Author: சிவா

  • சர்ப்பரைஸ் மேல சர்ப்பரைஸ்!.. விடாமுயற்சி படத்தில் ரெண்டு அர்ஜூன்!. அட என்னப்பா சொல்றீங்க!…

    Vidamuyarchi: துணிவு படத்திற்கு பின் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. துணிவு படம் வெளியாகி 10 மாதங்கள் கழித்து இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இடையில் விக்னேஷ் சிவன் இயக்குனர் என அறிவிக்கப்பட்டு, அதன்பின் அவர் தூக்கப்பட்டு மகிழ் திருமேனி இயக்குனராக அறிவிக்கப்பட்டார்.

    சில ஹாலிவுட் படங்களின் கதைகளை சுட்டு படமாக எடுக்க அஜித், மகிழ் திருமேனி என இருவருமே முயற்சி செய்ததாக சொல்லப்பட்டது. அதன்பின் மகிழ் திருமேனியே ஒரு கதையை உருவாக்கினார். அஜித்துக்கு அது பிடிக்கவில்லை. அதன்பின், வேறு ஒரு ஹாலிவுட் படத்தின் லைனை சொல்ல அஜித்தும் ஓகே சொன்னார். அதுதான் இப்போது படமாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

    இதையும் படிங்க: அது உங்க பிரச்சனை!.. என்னால முடியாது!. கறாரா சொன்ன அஜித்?!.. என்னவாகுமோ விடாமுயற்சி!…

    அதாவது, வெளிநாட்டுக்கு மனைவி திரிஷாவுடன் செல்கிறார் அஜித். அப்போது ஒரு குரூப் திரிஷாவை கடத்தி சென்றுவிடுகிறது. அஜித் எப்படி மனைவியை மீட்கிறார் என்பதுதான் கதை என சொல்லப்படுகிறது. இப்படத்தில் வில்லனாக அர்ஜூன் நடித்து வருகிறார். இப்படத்திற்காக ஸ்டைலிசான லுக்கில் அர்ஜூன் இருக்கும் சில புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியானது.

    இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படம் ஹாலிவுட் பாணியில் ஒரு பக்கா ஆக்‌ஷன் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் அர்ஜூன் மட்டுமில்லாமல் அர்ஜுன் தாஸ், ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

    சமீபத்தில் சில நாட்கள் பிரேக் விட்ட நிலையில் தற்போது அஜித் இன்று மீண்டும் அசர் பைசானுக்கு கிளம்பிவிட்டார். இந்நிலையில், இப்படத்தில் அஜித்தின் பெயர் அர்ஜூன் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே படப்பிடிப்பில் ஒரு அர்ஜூன் இருக்கும்போது இயக்குனர் அர்ஜுன் என அழைத்தால் அஜித், அர்ஜூன் என இருவரும் வந்து நிற்பார்களா தெரியவில்லை.

    இதையும் படிங்க: விஜயகாந்த் மறைவுக்கு வடிவேலு ரியாக்‌ஷன் என்ன தெரியுமா? ஷாக் கொடுத்த நண்பர்

  • இது கொஞ்சம் காத்தோட்டமா இருக்கு!. பட்டனை கழட்டிவிட்டு அழகை காட்டும் ரேஷ்மா…

    Reshma pasupuleti: தமிழ் டிவி சீரியல்களில் நடிக்கும் பெரும்பாலான நடிகைகள் ஆந்திரா, கேரளா அல்லது கர்நாடகாவை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். வெறும் 10 சதவீதம் மட்டுமே தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இருப்பார்கள். அப்படி ஆந்திராவிலிருந்து சீரியலில் திறமை காட்ட வந்தவர்தான் ரேஷ்மா பசுப்புலேட்டி.

    reshma

    ஆந்திராவில் டிவி தொகுப்பாளினியாகவும், சில சீரியல்களிலும் நடித்தார். திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆன ரேஷ்மா சில ஆண்டுகளில் கணவனை பிரிந்துவிட்டார். அதன்பின் சென்னை வந்து செட்டிலான ரேஷ்மா சீரியலில் நடிக்க துவங்கினார். இதுவரை 10க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துவிட்டார்.

    reshma

    இப்போது பாக்கியலட்சுமி சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமாகிவிட்டார். ஒருபக்கம், சில சீரியல்களில் வில்லியாகவும் நடித்து வருகிறார். சமீபத்தில் சிறந்த வில்லிக்கான சின்னத்திரை விருதையும் ரேஷ்மா வாங்கினார். பல திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார்.

    reshma

    சீரியல் நடிகை, சினிமா நடிகை, மாடலிங் என எல்லாவற்றிலும் கலக்கி வருகிறார். ஒருபக்கம் புடவை மற்றும் மாடர்ன் உடைகளில் கட்டழகை வேற மாறி காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ரேஷ்மாவின் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

    reshma

    எனவே, கேப் விடாமல் புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் டாப்ஸ் பட்டழனை கழட்டிவிட்டு காத்தோட்டமாக போஸ் கொடுத்து ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    reshma

  • என்னமோ செய்யப்போறாங்க!. துபாயில் பரிதாபங்கள் கோபி – சுதாகருடன் சிவகார்த்திகேயன்!. வைரல் வீடியோ..

