Author: adminram

  • புருஷனை நம்பி பல கோடி போட்டுருக்கேன் கோயிந்தா.. காப்பாத்திடு கோயிந்தா!..

    புருஷனை நம்பி பல கோடி போட்டுருக்கேன் கோயிந்தா.. காப்பாத்திடு கோயிந்தா!..

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நாளை வெளியாக உள்ள எல்.ஐ.கே திரைப்படம் வெற்றி பெற வேண்டி, விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாராவுடன் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அந்த பக்தி தருணங்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

    நடிகை நயன்தாரா தயாரிப்பில் உருவாகியுள்ள எல்.ஐ.கே திரைப்படம் பல தடைகளைத் தாண்டி தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கிய இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான், யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும், அனிருத் இசையமைத்த இந்த படத்தின் “தீமா”, “எனக்கேன் யாருமில்லை” போன்ற பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. அதனைத் தொடர்ந்து “வைப் வாசி” என்ற புதிய பாடலும் இன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

    சமீபத்தில் நடைபெற்ற பட விழாவில், விக்னேஷ் சிவன் “நானும் ரவுடிதான்” படப்பிடிப்பின் போது நயன்தாராவுடன் ஏற்பட்ட தனது காதல் கதையை மனம் திறந்து பகிர்ந்தார். மேலும், “நான் நயன்தாராவின் கணவர் என்று அனைவராலும் அறியப்படுவது எனக்கு மிகுந்த பெருமை. வாழ்க்கையில் அன்பே மிக முக்கியம்” என அவர் உணர்ச்சிபூர்வமாக தெரிவித்தார்.

    இந்நிலையில், நயன்தாரா தனது படப்பிடிப்பு மற்றும் தொழில் தொடர்பான பணிகளில் பிஸியாக இருந்தபோதிலும், தனது கணவருக்காக எல்.ஐ.கே படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது முழு ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளார்.

  • பிஸ்மியை கட்டிப்பிடித்து பொதுவெளியில் கிஸ் அடித்தது ஏன்?.. நடிகை ஐஸ்வர்யா விளக்கம்!..

    பிஸ்மியை கட்டிப்பிடித்து பொதுவெளியில் கிஸ் அடித்தது ஏன்?.. நடிகை ஐஸ்வர்யா விளக்கம்!..

    லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியாக உள்ள லீடர் படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா, பத்திரிக்கையாளர் பிஸ்மியை கட்டிப்பிடித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்த நிலையில், தற்போது ஐஸ்வர்யா அளித்துள்ள பேட்டியில் அதற்கான விளக்கத்தை வழங்கியுள்ளார்.

    நடிகர் சூர்யா நடித்த ஆறு படத்தில் ‘சவுண்ட் சரோஜா’ கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ஐஸ்வர்யா. அதனைத் தொடர்ந்து வேல், சபரி, அபியும் நானும், புரிதி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு தொடர்ந்து பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் வாழ்க்கையை நடத்த சோப்பு விற்பனை செய்யும் நிலைக்கும் தள்ளப்பட்டார்.

    பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு, மீண்டும் லீடர் படத்தின் மூலம் திரைத்துறைக்கு திரும்பும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வருகையை கொண்டாடும் நேரத்தில் நடந்த அந்த கட்டிப்பிடிப்பு சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

    இந்த விவகாரம் குறித்து பேசிய ஐஸ்வர்யா, “1990-ம் ஆண்டிலிருந்தே நான் மற்றும் பிஸ்மி நண்பர்கள். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை சந்திக்கும்போது, நான் எப்படி ஃபார்மலாக மட்டும் பேச முடியும்? அவர் என்னுடைய நெருங்கிய நண்பர். நண்பனை கட்டிப்பிடிப்பதில் எந்தத் தவறும் இல்லை” என்று தெளிவாக கூறினார்.

