Author: adminram

  • Lackdown: ஒரு வழியாக லாக் டவுனுக்கு தேதி குறிச்சாச்சு…

    அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள லாக் டவுன் திரைப்படம் வெளியீடு பலமுறை தள்ளிவைக்கப்பட்ட பிறகு, தற்போது வரும் ஜனவரி 30-ம் தேதி வெளியாகிறது.

    லைக்கா புரொடெக்சன் தயாரிப்பில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள பட்ம் லாக் டவுன். சார்லி, நிரோஷா, மஹானா சஞ்சீவி, லிவிங்ஸ்டன், அமு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படதை ஏ.ஆர்.ஜீவா இயக்கியுள்ளார். இது முழுக்க முழுக்க அனுபமா பரமேஸ்வரனைச் சுற்றியே நகரும் ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் வகை படமாகும். இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 5 ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்பு டிச.12ம் தேதி வெளியாகும் என்றும் கூரப்பட்டது ஆனால் படம் வெளியாகவில்லை. இதென்னடா லைக்கவுக்கு வந்த சோதனை என ரசிர்கள் பலர் கருதினர்.

    இந்த நிலையில் லாக்டவுன் படம் ரிலீஸ் குறித்து இன்று படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகிற 30ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • hotspot 2 much: ஒர்கவுட் ஆனதா டார்க் ஹியூமர்? ஹாட் ஸ்பாட் 2 மச் – திரை விமர்சனம்

    hotspot 2 much: ஒர்கவுட் ஆனதா டார்க் ஹியூமர்? ஹாட் ஸ்பாட் 2 மச் – திரை விமர்சனம்

    ஹாட் ஸ்பாட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஹாட் ஸ்பாட் 2 மச் படம் இன்று வெளியாகியுள்ளது. முதல் பாகத்தைப் போலவே, இதுவும் ஒரு ஆந்தாலஜி பாணித் திரைப்படம். ஒரு இளம் பெண் இயக்குநர் ஒரு தயாரிப்பாளரிடம் மூன்று வெவ்வேறு கதைகளைக் கூறுவது போலத் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

    இரண்டு முன்னணி நடிகர்களின் (விஜய் – அஜித் போன்ற அடையாளங்கள்) ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக்கொள்வதால் ஏற்படும் விபரீதங்கள் மற்றும் அதன் பின்னால் இருக்கும் அரசியலைப் பேசுகிறது. பிரபலமான நடிகர்களின் வெறித்தனமான ரசிகர்களின் உறவினர்களை கடத்திச் செல்லும் எம்.எஸ். பாஸ்கர், அவர்கள் உயிருடன் இருக்க வேண்டுமென்றால் சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று மிரட்டுகிறார். அவர் விதித்த அந்த நிபந்தனைகள் என்ன? உறவினர்கள் நிலை என்ன என்பதே முதல் கதை.

    வெளிநாட்டிலிருந்து திரும்பும் மகள் (சஞ்சனா திவாரி) அணியும் நவீன ஆடைகளுக்கும், அதை எதிர்க்கும் தந்தைக்கும் (தம்பி ராமையா) இடையிலான ‘சுதந்திரம் மற்றும் கலாச்சாரம்’ சார்ந்த மோதலே இரண்டாவது கதை.

    2025-ம் ஆண்டில் அதாவது நிகழ்காலத்தில் வாழும் அஸ்வின் குமாருக்கு, 2050-ல் வாழும் பவானிஸ்ரீயுடன் காதல் உருவாகிறது. டைம் டிராவல் மூலம் அஸ்வின் குமாரை சந்திக்கும் பவானிஸ்ரீக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. அதில் ஏற்படும் சிக்கலே மூன்றாவது கதை.

    நடிகர், நடிகைகள்:

    பிரியா பவானி சங்கர்,எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, அஸ்வின் குமார்,ரக்சன் மற்றும் ஆதித்யா பாஸ்கர், பவானி ஸ்ரீ சஞ்சனா திவாரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இதில் எம்.எஸ்.பாஸ்கர் தன் அனுபவ மிக்க நடிப்பால் கவர்கிறார். அஸ்வின் குமார் – பவானிஸ்ரீ காட்சிகள் கலகலப்பாக நகர்கிறது. இளம் பெண் இயகுனராக பிரியா பவானி சங்கர் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது.சதீஷ் ரகுநாதனின் இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. தயாரிப்பு: விஷ்ணு விஷால்

    படத்தினை விக்னேஷ் கார்த்திக் எழுதி இயக்கியுள்ளார். டார்க் ஹியூமர் நன்றாகவே ஒர்கவுட் ஆகியுள்ளது. முதல் பாகம் போன்று சுவாரஸ்யம் இல்லவிட்டாலும் நல்ல காமெடியாக ஜனரஞ்சகமாக கொடுத்திருக்கிறார்.