    Ayalan movie: விஜய் டிவியில் ஆங்கராக இருந்து சினிமாவுக்கு வந்தவர் சிவகார்த்தியேன். துவக்கத்தில் தடுமாறினாலும் எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின் ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் மூலம் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் மாறினார்.

    குறுகிய காலகட்டத்திலேயே விஜய் சேதுபதி, தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பல நடிகர்களை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார். அதாவது, விஜய், அஜித்துக்கு பின் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கிறார். ஆனால், இவரின் நடிப்பில் வெளியான சில படங்கள் தோல்வியடைந்து நஷ்டமடைந்தார். அதற்கு காரணம் இவரே அந்த படங்களை தயாரித்ததுதான்.

    இதையும் படிங்க: கேப்டன் சினிமாவில் நிலைத்து நின்றதற்கு இதுதான் காரணமா? இளரவசு சொல்லும் ரகசியம்…!

    ஆனாலும், அவ்வப்போது ஹிட் படங்களை கொடுத்து மார்க்கெட்டை தக்க வைத்து கொண்டு வருகிறார். ஒருபக்கம், இமானின் குற்றச்சாட்டுக்கும் ஆளாகி அவரின் இமேஜ் டேமேஜ் ஆனது. ஆனால், இதுவரை அதுபற்றி சிவகார்த்திகேயன் எந்த விளக்குமும் கொடுக்கவில்லை. இந்நிலையில்தான், அவரின் அயலான் திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

    ayalan

    எனவே, இப்படத்தின் புரமோஷன் வேலைகள் துவங்கியுள்ளது. செய்தியாளர்களை சந்தித்தால் இமான் சொன்ன புகார் பற்றி கண்டிப்பாக கேள்விகள் கேட்பார்கள் என்பதால் அதை அவர் தொடர்ந்து தவிர்த்து வருகிறார். அயலான் படத்தி இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

    இதையும் படிங்க: 25 வருடமாக கேப்டன் நினைவாக சூர்யா செய்யும் செயல்! இதுவரைக்கும் தெரியாத ஒரு விஷயம்

    மேலும், ரகுப் ப்ரீத் சிங், கருணாநகரன், யோகிபாபு என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். பூமிக்கு வரும் ஏலியன் ஒன்று சிவகார்த்திகேயனிடம் தஞ்சமடைய அவர் அந்த ஏலியனை வைத்து என்ன செய்கிறார் என்பதுதான் கதை. இப்படத்தின் டீசர் வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், துபாயில் இப்படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கலந்துகொள்ளவிருக்கிறார். அதோடு, பரிதாபங்கள் புகழ் கோபி – சுதாகருடன் இணைந்து அயலான் படத்திற்கு அவர் புரமோஷன் செய்யவிருக்கிறார். இதற்காக துபாய் சேக் போல் கோபியும், சுதாகரும் உடையணிந்து சிவகார்த்திகேயனுடன் ஜாலியாக பேசிக்கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • கிளிசரின் சேல்ஸ் அதிகமாச்சி!.. வெயி்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் ஃபர்பாமன்ஸ்!.. வச்சி செய்யும் பிரபலம்…

    Vijayakanth: விஜயகாந்த் சினிமா உலகினருக்கு செய்தது ஏராளம். பல புதிய இயக்குனர்களை, தயாரிப்பாளர்களை, நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து மேலே தூக்கிவிட்டவர். புலன் விசாரணை படத்தில் சரத்குமாருக்கு வில்லன் வேடம் கொடுத்து தூக்கிவிட்டார். அதே, சரத்குமாரை தனது சொந்த தயாரிப்பில் தாய்மொழி என்கிற படத்தில் ஹீரோவாக்கினார். அதேபோல்தான் மன்சூர் அலிகானை கேப்டன் பிரபாகரன் படத்தில் அறிமுகம் செய்து வைத்து தூக்கிவிட்டார்.

    திரைப்படக்கல்லூரியை சேர்ந்த 47 பேருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். விஜயின் படங்கள் ஓடாத போது அவருக்காக செந்தூரப்பாண்டி படத்தில் நடித்து கொடுத்தார். அதேபோல், சிவக்குமாரிடம் கொண்ட நட்புக்காக சூர்யாவை தனது பெரிய அண்ணன் படத்தில் நடிக்க வைத்தார். இப்படி அவர் வளர்த்துவிட்டவர்கள் ஏராளம். அதேபோல், நடிகர் சங்க தலைவராக சிறப்பாக செயல்பட்டு அதன் கடனை அடைத்தார்.

    இதையும் படிங்க: தமிழ்சினிமாவை டிஜிட்டல் உலகிற்குக் கொண்டு வந்த படம் இதுதான்… இயக்குனரை அறிமுகப்படுத்திய கேப்டன்!

    ஆனால், சினிமா உலகுக்கு இவ்வளவு செய்த விஜயகாந்துக்கு சினிமா உலகம் எதையும் செய்தது இல்லை. அதை அவர் எதிர்பார்த்ததும் இல்லை. அவரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த கூட சொற்பமான நடிகர்களே வந்தனர். பெரிய நடிகர்களில் ரஜினி, கமல், விஜய், விஜய் சேதுபதியை தவிர யாரும் வரவில்லை. இது விவாதப்பொருளாக மாறியது. ஏனெனில், சூர்யா, விஷால், கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட சில நடிகர்கள் புதுவருட கொண்டாட்டத்திற்காக வெளிநாடு சென்றிருந்தனர். எனவே, ரசிகர்கள் அவர்களை கடுமையாக விமர்சித்தனர்.

    புதுவருட கொண்டாட்டம் முடிந்த நிலையில் ஒவ்வொருவராக விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடத்திற்கு வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதலில் கார்த்தி வந்தார். அதன்பின் சூர்யா வந்தார். சுர்யாவோ குலுங்கி குலுங்கி அழுதார். இதையடுத்து புளூசட்ட மாறன் இதை செமையாக நக்கலடித்து வருகிறார்.

    சென்னையில் உள்ள மருந்து கடைகளில் கிளிசரின் வியாபாரம் அதிகரித்துள்ளது. வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் பர்பாமன்ஸ் என மீம்ஸ் போட்டு கிண்டலடித்து வருகின்றனர். மேலும், பாண்டிச்சேரியில் இருந்தும் ஐஸ்வர்யா ராஜேஷ் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை என்றும், ஜாலியாக புதுவருடத்தை வெளிநாட்டில் கொண்டாடிவிட்டு இப்போது வந்து வருத்தப்படுவது போல நடிகர்கள் நடிக்கிறார்கள்’ என்பது போல மீம்ஸ்களை பகிர்ந்து வருகிறார்.

  • விஜயகாந்த் மகன் திருமணம் நின்னு போனதுக்கு காரணம் இதுதான்!.. பயில்வான் ரங்கநாதன் சொல்லும் பகீர் தகவல்…

    Vijayakanth: கடந்த சில நாட்களாவே மறைந்த நடிகர் விஜயகாந்த் தொடர்பான பல செய்திகளும் வெளிவந்து கொண்டிருக்கிறது. விஜயகாந்தின் மரணம் பலவேறு வகையிலும் பலரையும் பாதித்திருக்கிறது. எனவே, அவருடன் தொடர்புடைய பலரும் அவரை பற்றி பல விஷயங்களை பேசி வருகின்றனர்.

    விஜயகாந்துக்கு இரண்டு மகன்கள். மூத்தவர் பெயர் விஜயபிரபகாரன். விஜகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு செயல்பட முடியாத நிலையில் இருந்தபோது விஜய பிரபகாரன் அப்பாவின் கட்சியில் வேலை செய்ய துவங்கினார். விஜயகாந்துக்கு பதில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தேமுதிக தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். மேலும், கொஞ்சம் பேசவும் கற்றுக்கொண்டு தொண்டர்களின் கைத்தட்டலை வாங்கினார்.

    இதையும் படிங்க: பழைய குப்பைகளை கிளறும் விஜய், ரஜினி ரசிகர்கள்.. ஜகபதி பாபு சொன்ன கீர்த்தி சுரேஷ் மேட்டர் வைரல்!..

    தேமுதிகவுக்காக இவர் பிரச்சாரம் செய்தார். தேமுதிக சார்பில் நடத்தப்பட்ட பல அரசியல் மேடைகளிலும் பேசி வந்தார். விஜயகாந்த் இவருக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டார். 2019ம் வருடம் அதற்கான சில முயற்சிகளும் நடந்தது. ஆனால், அதன்பின் அதுபற்றி செய்திகள் வரவில்லை.

    vijaya prabakaran

    தற்போது விஜயகாந்த் மறைந்துவிட்ட நிலையில் விஜயபிரபாகரன் திருமணம் பற்றி பலரும் பலவிதமான செய்திகளை சொல்லி வருகிறார்கள். அந்த திருமணம் பாதியிலேயே நின்றுபோய்விட்டது. மீண்டும் நடக்காது என்றும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

    இதையும் படிங்க: ‘பெரியண்ணா’ படத்தில் சூர்யாவுக்கு பதில் கேப்டன் சிபாரிசு செய்த நடிகர் யார் தெரியுமா? அட இவரா?

    ஆனால், இந்த தகவலை நடிகரும், பல வருடமாக சினிமாவில் பத்திரிக்கையாளராக இருக்கும் பயில்வான் ரங்கநாதன் மறுத்துள்ளார். கோவையை சேர்ந்த தொழிலதிபர் இளங்கோ என்பவரின் மகள் கீர்த்தனாவுக்கும், விஜய பிரபாகரனுக்கும் 2019ம் வருடம் நிச்சயதார்த்தம் நடந்தது. பிரதமர் மோடியின் தலைமையில் இந்த திருமணத்தை நடத்த விஜயகாந்த் ஆசைப்பட்டார். ஆனால், மோடியின் தேதி கிடைக்கவில்லை.

    vijaya prabakaran

    எனவே, திருமண நாள் தள்ளிக்கொண்டே போனது. அதற்கிடையில் விஜயகாந்துக்கும் உடல் நிலை பாதிக்கப்பட்டது. எனவே, அப்பாவுக்கு உடல்நிலை சரியானதும் திருமணம் செய்துகொள்வோம் என விஜயபிரபாகரனும் நினைத்தார். இப்படியே 4 வருடங்கள் ஓடிவிட்டது. கண்டிப்பாக அவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என அவர் கூறினார்.

    இதையும் படிங்க: 6 மாசமா அவஸ்த்தைப் படுறான்.. ஒண்ணும் வர மாட்டேங்குது.. இசையமைப்பாளர்களை கலாய்த்த இளையராஜா!

  • வாய்ப்பும் இல்ல.. வேலையும் இல்ல!. எல்லாம் போச்சி!.. வறுமையில் வாடும் பிஜிலி ரமேஷ்…

    Bijili ramesh: சில வருடங்களுக்கு முன்பு ஒரு பிராங்க் வீடியோ மூலம் பிரபலமானவர்தான் இந்த பிஜிலி ரமேஷ். அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி பலராலும் ரசிக்கப்பட்டது. இவர் ஒரு பக்கா ரஜினி ரசிகன். வெறித்தனமான ரசிகர் என்றும் சொல்லலாம். இவரின் பேசும் ஸ்டைல், உடல் மொழி, ரஜினியை போலவே செய்து காட்டும் ஸ்டைல் என பலரையும் ரசிக்க வைத்தார்.

    திடீரென ஒருவர் இப்படி பிரபலமானால் அடுத்து சினிமா வாய்ப்புதான். ஜோம்பி, நெஞ்சமூண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, நட்பே துணை, ஆடை, கோலமாவு கோகிலா உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். ஜோம்பி படத்தில் இவருக்கு அதிக காட்சிகள் இருந்தது.

    இதையும் படிங்க: போதும்ட சாமி! உங்க சகவாசமே வேணாம் – திடீர் முடிவால் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மக்கள் செல்வன்

    லவ் டுடே புகழ் பிரதீப் ரங்கநாதன் ஜெயம் ரவியை வைத்து முதலில் இயக்கிய கோமாளி படத்திலும் ஒரு சின்ன வேடத்தில் வருவார். ஆனால், இவரின் புகழை திரையுலகம் பயன்படுத்திக்கொண்டாலும் பெரிய சம்பளம் ஒன்றும் கிடைக்கவில்லையாம். ஒரு படத்தில் நடித்தால் 2 அல்லது 3 ஆயிரம் ரூபாய் கொடுப்பார்களாம். ‘இந்தா செலவுக்கு வச்சுக்கோ’ என்கிற ரீதியில்தான் இவருக்கு காசு கொடுத்துள்ளனர். அப்படி வாங்கிய காசையும் குடித்து செலவு செய்திருக்கிறார். அதன்பின் டீ கடையிலும் வேலை செய்திருக்கிறார்.

    bigili
    bigili

    கோலமாவு கோகிலா படத்திற்கு புரமோஷன் பண்ணியதற்காக 20 ஆயிரம் கொடுத்துள்ளனர். அதுதான் இதுவரை நான் சினிமாவில் வாங்கிய அதிக சம்பளம் என்கிறார் பிஜிலி ரமேஷ். இதுவரைக்கும் சினிமாவில் பெரிதாக ஒன்றும் சம்பாதிக்கவில்லை என புலம்புகிறார் மனுஷன். சினிமாவில் பழம் தின்னு கொட்டை போட்டவர்களையே காலி செய்து விடுவார்கள். ஏமாற்றி விடுவார்கள்.

    இதையும் படிங்க: எவ்வளவு கேஸ் போட்டாலும் கெட்டப் பையன் சார் இந்த அருண்! ‘கேப்டன் மில்லர்’ படத்தால் தயாரிப்பாளருக்கு வந்த சோதனை

    பிஜிலி ரமேஷுக்கோ சினிமா என்றால் ஒன்றுமே தெரியாது. அதில் உள்ள நேக்கு, போக்குகள் எதுவும் தெரியாது. எத்தனை காட்சிகளில் நடித்தால் எவ்வளவு சம்பளம் வாங்க வேண்டும் என்றும் தெரியாது. இப்போது வாய்ப்புகள் எதுவுமில்லை. எனவே, பழைய வேலைக்கு போகலாம் என போனால் அவர்களும் வேலை கொடுக்க மறுக்கிறார்களாம். தேவையில்லாத பிரச்சனை என அவர்கள் நினைப்பதாக தெரிகிறது.

    எனவே, என்ன செய்தவது என புரியாமல் மண்டை குழம்பி போய் இருக்கிறாராம் பிஜிலி ரமேஷ். அதிர்ஷ்டத்தில் கிடைக்கும் வெளிச்சம் செய்யும் வேலை இதுதான். வாழவும் விடாது சாகவும் விடாது.

    இதையும் படிங்க: அத பாத்து நானே பயந்து போயிட்டேன்!.. விஜயகாந்தின் 30 வருட டிரைவர் சொன்ன பகீர் தகவல்..

  • அத பாத்து நானே பயந்து போயிட்டேன்!.. விஜயகாந்தின் 30 வருட டிரைவர் சொன்ன பகீர் தகவல்..

    Vijayakanth: கடந்த சில நாட்களாகவே ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வரும் விவகாரம் விஜயகாந்தின் மரணம்தான். சினிமாவிலும், அரசியலிலும் ஒரு முக்கிய இடத்தை பிடித்த அவரின் மறைவு பலரையும் பேரதிர்ச்சியை கொடுத்தது. இதைத்தொடர்ந்து அவருடன் தொடர்புள்ள, பழகிய பலரும் ஊடகங்களில் அவரை பற்றி பேசி வருகின்றனர்.

    இந்நிலையில், விஜயகாந்துக்கு கடந்த 30 வருடங்களாக கார் டிரைவராக பணிபுரிந்து வந்த வெங்கடேசன் என்பவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது அவர் விஜயகாந்துடனான பல அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். விஜயகாந்துக்கு அவருக்கு பிடித்த மாதிரி ஒரு கார் டிரைவர் தேவைப்பட்டார். நான் மதுரையை சேர்ந்தவன்.

    இதையும் படிங்க: விஜயகாந்துக்கு இப்படி ஒரு நம்பிக்கை இருந்ததா?!. மனுஷன் பச்ச புள்ளையா இருந்திருக்காரே…

    இப்ராஹிம் ராவுத்தர்தான் என்னை விஜயகாந்திடம் அறிமுகம் செய்து வைத்து ‘இவன் நம்ம பையன். நல்லா வண்டி ஓட்டுவான். வைத்துக்கொள்’ என சொன்னார். அதற்கு விஜயகாந்த் ‘என் டேஸ்டுக்கு இவன் வண்டி ஓட்டுவானா?’ எனக்கேட்டார். உன் டேஸ்ட்டு எனக்கு தெரியாதாடா.. சரியாக இருப்பான்’ என அவர் சொல்ல விஜயகாந்திடம் வேலைக்கு சேர்ந்தேன்.

    1989ம் வருடம் மீனாட்சி திருவிளையாடல் என்கிற படத்தில் அவர் அப்போது நடித்துக்கொண்டிருந்தார். படப்பிடிப்புக்கு என்னை போக சொன்னார். காரை வேகமாக ஓட்டு என்றார். நான் டிரைவர் மட்டுமல்ல. மெக்கானிக்கும் கூட. எனவே, காரை வேகமாக ஓட்டி அவரை கொண்டு சேர்த்தேன். அவருக்கு என்னை மிகவும் பிடித்துவிட்டது.

    இதையும் படிங்க: நான் அவர் கூட இருந்திருந்தா கேப்டனை எப்படி பார்த்திருப்பீங்க தெரியுமா? மன்சூர் அலிகான் சொன்னத கேளுங்க

    உடனே ராவுத்தரை தொலைப்பேசியில் அழைத்து ‘சூப்பர் பையன்டா.. இவன நான் வச்சிக்குறேன்’ என்றார். அதன்பின் 30 வருடமாக அவருக்கு நான்தான் கார் டிரைவர். என்னை ஒருநாள் கூட டிரைவர் போல அவர் நடத்தியது இல்லை. வெளியே தங்கினால் அவருடன் பெட்டிலேயே என்னை படுக்க சொல்வார். அது வேண்டும். இது வேண்டும் என ஒருபோதும் அவரிடம் நான் எதுவும் கேட்டதில்லை. எனக்கு என்ன வேண்டும் என அவரே பார்த்து பார்த்து செய்வார்.

    venkatesh

    சென்னையிலிருந்து கோயம்பத்தூர் வரை அவரும், அண்ணன் ராதாவியும் காரில் ரேஸ் ஓட்டுவார்கள். என்னை பின்னால் உட்கார வைத்துவிட்டு அண்ணன் விஜயகாந்த் வேகமாக காரை ஓட்டுவார். அதை பார்த்தால் எனக்கே பயமாக இருக்கும். ‘பயப்படாதே.. காருக்கு எதும் ஆனாலும் நமக்கு ஒன்றும் ஆகாது’ என சொல்வர்.

    அவருக்கு மதுப்பழக்கம் இருந்தது. ஆனால், எல்லோரும் நினைப்பது போல அதற்கு அவர் அடிமையெல்லாம் இல்லை. அவரை போல சண்டைக்காட்சிகளில் நடிக்கும் நடிகர் கிடையாது. உடலை வறுத்தி சண்டை காட்சிகளில் நடிப்பார். தினமும் காலை எழுந்து உடற்பயிற்சி செய்வார். என்னை அழைத்து அவரின் காலை தூக்கி நெற்றியில் படும்படி வைக்க சொல்வார். அப்படி பயிற்சி எடுத்தால்தான் சண்டை காட்சிகளில் அவரால் அப்படி நடிக்க முடிந்தது. அவர் இல்லை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. என் சொந்த அண்ணனை இழந்துவிட்ட சோகத்தில் இருக்கிறேன்’ என டிரைவர் வெங்கடேசன் கூறினார்.

    இதையும் படிங்க: வடிவேலு கண்ணாடி போட்ட குபீர் காரணம்!.. வசமாக விஜயகாந்திடம் சிக்கிய சூப்பர் சம்பவம்!

  • எங்க போனாலும் பார்க்கிங் பஞ்சாயத்து!.. 20 ஆயிரம் சதுர அடியில் பெரிய வீடு கட்டும் வடிவேலு!..

    Vadivelu: சினிமா ஆசையில் மதுரையிலிருந்து சென்னை வந்த வடிவேலு ராஜ்கிரண் அலுவலகத்தில் தஞ்சம் ஆனார். அங்கு எடுபிடி வேலைகளை செய்து வந்த அவருக்கு என் ராசாவின் மனசிலே படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிக்க ராஜ்கிரண் வாய்ப்பு கொடுத்தார். அதன்பின் சின்னகவுண்டர் படத்தில் படம் முழுவதும் தனக்கு குடைபிடிக்கும் வேடத்தை அவருக்கு விஜயகாந்த் கொடுத்தார்.

    அதோடு மட்டுமில்லாமல் தொடர்ந்து விஜயகாந்த் நடித்த படங்களில் வடிவேலுவுக்கு சின்ன சின்ன வேடங்கள் கிடைத்தது. போட்டு கொள்வதற்கு சரியான உடை கூட இல்லாத வடிவேலுக்கு வேஷ்டி, சட்டைகளையும் விஜயகாந்த் வாங்கி கொடுத்தார். இப்படி வளர்ந்தவர்தான் வடிவேலு.

    இதையும் படிங்க: விஜயகாந்தை கடைசிவரை பார்க்க விடல!.. வசனகர்த்தா லியாகத் அலிகான் உருக்கம்…

    ஆனால், பின்னாளில் பெரிய காமெடி நடிகரானபின் விஜயகாந்தை அவர் மதிக்கவில்லை. அதோடு, அவரை அவன். இவன் என்றும் பேச துவங்கினார். ஒருமுறை அவரின் வீட்டின் விஜயகாந்தின் கட்சி தொண்டர்கள் காரை நிறுத்தி வைக்க, வடிவேலு அவர்களிடம் சண்டைக்கு போனார். அதில், கோபமடைந்த விஜயகாந்தின் ஆட்கள் வடிவேலு வீட்டில் கல்லெறிந்ததாக சொல்லப்படுகிறது.

    vadivelu

    இந்த சம்பவத்தை அடுத்து விஜயகாந்தை திட்டுவதற்காகவே திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போனார். அதில், விஜயகாந்த் மீது இருந்த மொத்த வன்மத்தையும் கக்கினார் வடிவேலு. ‘குடிகாரன்.. அவன்.. இவன்’ என மிகவும் கீழ்த்தரமாக விஜயகாந்தை விமர்சித்து பேசினார். ஆனால், அந்த தேர்தலில் விஜயகாந்தின் கட்சி பல இடங்களிலும் வெற்றி பெற்று சட்டசபையில் எதிர்கட்சி தலைவராகவும் விஜயகாந்த் மாறினார்.

