Category: home

  • த்ரிஷா பற்றி டபுள் மீனிங் ஆபாச பேச்சு சர்ச்சை!.. உதயநிதி ஸ்டாலின் கைது

    த்ரிஷா பற்றி டபுள் மீனிங் ஆபாச பேச்சு சர்ச்சை!.. உதயநிதி ஸ்டாலின் கைது

    எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை இல்லத்தில் இருந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவிரி நீர் விவகாரம் தொடர்பாக அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை சர்ச்சையை கிளப்பிய நிலையில், அதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாகக் கூறப்படும் சில கருத்துகள் பெண்கள் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து ஆட்சேபனைக்குரியதாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த சிலர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

    அதன் தொடர்ச்சியாக, இன்று காலை காவல்துறையினர் சென்னை இல்லத்திற்குச் சென்று உதயநிதி ஸ்டாலினை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
    இதற்கிடையில், உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைது நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திமுக தரப்பினர் குற்றம்சாட்டியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றன.

    உதயநிதி ஸ்டாலின் கைது விவகாரம் தற்போது தமிழ்நாடு அரசியலில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், வழக்கு தொடர்பான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற விசாரணை மீது அரசியல் வட்டாரங்களின் கவனம் திரும்பியுள்ளது.
     

  • 20 ஆண்டுகள் காதலும் புரிதலும்… மீண்டும் திரையில் இணைய விருப்பம் தெரிவித்த சூர்யா – ஜோதிகா!

    20 ஆண்டுகள் காதலும் புரிதலும்… மீண்டும் திரையில் இணைய விருப்பம் தெரிவித்த சூர்யா – ஜோதிகா!

    நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா, தங்களது திருமண வாழ்க்கையின் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், தங்களது குடும்ப வாழ்க்கை, தொழில் பயணம் மற்றும் மீண்டும் இணைந்து நடிக்கும் ஆசை குறித்து மனம் திறந்து பேசியுள்ளனர்.

     திரையுலகில் பிஸியாக இருந்தாலும், குடும்பத்திற்கும், குழந்தைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழ்க்கையை சமநிலையுடன் கொண்டு செல்வதே தங்களது வெற்றியின் ரகசியம் என தெரிவித்துள்ளனர். சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூல் சாதனைகளைப் படைத்ததுடன், ரசிகர்களிடையே அவரது நடிப்புக்கும் பாராட்டுகள் குவிந்தன. அதேபோல் ஜோதிகாவும் பாலிவுட்டில் தரமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் வெற்றிகரமாக பயணித்து வருகிறார்.

    js

    உடலழகை விட உடல் ஆரோக்கியமே முக்கியம் என்ற எண்ணத்தில் இருவரும் தொடர்ந்து உடற்பயிற்சி, யோகா மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடைபிடித்து வருவதாக தெரிவித்துள்ளனர். வெளிப்புற அழகை விட மன உறுதியும் உடல் வலிமையும் தான் நீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

    jss

    திருமணமாகி 20 ஆண்டுகள் கடந்தாலும், ஒருவருக்கொருவர் கொடுக்கும் மரியாதை, அன்பு மற்றும் புரிதல்தான் தங்களது உறவை வலுப்படுத்தியதாக சூர்யா – ஜோதிகா தெரிவித்துள்ளனர். கருத்து வேறுபாடுகள் வந்தாலும், அதை பேசித் தீர்த்துக் கொள்வதே தங்களது வாழ்க்கை முறையாக இருப்பதாகவும் அவர்கள் பகிர்ந்துள்ளனர்.

    jo

    மேலும், ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து வரும் தங்களது திரை இணைவு குறித்து பேசிய இருவரும், “சரியான கதை அமைந்தால் மீண்டும் ஒன்றாக நடிக்க விரும்புகிறோம். ரசிகர்களின் அந்த ஆசையை நாங்களும் புரிந்துகொள்கிறோம். நல்ல கதைக்காக காத்திருக்கிறோம்,” என்று தெரிவித்துள்ளனர்.

    sur

    கடந்த 2006-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சூர்யா – ஜோதிகா தம்பதிக்கு தியா மற்றும் தேவ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். 20 ஆண்டுகால திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக கடந்த சூர்யா – ஜோதிகா தம்பதியினர், மீண்டும் ஒரே படத்தில் இணைவார்கள் என்ற செய்தி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • கார்த்தியுடன் முதன்முறையாக கைகோர்க்கும் மோகன் ராஜா… கார்த்தியின் 31வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

    கார்த்தியுடன் முதன்முறையாக கைகோர்க்கும் மோகன் ராஜா… கார்த்தியின் 31வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

    நடிகர் கார்த்தியின் 31வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை முன்னணி இயக்குநர் மோகன் ராஜா இயக்கவுள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தக் கூட்டணி, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

     பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படம் தற்போது இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது. கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் மாளவிகா மோகனன், எஸ்.ஜே. சூர்யா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் இந்தப் படம், வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    அதைத் தொடர்ந்து, கார்த்தி ‘மார்ஷல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பையும் நிறைவு செய்யும் கட்டத்தை எட்டியுள்ளார். இயக்குநர் தமிழ் இயக்கும் இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், ஆதி பினிஷெட்டி, சத்யராஜ், பிரபு, லால் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    இதனையடுத்து, சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் கல்யாண் சங்கர் இயக்கும் புதிய படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். 

