Author: சிவா

  • விஜயகாந்துக்கு நடந்த அந்த ஆபரேஷன்தான் காரணம்!.. முதன் முறையாக வாய் திறக்கும் பார்த்த சாரதி..

    Vijayakanth: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சமீபத்தில் மறைந்த சம்பவம் அவரின் கட்சி தொண்டர்களையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சி அடைய வைத்தது. பொதுமக்கள் பலரும் அவரின் மறைவுக்காக வருத்தப்பட்டனர். கடந்த பல வருடங்களாகவே அவருக்கு உடல் நலம் சரியில்லை.

    vijayakanth

    சரியாக சொல்ல வேண்டுமெனில் 2015ம் வருடத்திற்கு பின்னர்தான் அவரின் உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மோசமாகி கொண்டே வந்தது. முதலில் அவர் பேசும் வார்த்தைகள் குளறியது. என்ன பேசுகிறோம் என்கிற நினைவு அவருக்கு குறைந்து கொண்டே வந்தது. மேடைகளில் பேசும்போதும் கூட தடுமாறினார். அவர் என்ன பேசுகிறார் என்பதும் பலருக்கும் புரியவில்லை. வார்த்தைகளை தெளிவாக அவரால் பேசமுடியவில்லை.

    இதையும் படிங்க: விஜயகாந்த் தனது பிறந்தநாளை கொண்டாடியதே இதற்குத்தான்….46 வருட நண்பர் சொன்ன தகவல்…

    சிங்கப்பூருக்கு கொண்டு சென்று அவருக்கு சில சிகிச்சைகள் செய்தனர். ஆனாலும் அவரின் உடலில் முன்னேற்றமே ஏற்படவில்லை. ஒருகட்டத்தில் நிற்கவோ, அமரவோ, பேசவோ, தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணரவோ கூட முடியாத நிலைக்கு மாறினர் விஜயகாந்த. ‘அப்படி என்னதான் அவருக்கு பிரச்சனை?’ என்கிற கேள்வி அவரின் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் எழுந்தது. அந்த கேள்விக்கு கடைசிவரை பதில் கிடைக்கவில்லை.

    vijayakanth

    விஜயகாந்திடம் 46 வருடங்களாக பயணித்து வருபவர் பார்த்த சாரதி. சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் இவர். எப்போதும் விஜயாகாந்துக்கு அருகிலேயே இருப்பவர் இவர். தற்போது விஜயகாந்த் இல்லாத நிலையில் ஊடகம் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்தார்.

    இதையும் படிங்க: வடிவேலு மட்டும் மதுரை வந்தா வெட்டுறதுல தப்பே இல்ல… கொதித்தெழுந்த விஜயகாந்த் மேனேஜர்..

    விஜயகாந்தின் உடல்நிலை பற்றி பேசிய அவர் ‘2015ம் வருடம் சிங்கப்பூரில் அவருக்கு இருதயத்தில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது ஏதே ஒரு தவறு நடந்துவிட்டது. மூளைக்கு போகும் ரத்தக்குழாயில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டது. அதன்பின்னர்தான் அவருக்கு எல்லாமே மாறியது. ஒருநாள் அப்படியே தலை சுத்தி கீழே விழுந்துவிட்டார். அது அவருக்கே பேரதிர்ச்சியாக இருந்தது. நான்தான் அவரை தூக்கி அமர வைத்தேன்’.

    vijayakanth

    அவருக்காக நான் வேண்டாத கடவுள் இல்லை. இப்போது அவர் இல்லை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. கட்சிக்கு உயிர் கொடுத்துவிட்டு அவர் சென்றிருக்கிறார். கண்டிப்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அண்ணியாருடன் ஆலோசனை செய்து முடிவெடுப்போம்’ என பார்த்த சாரதி கூறினார்.

  • இன்னைக்கு நைட் தூக்கம் போச்சி!.. அங்கங்க ஓட்ட வச்சி அழகை காட்டும் ஜான்வி கபூர்!…

    Janhvi kapoor: 80களில் தமிழ் திரையுலகம் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தவர்தான் நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட் படங்களில் நடித்தபோது தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    janhvi

    இவருக்கு இரண்டு மகள்கள். இதில் மூத்தவர்தான் இந்த ஜான்வி கபூர். அம்மா நடிகையாக இருந்தால் அவருக்கும் இயல்பாகவே நடிப்பின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. கூடவே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் ஏற்பட முதலில் அதில் நுழைந்தார். 2018ம் வருடம் வெளியான தடாக் என்கிற படத்தில் அறிமுகமானார்.