    இதையும் படிங்க: நான் சாகுறதுதான் சரி!. பிரேமலதாவிடமே சொன்ன விஜயகாந்த்… இது எப்ப நடந்தது தெரியுமா?!..

    இப்போது விஜயகாந்தின் மரணத்திற்கு கூட வடிவேலு செல்லவில்லை. ஒரு இரங்கல் செய்தியை கூட அவர் வெளியிடவில்லை. கடந்த பல வருடங்களாகவே வடிவேலு மதுரையில் கூட்டு குடும்பமாகவே வசித்து வருகிறார். ஆனால், வீட்டுக்கு செல்லும் வழி குறுகலாக இருப்பதால் காரில் செல்லமுடியவில்லை. இதனால், அந்த தெருவில் வசிப்பவர்களோ அவருக்கு அடிக்கடி சண்டையும் வந்துள்ளது.

    எனவே, வேறு ஒரு இடத்தில் சுமார் 20 ஆயிரம் அடி நிலப்பரப்பில் ஒரு புதிய வீட்டை வடிவேலு கட்டி வருகிறார். இந்த வீட்டில் 20 அறைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. மகள்கள், மகன், பேரக்குழந்தைகள் என எல்லோரும் இந்த வீட்டில் வசிக்கவுள்ளனர்.

    இதையும் படிங்க: வடிவேலு மட்டும் மதுரை வந்தா வெட்டுறதுல தப்பே இல்ல… கொதித்தெழுந்த விஜயகாந்த் மேனேஜர்..

  • விஜயகாந்தை கடைசிவரை பார்க்க விடல!.. வசனகர்த்தா லியாகத் அலிகான் உருக்கம்…

    Vijayakanth: விஜயகாந்துடன் பல வருடங்களாக நெருக்கமாக இருந்தவர் லியாகத் அலிகான். மதுரையில் இருக்கும்போது விஜயகாந்துடன் பழகியவர் இவர். விஜயகாந்த் வளர துவங்கிய போது அவரின் ரசிகர் மன்றங்களை ஒழுங்குபடுத்தி அதை சரியான பாதையில் கொண்டு சென்றதில் இப்ராஹிம் ராவுத்தரோடு சேர்ந்து செயல்பட்டவர் இவர்தான். விஜயகாந்தை வைத்து பாட்டுக்கொரு தலைவன், ஏழை ஜாதி, எங்க முதலாளி ஆகிய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

    பூந்தோட்ட காவல்காரன், புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், மாநகர காவல், சக்கரை தேவன், கஜேந்திரா ஆகிய படங்களில் அனல் பறக்கும் அரசியல் வசனங்களை எழுதியவர். விஜயகாந்த் மறைந்துள்ள நிலையில் ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்தபோது சொன்னதாவது:

    இதையும் படிங்க: நான் சாகுறதுதான் சரி!. பிரேமலதாவிடமே சொன்ன விஜயகாந்த்… இது எப்ப நடந்தது தெரியுமா?!..

    விஜயகாந்தை எம்.ஜி.ஆரை போல கொண்டு வரவேண்டுமென்று பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் செய்தோம். அதில் வெற்றியும் பெற்றோம். ஆனால், அவருடன் நெருக்கமானவர்களை எல்லாம் பிரித்துவிட்டனர். முதலில் வெளியேறியது இப்ராஹிம் ராவுத்தர்தான். அவர்களாக பிரிந்தது பாதி.. பிரித்தது பாதிதான் என்று சொல்வேன்.

    vijayakanth

    விஜயகாந்தை அரசியலை நோக்கி செல்ல வைத்தது நாங்கள்தான். என்மீது அவருக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு. அவர் தேமுதிகவை துவங்கிய பின்னர் நான் அதிமுகவில் இணைந்தேன். அதில், அவருக்கு மிகுந்த வருத்தம். அண்ணன் தப்பு செய்துவிட்டார். அவர் என்னுடன் இருந்திருக்க வேண்டும் என எல்லோரிடமும் சொல்வார்.

    இதையும் படிங்க: விஜயகாந்த் தனது பிறந்தநாளை கொண்டாடியதே இதற்குத்தான்….46 வருட நண்பர் சொன்ன தகவல்…

    ஒருமுறை ஜிவி பிலிம்ஸ் தயாரிக்க, என்னுடைய இயக்கத்தில் அவர் ஒரு படத்தில் நடிக்கவும் வேலை நடந்தது. ஆனால், அதையும் தடுத்தார்கள். நான் அதிமுகவில் இருந்தபோது அவர் என்னை தொடர்பு கொள்ளவில்லை. நான் வேறு கட்சியில் இருந்ததால் அவர் தொடர்பு கொள்ளாமல் இருந்திருக்கலாம். நானும் அதனால்தான் அவரை சந்திக்கவில்லை. சந்திக்க விடவும் இல்லை.