    மேலும் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும் அவர் மனம் திறந்து பேசியுள்ளார். “என் அம்மா லக்ஷ்மி அளவுக்கு எனக்கு அழகும் இல்லை, நடிப்பும் வரவில்லை. பணம் இருக்கும் வரை நண்பர்கள் இருப்பார்கள், ஆனால் பணம் இல்லாத போது அவர்கள் விலகி விடுவார்கள். தனிமையில் வாழத் தொடங்கும் போது அது மிகவும் கஷ்டமாக இருக்கும். பிறகு அது பயமாக மாறும். ஆனால் அதற்கும் பழகிவிட்டால், அந்த தனிமையிலேயே ஒரு விதமான அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்” என்று கூறினார்.

    2009-ம் ஆண்டிலிருந்து தனிமையான வாழ்க்கையை அனுபவித்து வருவதாகவும், வாழ்க்கையின் பல தருணங்களில் யாருடனும் எதையும் பகிர்ந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். “என் வாழ்க்கையை மட்டுமல்ல, கூடவே கழிப்பறையைக் கூட யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கு தனிமை இருந்தது” என்ற அவரது உணர்ச்சிமிக்க கருத்து கவனம் ஈர்த்துள்ளது.

    தற்போது ஆன்மீகத்திற்கும் யோகாவிற்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், சத்குருவின் வழியில் சென்று தனது மன அமைதியை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருவதாகவும் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.

  • சீமானின் சேட்டை வாய்ஸ்.. போனை தூக்கிப் போட சொல்லும் பிரதீப் ரங்கநாதன்.. ’வைப் வாஸி’ வேலைக்கு ஆகுமா?

    சீமானின் சேட்டை வாய்ஸ்.. போனை தூக்கிப் போட சொல்லும் பிரதீப் ரங்கநாதன்.. ’வைப் வாஸி’ வேலைக்கு ஆகுமா?

    லவ் டுடே, டிராகன், டியூட் என தொடர்ந்து 100 கோடி பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து வரும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள எல்.ஐ.கே படம் வருகின்ற ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இன்று அப்படத்தின் புதிய பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

    நடிகை நயன்தாரா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள லவ் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். மேலும், இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் கீர்த்தி ஷெட்டி, சீமான், எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் சமீபத்தில் எல்.ஐ.கே படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. அதில் விக்னேஷ் சிவன், நயன்தாரா, பிரதீப் ரங்கநாதன், அனிருத் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர். அதில் பேசிய பிரதீப் என்னுடைய படத்தின் சுமாரான வசூலே 100 கோடி என்று அனைவரும் ஃபிக்ஸ் செய்துவிட்டனர். அப்படி என் படம் வசூல் செய்யாவிட்டால் தோல்வி படமாக பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். அதனால் எனக்கு படத்தின் வசூல் முக்கியம் இல்லை மக்களுக்கு படம் பிடித்தால் போதும் என்று பேசியிருந்தார்.

    மேலும், எல்.ஐ.கே படத்தின் அனிருத் இசையில் ’வைப் வாசி’ பாடல் வெளியாகி சமூகவலைத்தளங்களை கலக்கிவருகிறது. டியூட் படத்தின் ஊறும் பிளட் பாடல் ரீச்சான அளவிற்கு இப்பாடலும் ரசிகர்களிடையே வரவேற்பை பெருமா என்பதை காத்திருந்து பார்க்கலாம். அனிருத் பாடியுள்ள இப்பாடலில் லிரிக்ஸை விட சீமானின் டைலாக் தான் அதிகமாக உள்ளதாக சிலர் ட்ரோல் செய்து வருகின்றனர்.

    2 வருஷத்துக்கு முன்னாடியே வெளியான தீமா, 10 வருஷத்துக்கு முன்னாடி வெளியான எனக்கென யாரும் இல்லையே, போன வருஷம் வெளியான பட்டும்மா, சமீபத்தில் வெளியான அடாவடி பாடல்களுடன் இந்த பாடல்களும் ரசிகர்களின் ரிங்டோன் லிஸ்ட்டில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • சிம்பு படத்தை இயக்கினாலும் பாக்கெட்டில் சில்லறை இல்லை.. அனிருத் தான் 50 ஆயிரம் கொடுத்தாரு – விக்கி!

