Author: adminram

  • ஜன நாயகன் எங்கே இருந்து லீக் ஆனது தெரியுமா?.. எடிட்டர் கொடுத்த விளக்கம்.. மொத்தமும் போச்சு!..

    ஜன நாயகன் எங்கே இருந்து லீக் ஆனது தெரியுமா?.. எடிட்டர் கொடுத்த விளக்கம்.. மொத்தமும் போச்சு!..

    விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் திரைப்படம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கே வெளியாகி இருந்தால் படக்குழுவுக்கு இத்தனை பெரிய நஷ்டம் ஏற்பட்டு இருக்காது. அரசியல் சதி காரணமாக சென்சார் சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் தான் படம் லீக் ஆக காரணம் என்கின்றனர்.

    எடிட் ரெஃப்ரன்ஸ் உடன் ஜனநாயகன் படம் லீக்கான நிலையில், சென்சார் போர்டில் இருந்து லீக் ஆகவில்லை என தணிக்கை குழு அறிவித்து விட்டனர். இந்நிலையில், எடிட்டர் பிரதீப் ராகவ் மீதே தயாரிப்பு நிறுவனத்துக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில், எடிட்டர் சங்கம் இன்று விளக்க அறிக்கை கொடுத்துள்ளது.

    அதில், ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் தாமதமான நிலையில், சில சிஜி காட்சிகளை நல்லா எடிட் செய்வதற்காக ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோஸுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் அங்கே ஒரு பெரிய டீமே சிஜி வேலைகளை பார்த்ததாக கூறுகின்றனர்.

    அங்கே இருந்து தான் படம் மொத்தமும் கசிந்திருக்க வாய்ப்புகள் அதிகம் என தற்போது எடிட்டர் சங்கம் பிரதீப் ராகவ் தரப்பில் விளக்கம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    விஜய்யின் வளர்ச்சி பிடிக்காமல் டோலிவுட்டில் இருந்த யாரோ சிலர் தான் ஜன நாயகன் மொத்த படத்தையும் திருடி தற்போது லீக் செய்துள்ளனர் என்கின்றனர். கூடிய விரைவிலேயே உண்மையான குற்றவாளிகள் பிடிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சைபர் கிரைம் போலீஸார் சுமார் 6 பேரை கைது செய்துள்ளதாக கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் யார், அவர்களின் விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

  • பொடிப்பையன் ரன்வீர் சிங்குக்கெல்லாம் துரந்தர் போல கதை அமையுது.. ரஜினியால் டர்ரான டான் டைரக்டர்!..

    பொடிப்பையன் ரன்வீர் சிங்குக்கெல்லாம் துரந்தர் போல கதை அமையுது.. ரஜினியால் டர்ரான டான் டைரக்டர்!..

    தீபிகா படுகோனை விட ரன்வீர் சிங் பாலிவுட்டில் ரொம்பவே மட்டமான நிலையில் தான் இருந்தார். ஆனால், துரந்தர் மற்றும் துரந்தர் 2 என இரு படங்களில் ஒட்டுமொத்தமாக 3000 கோடி வசூலை ஈட்டி ஷாருக்கான், அல்லு அர்ஜுன் ரேஞ்சுக்கு உயர்ந்துவிட்டார்.

    சமீபத்தில், லெஜண்ட் சரவணாவின் லீடர் படமே துரந்தர் அளவுக்கு செம மாஸான ஸ்பை படமாக உருவாகி இருந்தது. ஆனால், ரஜினிக்காக டான் பட டைரக்டர் சிபி சக்கரவர்த்தி சுட்டுக் கொடுத்த ஹாலிவுட் ரீமேக் படத்தின் கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்றும் துரந்தர் அளவுக்கு மாற்றிக் கொண்டு வா என ரஜினிகாந்த் உத்தரவிட, அய்யோ ஆளவிடுங்க சாமி என ஓடிவிட்டார் என்கின்றனர்.

