சம் பார்க்க மாட்டார். இயக்குனர் சொல்வதை செய்வார். அதுதான் விஜயகாந்த். இந்நிலையில்தான் விஜயகாந்தை வைத்து புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் ஆகிய இரண்டு படங்களையும் இயக்கிய ஆர்.கே.செல்வமணி ஒரு புதிய தகவலை ஊடகம் ஒன்றில் சொல்லியிருக்கிறார்..

    கேப்டன் பிரபாகரன் ஷூட்டிங் கேரளாவை ஒட்டிய காடுகளில் நடந்தது. அப்போது விஜயகாந்த் காலில் ஒரு ஆணி குத்தி வெளியே வந்துவிட்டது.. வழியில் துடித்துக் கொண்டிருந்தார் ஹாஸ்பிடல் போலாம்னு எல்லாரும் சொன்னாங்க.. ஆனா என்னோட கவலை என்னன்னா மறுபடியும் இப்ராஹிம் ராவுத்தர்கிட்ட 5 ஜெனரேட்டர், ஷூட்டிங் லைட் கேட்டு மறுநாள் அவ்வளவு செலவு பண்ணி என்னால அந்த ஷாட் எடுக்க முடியாது.. அதனால விஜயகாந்த் சார்கிட்ட ‘ ஒரே ஒரு ஷாட் எடுத்துட்டு ஹாஸ்பிடல் போலாம்’னு கேட்டேன்..

    பக்கத்துல இருந்த இப்ராஹிம் ராவுத்தர் ‘மனுஷனாட நீ’ என என்னை திட்டினார்.. விஜயகாந்த் சாரை கண்ணிமை மாதிரி அவ்வளவு பாதுகாப்பா பார்த்துப்பார்.. அப்படி ஒரு நட்பு.. ஆனா விஜயகாந்த் சார் ’டேய் இர்ரா’ என சொல்லிட்டு ‘எவ்வளவு நேரம் ஆகும்?’ என்று கேட்டார்.. ‘ஒரே ஒரு ஷாட்’ என சொன்னேன்.. அந்த ஷாட்டில் நடிச்சி முடிச்சிட்டுதான் அவர் ஹாஸ்பிடலுக்கு போனாரு’ என சொல்லியிருக்கிறார் ஆர்.கே.செல்வமணி.

  • ரஜினி நடிக்க முடியாமல் விஜயகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படம்!. ஒரு பிளாஷ்பேக்!…

    ரஜினி நடிக்க முடியாமல் விஜயகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படம்!. ஒரு பிளாஷ்பேக்!…

    கலைப்புலி தாணு தயாரிப்பில், ராஜசேகர் இயக்கத்தில், நடிகர் விஜயகாந்த் நடித்து 1987ம் வருடம் வெளியான திரைப்படம் கூலிக்காரன். இந்த படத்திற்கு டி.ராஜேந்தர் இசையமைத்திருந்தார்.. இந்த படம் அசத்தலான வெற்றியை பெற்றது.. இந்த படம் உருவானதற்கு பின்னால் ஒரு பெரிய கதை இருக்கிறது.. வாங்க பார்ப்போம்..

    கலைப்புலி தாணு தயாரித்து 1985ம் வருடம் வெளியான யார் படத்தில் ரஜினி ஒரு கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். படத்தை பார்த்த ரஜினிக்கு கலைப்புலி தாணு தயாரிப்பில் ஒரு படம் நடிக்கலாம் என தோன்றியது.. அதோடு அந்த படத்தை யார் படத்தை இயக்கிய சக்தி – கண்ணன் இருவரும் அந்த படத்தை இயக்க வேண்டும் என முடிவெடுத்தார்..