    சிம்பு படத்தை இயக்கினாலும் பாக்கெட்டில் சில்லறை இல்லை.. அனிருத் தான் 50 ஆயிரம் கொடுத்தாரு – விக்கி!

    இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள LIK படம் பல தடைகளுக்கு பிறகு வருகின்ற ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும், இப்படத்தின் இசைவெளியிட்டு விழா நேற்று மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்ற நிலையில் விக்னேஷ் சிவன் அனிருத் தனக்கு செய்த உதவியை பற்றி எமோஷனலாக பேசியது தற்போது சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    நடிகை நயன்தாரா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, கௌரி கிஷன், யோகி பாபு, எஸ்.ஜே.சூர்யா, சீமான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    மேலும், விக்னேஷ் சிவன் தான் சிம்புவை வைத்து போடா போடி படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமான பின்னரும் தன்னிடம் நானும் ரவுடி தான் படத்திற்காக பாண்டிச்சேரிக்கு செல்ல பஸ்ஸுக்கு மட்டும் வெறும் 250 ரூபாய் தான் புலம்பிக்கொண்டே என்ன செய்வதென்றே புரியாமல் சென்று கொண்டிருந்த போது அனிருத் போன் செய்து உன் பேகில் 50 ஆயிரம் பணம் வச்சிருகேன்னு சொன்னார், அதை கேட்டதும் நான் அப்படியே கலங்கிப் போயிட்டேன். என் கண்ணீரால் பஸ்ஸின் கம்பிகள் எல்லாம் நனைந்தது என எமோஷனலாக பேசியிருந்தார். விக்னேஷ் சிவன் தனக்கு ஆரம்பத்திலிருந்து தற்போது வரை எல்லா விதத்திலும் அனிருத் செய்த உதவிகளுக்கு உருக்கமாக தனது நன்றியினை தெரிவித்தார்.

    பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் வெளியான டிராகன் மற்றும் டியுட் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு LIK படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பை வைத்துள்ளனர். மேலும், இப்படமும் பிரதீப்பிற்கு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2040ல் தமிழ்நாட்டில் நடக்கும் லவ் ஸ்டோரிக்கு ஆப் மூலம் பிரச்னை வருவதே படத்தின் கதை.

  • புஷ்பா 2வை விட பெரிய சம்பவம் லோடிங்!.. அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ ஃபர்ஸ்ட் லுக் எப்படி?

    புஷ்பா 2வை விட பெரிய சம்பவம் லோடிங்!.. அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ ஃபர்ஸ்ட் லுக் எப்படி?

    ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தின் பெயரை இன்று அறிவித்துள்ளனர். மேலும், இப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

    இயக்குநர் அட்லி நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து உருவாகிய ஜவான் திரைப்படம் உலக அளவில் அதிக வசூலை பெற்ற நிலையில் தற்போது அட்லி தனது 6வது படத்தை அல்லு அர்ஜுனுடன் இணைந்து 800 கோடிக்கு மேல் மிக பிரம்மாண்டமாக படத்தை எடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தனது 22வது படத்தை இயக்குனர் அட்லியுடன் பணியாற்றிவரும் நிலையில் இப்படத்திற்கு ‘ராக்கா’ என்று பெயரை வெளியிட்டுள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார்.

    ராக்கா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அல்லு அர்ஜுன் மொட்டை அடித்த முகத்துடன் ராட்சத கைகளுடன் பயங்கரமாக இருக்கிறார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் உருவாகி வருகிறது.

