Author: adminram

  • Sivakarthikeyan: அப்போ விஜய் இப்போ சிம்பு…சிவகார்த்திகேயனுக்கு போற இடமெல்லாம் பிரச்சனைதானா?

    விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமானவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையின் மூலமே ஏராளமான ரசிகர்களை பெற்ற இவர் மெரினா படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வந்த 3 படத்தில் காமெடி வேடத்தில் நடித்தார். சிவகார்த்திகேயனின் நட்புக்காக தனுஷ் அவரை எதிர் நீச்சல் படம் மூலம்
    நாயகனாக உருவாக்கினார். தொடர்ந்து தனுஷ் தயாரிப்பில் காக்கிசட்டை படத்திலும் நடித்தார். ஒரு கட்டத்தில் தனுஷுடன் நட்பு முறிவு ஏற்பட்டது.

    இந்த நிலையில் பொங்கலையொட்டி அவர் நடிப்பில் வெளிவந்த படம் பராசக்தி. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த இப்படம் தோல்வியை தழுவியது. முன்னதாக விஜய் நடிப்பில், ஜனநாயகன் படத்துடன் இப்படம் வருவதாக இருந்தது. இதனை பலரும் விமர்சித்தனர். விஜய் கடைசி படம் என்பதால் சிவகார்த்திகேயன் தனது படத்தை சில நாட்கள் கழித்து வெளியிடலாமே என்று பலரும் கூறினர். இது சமூகவலைதளங்களில் விவாத பொருளாக மாறியது. விஜய் ரசிகர்களும் பராசக்தி படத்திற்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டனர்.

    simbu

    இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த சிவகார்த்திகேயன் மாநாடு படம் முதலில் என்னிடம்தான் வந்தது. ஆனால் நான்தான் சிம்பு பிரதர் இப்படத்திற்கு சரியானவராக இருப்பார் என்று இயக்குனரிடம் கூறினேன் என்று பேட்டி அளித்தார். இதனை பிடித்துக் கொண்ட சிம்பு ரசிகர்கள் சிவகார்த்திகேயனுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

  • தொலைக்காட்சியில் ஜன.4ல் பராசக்தி விழா ஒளிபரப்பு?…ஜனநாயகனை விடாமல் துரத்தும் பராசக்தி

    விஜய் நடிப்பில் பொங்கலையொட்டி வருகிற 9ம் தேதி வெளியாக உள்ள படம் ஜனநாயகன். வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ என முன்னணி நட்சத்திரங்கள் பல நடித்துள்ள இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்றது. மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இந்த விழாவின் ஒளிபரப்பு உரிமையை ஜி டீவி பெற்றிருந்தது. இந்த விழா நிகழ்ச்சிகள் வருகிற 4ம் தேதி ஒளிபரப்பாகிறது.

    இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கலையொட்டி 10ம் தேதி வெளியாக உள்ள படம் பராசக்தி. ஆரம்பத்தில் ஜனநாயகன் படம் வெளியாவதால் பராசக்தி 10 நாட்கள் இடைவெளியில் வருவதாக இருந்தது. ஆனால் திடீரென 10ம் தேதி வெளியாவதாக படக்குழு அறிவித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூகவலைதளங்களில் இது பெரும் விவாதமாக மாறி வருகிறது.

    இந்த நிலையில் பராசக்தி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற 3ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை பிரபல தொலைக்காட்சியில் ஜனவரி 4ம் தேதி ஓளிபரப்புவதாக பேசப்படுகிறது. அதே தேதியில் ஜனநாயகன் விழா ஒளிபரப்பவதால் இதிலும் போட்டியா என பலரும் கருதுகின்றனர்.

  • மாதவிடாய் தீட்டு அல்ல; அது வரம்: தைரியமாக பேசிய அர்ச்சனா

    ராஜா ராணி சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகை அர்ச்சனா. அதைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னரும் ஆனார். இதையடுத்து அவ்ருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது. பார்தி கண்ணம்மா சீரியலில் நடிட்ய்த் அருணுக்கும் இவருகும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது.

    இந்த நிலையில்அர்ச்சனா நவீன் கணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள பல்ஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அதில் பேசிஅ அர்ச்சனா, மாதவிடய் என்பது தீட்டு அல்ல. இறைவன் பெண்களுக்கு கொடுத்த வரம். மாதவிடாய் பெண்களை தாயாக மாற்றக்கூடிய ஒரு அடிப்படை விஷயம். இதில் அவமானப்பட வேண்டிய எந்த விசயமும் இல்லை என்று பேசினார்.

