Author: சிவா

  • எதையும் தாங்கும் அப்பா மனசு உடைஞ்சி போனது அப்பதான்!.. ஃபீல் பண்ணி பேசும் கேப்டன் மகன்..

    Vijayakanth: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைந்துவிட்டாலும் மக்களின் மனதில் அவர் என்றும் மறையவில்லை. அவரை பற்றிய பல செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டேதான் இருக்கிறது. அவரை பற்றி பலரும் பேசிக்கொண்டேதான் இருக்கின்றனர். அவருடன் பழகியவர்கள், அவருடன் வேலை செய்தவர்கள். அவரை பற்றி தெரிந்தவர்கள் என பலரும் அவரை பற்றி ஊடகங்களில் பேசி வருகிறார்கள்.

    பொதுவாக விஜயகாந்த் மிகவும் தைரியமானவர். எதையும் சந்திக்கும் துணிச்சல் கொண்டவர். எதற்கும், யாருக்காகவும் பயப்படாதவர் அதுதான் அவரின் பலமே. சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தபோது அவர் பட்ட அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பல காரணங்களை காட்டி அவரை நிராகரித்துள்ளனர்.

    இதையும் படிங்க: வறுமையில் வாடும் விஜயகாந்த் சகோதரர்கள்! ஊருக்கே உதவியவர் – அவர் தம்பிகளுக்கு இப்படி ஒரு நிலைமையா?

    80களில் முன்னணி நடிகையாக இருந்த பலரும் விஜயகாந்துக்கெல்லாம் ஜோடியாக நடிக்க முடியாது என்றே கூறினார்கள். சில நடிகைகள் தயங்கினார்கள். படப்பிடிப்பில் நடிகைகளுக்காக காத்திருந்து அவமானப்பட்டு திரும்பியவர்தான் விஜயகாந்த். ஆனால், ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார்.

    சினிமா, அரசியல் என இரண்டிலும் முக்கிய இடத்தை பிடித்த விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு செயல்படாத நிலையில் இருந்து சமீபத்தில் இறந்தும்போனார். உடலளவில் பாதிக்கப்பட்டதை விட மனதளவில்தான் அவர் அதிகமாக பாதிக்கப்பட்டார் என அவருடன் நெருங்கி பழகியவர்கள் சொல்வார்கள்.

    இதையும் படிங்க: கேப்டனுக்கு அப்புறம் ஒரே வருடத்தில் 13 படங்கள்! இவரெல்லாம் நம்ம லிஸ்ட்லயே இல்லையே – யார் அந்த நடிகர் தெரியுமா?

    இப்ராஹிம் ராவுத்தரை பிரிந்ததே அவருக்கு பெரிய இழப்புதான். அதோடு, ராவுத்தரின் மரணமும் அவரை கலங்க செய்துவிட்டது. இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் ‘அப்பாவுடன் பல வருடமாக பழகியவர்கள், அப்பாவால் வளர்ந்தவர்கள் எம்.எல்.ஏக்களாக இருக்கும்போது கட்சி தாவி அதிமுகவுக்கு போனார்கள். அதேபோல், சிலர் வேறு கட்சிகளுக்கும் போனார்கள்’ இதுதான் அப்பாவின் மனதை அதிகம் பாதித்தது.

    அதை அவர் வெளியே காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் அவ்வப்போது நான் அதை அவரிடம் கவனித்திருக்கிறேன். அவர்கள் எல்லாம் அப்பாவுடன் இருந்திருந்தால் அவர் மிகவும் தைரியமாக இருந்திருப்பார்’ என அவர் பேசியிருந்தார்.

    இதையும் படிங்க: விஜயகாந்த் மறைவுக்கு வடிவேலு ரியாக்‌ஷன் என்ன தெரியுமா? ஷாக் கொடுத்த நண்பர்

  • வயசு பசங்க நிலைமை ரொம்ப பாவம்!.. மொத்த அழகையும் பனியனில் காட்டும் தர்ஷா குப்தா..

