Author: sankaran v

  • பாக்கியராஜ் ஒரு திரைக்கதை மன்னன்… சூப்பர் மேட்சான கிளைமாக்ஸ் சீனைப் பாருங்க…!

    பாக்கியராஜ் ஒரு திரைக்கதை மன்னன்… சூப்பர் மேட்சான கிளைமாக்ஸ் சீனைப் பாருங்க…!

    இந்தியா முழுவதும் உள்ள பல திரைக்கலைஞர்களால் ‘திரைக்கதை மன்னன்’ என்று இன்று வரை போற்றப்பட்டுக் கொண்டிருப்பவர் தான் கே.பாக்கியராஜ். அவருக்கு அப்படி ஒரு பட்டம் கிடைத்தது என்றால் அதற்கு அவர் எந்தளவுக்கு தகுதியானவர் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் தான் இது.

    கே.பாக்கியராஜ் இயக்கத்தில் உருவானது அந்த 7 நாள்கள். இதன் கதை எல்லாருக்குமே தெரிந்தது தான். அந்தப் படத்தின் உச்சபட்ச காட்சியைப் படமாக்கும்போது பாக்கியராஜூக்கே சிறிது குழப்பம் ஏற்பட்டது. அவரது குருநாதர் பாரதிராஜா உள்பட பலபேருக்கிட்ட அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியைப் பற்றி கலந்து பேசிட்டுத்தான் அந்தப் படத்தின் உச்சபட்ச காட்சியை எடுத்தார்.

    கிளைமாக்ஸில் பாக்கியராஜைக் காதலிக்கும் அம்பிகா சந்தர்ப்ப சூழ்நிலையால ராஜேஷைத் திருமணம் செய்து கொள்ளக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. அப்படிப்பட்ட சூழலில் அவரோடு வாழப்பிடிக்காமல் விஷம் குடித்து விடுகிறார். இப்போது கணவருக்கு மனைவியின் காதல் விவகாரம் தெரிகிறது.

    அதனால காதலனை அழைத்துக் கொண்டு அந்தக் காதலன்கிட்ட தன்னோட மனைவியை ஒப்படைக்கிறார். அப்போது பாக்கியராஜ் அந்தப் பெண்ணைப் பார்த்து அவர் கட்டுன தாலியைக் கழட்டிட்டு எங்கூட வர முடியுமான்னு கேட்கிறார். அப்போ தான் அந்தப் பெண்ணுக்குத் தாலியின் மகிமை தெரிகிறது. அதைக் கழட்டிவிட்டு வர முடியாமல் தடுமாறுகிறாள். அப்போ நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழறதுதான் சரி. நாம காதலிச்சோம்கறது எல்லாம் வேற விஷயம். இப்போது உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது.

    அந்தப் பந்தத்தை சீர்குலைத்து விடாதே என அந்தப் பெண்ணுக்கு அறிவுரை கூறுகிறார் பாக்கியராஜ். இப்படிப்பட்ட கிளைமாக்ஸோடு வந்த அந்த 7 நாள்கள் மாபெரும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து வந்த பாக்கியராஜின் மனைவியான பிரவீனா, பாக்கியராஜிக்கிட்ட என்ன இருந்தாலும் அந்தப் படத்துல அவங்க ரெண்டு பேரையும் கடைசியில சேர்த்து வச்சீங்களே. அது தப்பு. இந்தப் பெண்ணை நீங்க கையோடு கூட்டிட்டு வந்துருக்கணும். அவரோட வாழப் பிடிக்காமல் தான அந்தப் பெண் விஷத்தைக் குடிச்சாள். அப்படிப்பட்ட பெண்ணை திரும்ப அவரு கூடவே வாழ வைக்கிறதுல என்ன நியாயம்? அந்தப் பெண்ணோட தாம்பத்யம் நடத்தும்போது இந்தப் பெண் ஏற்கனவே ஒருவரை காதலிச்சவருதான. அதனால தான விஷம் குடித்தாள் என்ற நினைப்பு உருத்திக்கிட்டே தானே இருக்கும் என்று பாக்கியராஜிடம் கேட்டாள் பிரவீனா.

    அப்படி அவர் கேட்டபோது அவரது வாதம் சரியாக இருப்பது போல பாக்கியராஜூக்கு முதலில் தோன்றினாலும், சிறிது நேரம் சிந்தித்து விட்டு பிரவீனாவுக்கு அழகான ஒரு பதிலைச் சொன்னார் பாக்கியராஜ். நீ சொல்றது சரியான வாதம்தான். ஒரு தனிமனித கண்ணோட்டத்துடன் பார்க்கும்போது அதுதான் சரியானது. எங்கோ ஒரு குடும்பத்தில் இப்படி ஒரு பிரச்சனை நடந்தா காதும் காதும் வச்ச மாதிரி அவங்க ரெண்டு பேரையும் பிரிச்சி விடுறதுதான் ரெண்டு பேருக்கும் நல்லது. ஆனா சினிமாவிலோ, பத்திரிகையிலோ ஒரு சேதியைச் சொல்லும் போது, எடுத்தேன். கவிழ்த்தேன்னு சொல்லிட முடியாது. அதுக்கு ஒரு சந்தோஷம் வேணும்.

    சமூகப் பார்வை வேணும். ஏன்னா நாம சினிமாவுல சொல்லக்கூடிய விஷயம் இருக்கே. அது பல பேரோட வாழ்க்கையில தாக்கத்தை ஏற்படுத்தும். சில குறைகள் இருந்தாலும் எல்லோருக்கும் நல்லது அப்படின்னு நம்முடைய பெரியவர்கள் சிலர் சில சமூகக் கட்டுப்பாடுகளை வைத்துள்ளனர். அதுக்கு நாம மதிப்பு கொடுக்கணும். அதில் சில தனிமனித மீறல்கள் வரலாம். கோபங்கள் வரலாம். அதுக்காக ஒட்டுமொத்த சமூகப்பார்வையை புறக்கணிக்க முடியாது. மனதுக்கு விருப்பமானவரோடு வாழ அனுமதிக்கக்கூடாது. அப்படி வாழ அனுமதிச்சிட்டோம்னா கல்யாணம் அப்படிங்கற அமைப்பே சீர்குலைஞ்சிப் போயிடாதா? நம்ம மனசைப் பொருத்தவரைக்கும் அது ஒரு குரங்கு அப்படின்னுதான் சொல்லணும்.

    சில காலம் உன்னையே நினைச்சிக்கிட்டு இருக்கும். அதுக்குப் பின்னால அது தன்னையே மாத்திக்கும். அதனால எதையும் சமூகக் கண்ணோட்டத்தோடு பார்க்கணும் அப்படின்னு தன்னோட மனைவி பிரவீனாவுக்கு அறிவுரை கூறினார் பாக்கியராஜ். அவர் ஒரு சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்பதற்கு இதே போல பல சம்பவங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

  • அந்த விஷயத்துல ராஜாதேசிங்கு ஓடல… ஆனா மதுரை வீரன் டாப்… இதுதான் காரணமா?

    அந்த விஷயத்துல ராஜாதேசிங்கு ஓடல… ஆனா மதுரை வீரன் டாப்… இதுதான் காரணமா?

    பொதுவாக திரையுலகில் பாடுவாங்க. ஆனா ஆடத் தெரியாது. நல்லா நடிப்பாங்க. ஆனா சண்டைக்காட்சிகள் வராது. நல்லா சண்டை போட்டா சோகக் காட்சிகள் வராது. ஆனா எல்லாம் தெரிந்து எடிட்டிங், தொழில்நுட்பம் எல்லாம் தெரிந்தவங்க இருக்காங்களான்னு கேட்டா அந்தக் காலத்துல புரட்சித்தலைவர் எம்ஜிஆர். தியாகராஜபாகவதர் நல்லா பாடுவாங்க.

    ஆனா ஆடத் தெரியாது. பியு.சின்னப்பா எல்லாம் தெரிந்தவர். ஆனா அவருக்கு தொழில்நுட்பம் தெரியாது. எம்ஜிஆர் சதிலீலாவதியில காலடி எடுத்து வைத்தார். 1958ல தன்னோட சொந்தப் படமான நாடோடி மன்னனை இயக்குகிறார். டபுள் ஆக்ட்.

    இந்தப் படம் ஓடுனா நான் மன்னன். இல்லன்னா நாடோடிங்கறாரு. படம் பெரிய அளவில் வெற்றி பெறுகிறது. அவரோட உலகம் சுற்றும் வாலிபன் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது. அவருக்கு நுணுக்கங்கள் எல்லாம் தெரியும். உதாரணத்துக்கு டிஆர்.ராமண்ணா இவரை வைத்து படம் இயக்குகிறார்.

    பாசம்னு ஒரு படம். கடைசியில கதாநாயகன் இறந்த போற மாதிரி காட்சி. வேண்டாம். இந்தப் படத்துல நான் இறந்து போற மாதிரி காட்சி வைத்தா ரசிகர்கள் ஏத்துக்க மாட்டாங்கன்னு எம்ஜிஆர் சொன்னாராம். பாட்டு பெரிய ஹிட். ஆனா படம் ஹிட் இல்ல.