  • கண்ணை பறிக்கும் ரெட்… கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பிரியா பவானி சங்கர்

    செய்தி வாசிப்பாளராக பணியை துவங்கியவர் பிரியா பவானி சங்கர். தொடர்ந்து மேயாத மான் படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். முதல் படெம் ஓரளவிற்கு வெற்றியும் பெற்றது. தொடர்ந்து கடைகுட்டி சிங்கம், மான்ஸ்டர், ருத்ரன், பொம்மை என 18 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஜீவாவுடன் இவர் நடித்த பிளாக், அருள் நிதியுடன் நடித்த டிமாண்டி காலனி 2 படங்கள் வெற்றியை பெற்றது.

    இந்த நிலையில் பிரியா பவானி சங்கர் கிருஸ்துமஸ் கொண்டாடத்தில் எடுத்த் தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இந்த புகைபடங்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றன.

  • அப்பா மாதிரி இருக்கீங்க.. நீங்க ஹீரோவா…எம்.ஜி.அரிடம் கேட்ட தாய்லாந்து நடிகை

    இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஓர் சொல்ல வேண்டும் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து மறைந்தவர் எம்.ஜி.ஆர். இவர் இறந்து இத்தனை ஆண்டுகாலம் ஆனாலும் இன்றும் அவர் பெயரை உச்சரிக்காத ஆட்கள் இல்லை.

    தமிழ் சினிமாவில் 60,70களில் வசூல் மன்னனாக இருந்தவர் எம்ஜிஆர். அவரது தோல்வி படம் கூட நல்ல வசூலை கொடுக்கும் என்பார்கள். சினிமா மட்டுமல்ல அரசியலிலும் முத்திடை பத்தித்தவர் அவர். எம்ஜிஆர் சினிமா கேரியரில் உலக சுற்றும் வாலிபன் படம் மிக முக்கியமானது. அந்த காலத்திலேயே உலகின் முக்கிய நாடுகளுக்கு சென்று படப்பிடிப்பை நடத்தினார். தற்போது வரை உலகம் சுற்றும் வாலிபன் எங்கு ரீ ரிலீஸ் செய்தாலும் வசூல் கொட்டிக் கொண்டுதான் உள்ளது.

    இந்த நிலையில் பிர்டபல் யூடியுப் சேனல் ஒன்இல் இயக்குனர் பாரதி மோகன் பேட்டியளித்தார். அப்போது உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பு சமயத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்ரை கூறினார். அவர் கூறியதாவது,

    உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பு சமயத்தில் தாய் லாந்து நடிகை ஒருவரை தேடினர்.அபோது தொலைக்காட்சியில் நடித்துகொண்டிருந்த மீட்டா ரூங்ரட் (Metta Roongrat) தேர்வு செய்யப்பட்டார். அவரை சந்திக்க சாதாரணமாக சென்றாராம் எம்.ஜி.ஆர். அப்போது அந்த நடிகை நடிக்க சம்மதம் படத்தின் ஹீரோ யார் எனக் கேட்டாராம். அதற்கு எம்ஜிஆர் நான்தான் என்று கூறினாராம். உடனே தாய்லாந்து நடிகை என்ன சொல்கிறீர்கள் நீங்கள் அப்பா மாதிரி இருகிறீர்களே என்று கூறினாராம். இதனை எம்ஜிஆர் அப்படத்தின் ஒளிப்பதிவாளரிடம் கூறினாராம் எம்ஜிஆர். அதற்கு அவர்கள் நீங்கள் இவ்வாறு சென்று இருக்க கூடாது சரி பார்த்துகொள்ளலாம் என்று கூறினாராம்

    இந்த நிலையில்படப்பிடிப்புக்கு அந்த நடிகை வந்தாராம். அப்போது எம்ஜிஆர் பேண்ட் சர்ட் கோட்டுடன் அணிந்து கண்ணாடி போட்டபடி நின்று கொண்டிருந்தாராம். எம்ஜிஆரை கண்ட அந்த நடிகை மிகவும் ஆச்சர்யமாக பார்த்து வாவ் சூப்பரா இருக்கிங்க, இப்போ உங்க வயசே தெரியலயே என்று கூறினாராம். அவர்கள் இருவரும் இணைந்து நடித்ததுதான் பச்சகிளி முத்துசரம் முல்லைகொடி யாரோ என்ற பாடல்.

  • Jananayagan First Review: இந்த பொங்கல் செம கலெக்சன் மா…. இதோ வந்துருச்சில்ல முதல் விமர்சனம்

    Jananayagan First Review: இந்த பொங்கல் செம கலெக்சன் மா…. இதோ வந்துருச்சில்ல முதல் விமர்சனம்

    இந்த பொங்கல் விஜய் ரசிகர்களுக்கு கொண்ட்டட்டம்தான். காரணம் விஜய் நடிப்பில் வெளியாக் இருக்கும் ஜனநாயகன்தான். ச்னிமாவை விட்டு அரசியலுக்கு சென்ற விஜய்க்கு இது கடைசி படம். இதனால் ரசிகர்கள் கொண்டாடி தீர்க்க காத்திருக்கின்றன.