    Dharsha gupta: கொழுக் மொழுக் அழகை காட்டியே புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானவர்தான் இந்த தர்ஷா குப்தா. சென்னையில் பிறந்து வளர்ந்த இவருக்கு மாடலிங் துறையிலும், சினிமாவில் நடிப்பதிலும் அதிக ஆர்வம் உண்டு. எனவே, அதில் முயற்சிகள் செய்தார்.

    dharsha

    ஆனால், பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் வேறுவழியில்லாமல் சீரியல் பக்கம் ஒதுங்கினார். சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்கும் விஜய் டிவி தர்ஷாவுக்கு வாய்ப்பு கொடுத்தது. சில சீரியல்களில் நடித்தார். அப்படி நடிக்கும்போது சினிமாவில் நுழைய ஆசைப்பட்ட தர்ஷா கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.

    dharsha

    ஒருகட்டத்தில், சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடினார். அதேபோல், குக் வித் கோமாளி போன்ற சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். ருத்ரதாண்டவம் என்கிற படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். ஆனால், அந்த படம் அவருக்கு கை கொடுக்கவில்லை.

    dharsha

    அதன்பின், பாலிவுட் கவர்ச்சி புயல் சன்னி லியோனுடன் இணைந்து அவர் நடித்த ஓ மை கோஸ்ட் திரைப்பமும் ஓடவில்லை. எனவே, கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

    dharsha

    அந்த வகையில், வெண்ணக்கட்டி உடம்பை அசத்தலாக காட்டும் உடையில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.

    dharsha

  • உங்கள வச்சிக்கிட்டு ஒன்னு காப்பி அடிக்க முடியுதா?!.. அயலான் படம் அந்த படத்தோட காப்பியாம்!.

    Ayalan movie: இன்று நேற்று நாளை திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இளம் இயக்குனர் ரவிக்குமார். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். ஆனால், அப்படம் வெளிவந்து 8 வருடங்கள் ஆகியும் அவரின் அடுத்த படம் வெளியாகவில்லை. இன்று நேற்று நாளை படத்திற்கு பின் மீண்டும் ஒரு சயின்ஸ் பிக்சன் கதையையே ரவிக்குமார் உருவாக்கினார்.

    இந்த கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்துப்போக அவரின் தயாரிப்பிலேயே படம் உருவானது. ஆனால், 4 வருடங்களுக்கும் மேல் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஏனெனில், இப்படத்தில் நடித்து கொண்டிருக்கும்போதே அதை கிடப்பில் போட்டுவிட்டு வேறு படத்திற்கு போய்விடுவார் சிவகார்த்திகேயன்.

    இதையும் படிங்க: அயலானுக்கு இந்நேரம் அல்லு விட்டுருக்குமே!.. தனுஷின் கேப்டன் மில்லர் டிரெய்லர் எப்படி இருக்கு?..

    இப்படி அவ்வப்போது கிடைக்கும் நேரங்களில் நடித்ததுதான் இந்த அயலான் திரைப்படம். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். கருணாகரன், யோகிபாபு, ரகுல்ப்ரீத் சிங் என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

    ஏற்கனவே இப்படத்தின் டீசர் வீடியோ வெளியான நிலையில், நேற்று டிரெய்லர் வீடியோவும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்போது படக்குழுவினர் இப்படத்தின் புரமோஷன் வேலைகளை செய்து வருகின்றனர். வழக்கமாக ஒரு படம் வெளியானால் இது இந்த ஹாலிவுட் படத்தின் தழுவல் என சொல்வார்கள்.

    இதையும் படிங்க: யார்கிட்ட இருந்து வேணுனா தப்பலாம்! ப்ளூ சட்டை மாறன்கிட்ட முடியுமா? சிவகார்த்திகேயனை கிழித்து தொங்கவிட்ட பதிவு

    ரசிகர்கள் சொல்து போலவே சில இயக்குனர்களும் பல ஹாலிவுட் படங்களின் கதைகளில் ஒரு வரிக்கதையை கொஞ்சம் மாற்றி படமாக எடுக்கின்றனர். விஜயின் லியோ படமே ஒரு ஆங்கில படத்தின் காப்பி என சொன்னார்கள். இந்நிலையில், அயலான் திரைப்பம் பால் (Paul 2011) என்கிற படத்தின் காப்பி என சொல்லப்படுகிறது.

    ayalan

    வழி தவறி வந்த ஒரு ஏலியனை ஒரு குழு ஆராய்ச்சிக்காக பயன்படுத்த நினைக்க 3 பேர் சேர்ந்து அவர்களிடமிருந்து ஏலியனை காப்பாற்றி எப்படி விண்வெளிக்கே அனுப்பி வைத்தனர் என்பதுதான் இப்படத்தின் கதை. ஏலியனோடு சேர்ந்து அவர்கள் அடிக்கும் லூட்டியை சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்திருந்தனர். அயலான் படமும் கிட்டத்தட்ட அதுபோன்ற கதைதான் என சொல்லப்படுகிறது. ஆனால், இதை இப்பட இயக்குனர் ரவிக்குமார் மறுத்திருக்கிறார். படம் வந்தால் என்னவென்று தெரிந்துவிடும்.

