Author: adminram

  • ஆனால் இங்க பிரச்சனையே வேற … சசிகுமாரின் My Lord டிரைலர்

    சசிகுமார் நடிப்பில் மை லார்ட் படத்தின் டிரைலர் இன்று வெளியானது.

    டூரிஸ்ட் பேமிலி மாபெரும் வெற்றியை அடுத்து சசிகுமார் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் மை லார்ட் (My Lord). ஜோக்கர், ஜிப்ஸீ, ஜப்பான படங்களை இயக்கிய எல்.ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது. இந்த டிரைலரில் சசிகுமாரின் எதார்த்தமான நடிப்பும், ராஜு முருகனின் சமூக அக்கறையுள்ள கூர்மையான வசனங்களும் படத்தை ஒரு அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ளதை காட்டுகிறது. சொல்லபோனால் ஜோக்கருக்கு பின் ராஜுமுருகனின் வசனங்கள் இப்படத்தில் முக்கியத்துவம் பெற்றிருப்பது டிரைலரில் தெரிகிறது.

    டிரைலரைப் பார்க்கும்போது, கிட்னி திருட்டு தொடர்பான கதை களம் போன்று தெரிகிறது. ஜப்பான படத்தின் படு தோல்விக்கு பிறகு இப்படம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று ராஜு முருகன் தனது முழு பலத்தையும் இந்தப் படத்தில் காட்டியிருப்பது போல் தெரிகிறது.

  • OTT Releases: ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் படங்கள் – ஒரு பார்வை

    ஓடிடியில் இந்த வாரம் என்ன படங்கள் எந்த ஓடிடியில் வெளியாகிறது என்பதை இங்கு பார்ப்போம்.

    தமிழ் திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்கள்

    sirai movie

    சிறை (Sirai): கடந்த டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை ஒட்டி வெளியான படம் சிறை. டாணாகாரன் படத்தை அடுத்து காவலராக விக்ரம் பிரபு இப்ப இடத்திலும் நடித்திருந்தார் சிறை விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விக்ரம் பிரவுடன் மாஸ்டர், லியோ படங்களின் தயாரிப்பாளர் லலித்குமார் மகன் அக்ஷய்குமார் நாயகியாக அனிஷ்மா ,ஆனந்தா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சுரேஷ் ராஜகுமாரி படத்தை இயக்கியிருந்தார்

    திரையரங்குகளில் வெற்றியை அடுத்து இப்படம் ஜனவரி 23 அன்று Zee5 தளத்தில் வெளியாகிறது.

    தேரே இஷ்க் மெய்ன் (Tere Ishk Mein):

    பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ்நடித்த சமீபத்தில் வெளியான படம் தேரே இஷ்க் மெய்ன். தனுசுடன் நாயகியாக கீர்த்தி சனோன் நாயகியாக நடித்திருந்தார். ஏ ஆர் ரகுமான் இசையமைத்த இப்படம் பாலிவுட்டில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தத் காதல் காவியம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஜனவரி 23 அன்று வெளியாகிறது.

    1. பிற மொழித் திரைப்படங்கள்:

    ஏ நைட் ஆஃப் தி செவன் கிங்டம்ஸ் (A Knight of the Seven Kingdoms): கேம் ஆஃப் த்ரோன்ஸ் (Game of Thrones) சீரிஸின் இந்த முன்கதை (Prequel) ஜனவரி 19 அதாவது இன்று காலை 8.30க்கு ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது.

    சீக்கட்டிலோ (Cheekatilo): சோபிதா துலிபாலா நடித்துள்ள இந்த க்ரைம் திரில்லர் தெலுங்குத் திரைப்படம் அமேசான் பிரைமில் ஜனவரி 23 அன்று வெளியாகிறது.

    குஸ்தாக் இஷ்க் (Gustakh Ishq): விஜய் வர்மா, பாத்திமா சனா சாய்க் மற்றும் நஸ்ருதின் ஷா நடித்துள்ள இந்தப் படம் ஜனவரி 23 அன்று ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.

