Author: சிவா

  • Thalaivar 173: கதையை மாற்ற சொன்ன ரஜினி!.. சிபி சக்ரவர்த்தி விலகியதன் பின்னணி!..

    Thalaivar 173: கதையை மாற்ற சொன்ன ரஜினி!.. சிபி சக்ரவர்த்தி விலகியதன் பின்னணி!..

    ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடிக்கவுள்ள புதிய படத்திலிருந்து சுந்தர்.சி விலகிய நிலையில் டான் படத்தை இயக்கிய சிபிச் சக்கரவர்த்தி இயக்கப் போகிறார் என்கிற செய்தி சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கிய ஒரு இளம் இயக்குனருக்கு ரஜினி எப்படி வாய்ப்பு கொடுத்தார் என திரையுலகமே ஆச்சர்யப்பட்டது. ஆனால் ரஜினி டிரெண்டிங்கில் இருக்கும் இளம் இயக்குனர்களிடம் பயணிக்க விரும்புகிறார் என சொல்லப்பட்டது..

    திடீரென இந்த படத்திலிருந்து சிபி சக்ரவர்த்தி விலகி விட்டதாக இன்று காலை முதலே செய்திகள் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில்தான், இதற்கான பின்னணி வெளியே தெரிய வந்திருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. டான் படத்திற்கு பின் மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கத்தை திட்டமிட்டார் சிபி சக்கரவர்த்தி. ஆனால் அது நடக்காமல் போகவே தெலுங்கு நடிகர் நானியை வைத்து ஒரு படத்தை இயக்குவது முடிவானது.

    அது தொடர்பான பணிகள் நடந்து வந்த நிலையில் அந்த படத்தின் தயாரிப்பாளர் சிபிச் சக்கரவர்த்தியிடம் கதையை மாற்றுங்கள்.. அதை மாற்றுங்கள்.. இதை மாற்றங்கள் என்று சொல்லி அழுத்தம் கொடுத்த தயாரிப்பாளர் ஒரு கட்டத்தில் கதையை மட்டும் வைத்துக்கொண்டு சிபி சக்கரவர்த்தியை வெளியேற்ற முடிவெடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதை தெரிந்து கொண்ட பின்னரே சிபி சக்கரவர்த்தி அந்த படத்திலிருந்து வெளியேறியிருக்கிறார்..

    தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் புதிய படத்தை இயக்க சிபி சக்கரவர்த்தி கமிட் ஆனதும் ‘உங்களுக்காக இவ்வளவு செலவு செய்திருக்கிறோம்.. அதற்காக ரஜினி படத்தின் தயாரிப்பில் எங்களையும் இணைக்க சொல்லுங்கள்’ என்று அந்த தெலுங்கு தயாரிப்பாளர் சிபி சக்ரவர்த்திக்கு அழுத்தம் கொடுத்தாராம். ஆனால் ராஜ்கம்ல் பிலிம்ஸ் அதை ஏற்கவில்லை. இதையடுத்தே சிபி சக்கரவர்த்தி இந்த படத்திலிருந்து விலகியதாக ஒரு காரணம் சொல்லப்படுகிறது..

    மற்றொன்று ரஜினி ஒரு காரணமாக இருந்திருக்கிறார் என்கிறார்கள்.. அதாவது கூலி படத்திற்கு பின் ஆக்சன் படம் வேண்டாம் என முடிவெடுத்ததால்தான் சிபி சக்ரவர்த்தி சொன்ன கதையை ரஜினி டிக் அடித்தார். ஆனால், சமீபத்தில் சிபி சக்கரவர்த்தியை அழைத்த ரஜினி ‘கதைப்படி நான் ஒரு உளவாளி.. என்னிடம் ரசிகர்கள் இதையெல்லாம் எதிர்பார்ப்பார்கள்.. எனவே துரந்தர் 2 படத்தில் வருவது போல ஒரு பெரிய ரேஞ்சுக்கு படத்தை செய்தால் என்ன’ என்று கேட்க சிபி சக்கரவர்த்தி ஆடிப் போய்விட்டாராம்.