    இதையும் படிங்க:aவறுமையில் வாடும் விஜயகாந்த் சகோதரர்கள்! ஊருக்கே உதவியவர் – அவர் தம்பிகளுக்கு இப்படி ஒரு நிலைமையா?

  • இரவோடு இரவாக கேப்டன் செய்த வேலை!.. ஆடிப்போய் சத்தியராஜ் செய்த காரியம்…

    Vijayakanth :விஜயகாந்த் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அவர் மற்றவர்களுக்கு உதவும் அந்த ஈகை குணம்தான். தன்னை தேடி வந்து உதவியர்களுக்கு உதவுவது ஒருபக்கம் எனில், ஒருவருக்கு ஒரு பிரச்சனை எனில் அவராகவே வழிய சென்று உதவி செய்வது மற்றொரு குணம்.

    உதாரணத்திற்கு ஒன்றை சொல்லலாம். எதேச்சையாக தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா வீட்டிக்கு போன விஜயகாந்த் அங்கே அழுது கொண்டிருந்த அவரின் மகளை பார்க்க, மருத்துவம் படிக்க முடியாமல் இருப்பதை தெரிந்துகொண்டு ஒரேநாளில் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார். இப்போது தனுஷின் அக்கா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கிறார்.

    இதையும் படிங்க:  விஜயகாந்த் சமாதியில் மண்டிப்போட்டு வணங்கிய ஜெயம் ரவி.. கண்ணெல்லாம் கலங்கிடுச்சு.. அடுத்து யாரு?

    இப்படி தெரிந்து சில என்றால் தெரியாமல் திரையுலகை சேர்ந்த பலருக்கும் விஜயகாந்த் உதவியிருக்கிறார். அதை எல்லாம் அவர் எங்கேயும் வெளியே சொல்லிக்கொண்டதில்லை. பல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர் என பலருக்கும் அவர் உதவியிருக்கிறார். அதில் கொஞ்சம் மட்டுமே வெளியே தெரிந்திருக்கும்.

    ஒருமுறை சத்தியராஜ் ஒரு தகவலை சொல்லியிருந்தார். ஏவிஎம் ஸ்டுடியோவில் படப்பிடிப்பில் இருந்தேன். அருகில் விஜயகாந்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. கும்பகோணத்தில் பள்ளியில் தீப்பிடித்து சில குழந்தைகள் இறந்த செய்தி அவரை வாட்டிக்கொண்டிருந்தது. அன்று மாலை 6 மணி படப்பிடிப்பு முடிந்தபின் நான் வீட்டிற்கு போய்விட்டேன்.

    இதையும் படிங்க: விஜயகாந்த் மகன் திருமணம் நின்னு போனதுக்கு காரணம் இதுதான்!.. பயில்வான் ரங்கநாதன் சொல்லும் பகீர் தகவல்…

    ஆனால், விஜயகாந்த் படப்பிடிப்பை முடித்தபின் கும்பகோணம் சென்று அங்கு இறந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ரூ.10 லட்சத்தை நிதியாக கொடுத்துவிட்டு இரவோடு இரவாக சென்னை வந்துவிட்டார். அடுத்தநாள் காலை 7 மணிக்கு வழக்கம்போல் அவர் படப்பிடிப்புக்கும் வந்துவிட்டார்.

    அவர் அப்படி செய்ததை பார்த்துவிட்டு வேறு வழியில்லாமல் நாங்களும் நிதி கொடுத்தோம். உதவி செய்வத்கை சொல்லிக்கொடுத்தவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் எனில், அள்ளி கொடுப்பதை எங்களுக்கெல்லாம் சொல்லி கொடுத்தவர் விஜயகாந்துதான் என சத்தியராஜ் கூறியிருக்கிறார்.

    இதையும் படிங்க: நான் சாகுறதுதான் சரி!. பிரேமலதாவிடமே சொன்ன விஜயகாந்த்… இது எப்ப நடந்தது தெரியுமா?!..

  • அப்படியே ரவா லட்டு மாதிரி இருக்கியே டிடி!.. ஒயிட் கலர் சுடிதாரில் மனசை ஒயிட் வாஷ் செய்யுறாரே!

    Divya darshini: விஜய் டிவி ஆங்கர்களிலேயே அதிகம் பிரபலமானவர் இந்த டிடி. முழுப்பெயர் திவ்ய தர்ஷினி. இவர் ஒரு நிகழ்ச்சியை நடத்தினால் ரசிகர்களின் பார்வை முழுக்க முழுக்க அவர் மீது இருக்கும். விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் ஆங்கராக வேலை செய்திருந்தாலும் காபி வித் டிடி நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது.

    DD
    DD

    திரையுலக பிரபலங்களை அழைத்து வந்து அவர்கள் பதில் சொல்ல விரும்பாத கேள்விகளுக்கு கூட பதில் சொல்ல வைத்துவிடுவது டிடி-யின் திறமை. ஆங்கரிங் மட்டுமில்லாமல் நடிப்பதிலும் இவருக்கு ஆர்வம் உண்டு. பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான கையளவு மனசு சீரியலில்தான் டிடி நடிக்க துவங்கினார்.

    dd

    அதன்பின் நடிப்பு பக்கம் அவர் போகவில்லை. சில வருடங்கள் ஆங்கரிங் மட்டுமே செய்து வந்தார். தனது நீண்டநாள் வருட நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை. இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பின் ஆங்கரிங் செய்வது, சினிமாவில் நடிப்பது என கலக்கி வருகிறார்.

    dd

    பவர் பாண்டி, காபி வித் காதல் என பல படங்களிலும் நடித்திருக்கிறார். ஒருபக்கம், இவரும் நடிகைகளை போல கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகிறார். சில சமயம் நடிகைகளின் புகைப்படங்களை விட டிடி-யின் புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவியும்.

    dd

    இந்நிலையில், டிடியின் புதிய புகைப்படங்களை பார்த்து ‘தேவதை மாதிரி இருக்கீங்க டிடி’ என நெட்டிசன்கள் ஜொள்ளுவிட்டு வருகின்றனர். வெள்ளை நிற உடையில் அழகாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

    dd

  • அவனுங்களுக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்காதீங்க!.. தயாரிப்பாளரிடம் சில்ற புத்தியை காட்டிய வடிவேலு!..

    Actor vadivelu: திரையில் காமெடி செய்து ரசிக்க வைக்கும் வடிவேலுவைத்தான் ரசிகர்களுக்கு தெரியும். ஆனால், நிஜவாழ்வில் தலைக்கணம் பிடித்த, யாரையும் வளர விடாத, பொறாமை குணம் கொண்ட, வன்மம் கொண்ட வடிவேலுவை திரையுலகினருக்கு மட்டுமே தெரியும். அவரை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் உடன் நடித்த காமெடி நடிகர்களுக்குதான் வடிவேலுவின் நிஜ குணம் தெரியும்.

    அது ரசிகர்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும். வடிவேலு இப்படிப்பட்டவரா என அதிர்ச்சியே கொடுக்கும். அவரை பற்றி அவருடன் நடித்த பல காமெடி நடிகர்களும் ஊடகங்களில் கொடுத்த பேட்டியை பார்த்தால் அது உங்களுக்கு புரியும். வடிவேலு பீக்கில் இருந்தபோது தினமும் 10 லட்சம் சம்பளம் வாங்கினார்.

    இதையும் படிங்க: வேற மொழிப்படங்களா?.. நோ நோ.. தமிழ்ப்படங்களில் மட்டுமே கெத்து காட்டிய நடிகர்கள்…

    அதுவும் அவர் நினைக்கும் நேரத்திற்குதான் படப்பிடிப்புக்கு வந்து ஒரு நாளைக்கு 2 காட்சிகளில் மட்டுமே நடிப்பார். இப்படி பல தயாரிப்பாளர்களை கதறவிடுவார். அல்வா வாசு, பெஞ்சமின், முத்துக்காளை, சிங்கமுத்து, போண்டா மணி என பலரும் இவருடன் நடிப்பார்கள். வடிவேலுவுடன் நடிப்பதற்காக மணிக்கணக்கில் அவர்கள் தினமும் பல மணி நேரங்கள் அவரின் அலுவகத்தில் காத்திருப்பார்களாம். யார் கீழே உட்காராமல் நின்று கொண்டே இருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே வடிவேலு வாய்ப்பு கொடுப்பாராம். அப்படி ஒரு சேடிஸ்தான் வடிவேலு என்பது ரசிகர்களுக்கு தெரியாது.

    naai sekar vadivelu

    ஒருமுறை வடிவேல் நடித்த ஒரு படத்தை ஒரு புது தயாரிப்பாளர் தயாரித்துள்ளார். பொதுவாக வடிவேலுவுடன் நடிக்கும் சின்ன சின்ன நடிகர்களுக்கு 2 ஆயிரம், 3 ஆயிரம் இப்படி மட்டுமே சம்பளம் கொடுப்பார்கள். ஆனால், அந்த தயாரிப்பளர் அவர்கள் மீது இரக்கப்பட்டு எல்லோருக்கும் 20 ஆயிரம் கொடுங்கள் என சொல்லிவிட்டாராம்.

    இதையும் படிங்க: மக்கள் துடிக்கிறாங்க!… பிரேமலதா குடும்பம் பார்க்காம விட்டுச்சா? விஜயகாந்த் குடும்பம் உடைத்த உண்மை!

    இதைக்கேள்விப்பட்ட வடிவேலு அந்த தயாரிப்பாளரை அழைத்து ‘எதுக்காக அவனுங்களுக்கு 20 ஆயிரம் கொடுக்குறீங்க. இன்னைக்கு நீங்க கொடுப்பீங்க. அதுக்கு அப்புறம் எல்லார்கிட்டையும் அவனுங்க அதையே கேட்பானுங்க. ஆளுக்கு 1500 கொடுங்க’ என சொல்லியிருக்கிறார்.

     

    அதாவது, தன்னுடன் காமெடி காட்சிகளில் நடிக்கும் நடிகர்கள் வளர்ந்துவிடக்கூடாது என்பதில் வடிவேலு மிகவும் தெளிவாக இருப்பாராம். அப்படி வளர்ந்துவிட்டால் தன்னை மதிக்கமாட்டார்கள் என்பதுதான் அவரின் நினைப்பாக இருந்துள்ளது. அதனால்தான் கடந்த சில வருடங்களாகவே அவருடன் நடித்த நடிகர்கள் ஊடகங்களில் கொடுக்கும் பேட்டியில் அவரை கழுவி ஊற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: திடீரென தனுஷ் படத்தை இயக்க இதான் காரணமாம்!.. அடங்க… நீங்க வெவரம் தானுங்கோ!

  • பிரேமலதாதான் பொண்ணு!. ஜோசியத்தை வச்சி கேப்டனை நம்ப வச்ச குடும்பத்தினர்…

    Vijayakanth: தமிழ் சினிமாவில் பல அவமானங்களை சந்தித்து படிப்படியாக முன்னேறியவர் விஜயகாந்த். விஜயகாந்தை தமிழ் சினிமா உலகம் அவ்வளவு சீக்கிரம் அங்கீகரிக்கவில்லை. ஆனாலும், நம்பிக்கையுடன் போராடி மேலே வந்தார். நல்ல நடிகராக இருக்க வேண்டும் என்பதை விடவும் நல்ல மனிதர் என பெயர் எடுக்க வேண்டும் என்பதுதான் விஜயகாந்தின் எண்ணமாக இருந்தது.

    ஈவு இரக்கமுள்ள, மனிதாபிமானம் உள்ள மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்ட மனிதராக இருந்ததால்தான் விஜயகாந்தை எல்லோருக்கும் பிடித்துப்போனது. எல்லோருக்கும் உதவி, தன்னை நம்பி வரும் எல்லோரும் உணவளித்து ஒரு வாழும் மனித தெய்வமாகவே விஜயகாந்த் பலருக்கும் இருந்தார்..

    இதையும் படிங்க: திடீரென தனுஷ் படத்தை இயக்க இதான் காரணமாம்!.. அடங்க… நீங்க வெவரம் தானுங்கோ!

    விஜயகாந்தின் திருமண வாழ்க்கையை பொறுத்தவரை அவர் பிரேமலதாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அதற்கு முன் அவர் நடிகை ராதிகாவை திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவருடன் இருந்த இப்ராஹிம் ராவுத்தரும், விஜயகாந்தின் குடும்பத்தினரும் அதற்கு சம்மதிக்கவில்லை.

    சினிமா துறையில் இல்லாத ஒருவரையே விஜயகாந்த் திருமணம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். பல இடங்களிலும் பெண் தேடினர். விஜயகாந்தின் சொந்த ஊரான மதுரையிலேயே அவருக்கு பெண் கிடைக்கவில்லை. அதன்பின்வேலூர் குடியாத்தத்தில் கிடைத்த பெண்தான் பிரேமலதா.