    கலைப்புலி தாணுவை அழைத்து ரஜினி இதை சொன்ன போது ‘நீங்கள் இதை சொல்வது மிகவும் சந்தோஷம்.. ஆனால் சக்தி – கண்ணன் இருவரும் பிரிந்து விட்டனர்.. எனவே இப்போது அது நடக்காது’ என சொல்லியிருக்கிறார்.. அதற்கு ரஜினி ‘அப்படியென்றால் ஒன்று செய்யுங்கள்.. அமிதாப்பச்சன் நடித்த ஒரு ஒரு படம் இருக்கிறது.. அதை ரீமேக் செய்து நான் நடிக்க நினைத்தேன்.. ஆனால் இப்போது என்னால் அது முடியாது.. அந்த கதை விஜயகாந்த்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.. அந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி விஜயகாந்தை வைத்து எடுங்கள்’ என சொல்லியிருக்கிறார்.. அப்படி உருவான திரைப்படம்தான் கூலிக்காரன்..

    இந்த படத்திற்கு டி.ராஜேந்தர் இசையமைத்ததற்கு பின்னணியிலும் ஒரு கதை இருக்கிறது.. டி.ராஜேந்தர் தயாரித்து, இயக்கி, நடித்து உருவான மைதிலி என்னை காதலி படத்தை வெளியிடுவதில் டி ராஜேந்தருக்கு கலைப்புலி தாணு உதவியிருக்கிறார்.. அப்போது ‘உங்களை அடுத்த படத்திற்கு நான்தான் மியூசிக் டைரக்டர்’ என டி.ராஜேந்தர் சொல்லியிருக்கிறார்.. அந்த நட்பின் அடிப்படையில்தான் கூலிக்காரன் படத்திற்கு டி.ராஜேந்தர் இசையமைத்தது குறிப்பிடத்தக்கது..

  • விஜயகாந்தை திட்டினதுக்கு வடிவேல் வாங்கிய கூலி!.. கொந்தளிக்கும் ஃபேன்ஸ்!…

    நடிகர் வடிவேலு சினிமாவில் சரியான வாய்ப்பில்லாமல் தவித்தபோது தன்னுடைய படங்களில் வாய்ப்பு கொடுத்து அவரை தூக்கி விட்டவர்தான் விஜயகாந்த். சின்னக் கவுண்டர் படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க கவுண்டமணி சம்மதிக்கவில்லை. ஆனால் விஜயகாந்த் சிபாரிசில் வடிவேலுவுக்கு ஒரு வேடம் கிடைத்தது.

    அதோடு போடுவதற்கு சட்டை, வேஷ்டிகளையும் வடிவேலுவுக்கு விஜயகாந்த் வாங்கி கொடுத்ததாக நடிகர் மீசை ராஜேந்திரன் சொல்லியிருந்தார்.
    வடிவேலு எப்போதும் தன்னை தூக்கிவிட்டவர்களை நினைத்து பார்த்ததில்லை. அவர்களை மதித்ததும் இல்லை. கொஞ்சமும் நன்றி உணர்வே இல்லாதவர்தான் வடிவேலு. அதோடு, யாருக்கும் எந்த உதவியும் செய்யமாட்டார். தன்னுடன் பல படங்களில் நடித்த சில காமெடி நடிகர்கர் இறக்கும் தருவாயிலும் வடிவேலு எந்த ஒரு உதவியும் செய்ததில்லை. அதுதான் வடிவேலுவின் குணம்..

    வடிவேலு ஒரு நல்ல சிறந்த நகைச்சுவு நடிகர்.. ஆனால், நிஜவாழ்வில் அவர் ஒரு வில்லன் என்றுதான் கோலிவுட்டில் சொல்வார்கள். விஜயகாந்த் மீது தனக்கிருந்த தனிப்பட்ட வன்மத்தை தீர்த்துக் கொள்வதற்காக 2011 தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போனார் வடிவேலு..

    தமிழகத்தில் பல ஊர்களுக்கும் போய் விஜயகாந்தை இஷ்டத்துக்கும் திட்டினார். ‘விஜயகாந்த் ஒரு குடிகாரன்.. அவன் உளறிக் கொண்டே இருப்பான்.. அவனுக்கு எதுவும் தெரியாது’ என்றெல்லாம் ஒருமையில் பேசினார்.. ஆனால் அந்த தேர்தலில் விஜயகாந்த் 29 தொகுதிகள் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தார்..