    தெலுங்கில் நானி படத்துக்கு டாட்டா காட்டிவிட்டு வந்த நிலையில், அங்கேயும் தயாரிப்பாளர்கள் 5 கோடிக்கு ஃபைன் போட்ட நிலையில், சிபி சக்கரவர்த்திக்கு மீண்டும் ஏழரை ஆரம்பித்துவிட்டதா? என கலாய்க்கின்றனர்.

    சிவகார்த்திகேயன், எஸ்.ஜே. சூர்யாவை வைத்து டான் எனும் படத்தை எடுத்து உருட்டிய சிபி சக்கரவர்த்தி சுமார் 4 ஆண்டுகளாக புதிய படத்தை ஆரம்பிக்காமல் இருந்து வந்த நிலையில், தலைவர் 173 படம் கிடைத்து விட்டதே என ஹேப்பியாக இருந்த அவருக்கு தற்போது ரஜினிகாந்த் படத்தை இயக்கும் வாய்ப்பு பறிபோகும் நிலை உள்ளதாக கூறுகின்றனர்.

    டிராகன் படத்தை எடுத்துவிட்டு சிம்புவுக்காக தவம் கிடைக்கும் அஸ்வத் மாரிமுத்து ஒரு வருடம் பார்ட்டி பண்ணிவிட்டு ஜாலியாக இருந்த நிலையில், அவருக்குத்தான் தலைவர் 173 படத்தை இயக்கும் ஜாக்பாட் கிடைக்கப் போகிறது என்கின்றனர். ரஜினிகாந்த் – கமல் படத்தின் ப்ரோமோவே வந்த நிலையில், இன்னமும் சிபி சக்கரவர்த்தி பட அறிவிப்பு வராத நிலையில், இனியும் வருமா? வராதா? என்று தெரியவில்லை.

  • சர்வம் மாயா செம ஹிட்.. நிவின் பாலியின் ‘ஏழு கடல் ஏழு மலை’ ரிலீஸுக்கு ரெடியாம்!

    சர்வம் மாயா செம ஹிட்.. நிவின் பாலியின் ‘ஏழு கடல் ஏழு மலை’ ரிலீஸுக்கு ரெடியாம்!

    இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம், கடந்த 2025ஆம் ஆண்டு மார்ச் மாதமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் அதன் வெளியீடு தாமதமாகி, நீண்ட நாட்களாக எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாமல் இருந்தது.

    இந்நிலையில், தற்போது இந்த படத்தை மிக விரைவில் திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பு தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். இதில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

    இப்படம் Rotterdam மற்றும் Moscow போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, வெளிநாட்டு ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பாராட்டுகளை பெற்றுள்ளது. நிவின் பாலி நடித்த சர்வம் மாயா திரைப்படம் 150 கோடி வசூல் ஈட்டிய நிலையில், அவரது படங்களின் ரிலீஸில் இருந்த சிக்கல்கள் தீர்ந்துள்ளதாக கூறுகின்றனர்.

    கதைக்களத்தைப் பொருத்தவரை, ஒரு சாதாரண மனிதன் மற்றும் மர்மமான அம்சங்கள் கொண்ட சில கதாபாத்திரங்கள் இடையே நடைபெறும் விசித்திரமான சம்பவங்களை மையமாகக் கொண்டு, ரயில் பயணத்தை பின்னணியாகக் கொண்ட ஒரு தனித்துவமான கற்பனை கலந்த திரில்லர் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.

    மேலும், இயக்குநர் ராம் அவர்களின் ”கற்றது தமிழ்” போன்ற படங்களில் காணப்படும் ரியலிஸ்டிக் மற்றும் ஆழமான உணர்ச்சி அணுகுமுறை, இந்த படத்திலும் இடம்பெறும் என ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    இந்நிலையில், கோல்டன் ஸ்பாரோ நிறுவனம் இந்த படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால், நீண்டநாள் காத்திருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் மிக விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியே சியான் விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்துக்கும் ஏதாவது வழி பிறந்தால் நல்லா இருக்கும்.