    janhvi

    இப்போதுவரை 10 திரைப்படங்களில் நடித்துவிட்டார். அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டு சில விருதுகளையும் பெற்றிருக்கிறார். எப்படியாவது சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்பது இவரின் ஆசை. ஆனால், அது நடக்கவில்லை. எனவே, கவர்ச்சி உடைகளில் தாரளமாக கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

    janhvi

    சில சமயம் ஓவர் டோஸ் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கவைப்பது இவரின் வழக்கம். இவரின் அப்பா போனி கபூர் தமிழில் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய திரைப்படங்களை தயாரித்தார். எனவே, மகள் ஜான்வியை வைத்து தமிழில் ஒரு படத்தை அவர் தயாரிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    janhvi

    இந்நிலையில், வழக்கம்போல் கிளுகிளுப்பான உடைகளில் அழகை காட்டி ஜான்வி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை எக்கச்சக்கமாக ஜொள்ளுவிட வைத்துள்ளது.

    janhvi

  • விஜயகாந்துக்கு வராமல் நியூ இயர் பார்ட்டியில் குத்து டேன்ஸ்!.. அஜித்தை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்…

    Ajith kumar: கடந்த சில நாட்களாகவே ஊடகங்களில் விஜயகாந்த் பற்றிய செய்திகள்தான் அதிகமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. ஏனெனில், அவரின் மரணம் எல்லோருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்த் வெறும் நடிகராக மட்டும் இருந்திருந்தால் இவ்வளவு பேர் அவருக்காக துடித்திருக்க மாட்டார்கள்.

    நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதராகவும், மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவராகவும், பசியோடு இருப்பவருக்கு உணவளிக்கும் இரக்க குணம் கொண்டவராகவும் அவர் இருந்ததால்தான் அவரின் மறைவுக்கு பலரும் வருத்தப்பட்டு கண்ணீர் விட்டனர். ஒரு நடிகராகவும், நல்ல மனிதராகவும், நடிகர் சங்க தலைவராகவும் விஜயகாந்த் சினிமாவுக்கு செய்தது ஏராளம்.

    இதையும் படிங்க: கேப்டன் விஜயகாந்தின் கடைசி படம் என்னுடைய முதல் படமாகும் என நினைக்கவில்லை.. இயக்குனரின் கவலை!

    ஆனால், அவரின் மறைவில் வெறும் 20 சதவீத நடிகர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். நடிகர் சங்க தலைவராக இருந்தவருக்கு நடிகர் சங்கமே அவரின் மறைவுக்கு சரியான மரியாதையை கொடுக்கவில்லை என பேச துவங்கிவிட்டனர். ரஜினி, கமல், விஜய், அர்ஜூன், மன்சூர் அலிகான், சத்தியராஜ் என மிகவும் குறைவான நடிகர்கள் மட்டுமே அவருக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

    ajith

    அஜித், சூர்யா, விஷால், கார்த்தி, தனுஷ், சிம்பு ஆகியோர் வெளிநாட்டில் புது வருடத்தை கொண்டாடி கொண்டிருந்தார்கள். இதுதான் இப்போது சமூகவலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது. பொதுவாக நடிகர் அஜித் எதிலும் கலந்து கொள்ளமாட்டார். அவர் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிக்கே அவர் வரமாட்டார்.

    இதையும் படிங்க: விஜயகாந்துக்கு நியாபகம் அப்போ தான் மிஸ் ஆச்சு… நானே வேண்டாம் என்றேன்… உண்மை சொன்ன பிரபலம்!

    எனவே, விஜயகாந்தின் மறைவுக்கு வருவாரா என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. நினைத்தது போலவே அவர் வரவில்லை. ஆனால், துபாயில் ஜாலியாக புது வருடத்தை அவர் கொண்டாடினார். புதுவருட பார்ட்டியில் அவர் நடனமாடி வீடியோவை சிலர் இணையத்தில் பகிர்ந்து ‘இதுக்கெல்லாம் நேரம் இருக்கு.. விஜயகாந்துக்கு வர அஜித்துக்கு மனமும், நேரமும் இல்லையா?’ என பதிவிட்டு வருகிறார்கள்.

    ஆனால், அது அவரின் விருப்பம். விஜயகாந்த் இறந்துவிட்டார் என்பதற்காக அவர் புது வருடத்தை கொண்டாடாமல் இருக்க வேண்டும் என அவசியம் இல்லை எனவும் பதிவிட்டு வருகின்றனர். விஜயகாந்த் மறைவுக்கு வருத்தம் தெரிவித்து பிரேமலதாவின் செல்போன் எண்ணுக்கு அஜித் வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பினார் என வெளியான செய்தி உண்மையா? இல்லையா? என்பதும் தெரியவில்லை.

    https://twitter.com/ThalaBalajith/status/1742443512073998524

  • ரம்பாவை பின்னால் தட்டிய ரஜினி!. வெளியான வீடியோவால் ஹேஷ்டேக்கில் வந்த தலைவர்…

    90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ரம்பா. ஆந்திராவை சேர்ந்த இவர் வாளிப்பான தேகத்தை காட்டி தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல படங்களிலும் நடித்தார். அம்மணியின் கட்டழகை ரசிப்பதற்காகவே காஜி ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்தார்கள்.