    அட்லி மற்றும் அல்லு அர்ஜுன் கூட்டணியில் வெளியாக உள்ள ராக்கா படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அட்லி ஐ படம் மற்றும் ஜவான் படத்தை கலந்து இப்படத்தை எடுத்திருப்பாரோ என சமூக வளைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக தீபிகா படுகோன் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய சம்பவத்தை புஷ்பா 2 போல ராக்கா படமும் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • டேய் உன் படங்களை நான் பார்த்தது கூட இல்லை- மிஸ்கினை கலாய்த்த ஆர்.ஜே.பாலாஜி

    டேய் உன் படங்களை நான் பார்த்தது கூட இல்லை- மிஸ்கினை கலாய்த்த ஆர்.ஜே.பாலாஜி

    பிரதீப் ரங்கநாதன் , கீர்த்தி ஷெட்டி நடிப்பில் வருகிற 10ம் தேதி வெளியாக உள்ள படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. நீண்ட இடைவெளிக்கு பிறகு விக்னேஷ் சிவன் இப்படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்த இப்படத்தின் இரு பாடல்கள் ஏற்கெனவே யூடியூப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்த நிலையில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ஆவடியில் உள்ள வேல்ஸ் யூனிவர்சிட்டி கல்லூரியில் இன்று நடைபெற்றது. விழாவில் இயக்குனர் ராம், மிஷ்கின், ஆர்,ஜே. பாலாஜி உள்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

    விழாவில் கலந்துகொண்ட அர்.ஜே.பாலாஜி பேசுகையில் , மிஸ்கின் சார் வணக்கம். நான்தான் ஆர்.ஜே.பாலாஜி. ஏதோ குத்துமதிப்பா ஒரு வணக்கம் வச்சிட்டீங்க. நான் தமிழ் படத்துல எல்லாம் நடிச்சிருக்கேன். எப்படியும் நான் நடிச்ச படங்கள் எல்லாம் பார்த்திருக்க மாட்டீங்க. நீங்க வந்து சொல்லுவீங்க டேய் பாலாஜி உன் படங்கள் எல்லாம் நான் பார்த்தது இல்லடானு என்று மேடையில் மிஷ்கினை கிண்டலாக கூறினார். அதற்கு மிஷ்கின் இல்லை நான் பார்த்திருக்கிறேன் என்று கூறி முத்தங்களை பறக்கவிட்டார்.

  • பாரதிராஜா, பாக்கியராஜ் போலத்தான் பிரதீப் ரங்கநாதன்!.. ராம் பேசியதும் கலங்கிய விக்னேஷ் சிவன்!..

    பாரதிராஜா, பாக்கியராஜ் போலத்தான் பிரதீப் ரங்கநாதன்!.. ராம் பேசியதும் கலங்கிய விக்னேஷ் சிவன்!..

    லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று வேல்ஸ் யூனிவர்சிட்டி ஆவடியில் நடைபெற்றது. அதில், பல பிரபலங்கள் பங்கேற்று பிரதீப் ரங்கநாதன் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனை பாராட்டிப் பேசினர்.

    நானும் ரவுடி தான் படம் உருவாக தான் எந்தளவுக்கு காரணமாக இருந்தேன் என்பதை இயக்குநர் ராம் ஓபனாக பேசியதும், விக்னேஷ் சிவனை அவர் புகழ்ந்த நிலையில், லேசாக கண் கலங்கிவிட்டார்.

    பாலிவுட்டில் முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ் போன்ற படங்களை இயக்கிய ராஜ்குமார் ஹிரானி போல தமிழில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது படங்களை கொடுத்து வருகிறார் என பாராட்டினார். நானும் ரவுடி தான் படத்தின் ஹீரோ அனிருத் தான். ஆனால், அவர் நடிக்கவில்லை என்று சொன்னதும் அந்த ஸ்க்ரிப்ட்டை தமிழ்நாட்டில் உள்ள பல நடிகர்களிடம் விக்னேஷ் சிவன் சொன்னார்.

    நான் தான் விஜய் சேதுபதியிடம் பேசச் சொல்லி சொன்னேன். அவர் எப்படி செட் ஆவார் என்றார். ஆனால், அதன் பின்னர், அந்த படத்தில் விஜய் சேதுபதி அந்த கதாபாத்திரத்திற்காக தன்னை தயார் செய்து வந்து நடித்து படத்தை வெற்றிப்பெற செய்தார்.