    நாளை நமதே படத்துல 2 எம்ஜிஆர்ல ஒருத்தர் கருப்பா திருடனா நடிச்சிருப்பாரு. அது ஓடல. பொதுவா நெகடிவ் கேரக்டர் பண்ண மாட்டாரு. அவரு இறந்த மாதிரி காமிச்ச ராஜா தேசிங்கு ஓடல. ஆனா அவரு இறந்து போற மாதிரி காமிச்சி சாமியாகிட்டாருன்ன மதுரை வீரன் ஓடுச்சு. பாட்டு, சண்டைக்காட்சி அவரு மேற்பார்வையில தான் நடக்கும்.

    கதாநாயகன், கதாநாயகி, சண்டைக்காட்சி, யாரு இசை அமைக்கணும்? யார் வசனம் எழுதணும் எல்லாமே அவருக்குத் தெரியும். மேற்கண்ட தகவலை பிரபல பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் கு.ஞானசம்பந்தன் தெரிவித்துள்ளார்.

  • உதவி கேட்க ஓடோடி வந்த நாடோடி மன்னன் உதவியாளர்… எம்ஜிஆர் செய்த அந்த மகத்தான செயல்!

    உதவி கேட்க ஓடோடி வந்த நாடோடி மன்னன் உதவியாளர்… எம்ஜிஆர் செய்த அந்த மகத்தான செயல்!

    எம்ஜிஆரின் இயக்கத்தில் உருவான நாடோடி மன்னன் படத்தில் உதவி இயக்குனராக கோபாலகிருஷ்ணன் என்பவர் பணிபுரிந்தார். அந்தப் படத்திலே மிகத் திறமையாக அவர் வேலை செய்ததைக் கண்ட எம்ஜிஆர் தன்னுடைய ஒரு படத்தை இயக்குகின்ற வாய்ப்பை அவருக்கு வழங்க வேண்டும் என்று கூட எண்ணினார்.

    அடிமைப்பெண் படத்தை இயக்கத் திட்டமிட்ட போது அந்த கோபாலகிருஷ்ணனையும், ராமதாஸையும் இணைத்து அவர்கள் ரெண்டு பேரையும் அந்த படத்தை டைரக்ட் செய்யச் சொல்லணும் என்பதுதான் எம்ஜிஆரின் எண்ணமாக இருந்தது. ஆனால் அவர்களுக்குள் தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்ததால அந்த வாய்ப்பு அவர்கள் கையை விட்டு நழுவிப் போனது. அதன்பிறகுதான் கே.சங்கர் அந்தப் படத்தை இயக்கினார்.

    அப்படிப்பட்ட கோபாலகிருஷ்ணன் ஒரு காலகட்டத்தில் வேலை இல்லாத காரணத்தால வறுமையில் வாடினார். வீட்டு வாடகையைக் கூட கொடுக்க முடியல. நான்கைந்து மாதம் வீட்டு வாடகைப் பாக்கி இருந்ததால அவரோட வீட்டு ஓனர் வீட்டைப் பூட்டிட்டு பணத்தைக் கொடுத்துட்டு வீட்டுக்குள்ள வாங்க. அதுவரைக்கும் சாவி கொடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டார். யார் யாரிடமோ உதவி கேட்டுப் பார்த்தார் கோபாலகிருஷ்ணன். எங்கேயுமே பணம் கிடைக்கல.

    என்ன பண்றதுன்னே புரியல. அப்படிப்பட்ட சூழ்நிலையில அவருக்கு நினைவு வந்த ஒரே நபர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தான். அப்போது பட்டிக்காட்டு பொன்னையா படத்தின் படப்பிடிப்பில் எம்ஜிஆர் இருந்தார். அவரைப் பார்ப்பதற்காக ஓடோடிச் சென்றார் கோபாலகிருஷ்ணன். இவர் எம்ஜிஆரை சென்று பார்ப்பதற்கு முன்னாலே அவரைப் பார்த்த எம்ஜிஆர், அவரைத் தன் அருகில் அழைத்து என்ன விஷயம்? ஏன் இப்படி உடல் மெலிந்து இருக்கீங்க? என்ன பிரச்சனை என்று அவரைப் பார்த்துக் கேட்டார். ஓ என்று அழத் தொடங்கிய கோபாலகிருஷ்ணன் தன்னுடைய பிரச்சனை எல்லாவற்றையும் அவரிடம் எடுத்துரைத்தார்.

    நான்கைந்து மாதமாக வாடகைக் கொடுக்கலன்னு சொல்றீங்க. அப்படிப்பட்டவர் என்னை எப்போ வந்து பார்த்துருக்கணும்? நாலு மாசத்துக்கு முன்னாடியாவது என்னை வந்து பார்த்துருக்க வேண்டாமா? எவ்வளவு வாடகைன்னு சொல்லுங்க என்று அவரைப் பார்த்துக் கேட்டார். மூவாயிரம் ரூபாய் என்று அந்த கோபாலகிருஷ்ணன் சொன்ன உடனே சரி இன்று இரவுக்குள் அந்தப் பணம் உன்னை வந்து சேரும் என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தார் எம்ஜிஆர். உடனே பக்கத்தில் இருந்த ஸ்டண்ட் கலைஞரான ராம்கிருஷ்ணனை அழைத்தார். அவரிடம் பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்து இன்று இரவுக்குள் எப்படியாவது கொண்டு போய் கோபாலகிருஷ்ணனிடம் சேர்த்து விடுங்கள் என்று சொன்னார் எம்ஜிஆர். அன்று இரவு பெரும் மழை.

    பணத்தைக் காலையில் கொடுத்து விடலாமா என்ற எண்ணம் கூட ராம்கிருஷ்ணனுக்கு இருந்தது. ஆனாலும் எம்ஜிஆர் சொல்லி அனுப்பிச்சிருக்காரு. இன்று இரவுக்குள் பணம் வந்து சேர்ந்துடும்னு. எம்ஜிஆர் சொல்லியும் அதைக் கொடுக்கலைன்னா அவரோட வாக்கு தப்பி விடுமே. அது கூடாதுன்னு கொட்டும் மழையிலும் கோபாலகிருஷ்ணனிடம் சென்றார் ராம்கிருஷ்ணன். அந்த பத்தாயிரம் ரூபாயைக் கோபாலகிருஷ்ணனிடம் கொடுத்து விட்டு இதுல மூவாயிரம் ரூபாயை வாடகைக்குக் கொடுங்க.

    மிச்சம் ஏழாயிரம் ரூபாயை உங்களுக்காக வைத்துக் கொள்ளச் சொன்னார் எம்ஜிஆர் என்றார். அப்போது அந்தக் கோபாலகிருஷ்ணன் கண்களில் இருந்து தரதரவென்று கண்ணீர் வழிந்தோடிக் கொண்டு இருந்தது. எம்ஜிஆரை இன்றைக்கும் தமிழ்நாட்டு மக்கள் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கியமான காரணம் எம்ஜிஆரோட மனிதாபிமானம் தான்.

  • அரசியலில் விஜய் எலியா, புலியா? டிஆர். சொன்னது எல்லாமே நெத்தியடிதான்!

    அரசியலில் விஜய் எலியா, புலியா? டிஆர். சொன்னது எல்லாமே நெத்தியடிதான்!

    தமிழ்சினிமா உலகில் இளையதளபதி என்ற பட்டத்துடன் சினிமாவில் அடி எடுத்து வைத்தார் விஜய். அப்புறம் தளபதி ஆனார். ரஜினிக்கே டஃப் கொடுக்கும் வகையில் சினிமாவில் வசூல் மன்னன் ஆனார். அவரது பெரும்பாலான படங்கள் வெற்றி வாகை சூடின. Rs.200 கோடி சம்பளம் வாங்கி வந்த சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இதுதான் எனது கடைசி படம்னு ஜனநாயகனை அறிவித்தார்.

    அப்புறம் அரசியலில் முழுமையாக இறங்கினார். இப்போது வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதே தனது குறியாகக் கொண்டு பிரச்சார மேடைகளில் முழக்கம் இட்டு வருகிறார். இவரது சினிமா மற்றும் அரசியல் வருகை குறித்து பிரபல நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் என்ன சொல்கிறார்னு பாருங்க.

    இதான் என்னோட கேள்வி. அவரு சினிமா உலகத்துல அடி எடுத்து வச்ச உடனே ரத்தின கம்பளம் போட்டு சினிமா உலகம் அவரை வரவேற்றுச்சா? அன்னைக்கே இளையதளபதின்னு பட்டம் கொடுத்து இளைய தளபதி நீதான் கலை உலகத்துக்கு இனி அதிபதி அப்படின்னு ஏதாவது புகழ்மாலை சூட்டுனுச்சா?

    சூட்டலையே… எவ்வளவு எல்லாம் தூற்றி இருப்பாங்க. தூற்றுனதை எல்லாம் மீறி அவர்களையே போற்ற வைக்கக்கூடிய அளவுக்கு இன்னைக்கு புகழ் ஏணியின் உச்சியில் ஏறி நின்னு கலை உலகத்தில் ஒரு தனிக்கொடியைப் பிடிச்சிக் காமிச்சாரே…

    அவர் கலை உலகத்துல புலி இல்லையா? இன்னொன்னு. அரசியல்ல அவர் புலியா, எலியான்னு கேட்டா எனக்கு சொல்லத் தெரியல. ஆனா சில அரசியல் கட்சிகளோட வயித்துல அவர் புளியைக் கரைச்சிட்டாருங்கறது மட்டும் உண்மை. இவருடைய பேச்சுக்கு ஆதரவாக கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. டி.ராஜேந்தரும் ஒரு காலகட்டத்தில் அரசியல் இருந்தவர் தான். ஆனாலும் அவரால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • எம்ஜிஆருடன் நேருக்கு நேராக மோதிய பானுமதி… அடுத்து நடந்த தரமான சம்பவம்..!

    எம்ஜிஆருடன் நேருக்கு நேராக மோதிய பானுமதி… அடுத்து நடந்த தரமான சம்பவம்..!

    தமிழ்த்திரை உலகில் புரட்சித்தலைவர் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படுபவர் எம்ஜிஆர். அவரது படங்களின் வசனங்கள், பாடல்களில் இதைக் கண்கூடாகக் காணலாம். அப்படி இருந்த அவரிடமே கதாநாயகியான ஒருவர் நேருக்கு நேராக மோதியுள்ளார். யார் என்ன சம்பவம்னு பார்க்கலாமா…

    நாடோடி மன்னன் படத்தில் எம்ஜிஆருக்கும், பானுமதிக்கும் பிரச்சனையா? அப்புறம் ஏன் சரோஜாதேவியை நடிக்க வைத்தார் எம்ஜிஆர் என வாசகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

    நாடோடி மன்னன் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியபோதே அந்தப் படத்தின் கதாநாயகியான பானுமதிக்கும், அந்தப் படத்தின் கதாநாயகனாக நடித்து இயக்கிய எம்ஜிஆருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஆரம்பித்து விட்டன.

    ஒரு நாள் ஒரு காட்சியைத் திரும்ப திரும்ப படமாக்கியபோது இதுக்குத் தான் ஒரு நல்ல டைரக்டரைப் போட்டுப் படம் எடுத்துருக்கணும். கே.சுப்பிரமணியத்தைப் போட்டுப் படமாக்கி இருந்தா இது மாதிரி பிரச்சனை எல்லாம் வந்துருக்காது என எம்ஜிஆர் முகத்துக்கு நேராகவே கூறினார். அது மட்டும் இல்லாம அந்தப் படத்தின் பாடல்களின் போது, பாடல்களின் கம்போசிங்கின் போது எல்லாம் எம்ஜிஆருக்கும், பானுமதிக்கும் இடையே உரசல்கள் இருந்துக்கிட்டே தான் இருந்தது.

    அதன் காரணமாகத் தான் இனியும் அவரோட ஃபோர்ஷனைத் தொடர முடியாதுங்கறதால அதை அப்படியே கட் பண்ணிட்டு இன்னொரு கதாநாயகியை அறிமுகப்படுத்துவது என முடிவெடுத்தார் எம்ஜிஆர். அப்படி அந்தப் படத்துக்குள்ளே வந்தவர் தான் சரோஜாதேவி என்றார் எம்ஜிஆர்.

  • நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

    நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

    வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக நடித்துத் தாரேன்னு உறுதியாக சொன்னார் ரஜினி. அப்படி வாக்குறுதி கொடுத்தாலும் அதை அவரால் நிறைவேற்ற முடியவில்லை.

    அதற்கு முக்கிய காரணம் தொடர்ந்து பல படங்களில் நடிக்க வேண்டிய சூழ்நிலையில் அவர் இருந்ததுதான். படம் பண்ணச் சொல்லி பல பேரு கேட்குறாங்க. அதனால எல்லாருக்கும் சேர்த்து ஒரு படம் பண்ணிடலாம்னு இருக்கேன். அதுல ஒரு பங்குதாரராக இருக்க உங்களுக்கு சம்மதமா என விகே.ராமசாமியைப் பார்த்து ஒருநாள் கேட்டார் ரஜினி. பெருந்தன்மையோடு ஒரு வாய்ப்பு தர்றீங்க.

    அதை எப்படி மறுக்க முடியும் என்று பதில் அளித்தவர் தான் விகே.ராமசாமி. அந்தப் படத்தைப் பொருத்தவரைக்கும் விகே.ராமசாமி எந்த முதலீடும் செய்யவில்லை. ஆனாலும் அந்தப் படத்தின் லாபத்தை பல பேருக்குப் பிரித்துக் கொடுத்தார் ரஜினி. அதில் ஒரு பகுதியை விகே.ராமசாமிக்கும் கொடுத்தார். பதினோரு திரைப்படங்களைத் தயாரித்தேன்.

    பல நூறு படங்களிலும் நடித்தேன். லட்ச லட்சமா சம்பாதித்தேன். ஆனாலும் அவை எதுவும் எங்கிட்ட தங்கல. எங்கிட்ட பராமரிக்கின்ற திறமை இல்லாததால யார் யாரோ அள்ளிக் கொண்டு போனாங்க. பைசா மிச்சமில்லாமல் துடைத்து எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். தனி மரமாக என்னை விட்டு விட்டுப் போனார்கள். நான் எந்தக் காலத்துல யாருக்கு என்ன தர்மம் செய்தேன் அப்படின்னு எனக்குத் தெரியாது.

    எனக்கு ரஜினிகாந்த் மூலம் மிகப்பெரிய தொகை கிடைத்ததுன்னா அதுக்கு முக்கியமான காரணம் அந்த தர்மம்தான். என் வாழ்க்கையின் கடைசி காலத்தை நான் நிம்மதியாகக் கழித்தேன் என்றால் அதற்கு முக்கியமான காரணம் ரஜினிகாந்த் செய்த அந்த உதவி தான் என்று பல பத்திரிகை பேட்டிகளில் பதிவு செய்துள்ளார் விகே.ராமசாமி.

  • எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

    எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

    நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே வளர்ச்சி அடைய முடியும். அப்படி படிப்படியாக வளர்ச்சி அடைந்தவர் தான் எம்ஆர்.ராதா. ராஜாம்பாள் நாடகக் கம்பெனியில் பணியாற்றிக் கொண்டு இருந்தார்.

    அங்கு சின்ன சின்ன வேடங்களை ஏற்று நாடகங்களில் நடித்து வந்தார். அப்போது ராஜாம்பாள் நாடகக் கம்பெனியில் பதிபக்தி என்ற நாடகம் நடந்தது. அதில் கங்காதரன் என்ற வில்லன் வேடம் ஏற்று நடித்தார் எம்எஸ்.முத்துக்கிருஷ்ணன். அவரது நடிப்புக்கு இணையாக யாரையும் சொல்ல முடியாது என்ற வகையில் அருமையாக நடித்தார்.

    ஒரு காலகட்டத்தில் முத்துக்கிருஷ்ணனின் உடல்நிலை சரியில்லாமல் போனது. பதிபக்தி நாடகத்தை அப்படியே நிறுத்திட்டு வேறொரு நாடகத்தை நடத்தலாம்னு ராஜாம்பாள் நாடகக்குழுவினர் முடிவு செய்தனர். அப்போது அந்தக் கம்பெனி முதலாளியை அழைத்த முத்துக்கிருஷ்ணன் என்னை விட சிறப்பாக இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்குற நடிகர் நம்மகிட்டேயே இருக்காரு. அவரு பேரு எம்.ஆர்.ராதா.

    அவரைப் பயன்படுத்திக் கொண்டு இந்த நாடகத்தைத் தொடர்ந்து நடத்துங்கள் என்றார் முத்துக்கிருஷ்ணன். அவர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ராஜாம்பாள் நாடகக் கம்பெனியின் முதலாளிக்கு நம்பிக்கை பிறக்கவில்லை. ஆனாலும் முத்துக்கிருஷ்ணன் சொல்றாரே என்பதற்காகத் தான் பதிபக்தி நாடகத்தில் அந்த கங்காதரன் வேடத்தில் எம்ஆர்.ராதாவை நடிக்க வைத்தார். ஒரே நாடகம்தான்.

    அந்த ஒரே நாடகத்திலேயே தான் எப்பேர்ப்பட்ட நடிகன் என்பதை எம்ஆர்.ராதா முழுமையாக நிரூபித்தார். அதன் காரணமாகத்தான் தொடர்ந்து அதுபோன்ற வேடங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு அவருக்கு அமைந்தது. அதைத் தொடர்ந்து அவருக்குத் தேடி வந்ததுதான் ‘நடிகவேள்’ என்ற பட்டம். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.

  • அரசன் படத்துக் கதை இதுதாங்க… சிவகார்த்திகேயன் படத்தோடு சிம்பு மோதுகிறாரா?

    அரசன் படத்துக் கதை இதுதாங்க… சிவகார்த்திகேயன் படத்தோடு சிம்பு மோதுகிறாரா?

    நடிகர் சிம்பு தற்போது நடித்து வரும் அரசன் படத்தை வெற்றி மாறன் இயக்கி வருகிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். இதே படத்தில் விஜய் சேதுபதி, பிரியங்கா அருள் மோகன். ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி மற்றும் கிஷோர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் கதை என்ன? சிவகார்த்திகேயன் படத்தோடு மோதலா? வாங்க பார்க்கலாம்.

    வடசென்னை படத்துல ஒரு சம்பவம் நடக்குது. தனுஷ் ஜெயிலுக்குப் போயிடுவாரு. அந்த சமயத்துல ஜெயிலுக்கு வெளியில என்னென்ன சம்பவம் நடக்குதுங்கறதுதான் அரசன் படத்தோட கதை. அப்படித்தான் பிளான் பண்ணிருக்காங்க. அக்டோபர்ல ரிலீஸ் அப்படிங்கற மாதிரி பிளான் பண்ணிருக்காங்களாம். அதே மாதம் தான் சிவகார்த்திகேயன் நடித்த சேயோன் படமும் வருதாம்.

    சூர்யா நடிக்குற கருப்பு படத்துல இசை அமைப்பாளர் சாய் அபியங்கர் கேட்டதுக்காக ஒரு பாடலைப் பாடி கொடுத்துள்ளார் சிம்பு. சேயோன் படத்தோட மோதி சிவகார்த்திகேயனை வீழ்த்தணும் என்பது சிம்புவின் பிளான் அல்ல. நம்ம படம் ஃபெஸ்டிவல் டைம்ல ரிலீஸ் ஆகணும்னு அவர் விரும்புகிறாரு. ஆனா இந்தப் படத்துல இருக்குற நடிகர்களை வைத்துப் பார்க்கும்போது இதெல்லாம் கரெக்டா நடக்குமான்னு தெரியல என்கிறார் வலைப்பேச்சாளர் பிஸ்மி.

    அரசன் படத்தின் புரொமோ வீடியோ ரிலீஸ் ஆகி ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. அதில் சிம்புவின் கெட்டப் முற்றிலும் வித்தியாசமாகத் தெரிகிறது. வெற்றிமாறன் வடசென்னை மாதிரி இன்னொரு தரமான சம்பவம் பண்ணப் போறாரு என்று தான் தெரிகிறது.

  • விஜய் குறித்து சீமான் இப்படி படக்குன்னு சொல்லிப்புட்டாரே… அப்போ வின்னர் யாரு?

    விஜய் குறித்து சீமான் இப்படி படக்குன்னு சொல்லிப்புட்டாரே… அப்போ வின்னர் யாரு?

    நாம் தமிழர் கட்சியினை செம்மையாக வழிநடத்திக் கொண்டு இருக்கும் தலைவர் சீமான் பேச்சு இன்றைய இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசுவது இயல்பாக இருக்கிறது. நேர்மை, நியாயம், உண்மைத்தன்மை, வெளிப்படைத்தன்மை என அனைத்து அம்சங்களும் கலந்த கலவையாக இருப்பதால் இளம் வாக்காளர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதே போல தமிழக வெற்றிக் கழகத்தை வீறு நடைபோட்டு நடத்திக் கொண்டு இருக்கும் விஜயின் பேச்சும் மக்கள் மத்தியில் பெருமளவு ரசிக்கப்பட்டு வருகிறது. திராவிட கட்சிகளை முற்றிலும் நீக்க வேண்டும்.

    புது ஆட்சி மலர வேண்டும் என்ற நோக்கில் தான் இவர்கள் களம் இறங்கியுள்ளனர். மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவர்களது பேச்சில் தெரிகிறது. சீமான், விஜய் இருவரும் சினிமாவில் இருந்து வந்தவர்கள் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சீமான் விஜயை தம்பி என வார்த்தைக்கு வார்த்தை அழைக்கிறார். விஜய் குறித்து இவர் வேறு என்னவெல்லாம் சொல்றாருன்னு பாருங்க.

    அவர் முதன் முதலாக தேர்தலை எதிர்கொள்கிறார். இதுல யாரு வந்தா சிறப்பா இருக்கும்கறதை என் அன்பு மக்கள் தான் முடிவு பண்ணனும். அய்யா ஸ்டாலினுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துட்டீங்க. ஐயா எடப்பாடிக்கு நாலரை ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்துட்டீங்க. இதுல இருக்குறது நானும் என் தம்பியும்தான் இருக்கோம்.

    எங்கள்ல யாருக்காவது நீங்க வாய்ப்பு கொடுக்க முயற்சிக்கணும். எல்லாரது ஆட்சியிலும் வாழ்ந்து பார்த்துட்டீங்க. அஞ்சு ஆண்டு எங்க ஆட்சியிலும்தான் வாழ்ந்து பாருங்களேன். ஏற்கனவே இந்த ஆட்சி நல்லாருக்கு. தொடரணும்னு வாய்ப்பு அளிச்சீங்கன்னா அதை வரவேற்போம். அதை ஒண்ணும் பண்ண முடியாது.

    இல்ல இதை மாத்தணும்னு நினைச்சீங்கன்னா வாய்ப்பா நானும் என் தம்பியும் தான் இருக்கோம். அதுல நீங்க எங்களில் தான் யாராவது ஒருத்தரை தேர்வு செய்யணும். அவர் வெற்றி எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். என் வெற்றியும் அவருக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

    ஏன்னா நாங்க வந்து இதுவரைக்கும் இருந்த ஆட்சி அளவுக்கு கேவலமாக ஆட்சி செய்ற பிள்ளைகள் அல்ல. இதை விட ஆகச்சிறந்த ஆட்சியைக் கொடுக்கணும்னு ஒரு கனவோடு இருக்கிற பிள்ளைகள். அதுல எது சரியா இருக்கோ அதை நீங்களே முடிவு எடுங்க என்கிறார் சீமான். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. வின்னர் யாருன்னு பொறுத்திருந்து பார்ப்போம்.

  • வில்லன் வேடத்தில் மிரட்டிய ஜெமினிகணேசன்… ஒப்புக்கொள்ள வைத்த பிரபல நடிகை!

    வில்லன் வேடத்தில் மிரட்டிய ஜெமினிகணேசன்… ஒப்புக்கொள்ள வைத்த பிரபல நடிகை!

    மாடர்ன் தியேட்டர்ஸின் தயாரிப்பில் உருவான திரைப்படம்தான் வல்லவனுக்கு வல்லவன். அந்தப் படத்தில் ஜெமினிகணேசன், அசோகன் ஆகிய இருவரும் நடித்து இருந்தார்கள். அந்தப் படத்தில் எதிர்மறை கதாநாயகனாக ஜெமினிகணேசன் நடித்து இருந்தார்.

    அந்த வில்லன் கதாபாத்திரத்தில் சஸ்பென்ஸ் இருந்ததால ரெகுலராக திரைப்படங்களில் வில்லனாக நடித்தவர்கள் யார் நடித்தாலும் அந்தப் படம் வெற்றி பெறாது. ஒரு கதாநாயகன் நடித்தால் தான் வெற்றி பெறும் என்று எண்ணிய ராமசுந்தரம் அந்தப் படத்தில் ஜெமினிகணேசன் நடித்தால் தான் வெற்றி பெறும் என்று எண்ணினார். ஆனாலும் ஜெமினிகணேசன்கிட்ட போய் யார் பேசி அவர் ஒப்புக்கொள்ள வைப்பார்?

    அதற்காக அவங்க தேர்ந்தெடுத்த ஒரு சரியான தூதுவர்தான் மனோரமா. அவர்தான் ஜெமினிகணேசன்கிட்ட பேசி அந்தக் கதையைப் பற்றி சொல்லி இந்தக் கதை இப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான கதையா இருக்கு. இதுல நீங்க நடிச்சீங்கன்னா நிச்சயமாக வெற்றி பெறும். அந்தப் படத்தைப் பார்க்கும்போது அதன் கதைப்போக்கை அவ்வளவு எளிதில் யாரும் யூகித்து விட முடியாது. அந்தளவுக்கு மிகச்சிறப்பாக அந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தது.

    ராமசுந்தரத்தின் இயக்கத்தில் உருவான வல்லவனுக்கு வல்லவன் மாபெரும் வெற்றிப்படமாக மாடர்ன் தியேட்டர்ஸ்சுக்கு அமைந்தது என்றால் அதற்கு முக்கியமான காரணம் ஜெமினிகணேசன் அதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததுதான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

    1965ம் ஆண்டு ஆர்.சுந்தரம் இயக்கத்தில் வெளியான படம் வல்லவனுக்கு வல்லவன். இந்தப் படத்தில் ஜெமினிகணேசன், தங்கவேலு, அசோகன், ராமதாஸ், மணிமாலா, சாவித்ரி, மனோரமா உள்பட பலர் நடித்துள்ளனர். வேதா இசை அமைத்துள்ளார். இது ஒரு அதிரடி திரில்லர் படம். மாடர்ன் தியேட்டர்ஸின் 100வது படமும் இதுதான். ஓர் ஆயிரம் பார்வையிலே, மனம் என்னும் மேடை மேலே ஆகிய மனது மறக்காத பாடல்கள் இந்தப் படத்தில் தான் இடம்பெற்றுள்ளது. இது ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம்.