Author: sankaran v

  • ஒரே பாடலில் இத்தனை விஷயமா…? கண்ணதாசன் எம்ஜிஆருக்கு கொடுத்த அதி அற்புத பாடல்!

    ஒரே பாடலில் இத்தனை விஷயமா…? கண்ணதாசன் எம்ஜிஆருக்கு கொடுத்த அதி அற்புத பாடல்!

    மனித குல வரலாற்றை ஒரு பாட்டுக்குள்ள சொல்றதே ரொம்ப சிரமம். ஆனால் கவியரசர் கண்ணதாசன் ஒரு பாட்டுக்குள்ள அவ்வளவு அழகா சொல்லிருப்பாரு. அது என்னன்னு பாருங்க.

    1964ல் டிஆர்.ராமண்ணா இயக்கத்தில் வெளியான படம் பணக்கார குடும்பம். மக்கள் திலகம் எம்ஜிஆர், சரோஜாதேவி, அசோகன் உள்பட பலர் நடித்துள்ளனர். மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் கவியரசர் கண்ணதாசன் பாடல் எழுதி டிஎம்.சௌந்தரராஜன், எல்ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல் ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே பாடல். இந்தப் பாட்டுக்கும், படத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

    பணக்காரக் குடும்பம்னாலே குடும்பம் தொடர்பாகத் தான் பேசணும். அப்புறம் ஏன் இப்படி ஒரு பாடல்னு கேள்வி எழலாம். எம்ஜிஆர் படம்னாலே மக்கள் ஏதாவது ஒரு நல்லது சொல்வார்னு எதிர்பார்ப்பாங்க. இன்னொன்னு கவியரசர் கண்ணதாசனுக்கு திடீர்னு இந்த இடத்துல இந்தப் பாடலை வைத்தால் நல்லா இருக்குமேன்னு ஒரு எண்ணம் தோணும். அப்படி வந்தது தான் இந்தப் பாடல்.

    அசோகனின் மகள் சரோஜாதேவி. அப்பா வசதியான குடும்பமாக இருந்தாலும் அவரை விட்டு வெளியேறி விடுகிறார் எம்ஜிஆர். இவர் சரோஜாதேவியைக் காதலிக்கிறார். இடையில் பல எதிர்ப்புகள் வந்தாலும் கடைசியில் சரோஜாதேவியைத் திருமணம் செய்து கொள்கிறார். இதுதான் கதை. இந்தப் படத்தில் வரும் பாடல் தான் ஒன்று எங்கள் ஜாதியே. இந்தப் பாடலின் பல்லவியில் சமத்துவத்தைப் பேசி இருக்கிறார் கண்ணதாசன்.

    ”ஒன்று எங்கள் ஜாதியே… ஒன்று எங்கள் நீதியே… உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே…” இவ்ளோதான் பல்லவி. இங்கு கவனிக்க வேண்டியது ஏமாற்றுறவங்க எல்லாம் ஒருவர் பெற்ற மக்கள் அல்ல. உழைக்கும் மக்களே என்கிறார். அடுத்து பாடலில் சமத்துவத்தைக் கொண்டு வந்துள்ளார். நிறத்தில் அல்ல என அழுத்தமாகச் சொல்கிறார். ”வெள்ளை மனிதன் வியர்வையும், கருப்பு மனிதன் கண்ணீரும் உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே” என எந்த இடத்திலும் சந்தம் இடிக்காம அவ்வளவு நேர்த்தியாக அழகாக எழுதியுள்ளார் கவியரசர்.

    மன்னராட்சி, மக்களாட்சி என்று சொல்லி விட்டு ”இல்லை என்பது இல்லை நாங்கள் வாழும் நாட்டிலே…” என 2வது சரணத்தில் சொல்லி இருக்கிறார். இங்கும் உழைப்பைப் பற்றித் தான் பேசுகிறார். உழைக்கும் மக்கள் எல்லாரும் ஒண்ணா சேர்ந்தா இல்லை என்ற சொல்லே இருக்காது என்கிறார்.

    அடுத்த சரணத்தில் மனித குல வரலாறு எப்படி தோன்றியது என்பதை வெகு அழகாக சொல்லி இருக்கிறார். ”ஆதிமனிதன் கல்லை எடுத்து வேட்டையாடினான். அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டைக் காட்டினான். மற்றும் ஒருவன் மண்ணில் இறங்கி பொன்னைத் தேடினான். நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான். இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தைத் தேடினான். வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆளப்போகிறான்” என்று முக்காலத்தையும் நயம்படச் சொல்கிறார் கண்ணதாசன். இது படித்தவர், படிக்காதவர் என அத்தனை பேருக்கும் அவ்வளவு எளிதாகப் புரியும்.

  • பார்த்திபன், விக்னேஷ் சிவனெல்லாம் கிடையாது… அப்பவே கெத்து காட்டிய பிரபலம்!

    பார்த்திபன், விக்னேஷ் சிவனெல்லாம் கிடையாது… அப்பவே கெத்து காட்டிய பிரபலம்!

    தங்கள் திரைப்படத்தின் கதாநாயகியை மணந்து கொண்ட இயக்குனர்கள்னு பார்த்திபன், விக்னேஷ் சிவன்னு பலர் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் முன்னோடி யாருன்னா தமிழ்சினிமா உலகின் பிதாமகன் என்று சினிமா உலகம் இன்று வரை கொண்டாடிக் கொண்டு இருக்கின்ற இயக்குனர் கே.சுப்பிரமணியம். எஸ்.டி.சுப்புலட்சுமியை பவளக்கொடி படத்தில் அறிமுகப்படுத்தியவர் கே.சுப்பிரமணியம்.

    அந்தப் படத்தில் பணியாற்றிக் கொண்டு இருக்கும்போதே சுப்புலட்சுமிக்கு இயக்குனரின் திறமையைத் தாண்டி அவருடைய நல்ல குணங்கள் பல தெரியவந்தது. கே.சுப்பிரமணியத்தைப் பொருத்தவரை திறமையான இயக்குனர் என்பதைத் தாண்டி பெண்கள் மீது மிகுந்த மதிப்பு கொண்டவராக இருந்தார். அந்த அவருடைய குணம் எஸ்.டி.சுப்புலட்சுமியைப் பெரிதும் கவர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

    அதனால அந்தக் கலை மேதையையே திருமணம் செய்து கொள்வது என்ற முடிவுக்கு வந்தார் எஸ்.டி.சுப்புலட்சுமி. இப்படி ஒரு முடிவை அவர்கள் எடுப்பதற்கு முன்னாலேயே அவர்கள் இருவரும் கூட்டாக சேர்ந்து ஒரு திரைப்பட நிறுவனத்தை நடத்திக் கொண்டு இருந்தார்கள். அதனால எஸ்டி.சுப்புலட்சுமி இயக்குனரிடம் தன் விருப்பத்தை சொன்னபோது மறுப்பேதும் சொல்லாமல் அவரை மணந்து கொண்டார் கே.சுப்பிரமணியம். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.

    நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தனது முதல் பட நாயகி சீதாவை திருமணம் செய்து கொண்டார். புதிய பாதை படத்தில் தான் அவரை அறிமுகம் செய்தார். அதே போல விக்னேஷ் சிவன் தனது 2வது படமான நானும் ரௌடிதான் படத்தின் நாயகி நயன்தாராவை திருமணம் செய்து கொண்டார். அவர் இயக்கிய முதல் படம் போடா போடி. நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தனது முதல் பட நாயகி சீதாவை திருமணம் செய்து கொண்டார். புதிய பாதை படத்தில் தான் அவரை அறிமுகம் செய்தார். அதே போல விக்னேஷ் சிவன் தனது 2வது படமான நானும் ரௌடிதான் படத்தின் நாயகி நயன்தாராவை திருமணம் செய்து கொண்டார். அவர் இயக்கிய முதல் படம் போடா போடி என்பது குறிப்பிடத்தக்கது.

  • முதல்மரியாதை படத்தில் ராதாவுக்கு ஜஸ்ட் மிஸ் தேசிய விருது..! அட இதுதான் காரணமா?

    முதல்மரியாதை படத்தில் ராதாவுக்கு ஜஸ்ட் மிஸ் தேசிய விருது..! அட இதுதான் காரணமா?

    கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு படிக்கும்போதே நடிக்க வாய்ப்பு கிடைக்குது. அந்த வகையில் ராதா, அம்பிகாவைச் சொல்லலாம். ராதா, பாரதிராஜாவின் இயக்கத்தில் கார்த்திக் நடித்த அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகம் ஆனார். முதல் படமே மாபெரும் வெற்றி. ராதாவின் அக்கா அம்பிகாவும் நடிக்க ஆரம்பித்தார்.

    அக்காவும், தங்கையும் சினிமாவில் வெற்றிகரமான ஹீரோயின்களாக வலம் வந்தனர். கார்த்திக், கமல், ரஜினி, விஜயகாந்த் என அப்போதைய முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தனர். தூங்காதே தம்பி தூங்காதே, ராஜாதி ராஜா, பாயும் புலி, மெல்லத் திறந்தது கதவு என ராதா பல படங்களில் வெற்றிகரமான ஹீரோயினாக ஜொலித்தார்.

    சிவாஜி நடித்த முதல் மரியாதை படத்தில் ராதாவின் கேரக்டர் பேசும்படியாக இருந்தது. இந்தப் படத்தின் இயக்குனர் பாரதிராஜா. படத்தின் பாடல்களும் சூப்பர் ரகங்கள். படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. படத்தில் சிவாஜியுடன் ஜோடியாக ராதா நடித்தார்.

    அந்தப் படத்தில் இவருக்கு வேறு ஒருவர் வாய்ஸ் கொடுத்ததால் தேசிய விருது மிஸ் ஆனதாம். 5 மொழிப்படங்களில் நடித்துள்ள இவருக்குக் கலைமாமணி விருதும் கிடைத்துள்ளது. 1991ல் டி.ராஜேந்தருடன் சாந்தி எனது சாந்தி படத்தில் நடித்தார். அதன்பிறகு சினிமாவில் நடிக்கவே இல்லை.

    திருமணம் செய்து கொண்டு 3 குழந்தைகளுக்குத் தாயானார். டிவிகளில் ரியாலிட்டி ஷோக்களுக்கு ஜட்ஜாக வந்தார். 10 ஆண்டுகள் சினிமாவில் இருந்து 100 படங்கள் வரை நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றார் ராதா. இவரது இயற்பெயர் உதயசந்திரிகா என்பது குறிப்பிடத்தக்கது.

  • 100வது நாள் விழாவுக்கு அழைப்பு விடுத்த தயாரிப்பாளர்… மறுகணமே எம்ஜிஆர் சொன்ன வார்த்தை!

    100வது நாள் விழாவுக்கு அழைப்பு விடுத்த தயாரிப்பாளர்… மறுகணமே எம்ஜிஆர் சொன்ன வார்த்தை!

    அந்தக் காலத்தில் எல்லாம் திரை உலகில் 100வது நாள் படம் ஓடுவது என்பது சாதாரண விஷயம். பல முன்னணி கதாநாயர்களின் படங்கள் இப்படி வெற்றி விழாவைக் கொண்டாடும். அதில் ஒன்று தான் இந்த ஜல்லிக்கட்டு படம். சத்யராஜ், சிவாஜி இணைந்து நடித்த இந்தப் படத்தை சித்ரா லட்சுமணன் தயாரித்துள்ளார்.

    படம் 100 நாள் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது. படத்துக்கான வெற்றி விழாவில் எம்ஜிஆர் கலந்து கொண்டார். எம்ஜிஆர் கலந்து கொண்ட கடைசி சினிமா நிகழ்ச்சியும் இதுதான். எப்படி கலந்து கொள்ள ஒப்புக்கொண்டார்னு பாருங்க.

    ஜல்லிக்கட்டு படத்தின் பாராட்டு விழாவுக்கு அழைப்பு சொன்னதுமே எம்ஜிஆர் உடனே ஒத்துக்கிட்டாரா? இல்ல. முதல்ல வரலன்னு சொன்னாரான்னு ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

    எனக்கே இது ஆச்சரியமான விஷயம். ஒருநாள் காலையில புரட்சித்தலைவர் எம்ஜிஆரை நான், சத்யராஜ், என்னுடைய சகோதரர் சித்ரா ராமு ஆகிய மூவரும் சந்தித்தோம். ஜல்லிக்கட்டு படத்தின் 100வது நாள் விழாவுல நீங்க கலந்துக்கணும்னு கோரிக்கை வைக்கிறோம். என்னைக்கு ஜல்லிக்கட்டு படத்தின் 100வது நாள்னு கேட்டாரு. டிசம்பர் 5ந் தேதி 100 நாள் விழா வருதுன்னு நான் சொன்னதும் விழாவை வச்சிக்கோங்க.

    நான் வர்றேன் என்று மறுகணமே சொல்லி விட்டார் எம்ஜிஆர். அப்படி உடனடியாக அவர் விழாவுக்கு வருவார்னு நாங்க மூவருமே கனவுல கூட நினைச்சிப் பார்க்கல அப்படிங்கறதுதான் உண்மை. இன்னைக்கு நினைச்சிப் பார்த்தா கூட அந்தளவுக்கு ஆச்சரியமா இருக்குது அந்த சம்பவம். அதற்கு முன்னால் இந்த மாதிரி தேதி கேட்ட உடனே எம்ஜிஆர் ஒப்புக்கொண்ட சம்பவங்கள் இருக்கான்னு எனக்குத் தெரியல என்கிறார் சித்ரா லட்சுமணன்.

  • எம்எஸ்.விஸ்வநாதனின் குரு அவரா? அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!

    எம்எஸ்.விஸ்வநாதனின் குரு அவரா? அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!

    தமிழ்த்திரை உலகில் எம்ஜிஆர், சிவாஜி என இருபெரும் ஜாம்பவான்கள் நடித்த பெரும்பாலான படங்களுக்கு இசை அமைத்து பல வெற்றிகரமான பாடல்களைக் கொடுத்தவர் எம்எஸ்.விஸ்வநாதன். இவருடன் இணைந்து ராமமூர்த்தியும் இசை அமைத்தார். இவர்களை மெல்லிசை மன்னர்கள் என்று சினிமா உலகம் போற்றியது. இவருக்குப் பிறகு வந்தவர் தான் இசைஞானி இளையராஜா. மெல்லிசை மன்னர்களின் குருநாதர் யாருன்னு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

    ஒரு காலகட்டத்தில் தமிழிலும், தெலுங்கிலும் கொடிகட்டிப் பறந்த பாடல்கள்னா அது சி.ஆர்.சுப்புராமனின் இசையில் உருவான தேவதாஸ் படத்தின் பாடல்கள். துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே, உலகே மாயம், எல்லாம் மாயை தானா? ஆகிய என்றுமே மறக்க முடியாத பல பாடல்களுக்கு இசை அமைத்த பெருமைக்குரிய இசை அமைப்பாளர் தான் சிஆர்.சுப்புராமன்.

    அவர் இசை அமைப்பாளர் ஆனதே ஒரு பெரிய கதை. செஞ்சுலெஷ்மி என்ற படத்துக்கு வயலின் வாசிக்க சென்ற கலைஞர் தான் சிஆர்.சுப்புராமன். இறுதியாக அந்தப் படத்தின் பாடல்கள் சிலவற்றுக்கு இசை அமைக்கக்கூடிய வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. அந்தப் பாடல்கள் எல்லாமே மிகப்பெரிய வெற்றி பெற்றன. அதன் காரணமாக இசை அமைப்பாளராக உருவானவர் தான் சி.ஆர்.சுப்புராமன்.

    தமிழ்சினிமா உலகிலே கொடிகட்டிப் பறந்த இசை அமைப்பாளர்கள்னு மெல்லிசை மன்னர்கள் எம்எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி, ஜி.கே.வெங்கடேஷ், கண்டசாலா போன்ற பலரும் இவருடைய சீடர்கள் தான் என்பது சி.ஆர்.சுப்புராமனின் தனிப்பெருமை. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

  • ஜி.வி.பிரகாஷ்லாம் இல்லையாம்… ஹீரோ ஜார்ஜ் மரியானாம்! ஹேப்பிராஜைக் கலாய்த்த புளூசட்டைமாறன்!

    ஜி.வி.பிரகாஷ்லாம் இல்லையாம்… ஹீரோ ஜார்ஜ் மரியானாம்! ஹேப்பிராஜைக் கலாய்த்த புளூசட்டைமாறன்!

    ஹேப்பிராஜ் படத்தை இயக்குனர் மரியராஜா இளஞ்செழியன் இயக்கியுள்ளார். நேற்று வெளியான இந்தப் படத்தின் விமர்சனம் குறித்து பிரபல யூடியூபர் புளூசட்டைமாறன் என்ன சொல்றாருன்னு பாருங்க.

    ஹீரோ ஒரு பொண்ணுக்கிட்ட லவ்வ சொல்றாரு. அந்தப் பொண்ணு உன்னை லவ் பண்ண முடியாது. கல்யாணமும் பண்ண முடியாதுன்னு சொல்லிடுது. காரணம் ஹீரோவோட அப்பா தானாம். அவர் ஒரு பள்ளியில ஹெச்எம்மா இருக்காரு. அவருக்குக் குதிரை மூட்டைன்னு பட்டப்பேரு வச்சிருக்காங்க.

    இப்போ அந்தப் பொண்ணு சொல்லுது. உன்னை சின்ன குதிரை மூட்டைன்னு சொல்றாங்க. நான் உன்னைக் கட்டிக்கிட்டா குதிரை மூட்டையோட மருமகள்இ சின்ன குதிரை மூட்டையோட பொண்டாட்டின்னு சொல்வாங்க. இது எனக்கு அவமானமா இருக்கும்னு சொல்லி காதலை நிராகரிக்குது.

    இனி இந்த ஊருல நாம இருக்கக்கூடாது. வெளியூருக்குப் போய் நல்ல பொண்ணா பார்த்துக் கட்டலாம்னு போறாரு. போற இடத்துல அங்க ஒரு பொண்ணை செட்டப் பண்ணிடுறாரு. கல்யாணத்துக்கு நிச்சயம் பண்ணும்போது அங்கே குதிரை மூட்டை பிரச்சனை மாதிரி இன்னொரு பிரச்சனை வருது. கல்யாணமே நின்னு போகுது. அதுக்கு அப்புறம் என்னாச்சுங்கறதுதான் கதை.

    இந்தக் கதையை ரெண்டரை மணி நேரம் எடுத்து வச்சிருக்காங்க. கதை நல்ல கதைதான். அதை முதல்ல கொஞ்சம் எடுத்து வச்சிட்டு கடைசியில டச் பண்றாங்க. இடையில ரெண்டு மணி நேரம் கொலையா கொல்றாங்க. கடைசியில கொஞ்சம் நல்லாருக்கு. அந்தக் கடைசி கொஞ்ச நேரத்துக்காக உசுர எல்லாம் விட முடியாது. இவங்க எடுத்துக்கிட்ட கதையை இவங்களுக்கே புரியாம எடுத்து வச்சிருக்காங்க.

    மையக்கதை நல்லா தான் இருக்கு. அதைக் காமெடியா சொல்றேன்னு பயங்கரமா எரிச்சல் பண்ணிட்டாங்க. இந்தப் படத்தோட ஹீரோ ஜிவி.பிரகாஷ் கிடையாது. ஜார்ஜ் மரியான்தான். அவர் கடைசி கொஞ்ச நேரத்தை எடுத்துக்குறாரு. கடைசி கொஞ்ச நேரத்துக்காக இந்தரெண்டு மணி நேரம் படம் பார்க்க உங்க பாடி தாங்குமான்னு மட்டும் பார்த்துக்கோங்க என்று செம கலாய் கலாய்த்துள்ளார் புளூசட்டை மாறன்.

  • மிகச்சிறந்த இசை அமைப்பாளனா வருவே… எம்எஸ்.வி.யை அன்றே கணித்த இசை அமைப்பாளர்.!

    மிகச்சிறந்த இசை அமைப்பாளனா வருவே… எம்எஸ்.வி.யை அன்றே கணித்த இசை அமைப்பாளர்.!

    கலைஞருடைய பல பாடல்களுக்கு இசை அமைத்தவர் டி.ஆர்.பாப்பா. இவர் ஆரம்பத்தில் எம்எஸ்.சுப்புலட்சுமியின் கச்சேரிகளுக்கு வயலின் வாசித்தார். மிகச்சிறந்த வயலின் வித்வான் என்பதால்தான் எம்எஸ்.சுப்புலட்சுமி தான் நடித்த மீரா படத்தில் அவரைப் பயன்படுத்திக் கொள்ளும்படி அந்தப் படத்தின் இசை அமைப்பாளரிடம் பரிந்துரை செய்தார். அதன்காரணமாகத் தான் அந்தப் படத்தில் பணியாற்றக்கூடிய வாய்ப்பைப் பெற்றார் டி.ஆர்.பாப்பா. அந்தக் காலத்தில் வயலின்னா ஒண்ணு டிஆர்.பாப்பா. இன்னொன்னு யாருன்னா டி.கே.ராமமூர்த்தி.

    இவர் மெல்லிசை மன்னர்களில் ஒருவர் தான். அந்தக் காலத்தில் டி.கே.ராமமூர்த்தியும், டிஆர்.பாப்பாவும் வயலின் வாசிக்காமல் ஒரு பாடல் பதிவு கூட நடந்தது இல்லை என்பதுதான் உண்மை. அந்தளவுக்கு பரபரப்பாக இருவரும் பணியாற்றிக் கொண்டு இருந்தார்கள். ஆரம்பத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ்ல பணியாற்றிய டிஆர்.பாப்பா சென்னைக்கு வந்ததும் ஜூபிடர் பிக்சர்ஸில் பணியாற்றத் தொடங்கினார்.

    அப்போது ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்த பல படங்களுக்கு இசை அமைத்தவர் எஸ்.பி.வெங்கட்ராமன். அவரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்தான் எம்எஸ்.விஸ்வநாதன். அவரது இசைத்திறமையை அந்தக் காலத்திலேயே அடையாளம் கண்டு கொண்டு மிகச்சிறந்த இசை அமைப்பாளனாக நீ ஒரு காலகட்டத்துல வருவே. அதுல எந்த சந்தேகமும் இல்லை. உங்கிட்ட அந்தளவுக்கு ஞானம் இருக்கிறது என்று பாராட்டியவர் டிஆர்.பாப்பா.

    இசை அமைப்பாளரைப் பற்றி நான் நினைத்துக்கூட பார்க்காத காலகட்டத்துல தமிழ்சினிமாவில் ஒரு குறிப்பிடத்தக்க இசை அமைப்பாளராக நீ வருவாய் என பாராட்டியவர் டிஆர்.பாப்பா. அதை நான் என்றைக்கும் மறக்க முடியாது என பல பத்திரிகைப் பேட்டிகளில் பதிவு செய்துள்ளார் மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதன்.

  • எதுக்கு தினமும் சாப்பாடு போடுறீங்க? விஜயகாந்த் சொன்னதைக் கேட்டு கண்கலங்கிய பிரபலம்!

    எதுக்கு தினமும் சாப்பாடு போடுறீங்க? விஜயகாந்த் சொன்னதைக் கேட்டு கண்கலங்கிய பிரபலம்!

    எட்டாவது கொடைவள்ளலாக நாம் புரட்சித்தலைவர் எம்ஜிஆரைத் தான் பார்க்கிறோம். ஆனால் புரட்சித்தலைவர் அப்படி கொடை வள்ளலாக இருந்த மாதிரி விஜயகாந்தும் தன் வாழ்வில் நடந்து கொண்டார். பசியால் வருவோரின் பசியைப் போக்கினார். எப்பவும் தன் அலுவலகத்தில் அன்னதானம் கொடுப்பார்.

    அதனால் தான் அவரைக் கருப்பு எம்ஜிஆர் என்றும் சொல்கின்றனர். திரையுலகில் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக பல நல்ல செயல்களைச் செய்தார். படப்பிடிப்பின்போது பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் சமமான ஒரே வகையான உணவுகளைப் பரிமாறச் செய்தார். தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் உண்டாத வகையில் பல வெற்றிப்படங்களில் நடித்துக் கொடுத்தார்.

    அந்தவகையில் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் கேப்டனைப் பற்றிய ஒரு புதிய தகவலைத் தெரிவித்துள்ளார். வாங்க என்னன்னு பார்க்கலாம்.

    கேப்டன் விஜயகாந்தை 1978ல் நான் சந்திச்சேன். அப்பவே அவர் ஆபீஸ்ல தினமும் டிபன் சாப்பிட நிறைய பேரு கஷ்டப்பட்டு வருவாங்க. நான் எதுக்கு அண்ணே தினமும் சாப்பாடு போடுறீங்கன்னு கேட்டேன். அதுக்கு மிருகம் எல்லாம் எடுத்துதான் வாழும். மனுஷனுக்கு மட்டும் தான் கொடுத்து வாழ தெரியும்.

    நாம மனுஷனா இருக்கோம்ல. கொடுத்து வாழ்வோம்னு சொன்னார். அதைக் கேட்டதம் நான் கண் கலங்கிட்டேன். புரட்சித்தலைவர் தான் இப்படி பண்ணினார்னு நான் சொன்னதும் அவரை மாதிரி வந்தா நானும் நல்லா பண்ணுவேன்னு சொன்னார் கேப்டன். அப்படி வந்து அதை செய்தும் காட்டினார் என்கிறார் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம்.

  • காக்கா ராதாகிருஷ்ணனுக்கு உயர்ந்த சம்பளம்… எம்ஜிஆர் செய்த பலே ஐடியா!

    காக்கா ராதாகிருஷ்ணனுக்கு உயர்ந்த சம்பளம்… எம்ஜிஆர் செய்த பலே ஐடியா!

    காக்கா ராதாகிருஷ்ணன் யாருன்னு நம்மில் பலருக்கும் தெரியும். இவர் தான் சிவாஜியையே சினிமாவுக்கு அழைத்து வந்தவர். ஆனால் அவர் எம்ஜிஆரைப் பற்றி என்ன சொல்றாருன்னு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

    தமிழ்சினிமா உலகிலே எப்படிப்பட்ட சாதனையாளர் காக்கா ராதாகிருஷ்ணன் என்பது எல்லாருக்கும் தெரியும். நாடக உலகில் இருந்து சினிமாவுக்கு வந்து அதில் மிகப்பெரிய சாதனைகளைச் செய்தார் காக்கா ராதாகிருஷ்ணன். தான் அப்படிப்பட்ட சாதனைகளைச் செய்தேன் என்றால் அதற்கு மிகப்பெரிய காரணம் ரெண்டு பேர்.

    அவங்களைக் குறிப்பிட்டே ஆகணும். அந்த ரெண்டு பேர்ல முதலிடத்தில் இருப்பவர் கலைவாணர் என்எஸ்.கிருஷ்ணன். என்னுடைய வாழ்க்கையில விளக்கேற்றி வைத்தவர் அவர்தான். அவர் இல்லன்னா சினிமா உலகத்துல நான் ஒரு நிலையான இடத்தைப் பிடித்திருக்க வாய்ப்பே இல்லை.

    அதே மாதிரி சினிமா உலகத்துல நான் மறக்க முடியாத இன்னொரு நபர் எம்ஜிஆர். தாய் மகளுக்குக் கட்டிய தாலிங்கற படத்துல நான் நடிச்சிக்கிட்டு இருந்தேன். இந்தப் படத்துல நடிக்கிறதுக்கு உங்களுக்கு சம்பளம் எவ்வளவுன்னு கேட்டார் எம்ஜிஆர். அதுக்கு மூவாயிரம் ரூபாய் என்றார் காக்கா ராதாகிருஷ்ணன். உடனே தயாரிப்பாளரை அழைத்தார் எம்ஜிஆர். அண்ணனுக்கு இந்தப் படத்துல 5000 ரூபாய் சம்பளம் கொடுங்க.

    அதுல 2000 ரூபாய் என் கணக்குல எடுத்துக் கொடுங்க என்றார் எம்ஜிஆர். இந்தப் படத்துல 5000 ரூபாய் சம்பளம் வாங்கியதுக்குப் பிறகுதான் சினிமா உலகிலே என்னுடைய சம்பளமே உயர்ந்தது. அதிகமான சம்பளத்தை எனக்கு வாங்கிக் கொடுத்ததைத் தாண்டி என் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தவர். என்னுடைய குடும்ப நலத்தைப் பற்றியும், என்னிடம் விசாரித்தவர்.

    அவருக்கு அடுத்து என்மீது அதிகமான அக்கறைக் காட்டியவர்னா அது கமல்ஹாசன்தான். அவருடன் சேர்ந்து நடித்த தேவர்மகன் படத்தை என்னால மறக்கவே முடியாது. என் வாழ்நாளில் நான் நடித்த மிக முக்கியமான திரைப்படம் அது என்று ஒரு பத்திரிகை பேட்டியில் காக்கா ராதாகிருஷ்ணன் பதிவு செய்துள்ளார்.

  • 3 ஆண்டுகளாக பாக்கியராஜின் அலுவலக வாசலில் நடிகர்… அவரா இவர்?

    3 ஆண்டுகளாக பாக்கியராஜின் அலுவலக வாசலில் நடிகர்… அவரா இவர்?

    விடாமுயற்சி நிச்சயமா வெற்றியைப் பெற்றுத் தரும்னு பல பெரியவங்க சொல்லி இருக்காங்க. அதற்கு உதாரணமான சம்பவம்தான் இது.

    பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக சேரணும் என்பது ஜெகனின் பல நாள் கனவு. எப்படியாவது அவரிடம் சேர்ந்துடுறேன் பாருன்னு தன்னோட நண்பர்கள்கிட்ட சவால் எல்லாம் விட்டுருக்காரு. நண்பர் என்ன சொன்னாருன்னு தெரியுமா? உன்னால நிச்சயமா பாக்கியராஜ்கிட்ட உதவி இயக்குனரா சேர முடியாது. அப்படி மீறி நீ சேர்ந்துட்டேன்னு வச்சிக்க. என் தலையை மொட்டை அடிச்சிக்கிறேன் என்றாராம் அவர்.

    அதுபோன்ற கேலியை எல்லாம் ஜெகன் பொருட்படுத்தவே இல்லை. தினமும் பாக்கியராஜ் வீட்டு வாசல்ல, அலுவலகத்துல நிப்பாரு. பாக்கியராஜ் சில நாள் இவரைப் பார்ப்பாரு. சில நாள்கள் பார்க்க மாட்டாரு. ஜெகன் தினமும் அவரோட வீட்டு வாசல்ல நிற்பது மட்டும் மாறவே மாறாது. இது ஒருநாள் அல்ல. 2 நாள் அல்ல. ஏறக்குறைய 3 வருஷமா பாக்கியராஜ் அலுவலக வாசலில் காத்து இருக்கிறார் ஜெகன்.

    தினமும் அவரு வீட்டு வாசல்ல நிற்கிறார்னா பாக்கியராஜ் பார்க்க மாட்டாரா என்ன? என்ன உன் பிரச்சனைன்னு கேட்டார். உங்களிடம் உதவி இயக்குனராக சேர வேண்டும் என்று தன்னோட ஆசையைச் சொன்னார் ஜெகன். 3 வருஷமாகக் காத்து நிக்கிறாருன்னா இதுக்கு மேலயும் இவரை நிக்க வைக்கிறதுல அர்த்தம் இல்லைன்னு பாக்கியராஜ் அவரை உடனடியாக தன்னோட உதவியாளராக சேர்த்துக் கொண்டார்.

    அவரிடம் சேர்ந்ததுல இருந்து ஜெகன் உழைத்த உழைப்பு அசாதாரணமானது. அதனால்தான் மிக விரைவிலேயே உதவி இயக்குனர் என்ற நிலையில் இருந்து இணை இயக்குனர் ஆனார். அதன்பிறகு ஒரு காலகட்டத்திலே பாக்கியராஜாலயே செம்புலி என்ற கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். அதன்பின்பு அவர் நாடறிந்த ஒரு நடிகராக இருப்பதும் எல்லோரும் தெரிந்த விஷயம்.

    பாக்கியராஜ் உடன் ஜெகன் இணைந்து நடித்த ராசுக்குட்டி படத்தில் செம்புலியாக வந்து கலக்குவார் ஜெகன். குடையை பாக்கியராஜிக்குப் பிடித்த படி அவர் செய்யும் அலப்பறை ஒவ்வொன்றும் திரையரங்கை சிரிப்பலையால் அதிர வைக்கும்.