    தமிழ் சினிமாவில் கதை ஆசிரியர்களும் இயக்குநர்களும் ஹீரோவாகலாம் என்பதை பாரதிராஜா, பாக்கியராஜ், பாண்டியராஜன், பார்த்திபன் போன்றவர்கள் நிரூபித்துக் காட்டினர். அதன் பின்னர், அது அப்படியே தேங்கி நின்றது. ஆனால், அதை திரும்பவும் கொண்டு வந்து கலர், உருவம், ஹைட்டு எல்லாம் தேவையில்லை, நல்லா நடிக்கத் தெரிந்தால் போதும் யார் வேண்டுமானால் ஹீரோவாக ஆகலாம் என்பதை பிரதீப் நீரூபித்துக்காட்டினார்.

    வித் லவ் ஹீரோ, கென் கருணாஸ் யூத் படம் எல்லாம் பிரதீப் ரங்கநாதன் போட்ட பாதையில் அடுத்தடுத்து வந்தவர்கள் தான் என்று புகழ்ந்து தள்ளினார்.

  • பப்பாளி பழமே.. ஹிப் ஹாப் ஆதியின் ‘மீசையை முறுக்கு’ படத்தின் அடுத்த பாடல் ரெடி!

    பப்பாளி பழமே.. ஹிப் ஹாப் ஆதியின் ‘மீசையை முறுக்கு’ படத்தின் அடுத்த பாடல் ரெடி!

    குஷ்பு சுந்தரின் ஆவ்னி மூவிஸ் தயாரிப்பில் ஹிப் ஹாப் ஆதி தமிழா இயக்கி நடித்து வரும் மீசையை முறுக்கு 2 படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான “பப்பாளி பழமே” பாடல் நாளை மாலை 5.15 மணிக்கு வெளியாகும் என்கிற அறிவிப்பை சற்றுமுன் ஹிப் ஹாப் ஆதி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    ஹிப் ஹாப் ஆதி இசையமைப்பாளராக சுந்தர். சி இயக்கத்தில் வெளியான ஆம்பள படத்தில் அறிமுகமானார். அரண்மனை சீரிஸ் படங்களுக்கும் அவர் இசையமைத்தார். மீசையை முறுக்கு படத்தின் மூலம் இயக்குநராகவும் ஹீரோவாகவும் மாறினார்.

    ஆனால், அந்த படத்திற்கு பிறகு அவர் நடித்த படங்கள் பெரிதாக வெற்றிப் படங்களாக மாற தவித்து வந்த நிலையில், மீண்டும் தன்னை நிலை நிறுத்த வேண்டும் என்கிற அழுத்தம் காரணமாக மீசையை முறுக்கு 2ம் பாகத்தை கையில் எடுத்துள்ளார்.

    ஏற்கனவே அந்த படத்தில் இருந்து வெளியான அவ ஆரா 10/10 பாடலில் கேத்திகா ஷர்மா போட்ட டான்ஸை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் மயங்கி ரீல்ஸ் போட்டு வருகின்றனர். இந்நிலையில், அடுத்த பாடலின் டைட்டிலே பப்பாளி பழமே என வைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை எத்தனை பேர் ஜூஸ் போடப்போறாங்கன்னு தெரியவில்லை.

    இந்த சம்மருக்கே மீசையை முறுக்கு 2 மற்றும் புருஷன் உள்ளிட்ட படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னமும் ரிலீஸ் தேதி இறுதி செய்யப்படவில்லை. கண்டிப்பாக மே மாதம் வெளியாகும் என தெரிகிறது.

  • ஸ்ரேயா கோஷல் இசைக்கு மும்பை மாநகரமே அடிமை.. 30 கோடிக்கு ஆடம்பர பங்களா வாங்கிட்டாராம்!

    ஸ்ரேயா கோஷல் இசைக்கு மும்பை மாநகரமே அடிமை.. 30 கோடிக்கு ஆடம்பர பங்களா வாங்கிட்டாராம்!