  • ’விசில்’ ஹீரோ விக்ரமாதித்யாவை மறக்க முடியுமா?.. இப்போ எப்படி இருக்காருன்னு பாருங்க!

    ’விசில்’ ஹீரோ விக்ரமாதித்யாவை மறக்க முடியுமா?.. இப்போ எப்படி இருக்காருன்னு பாருங்க!

    விஜய்க்கு முன்னதாகவே ”விசில் அடிக்கும் மதனா மதனா” என விசில் படத்தில் நடித்தவரே நடிகர் விக்ரமாதித்யா தான். பல ஆண்டுகள் ஆள் அட்ரஸே இல்லாமல் இருந்த அவரை பற்றிய சில தகவல்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.

    இயக்குநர்கள் ஜே.டி, ஜெரி இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு வெளியான ‘விசில்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்த விக்ரமாதித்யா அவர்களின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

    ‘விசில்’ திரைப்படம், ஹாலிவுட் படமான அர்பன் லெஜண்ட் என்பதன் ரீமேக்காக உருவாக்கப்பட்டது. இப்படத்தில் காயாத்திரி ரகுராம், செரின், திவ்யதர்ஷினி அதாங்க நம்ம டிடி நீலகண்டன், விவேக், லிவிங்ஸ்டன், செந்தில், மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். முக்கோணக் காதல், திகில் மற்றும் திரில்லர் அம்சங்கள் கலந்து உருவான இந்த படம், டி.இமான் இசையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

    இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விக்ரமாதித்யா, தனது கவர்ச்சியான தோற்றத்தாலும் நடிப்பாலும் குறிப்பாக பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். இருப்பினும், பின்னர் அவருக்கு எதிர்பார்த்த அளவில் வாய்ப்புகள் கிடைக்காததால், திரைப்படத்துறையில் இருந்து படிப்படியாக விலகினார்.

    இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகியுள்ள அவரது சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இன்றளவும் ‘விசில்’ படத்தில் பார்த்த அதே இளமையும் அழகும் மாறாமல் திகழ்வது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

  • 5 கோடி ஃபைன் கட்டு.. ரஜினிகாந்த் படத்தை இயக்க முடியாமல் தவிக்கும் டான் டைரக்டர்!.. இதான் காரணம்?

    5 கோடி ஃபைன் கட்டு.. ரஜினிகாந்த் படத்தை இயக்க முடியாமல் தவிக்கும் டான் டைரக்டர்!.. இதான் காரணம்?

    சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு டான் திரைப்படம் வெளியானது. டாக்டர் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அந்த படம் 100 கோடி வசூல் படமாக மாறியது. ஆனால், அந்த படத்தின் இயக்குநருக்கு அதன் பின் எந்தவொரு பட வாய்ப்புகளும் கிடைக்காமல் சுமார் 4 ஆண்டுகள் ஆபீஸில் சேரை தேய்த்துக் கொண்டிருந்தவருக்கு அடித்தது ஜாக்பாட் என்பது போல கமல் தயாரிப்பில் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு சுந்தர். சி வெளியேறிய நிலையில், கிடைத்தது.

    ஆனால், தற்போது அந்த படத்தை ஆரம்பிக்க முடியாமல் சிபி சக்கரவர்த்திக்கு பெரிய பிரச்சனை வந்துள்ளதாக கூறுகின்றனர். டான் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயனை வைத்து டான் 2 படத்தை இயக்கப் போகிறார் என்றெல்லாம் பேச்சுக்கள் ஓடின.

    மேலும், தெலுங்கில் ஒரு பெரிய நடிகரின் படத்தை இயக்கப் போகிறார் என்றும் அந்த படத்துக்காக பெரிய தொகையை அட்வான்ஸ் ஆக வாங்கிவிட்டார் என்றும் கூறினர். ஆனால், ரஜினிகாந்த் பட வாய்ப்பு கிடைத்த நிலையில், அந்த தெலுங்கு படத்தில் இருந்து விலகி விட்டார்.