    இந்நிலையில், விஜயகாந்தை திட்ட வடிவேலுவுக்கு 5 கோடி சம்பளம் கொடுத்தது திமுக. அந்த மேடையில் கலைஞர் கருணாநிதியும் இருந்தார் என நடிகர் தியாகு சொன்னதை சுட்டிக்காட்டி சமூக வலைத்தளங்களில் பலரும் தற்போது பேசி வருகிறார்கள்.. குறிப்பாக கேப்டன் இமேஜை சிதைக்க திட்டமிட்டவர்களிடமே பிரேமலதா கையேந்துவதை தேமுதிகவின் உண்மையான தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    2026 சட்டமன்ற தேர்தலுக்காக திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது..

  • பொன்னம்பலத்தை பார்த்து பயந்து தூக்கு போட போட பெண்!. மனுஷன் நொந்து போயிட்டாராம்!…

    பொன்னம்பலத்தை பார்த்து பயந்து தூக்கு போட போட பெண்!. மனுஷன் நொந்து போயிட்டாராம்!…

    1980களில் இருந்து தமிழ் சினிமாவில் சண்டை காட்சி நடிகராக நடிக்க துவங்கியவர் பொன்னம்பலம். ஒருகட்டத்தில் ஹீரோவுடன் தனியாக சண்டை போடும் ஆக்சன் நடிகராக மாறினார். நல்ல உயரம், ஆஜானு பாகுவான உடம்பு என ரசிகர்களை மிரட்டினார்.. இவரை பார்த்தாலே குழந்தைகள் பயப்படுவார்கள்.. விஜயகாந்தின் பல படங்களில் அவருடன் தனியாக சண்டை போடும் வாய்ப்பு கிடைத்தது.. நாட்டாமை உள்ளிட்ட சில படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார் பொன்னம்பலம்..

    கடந்த பல வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் கூட தனது அண்ணன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாகவும், பியரில் விஷம் கலந்து கொடுத்து விட்டதாகவும், அதனால்தான் தனது கிட்னிகள் செயலிழந்து போனதாகவும்ஊடகங்களில் சொல்லியிருந்தார்.
    பொன்னம்பலத்தின் மருத்துவ சிகிச்சைக்கு நடிகர் சிரஞ்சீவி நிறைய பணத்தை கொடுத்து உதவியிருக்கிறார்..

    இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய பொன்னம்பலம் ‘கல்யாணத்துக்கு எனக்கு பொண்ணு தேடினாங்க.. ஆனால் கிடைக்கவே இல்லை.. பொண்ணு வீட்ல மாப்பிள்ளை பொன்னம்பலம் என்று சொன்னால் அய்யோ கபாலியான்னு பொண்ணு வேண்டாம்னு சொல்லிடும். காஞ்சிபுரத்தில் ஒரு பொண்ணு பாக்கப் போனோம்.. பிளாஸ்டிக் சேர் போட்டாங்க.. அதுல உக்காந்தேன்.. சேர் உடைந்துவிட்டது.. நான் அப்பவே நினைச்சேன்.. இந்த கல்யாணம் நடக்காதுன்னு.. நினைச்ச மாதிரியே என்னை கல்யாணம் பண்ணிக்க பயந்து பொண்ணு தூக்கு மாட்டிக்க போயிடுச்சு’ என்று கூறியிருக்கிறார்.

  • முடிஞ்சா செஞ்சி பாருங்க!.. நடுரோட்டில் தர்ணா பண்ணிய விஜயகாந்த்!. ஒரு பிளாஷ்பேக்!…

    முடிஞ்சா செஞ்சி பாருங்க!.. நடுரோட்டில் தர்ணா பண்ணிய விஜயகாந்த்!. ஒரு பிளாஷ்பேக்!…

    விஜயகாந்த் நடிகர் என்பதை தாண்டி மனிதாபிமானம் மிக்க ஒரு நல்ல மனிதராகவே ரசிகர்களாலும், மக்களாலும் பார்க்கப்பட்டவர். தன்னால் என்ன உதவி முடியுமோ அதை எப்போதும் மக்களுக்கு செய்தவர். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவ வேண்டும் என்கிற எண்ணத்தில் எப்போதும் இருந்தவர் இவர். அதனால்தான் அவர் அரசியலுக்கும் வந்தார்.