  • அப்போ பார்த்தது போலவே இருக்காரே….10வது திருமண நாளை கொண்டாடும் அசின்

    தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை அசின். ரவிமோகன் நடிப்பில் வந்த குமரன் சன் ஆப் மகாலட்சுமியில் அறிமுகம் ஆன அவர் விஜய், அஜித், கமல்ஹாசன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தவர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் வலம் வந்த அவர், தனது திரைப்பயணத்தின் உச்சத்தில் இருந்தபோது, மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவைத் திருமணம் செய்துகொண்டார். தற்போது அவர்கள் தங்களது 10-வது திருமண ஆண்டைக் கொண்டாடுகின்றனர். 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அசின் – ராகுல் சர்மா திருமணம் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

    திருமணத்திற்கு பின்பு திரையுலகை விட்டு வில்கி இருந்த அசின் எப்போதாவது சில புகைபடங்களை சமூகவலைதளங்களில் பகிர்வார். இந்த நிலையில் தனது 10வது திருமண நாளையொட்டி அவரது கணவர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் 10 வருடங்கள் ஆனாலும் அப்போது பார்த்த மாதிரியே அசின் இப்போது உள்ளார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

    அசின்-ராகுல் தம்பதியருக்கு அரின் என்ற மகள் உள்ளார்.

  • இரண்டாவது முறையாக ஜீவாவுடன் மோதி தோல்வி அடைந்த கார்த்தி

    தமிழ் திரையுலகில் நடிகர்களுக்கு இடையேயான ஆரோக்கியமான போட்டி என்பது எப்போதும் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும். அந்த வகையில் நடிகர் ஜீவா மற்றும் கார்த்தி ஆகிய இருவரது திரைப்பயணத்திலும் சில சுவாரசியமான மோதல்கள் நிகழ்ந்துள்ளன.

    1. என்றென்றும் புன்னகை vs பிரியாணி

    2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடிகர் ஜீவா நடித்த ‘என்றென்றும் புன்னகை’ மற்றும் கார்த்தி நடித்த ‘பிரியாணி’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் மோதிக்கொண்டன.

    என்றென்றும் புன்னகை: இயக்குனர் ஐ.அஹமது இயக்கத்தில் ஜீவா, வினய், சந்தானம் மற்றும் த்ரிஷா நடித்த இந்தப் படம் ஒரு பக்கா ‘பீல் குட்’ மூவியாக அமைந்தது. நண்பர்களுக்கு இடையேயான நட்பு, காதல் மற்றும் தந்தை-மகன் உறவை அழகாகப் பேசிய இந்தப் படம், ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பெரிய வெற்றியைப் பெற்றது. ஜீவாவின் எதார்த்தமான நடிப்பு இதில் பெரிதும் ரசிக்கப்பட்டது.

    பிரியாணி: வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்த இந்தப் படம் ஒரு பிளாக் காமெடி திரில்லர் பாணியில் உருவானது. யுவன் சங்கர் ராஜாவின் 100-வது படம் என்ற எதிர்பார்ப்போடு வெளியான இது, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தது. கார்த்தியின் ஸ்டைலான நடிப்பும், நகைச்சுவையும் ரசிகர்களைக் கவர்ந்தது.
    இந்த இரண்டு படங்களுமே வெவ்வேறு ஜானர்களில் இருந்ததாலும் என்றென்றும் புன்னகை வசூலில் பிரியாணியை முந்தியது.

    1. தலைவர் தம்பி தலைமையில்: வா வாத்தியார்

    இயக்கனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘வா வாத்தியார்’. இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர்கள் வெளியான போதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் படம் வெளியானது அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

    ஆனால் எவ்வித எதிர்பார்ப்புமட்டுமின்றி விளம்பரமே இல்லாமல் வெளியான படம் தலைவர் தம்பி தலைமையில். ஜீவா நடித்துள்ள இந்த படம் யாரும் எதிர்பார்க்காவகையில் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது. ஆக இந்த பொங்கலில் பராசக்தி, வா வாத்தியாரை பின்னுக்கு தள்ளி தலைவர் தம்பி தலைமையில் பட்டையை கிளப்பி வருகிறது. இதன் மூலம் கார்த்தியை இரண்டாவது முறையாக வென்றுள்ளார் ஜீவா.

  • Bigg Boss 9 Finale:: வின்னர் திவ்யா கணேஷுக்கு பணம் மட்டுமல்ல; கொடுக்கப்பட்ட இன்னொரு ஸ்பெஷல் பரிசு என்ன தெரியுமா?

    Bigg Boss 9 Finale:: வின்னர் திவ்யா கணேஷுக்கு பணம் மட்டுமல்ல; கொடுக்கப்பட்ட இன்னொரு ஸ்பெஷல் பரிசு என்ன தெரியுமா?

    விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 மாதங்களாக ஒளிபரப்பான பிக்பாஸ் 9வது சீசன் இன்று இறுதி கட்டத்தை எட்டியது.

    இந்த சீசனில் இறுதியில் நான்கு போட்டியாளர்கள் இருந்த நிலையில் திவ்யா கணேஷ் அதிக வாக்குகள் பெற்று பிக்பாஸ் டைட்டில் வின்னராக தேர்வானார். இவர் வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    வழக்கமாக டைட்டில் வின்னருக்கு ரூ. 50 லட்சம் பரிசாக கொடுப்பது வழக்கம். ஆனால் இந்த முறை கூடுதலாக ஒரு சிறப்பு பரிசும் கொடுக்கப்பட்டது. இந்த ஷோவின் ஸ்பான்சர் ஆக இருக்கும் மாருதி சுசுகி நிறுவனம் தனது லேட்டஸ்ட் கார் ஒன்றை திவ்யாவுக்கு பரிசாக கொடுத்து இருக்கிறது.

  • அந்த இலக்கணத்தை உடைச்ச ஜீவா! TTT வெற்றி குறித்து இளவரசு பேட்டி

    பொங்கல் ரிலீஸாக கடந்த 15 ஆம் தேதி வெளியான திரைப்படம் தலைவர் தம்பி தலைமையில். ஜீவா நடிப்பில் வெளியான இந்தப் படத்தை நிதிஷ் சஹாதேவ் இயக்கியுள்ளார். ஒரு வித்தியாசமான கதை. சமீபகாலமாக அடிதடி, சண்டை இவற்றிலேயே ஊறி போன மக்களுக்கு புது அனுபவத்தை இந்தப் படம் கொடுத்திருக்கிறது. ஃபேமிலியோடு ஒரு படத்தை சந்தோஷமாக பார்க்கணும் என்றால் அதற்கு இந்தப் படம் பெஸ்ட்.

    படம் பார்த்த அனைவரும் படத்தை பற்றி பாசிட்டிவ்வான விமர்சனங்களையே கொடுத்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ஹீரோ என்றாலே மாஸ், ஆக்‌ஷன் இது போன்ற காட்சிகள் இருக்க வேண்டும் என்றுதான் பெரும்பாலான நடிகர்கள் விரும்புவார்கள். ஆனால் இந்தப் படத்தில் ஜீவா ஹீரோவாக இருந்தாலும் எதார்த்தமாக நடித்திருக்கிறார். அதுவே படத்திற்கு பிளஸாக அமைந்திருக்கின்றன.

    இந்த நிலையில் படத்தின் வெற்றி குறித்து படத்தில் நடித்த இளவரசு அவருடைய அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார். இளவரசு மற்றும் தம்பி ராமையா ஆகிய இருவரும் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்கள். அவர்களை சுற்றித்தான் படமே டிராவல் செய்கிறது. இந்த நிலையில் படத்தை பற்றி இளவரசு கூறியதாவது:

    ஊடகத்திற்கு என்னுடைய நன்றி. இந்த படத்தின் வெற்றி எங்களுக்கு கிடைத்த பெரிய வெகுமதி. இது ஒரு புது முயற்சி. ஒரு ஹீரோனா அந்த ஒரு இலக்கணம், அடிதடி, சண்டை அப்படினு எதுவும் இல்லாமல் அதுவும் ஒரு கேரக்டர் ஆகி எல்லா கதாபாத்திரத்துடனும் அந்த கேரக்டர் பயணப்பட்டால் வெற்றி பெறும் என்பதற்கு பல படங்கள் உதாரணம். அதில் பொங்கலுக்கு ரிலீஸான இந்த தலைவர் தம்பி தலைமையில் படம் பெரும் உதாரணம் என்று இளவரசு கூறியிருக்கிறார்.

    மேலும் இது மக்களால் அங்கீகரிக்கப்பட்டதும் வணிக ரீதியாகவும் எங்களுக்கு பெரிய வெற்றியானது மேலும் சந்தோஷம் என்றும் கூறியுள்ளார். மேலும் என்னுடன் தனிப்பட்ட கருத்து என்னவெனில் சினிமா என்பது சந்தோஷப்படுத்தணுமே தவிற கருத்து சொல்லும் படமாக இருக்க கூடாது என விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.

  • James vasanthan: பேசவிட்டு வேடிக்கை பார்ப்பது கொடூர மனநிலை: விஜயை கடுமையாக விமர்சித்த ஜேம்ஸ் வசந்தன்

    தமிழ் திரையுலகில் வசூல மன்னனாக இருப்பவ்ர் விஜய். தற்போது சினிமாவிலிருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இவரது நடிப்பில் கடைசி படமாக ஜனநாயகன் வெளிவர உள்ளது. கடந்த 9ம் தேதி வெளியாக வேண்டிய இப்படம் சென்சார் சான்றிதழ் கிடைக்கததால் படம் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசியல் காரணமாகவே இப்படத்திற்கு கடும் பிரச்சனைகள் செய்து வருவதாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். திரையுலகைச் சேர்ந்த ஒரு சிலரும் விஜய்க்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால் தனது படப் பிரச்சனை குறித்து விஜய் எவ்வித கருத்துகளையும் கூறவில்லை. இதனை பலரும் விமர்சித்து வருகின்றனர். கரூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவத்தின்போது தாமதமாகவே கருத்தினை பதிவு செய்தார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் , விஜய் ஒரு கோழை. தொடை நடுங்கி. அனைவரையும் பேசவிட்டுவிட்டு வேடிக்கை பார்ப்பது கொடூரமான மனநிலை. இவரோ வாயே திறக்காமல் இருக்கிறார். படம் ரிலீஸாகவில்லை என்று அவரது ரசிகர்கள் போராடுகிறார்கள். அவர்களுக்கு அறிவுரை கூறவாவது வாயை திறக்க வேண்டும். சொந்த பிரச்னைக்கே போராடாத இவர் எப்படி மக்கள் பிரச்னைகளுக்காக போராடுவார் என்று கூறினார்.

  • Sirai Movie: 25 வது நாள் கொண்டாட்டம்: போஸ்டரை வெளியிட்ட சிறை படக்குழு

    விக்ரம் பிரபு இயக்கத்தில் கிருஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியான படம் சிறை. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் இப்படம் ப்ரிய வெற்றியை பெற்றது. இப்படத்தில் விக்ரம் பிரபுவுடன் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் L K அக்ஷய் குமார், அனிஷ்மா, அனந்தா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி இபடத்தை இயக்கியிருந்தார். டாணாக்காரன் இயக்குனர் தமிழ், தான் சந்தித்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதிய கதைதான் சிறை படமாகும்.

    இந்த நிலையில் இப்படம் 25 நாட்களை நிறைவு செய்துள்ளது. இதனை சிறப்பிக்கும்விதமாக அப்படக்குழு 25வது நாள் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். சிரை விக்ரம்பிரபுவுக்கு 25வது படம் என்பது குறிப்பிடதக்கது.

  • Vaa vathiyar: பராசக்தியை மிஞ்சியதா? வா வாத்தியார் 4ம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

    கார்த்தி நடிப்பில் பொங்கலையொட்டி வெளியான படம் வா வாத்தியார். கீர்த்தி ஷெட்டி முதன்முறையாக நேரடியாக அறிமுகமான இப்படத்தை நலன் குமாரசாமி இயக்கியுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு நலன் குமாரசாமி இயக்கத்தில் வரும் படம் என்பதாலும், கார்த்தியுடன் முதன்முறையாக கூட்டணி என்பதாலும் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    ஆனால் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். படத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலையில் இப்படத்தின் 4ம் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் இந்த தகவல்படி நான்காவது நாளான நேற்று இந்திய அளவில் ரூ1.40 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறதாம். நான்கு நாட்களில் மொத்தமாக ரூ. 6.90 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாகவும் அந்த தளம் கூறுகிறது.

    ஆனாலும் பொங்கலையொட்டி வெளியான பராசக்தி, ஜீவா நடிப்பில் வெளிவந்துள்ள டிடிடி படங்களை ஒப்பிடும்போது வசூல் குறைவாகவே பெற்றுள்ளது என்று தெரிகிறது.

  • கவின் – பிரியங்கா மோகனுடன் இணைந்த சாண்டி மாஸ்டர்

    கவின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற படம் மாஸ்க். இதனை தொடர்ந்து தற்போது கென் ராய்சன் என்ற இயக்குனரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார்.இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சாண்டி மாஸ்டர் இணைந்துள்ளார். இது குறித்த அறிவிப்பை படக்குழு இன்று வெளியிட்டது.

    பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்தே உருவான கவின் – சாண்டி மாஸ்டர் கூட்டணிக்கு ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களிடையே அபாரமான வரவேற்பு இருந்து வருகிறது. அவர்களுடைய இயல்பான நட்பு, கலகலப்பான பேச்சுகள், இருவருக்குமான கெமிஸ்ட்ரி ஆகியவை பிக்பாஸ் நிகழ்ச்சியின்போதே பலரும் ரசித்தனர். அப்படி இருக்கையி தற்போது இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைவது ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கும் என்பது உண்மை.

    இப்படத்திற்கு ஓஃப்ரோ (OFRO) இசையமைக்கிறார். ஃபேண்டஸி -ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவாகும் இந்த படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்வரூப் ரெட்டி தயாரிக்கிறார்.