    ‘சார்.. மொத்த கதையையும் எழுதி முடித்து விட்டேன்.. இனிமேல் என்னால் கதையை மாற்ற முடியாது’ என சிபி சக்ரவர்த்தி சொல்லவே அவரை தூக்கி விட்டு அஸ்வத் மாரிமுத்துவை ரஜினி உள்ளே கொண்டுவந்ததாக சொல்லப்படுகிறது.

  • Thalaivar 173: சுந்தர்.சியை தொடர்ந்து சிபியும் விலகல்?!.. ரஜினி படத்தை இயக்குவது அவரா?..

    Thalaivar 173: சுந்தர்.சியை தொடர்ந்து சிபியும் விலகல்?!.. ரஜினி படத்தை இயக்குவது அவரா?..

    கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க ரஜினிகாந்த் நடிக்கும் அவரின் 173வது திரைப்படத்தை சுந்தர்.சி இயக்குகிறார் என சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது..

    ஆனால் திடீரென அந்த படத்திலிருந்து சுந்தர்.சி விலகினார். அதன் பின் சிபிச் சக்கரவர்த்தி, ராம்குமார் பாலகிருஷ்ணன், அஸ்வத் மாரிமுத்து, ஆர்.ஜே பாலாஜி உள்ளிட்ட சில இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டார் ரஜினி. இறுதியில் சிபிச் சக்கரவர்த்தி ஓகே செய்யப்பட்டார்.. அதோடு ரஜினியின் புதிய படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குவதை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது..

    இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என ரஜினியும் செய்தியாளர்களிடம் தொடர்ந்து சொல்லி வந்தார். திடீரென இந்த படத்திலிருந்து சிபி சக்ரவர்த்தி வெளியேறிவிட்டதாகவும் அவருக்கு பதில் டிராகன் படத்தை இயக்கிய அஸ்வர் மாரிமுத்து இயக்கப்போவதாகவும் செய்திகள் கசிந்திருக்கிறது.

    சினிமா பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு பிஸ்மி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். ரஜினி 173-வது படத்திலிருந்து இதுவரை இரண்டு இயக்குனர்கள் விலகி விட்டது பேசுபொருளாக மாறியிருக்கிறது. சிபிச்சக்ரவரத்தி என்ன காரணத்திற்காக இந்த் படத்திலிருந்து விலகியிருக்கிறார் என்பது விரைவில் தெரிந்துவிடும்.

  • வசூல் சாதனை செய்த துரந்தர் 2!.. 24 நாட்களில் செய்த மொத்த கலெக்‌ஷன்!…

    வசூல் சாதனை செய்த துரந்தர் 2!.. 24 நாட்களில் செய்த மொத்த கலெக்‌ஷன்!…

    துரந்தர் படத்தின் முதல் பாகம் 2025ஆம் வருடம் வெளியானது. இந்த படத்தை ஆதித்யா தார் இயக்கியிருந்தார். மேலும் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சாரா அர்ஜுன் நடித்திருந்தார்.

    மேலும் இந்த படத்தில் மாதவன், சஞ்சய் தத், அக்சய் கண்ணா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று 100 கோடி வரை வசூல் செய்தது. இந்நிலையில்தான் துரந்தர் 2 திரைப்படம் துரந்தர் 2 தி ரிவென்ச் என்கிற பெயரில் கடந்த மார்ச் 19ம் தேதி உலகமெங்கும் வெளியானது.

    படத்தின் ஹீரோ பாகிஸ்தானில் பிச்சைக்காரன் போல இருந்து இந்தியாவுக்கு உளவாளி வேலை பார்ப்பது போல படத்தை உருவாக்கியிருந்தனர். இந்த படமும் இந்திய ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது.

    படம் வெளியாகி 24 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் உலகம் முழுவதும் துரந்தர் 2 திரைப்பம் 1711.98 கோடியை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. அதிலும் இந்தியாவில் மட்டும் 1297.48 கோடி வசூல் செய்திருக்கிறது. அதோடு சீனா மற்றும் வளைகுடா நாடுகளின் பங்களிப்பின்றி அதிக வசூலை அள்ளிய முதல் இந்திய திரைப்படம் என்கிற பெருமையும் துரந்தர் 2 படத்திற்கு கிடைத்திருக்கிறது. இந்த வெற்றியை படக்குழு கொண்டாடி வருகிறது.