  • Tamanna: விருது நிகழ்ச்சிக்கு கவர்ச்சியாக வந்த தமன்னா

    Tamanna: விருது நிகழ்ச்சிக்கு கவர்ச்சியாக வந்த தமன்னா

    ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா பாடல் மூலம் 2கே கிட்ஸ்களிடமும் சென்றடைந்தவர் தமன்னா.

    இதற்கு முன் பல படங்கள் நடித்திருந்தலும் அப்போது கிடைக்காத புகழ் இந்த ஒரு பாடல் மூலம் இந்தியா முழுவதும் அவரை கொண்டு சென்றது.

    பொதுவாக தமன்னா விழாக்களுக்கு வரும்போது கவர்ச்சியான உடைகள் அணிந்து வருவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற ELLE list 2026 விழாவில் கவர்ச்சியான உடை அணிந்து வந்தார்.

    அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது லைக்குகளை அள்ளி வருகின்றன.

  • mayabimbam review: மாயபிம்பம்- விமர்சனம்

    mayabimbam review: மாயபிம்பம்- விமர்சனம்

    Selfstart Productions நிறுவனம் சார்பில், கே ஜே சுரேந்தர் தயாரித்து, இயக்கியிருக்கு படம் மாயபிம்பம்.சிறிய பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பலரது கவனத்தை ஈர்த்துள்ளது

    நான்கு நண்பர்களின் வாழ்க்கையில் நிகழும் ஒரு தவறான புரிதல் எவ்வாறு பெரிய மாற்றங்களை உருவாக்குகிறது என்பதுதான் இப்படத்தின் மையக்கரு. ஆகாஷ், மருத்துவக் கல்லூரி மாணவர். ஜானகி, மருத்துவ மனை ஒன்றில் செவிலியர் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. ஆனால், அதை ஆகாஷ் மற்றும் ஜானகி வேறு வேறு ஒரு கோணத்திலும் பார்க்கின்றனர். ஆகாஷ் சொல்லும் ஒரு பொய்யினால் ஏற்படு பிரச்சனையே மாயபிம்பம் படத்தின் கதை.

    நாயகியாக நடித்திருக்கும் ஜனகி முதல் படத்திலேயே ஸ்கோர் செய்திருக்கிறார். நம் பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்தில் இருப்பதால் எளிதில் மனதில் ஒட்டிக்கொள்கிறார். நாய்கனாக நடித்திருக்கும் ஆகாஷ் தனது நடிப்பில் குறை வைக்கவில்லை. நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண்குமார் ஆகியோர் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கின்றனர்.

    நந்தாவின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. காதல் கதையாக இருந்தாலும், அதை புதிய கண்ணோட்டத்தில் சொல்ல முயன்ற இயக்குனர் அதில் ஓரளவிற்கு வெற்றியும்பெற்றுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.

  • சத்தமிலாமல் துவங்கிய சிறை நாயகனின் அடுத்த படம்

    சிறை படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை நடிகர் அக்சய் குமார்.விஜய் நடிப்பில் ஹிட் அடித்த மாஸ்டர்,லியோ படங்களை தயாரித்த லிலித் குமாரின் மகனான இவர் முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தை ஈர்த்தார். முதல் படமே பாக்ஸ் ஆபிஸீல் 30 கோடிக்கு மேல் வசூலையும் ஈட்டியது.

    முதல் பட வெற்றியை அடுத்து இரண்டாவது படத்திற்கு கதை கேட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று தனது இரண்டாவது படத்திற்கான பூஜை நடைபெற்றது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் S. S. லலித் குமார் தயாரிப்பில் புரொடக்ஷனில் அக்சய்குமாரின் அடுத்த படத்திற்காக (புரொடக்ஷன் நம்பர் 13) படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டு, படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

    அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத திரைப்படத்தில் L. K . அக்ஷய் குமார், ஜாபர் சாதிக், நோபல் மற்றும் டியூட் படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகிறது.

    தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில்உருவாகி வரும் இந்த படத்தை கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

  • Salim Ghouse: மிரட்டும் குரல்; மிரள வைக்கும் நடிப்பு- மறக்க முடியுமா சலீம் கௌஸ்

    1989ல் வெளியான வெற்றிவிழா படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் சலீம் கௌஸ். முதல் படத்திலேயே இவர் ஏற்ற ஜிந்தா வேடம் யார் இவர் என அனைவரை பேச வைத்தது. இவரது மிரட்டும் குரல் அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. சலீம் கௌஸை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்றது விஜயகாந்த் நடித்த சின்ன கவுணடர் படமே. இதில் அவர் ஏற்ற சக்கரை கவுண்டர் வேடம் மிக பிரபலமாகும். நீ நேர்மையை தவசிகிட்ட காட்டு விசுவாசத்த எங்கிட்ட காட்டு என்ற வசனம் அப்போதே மிக பிரபலம்.

    சென்னையில் பிறந்த அவர் ஒரு சிறந்த மேடை நாடகக் கலைஞர் மற்றும் தற்காப்புக் கலை நிபுணர் என்பதும் இவரது சிறப்பு. 1978-ல் ‘ஸ்வர்க் நரக்’ என்ற ஹிந்தித் திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தைத் தொடங்கிய சலீம் கௌஸ், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலம் எனப் பல மொழிகளில் முத்திரை பதித்தார். ஆனாலும் தமிழில் குறிப்பிட்ட சில படங்களே நடித்தார்.

    தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் ‘டி.டி’ என்ற கதாபாத்திரத்தில் கொள்ளையனாக வந்து கலக்கினார். இறுதியாக விஜய் நடிப்பில் வெளிவந்த வேட்டைக்காரன் படத்தில் வேதநாயகம் என்ற நடித்திருந்தார். அதில் அவர் பேசும் வேதநாயகனாலே பயம் என்ற வசனம் மூலம் தன்னை மீண்டும் நிருபித்தார்.

    மலையாள சினிமாவில் மோகன்லாலுடன் அவர் நடித்த தாழ்வாரம் என்ற படத்தில் ராஜு என்ற கொடூரமான அதே சமயம் பயந்த சுபாவம் கொண்ட வில்லனாக அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. சலீம் கௌஸ் தனது 70-வது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார்.

    தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் வில்லன்களுக்கு ஒரு இலக்கணம் வகுத்துக் கொடுத்தவர்களில் சலீம் கௌஸிற்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு.

  • விஷால் சுந்தர்.சி காம்போ புருஷன் படத்துவக்க விழா புகைப்படங்கள்

    விஷால் மற்றும் சுந்தர்.சி கூட்டணியில் அடுத்து வரும் படம் புருஷன். இவர்களது கூட்டணியில் இது நான்காவது படமாகும்.

    இதற்கு முன்பு ஆம்பள, மதகத ராஜா, ஆக்சன் ஆகிய படங்கள் வெளிவந்தன. நாயகியாக தமன்னா நடிக்கிறார். இசை சுந்தர்.சி ஆஸ்தான இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.

    இப்படம் ஒரு ஆக்ஷன்-காமெடி குடும்பத் திரைப்படமாக இது உருவாகிறது.

    இந்த படத்தின் டைட்டில் புரொமோசன் வீடியோ நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் படத்துவக்க விழா நடைபெற்றது.

    விழாவில் சுந்தர்.சி, குஷ்பு, தமன்னா, விஷால், யோகிபாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டர்.

  • பொங்கல் போட்டி ஓவர்: இந்த வாரம் திரையரங்குகளில் மோதும் புதிய படங்கள்!

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பராசக்தி, வா வாத்தியார் மற்றும் தலைவர் தம்பி தலைமையில் ஆகிய படங்கள் வெளியாகின. இதி வா வாத்தியார் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சுமார் ரகமே. மிகுந்த எதிர்பார்ப்பில் வந்த பராசக்தியும் ரசிர்களை கவரவில்லை. ஆனால் யாரும் எதிர்பார்க்காமல் வெளிவந்த தலைவர் தம்பி தலைமையில் படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

    பொங்க்ல் கொண்டாடத்தை அடுத்து இந்தவாரம் அதாவது 23-ம் தேதி சில படங்கள் வெளிவருகின்றன.

    திரௌபதி 2 : இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி மீண்டும் நடித்துள்ள இத்திரைப்படம் வரும் 23ம் தேதி வெளியாகிறது. முதல் பாகம் வெற்றியை தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2ம் பாகம் வெளியாகிறது. இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்

    மாயபிம்பம் : செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்சன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் கே.ஜே சுரேந்தர் தயாரித்து இயக்கியிருக்கும் படம் மாயபிம்பம். முதுமுகங்களான ஜானகி மற்றும் ஆகாஷ் நடித்துள்ள இத்திரைப்படம் ஒரு குடும்ப பின்னணியுடன் கூடிய த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது.

    ஜாக்கி (Jockey): யுவன் கிருஷ்ணா, அம்மு அபிராமி நடித்துள்ள இந்தப் படம் மதுரையில் நடக்கும் பாரம்பரிய விளையாட்டான கிடா சண்டையை மையமாக கொண்டுள்ளது. பிகே7 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் டாக்டர் பிரகபல் இப்படத்தை இயக்கியுள்ளார்.

    சாத்த பச்ச (Chatha Pacha): மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் வெளியாகும் இந்தப் படம் ஒரு கேங்க்ஸ்டர் த்ரில்லராக உருவாகியுள்ளது. இப்படம் ஜனவரி 22ம் தேதி வெளியாகிறது.

  • Parasakthi box office: விமர்சனங்களை தாண்டி வசூலில் ரூ. 100 கோடியை தொட்ட பராசக்தி

    பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வந்த பராசக்தி திரைப்படம், வெறும் படமாக மட்டுமல்லாமல் ஒரு வரலாற்று ஆவணமாகப் பார்க்கப்படுகிறது. 1965-ம் ஆண்டு நடைபெற்ற இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம், தற்போது உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்து வருகிறது.

    பராசக்தியை பொறுத்தவரை கலவையான விமர்சனங்களையே பெற்றது. தமிழகத்தை பொறுத்தவரை படம் வெளியாகி ஒரு நாளிலேயே வசூல் மந்தமாக தொடங்கியது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறினாலும் ஜனநாயகனுடன் போட்டி குறித்து ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விஜய் ரசிகர்கள் நெகடிவ் விமர்சனங்களை பரப்பினார்கள் என படக்குழுவினர் குற்றம் சாட்டினர்.

    இந்த நிலையில் பராசக்தி உலகளவில் 100 கோடி ருபாய் வசூலை ஈட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து அதிகாரபூரவாக படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இது சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    குறிப்பாக அமெரிக்கா, மலேசியா போன்ற வெளிநாடுகளில் சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களை விட இந்தப் படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Atlee: மீண்டும் அப்பாவாகிறார் அட்லீ: ! கியூட் புகைப்படங்களை பகிர்ந்த பிரியா அட்லீ

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் அட்லீ. தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் முத்திரை பத்தித்தவர் அவர். இவரது இயக்கத்தில் ஷாருக்கான நடித்த ஜவான் படம் 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. அட்லியின் மனைவி பிரியா.

    இந்த நிலையில் பிரியா தங்களது குடும்பத்தில் புதிய உறுப்பினர் இணையவிருப்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். அதாவது தான் இரண்டாவது முறையாக கர்பமாக இருப்பதை தெரிவித்துள்ளார். இச்செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

    காதல் முதல் குடும்பம் வரை

    அட்லீ மற்றும் பிரியா இருவரும் நீண்ட காலமாகக் காதலித்து, கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திரைத்துறையில் வெற்றிப் படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்த அட்லீக்கு, பிரியா எப்போதும் ஒரு பெரும் தூணாக இருந்து வருகிறார். இவர்களுக்கு ஏற்கனவே மீர் என்ற மகன் உள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு பிறந்த மீரின் புகைப்படங்களை அட்லீ அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து கொள்வது வழக்கம்.

    மகிழ்ச்சியான அறிவிப்பு

    தற்போது பிரியா இரண்டாவது முறையாகக் கர்ப்பமாக இருக்கும் செய்தியை இந்தத் தம்பதியினர் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளனர். இதையொட்டி எடுக்கப்பட்ட அழகான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிப் பலரது கவனத்தை ஈர்த்துள்ளன.