    சுந்தர் சி இயக்கத்தில் கார்த்திக் நடித்த ‘உள்ளத்தை அள்ளித்தா’ படம்தான் இவரை ரசிகர்களிடம் பிரபலமானார். இந்த படத்தில் ஒரு பாடல் காட்சியில் மார்லின் மன்றோ போல பாவாடையை பறக்கவிட்டு கையால் மூடி இவர் கொடுத்த போஸ் 70,80 கிட்ஸ்களை தூங்கவிடாமல் செய்தது.

    இதையும் படிங்க: இந்தியன் 2 படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு இவ்வளவு கோடி செலவா? லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்…

    அதன்பின் பல திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். குறிப்பாக இவரின் தொடையழகிலேயே பலரும் சொக்கிப்போனார்கள். விஜயுடன் மின்சார கண்ணா, நினைத்தேன் வந்தாய், என்றென்றும் காதல் ஆகிய படங்களில் நடித்தார். ராசி எனும் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தார்.

    ramba

    பல படங்களிலும் நடித்த ரம்பா மார்க்கெட் இழந்ததால் திருமணமாகி இப்போது 3 குழந்தைக்களுக்கு அம்மா ஆகிவிட்டார். இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்று பேட்டி கொடுத்தார். அதில், திரையுலகில் தனக்கு ஏற்பட்ட பல அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார். அதில் ஒன்றுதான் இப்போது ரஜினியை பிடிக்காதவர்களுக்கு தீனியாக அமைந்துள்ளது.

    இதையும் படிங்க: நடிகர்கள் எல்லாம் ஷூட்டிங் போகலை…ஃபேமிலி டூருப்பா… அடுத்த ப்ளான் இதான்..வெளுத்துவிட்ட பிரபலம்..!

    நான் ரஜினி சாருடன் அருணாச்சலம் படத்தில் நடித்தபோது பாலிவுட்டில் சல்மான்கானுடன் ஒரு படத்தில் நடித்து வந்தேன். அப்போது மும்பை வந்த ரஜினி படப்பிடிப்பில் நான் எப்படி நடந்துகொள்கிறேன் என பார்த்தார். அதன்பின் ஒருநாள் அருணாச்சலம் படப்பிடிப்பில் காரசாரமான விவாதம் போனது. அதற்கு நான்தான் காரணம் என சொன்னார்கள்.

    ஹிந்தி நடிகர்கள் என்றால் கட்டியணைத்து பேசுகிறீர்கள். நாங்கள் மட்டும் என்ன இளக்காரமா என ரஜினி ஆரம்பித்தார். அதன்பின்னர்தான் அவர் என்னிடம் விளையாடுகிறார் என புரிந்துகொண்டேன். படப்பிடிப்பு நடந்தபோது திடிரென விளக்குகள் அணைக்கப்பட்டது. என் பின்னால் யாரே தட்டினார்கள். நான் கத்திவிட்டேன். அதன்பின் லைட் போடப்பட்டது. ரம்பாவை தட்டியது யார் என ஒரே களோபரமானது. ஆனால், அதை செய்தது ரஜினி சார்தான் என்பது பின்னால்தான் தெரிந்தது. இப்படி அந்த படத்தின் படப்பிடிப்பு ஜாலியாக நடந்தது’ என ரம்பா சொல்லியிருந்தார்.

    இதையடுத்து ரஜினியை பிடிக்காத சிலர் #ரம்பாவிடம்அத்துமீறிய_ரஜினி என்கிற ஹேஷ்டேக்கில் டிவிட்டரில் ரஜினியை மோசமாக விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

  • கொலைமிரட்டல் விட்ட தயாரிப்பாளர்.. பயந்து கண்ணீர்விட்ட நடிகர்… கேப்டன் செஞ்ச தரமான சம்பவம்..

    Vijayakanth: விஜயகாந்தை ஏன் எல்லோருக்கும் பிடிக்கும் என்பதால் அவர் எப்போதும் மற்றவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் மனிதராகவே இருந்தார். நடிகர் சங்க தலைவராக இருக்கும்போதே அவர் பல நடிகர்களுக்கும் உதவியிருக்கிறார் என பலரும் நினைப்பார்கள். ஆனால், அவர் சினிமாவில் நடிக்க துவங்கியது முதலே அப்படித்தான்.

    முன்னணி நடிகராக மாறி தயாரிப்பாளர்கள் அவரை தேடி வர துவங்கியதுமே தனக்கு நல்லது என தோன்றுபவற்றை அவர் செய்ய துவங்கிவிட்டார். அவரின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர், நடிகை என யாருக்கு என்ன பிரச்சனை என்றாலும் உடனே அதில் தலையிட்டு தீர்த்துவைப்பார். விஜயகாந்த் படப்பிடிப்பு என்றாலே பாதுகாப்பு உணர்வு இருக்கும் என அவருடன் நடித்த பல நடிகர்களும் சொல்லி இருக்கிறார்கள்.