  • புலன் விசாரணை படத்தில் நடிக்க தயங்கிய அந்த நடிகர்!.. விஜயகாந்துக்கு சூப்பர் ஹிட்!..

    புலன் விசாரணை படத்தில் நடிக்க தயங்கிய அந்த நடிகர்!.. விஜயகாந்துக்கு சூப்பர் ஹிட்!..

    விஜயகாந்தும், அவரின் நண்பர் இப்ராஹீம் ராவுத்தோரோடு இணைந்து தயாரித்து நடித்த திரைப்படம்தான் புலன் விசாரணை. அப்போது சென்னை திரைப்பட கல்லூரியில் இயக்கம் பற்றி படித்த சில மாணவர்கள் இயக்குனராக கோலிவுட்டில் அறிமுகமானார்கள். அப்படி வந்த ஆர்.கே. செல்வமணிதான் இந்த படத்தை இயக்கியிருந்தார்.

    முதலில் ஆர்.கே செல்வமனி மீது விஜயகாந்த்துக்கும், இப்ராஹிம் ராவுத்தருக்கும் நம்பிக்கை இல்லை.. ஆனாலும் அவர் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தை உருவாக்க ஒப்புக்கொண்டனர். ஒரு கட்டத்தில் பட்ஜெட் அதிகமாகவே ஆர்.கே.செல்வமணியிடம் இப்ராஹிம் ராவுத்தர் கோபப்பட்ட சம்பவமெல்லாம் நடந்தது..

    இந்த படத்தில் சரத்குமார் வில்லனாக நடித்திருந்தார்.. தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஆட்டோ சங்கரின் வாழ்க்கை நடந்த சில சம்பவங்களை அடிப்படையாக வைத்து படத்தை ஆர்.கே செல்வமணி இப்படத்தை உருவாக்கியிருந்தார். 199ம் வருடம் வெளியான இந்த படம் ஹாலிவுட் பட ஸ்டைலில் இருந்ததாலும், பக்கா ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றிருந்ததாலும் இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது . இந்த படம் ஹிட் என்பதால் விஜயகாந்த்தின் 100வது படத்தை இயக்கும் வாய்க்கும் வாய்ப்பு ஆர்.கே. செல்வமணிக்கு கிடைத்தது. அப்படித்தான் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் உருவானது..

    ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்கவிருந்தது சத்யராஜ் என்பது பலருக்கும் தெரியாது. இது தொடர்பாக ஊடகம் ஒன்றில் பேசிய சத்யராஜ் ‘மணிவண்னனிடம் ஆர்கே செல்வமணி உதவி இயக்குனராக வேலை செய்தபோதே எனக்கு தெரியும்.. அப்போது புலன் விசாரணை கதையை என்னிடம் கூறினார்.. ஆனால் அவருக்கு அனுபவம் இல்லாததால் இந்த கதையை அவர் சரியாக எடுப்பாரா என்கிற சந்தேகம் எனக்கு இருந்ததால் அப்படத்தில் நடிக்க யோசித்தேன்.. ஆனால் விஜயகாந்துக்கு அது சூப்பர் ஹிட் படமாக அமைந்தது’ என சொல்லியிருக்கிறார்.

  • நடிகர்கள் பின்னால் போகாதீங்க!.. விஜயை மறைமுகமாக அட்டாக் பண்ணிய ரஜினி!..

    நடிகர்கள் பின்னால் போகாதீங்க!.. விஜயை மறைமுகமாக அட்டாக் பண்ணிய ரஜினி!..

    ஜெயிலர் பட விழாவில் ரஜினி எப்போது காக்கா – கழுகு கதையை சொன்னாரோ அப்போது முதலே விஜய் ரசிகர்கள் ரஜினியை திட்ட துவங்கினார்கள். ஏனெனில் ‘கழுகு மேலே பறந்துகொண்டிருக்கும். அதைப் பார்த்து நாமும் மேலே பறக்க வேண்டும் என்று காக்காவும் மேலே பறக்க முயற்சி செய்யும்.. ஆனால் காக்காவால் அது முடியாது.. கீழே விழுந்துவிடும்’ என்று பேசினார் ரஜினி.

