Author: சிவா

  • மறுபடியும் ஏன் அப்படி நடிச்சீங்க?!.. சத்யராஜிடம் கோபப்பட்ட விஜயகாந்த்!.. ஒரு பிளாஷ்பேக்..

    மறுபடியும் ஏன் அப்படி நடிச்சீங்க?!.. சத்யராஜிடம் கோபப்பட்ட விஜயகாந்த்!.. ஒரு பிளாஷ்பேக்..

    திரையுலகில் முதலில் வில்லனாக பல படங்களிலும் நடித்து ஒருகட்டத்தில் ஹீரோவாக மாறி முன்னணி நடிகராக மாறிய பலரும் இருக்கிறார்கள். தமிழில் சத்யராஜ், சரத்குமார் இருவரையும் அப்படி சொல்லலாம். இருவருமே துவக்கத்தில் நெகட்டிவ்வான வேடங்களில் நடித்து ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறியவர்கள்தான்.

    அதிலும் சத்யராஜ் பல வருடங்கள் அடியாளாகவும், வில்லனாக மட்டுமே நடித்திருக்கிறார். பல படங்களில் கதாநாயகனின் தங்கையை கற்பழிக்கும் கதாபாத்திரத்தில்தான் நடித்தார் சத்யராஜ். அவர் நடித்தாலே அந்த படத்தில் கண்டிப்பாக ஒரு ரேப் சீன் இருக்கும் என ரசிகர்கள் பேசும் அளவுக்கு இருந்தது. அதிலும் அவரது நூறாவது நாள் படமெல்லாம் சத்யராஜை முக்கிய வில்லனாக மாற்றியது.

    அதேநேரம், பாரதிராஜா இயக்கத்தில் கடலோர கவிதைகள் திரைப்படம் மூலம் ஹீரோவாக மாறினார் சத்யராஜ். அந்த படம் ஹிட் அடித்ததால் இனிமேல் வில்லனாக நடிக்க கூடாது என முடிவெடுத்தார் சத்யராஜ். தொடர்ந்து கதாநாயகனாக மட்டுமே நடிக்க தொடங்கினார்.. ஆனால், நூறாவது நாள் படம் மூலம் சினிமாவில் அவருக்கு வாழ்க்கை கொடுத்த அவரின் நண்பர் மணிவண்ணன் கேட்டுக் கொண்டதால் அமைதிப்படை படத்தில் மீண்டும் வில்லனாக நடித்தார்.

    அதேநேரம் அந்த படத்தில் மற்றொரு வேடத்தில் கதாநாயகனாகவும் அவர் நடித்திருப்பார். அந்த படத்தில் வில்லனாக சத்யராஜின் அலட்டலான நடிப்பு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் அமைதிப்படை போல ஒரு பொலிட்டிக்கல் சட்டயர் படம் இதுவரை வரவில்லை என்றே சொல்ல வேண்டும்..

    இந்நிலையில்தான், ஊடகம் ஒன்றில் பேசிய சத்யராஜ் ‘அந்த படத்தை பார்த்த விஜயகாந்த் என்னிடம் ‘மறுபடியும் ஏன் வில்லனா நடிச்சீங்க?.. ஹீரோவாக நல்லாத்தானே போய்ட்டிருக்கு.. மறுபடி இப்படி நடிச்சா எல்லோரும் உங்களை வில்லனா நடிக்க கூப்பிடுவாங்க!.. நீங்க இப்படி நடிக்கக் கூடாது’ என்று சொன்னார்.. அந்த அளவுக்கு என் கெரியர் மீது அக்கறை கொண்டவர் விஜயகாந்த்’ என்ன சத்யராஜ் சொல்லியிருந்தார்..

  • அஜித்தை நம்புனா டைம் வேஸ்ட்!. அந்த நடிகரிடம் துண்டு போட்ட சிறுத்தை சிவா..

    அஜித்தை நம்புனா டைம் வேஸ்ட்!. அந்த நடிகரிடம் துண்டு போட்ட சிறுத்தை சிவா..