    அதுமட்டுமின்றி வாங்கிய அட்வான்ஸ் தொகையையும் கொடுத்துவிட்டாராம். ஆனாலும், என்ன பிரச்னைப்பா என்று பார்த்தால், அட்வான்ஸ் பணம் ஓகே, படத்தின் ப்ரீ புரொடக்‌ஷனுக்காக நாங்க செலவு பண்ண 5 கோடியை கொடுத்துவிட்டு கம்பியை நீட்டுன்னு சொல்லிட்டாங்களாம் பட நிறுவனம். ரஜினி பட வாய்ப்புக் கிடைத்தாலும், கமல் தரப்பில் இருந்து பெரிய சம்பளம் எல்லாம் பேசப்படவில்லை என்கின்றனர். இதனால், 5 கோடி பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருப்பதால் ரஜினி படத்தை ஆரம்பிக்க முடியாமல் தவித்து வருகிறார் என்கின்றனர். எப்படி இருந்தாலும், ரஜினி, கமல் தலையிட்டு சிபி சக்கரவர்த்தியின் பஞ்சாயத்தை பைசல் பண்ணிவிடுவார்கள் என்றே தெரிகிறது.

  • இதாவது கேட்குற மாதிரி இருக்குமா?.. சூர்யாவின் ‘கருப்பு’ 3வது சிங்கிள்.. ரிலீஸ் எப்போ தெரியுமா?

    இதாவது கேட்குற மாதிரி இருக்குமா?.. சூர்யாவின் ‘கருப்பு’ 3வது சிங்கிள்.. ரிலீஸ் எப்போ தெரியுமா?

    ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த கருப்பு திரைப்படம் வரும் மே 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கருப்பு படத்தின் 3வது சிங்கிள் வெளியாகும் என டைரக்டர் ஆர்ஜே பாலாஜி அறிவித்துள்ளார்.

    சூர்யா, த்ரிஷா, ஆர்ஜே பாலாஜி, சுவாசிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஆண்டு பொங்கலுக்கு கூட படம் வெளியாகவில்லை.

    சாய் அபயங்கர் இசையில் ஏற்கனவே காட் மோட், நாங்க நாலு பேர் பாடல்கள் வெளியாகின. இதில், காட் மோட் பாடல் ரசிகர்களை கவர்ந்த அளவுக்கு 2வது பாடல் கவரவில்லை. மாறாக பலரும் அந்த பாடலை திட்டியும் கலாய்த்தும் வறுத்தெடுத்தனர்.

    தொடர்ந்து சாய் அபயங்கர் இசையமைக்கும் பாடல்களில் எல்லாம் வார்த்தைகளே புரியவில்லை என்கிற குற்றசாட்டு உள்ளது. இந்நிலையில், 3வது பாடலாவது ரசிகர்களுக்கு புரியும்படி இருக்குமா? என்கிற வினாவை எழுப்பி வருகின்றனர்.

    வரும் தமிழ் புத்தாண்டுக்கு சூர்யா ரசிகர்களுக்கு சரியான தீனியை ஆர்ஜே பாலாஜி மற்றும் சாய் அபயங்கர் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவின் கருப்பு படத்துக்குப் போட்டியாக இதுவரை மே மாதம் எந்தவொரு படமும் அறிவிக்கவில்லை. ஆனால், தேர்தல் முடிந்ததும் ஏகப்பட்ட படங்கள் வரிசை கட்டி வெளியாக உள்ளது. சுந்தர். சியின் புருஷன், ஹிப் ஹாப் ஆதியின் மீசையை முறுக்கு 2 உள்ளிட்ட பல படங்கள் வெளியாக காத்துக் கிடக்கின்றன.