    பிரபல பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல், மும்பையின் ஆடம்பர வோர்லி பகுதியில் ₹29.70 கோடிக்கு ஒரு புதிய அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளார். இச்சொத்தை தனது பெற்றோர்களான சர்மதிஷ்டா கோஷல் மற்றும் பிஸ்வஜித் கோஷலுடன் இணை உரிமையாளராகப் பதிவு செய்துள்ளார். சொத்து பதிவுத் தரவுகளின்படி (IGR போர்ட்டலில் இருந்து Square Yards), இந்த பரிவர்த்தனை 2026 ஏப்ரலில் நிகழ்ந்துள்ளது.

    தென் மும்பையின் முதன்மையான வோர்லியில் உள்ள கோத்ரெஜ் ட்ரிலாக்ஜியில் ஸ்ரேயா கோஷலின் புதிய குடியிருப்பு அமைந்துள்ளது. இதன் தரைப்பரப்பு 2,430.06 சதுர அடியும், மொத்த பரப்பளவு 2,750.28 சதுர அடியும் ஆகும். மூன்று கார் நிறுத்தும் இடங்கள் இருப்பதால், இது மும்பையின் ரியல் எஸ்டேட் சந்தையில் ஓர் அரிய அம்சமாகும்.

    குடியிருப்பிற்கு ₹1.78 கோடி முத்திரைக் கட்டணம், ₹30,000 பதிவுக் கட்டணம் செலுத்தப்பட்டது. பதிவுப் பணிகள் 2026, ஏப்ரல் 1 அன்று நிறைவடைந்தன. வோர்லி தற்போது மும்பையின் மதிப்புமிக்க குடியிருப்புப் பகுதியாக உள்ளது. அழகிய கடற் காட்சி, ஆடம்பரத் திட்டங்கள் மற்றும் புவியியல் இருப்பிடம் இதற்கு காரணம். இது தென் மும்பையின் லோயர் பரேல், பிரபாதேவி, பாந்த்ரா போன்ற பிரீமியம் பகுதிகளுக்கு இணையாகிறது.

    இப்பகுதியின் போக்குவரத்து இணைப்பு ஒரு முக்கிய பலம். பாந்த்ரா-வோர்லி கடல் பாலம், அன்னி பெசன்ட் சாலை மற்றும் மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை போன்ற திட்டங்கள் தென் மும்பை மற்றும் மேற்கு புறநகர்களிலிருந்து எளிதான பயணத்தை உறுதி செய்கின்றன.

    ஸ்ரேயா கோஷல் ‘ச ரி க ம ப’ நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். ‘தேவ்தாஸ்’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமான அவரது “பைரி பியா” பாடல் உடனடியாக வெற்றி பெற்றது. சமீபத்தில், விஜய் போலா இயக்கிய ‘மிஸ்டர் பான்வாலா’ திரைப்படத்தில் ஷான் மற்றும் விஷால் தட்லானியுடன் பாடியுள்ளார். ‘இந்தியன் ஐடல்’ உட்பட பல தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளிலும் நடுவராகப் பணியாற்றியுள்ளார்.

  • லெஜண்ட் சரவணன் லீடர் படத்தின் அம்புலி ராக் பாடல் வெளியீடு

    லெஜண்ட் சரவணன் லீடர் படத்தின் அம்புலி ராக் பாடல் வெளியீடு

    லெஜெண்ட் சரவணன் நடிப்பில் கடந்த 3ம் தேதி வெளியான படம் லீடர். எதிர்நீச்சல் , கொடி , கருடன் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கிய இந்த படம் பாசிடிவான விமர்சனக்கள் வந்ததை அடுத்து திரையரங்குகளில் கூட்டம் அலை மோதியது.

    leader movie

    லெஜெண்ட் சரவணனுடன் ஷாம், ஆண்ட்ரியா ஜெரெமையா, மலையாள நடிகர் லால், சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புத், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இப்படம் முதல் வாரத்திலேயே ரூ.25 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் லீடர் படத்தில் இடம்பெற்ற அம்புலி ராக் பாடல் இன்று யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது.