Author: adminram

  • மதுரையில் சூர்யா ரசிகர்களுக்கு தடபுடலான விருந்து!.. ‘கருப்பு’ இசை வெளியீட்டு விழா எப்போ தெரியுமா?

    மதுரையில் சூர்யா ரசிகர்களுக்கு தடபுடலான விருந்து!.. ‘கருப்பு’ இசை வெளியீட்டு விழா எப்போ தெரியுமா?

    ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சாய் அபயங்கர் இசையில் சூர்யா நடித்துள்ள கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது ஆர்ஜே பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

    அஞ்சான் படத்துக்கு அஞ்சு டிக்கெட் இருக்கு வறியா என நானும் ரவுடி தான் படத்தில் ஆர்ஜே பாலாஜி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யாவை பங்கமாக கலாய்த்திருப்பார். அதன் பின்னர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் ஆர்ஜே பாலாஜி நடிக்கவும் சூர்யா வாய்ப்புக் கொடுத்து தனது பெரிய மனுஷத்தன்மையை நிலைநாட்டியிருப்பார்.

    அதுமட்டுமின்றி ஆர்ஜே பாலாஜி வேண்டாம் என விஜய் தனது கடைசி படத்தை எச். வினோத்துக்கு கொடுத்த நிலையில், சூர்யா தோள் கொடுத்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிக்க முன் வந்தார்.

    ஆனால், படம் பல தடைகள் காரணமாக கால தாமதம் ஆகிவிட்ட நிலையில், சூர்யா ரசிகர்களே படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறைந்த நிலையில், கண்டிப்பாக இந்த படம் அன்பான ஃபேன்ஸுக்கு கறி விருந்தாக இருக்கும் என சொன்ன ஆர்ஜே பாலாஜி வரும் ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 26ம் தேதி மதுரையில் உள்ள சோலமலை பாலிடெக்னிக் கல்லூரியில் பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழாவை நடத்த முடிவு செய்து அதன் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

    சாய் அபயங்கர் இந்த படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை அவரது லைவ் பெர்ஃபார்மன்ஸ் இருக்கும் என்றும் அறிவித்துள்ளனர். மெளனம் பேசியதே, ஆறு படங்களில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த த்ரிஷா இந்த படத்திலும் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இசை வெளியீட்டு விழாவில் பல பிரபலங்கள் பங்கேற்க போகின்றனர்.

  • சூறாவளியாக ரெடியான சூரி!.. மண்டாடி ஷூட்டிங் ஓவர்!.. எப்போ ரிலீஸ் தெரியுமா?..

    சூறாவளியாக ரெடியான சூரி!.. மண்டாடி ஷூட்டிங் ஓவர்!.. எப்போ ரிலீஸ் தெரியுமா?..

    பிரபல தயாரிப்பு நிறுவனமான RS Infotainment நிறுவனத்தின் தலைவர் எல்ரெட் குமார் தயாரிக்கும் மண்டாடி திரைப்படத்தின் படப்பிடிப்பு, நீண்ட மற்றும் சவாலான படப்பிடிப்புக்குப் பிறகு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில், கடினமான சூழ்நிலைகளில் இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளது. கதையின் ஆழத்தையும், அதன் இயல்பான ஆற்றலையும் உண்மைத்தன்மையுடன் வெளிப்படுத்தும் வகையில், படக்குழு மிகுந்த உழைப்புடன் பணியாற்றியுள்ளது. பெருமளவிலான ஆக்ஷன் காட்சிகள், உணர்ச்சி மிகுந்த தருணங்கள் மற்றும் படகு பந்தய காட்சிகள் ஆகியவை மிகத் துல்லியமாக உருவாக்கப்பட்டுள்ளன.

    இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள மண்டாடி, தனித்துவமான விளையாட்டு பின்னணியில் அமைந்த, வலுவான கதை சொல்லலுடன் உருவாகியுள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், படம் தற்போது பின்னணி (Post Production) பணிகளுக்கு நகர்ந்துள்ளது.

    நடிகர் சூரி இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். உள்ளடக்கமிக்க திரைப்படங்களில் தனது பயணத்தை மாற்றி அமைத்து வரும் அவர், இந்தப் படத்திற்காக உடல் மற்றும் மனதளவில் கடுமையான உழைப்பை மேற்கொண்டுள்ளார். அவரது நடிப்பு இந்தப் படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தப் படத்தின் மூலம் சுகாஷ் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இவருடன் மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பாலசரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    தொழில்நுட்பக் குழுவிலும் பல திறமையாளர்கள் இணைந்துள்ளனர். G.V. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை S. R. கதிர் மேற்கொண்டுள்ளார். தயாரிப்பு வடிவமைப்பை D. R. K. கிரண் கவனித்துள்ள நிலையில், எடிட்டிங் பணியை பிரதீப் E. ராகவ் மேற்கொண்டுள்ளார். ஆக்ஷன் காட்சிகளை பீட்டர் ஹெய்ன், திலீப் சுப்பராயன் மற்றும் மகேஷ் மேத்யூ வடிவமைத்துள்ளனர்.

    தற்போது எடிட்டிங், சவுண்ட் டிசைன், VFX மற்றும் இசை அமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு அம்சத்திலும் கவனமாக பணியாற்றி, ஒரு சிறந்த சினிமா அனுபவத்தை உருவாக்க படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    மண்டாடி திரைப்படம், மீனவர் சமூகத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. “மண்டாடி” என்பது கடல் அலைகள், காற்றின் திசை, நீரோட்டம் போன்றவற்றை ஆழமாக அறிந்து, மீன்பிடித் தொழிலை வழிநடத்தும் நிபுணரை குறிக்கும் சொல். இது தலைமைத்துவம், அனுபவம் மற்றும் உறுதியை குறிக்கும் அடையாளமாக இந்தப் படத்தில் பிரதிபலிக்கிறது.

    முன்னதாக வெளியான பர்ஸ்ட் லுக் மூலம் கவனம் ஈர்த்துள்ள மண்டாடி, தற்போது தனது அடுத்த கட்டத்திற்குள் நுழைந்து, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து வருகிறது. கூடிய விரைவில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து வெற்றி வாகை சூடி வரும் சூரி சீக்கிரமே சூறாவளி போல திரையரங்குகளை சூறையாட வர காத்திருக்கிறார்.

  • நயன்தாராவுடன் சல்மான் கான் நடிக்கும் படம்.. எப்போ ரிலீஸ் தெரியுமா?

    நயன்தாராவுடன் சல்மான் கான் நடிக்கும் படம்.. எப்போ ரிலீஸ் தெரியுமா?

    சல்மான் கான் தனது அடுத்த படத்தில் முதல் முறையாக நயன்தாரா அவருடன் இணைந்து நடிக்கிறார். மேலும், தற்போது அப்படத்தின் வெளியீட்டு தேதியை சல்மான் கான் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

    வாரிசு பட இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் சல்மான் கான் மற்றும் நயந்தாரா நடிப்பில் உருவாகி வரும் படத்திறகு “SVC63” என்ற தற்காலிக பெயரில் பேசப்படுகிறது. பூஜையுடன் தொடங்கிய இந்த புதுப்படம் பெரிய பட்ஜெட் ஆக்ஷன் எண்டர்டெய்னர் என்று கூறப்படுகிறது. பான்-இந்தியா படம் என்பதால் பல மொழிகளில் வெளியாக உள்ளது.

    சமீபத்தில் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் எடுத்த குடும்ப புகைப்படங்களை பகிர்ந்த நயன்தாரா வேலை மற்றும் குடும்ப வாழ்க்கையை சமநிலையில் சமாளித்து வருகிறார். ஜவான் படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் இது நயன்தாராவின் இரண்டாவது படமாகும்.

    நயன்தாரா மற்றும் கவின் நடித்துள்ள “Hi” திரைப்படம் அடுத்த மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் ஒரு ரொமான்டிக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. நயன்தாரா 2026-ல் பல பெரிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் டாக்ஸிக், பேட்ரியாட் போன்ற படங்கள் உட்பட பல படங்கள் அவர் கைவசம் உள்ளன.

    இந்நிலையில் தற்போது ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு, சல்மான் கான் தனது அடுத்த படத்திற்காக ரம்ஜான் 2027ல் படம் வெளியாகும் என அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு ரம்ஜானுக்கு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான், ராஷ்மிகா நடித்த சிக்கந்தர் திரைப்படம் ரம்ஜான் படத்துக்கு வெளியானது. ஆனால், அந்த படம் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில், அடுத்த ரம்ஜானுக்கு வெளியாகும் சல்மான் கான் படம் ரசிகர்களை கவருமா? அல்லது மீண்டும் ரசிகர்களை நல்ல நாள் அதுவுமாக சங்கடத்தில் ஆழ்த்துமா என்பதை காத்திருந்து காண்போம்.

  • கீர்த்தி சுரேஷை படங்களில் பார்க்கவே முடிவதில்லையே.. நேரடியாக நடிகையிடம் வந்து விழுந்த கேள்வி!..

    கீர்த்தி சுரேஷை படங்களில் பார்க்கவே முடிவதில்லையே.. நேரடியாக நடிகையிடம் வந்து விழுந்த கேள்வி!..

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் இன்று சட்டமனற தேர்தலை முன்னிட்டு வாக்களித்து வெளியே வந்த போது அவரிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்வி சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

    கீர்த்தி சுரேஷ் கேரளாவை சேர்ந்தவராக இருப்பார் என நினைத்தவர்களுக்கு இன்று அவர் சென்னையில் வாக்களித்த நிலையில், தொடர்ந்து அவர் இங்கே தான் வாக்காளர் அட்டையை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டு பெண்ணாக வாழ்ந்து வருகிறார் என்பது தெளிவாக புரிந்திருக்கும். விஜய் வாக்களித்த சென்னை நீலாங்கரை தொகுதியில் தான் நடிகை கீர்த்தி சுரேஷும் தனது வாக்கினை செலுத்தியுள்ளார்.

    கீர்த்தி சுரேஷ் தனது நீண்டநாள் நண்பரான ஆண்டனி தட்டிலை கோவாவில் திருமணம் செய்து கொண்டார். தனது காதல் கதையைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்துள்ளார். மேலும், திருமணத்திற்குப் பிறகு தனது கதாபாத்திரத்தின் தேர்வில் அதிக கவனம் செலுத்தி வரும் அவர் வித்தியாசமான மற்றும் முக்கியமான கதைகளில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். இதனால் பட வாய்ப்புகளும் குறைந்து வருகிறது.

    நடிகையர் திலகம் படத்துக்காக தேசிய விருது வாங்கிய கீர்த்தி சுரேஷ் அதற்கு பிறகு உமன் சென்ட்ரிக் படங்கள் பல நடித்தாலும் அவருக்கு நடிகையர் திலகம் படம் அளவுக்கு எந்தவொரு படமும் வெற்றியை கொடுக்கவில்லை.

    இந்தியில் அட்லி தயாரிப்பில் நடித்த தெறி ரீமேக் படமும் அட்டு ஃப்ளாப் ஆகிவிட்டது. இந்நிலையில், அக்கா வெப்சீரிஸ் மற்றும் ஒரு சில படங்களில் மட்டுமே கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். கடைசியாக ரூட் தயாரிப்பாளர் ஜெகதீஷ் தயாரித்த ரிவால்வர் ரீட்டாவும் சுடவில்லை.

    இந்நிலையில், கீர்த்தி சுரேஷை பார்த்த புகைப்படக்கலைஞர்களில் ஒருவர், அவர் கடந்து சென்ற பிறகு நிறைய படங்களில் நடிங்க மேடம், இப்போதெல்லாம் உங்களை பார்க்கவே முடிவதில்லை என கலாய்த்து தள்ளிவிட்டார். கூடிய விரைவிலேயே நல்ல படத்தைக் கொடுத்து இதற்கு கீர்த்தி சுரேஷ் தக்க பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • எனக்கே விரலா?.. விஜய் டிரெஸ் கோட்.. சட்டென பதறிய சிம்பு!.. நல்லா இருக்கிறது புடிக்கலையா?..

    எனக்கே விரலா?.. விஜய் டிரெஸ் கோட்.. சட்டென பதறிய சிம்பு!.. நல்லா இருக்கிறது புடிக்கலையா?..

    நடிகர் சிம்பு இன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார். சென்னை பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடிக்கு மாலை நேரம் வந்த அவர், பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது ஜனநாயக உரிமையை பயன்படுத்தினார்.

    வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிம்பு, அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். “ஒவ்வொருவரின் வாக்கும் முக்கியமானது. இளைஞர்கள் குறிப்பாக வந்து வாக்களிக்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

    விஜய் டிரெஸ் கோட் என வெள்ளை சட்டை மற்றும் காக்கி பேண்ட் தான் இன்று நடைபெற்ற தமிழ்நாடு தேர்தலில் செம டிரெண்ட் ஆனது. நடிகைகள் முதல் இளம் பெண்கள் வரை அதை அணிந்து வந்து ஓட்டுப்போட்டனர்.

    சினிமா பிரபலங்களில், சியான் விக்ரம், அனிருத், ஜெய், ரச்சிதா மகாலட்சுமி, சிபிராஜ் சத்யராஜ் உள்ளிட்ட பலர் அந்த டிரெஸ் கோடில் வந்தனர். எதிர்பாராத விதமாக நடிகர் சிம்புவும் அதே கலர் உடையை அணிந்துக் கொண்டு வந்த நிலையில், அண்ணா டிரெஸ் கோட் சூப்பர் என சிலர் கூற, அய்யய்யோ வெள்ளை சட்டை மாட்டிட்டு வந்தது குத்தமா எதிலும் கோர்த்து விட்டுடாதீங்க என்றார். ஆனால், ரசிகர்கள் அவர் விஜய்க்குத்தான் ஆதரவு எனக் கூறி வருகின்றனர்.

    மேலும், நீங்க அரசியலுக்கு வருவீங்களா என பத்திரிகையாளர்கள் கேட்க, இப்போதான் சினிமாவிலேயே பல பிரச்னைகளை சமாளித்து நடித்துக் கொண்டிருக்கிறேன். நான் நல்லா இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா? என தனது பாணியில் ஜாலியாக பேசிவிட்டுச் சென்றார். மை வைத்த விரலை காட்டச் சொல்ல, எனக்கே விரலா என சிம்பு பஞ்ச் அடித்ததும் ரசிகர்களை கவர்ந்தது.

    வாக்குச்சாவடியில் சிம்புவை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்து அவருடன் புகைப்படங்கள் எடுக்க முயன்றனர். இருப்பினும், எந்த இடையூறும் இல்லாமல் அவர் தனது வாக்கை பதிவு செய்து வெளியேறினார்.
    தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்கள் உட்பட பலரும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர்.

  • நல்லவேளை விஜய் கார் ஓட்டிட்டு வரல!.. த்ரிஷா வைத்த பாடல்!.. இளம் தலைவர் பட்டம் வேற!..

    நல்லவேளை விஜய் கார் ஓட்டிட்டு வரல!.. த்ரிஷா வைத்த பாடல்!.. இளம் தலைவர் பட்டம் வேற!..

    சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கை பதிவிட்ட நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புகைப்படத்துடன் கில்லி பட பாடலை இணைத்து வெளியிட்டுள்ளது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    சமீபத்தில் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவின் விவாகரத்து குறித்த வதந்திகளும் பேசப்பட்டு வந்த நிலையில் அந்த விவகாரத்தில், விஜய்க்கு மற்றொரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில், விஜய் மற்றும் திரிஷா இணைந்து வந்தது கவனம் பெற்றது.

    தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23, காலை 7 மணி முதல் நடைபெற்று வந்தது. வாக்குப்பதிவுகள் நடைபெற்று வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை பலரும் ஆர்வத்துடன் வந்து தங்கள் வாக்கை செலுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில், நடிகை திரிஷா காலை 11 மணியளவில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்துள்ளார். அவர் காரில் இருந்து இறங்கியவுடன் ரசிகர்கள் அவரை சூழ்ந்தனர். வந்து இறங்கியதுமே இளம் தலைவர் வாழ்க என்கிற கோஷம் எழுப்பப்பட்ட உடனே த்ரிஷா சிரித்துக் கொண்டே ஓட்டுப்போட தனது அம்மாவுடன் சென்றார். இதனால் வாக்குச்சாவடிக்குள் செல்ல சிரமம் ஏற்பட்டது. சில நேரம் வெயிலில் காத்திருந்த அவர், ரசிகர்களின் கூட்டத்தை கடந்து பாதுகாவலர்களின் உதவியுடன் உள்ளே சென்றார்.

    வாக்களிக்க வந்த அவரிடம், இந்த தேர்தலில் மாற்றம் ஏற்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். பின்னர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாக்களித்ததற்கான அடையாளமாக விரலில் மை குத்திய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் விஜய் நடித்த கில்லி படத்தின் “அர்ஜுனரு வில்லு” பாடலின் இசையை பயன்படுத்தியுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. நல்லவேளை த்ரிஷா விஜய் காரில் இந்த முறை வரவில்லை என்றும் வந்திருந்தால் சீனே வேற என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

    ரச்சிதா மகாலட்சுமி உள்ளிட்ட நடிகைகள் ஒயிட் ஷர்ட் காக்கி பேன்ட் அணிந்து வந்த நிலையில், த்ரிஷா அணிந்து வந்த பச்சை சுடிதாரும் விவாத பொருளாக மாறியுள்ளது. விஜய்க்கு ஓட்டுப்போடாமல் அதிமுகவுக்கு வாக்களித்துள்ளாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  • ஓடிடிக்கு ஓடி வரும் ஜி.வி. பிரகாஷின் ஹாப்பி ராஜ்!.. அடடே எப்போ ஸ்ட்ரீம் ஆகிறது தெரியுமா?..

    ஓடிடிக்கு ஓடி வரும் ஜி.வி. பிரகாஷின் ஹாப்பி ராஜ்!.. அடடே எப்போ ஸ்ட்ரீம் ஆகிறது தெரியுமா?..

    கடந்த மாதம் அறிமுக இயக்கநரான மரியா ராஜா இளங்செழியன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ஹாப்பி ராஜ் திரைப்படத்தின் ஒடிடி வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த பராசக்தி, தலைவர் தம்பி தலைமையில், தாய் கிழவி, வித் லவ் மற்றும் யூத் உள்ளிட்ட படங்களும் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. இந்நிலையில், ஜிவி பிரகாஷின் ஹாப்பி ராஜ் விரைவில் வெளியாகிறது.

    ஜி.வி.பிரகாஷ் 2006ஆம் ஆண்டு வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது இசை அனைவரின் கவனத்தை ஈர்த்தது. பின்னர் பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களுக்கு இசையமைத்து பெரும் வரவேற்பைப் பெற்று தேசிய விருதுகளும் கிடைத்தது.

    இசையமைப்பாளராக வெற்றி பெற்ற பிறகு, 2015ஆம் ஆண்டு டார்லிங் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த படம் வணிகரீதியாக வெற்றி பெற்று, அவரை நடிகராகவும் நிலைநிறுத்தியது. தொடர்ந்து த்ரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மங்சள் பச்சை, பெச்சுலர் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

    ஹாப்பி ராஜ் படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் கௌரி பிரியா, கீதா கைலாசம், ஜார்ஜ் மரியன், மதுரை முத்து என பலர் நடித்துள்ளனர். மேலும், நடிகர் அப்பாஸ் பல ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார்.

    படத்தில் கதாநாயகனாக வரும் “ஹப்பி ராஜ்” எப்போதும் சந்தோஷமாக இருப்பதையே வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டிருப்பார். ஆனால் காதல், நண்பர்கள், குடும்பம் போன்ற உறவுகள் அவரின் வாழ்க்கையில் பல திருப்பங்களை உருவாக்குகின்றன. அந்த சூழ்நிலைகளில் அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதே கதையின் முக்கிய அம்சமாக அமைகிறது. ஜார்ஜ் மரியன் தான் இந்த படத்தின் ரியல் ஹீரோ என பா. ரஞ்சித் முதல் பலரும் பாராட்டிய நிலையில், அப்பாக்களை பெருமைப்படுத்தும் படமாக ஓடிடியில் இந்த படம் வெளியாக உள்ளது.

    ஹாப்பி ராஜ் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 24ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார். இந்த வாரம் தேர்தல் காரணமாக புதிய படங்கள் பெரிதாக வராத நிலையில், ஓடிடியில் ஜி.வி. பிரகாஷுக்கு செம ஜாக்பாட் தான்.

  • ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் ஒரு நாவலை படித்த அனுபவத்தை தரும்”.. ஜி.வி. பிரகாஷ் குமார் எமோஷனல்!

    ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் ஒரு நாவலை படித்த அனுபவத்தை தரும்”.. ஜி.வி. பிரகாஷ் குமார் எமோஷனல்!

    இசையமைப்பாளர், நடிகர் என இரண்டு துறைகளிலும் தொடர்ந்து கலக்கி வலம் வருபவர் தான் ஜிவி பிரகாஷ். இசையமைப்பாளராக ஒருபக்கம் பிஸியாக இருக்கும் ஜிவி பிரகாஷ், இயக்குநர் காந்தி கிருஷ்ணாவுடன் மீண்டும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தில் இணைந்திருக்கிறார். இதற்கு முன்பு இவர்கள் இணைந்து பணிபுரிந்த ‘ஆனந்த தாண்டவம்’ படத்திற்குப் பிறகு தற்போது இவர்கள் இணைந்திருக்கும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

    படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து ஜிவி பிரகாஷ் குமார் பகிர்ந்து கொண்டதாவது, “காந்தி கிருஷ்ணா சாருடன் மீண்டும் இணைந்து பணிபுரிந்தது ஸ்பெஷலான அனுபவம். ’ஆனந்த தாண்டவம்’ என் வாழ்க்கையில் முக்கியமான கட்டத்தில் வந்த படம். அந்தப் படத்தில் என்னை நம்பி, ரசிகர்களை சென்றடைந்த இசையை உருவாக்க வாய்ப்பு கொடுத்த காந்தி கிருஷ்ணா சாருக்கு நன்றி. இசையமைப்பாளராக ஒரு வலுவான அடித்தளத்தை எனக்கு அமைத்து கொடுத்த படங்களில் அது முக்கியமானது. மனித உறவுகளை அவர் படங்களில் அணுகும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆழமும், நுணுக்கமும், நேர்மையும் கலந்த அந்த அணுகுமுறையால் அவரது படங்களை ஒரு நாவலை திரையில் காண்பது போல உணர வைக்கும்.

    ஒவ்வொரு கதாபாத்திரமும் சொல்லாத ஒரு கதையை பல உணர்வுகளுடன் தன்னுள்ளே மறைத்து வைத்திருக்கும். ‘பிரேக்ஃபாஸ்ட்’ அப்படியான ஒரு படம். இன்றைய காலத்தில் உறவுகளின் சிக்கல்களையும், மனிதர்களின் உணர்வுகளை பற்றியும் இந்தப் படம் திரையில் பேசும். இந்தப் படத்திற்கு இசை அமைக்கும் போது, கதை ஓட்டத்துடன் இயல்பாக கலந்து செல்லும் வகையில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அது காட்சிகளை மீறி ஒலிக்காமல், கதாபாத்திரங்களுடன் சேர்ந்து பயணித்து, அவர்களின் உணர்வுகளை உயர்த்த வேண்டும் என்பதே என் நோக்கம். இந்தப் படத்தின் பாடல்கள் திரையைத் தாண்டியும் ரசிகர்களிடம் நீண்டநாள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். படத்தை பெரிய திரையில் ரசிகர்களுடன் காண ஆவலாக உள்ளேன்” என்றார்.

  • ஒரு பாப்கார்னும்.. பன்னும் வாங்கித் தந்தா என்னை கட்டிக்கலாம்!.. சத்யராஜ் மகள் ஓபன் டாக்!..

    ஒரு பாப்கார்னும்.. பன்னும் வாங்கித் தந்தா என்னை கட்டிக்கலாம்!.. சத்யராஜ் மகள் ஓபன் டாக்!..

    வில்லன், ஹீரோ, குணச்சித்திரம் என பல பரிமாணங்களில் நடித்துள்ள நடிகர் சத்யராஜ் தற்போது வெளியாகும் திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில், அவரின் மகள் திவ்யா சத்யராஜ் அளித்துள்ள பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சத்யராஜ் அவர்களின் மனைவி மகேஷ்வரி சத்யராஜ். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மகன் சிபிராஜ் தமிழ் திரைப்படங்களில் நடிகராக செயல்பட்டு வருகிறார். அவர் பல படங்களில் ஹீரோவாக நடித்ததுடன், தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தையும் உருவாக்கியுள்ளார்.

    மகள் திவ்யா, திரைப்படத் துறையில் அதிகமாக ஈடுபடாமல், சமூக சேவைகள் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சமூக நலத்திட்டங்களில் அவர் ஆற்றும் பணி பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது. அதை தாண்டி கடந்த சில மாதங்களாக திமுகவுக்கு ஆதரவாகவும் தவெகவுக்கு எதிராகவும் மட்டும் பேசி வருகிறார்.

    இந்நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த திவ்யா சத்யராஜ் தன்னைப் பற்றி பல விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அதில், “எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. எனக்காக ஜாதகம் எழுதப்படவில்லை. பொதுவாக பள்ளி விடுமுறையில் குழந்தைகள் உறவினர்கள் வீடுகளுக்கு செல்வார்கள்; ஆனால் என்னைக் கண்டால், பலர் தங்களுடைய குழந்தைகளை என்னுடன் பழக விடமாட்டார்கள்,” என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், “எனக்கு திருமணத்தில் பெரிதாக நம்பிக்கை இல்லை. மோதிரம், தாலி போன்றவற்றில் விருப்பம் இல்லை. ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்து குழந்தை பெற்றுக்கொள்ளலாம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

    அதனைத் தொடர்ந்து, “நான் தனியாக சந்தோஷமாக இருந்தாலும் சரி, திருமணம் செய்து சந்தோஷமாக இருந்தாலும் சரி, நான் சந்தோஷமாக இருப்பதுதான் என் தந்தைக்கு முக்கியம். என் அப்பா நடித்த படங்களில் கடலோர கவிதைகள் படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் வில்லனாக நடிப்பதை விட ரொமான்டிக் ஹீரோவாக நடித்தால் தான் எனக்கு அதிகம் பிடிக்கும்,” என்றும் தெரிவித்துள்ளார்.

    மேலும், “எனக்கு நடிப்பை விட நியூட்ரிஷன் மற்றும் அரசியலில் அதிக ஆர்வம் உள்ளது. என்னை திருமணம் செய்பவர் சத்யம் சினிமாவில் ஒரு படம் பார்க்க அழைத்து, டீ மற்றும் பன் வாங்கிக் கொடுத்தாலே போதும்; நகைகள் எதுவும் தேவையில்லை,” என்று சிரிப்புடன் பகிர்ந்துள்ளார்.

  • ’கோ’ படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு.. கே.வி. ஆனந்த் இல்லையே.. ஜீவா உருக்கம்!..

    ’கோ’ படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு.. கே.வி. ஆனந்த் இல்லையே.. ஜீவா உருக்கம்!..

    நடிகர் ஜீவா நடிப்பில் சமிபத்தில் வெளியான தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், ஜீவாவின் கேரியரில் முக்கியமான படத்தில் ஒன்றான கோ வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் ஆனதை பற்றி அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    தமிழ் திரைப்படத் துறையில் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள நடிகர்களில் முக்கியமானவர் ஜீவா. பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி அவர்களின் மகனாக சினிமா உலகில் அறிமுகமானாலும் தனது சொந்த முயற்சியால் நடிகராக தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார்.

    அவர் 2003ஆம் ஆண்டு ஆசை ஆசையாய் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து ராம் ,ஈ, சிவா மனசுல சக்தி மற்றும் கற்றது தமிழ் போன்ற படங்களில் அவரது வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வுகள் அவரை திறமையான நடிகராக ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க உதவியது.

    ஜீவா தமிழ் மட்டுமின்றி ஹிந்தியில் 83 படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் நடித்தது அவரது திறமையை மேலும் வெளிப்படுத்த உதவியது. ஷங்கர் இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து நண்பன் படத்திலும் அசத்தினார். சில படங்கள் படுதோல்வியை சந்தித்த நிலையில், பிளாக் திரைப்படம் ஜீவாவுக்கு மீண்டும் ரசிகர்களை உருவாக்கி கொடுத்தது. பொங்கலுக்கு வெளியான படங்களில் வெற்றிப் படமாக தலைவர் தம்பி தலைமையில் படம் மாறியது.

    இந்நிலையில் ஜீவா தான் நடித்த கோ படம் வெளியாகி 15 ஆண்டுகளானதை குறித்து இந்த நாளில், எனக்கு மிகவும் பிடித்தமான கே.வி.ஆனந்த் சாரை நினைவுகூர்கிறேன். உங்களிடமிருந்து வந்த முதல் தொலைபேசி அழைப்பும் கடைசி செய்தியும் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது, சார். நீங்கள் அப்போதும், இப்போதும், என்றும் வாழும் ஒரு மேதை. நன்றி, சார். அஷ்வின் மற்றும் மற்றவர்கள் மீது பொழிந்த அன்புக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி என்ற தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அயன், கோ, மாற்றான், காப்பான் என வரிசையாக கே.வி. ஆனந்த் இயக்கிய படங்கள் எல்லாமே ஷங்கருக்கு அடுத்த பிரம்மாண்ட படங்களாகவே தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவர்ந்தன. கே.வி. ஆனந்தின் மறைவு மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. ஜீவாவுக்கு முன்பாக சிம்புவை வைத்தே கோ படத்தை இயக்க நினைத்தார். ஆனால், கடைசியில் அந்த பட வாய்ப்பு ஜீவாவுக்கு கிடைத்தது. இந்நிலையில், அதை மறக்காமல் ஜீவா பதிவிட்டுள்ளார்.