    இதையும் படிங்க: நான் சொல்ற சம்பளத்துல நீங்க நடிப்பீங்களா?!.. விஜயகாந்திடம் எகிறிய வடிவேலு..

    லைட் பாய்க்கு சாப்பாடு போகவில்லை என்றாலும் அதில் தலையிடுவார் விஜயகாந்த். தான் சாப்பிடும் உணவை படப்பிடிப்பில் எல்லோரும் கிடைக்க வேண்டும் என சொல்லி அதற்கான செலவை தனது சம்பளத்தில் பிடிக்க சொன்னவர்தான் விஜயகாந்த. அப்படிப்பட்ட விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது பிரபல நடிகருக்கு உதவி சம்பவம் பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம்.

    shyam

    12பி திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் ஷ்யாம். அடுத்து சில படங்களில் நடித்தபோது ஒரு படத்தில் இவருக்கான சம்பளத்தை தயாரிப்பாளர் கொடுக்கவில்லை. சம்பளம் கொடுத்தால்தான் டப்பிங் பேச வருவேன் என ஷ்யாம் சொல்லிவிட, ‘நீ உயிரோடு இருக்கிறாராயா பார்த்துவிடலாம்’ என மிரட்டியிருக்கிறார் தயாரிப்பாளர். அந்த தயாரிப்பாளர் சினிமாவில் பெரிய புள்ளி. படைபலம் உள்ளவர்.

    இதையும் படிங்க: சந்தானம் படத்தில் அட்ஜெஸ்மெண்ட் கேட்ட அப்பா வயது இயக்குனர்!.. பகீர் கிளப்பும் யாஷிகா ஆனந்த்…

    எனவே, அவரால் தனது உயிருக்கு பிரச்சனை ஏற்படுமோ என பயந்த ஷ்யாம் ஒரு வாரம் வீட்டிலேயே தங்காமல் காரில் சுற்றி சுற்றி வந்திருக்கிறார். ஒருகட்டத்தில் விஜயகாந்திடம் போகலாம் என முடிவெடுத்து தொலைப்பேசியில் அவரிடம் பேசியிருக்கிறார். முழுவதும் கேட்ட விஜயகாந்த் ‘நீங்க போய் உங்க வீட்டில் நிம்மதியா தூங்குங்க. நாளைக்கு காலையில உங்க சம்பளம் உங்க வீட்டுக்கு வரும். அப்புறம் போய் டப்பிங் பேசுங்க’ என சொல்லியிருக்கிறார் விஜயகாந்த்.

    அவர் சொன்னபடியே அடுத்தநாள் காலை ஷ்யாமின் வீட்டுக்கு அவரின் சம்பளம் போய்விட்டது. உடனே விஜயகந்தை பார்க்க வந்த ஷ்யாம் கண்ணீர் மல்க அவருக்கு நன்றி கூறியுள்ளார். வளரும்போது என்னையும் இப்படி மிரட்டி இருக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டித்தான் நான் வந்தேன். நீ எதுக்கும் பயப்படாத. நான் நடிகர் சங்கத்தோட தலைவர். உன் பிரச்சனையை சரி செய்வது என் கடமை. தைரியமா இரு’ என தைரியம் கொடுத்து அனுப்பி வைத்தாராம் விஜயகாந்த்.

    இதையும் படிங்க: ரஜினியின் 100வது படத்தை இயக்க மறுத்த பிரபல இயக்குனர்!.. நடந்தது இதுதான்!…

  • நான் சொல்ற சம்பளத்துல நீங்க நடிப்பீங்களா?!.. விஜயகாந்திடம் எகிறிய வடிவேலு..

    Vijayakanth vadivelu: விஜயகாந்துக்கும் வடிவேலுவுக்கும் இருந்த பிரச்சனை என்ன என்பதும், விஜயகாந்தை வடிவேலு எப்படியெல்லாம் அரசியல் பிரச்சாரத்திலும், மேடைகளிலும் விமர்சித்தார் என்பதையும் மக்கள் பார்த்துள்ளனர். அப்போது முதலே வடிவேலுவுக்கு ஏழரையும் துவங்கியது. 4 வருடங்கள அவரை திரையுலகம் ஒதுக்கி வைத்தது.

    விஜயகாந்தை எதிரியாக வடிவேலுதான் பார்த்தாரே தவிர விஜயகாந்த் வடிவேலுவை அப்படி பார்க்கவில்லை. அதுதான் அவரின் பக்குவம். தன்னை மோசமாக வடிவேலு திட்டியபோதும் அவரை பற்றி மேடைகளில் எதுவும் பேசவேண்டாம் என தனது கட்சிகாரார்களிடம் சொல்லியவர்தான் விஜயகாந்த். அதோடு, அவர் நடிக்காமல் இருந்தபோது ‘வடிவேலு ஒரு நல்ல நடிகன். அவர் கண்டிப்பாக தொடர்ந்து நடிக்க வேண்டும்’ என சொன்னவர்தான் விஜயகாந்த்.

    இதையும் படிங்க: விஜயகாந்துக்கு ‘புரட்சிக் கலைஞர்’ பட்டம் எப்படி வந்தது தெரியுமா?!.. ஒரு சுவாரஸ்ய தகவல்…

    ஆனால், அந்த பக்குவம் எல்லாம் வடிவேலுவுக்கு இல்லை. கடைசி வரைக்கும் விஜயகாந்தின் மீது வன்மத்துடனேயே இருந்தார். வடிவேலுவின் வீட்டின் முன்பு விஜயகாந்தின் கட்சிக்காரர் ஒருவர் காரை நிறுத்த, இதில் கடுப்பான வடிவேலு அவர்களிடம் சண்டைக்கு போக அது பிரச்சனையில் முடிந்தது. இதுதான் காரணம் என பலரும் நினைப்பார்கள்.

    vadivelu

    ஆனால், அதற்கு முன்பே விஜயகாந்தை பிடிக்காதவராகத்தான் வடிவேலு இருந்துள்ளார். மணிரத்தினத்தின் அண்ணனின் நிறுவனமான ஜிவி பிலிஸ் பல வருடங்களுக்கு பின் சினிமாவை எடுக்க நினைத்து உருவான படம்தான் சொக்கத்தங்கம். பாக்கியராஜ் இயக்கிய அப்படத்தில் காமெடிக்கு முதலில் நடிக்கவிருந்தவர் வடிவேலு. அப்போது வடிவேலு பீக்கில் இருந்தார். எனவே, அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என பாக்கியராஜும், விஜயகாந்தும் நினைத்தனர்.

    இதையும் படிங்க: மீண்டும் திரையில் விஜயகாந்த்!.. விரைவில் வெளியாகும் ஊமை விழிகள் 2.. குட் நியூஸ் சொன்ன இயக்குனர்…

    ஆனால், விஜயகாந்தை விட அதிக சம்பளத்தை கேட்டுள்ளார் வடிவேலு. இதுகேட்டு தயாரிப்பு நிறுவனமே அதிர்ச்சி அடைந்தது. இந்த விவகாரத்தை அவர்கள் விஜயகாந்திடம் சொல்லிவிட்டார்கள். சில நாட்களில் மதுரை விமான நிலையத்தில் வடிவேலும், விஜயகாந்தும் சந்தித்துக்கொண்டனர். அப்போது விஜயகாந்த் ‘ஜிவி பிலிம்ஸ் ஒரு பெரிய நிறுவனம். கொஞ்சம் சம்பளத்தை குறைத்து கொண்டு இதில் நடி’ என சொல்லியிருக்கிறார்.

    அப்போது வடிவேலு ‘அப்படியா.. நான் ஒரு படம் சொல்றேன்.. அதுல நான் சொல்ற சம்பளத்தை வாங்கிகிட்டு நீங்க நடிக்கிறீங்களா?’ என கேட்டிருக்கிறார். விஜயகாந்த் நினைத்திருந்தால் அதே இடத்தில் அவரை பளார் என ஒன்று விட்டிருக்கலாம். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. இவருக்கு நம்மோடு நடிக்க விருப்பமில்லை என்பதை புரிந்துகொண்டு அவரை கடந்து சென்றுவிட்டார். அதன்பின் சொக்கத்தங்கம் படத்தில் கவுண்டமணியும், செந்திலும் நடித்தனர்.

    விஜயகாந்த் மனதில் எப்போதும் வன்மம் இருந்ததே இல்லை. எல்லோருக்கும் நன்மை செய்ய நினைக்கும் விஜயகாந்துக்கும் அது எப்போதும் வராது. கடைசிவரை தலைக்கணத்தையும், வன்மத்தையும் சுமந்து கொண்டு அலைந்த வடிவேலுவோ இப்போதுவரை எல்லோரிடம் திட்டு வாங்கி கொண்டு இருக்கிறார்.

    இதையும் படிங்க: சூர்யாவின் திருமணத்திற்கு வர மறுத்த விஜயகாந்த்! படத்துல நடிச்சுக் கொடுத்தவரு ஏன் வரலனு தெரியுமா?