    விஜய், பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ஹெச். வினோத் இயக்கியிருக்கிறார். அன்ருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி ஹிட்டானது நாம் அறிந்ததே.

    விஜய் கடைசிபடம் என்பதால் படம் எப்படி இருக்கும் என பலரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில் ஜனநாயகன் படத்தின் முதல் விமர்சனத்தை பிரபல திரையரங்க உரிமையாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அதில், இந்த படத்தை பார்த்த சிலர் படம் நன்றாக வந்துள்ளதாகவும்,இந்த பொங்கல் நமக்கு நமக்கு செம கலெக்சன் மா என்று பகிர்ந்துள்ளார்.

    https://twitter.com/BaraniDharanSM/status/2003903195190645246
  • ஜி.வி.பிரகாஷ்க்கு மச்சம்யா….Immortal டீசரை நீங்களே பாருங்களேன்

    தமிழ் சினிமாவில் தற்போது அதிக படங்களில் நடித்து வருபவர் ஜி.வி.பிரகாஷ். இசையமைக்கும்போது கூட இவ்வளவு பிஸி இல்லை. ஆனால் நடிகரானதும் கைவசம் ஏராளமான படங்கள்.

    வெயில் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் ஜி.வி பிரகாஷ்குமார். ஏ ஆர் ரகுமானின் அக்கா மகனான இவர் முதல் படத்திலேயே தன்னுடைய முத்திரையை பதித்தவர். குறுகிய காலத்திலேயே ரஜினி, அஜித், ஆர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்தார். ஒரு கட்டத்தில் எல்லா இசையமைப்பாளர்களுக்கும் வரும் ஆசை ஜிவி பிரகாசுக்கும் வந்தது. அதை தொடர்ந்து டார்லிங் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படம் கமர்சியலாக வெற்றி பெற்றதை அடுத்து மளமள வென படங்கள் குவிந்தன. கிட்டதட்ட 24 படங்களுக்கு மேல் நாயகனாக நடித்திருப்பார் இவர். இதில் பல படங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும்வெற்றிக்காக முயன்று கொண்டிருக்கிறார். இந்த படம் அவருக்கு 25வது படம். இந்த படம் காதல், ரொமான்ஸ் திரில்லர் என பயணிப்பதாக தெரிகிறது.

    இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ் , கயாடு லோஹர் நடிப்பில் Immortal படத்தின் டீஸர் இன்று வெளியானது. இதில் காட்சிக்கு காட்சி ரொமன்ஸில் புகுந்து விளையாடியுள்ளார். டீஸர் துவக்கத்தில் இளைஞர்களை கவரும் பொழுதுபோக்குத் திரைப்படமாகத் தொடங்கி, மெல்ல மெல்ல அமானுஷ்ய உலகிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. டீஸரை பார்க்கையில் இப்படம் ஜி.வி.பிரகாஷ்க்கு நிச்சயம் வெற்றியை தரும் என்பது தெரிகிறது. மாரியப்பன் சின்னா என்பவ்ர் இயக்கியுள்ளார். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.

  • என் மகளை கொல்ல முடியாமல் சாவே செத்துபோச்சு… ரஷ்மிகாவின் மைசா படத்தின் டீசர் வெளியீடு

    நேஷனல் க்ரஷ் என்று அழைக்கப்படும் ரஷ்மிகா மந்தனா நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘மைசா படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. ஏற்கெனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்த டீஸரில் கதாநாயகியின் தாயின் பின்னணிக் குரலுடன் தொடங்குகிறது. அவர் தனது மகளின் மரணத்தை மீறிய துணிச்சலைப் பற்றிப் பேசி, கடைசியா என் மகளை கொல்ல முடியாமல் சாவே செத்துபோச்சு என்றும், உலகத்தைப்பார்தது அந்தப் பெயரை நினைவில் கொள்ளுங்கள மைசா என்று கூறுவது போல் முடிகிறது. ராஷ்மிகா என்றாலே துள்ளலான மற்றும் கவர்ச்சியான காட்சிகளே நினைவ்ரும். ஆனால் இந்த படத்தில்முற்றிலும் வேறுபட்டு ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துள்ளார். ரஷ்மிகாவின் கதாபாத்திரம் இதற்கு முன் பார்த்திராத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஈஸ்வரி ராவ், குரு சோமசுந்தரம் மற்றும் ராவ் ரமேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  • சிறை விமர்சனம் : வழக்கமான பஞ்ச்ல் முடித்த புளுசட்டை மாறன்