    ரஜினி காக்கா என சொன்னது விஜயைத்தான் என நினைத்த விஜய் ரசிகர்கள் ரஜினியை கடுமையாக திட்ட துவங்கினார்கள்.. அதோடு ஒவ்வொரு முறையும் ரஜினியின் படம் வெளியாகும் போதும் அந்த படத்திற்கு எதிரான நெகட்டிவ் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். இப்படி செய்ய வேண்டாம்..இது தவறு என விஜய் ஒருமுறை கூட தனது ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லவில்லை என்பதுதான் இதில் ஹைலைட்..

    ஒருபக்கம் அரசியலுக்கு வருகிறேன் என சொல்லிவிட்டு ரஜினி பின்வாங்கிய நிலையில் விஜய் அரசியலுக்கு வந்து விட்டார். தற்போது அவரின் தவெக சட்டமன்ற தேர்தலையும் சந்திக்கவிருக்கிறது. இந்நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி ‘இளைஞர்களின் சிந்தனை படிப்பின் மீது மட்டுமே இருக்கவேண்டும். படிப்பில் கவனம் செலுத்துங்கள்.. நடிகர்கள் பின்னாள் செல்லாதீர்கள்.. அவர்களின் பின்னால் சென்று உங்களுக்கு காயம் ஏற்பட்டால் யாரும் உதவ மாட்டார்கள்.. அது உங்களுக்குத்தான் ஆபத்து. படிக்கும் நேரத்தில் படிக்காவிட்டால் காலம் முழுக்க கஷ்டப்படவேண்டும்.. போதைப்பொருட்கள் பழக்கம் கொண்ட நண்பர்களிடமிருந்து விலகியிருங்கள்’ என்று ரஜினி அறிவுரை சொல்லியிருக்கிறார்..

    நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியுள்ள தவெக தலைவர் விஜய் ஒவ்வொரு முறையும் வெளியே வரும்போதும் அவரின் வாகனத்திற்கு முன்னும் பின்னும் இரு பக்கத்திலும் விஜய் ரசிகர்களும், தவெகவினரும் இரு சக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்கிறார்கள்.. எப்படியாவது விஜயை அருகில் பார்க்க வேண்டும், ஒரு செல்பி எடுக்க வேண்டும் என அவர்கள் ஆபத்தான முறையில் செயல்படுவதை பார்கும் போது பதறுகிறது..

    ஏற்கனவே ஒருவர் தஞ்சாவூரில் விபத்தில் சிக்கி ஒரு கல்லூரி மாணவர் மரணமடைந்தார்.. மேலும், பல பேரும் கீழே விழுகிறார்கள். இன்று விஜய் நெல்லை வந்தபோதும் இது நடந்தது. இந்நிலையில்தான், ரஜினி இளைஞர்களுகு இப்படி ஒரு அறிவுரையை கூறியிருக்கிறார்.

  • வில்லனா நடிக்கணும்னா இவ்ளோ கோடி சம்பளம்!. தயாரிப்பாளரை ஓடவிட்ட விஜய் சேதுபதி!..

    வில்லனா நடிக்கணும்னா இவ்ளோ கோடி சம்பளம்!. தயாரிப்பாளரை ஓடவிட்ட விஜய் சேதுபதி!..

    தமிழில் பல திரைப்படங்களில் நடித்தவர் விஜய் சேதுபதி. துவக்கத்திலிருந்தே ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்காமல் கதாபாத்திரம் நன்றாக இருந்தால் எப்படிப்பட்ட வேடமாக இருந்தாலும் நடித்ததுதான் இவரின் பிளஸ். இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பன்ச் டயலாக் பேசி ஹீரோயிசம் காட்டும் நடிகர்களை ஒப்பிடும்போது விஜய் சேதுபதி வேறுமாதிரி தெரிந்தார். அதனாலேயே ரசிகர்களுக்கு அவரை பிடித்துப்போனது.