  • விஜயகாந்துக்கு ‘புரட்சிக் கலைஞர்’ பட்டம் எப்படி வந்தது தெரியுமா?!.. ஒரு சுவாரஸ்ய தகவல்…

    Vijayakanth: சினிமா நடிகர்களுக்கு பட்டங்களை பெரும்பாலும் தயாரிப்பாளரே கொடுப்பார்கள். அப்படி ஐஸ் வைத்தால் தொடர்ந்து அவர் தனக்கு கால்ஷீட் கொடுப்பார் என்பதுதான் அதன் சூட்சமம். அப்படி கொடுக்கப்படும் பட்டங்களும் பெரும்பாலும் நிலைப்பதில்லை. யாருக்கு கொடுக்கப்படும் என்பதில்தான் விஷயமே இருக்கிறது.

    எம்.ஜி.ஆர் தனது படங்களில் புரட்சிகரமான காட்சிகளை வைத்தார். தனது பாடல்களில் புரட்சிகரமான பாடல் வரிகளை வைத்தார். அதோடு, திரையுலகில் மிகப்பெரிய ஆளுமையாகவும் அவர் இருந்தார். அதோடு, தனிக்கட்சி துவங்கி அரசியல் தலைவராகவும் மாறினார். அதனால் அவருக்கு புரட்சித் தலைவர் பட்டம் கிடைத்தது.

    இதையும் படிங்க: விஜயகாந்த் சாப்பாடுதான போட்டு இருக்காருனு யோசிச்சீங்கனா இத படிங்க.. சிலிர்க்கும்!..

    அதேபோல் நடிப்பில் நவரசங்களையும் காட்டியவர்தான் சிவாஜி கணேசன். இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை. அதனால்தான் இவருக்கு நடிகர் திலகம் பட்டம் கிடைத்தது. ஆனாலு, இவரின் பெயருக்கு முன்பே சேர்க்கப்பட்ட சிவாஜி என்கிற பட்டம் இவரின் பெயராகவே மாறிவிட்டது.

    அதேபோல், ரஜினிக்கு சூப்பர்ஸ்டார் பட்டத்தை கொடுத்தவர் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. ரஜினிக்கு ஐஸ் வைப்பதற்காக கொடுக்கப்பட்ட இந்த பட்டம் இப்போதுவரை நீடிக்கிறது. இந்த பட்டம் யாருக்கு சொந்தம் என்கிற பஞ்சாயத்தும் அவ்வப்போது எழுவதுண்டு. ஆனாலும், அந்த பட்டத்தை யாருக்கும் விட்டுகொடுக்காமல் இருக்கிறார் ரஜினி.

    இதையும் படிங்க: குழந்தைக்காக ஷூட்டிங்கை நிறுத்திய விஜயகாந்த்!.. நடிகர் சொன்ன நெகிழ்ச்சி சம்பவம்..

    விஜயகாந்துக்கு புரட்சிக் கலைஞர் பட்டம் கொடுத்ததும் கலைப்புலி தணுதான். அவரின் தயாரிப்பில் விஜயகாந்த் நடித்த திரைப்படம்தான் கூலிக்காரன். இந்த படம் உருவாகி கொண்டிருந்தபோது மணலியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு தாணு, விஜயகாந்த், இப்ராஹிம் ராவுத்தார் ஆகியோர் காரில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது விஜயகாந்துக்கு என்ன பட்டம் வைக்கலாம் என பேச்சு எழுந்தது. புரட்சி நடிகர், நடிகர் திலகம் இருக்காங்க. நான் கலைஞரின் தாசன். எனவே, புரட்சி கலைஞர் என இருக்கட்டும் என தாணு சொல்லி இருக்கிறார். எம்.ஜி.ஆரிடமிருந்து புரட்சி-ஐ எடுத்து அதில் கலைஞரை சொருகிவிட்டார் தாணு. இப்படித்தன் விஜயகாந்த புரட்சிக் கலைஞராக மாறினார். கூலிக்காரன் படத்தில்தான் விஜயகாந்துக்கு ‘புரட்சிக் கலைஞர்’ பட்டத்தோடு டைட்டில் கார்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: ஒன்னு இல்ல இரண்டு இல்ல.. விஜயகாந்த் டபுள் ஆக்‌ஷன் வேடம் போட்ட படங்கள் இத்தனையா?

  • அஜித்துக்கு ஜோடியான கமல் பட நடிகை!. கடைசி நேரத்தில் எல்லாமே மாறிப்போச்சே!..

    Ajith kumar: அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நடிகர் அஜித். அதன்பின் பல திரைப்படங்களிலும் சாக்லேட் பாயாகவே நடித்தார். ஒரு கட்டத்தில் ஆக்‌ஷன் ரூட்டியில் பயணிக்க துவங்கினார். பில்லா, மங்காத்தா போன்ற திரைப்படங்கள் அவரை ஒரு மாஸ் ஹீரோவாகவும் மாற்றியது.

    ரசிகர் மன்றங்களையே கலைத்த ஒரே நடிகர் இவர்தான். ஆனாலும், அவருக்கு ரசிகர்கள் அதிகரித்தார்களே தவிர குறையவில்லை. தொடர்ந்து மாஸ் காட்சிகள் அதிகமிருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார். வீரம், வேதாளம், விஸ்வாசம் என இவர் நடித்த படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது.