  • தமிழ் புத்தாண்டுக்கே ஜனநாயகன் ரிலீஸ் ஆகப்போகுதா?.. அந்த பிரபலம் சொன்ன சூப்பர் மேட்டர்!..

    தமிழ் புத்தாண்டுக்கே ஜனநாயகன் ரிலீஸ் ஆகப்போகுதா?.. அந்த பிரபலம் சொன்ன சூப்பர் மேட்டர்!..

    விஜய்யின் ஜனநாயகன் படம் ரிலீஸுக்கு முன்பாகவே இன்று உலகம் முழுவதும் பலரது வீட்டு டிவிக்களில் முழு ஹெச்டி வடிவத்திலேயே ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால், படக்குழுவை தாண்டி தியேட்டர் ஓனர்கள், ஓடிடி நிறுவனம், படத்தை வாங்கியுள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சி என பலருக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்கின்றனர்.

    இந்நிலையில், ஜனநாயகன் படத்திற்கு சென்சார் வழங்க வேண்டும் என்றும் அதை ஹேக் செய்து லீக் செய்தவர்களை கண்டுபிடிக்க பிரதமர் மோடி வரை கேவிஎன் தரப்பு கோரிக்கை வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விஜய் தரப்பு தான் படத்தை லீக் செய்ததாக திமுகவினர், அதிமுகவினர், நாதகவினர் பொய் பிரச்சாரம் சொல்லி, படத்தின் லிங்குகளை அதிகம் ஷேர் செய்து வருவதாக தவெகவினர் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளனர்.

    மேலும், விஜய்க்கு உடல்நிலை சரியில்லை, அவருக்கு அந்த நோய், இந்த நோய் என வேண்டுமென்றே சில மீடியாக்கள் பொய் செய்திகளை பரப்பி விஜய்யை முடக்க முயற்சி செய்தாலும், அவர் இன்று கன்னியாகுமரியில் மீண்டும் மக்கள் அலையை திரட்டி மாஸ் காட்டியுள்ளார்.

    இந்நிலையில், ஜனநாயகன் படத்தின் சென்சார் பிரச்னையை நாளை சரி செய்ய ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. திருப்பூர் சுப்ரமணியம் அதுதொடர்பாக பேசியுள்ளார். ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்ய தணிக்கை சான்று கிடைத்தாலே அடுத்த நாளே படம் தியேட்டரில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர்.

    தமிழ்புத்தாண்டு செவ்வாய்க்கிழமை என்பதால், திங்கட்கிழமையான நாளை சென்சார் சான்றிதழ் கிடைத்தால் படம் நாளை மறுநாள் வெளியாகும் என்றும் விஜய் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் பதிவுகளை போட்டு வருகின்றனர். ஆனால், அதிகபட்சம் தேர்தல் முடிந்து ஏப்ரல் 24ம் தேதிக்குள் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • ஒரு நாள் லேட் ஆனாலும்.. விஜய்க்காக வாய் திறந்த பூஜா ஹெக்டே!.. மமிதா பைஜுவை காணோமே!..

    ஒரு நாள் லேட் ஆனாலும்.. விஜய்க்காக வாய் திறந்த பூஜா ஹெக்டே!.. மமிதா பைஜுவை காணோமே!..

    தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் திரைப்படம் திரைக்கு வருவதில் பல்வேறு தடைகள் நீடித்து வந்த நிலையில், சமீபத்தில் அந்தப் படத்தின் சில முக்கிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் லீக் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் ரசிகர்களையும், திரையுலகினரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. விஜய்க்கு ஆதரவாக பல பிரபலங்கள் குரல் கொடுத்து வரும் நிலையில், தற்போது நடிகை பூஜா ஹெக்டேவும் தனது கருத்துகளை X (முன்னாள் Twitter) தளத்தில் பகிர்ந்துள்ளார்.