    ஒருகட்டத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடிக்க துவங்கினார். அப்படி அவர் நடித்து வெளியான மாஸ்டர், விக்ரம், ஜவான் போன்ற திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. எனவே, வில்லன் வேடமும் அவரை தேடி வருகிறது. விஜய் சேதுபதி தற்போது 15 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

    வில்லன் வேடம் என்றால் கொஞ்சம் அதிகமாகவே கேட்கிறாராம். இந்நிலையில், விஜயை வைத்து வாரிசு படத்தை இயக்கிய தில் ராஜு தயாரிப்பில் விஜய தேவரகொண்டா நடிக்கவுள்ள புதிய படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியை அணுகியிருக்கிறார்கள்.

    அவரோ 20 கோடி சம்பளம் கேட்க தில் ராஜு ஆடிப்போய்விட்டாராம். எனவே, அந்த வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா அல்லது அரவிந்த்சாமி இருவரில் யாரேனும் ஒருவரை நடிக்கவைக்கலாம் என முடிவெடுத்து அவர்களிடம் பேசி வருகிறார்களாம்.

  • அரசன் படம் டிராப்பா?.. சிம்புவுக்கு பதில் வேறு நடிகரா?!.. நடப்பது என்ன?…

    அரசன் படம் டிராப்பா?.. சிம்புவுக்கு பதில் வேறு நடிகரா?!.. நடப்பது என்ன?…

    சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். அவர் ஒரு படத்தில் நடித்தால் அந்த படத்திற்கு கண்டிப்பாக பிரச்சினை வரும். பெரும்பாலும் சிம்புவால்தான் அது நடக்கும். அதாவது சிம்புவுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் ஏழாம் பொருத்தம்தான். சிம்பு எப்போதும் தயாரிப்பாளர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள மாட்டார்.

    அதாவது உங்கள் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கிறேன் என சொல்லி சில கோடிகள் அட்வான்ஸ் வாங்கி வாயில் போட்டுக்கொள்வார். ஆனால் நடித்துக் கொடுக்க மாட்டார். அதனால் கோபமடையும் அந்த தயாரிப்பாளர் தயாரிப்பாளர் சங்கம் மூலம் சிம்பு நடிக்கும் படத்திற்கு பிரச்சினை கொடுப்பார்.. இதனால் அந்த படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்படும்.. இதுதான் தற்போது அரசன் படத்திலும் நடந்திருக்கிறது..

    கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்க சிம்பு நடிப்பில் அரசன் படம் சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. தயாரிப்பாளர் ஐசரி கணேசிடம் மூன்று படங்களில் நடித்துக் கொடுப்பதாக சொல்லி சில கோடிகள் அட்வான்ஸ் வாங்கினார் சிம்பு. ஆனால் ஒரு படம் மட்டும் நடித்துவிட்டு விலகிக் கொண்டார். 2வது படத்திற்காக சில கோடி செலவு செய்து போட்ட செட் எல்லாம் வீணாய்ப்போனது.

    எனவே சிம்பு வாங்கிய பணம், அதற்கான வட்டி, செட் அமைத்ததால் வந்த நஷ்டம் என சிம்பு 10 கோடி வரை இழப்பீடு கொடுக்க வேண்டும் என ஐசரி கணேஷ் கேட்கிறார். ஆனால் சிம்பு அவ்வளவு என்னால கொடுக்க முடியாது என்கிறார். இதுதான் பஞ்சாயத்து. ஐசரி கணேஷை எப்படியாவது சமாளித்து படத்தை எடுத்துவிடலாம் என கலைப்புலி தாணு நினைத்தார். ஆனால், அது நடக்காமல் போனதோடு நிலைமை கை மீறி சென்றுவிட்டது.

    ken karunas

    இதையடுத்து தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் மூலம் காய்களை நகர்த்தி அரசன் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டார் ஐசரி கணேஷ். சிம்புவின் நடவடிக்கைகளால் கடுப்பான வெற்றிமாறன் கதையையும், செட்டையும் மாற்றி யூத் படத்தில் நடித்த கென் கருணாஸை வைத்து படமெடுக்கலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