    இதையும் படிங்க: ஏழு கடல் ஏழு மலை படம் இந்த கொரியன் படத்தோட காப்பியா?.. அப்படியே அந்த விஷயம் மேட்ச் ஆகுதே!..

    விஜய் நடிப்பில் உருவான வாரிசு படம் வெளியான போது தனது துணிவு படத்தையும் துணிந்து இறக்கியவர் அஜித். தமிழகத்தில் வாரிசு படத்தை விட துணிவு படம் அதிக வசூலை பெற்றதாகவும் சொல்லப்பட்டது. தற்போது விடாமுயற்சி படத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    citizen

    அஜித் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவான திரைப்படம்தான் சிட்டிசன். இப்படத்தை சரவண சுப்பையா என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் அஜித் பல கெட்டப்புகளில் வந்தார். இப்படத்தின் பற்றிய செய்திகள் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: ரஜினியின் 100வது படத்தை இயக்க மறுத்த பிரபல இயக்குனர்!.. நடந்தது இதுதான்!…

    இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவிருந்தவர் சமீரா ரெட்டிதானாம். ஆனால், அவருக்கு ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே தெரிந்துள்ளது. இதனால், இயக்குனரால் அவருக்கு என்ன வேண்டும் என்பதை அவரிடம் சரியாக சொல்லமுடியவில்லையாம். எனவே, ஹேராம் படத்தில் கமலுடன் நடித்த வசுந்தரா தாஸை நடிக்க வைத்துள்ளனர். இவர் ஒரு பாடகிதான். நடிகை இல்லை. ஆனாலும் கஷ்டப்பட்டு நடனமெல்லாம் ஆடி இப்படத்தில் நடித்திருக்கிறார்.

    இவரை பார்த்தவுடன் அஜித்தின் நிறத்திற்கு வசுந்தரா மிகவும் பொருத்தமாக இருப்பார் என இயக்குனரும் நினைத்திருக்கிறார். ஆனால், சிட்டிசன் படத்திற்கு பின் வசுந்தரதாஸ் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்த படத்திலிருந்து வெளியேறிய சமீரா ரெட்டி 7 வருங்கள் கழித்து கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்து உருவான ‘வாரணம் ஆயிரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி சில படங்களில் நடித்தார்.

    இதையும் படிங்க: பிரியங்கா மோகனோட அந்த 20 நிமிஷ ஃபூட்டேஜை காணோம்!.. கதறி அழும் படக்குழு.. கடைசி நேரத்தில் என்ன ஆச்சு?

  • ரஜினியின் 100வது படத்தை இயக்க மறுத்த பிரபல இயக்குனர்!.. நடந்தது இதுதான்!…

    Rajinikanth: நடிகர் ரஜினி தனது 100வது படம் தனது குரு ராகவேந்திராவின் பயோகிராபியாக இருக்க வேண்டும் என அவரின் 25வது படத்தில் நடிக்கும்போதே முடிவெடுத்தார். அந்த நேரமும் வந்தது. அந்த பாடத்தை ரஜினியின் குருநாதர் பாலச்சந்தர் தனது கவிதாலயா நிறுவனம் மூலம் தயாரிப்பது என முடிவெடுக்கப்பட்டது. 80களில் ரஜினியை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த எஸ்.பி.முத்துராமனை அழைத்து தனது ஆசையை சொல்லி நீங்கள்தான் இப்படத்தை இயக்க வேண்டும் என கூறினார் ரஜினி.

    ஆனால், எஸ்.பி.முத்துராமனுக்கு அதில் விருப்பமில்லை. ரஜினியிடம் ‘ஒரு கமர்ஷியல் ஹீரோவாக நீ நடிக்கும் படங்கள் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. உன்னை ராகவேந்திரராக ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள். அதேபோல், நான் இயக்கும் படங்கள் தயாரிப்பாளருக்கு லாபம் கொடுக்க வேண்டும் என்பதில் நான் எப்போதும் உறுதியாக இருக்கிறேன். இதுவரை அது சரியாக நடந்து வருகிறது.

    இதையும் படிங்க: திடீரென தேவைப்பட்ட பாட்டு!.. மேஜிக் செய்த இசைஞானி!. ஒரே நாளில் எடுக்கப்பட்ட ரஜினி பாட்டு!..

    இந்த படத்தை நாம் எடுத்தால் கண்டிப்பாக வெற்றி பெறாது. அது தயாரிப்பாளர், வினியோகஸ்தர் என எல்லோருக்கும் நஷ்டத்தை கொடுக்கும். அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. முக்கியமாக நான் சுயமரியாதை குடும்பத்தில் இருந்து வந்தவன். எனவே, ஒரு ஆன்மிக படத்தை சிறப்பாக இயக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை’ என 3 காரணங்களை அடுக்கினார்.