    நடிகரும், தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவருமான விஜய்யின் ஜனநாயகன் படம் கடந்த ஜனவரி மாதமே வெளியாக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் படம் இதுவரை திரைக்கு வராமல் தாமதமாகி வருகிறது. தேர்தலுக்கு பின்னர் படம் வெளியாகும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு, இந்த லீக் சம்பவம் பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. குறிப்பாக, படத்தின் முக்கிய காட்சிகள் இணையத்தில் பரவி வருவது படக்குழுவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிகழ்வை தொடர்ந்து, ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டது. அதில், படம் சட்டவிரோதமாக லீக் செய்யப்பட்டுள்ளதாகவும், யாருடைய செல்போன்களிலும் அந்தக் காட்சிகள் கிடைத்தால் உடனடியாக அவற்றை நீக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. இப்படியான லீக்குகள் திரைப்படத் துறைக்கு பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்றும், குறிப்பாக அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் படங்களுக்கு இது தீவிர பாதிப்பை உண்டாக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த விவகாரத்தில் பல திரையுலக பிரபலங்களும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக நடிகை பூஜா ஹெக்டே, தனது X தள பதிவில் ரசிகர்களிடம் மனமார்ந்த வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார். அவர், ஜனநாயகன் படத்தின் லீக் ஆன காட்சிகளை பார்க்காமல் தவிர்த்து, படம் அதிகாரப்பூர்வமாக திரையரங்குகளில் வெளியான பிறகு சென்று பார்வையிட்டு ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

  • பிரதீப் ரங்கநாதனின் LIK படம் எப்படி இருக்கு?.. ஹானஸ்ட் விமர்சனம் இதோ!

    பிரதீப் ரங்கநாதனின் LIK படம் எப்படி இருக்கு?.. ஹானஸ்ட் விமர்சனம் இதோ!

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, சீமான், மிஸ்கின், கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு, மாளவிகா, ஆனந்த்ராஜ், கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் இன்று ஒருவழியாக வெளியான நிலையில், தாறுமாறாக உள்ளதா? அல்லது பிரதீப் ரங்கநாதனின் அடுத்த கிரிஞ்ச் குடோனா என்பது குறித்த விமர்சனத்தை தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

    விக்னேஷ் சிவன் மொக்கை பீஸ் என அஜித் நினைத்து ஒதுங்கிய நிலையில், விடாமுயற்சி எனும் படத்தை மகிழ் திருமேனியை வைத்து எடுத்துக் கொடுத்து ரசிகர்களை அழ வைத்தது தான் மிச்சம். கண்டிப்பாக அஜித் குமார் விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்புக் கொடுத்திருந்தால் குட் பேட் அக்லி படத்தை விட ஒரு நல்ல படத்தைக் கொடுத்திருப்பார் என்றே தெரிகிறது.

    டிராகன் படம் அளவுக்கு எல்ஐகே இல்லை என்றாலும் டியூட் படத்தை விட ரொம்பவே பெட்டராக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்

    என்னதான் உலக நாயகன் கமல்ஹாசன் ஹேராம், ஆளவந்தான், விருமாண்டி என படம் பண்ணினாலும் பாக்ஸ் ஆபீஸில் ஓடியது ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா தான். அதே பாணியை தான் பிரதீப் ரங்கநாதனும் பிடித்துள்ளார். ரஜினிகாந்தை தொடர்ந்து விஜய், சிவகார்த்திகேயன் என பலரும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரையும் கவரும் படங்களை கொடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் பக்காவாக சேர் போட்டு அமர்ந்துவிட்டார்.

    சிவகார்த்திகேயனும் கொஞ்சம் ரூட்டை மாற்றி நடுவில் புரட்சி கருத்தை எல்லாம் பேசி போர் அடித்து வரும் நிலையில், ஜென் ஸி கிட்ஸ்களை கவரும் விதமாக லேசான கருத்துடன் ஜாலியான படத்தை லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திலும் பிரதீப் ரங்கநாதன் கொடுத்துள்ளார்.