    திரையுலகில் பலருக்கும் உதவி செய்திருக்கிறார் விஜயகாந்த். பலரையும் சினிமாவில் வளர்த்துவிட்டிருக்கிறார். விஜய்க்கு மார்க்கெட் இல்லாமல் இருந்தபோது அவரின் அப்பா எஸ்.ஏ.சி கேட்டதால் செந்தூரப்பாண்டி படத்தில் நடித்து கொடுத்தார். இந்த படம்தான் விஜயை பி மற்றும் சி செண்டர்களில் பிரபலப்படுத்தியது.

    இந்நிலையில், பிரபல சண்டைக்காட்சி இயக்குனர் மற்றும் நடிகர் பெப்சி விஜயன் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘விஜயகாந்த் சார் அன்பு நிறைந்த ஒரு மனிதர். அவர் சாதாரண நபர் கிடையாது.. பிரச்சனை என்றால் யாராக இருந்தாலும் இறங்கி சண்டை போடுவார்.. அவர் ஒரு உண்மையான வீரன்.. யாருக்கும் பயப்பட மாட்டார்.. அதேநேரம் நேர்மைக்கும், நியாயத்துக்கும், உண்மைக்கும் மட்டுமே பயப்படுவார்..

    எனக்கு பெப்சில எந்த பிரச்சினை நடந்தாலும் முதல் ஆளா வந்துருவார். 85 ஏக்கர் இடத்தில் Ford கம்பெனி கார் நிறுத்திட்டாங்க.. நான் பிரச்சனை பண்ணேன். அடுத்த நாள் என்னை அரெஸ்ட் பண்ண போலீஸ் வந்துட்டாங்க.. இதை தெரிந்து விஜயகாந்த் சார் நிறைய பேருக்கு கூட்டிட்டு வந்து நடுரோட்டில் உட்கார்ந்துட்டார்.. நீங்க வாங்க என்ன பண்றாங்கன்னு பார்ப்போம்’ என சொன்னார்.. அதுதான் விஜயகாந்த்’ என கூறியிருக்கிறார்..

  • சித்திக் இயக்கிய தமிழ் படங்கள்… நேசமணியை மறக்க முடியுமா?

    கேரளாவிலிருந்து வந்து தமிழ் சினிமாவில் அழுத்தமான முத்திரை பதித்தவர் இயக்குனர்களில் சமீபத்தில் மறைந்த சித்திக்கும் ஒருவர். நகைச்சுவையும் உணர்ச்சிகரமான கதைகளும் கலந்த இவரது திரைப்படங்கள் எப்போதும் தனித்துவமானவை.இவர் தமிழில் இயக்கிய பெரும்பான்மையான படங்கள் வெற்றியே. அது குறித்து இங்கே காண்போம். அதுமட்டுமின்றி இவர் இயக்கிய அனைத்து தமிழ் பட்ங்களும் ரீமேக் மட்டுமே செய்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

    1. பிரண்ட்ஸ்

    சித்திக் தமிழில் இயக்கிய முதல் திரைப்படம் இது. 2001-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வந்த இப்படம், மலையாளத்தில் அவரே இயக்கிய ‘பிரண்ட்ஸ்’ படத்தின் ரீமேக் ஆகும். விஜய், சூர்யா, தேவயானி, வடிவேலு , ராதாரவி என அதிக் நட்சத்திரபட்டாங்கள் நடித்த படம் இது. இளையராஜா இசையமைத்த இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த வெற்றியில் முக்கிய பங்கு வடிவேலு காமெடி என்பது குறிப்பிடத்தக்கது. காண்ட்ராக்டர் நேசமணியை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா?

    1. எங்கள் அண்ணா

    2003-ல் மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘குரோனிக் பேச்சலர்’ படத்தின் தமிழ் ரீமேக் இது. 2004 பொங்கலன்று வெளியானது. விஜயகாந்த், பிரபுதேவா, பாண்டியராஜன், வடிவேலு, நமீதா மற்றும் பலர் நடித்திருந்தனர். விஜயகாந்த் நடித்தது மட்டுமல்லாமல் இப்படத்தை தயாரித்து வெளியிட்டார். விஜய்கந்த் நடிப்பில் வெலிவந்த ஒரு முழு நீள காமெடி படம் இது. தேவா இசையில் பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. இப்படத்தில் பிரபுதேவா – வடிவேலு கூட்டணியின் காமெடியும் மக்களை வெகுவாகக் கவர்ந்தது.இப்படமும் ஒரு கமர்சியல் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

    1. காவலன்

    மலையாளத்தில் திலீப் நடித்த ‘பாடிகார்ட்’ படத்தின் தமிழ் ரீமேக். 2011 பொங்கலன்று இப்படம் திரைக்கு வந்தது. பிரண்ட்ஸ் வெற்றிக்கு பின் மீண்டும் சித்திக்குடன் விஜய் கை கோர்த்த படம் இது, அசின், ராஜ்கிரண், வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். வித்யாசாகரின் இசை மற்றும் படத்தின் கிளைமாக்ஸ் ட்விஸ்ட் ரசிகர்களை நெகிழ வைத்தது. பிரண்ட்ஸ் அளவிற்கு வெற்றி இல்லையென்றாலும் படம் நல்ல வரவேற்பையே பெற்றது.

    1. சாது மிரண்டா

    1995-ல் வெளியான ‘மன்னர் மத்தாய் ஸ்பீக்கிங்’ என்ற மலையாள படத்தின் தழுவலாக இப்படம் 2008 பிப்ரவரி 8-ல் வெளியானது. பிரசன்னா, அப்பாஸ், காவியா மாதவன், கருணாஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். தீபக் தேவ் இசையமைத்த இப்படத்தில் காமெடி மற்றும் சஸ்பென்ஸ் கலந்திருந்தது. ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றது இப்படம்.

    1. பாஸ்கர் ஒரு ராஸ்கல்

    2015-ல் மம்மூட்டி நடிப்பில் வெற்றி பெற்ற ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தின் தமிழ் ரீமேக் இது. 2018 மே 17-ல் திரையிடப்பட்டது. அரவிந்த் சாமி, அமலா பால், சூரி, நாசர் மற்றும் பலர் நடித்திருந்தனர். குழந்தைகளுக்கான சென்டிமென்ட் மற்றும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படம் எடுக்கப்பட்டது. மலையாளத்தில் பெரிய வெற்றி பெற்றாலும், தமிழில் தோல்வியையே சந்தித்தது.

  • இயக்குனராக அவரதாரம் எடுத்த ஹீரோக்கள்- படங்கள் பற்றிய ஒரு அலசல்

    தமிழ் திடையுலகில் இன்று முதல் இன்று வரை முன்னணி நடிகர்கள் பல்ர் நடிப்பதுமட்டுமின்றி சில படங்களை இயக்கவும் செய்துள்ளனர். எம்.ஜி.ஆர் சந்திரபாபு இதற்கு உதாரணம். அதற்கு அடுத்தகால கட்டங்களில் கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் மற்றும் சரத்குமார் இயக்குனர்களாக அவதாரம் எடுத்தனர். இதில் கமல்ஹாசனி தவிர்த்து மற்ற நடிகர்களில் படங்கள் மற்றும் அதன் வெற்றி தோல்வி குறித்து இங்கு காண்போம்.

    விஜயகாந்த்:

    தமிழ் சினிமாவின் ‘கேப்டன்’ என்று அழைக்கப்படும் விஜயகாந்த், நூற்றுக்கணக்கான படங்களில் நடித்திருந்தாலும், தனது திரையுலகப் பயணத்தின் பிற்பகுதியில் ‘விருதகிரி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

    படத்தின் பின்னணி மற்றும் கதைக்களம்:

    2010-ம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் கதையாகும். இதில் விஜயகாந்த் ‘விருதகிரி’ என்ற நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களைக் காப்பாற்றும் ஒரு சர்வதேசக் கடத்தல் கும்பலுக்கு எதிரான போராட்டமே இப்படத்தின் மையக்கரு. இந்த படத்தில் சண்டைகாட்சிகள் பிரமாண்டமாக எடுத்திருந்தார். பல காட்சிகள் வெளி நாடுகளில் எடுக்கப்பட்டன. பரபரப்பான திரைக்கதை இப்படத்திற்கு கூடுதல் பல சேர்ந்தது. விருதகிரி ஓரளவிற்கு வெற்றியும் பெற்றது. இந்த படமே விஜயகாந்த் ஹீரோவாக நடித்த கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: மன்சூர் அலிகான்னா அடிப்பீங்க!.. நயினார் நாகேந்திரன்னா பயமா?.. திரிஷா மௌனம் ஏன்?…

    சத்யராஜ்:

    வில்லனாகத் தொடங்கி கதாநாயகனாக உயர்ந்து, பின் குணச்சித்திர நடிகராகப் கலக்கிகொண்டிருக்கும் சத்யராஜ், தான் உச்சத்தில் இருந்த காலத்தில் இயக்கிய ஒரே திரைப்படம் வில்லாதி வில்லன்.

    படத்தின் பின்னணி மற்றும் கதைக்களம்:

    1995-ம் ஆண்டு வெளியான இப்படம் சத்யராஜின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல். இதில் அவர் மூன்று விதமான வேடங்களில் நடித்திருப்பார். ஒரு ஊழல்வாதி அரசியல்வாதிக்கும், அவருக்கு எதிராகப் போராடும் இளைஞனுக்கும் இடையிலான மோதலை நகைச்சுவை கலந்த ஆக்ஷனாக அவர் இயக்கியிருந்தார்.
    இயக்குநராக இருந்துகொண்டே மூன்று சவாலான கதாபாத்திரங்களைச் கையாண்டது சத்யராஜின் திறமைக்குச் ஒரு சான்று.
    வழக்கமான கவுண்டமணியுடன் இணைந்து தனது ‘லொள்ளு’ பாணி நகைச்சுவையைத் திரைக்கதையில் அழகாக பயன்படுத்தியிருந்தார். நக்மாவின் கவர்ச்சி மர்றும் வித்யாசாகரின் பாடல்கள் என அனைத்தும் படத்தின் வணிக ரீதியான வெற்றிக்கு கை கொடுத்தது.

    இதையும் படிங்க: இது இருந்தால் எதுவும் தேவையில்லை… விக்னேஷ் சிவன் சொன்ன காதலர் தின வாழ்த்து..

    சரத்குமார்:

    ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்த சரத்குமார், தனது 100-வது திரைப்படமான ‘தலைமகன்’ மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார்.

    படத்தின் பின்னணி மற்றும் கதைக்களம்:

    2006-ம் ஆண்டு வெளியான இப்படம் ஒரு புலனாய்வுப் பத்திரிகையாளரின் போராட்டத்தை மையமாக கொண்ட கதை களம். நிலத்தடி நீர் சுரண்டல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற முக்கியமான சமூகப் பிரச்சினைகளை மையமாக வைத்து இபடத்தின் கதையை வைத்திருந்தார். இப்படத்திற்குப் பால் ஜேக்கப் இசையமைத்திருந்தார். ஒரு நடிகராகத் தான் விரும்பிய வேகத்தைத் திரைக்கதையில் கொண்டு வர சரத்குமார் முயன்றார். ஆனாலும் படம் தோல்வியையே சந்தித்தது.

  • உண்மையான கத்தியை எடுத்த விஜயகாந்த்..அல்லு விட்ட தலைவாசல் விஜய்

    1992ல் இயக்குனர் செல்வா இயக்கத்தில் வெளிவந்த தலைவாசல் படம் மூலம் அறிமுகம் ஆனவர் விஜய். இப்படத்தின் வெற்றிக்கு பின் தலைவாசல் விஜய் என்ற அடைமொழியிலேயே அழைக்கப்பட்டார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி எனப் பல்வேறு மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    இந்த நிலையில் தலைவாசல் விஜய், விஜயகாந்த் குறித்து சொன்ன விசயங்கள் இணையத்தில் வைரலாக பரவியது. பெரிய மருத்து படப்பிடிப்பில் நடந்த அந்த விசயம் என்னவெனில், பெரிய மருது படத்தின் ஒரு முக்கியமான சண்டைக் காட்சியில், விஜயகாந்த் ஒரு பெரிய கத்தியால் எதிரிகளைத் தாக்குவது போலப் படமாக்கப்பட்டது. பொதுவாக சினிமாவில் சண்டைக் காட்சிகளில் டம்மி கத்திகளையே பயன்படுத்துவார்கள். அந்த காட்சியில் விஜயகாந்த் என் கையை வெட்டுவது போல காட்சி எடுகக் வேண்டும். ஆனால் அங்கு டம்மி கத்தி இல்லை. நிஜ கத்திதான் இருந்தது. உடனே விஜயகாந்த் தலைவாசல் விஜயிடம் என் மேல் நம்பிக்கை உள்ளதா என்று கேட்டார். ஒரு நிமிடம் திக் என்று இருந்தது. ஆனாலும் ஏதும் தப்பா நடந்தாலும் கேப்டன் நம்மை விட மாட்டார் என்ற நம்பிக்கை இருந்ததால் ஓகே சொன்னேன்.

    கேப்டன் அந்த கத்தியைச் சுழற்றிய விதம் பயங்கரமாக இருந்தது. கத்தி என் முகத்திற்கு மிக அருகில் வந்து சென்றது. ஒரு சிறிய பிசிறு ஏற்பட்டிருந்தாலும் எனக்குப் பலத்த காயம் ஏற்பட்டிருக்கும். ஆனால், விஜயகாந்த் சண்டைக் காட்சிகளில் மிகவும் கைதேர்ந்தவர் என்பதால், அந்த ஆபத்தான காட்சியை மிகத் துல்லியமாகச் செய்து முடித்தார் என்று வியந்து கூறியுள்ளார். மேலும், படப்பிடிப்பு முடிந்ததும் விஜயகாந்த் தன்னிடம் வந்து பயந்துட்டியா விஜய்? என்று அன்போடு கேட்டதாகவும் அவர் கூறினார்.

  • Vijayakanth: உலகத்துல எந்த ஹீரோவும் இத பண்ணல! விஜயகாந்த் பற்றி தயாரிப்பாளர் சொன்ன பெரிய ஷாக்

    தமிழ் சினிமாவில் ஒரு தன்னிகரற்ற மனிதராக ஹீரோவாக ஜொலித்தவர் நடிகர் விஜயகாந்த். அவர் இன்று இல்லாவிட்டாலும் அவருடைய பெருமைகளை பற்றியும் மகத்தான குணத்தை பற்றியும் நாம் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். இதற்கு முன் எம்ஜிஆரை பற்றித்தான் அனைவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். எம்ஜிஆருக்கு பிறகு விஜயகாந்த் தான் அனைவர் மனதிலும் நின்று ஒளி வீசிக் கொண்டிருக்கிறார்.

    கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் விஜயகாந்த். எம்ஜிஆர் எப்படி தன் படங்களை பார்த்து இளைஞர்கள் நல்ல முறையில் வளரவேண்டும் என்று நினைத்தாரோ அதே போல் விஜயகாந்தும் தன் படங்களின் மூலம் தமிழ் மொழி பற்றியும் தமிழனாக பிறந்ததன் பெருமை பற்றியும் பல வகைகளில் பேசியிருப்பார்.

    இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் தேனப்பனும் விஜயகாந்த் பற்றி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதாவது தமிழில் கிட்டத்தட்ட 55 புதுமுக இயக்குனர்களை அறிமுகமாக்கியவர் விஜயகாந்த். இதுவரை உலகத்தில் எந்த ஹீரோவும் அப்படி செய்ததில்லை என்று கூறியுள்ளார். அதுமட்டுமில்ல விஜயகாந்திடம் இருந்து தைரியம், நேர்மை இதை எல்லாவற்றையும் நான் கற்றுக் கொண்டேன் என்று தேனப்பன் கூறியுள்ளார்.

    மேலும் விஜயகாந்தை வைத்து தேனப்பன் தயாரித்த முதல் படம் சொல்வதெல்லாம் உண்மை. அந்தப் படத்தால் தேனப்பனுக்கு 3.50 லட்சம் நஷ்டமாம். இருந்தாலும் என் நஷ்டத்தை அவரே பொறுப்பேற்றுக் கொண்டார் என்றும் விஜயகாந்த் கூறினார். அதற்கு அடுத்தபடியாக பூந்தோட்ட காவல்காரன் படத்தை தேனப்பன் எடுக்க அந்தப் படத்தால் 7 லட்சம் லாபம் வந்ததாம்.

    அதை அப்படியே விஜயகாந்தும் ராவுத்தரும் தன்னிடம் வந்து கொடுத்ததாக தேனப்பன் கூறினார். விஜயகாந்தும் ராவுத்தரும் இல்லையெனில் நான் திரும்பவும் ஊருக்கே போயிருப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.

  • Vijayakanth: நினைச்சு பார்க்க கூட முடியல! விஜயகாந்துக்கு ஜோடி ஷில்பா ஷெட்டியா? என்ன படம் தெரியுமா?

    தமிழ் சினிமாவில் 90கள் காலகட்டத்தில் ஃபேமிலி ஆடியன்ஸை ஈர்க்கும் வகையில் பல நல்ல நல்ல படங்கள் வெளியாகிக் கொண்டே வந்தன. அப்போதெல்லாம் ஆக்‌ஷனுக்கு இடமே இருக்காது. தேவைப்படும் இடத்தில்தான் ஆக்‌ஷன் இருக்கும். மற்றபடி நாம் நாள்தோறும் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகள், சூழ் நிலைகள் இவைகளை சுற்றித்தான் படமே எடுத்திருப்பார்கள்.

    அதனால்தான் என்னவோ அந்தப் படங்கள் எல்லாமே நம்முடன் கனெக்ட் ஆகும்படியே இருந்திருக்கின்றன. சென்டிமென்ட், எமோஷன், ஆக்‌ஷன், காமெடி இதெல்லாம் சேர்ந்துதான் ஒரு படமாகவே வெளியாகும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் படமுழுக்க ஆக்‌ஷன் , வெட்டுக்குத்து, அடிதடி இது இருந்தால்தான் ரசிகர்கள் படங்களை பார்க்கவே வருகிறார்கள். செண்டிமெண்ட் இருந்தால் இதெல்லாம் ஒரு படமா என்று கேட்டுவிட்டு தியேட்டரை விட்டு வெளியேறி விடுகிறார்கள்.

    அப்படிப்பட்ட காலகட்டத்தில் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்படி 90கள் காலகட்டத்தில் நம்மை குடும்பம் குடும்பமாக கொண்டாட வைத்த படங்களில் மிகவும் குறிப்பிடத்தக்க படம் என்றால் வானத்தை போல படத்தை சொல்லலாம். விக்ரமன் இயக்கத்தில் விஜயகாந்த் டபுள் கேரக்டரில் நடித்திருப்பார். மீனா ஜோடியாக நடித்திருப்பார். ஆனால் மீனாவுக்கு முன்னாடி அந்தப் படத்தில் கமிட் ஆனவர் ஷில்பா ஷெட்டியாம்.

    விக்ரம் படத்தில் நடிக்கலாமா வேண்டாமா என முதலில் குஷ்புவிடம்தான் ஷில்பா ஷெட்டி கேட்டிருக்கிறார். ஹீரோயின்களை மிக அழகாக காட்டக் கூடிய இயக்குனர், முக்கியத்துவம் கொடுப்பார். தாராளமாக நடிக்கலாம் என குஷ்பு சர்ட்டிஃபிக்கேட் கொடுத்த பிறகே ஷில்பா ஷெட்டி மும்பையில் இருந்து கிளம்பிவந்தாராம். வந்து போட்டோஷுட் எல்லாம் எடுத்திருக்கிறார்கள்.

    ஆனால் படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கார் ரவிக்கு ஷில்பா ஷெட்டி பொருத்தமாக இல்லை என்று ஃபீல் செய்திருக்கிறார். அதன் பிறகு ரோஜாவை கேட்ட போது அதற்கு ரவி வேண்டாம் என சொல்லி அவர்தான் மீனாவை கமிட் செய்தாராம். ஆனால் எதிர்பார்த்ததையும் விட மீனா அந்தப் படத்தில் அழகாக நடித்திருந்தார் என விக்ரமன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.