    சிறை விமர்சனம் : வழக்கமான பஞ்ச்ல் முடித்த புளுசட்டை மாறன்

    விக்ரம் பிரபு நடிப்பில் நாளை வெளியாக உள்ள படம் சிறை. இப்படம் வெளிவருவதற்கு முன்பே பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது இந்த படத்தை விஜய் நடிப்பில் வெளியான லியோ, மாஸ்டர் படங்களை தயாரித்த லலித்குமார் தயாரிப்பது மட்டும் தனது மகனை படத்தில் இன்னொரு நாயகனாக அறிமுகப்படுத்தி இருக்கிறார் இந்த படத்தை சுரேஷ் ராஜகுமாரி என்ற இயக்குனர் இயக்கியுள்ளார். இது அவருக்கு முதல் படம். இவர் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

    இந்த நிலையில் இப்படம் குறித்துபுளுசட்டை மாறன் தனது youtube சேனனில் இப்படத்தின் விமர்சனத்தை இன்று வெளியிட்டுள்ளார் அதில் படம் மிக அருமையாக வந்துள்ளதாகவும் விக்ரம் பிரபு மட்டுமின்றி படத்தில் நடித்த அனைவரும் நன்றாக நடித்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். டாணாக்காரன் படத்தை இயக்கிய தமிழ் இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். போலிஸரின் ரகசிய வார்த்தைகல் கோர்ட் சீன் எல்லாம் மிகவும் நேர்த்தியாக உள்ளது. படத்தில் மெல்லிய மத அரசியல் உள்ளது. அதனை உன்னிப்பாக கவனிப்பவர்களுக்கு நன்கு தெரியும் என்றும் கூறியுள்ளார்.

    பொதுவாக புளுசட்டை மாறன் தனது விமர்சனத்தில் இறுதியில் படங்களில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி முடிப்பார். சிறை விமர்சனத்திலும் அவ்வாறே செய்துள்ளார். இந்த படத்தில் காதல் காட்சிகள் படத்தில் ஒட்டாமல் இருக்கிறது. அதனை மட்டும் இன்னும் கவனமாக எடுத்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும். ஆனாலும் படம் நன்றாகவே உள்ளது என்று கூறியுள்ளார்.

  • அதே 5 மணி…விஜய் மகனுடனும் போட்டி போட்ட சிவகார்த்திகேயன்

    தமிழில் சூபப்ர் ஸ்டார் என்றால் அது விஜய்தான். தற்போது அவர் அரசியல் கட்சி துவங்கி முழு நேர அரசியல்வாதியாகவே மாறிவிட்டார். இவரது நடிப்பில் கடைசி படமாக ஜனநாயகன் வருகிற பொங்கலையொட்டி ஜனவ்ரி 9ம் தேதி வெளியாகிறது.

    இந்த நிலையில் சிவகார்த்திகேயன் , ஜெயம்ரவி,அதர்வா நடிப்பில் சுதாகொங்கரா இயக்கத்தில் பராசக்தி படமும் 10ம் தேதி வெளியாகிரது. இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக் பேசப்பட்டு வருகிறது. விஜயுடன் சிவகார்த்திகேயன் வேண்டுமென்றே போட்டியிடுவதாக சமூக வலைதளங்களில் பலரும் விவாதித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் விஜய்க்கு மட்டுமல்ல விஜய் மகன் ஜேசன் சஞ்சய்க்கும் போட்டியாக மாறியிருக்கிறார் சிவகார்த்திகேயன். ஜேசன் இயகத்தில் லைக்கா புரொடக்சன் தயாரிப்பில் சந்தீப் நாயகனக நடிக்கும் சிக்மா பட்த்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது. ஆனல் அதே நேரமான 5 மணிக்கு சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பில் உருவாக உள்ள படத்தின் கிளிம்பஸ் வீடியோவும் வெளியானது. இந்த படத்தின் மர்ற விபரங்கள் நாளை வெளியாக உல்ள்து என்று கூறப்பட்டுள்ளது அந்த வீடியோவில்.

    ஏற்கெனவே ஜனநாயகனோடு மோதும் சிவகார்த்திகேயன் தற்போது விஜய் மகன் இயக்கிய படத்தின் டீஸர் வெளியான நேரத்தில் தனது படத்தின் வீடியோவையும் வெளியிட்டுள்ளது சமூக வலைதளங்களில் தந்தையுடன் மட்டுமல்ல மகனுடனும் போட்டி போடுகிறாரோ என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.