    ஏனெனில் சிம்பு பிரச்சனை எப்போது தீரும் என சொல்ல முடியாது. வடசென்னை படத்தில் வரும் அமீரின் ராஜன் கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்துதான் அரசன் படத்தின் கதையை வெற்றிமாறன் எழுதியிருந்தார். ஆனால் தற்போது சிம்புவால் பிரச்சினை வந்ததால் அதையும் மாற்றி கென் கருணாஸை வைத்து இந்த படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என தெரிகிறது. அதேநேரம் சிம்புவின் பிரச்சினை முடிவுக்கு வந்தால் கதையில் மாற்றங்களை சிம்புவை மீண்டும் வெற்றிமாறன் உள்ளே கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • 6 காதல் பண்ணியும் காயத்தில் முடிந்தது!. இனிமே சிங்கிள்தான்!.. ஸ்ருதிஹாசன் ஃபீலிங்!…

    6 காதல் பண்ணியும் காயத்தில் முடிந்தது!. இனிமே சிங்கிள்தான்!.. ஸ்ருதிஹாசன் ஃபீலிங்!…

    நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இசையில் ஆர்வம் கொண்டவர்.. லண்டனில் சென்று மேற்கத்திய இசை பயின்றவர். உன்னைபோல் ஒருவன் உள்ளிட்ட சில படங்களுக்கு இசையும் அமைத்திருக்கிறார். நிறைய படங்களில் பாடல்களை பாடியிருக்கிறார். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த ஏழாம் அறிவு திரைப்படம் மூலம் இவர் சினிமாவில் நடிக்க தொடங்கினார். அதன்பின் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தார் ஸ்ருதிஹாசன். ஆனால் கடந்த பல வருடங்களாகவே சினிமாவில் நடிப்பது ஸ்ருதிஹாசன் நிறுத்திவிட்டார்..

    ஒருபக்கம் தனது வாழ்வில் பல காதல்களை கடந்து வந்திருக்கிறார் ஸ்ருதிஹாசன். நடிகர் சித்தார்த்தோடு இவர் கிசுகிசுக்கப்பட்டார். அதன் பின் லண்டனை சேர்ந்த பாடகர் மைக்கேல் கோர்சேல் என்பவரை காதலித்தார்.. சில வருடங்களில் அது பிரேக் அப் ஆனது. அதன்பின் மும்பையில் வசித்து வரும் சாந்தனு ஹசாரிக்கா என்கிற ஓவியரை காதலித்தார்.. இருவரும் லிவிங் டூ கெதரில் சில வருடங்கள் இருந்தார்கள்.. காதலுடன் இருக்கும் பல புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வந்தார் ஸ்ருதி.

    இந்நிலையில்தான் ஊடகம் ஒன்றில் பேசிய ஸ்ருதிஹாசன் ‘நான் இதுவரை ஆறு முறை ஆழமாக காதலித்திருக்கிறேன்.. ஆனால் ஆறு முறை காதலும் கதைகளாக அல்லாமல் காயங்களாகவே முடிந்தது.. ஒவ்வொரு பிரிவும் என்னை வேறுபட்டவளாக மாற்றியது.. இப்போது அமைதியை தேர்வு செய்கிறேன்.. இப்போதைக்கு தனியாக இருக்க தீர்மானித்திருக்கிறேன்’ என சொல்லியிருக்கிறார்.

  • தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

    தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

    தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன். அந்த படத்தில் ஒரு சின்ன வேடத்தில் விக்னேஷ் சிவன் நடித்தும் இருந்தார். அதன்பின் விக்னேஷ் சிவன் சிம்புவை வைத்து போடா போடி என்கிற திரைப்படத்தை இயக்கி கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் ஓடவில்லை. ஆனாலும் அவர் மீது நம்பிக்கை வைத்து தனது சொந்த தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாராவை வைத்து நானும் ரவுடிதான் படத்தை இயக்கும் வாய்ப்பை அவருக்கு கொடுத்தார் தனுஷ்..

    ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாராவுடன் ரொமான்ஸ் செய்து கொண்டு சொன்ன பட்ஜெட்டை விட அதிக செலவு செய்ததால் கடுப்பான தனுஷ் இதற்கு மேல் என்னால் பணம் கொடுக்க முடியாது என மறுத்துவிட்டார். எனவே, தனது காதலனுக்காக நயன்தாரா தனது சொந்த காசை போட்டு படத்தை முடிக்க உதவி செய்தார்.. அப்படி உருவானதுதான் ரவுடி பிக்சர்ஸ்.

    அந்த படம் வெற்றி என்றாலும் தனுஷ் விக்னேஷ் சிவனையோ, நயன்தாராவையோ சந்திக்கவே இல்லை. அவர்களுடனான நட்பையும் அவர் முறித்துக்கொண்டார். அதோடு நயன்தாரா தனது திருமண வீடியோவை நெட்பிலிக்ஸுக்கு விற்றபோது அதில் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவர்கள் சேர்க்க அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் தனுஷ். இதனால் கோபமடைந்த நயன்தாரா தனுஷை திட்டி ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டார். ஆனால், தனுஷ் அமைதியாக இருந்தார்.

    அப்போது தனுசுக்கு எதிராக சில கருத்துக்களை விக்னேஷ் சிவனும் பேசினார். இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த விக்னேஷ் சிவன் ‘எனக்கு தனுஷ் சாரை மிகவும் பிடிக்கும்.. வேலையில்லா பட்டதாரி படம் உருவானபோது இரண்டரை வருடங்கள் நான் அவருடன்தான் இருந்தேன்..

    அவர் சாப்பிட்டால்தான் நான் சாப்பிடுவேன்.. அப்படி ஒரு அன்பு எங்களுக்குள் இருந்தது.. தனுஷ் சாரின் பிறந்தநாளான ஜூலை 28ம் தேதிதான் என் அப்பா இறந்தார். எனவே, தனுஷை என் அப்பாவை போல நான் கருதுகிறேன். ஆனால் சில விஷயங்கள் நம் கையை மீறி நடக்கிறது. சூழ்நிலை அப்படி இருந்தது.. சில தவறுகள் நடந்தது.. அவரின் நட்பை இழந்ததை பெரிய இழப்பாக நினைக்கிறேன்’ என பீல் பண்ணி பேசியிருருக்கிறார்.

  • வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

    வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

    மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படம் மூலம் நடிக்க துவங்கினார். முதல் படத்திலேயே சூர்யாவுடன் ஜோடி போட்டு நடிக்க, தொடர்ந்து பல படங்களிலும் இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்க துவங்கினார்கள்.

    காக்க காக்க, சில்லுன்னு ஒரு காதல், மாயாவி, பேரழகன், உயிரிலே கலந்தது உள்ளிட்ட பல படங்களிலும் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்தனர். என்வே, இருவருக்குள்ளும் இடையே காதல் மலர்ந்தது. ரஜினி,கமல், சிம்பு உள்ளிட்ட பலருடனும் ஜோதிகா நடித்தார். ஒருகட்டத்தில் சினிமாவிலிருந்து விலகி சூர்யாவை திருமணமும் செய்து கொண்டார்.

    ஒரு மகள், ஒரு மகன் என அழகான குடும்பம். திருமணத்திற்கு பின்னர் நல்ல கதாபாத்திரம் என்றால் மட்டுமே நடித்துவருகிறார். சினிமாவில் தொடர்ந்து நடிப்பதில்லை என்றாலும் ஜோதிகா தனது உடலை ஃபிட்டாக வைத்திருக்கிறார். தினமும் ஜிம்முக்கு செல்கிறார். தற்போது சூர்யாவும், ஜோதிகவும் மும்பையில் தங்கியிருக்கிறார்கள். அங்கேயே வீடு வாங்கி செட்டிலாகிவிட்டார் சூர்யா.

    இந்நிலையில், ஜிம்மில் தான் வெறித்தனமாக வொர்க் அவுட் பண்ணும் வீடியோவை ஜோதிகா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.