    சீமான் வரும் காட்சிகள், எஸ்.ஜே. சூர்யா வரும் காட்சிகள் எல்லாமே தியேட்டரே தெறிக்கும் காட்சிகளாக எங்கேயும் காம்ப்ரமைஸ் பண்ணாமல் விக்னேஷ் சிவன் இயக்கிய விதம் சிறப்பு.

    LIK ஆப் மூலம் இன்னார்க்கு இன்னார் என்பதை கண்டு பிடிக்கும் லவ் மீட்டரை எஸ்.ஜே. சூர்யா அறிமுகப்படுத்த பிரதீப் ரங்கநாதன் – கீர்த்தி ஷெட்டி காதலை அது பிரிக்கிறது. ஆப்பை விட மனித இதயத்துக்கு வேல்யூ அதிகம் என்பதை ஹீரோ நிரூபிப்பதே படத்தின் கதை.

    பிரதீப் ரங்கநாதன் படத்தை ஜாலியாக குழந்தைகள் என்ஜாய் செய்யும் விதமாக விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தாலும், கெளரி கிஷன் உடனான லிப் லாக் காட்சி மற்றும் ஹீரோயின் அசிங்கமாக பேசும் காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.

    எல்ஐகே ரேட்டிங்: 3.25/5.

  • பிரசாந்த் படத்தில் பிரியங்கா ராஜகுமாரன்.. முதல் படத்தில் தேவயானி மகளுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

    பிரசாந்த் படத்தில் பிரியங்கா ராஜகுமாரன்.. முதல் படத்தில் தேவயானி மகளுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

    மூத்த நடிகர் தியாகராஜன் இயக்கத்தில், நடிகர் பிரசாந்த் நடித்து வரும் ரஞ்ஜன் திரைப்படத்தின் மூலம், நடிகை தேவயானியின் இளைய மகள் பிரியங்கா ராஜகுமாரன் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். பிரசாந்தின் 53வது பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

    “காதல் கோட்டை” திரைப்படம் மூலம் புகழ் பெற்ற நடிகை தேவயானி, அஜித், விஜய், பிரசாந்த், சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இதன் மூலம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். அதன் பின்னர் “நீ வருவாய் என” திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, அந்த படத்தின் இயக்குநரான ராஜகுமாரனுடன் காதல் மலர்ந்து, பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்டார்.

    தேவயானி மற்றும் ராஜகுமாரன் தம்பதியருக்கு இனியா மற்றும் பிரியங்கா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில், மூத்த மகள் இனியா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனது பாடும் திறமையின் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றார். தற்போது, தனது இளைய மகள் பிரியங்காவையும் நடிகையாக அறிமுகப்படுத்தியுள்ளார்.

    முன்னதாக, நடிகர் நானி தயாரிப்பில் ராம் ஜகதீஷ் இயக்கிய “கோர்ட்” என்ற தெலுங்கு திரைப்படம் 2025ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த படத்தை தற்போது நடிகர் தியாகராஜன், தனது மகன் பிரசாந்தை வைத்து தமிழில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    அந்த “கோர்ட்” படத்தில் நடிகர் பிரியதர்ஷி புலிகொண்டா வழக்கறிஞராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே கதாபாத்திரத்தில் தற்போது பிரசாந்த் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும், ரஞ்ஜன் திரைப்படத்தில், இயக்குநர் தியாகராஜன் தேவயானியின் மகள் பிரியங்காவிற்கு சினிமாவில் அறிமுகமாகும் வாய்ப்பை வழங்கிய நிலையில், அவருக்கு சம்பளம் ஆக ஏதும் தரவில்லை என தகவல்கள் கசிந்துள்ளன. மேலும், தயாரிப்பாளர் கதிரேசனின் மகன் ஹரி கதிரேசனுக்கும் சம்பளம் இல்லை என தகவல்கள் கசிந்துள்ளன. குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் வெற்றிப் பெற்ற பின்னர், லாபத்தில் நிச்சயம் பங்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.