    விஜயகாந்தை போல ஒரு நல்ல மனிதரை, மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவரை, தனக்கு கிடைக்கும் புகழை கூட மற்றவர்வர்களுக்கு விட்டு கொடுக்கும் ஒரு மனிதரை நான் பார்த்ததே இல்லை. இனிமேல் பார்க்கபோவடும் இல்லை என லியாகத் அலிகான் கூறியிருந்தார்.

    இதையும் படிங்க: விஜயகாந்த் சாப்பாடுதான போட்டு இருக்காருனு யோசிச்சீங்கனா இத படிங்க.. சிலிர்க்கும்!..

  • நான் சாகுறதுதான் சரி!. பிரேமலதாவிடமே சொன்ன விஜயகாந்த்… இது எப்ப நடந்தது தெரியுமா?!..

    Vijayakanth: கடந்த 28ம் தேதி தமிழகத்தில் எல்லோருக்கும் அதிர்ச்சியான செய்தியாக இருந்தது நடிகர் விஜயகாந்தின் மரணம்தான். தேமுதிக தொண்டர்களுக்கும், அவரின் ரசிகர்களுக்கும் அது பேரிடியாக இருந்தது. விஜயகாந்த் ஒரு நல்ல் மனிதர், இரக்க சுபாவம் உள்ளவர், எல்லோருக்கும் உதவி செய்யும் குணம் கொண்டவர் என்பதால்தான் பலரும் அவரின் இறப்புக்காக வருந்தினார்கள்.

    தனிநபராக மட்டுமில்லாமல் ஒரு நடிகராகவும், நடிகர் சங்க தலைவராகவும் விஜயகாந்த் செய்த விஷயங்கள் ஏராளம். அவர் நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்றதற்கு முன்பும் சரி, பின்பும் சரி நடிகர் சங்கம் என்னை நிலையில் இருந்தது, இருக்கிறது என்பது திரையுலகில் உள்ள எல்லோருக்கும் தெரியும்.

    இதையும் படிங்க: விஜயகாந்த் மறைவு.. அஜித் போன் பண்ணியே பேசல!.. அதெல்லாம் சுத்த பொய்.. உண்மையை போட்டு உடைத்த பிரபலம்!..

    உடல்நிலை சரியில்லாத காரணத்தில் கடந்த 8 வருடங்களுக்கும் மேல் அரசியல், சினிமா என இரண்டிலுமே அவர் ஆக்டிவாக இல்லை. அவர் சரியாக பேசுவதை கேட்டு கூட பல வருடங்கள் ஆகிறது. சினிமாவில் கணீர் குரலில் அவர் வசனம் பேசும் ஸ்டைலை ரசித்த மக்கள் பேசமுடியாமல் இருக்கும் அவரை பார்க்க முடியாமல் மனம் வருந்தினார்கள்.

    ஏ.ஆர்,முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம்தான் ரமணா. இந்த படத்தின் கதையை சொல்ல முருகதாஸ் விஜயகாந்தின் வீட்டுக்கு போனபோது ‘ஹீரோ குடிப்பது போலவோ, புகை பிடிப்பது போலவோ காட்சிகள் இருக்க கூடாது. பசங்களுக்கு அப்பாவாக நடிக்கமாட்டார்.. படத்தின் கிளைமேக்ஸில் அவர் இறக்க கூடாது’ என பல கண்டிஷன்களை போட்டிருக்கிறார்கள்.

    vijayakanth

    ஆனாலும், படத்தின் இறுதியில் ஹீரோ இறப்பது போலவே முருகதாஸ் கதையை சொல்லியிருக்கிறார். அருகில் இருந்த பிரேமலதா ‘ஹீரோ கண்டிப்பாக சாக வேண்டுமா?’ என கேட்டிருக்கிறார். அப்போது ‘இந்த கதைக்கு அதுதான் சரி’ என தெளிவாக, அழுத்தமாக சொல்லியிருக்கிறார் விஜயகாந்த்.

    ‘என்னுடைய மரணமும் தப்பு செய்பவர்களுக்கு ஒரு பயத்தை உண்டாக்கணும்’ என ரமணா படத்தின் இறுதியில் வசனம் பேசியிருப்பார் விஜயகாந்த். ஆனால், நிஜ வாழ்வில் அவரின் மரணம் எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டு போயிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

    இதையும் படிங்க: விஜயகாந்துக்கு நடந்த அந்த ஆபரேஷன்தான் காரணம்!.. முதன் முறையாக வாய் திறக்கும் பார்த்த சாரதி..