    கார்த்தியை வைத்து சிறுத்தை என்கிற படத்தை இயக்கி கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. இந்த படத்தின் வெற்றிக்கு பின் சிறுத்தை சிவா என அழைக்கப்பட்டார். அந்த படத்துக்கு பின் அஜித்தை வைத்து வீரம் என்கிற படத்தை இயக்கினார். இந்த படம் சூப்பர் ஹிட். அதோடு சிவாவை அஜித்துக்கு மிகவும் பிடித்து போனது. அஜீத்தை பொறுத்தவரை அவருக்கு ஒரு இயக்குனரை பிடித்துவிட்டால் தொடர்ந்து அந்த இயக்குனரின் படங்களில் நடிப்பார். அப்படி வீரத்திற்கு பின் சிவாவின் இயக்கத்தில் வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய அப்டங்களில் நடித்தார்.

    அதன்பின் ரஜினியை வைத்து அண்ணாத்த, சூர்யாவை வைத்து கங்குவா ஆகிய படங்களை சிறுத்தை சிவா இயக்கினார். இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அதிலும் கங்குவா படத்தை நெட்டிசன்கள் மிகவும் மோசமாக ட்ரோல் செய்தார்கள். இந்த படத்தால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு 100 கோடிக்கும் மேல் கடன் ஏற்பட்டது.

    தற்போது அஜித்தின் சில விளம்பர படங்களை சிவா இயக்கி வருகிறார். தன்னை நம்பி எந்த ஹீரோக்களும் நடிக்க முன்வரவில்லை என அஜித்திடம் சிறுத்தை சிவா ஃபீல் பண்ணி பேச நீங்கள் ‘நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம்’ என அஜித் நம்பிக்கை கொடுத்திருக்கிறார்.

    அதேநேரம் அஜித் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அந்த படமே எப்போதும் துவங்கும் என தெரியவில்லை. இந்த படம் முடிய எப்படியும் அடுத்த வருடம் ஆகிவிடும்.. அதுவரை காத்திருக்க முடியாது என்பதால் நடிகர் தனுசை வைத்து படம் பண்ணும் முயற்சியில் சிறுத்தை சிவா இறங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது..

  • ஜனநாயகன் லீக்!.. குற்றவாளி பெயரை சொல்லாத காவல்துறை!.. மர்மம் என்ன?…

    ஜனநாயகன் லீக்!.. குற்றவாளி பெயரை சொல்லாத காவல்துறை!.. மர்மம் என்ன?…

    விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். ஏனெனில் விஜய் அரசியலுக்கு சென்று விட்ட நிலையில் இதுதான் தனது கடைசி படம் என அவரே அறிவித்திருக்கிறார்
    . கே.வி.என். புரடெக்‌ஷன் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

    இந்த படம் தற்போது மறு தணிக்கையில் இருக்கிறது. ஆனால் தற்போது வரை தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்படவில்லை. மே மாதம்தான் இந்த படம் வெளியாகும் என ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் திடீரென சில நாட்களுக்கு முன்பு ஜனநாயகன் முழு படமும் இணையத்தில் லீக்-ஆகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை கொடுத்தது..

    சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் அந்த படத்தின் எடிட்டிங்கில் பணிபுரிந்துள்ள Freelance வீடியோ எடிட்ட ஒருவர்தான் படத்தின் காப்பியை திருடி வேறு ஒருவருக்கு கொடுத்து அதன் மூலம் இணையதளங்களில் பதிவேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. நள்ளிரவு 2.30 மணியளவில் அந்த வீடியோ எடிட்டரை காவல்துறை கைது செய்து மேஜிஸ்ட்ரேட் முன்பு நிறுத்தி அதன் பின் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

    ஆனால் இப்போது வரை அந்த நபர் யார்? அவரின் பெயர் என்ன? என்கிற எந்த விவரத்தையும் காவல்துறை வெளியிடவில்லை. இதன் பின்னால் இருக்கும் மர்மம் யாருக்கும் புரியவில்லை. குற்றவாளியின் பெயரை சொல்ல முடியாத அளவுக்கு இது ஒன்றும் சென்சிடிவான பிரச்சனை இல்லை.. இது வேறு சில பிரச்சனைகளை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏனெனில், குற்றவாளியின் பெயரை சொல்லாததால் படத்தின் டைட்டில் கார்டில் வரும் எடிட்டிங் உதவியாளர்களில் ஒருவரை விஜய் ரசிகர்கள் கற்பனையாக இவர்தான் குற்றவாளி என முடிவெடுத்து அவர்களுக்கு எதிராக கம்பு சுத்த தொடங்கினால் அது அவர்களின் கெரியரை பாதிக்கும் என்பதை உணர்ந்து சம்பந்தப்பட்ட குற்றவாளி பற்றிய முழு விபரங்களையும் காவல்துறை வெளியிட வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக இருக்கிறது.

  • சிபியா? அஸ்வத் மாரிமுத்துவா?.. மங்காத்தா ஆடும் ரஜினி!.. அவரை நம்பி சிம்பு படம் போச்சே!..

    சிபியா? அஸ்வத் மாரிமுத்துவா?.. மங்காத்தா ஆடும் ரஜினி!.. அவரை நம்பி சிம்பு படம் போச்சே!..

    ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்க அவரின் 173-வது திரைப்படத்தை சுந்தர்.சி இயக்குகிறார் என சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். ஆனால் அறிவிப்பு வெளியாகி சில நாட்களிலேயே இந்த படத்திலிருந்து வெளியேறுவதாக சுந்தர்.சி அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் அஸ்வத் மாரிமுத்து, ஆர்.ஜே.பாலாஜி, சிபிச் சக்கரவர்த்தி, ராம்குமார் பாலகிருஷ்ணன் போன்ற இளம் இயக்குனர்களிடம் கதை கேட்ட ரஜினி இறுதியாக சிபி சக்கரவர்த்தியை டிக் அடித்து அறிவிப்பும் வெளியானது..

    ரஜினி தொடர்ந்து ஆக்சன் படங்களில் நடித்து விட்டதால் குடும்ப செண்டிமெண்ட், காமெடி மற்றும் ஆக்சன் கலந்து இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கப் போவதாக செய்திகள் வெளியானது.
    ஆனால் சில நாட்களுக்கு முன்பு திடீரென இந்த படத்திலிருந்து சிபி சக்ரவர்த்தியும் வெளியேறி விட்டதாகவும், அஸ்வத் மாரிமுத்து ரஜினியின் புதிய படத்தை இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளியானது. சிபி சக்கரவர்த்தியை அழைத்த ரஜினி கதையில் பல மாற்றங்களை சொன்னதோடு, துரந்தர் போல கதையை மாற்ற சொன்னதால்தான் இந்த படத்திலிருந்து சிபி வெளியேறியதாக சொல்லப்பட்டது..

    ஒருபக்கம் ஏஜிஎஸ் தயாரிப்பில் சிம்புவை வைத்து ஒரு புதிய அஸ்வத் மாரிமுத்து இயக்குவதாக இருந்தது. அதன் சூட்டிங் விரைவில் துவங்கவிருந்த நிலையில்தான் ரஜினியிடமிருந்து அழைப்பு வந்ததது. இதையடுத்து ஏஜிஎஸ் நிறுவனத்திடமும், சிம்புவிடமும் சொல்லிவிட்டு ரஜினி படத்துக்கு தயாரானார் அஸ்வத்து மாரிமுத்து. ஆனால், ரஜினி சொன்ன மாற்றங்களை சிபி சக்ரவர்த்தி செய்து வருவதாகவும் அது ரஜினிக்கு பிடித்து விட்டால் சிபி சக்கரவர்த்தியே இயக்குனராக தொடர்வார் என செய்திகள் வெளியாகியிருக்கிறது.

    இதையடுத்து அஸ்வத் மாரிமுத்துவைன் நிலை என்னவாகும் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. ஏனெனில் ஏஜிஎஸ் நிறுவனமும் சரி.. சிம்புவும் வரி.. அஸ்வத்துக்காக காத்திருக்க தயாராக இல்லை.. வேறு இயக்குனரை வைத்து ஒரு படத்தை துவங்கும் முடிவுக்கு வந்து விட்டார்கள். ஒருவேளை சிபி சக்ரவர்த்தியை மீண்டும் ரஜினியை டிக் அடித்துவிட்டால் ரஜினியை நம்பி சிம்பு படத்தை அஸ்வத் இழக்க நேரிடும். எல்லாம் ரஜினியின் முடிவில்தான் இருக்கிறது..

  • கவுண்டமணி இத பண்ணக்கூடாது!.. சின்னக் கவுண்டரில் இப்ராஹிம் ராவுத்தர் போட்ட கண்டிஷன்!..

    கவுண்டமணி இத பண்ணக்கூடாது!.. சின்னக் கவுண்டரில் இப்ராஹிம் ராவுத்தர் போட்ட கண்டிஷன்!..

    ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த், சுகன்யா, மனோரமா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலரும் நடித்து 1992ம் வருடம் வெளியான திரைப்படம் சின்ன கவுண்டர். விஜயகாந்தின் சினிமா கெரியரில் முக்கியமான படமாக சின்ன கவுண்டர் அமைந்தது. ஆனால், இந்த படம் ஓடும் என்கிற நம்பிக்கையே இல்லாமல்தான் இந்த படத்தில் விஜயகாந்த் நடித்தார் என்பது பலருக்கும் தெரியாது..

    ஏனெனில், விஜயகாந்த் என்றாலே அனல் பறக்கும் வசனங்களும், சண்டை காட்சிகளும் இடம் பெற்றிருந்த காலகட்டம் அது. அப்படிப்பட்ட விஜயகாந்தை அதிகம் பேசவிடாமல், அமைதியாக நடிக்க வைத்தார் ஆர்.வி.உதயகுமார். ஆனால், விஜயகாந்தே ஆச்சர்யபப்டும்படி படம் சூப்பர் ஹிட்.

    இந்த படத்தின் வெற்றிக்கு இளையராஜாவின் பாடல்களுக்கும் பங்குண்டு. அதேபோல் கவுண்டமணி, செந்தில் காமெடி காட்சிகளும் ரசிகர்களை சிரிக்க வைத்தது. கவுண்டமணிக்கு வெறும் காமெடி மட்டும் கொடுக்காமல் ஊரே ஒதுக்கும் விஜயகாந்துக்கு ஆதரவு கொடுக்கும் ஒரு நல்ல குணச்சித்திர கதாபாத்திரத்தை ஆர்.வி. உதயகுமார் கொடுத்திருந்தார்..

    இந்த பட வேலைகள் துவங்கியபோது விஜயகாந்தின் நெருங்கிய நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் ஆர்.வி.உதயகுமாரிடம் ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறார். ‘இந்த படத்தில் நடிக்கும் கவுண்டமணி எந்த ஒரு காட்சியிலும் விஜயகாந்தை நக்கலடிப்பது போல பேசக் கூடாது. அப்படி பேசினால் விஜயகாந்தின் கதாபாத்திரம் நிக்காது’ என்று கணித்து சொல்லியிருக்கிறார்.

    ராவுத்தர் சொன்னதை ஆர்.வி.உதயகுமார் படம் முழுவதும் கடைபிடித்திருப்பார். அப்படி விஜயகாந்தின் இமேஜ் எந்த வகையிலும் சரிந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர்தான் இப்ராஹிம் ராவுத்தர்.

  • ஆறுதலா ஒரு வார்த்தை கூட பேசாத விஜய்!.. அப்செட்டில் ஜனநாயகன் புரட்யூசர்!..

    ஆறுதலா ஒரு வார்த்தை கூட பேசாத விஜய்!.. அப்செட்டில் ஜனநாயகன் புரட்யூசர்!..

    விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் முழு படமும் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இந்த படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 9ம் தேதி வெளியிட திட்டமிட்டனர். ஆனால் படத்திற்கு மூன்று நாட்களுக்கு முன் மீண்டும் மறுத்தணிக்கை செய்யப்பட வேண்டும் என தணிக்கை வாரியம் சொன்னதால் தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஒரு மாத காலமாகியும் எதுவும் நடக்காததால் வழக்கை வாபஸ் பெற்றதோடு மறுத்தணிக்கைக்கும் விண்ணப்பித்தார்..

    ஆனால் அதை நடந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இப்போதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில்தான் சில நாட்களுக்கு முன்பு முழுபடமும் இணையத்தில் வெளியானது. பலரும் அதை இணையதளங்களில் இருந்து டவுன்லோட் செய்து பார்த்துவிட்டனர்.. இது படக்குழுவினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஏற்கனவே படம் வெளியாகாமல் கால தாமதமானதால் தயாரிப்பாளருக்கு பல கோடிகள் நஷ்டம் என்கிற நிலையில் தற்போது முழு படமும் லீக்காகி விட்டதால் தயாரிப்பாளருக்கு மேலும் பல கோடிகள் நஷ்டம் ஏற்படும் என கணிக்கப்பட்டது. எனவே இந்த நஷ்டத்தை போக்க அதே தயாரிப்பாளருக்கு விஜய் மீண்டும் ஒரு திரைப்படத்தில் குறைவான சம்பளத்தில் நடிக்க சம்மதித்துள்ளார் என்கிற செய்தி ஓடிக் கொண்டிருக்கிறது.. பல ஊடகங்களிலும், இணையதளங்களிலும் இந்த செய்தி பேசப்பட்டு வருகிறது..

    ஆனால் அதில் உண்மை இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது.. விஜய் இப்போது வரை ஜனநாயகன் படத்தை தயாரித்த கேவிஎன் நிறுவனத்திற்கு அப்படி ஒரு வாக்குறுதியை கொடுக்கவில்லையாம். அது கூட பரவாயில்லை.. ஜனநாயகன் லீக் ஆனதும் தயாரிப்பாளரை தொடர்பு கொண்டு ஆறுதலுக்காக கூட ‘ஒன்றும் வருத்தப்படாதீர்கள்.. நாம் ஏதாவது செய்வோம்’ என சம்பிரதாயத்திற்கு கூட விஜய் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என சொல்கிறார்கள்.

    விஜயின் நடவடிக்கையை பார்க்கும் போது கண்டிப்பாக அந்த தயாரிப்பாளருக்கு விஜய் இன்னொரு படம் நடித்து கொடுக்க மாட்டார் என்றே கருதப்படுகிறது. ஒருபக்கம், படத்தை விரைவில் வெளியிடும் முயற்சியில் தயாரிப்பாளர் இறங்கியிருக்கிறார். அனேகமாக, தமிழக சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின் ஜனநாயகன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • மொத்த கதையும் மாத்திட்டார்!.. வேட்டையன் தோல்விக்கு காரணமே ரஜினிதான்!…

    மொத்த கதையும் மாத்திட்டார்!.. வேட்டையன் தோல்விக்கு காரணமே ரஜினிதான்!…

    ஜெய்பீம் என்கிற ஒரு நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படத்தை கொடுத்தவர் த.ச.ஞானவேல். சினிமாவுக்கு வருவதற்கு முன் பத்திரிக்கையாளராக இருந்தவர் இவர். ஜெய்பீம் படத்துக்கு இவர் அமைத்திருந்த கதை, திரைக்கதை சினிமா விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. எனவே ஞானவேல் அடுத்து இயக்கும் படத்தின் மீதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது..

    ஆனால் அவரோ ரஜினியிடம் கதை சொல்லி ஒரு படத்தை இயக்கப்போனார். ஜெய்பீம் போன்ற படத்தை எடுத்த ஞானவேல் எதற்காக ரஜினியை வைத்து படமெடுக்கிறார் என்கிற கேள்வி பலருக்கும் எழுந்தது. ஏனெனில், ரஜினி பக்கா கமர்சியல் ஹீரோ, அவருக்கும் ஞானவேலுக்கும் எப்படி செட்டாகும் என என்கிற கேள்வி பலருக்கும் எழுந்தது..

    ரஜினியை வைத்து வேட்டையன் என்கிற படத்தை இயக்கினார் ஞானவேல். இந்த படத்தில் அமிதாப்பச்சன், தசரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியார், ஃபகத் பாசில், ராணா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.. அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படம் 2024ம் வருடம் அக்டோபர் 10ம்
    தேதி வெளியானது..

    ஜெயிலர் எனும் சூப்பர் ஹிட் படத்துக்கு பின் வெளியான ரஜினி படம் என்பதால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.. நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தின் ரிசல்ட் பற்றி ஊடகம் ஒன்றில் பேசிய ஞானவேல் ‘வேட்டையன் படத்தின் முதல் காட்சி வெளியாவதற்கு முன்பே விஜய் ரசிகர்கள் படம் பிளாப் என ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்தார்கள்’ எனக் கூறியிருந்தார்..

    இந்நிலையில்தான், ஒரு முக்கிய தகவல் வெளியே கசிந்திருக்கிறது.
    உண்மையில் ஞானவேல் ரஜினிக்காக எழுதிய கதையை வேறு என்கிறார்கள்.. ஆனால் அதில் ‘அதை சேர்க்கலாம்.. இதை சேர்க்கலாம்.. இப்படி மாற்றலாம்.. அதை மாற்றலாம்’ என சொல்லி மொத்த கதையும் ரஜினி மாற்றிவிட்டாராம்.. அதோடு படத்தில் திருடனாக வந்து போலீசுக்கு உதவும் ஃபகத் பாசிலின் வேடமே ரஜினி கதையில் கொண்டு வந்ததுதான் என்கிறார்கள். ரஜினி தலையீட்டால்தான் வேட்டையன் படம் ஓடவில்லை என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

    ரஜினியின் 173வது படத்திலிருந்து சிபி சக்ரவர்த்தி இயக்குவதாக இருந்தது. ஆனால்,முழுக்கதையையும் அவர் எழுதி முடித்த பின் ரஜினி பல மாற்றங்களை சொன்னதால் சிபி வெளியேறிவிட்டதாக சொல்லப்படுகிறது. அவருக்கு முன்பு சுந்தர்.சி-யு இப்படித்தான் அந்த படத்திலிருந்து வெளியேறியிருப்பார் என கருதப்படுகிறது..

    முன்பெல்லாம் ரஜினி ஒரு கதையில் நடிக்க சம்மதித்து விட்டால் அதன்பின் கதையில் தலையிட மாட்டார். இயக்குனர் செல்வதை கேட்டு நடிப்பார்.. ஆனால் கூலி படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பின் ரஜினி கதையில் நிறைவே தலையிடுகிறார் என்கிற புகார் எழுந்திருக்கிறது..

  • அமைதிப்படை பார்த்துவிட்டு சத்யராஜிடம் ரஜினி கேட்ட கேள்வி!. ஒரு பிளாஷ்பேக்!..

    அமைதிப்படை பார்த்துவிட்டு சத்யராஜிடம் ரஜினி கேட்ட கேள்வி!. ஒரு பிளாஷ்பேக்!..

    மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் இரட்டை வேடங்களில் நடித்த 1994ம் வருடம் வெளியான திரைப்படம் அமைதிப்படை. நடப்பு அரசியலை நக்கலடித்து மணிவண்ணன் இந்த படத்தை உருவாக்கியிருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு வசனமும் ரசிகர்களிடம் கைதட்டலை பெற்றது. சத்யராஜ் வழக்கம் போல தனது அலட்டலான நடிப்பில் அசத்தியிருந்தார். அதிலும் அமாவாசையாகவும், அரசியல்வாதியாகவும் நடிப்பில் கலக்கியிருந்தார் சத்யராஜ்..

    இந்த படத்தில் இடம்பெற்ற பல அரசியல் வசனங்களை இப்போதுள்ள கால கட்டத்திற்கும் பொருந்துவது போல மணிவண்ணன் எழுதியிருந்தார்.. அதோடு, படத்தில் முக்கிய வேடத்திலும் அவர் நடித்திருந்தார். மேலும், கஸ்தூரி, ரஞ்சிதா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.. இளையராஜா இசையமைத்திருந்தார். நடப்பு அரசியலை நக்கலடிக்கும் அமைதிப்படை போல ஒரு திரைப்படம் இப்போது வரை வெளியாகவில்லை என ரசிகர்கள் தொடர்ந்து சொல்கிறார்கள்.. மணிவண்ணனுக்கு பின் அப்படி ஒரு படத்தை எடுக்கும் திறமையும், தைரியமும் யாருக்கும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

    இந்நிலையில்தான், பேட்டி ஒன்றில் இப்படம் பற்றி பேசிய சத்யராஜ் ‘அமைதிப்படை வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருந்த நேரம் திடீரென ரஜினி போனில் கூப்பிட்டார். ‘அமைதிப்படை நல்லாருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க.. நான் பார்க்கணுமே’ என்றார். ‘திடீர்னு கேட்கிறீங்களே.. எந்த தியேட்டரில் போடுவது’ என கேட்டேன். அவரே ஒரு தியேட்டரின் பெயரை சொன்னார்.. அங்கு அவரும் அவரின் மனைவி லதாவும் படம் பார்ப்பதற்காக ஏற்பாடு செய்தோம்..

    காலை 10 மணிக்கு வருகிறேன் என ரஜினி சொல்லியிருந்தார்.. நானும், மணிவண்ணனும் 10 மணிக்கு சென்றோம். ஆனால் அவர் 9:45 மணிக்கே ரஜினி வந்து படம் ஓடிக் கொண்டிருந்தது.. படம் முழுவதையும் பார்த்த ரஜினி ‘எப்படி தைரியமாக இந்த படத்தை எடுத்தீர்கள்? வசனங்கள் எல்லாம் முன்பே எழுதினீர்களா இல்லை ஷூட்டிங் ஸ்பாட்டில் தோன்றியதா? என்று பல கேள்விகளை கேட்டார்.. படம் மிகவும் சிறப்பாக இருப்பதாக எங்கள் இருவரையும் பாராட்டி சென்றார்’ என சொல்லியிருக்கிறார்.

  • அப்ப சுந்தர்.சி.. இப்போ சிபி சக்ரவர்த்தி!.. கூலி படத்துக்கு பின் குழப்பத்தில் ரஜினி..

    அப்ப சுந்தர்.சி.. இப்போ சிபி சக்ரவர்த்தி!.. கூலி படத்துக்கு பின் குழப்பத்தில் ரஜினி..

    கடந்த பல வருடங்களாகவே இந்திய சினிமா அளவில் சூப்பர்ஸ்டாராகவும், வசூல் சக்கரவர்த்தியாகவும் வலம் வந்தவர் நடிகர் ரஜினி. சில படங்களை தவிர அவரின் எந்த திரைப்படம் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை கொடுத்ததில்லை. ஆனால் அவர் நடிப்பில் வெளியான பாபா அவருக்கு நஷ்டத்தை கொடுத்தது.

    அதன்பின் 4 வருடங்கள் கழித்து அவரின் நடிப்பில் வெளியான சந்திரமுகி அவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. ஆனால், அதன்பின் வெளிவந்த லிங்கா, குசேலன், தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் வெற்றியை கொடுக்கவில்லை. கதை, திரைக்கதை, இயக்குனர், காட்சிகள் என எல்லாவற்றையும் பார்த்து பார்த்து சரியாக கணக்குப் போட்டு நடித்து வந்த ரஜினியால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை..

    அதனால்தான் பல வருடங்களாகவே சீனியர் இயக்குனர்களின் படங்களில் மட்டும் நடித்துவந்த ரஜினி கடந்த பல வருடங்களாகவே இளம் இயக்குனர்களின் படங்களில் நடிக்க தொடங்கினார். அப்படி வெளிவந்த பேட்டை, ஜெயிலர் போன்ற படங்கள் அவருக்கு வெற்றியை கொடுத்தது
    . ஒருபக்கம் ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் மாறினார்.. அதோடு விஜயின் படங்கள் ரஜினி படங்களை விட அதிக வசூலையும் குவித்தது. அதை ஏற்றுக்கொள்ளமுடியாத ஆதங்கத்தில்தான் ஜெயிலர் பட விழாவில் ரஜினி காக்கா -கழுகு கதையை சொன்னதாக சொல்லப்பட்டது..

    அதேநேரம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான கூலி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இது ரஜினியை யோசிக்க வைத்திருக்கிறது.. ஒருபக்கம் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் ஜெயிலர் 2 படமும் பக்கா ஆக்சன் படம்தான்.

    இதையடுத்து இனிமேல் ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் கொண்ட ஆக்சன் படங்கள் வேண்டாம்.. ஒரு குடும்ப பின்னணி கொண்ட ஒரு ஜாலியான, கலகலப்பான காமெடி படத்தில் நடிக்கலாம் என ரஜினி ஒரு நல்ல முடிவை எடுத்தார். அதனால்தான், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினியின் 173-வது படத்தை இயக்கும் வாய்ப்பு சுந்தர்.சிக்கு போனது.

    ஆனால் ரஜினி என்ன மாறுதல் சொன்னாரே சுந்தர்.சி அந்த படத்திலிருந்து வெளியேறினார். அதன்பின் சிவகார்த்திகேயனை வைத்து டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்திதான் ரஜினியின் 173-வது படத்தை இயக்குகிறார் என ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.. கடந்த சில மாதங்களாக படத்திற்கான முழு கதையையும் சிபி சக்கரவர்த்தி உருவாக்கினார்.

    cibi

    இந்த படத்தில் டெய்லராக ரஜினி நடிப்பது போஸ்டரிலேயே சொல்லப்பட்டிருந்த்து. ஆனால் தற்போது இந்த படத்திலிருந்து சிபிச் சக்கரவர்த்தியும் விலகியிருக்கிறார். இந்த படத்தை டிராகன் படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கப் போகிறார் என செய்திகள் வெளியாகியிருக்கிறது..

    சமீபத்தில் சிபி சக்கரவர்த்தியை அழைத்த ரஜினி ‘கதைப்படி இந்த படத்தில் நான் ஒரு Spy – உளவாளி. எனவே துரந்த 2 படம் போல ஒரு பக்கா ஆக்சன் படமாக கதையை மாற்ற முடியுமா?’ என கேட்டிருக்கிறார். அதைக்கேட்டு அதிர்ச்சியான சிபி சக்கரவர்த்தி ‘முழுக் கதையையும் எழுதி முடித்து விட்டேன்.. இனிமேல் நீங்கள் சொல்வது போல கதையை மாற்றுவது சிரமம்’ என சொல்ல அவரை தூக்கிவிட்டு அஸ்வத் மாரிமுத்துவை ரஜினி உள்ளே கொண்டு வந்திருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.

    கூலி படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பின் ரஜினியின் நடவடிக்கைகளில் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். அவரால் ஒரு கதையை முழுமையாக நம்ப முடியவில்லை.. நிறைய தலையிடுகிறார். இயக்குனரிடம் அதை மாற்று.. இதை மாற்று என ரஜினி குழப்பத்தில் இருக்கிறார்’ என கோலிவுட்டில் பேச துவங்கியிருக்கிறார்கள்.

  • நயன் கம்மியா நடிங்க!. கலாய்த்த பிரதீப் ரங்கநாதன்!.. விக்கி பழ் வாங்கிட்டாரோ!…

    நயன் கம்மியா நடிங்க!. கலாய்த்த பிரதீப் ரங்கநாதன்!.. விக்கி பழ் வாங்கிட்டாரோ!…

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே சூர்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உருவாகியிருக்கும் திரைப்படம் எல்.ஐ.கே. பிரதீப் ரங்கநாதன் இயக்கிய கோமாளி வெற்றி.

    அதேபோல், அவர் நடித்து இயக்கிய லவ் டுடே படம் சூப்பர் ஹிட். அதன்பின் அவர் மற்ற இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து வெளியான டிராகன், டியூட் போன்ற திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்து 100 கோடி வசூலை அள்ளியது. இதையடுத்து, கோலிவுட்டின் கவனிக்கத்தக்க நடிகராக பிரதீப் ரங்கநாதன் மாறினார்.

    இந்நிலையில்தான், பிரதீப்பின் நான்காவது படமாக வெளியான எல்.ஐ.கே திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதில் பெரும்பாலும் நெகட்டிவாக இருக்கிறது. பிரதீப்பின் முந்தைய மூன்று படங்களுக்கும் கிடைத்த வரவேற்பு இந்த படத்திற்கு கிடைக்கவில்லை. எனவே, அந்த அளவு வசூலை இப்படம் பெறவில்லை என்கிறார்கள்..

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்து நானும் ரவுடிதான் படம் வெளியான போது ட்விட்டரில் இந்த படம் பற்றி பதிவிட்ட பிரதீப் ரங்கநாதன் ‘இது என்னுடைய ஸ்டைல் திரைப்படம்.. விஜய் சேதுபதி வசனம் பேசும் ஸ்டைல்.. பார்த்திபனின் புதுமையான நடிப்பு.. அனிருத்தின் இசை.. விக்னேஷ் சிவன் ஸ்டைல்’ என பதிவிட்டிருந்தார்..

    மேலும் ‘நயன் ப்ளீஸ் கொஞ்சம் கம்மியா நடிங்க’ எனவும் நக்கலடித்திருந்தார். தற்போது சிலர் இந்த ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்து ‘ஒருவேளை பிரதீப் பழி வாங்கிட்டாரா? இல்லை பிரதீப்பை விக்னேஸ்வரன் பழிவாங்கிட்டாரா?’ என பதிவிட்டு கலாய்த்து வருகிறார்கள்.