    ஆனால், விஜயகாந்தோ தடுமாற்றத்திலேயே இருந்துள்ளார். விஜயகாந்துக்கு ஜோசியத்தின் மீது அதிக நம்பிக்கை உண்டாம். எனவே, பிரேமலதாவின் ஜோதிடத்தை ஜோதிடரிம் கொடுத்து ‘இந்த பெண்ணை திருமணம் செய்தால் உன் வாழ்க்கை நன்றாக இருக்கும் என விஜயகாந்திடம் சொல்லுங்கள்’ என அவரின் குடும்பத்தினர் சொன்னார்களாம்.

    அவரும் அப்படியே சொல்ல பெண் பார்க்க போனார் விஜயகாந்த். அவருக்கும் பிரேமலதாவை பிடித்துப்போக உடனே சம்மதம் சொல்லிவிட்டார். இப்படித்தான் விஜயகாந்தின் வாழ்வில் பிரேமலதா வந்துள்ளார் என சொல்லப்படுகிறது.

    இதையும் படிங்க: விஜயகாந்த் சமாதியில் மண்டிப்போட்டு வணங்கிய ஜெயம் ரவி.. கண்ணெல்லாம் கலங்கிடுச்சு.. அடுத்து யாரு?

  • எவ்வளவு அவமானம்.. அசிங்கம்.. கண்ணீர் விட்டு அழுதேன்!.. பருத்திவீரன் பற்றி பேசும் சூர்யா…

    Paruthiveeran: நடிகர் சிவக்குமாரின் மகன் சூர்யா ஏற்கனவே சினிமாவில் நடிகனாகிவிட்ட நிலையில் அவரின் இளையமகன் கார்த்தி பருத்தி வீரன் படம் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். இயக்குனர் அமீர் அப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தை பார்த்த எல்லோரும் மனதிலும் எழுந்த கேள்வி ‘முதல் படத்திலேயே கார்த்தியை அமீர் எப்படி இப்படி நடிக்க வைத்தார்’ என்பதுதான்.

    இந்த படம் அப்படத்தில் நடித்த பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்று கொடுத்தது. அதோடு, பல மேடைகளிலும் இப்படம் விருது வாங்கியது. ஆனால், இப்படத்தில் அமீருக்கு நேர்ந்த பிரச்சனைதான் கடந்த சில மாதங்களாகவே ஊடகங்களில் அதிகமாக விவாதிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: வடிவேலுவை திட்டுற உரிமை அந்த ஒரு நடிகருக்குத்தான் உண்டு! வேற எவனுக்கும் இல்ல – பகீர் கிளப்பிய காமெடி நடிகர்

    சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் அப்படத்திலிருந்து விலகி விட அமீரே தனக்கு தெரிந்தவர்கள் மூலம் 1.65 கோடி கடன் வாங்கி அப்படத்தை முடித்தார். ஆனால், படம் முடிந்து நன்றாக உருவானதால் தயாரிப்பாளர் சங்கம் மூலம் அமீரை அழைத்து பேசி அப்படத்தை ஞானவேல் ராஜா பெயருக்கு மாற்றினார்கள். அதோடு, அவர் செலவு செய்த பணத்தையும் கொடுக்கவில்லை என்பதுதான் அமீரின் குற்றச்சாட்டு.

    ஆனால், அவர் பொய் கணக்கு எழுதி திருடினார் என்கிற ரீதியில் ஞானவேல் ராஜா பேசியது இயக்குனர்கள் பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. சசிக்குமார், சமுத்திரக்கனி, கரு பழனியப்பன், பாரதிராஜா என பலரும் அமீருக்கு ஆதவராக பேச ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்டார். ஆனால், இந்த பிரச்சனை தொடர்பாக இதுவரை சிவக்குமாரோ, கார்த்தியோ, சூர்யாவோ எந்த கருத்துமே தெரிவிக்கவில்லை. ஊடகங்களில் பலரும் இதுபற்றி விமர்சித்தும் இதுவரை அவர்கள் வாய் திறக்கவே இல்லை. இந்நிலையில், இந்த பிரச்சனைக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாதது போல சூர்யா பேசியிருப்பதுதான் மீண்டும் பலரையும் கோபமடைய வைத்திருக்கிறது.

    இதையும் படிங்க: பிக் பாஸ் வீட்டு பாத்ரூம்ல தாப்பாவே இல்லையா!.. என்ன கமல் சார்.. பிரதீப் ஆண்டனி சொல்றது நிஜமா?..

    பல வருஷம் கழிச்சி பருத்தி வீரன் படத்தை பார்த்து கார்த்தியை கட்டிப்பிடித்து அழுதேன். கார்த்தி ரொம்ப வசதியா, சொகுசா வளர்ந்த பையன். ஆனால், ஷுட்டிங் ஸ்பாட்ல அத்தனை அவமானங்கள், அசிங்கங்களை சமாளிச்சு 2 வருஷம் பல்லை கடித்துக்கொண்டு வலியும், வேதனையுமா வேலை பார்த்திருக்கான். அவனை கட்டிபிடிச்சு அழுவதை தவிர வேற எதுவும் என்னால வேற எதுவும் பண்ண முடியல’ என ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

    அமீர் தான் அடைந்த அவமானம், நஷ்டம் பற்றியெல்லாம் பேசியபோது அதை பற்றி பேசாத சூர்யா, தனது தம்பி அவமானத்தை சந்தித்துக்கொண்டே பருத்திவீரன் படத்தில் நடித்தார் என்பதை எதை வைத்து சொன்னார் என்பது அவருக்கே வெளிச்சம்.

    இதையும் படிங்க: என்ன ஏலியன் இப்படி கோபப்படுது!.. மாஸ் காட்டும் அயலான் டிரெய்லர்.. பொங்கலுக்கு வசூல் வேட்டை தான்!

  • கலைஞர் 100வது விழாவுக்கு ‘நோ’ சொன்ன விஷால்!.. பின்னணியில் இருப்பது அந்த நடிகராம்!…

    Kalaignar 100: தயாரிப்பாளர் மகனாக இருந்தாலும் நடிகர் அர்ஜூனிடம் உதவி இயக்குனராக சினிமாவில் தனது கேரியரை துவங்கியவர்தான் விஷால். அதன்பின் எப்படியோ நடிக்கும் ஆசை வந்துவிட்ட செல்லமே என்கிற படம் மூலம் நடிக்க துவங்கினார். திமிரு திரைப்படம் இவருக்கு நல்ல ஓப்பனிங்கை பெற்று கொடுத்தது. விஜய் நடிக்க வேண்டிய அந்த கதையில் விஷால் நன்றாகவே நடித்திருந்தார்.

    அதேபோல், லிங்குசாமி இயக்கத்தில் அவர் நடித்து வெளியான சண்டக்கோழி திரைப்படமும் சூப்பர் ஹிட் அடித்து விஷாலை ஒரு ஆக்‌ஷன் நடிகராக முன் நிறுத்தியது. அதன்பின் இப்போது வரை பல திரைப்படங்களிலும் நடித்துவிட்டார். ஆனால், சோகம் என்னவெனில் விஷால் நடித்து வெளியான சில படங்கள் மட்டுமே வசூலை பெற்றது. மற்றதெல்லாம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடைந்தது.

    இதையும் படிங்க: பர்ஃபாமன்ஸ்லாம் பண்ண முடியாது!. கலைஞர் 100வது விழாவுக்கு எஸ்கேப் ஆகும் நடிகர்கள்…

    பல வருடங்களுக்கு பின் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் விஷால் நடித்து வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது. அதே உற்சாகத்தோடு இப்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதேநேரம், நடிகர் சங்க செயலாளராக இருந்தும் பல விஷயங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.

    சமீபத்தில் நடிகரும், முன்னாள் நடிகர் சங்க தலைவருமான விஜயகாந்த் சமீபத்தில் மரணமடைந்தார். ஆனால், அவரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த கூட விஷால் வரவில்லை. வெளிநாட்டில் இருக்கும் அவர் அழுதுகொண்டே ஒரு வீடியோவை போட்டு இரங்கல் தெரிவித்தார். ஒருபக்கம், ஒரு பெண்ணுடன் அவர் ஜாலியாக ஊரை சுற்றும் வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

    இதையும் படிங்க: பாகுபலி ரேஞ்சில் பார்த்திபன் இயக்க விஜயகாந்த் நடிக்க இருந்த பிரம்மாண்டமான படம்… அப்புறம் என்ன ஆச்சு?

    ஒருபக்கம், தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் இணைந்து நடத்தும் கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கும் அவர் வராமாட்டார் என தெரிகிறது. ஏனெனில், வருகிற ஜனவரி 6ம் தேதி அந்நிகழ்ச்சி நடக்கும் நிலையில் 8ம் தேதிதான் விஷால் சென்னை வருவதாக சொல்லப்படுகிறது. அவர் நினைத்தால் 2 நாட்களுக்கு முன்பே வந்து இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியும்.

    ஆனால், அவருக்கு அதில் விருப்பமில்லை என சொல்லப்படுகிறது. அதற்கு காரணமாக சொல்லப்படுவது உதயநிதி ஸ்டாலின். அதாவது, பல வருடங்களாகவே உதயநிதியுடன் நெருங்கிய நட்பு வட்டாரத்தில்தான் விஷால் இருந்தார். ஆனால், சமீபகாலமாக அவர்களுக்குள் ஏதோ மனக்கசப்பு என சொல்லப்படுகிறது. அதனால்தான் கலைஞர் நூற்றாண்டு விழாவை விஷால் தவிர்ப்பதாகவும் சொல்லப்படுகிறது.

    இதையும் படிங்க: சர்ப்பரைஸ் மேல சர்ப்பரைஸ்!.. விடாமுயற்சி படத்தில் ரெண்டு அர்ஜூன்!. அட என்னப்பா சொல்றீங்க!…

  • பர்ஃபாமன்ஸ்லாம் பண்ண முடியாது!. கலைஞர் 100வது விழாவுக்கு எஸ்கேப் ஆகும் நடிகர்கள்…

    Kalaignar 100: திரையுலகில் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம், பெப்சி என முக்கிய சங்கங்கள் இருக்கிறது. ஆனால், எல்லாவற்றுக்கும் இடையே நல்ல ஒற்றுமையும், உறவும் இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒன்றின் கட்டளைக்கு ஒன்று கட்டுப்படாது. அதனால்தான் இப்போதுவரை நடிகர் சங்கத்தையே கட்டி முடிக்காமல் இருக்கிறார்கள்.

    விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவரான போது அவருக்கு பல வகைகளிலும் குடைச்சல் கொடுத்தனர். அவருக்கு போட்டியாக பாக்கியராஜை இறக்கி தேர்தலையும் சந்தித்தனர். ஆனால், இப்போது வரை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படவில்லை. ஒருபக்கம், மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு நூற்றாண்டு விழா நாளை (6.01.2024) சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

    இதையும் படிங்க: சர்ப்பரைஸ் மேல சர்ப்பரைஸ்!.. விடாமுயற்சி படத்தில் ரெண்டு அர்ஜூன்!. அட என்னப்பா சொல்றீங்க!…

    இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், சில அமைச்சர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த பலரும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். இதில் கலைஞர் கருணாநிதி பற்றிய ஆவண படங்கள், கலைஞரை பற்றிய நாடகங்கள் என பல நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

    மேலும், சண்டை காட்சி நடிகர்களின் நிகழ்ச்சி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர். இந்த விழாவில் ரஜினி, கமல் ஆகியோர் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். விஜய் வருவாரா என்பது தெரியவில்லை. ஆனால், அஜித் கண்டிப்பாக வரமாட்டார். ஏனெனில், அவர் விடாமுயற்சி படத்திற்காக அசர் பைசான் நாட்டுக்கு கிளம்பிவிட்டார்.

    இதையும் படிங்க: விஜயகாந்த் மறைவுக்கு வடிவேலு ரியாக்‌ஷன் என்ன தெரியுமா? ஷாக் கொடுத்த நண்பர்

    ஒருபக்கம், சில நடிகர்களை நடனமாடுவதற்காக அழைத்துள்ளனர். ஆனால், என்னால் முடியாது என கைவிரித்துவிட்டார்களாம். அதற்கு 2 காரணங்கள் சொல்லப்படுகிறது. இதுபோன்ற விழாக்களில் நடனமாடினால் ரசிகர்களின் மனதில் தங்களுக்கான இமேஜ் குறைந்துவிடும் என நினைக்கிறார்களாம். மற்றொன்று, ஒரு முழுப்பாடலுக்கு நடன அசைவுகளை மனதில் வைத்து சரியாக ஆடுவது என்பது சிலருக்கு மட்டுமே வரும். சொதப்பிவிட்டால் அசிங்கமாகிவிடும் என்பதாலும் பல நடிகர்கள் இதற்கு ‘நோ’ சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.

    பாலிவுட் நடிகரக்ளான ஷாருக்கான், சல்மான்கான் போன்றவர்களே சில விழாக்களில் கலந்து கொண்டு நடமாடுகிறார்கள். ஆனால், தமிழ் சினிமா நடிகர்களோ இப்படி நினைக்கிறார்கள். எப்படியோ கிடைக்கும் நடிகர்களை வைத்து கலைஞர் நூற்றாண்டு விழாவை சரியாக நடத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சங்கமும் திட்டமிட்டுள்ளது.

    இதையும் படிங்க: என்னமோ செய்யப்போறாங்க!. துபாயில் பரிதாபங்கள் கோபி – சுதாகருடன் சிவகார்த்திகேயன்!. வைரல் வீடியோ..