    அவர் சொன்ன காரணங்களை பாலச்சந்தரிடம் ரஜினி சொல்ல எஸ்.பி.முத்துராமனை நேரில் அழைத்து பேசினார் பாலச்சந்தர். நீங்கள் சொன்னதை ரஜினி சொன்னார். ரஜினையை ராகவேந்திராராக ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். கண்டிப்பாக இந்த படம் ஹிட் அடிக்கும். அப்படி இல்லை என்றாலும் பிரச்சனை இல்லை. இதை லாப நோக்கத்திற்காக நான் தயாரிக்கவில்லை. உங்களால் கண்டிப்பாக இப்படத்தை சிறப்பாக இயக்க முடியும்’ என அவர் சொல்ல எஸ்.பி.முத்துராமனுக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

    இதையும் படிங்க: ஒரே ஒரு சிகரெட்!.. முள்ளும் மலரும் பட வாய்ப்பை தட்டி தூக்கிய ரஜினி.. இவ்ளோ விஷயம் நடந்திருக்கா?

    உடனே ராகவேந்திரா வாழ்க்கை கதையை படித்தார். அவரை பற்றிய பல தகவல்களையும் சேகரித்து திரைக்கதையும் உருவானது. மிகவும் சிறப்பாக அப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்திற்கு ரஜினி சம்பளம் எதுவும் வாங்கவில்லை. படத்தின் வெற்றிக்காக சத்தியராஜ் நடனமாடும் ஒரு பாடல் காட்சியும் படத்தில் சேர்த்தார் எஸ்.பி.முத்துராமன்.

    Sri ragavendra

    படத்தை பார்த்த பாலச்சந்தர் எஸ்.பி.முத்துராமனை பாராட்டிவிட்டு சத்தியராஜ் நடனமாடும் அந்த பாடல் காட்சியை நீக்க சொல்லிவிட்டார். படமும் வெளியானது. ஆனால், இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால், கவிதாலயா நிறுவனத்திற்கு ரஜினி மீண்டும் ஒரு படம் நடித்து கொடுத்தார். அதுதான் வேலைக்காரன். இந்த படத்தையும் எஸ்.பி.முத்துராமனே இயக்கியிருந்தார். இப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.

    இதையும் படிங்க: கமலிடமிருந்து வந்த போன் கால்!.. ரஜினி செய்த வேலை!.. ஆடிப்போன சக நடிகர்…

  • இவ்ளோ க்யூட்டா இருந்தா லவ் பண்ணிடுவோம்!.. பசங்க மனச கெடுக்கும் கேப்ரியல்லா..

    Gabriella: விஜய் டிவி மூலம் ரசிகர்களிடம் பிரபலமான சிலர்களில் கேப்ரியல்லாவும் ஒருவர். சிறுவயது முதலே நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். எனவே, சில நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். சிறுவயது முதலே சினிமாவில் நடிக்கும் ஆசை அவருக்கு இருந்தது.

    gabriella

    தனுஷும், சிவகார்த்திகேயனும் இணைந்து நடித்த 3 படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் கேப்ரியல்லா நடித்திருந்தார். நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என்பது தொடர்ந்து நடந்து வந்தது. டின் ஏஜை எட்டியவுடன் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். சினிமாவில் ஒரு பழக்கம் உண்டு. வாய்ப்பு கொடுக்க முடியாது எனில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள் என சொல்வார்கள்.

    gabriella

    அப்படித்தான் சிவகார்த்திகேயன் கேப்ரியல்லாவிடம் ‘பார்ப்பதற்கு சின்ன பொண்ணு போல இருக்க. இன்னும் கொஞ்சம் நாள் ஆகட்டும். இப்ப போய் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்’ என சொல்லிவிட கேப்ரியல்லாவும் பிக்பாஸ் வீட்டுக்கு போனார். பல நாட்கள் அந்த வீட்டில் தாக்குபிடித்த கேப்ரியல்லா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

    gabriella

    ஆனால், திடீரென பிக்பாஸ் வீட்டிலிருந்து அவரே வெளியேறினார். அதன்பின்னரும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, சீரியல் பக்கம் ஒதுங்கினார். இப்போது ஈரமான ரோஜாவே சீசன் 2 நிகழ்ச்சியில் நடித்து வருகிறார். இதன் மூலம் இவருக்கு ரசிகர்களும் உருவாகியுள்ளனர்.

    gabriella

    ஒருபக்கம், கட்டழகை விதவிதமாக காட்டி கேப்ரியல்லா வெளியிட்டு வரும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவிக்கும். அந்தவகையில், புடவை அணிந்து க்யூட்டாக போஸ் கொடுத்து கேப்ரியல்லா வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் அவரின் ஃபாலோயர்ஸ்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

    gabriella