    இந்த நிலையில், கார்த்தியின் 31வது படத்தை எஸ். லட்சுமணன் குமார் தயாரிப்பில் இயக்குநர் மோகன் ராஜா இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக கார்த்தியுடன் இணைவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

  • ஸ்டைலிஷ் லுக்கில் ரசிகர்களை மயக்கிய ராஷி கன்னா… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

    ஸ்டைலிஷ் லுக்கில் ரசிகர்களை மயக்கிய ராஷி கன்னா… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

    நடிகை ராஷி கன்னா, சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் அவர், தற்போது வெளியிட்டுள்ள புதிய கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றன.

    rasi

    மாடலிங் துறையின் மூலம் தனது பயணத்தை தொடங்கிய ராஷி கன்னா, பின்னர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தார். தமிழில் ‘இமைக்கா நொடிகள்’, ‘அடங்க மறு’, ‘அயோக்யா’, ‘சர்தார்’, ‘அரண்மனை 3’, ‘திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். தனது இயல்பான நடிப்பு, கவர்ச்சியான திரை தோற்றம் மற்றும் பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் திறமையால் தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

    rashi

    தற்போது ராஷி கன்னா, நடிகர் ரஜினிகாந்துடன் ‘தர்மன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘டிராகன்’ படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்கி வருகிறார்.

    rk

    பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘தர்மன்’ திரைப்படம் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், ஸ்டைலிஷ் தோற்றத்தில் வெளியான ராஷி கன்னா  புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை குவித்து வருகின்றனர். “கார்ஜியஸ்”, “பியூட்டிஃபுல்”, “குயின்” என பலரும் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

  • ‘நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம்’… ‘விஷ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஆடியோ விழாவில் சூர்யாவின் உருக்கமான பேச்சு!

    ‘நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம்’… ‘விஷ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஆடியோ விழாவில் சூர்யாவின் உருக்கமான பேச்சு!

     ‘விஷ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று கோவையில் திருவிழா போல நடைபெற்றது. இந்த விழாவில், சூர்யாவின் உருக்கமான பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தனது படத்தின் வசனத்துடன் பேச்சைத் தொடங்கிய சூர்யா, “இந்த ஆடியோ லான்சை நீங்கள் திருவிழாவாக மாற்றிவிட்டீர்கள். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி,” என்று ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

    தொடர்ந்து தனது பிறந்தநாளைப் பற்றி பேசிய அவர், “ஒரு காரணத்திற்காக நான் என் பிறந்தநாளைக் கொண்டாடவில்லை. ஆனால் நீங்கள் எல்லோரும் என் பிறந்தநாளை எப்படி கொண்டாடினீர்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். 5,000-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்திருக்கிறீர்கள். இன்னும் நிறைய நற்பணிகளை செய்திருக்கிறீர்கள். இந்த அன்புக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்,” என்றார்.

    கோவையுடனான தனது பாசத்தை வெளிப்படுத்திய சூர்யா, “கோயம்புத்தூர் என்னுடைய சொந்த ஊர். இந்த நகரத்துடன் எனக்கு நிறைய அழகான நினைவுகள் இருக்கின்றன. இங்கு வருவது எப்போதும் ஒரு தனி மகிழ்ச்சி,” என்று கூறினார்.
    இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரைப் பாராட்டிய அவர், “ஜி.வி. பிரகாஷ் எப்போதுமே என் மீது ஒரு தனி அக்கறை வைத்திருக்கிறார். அதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி,” என்றார்.

    நடிகை மமிதா பைஜுவைப் பற்றி பேசிய சூர்யா, “மமிதா… உங்களுக்கு இன்னும் நீண்ட பயணம் இருக்கிறது. உங்கள் எனர்ஜி முழுப் படத்திலும் தெரியும். அதுமட்டுமல்ல, இந்தப் படத்திற்காக தமிழில் நீங்களே டப்பிங் பேசியிருக்கிறீர்கள். அதற்கும், இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்ததற்கும் நன்றி,” என்று பாராட்டினார்.

    நட்பைப் பற்றிப் பேசிய சூர்யா, “எனக்குத் தெரிந்த ஒரே ‘ஷிப்’ ஃபிரெண்ட்ஷிப் தான். அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்,” என்று கூறியதற்கு ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினர். ரசிகர்களுடனான தனது 28 ஆண்டுகால பயணத்தை நினைவுகூர்ந்த அவர், “28 ஆண்டுகளாக என்னை உங்கள் கைகளில் தூக்கி நிறுத்தி அழகு பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இன்று நான் இந்த மேடையில் நிற்பதற்கு காரணம் நீங்கள் மட்டும்தான்,” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.

    மேலும், “இந்த உலகத்திற்கு வரும்போது யாரும் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வருவதில்லை. நமக்கு மிகவும் தேவையானது ஒன்று மட்டும்தான்… அது நம்பிக்கை. நம்பிக்கை இருந்தால் நாம் ஆசைப்படும் எதையும் சாதிக்க முடியும்,” என்றார்.

     “தாலி கட்டும் வரை மட்டும் காதல் இருக்கக் கூடாது. திருமணமான பிறகும் தினமும் காதலிக்க வேண்டும். 20 ஆண்டுகள் ஆனாலும் அதே அன்பையும் மரியாதையையும் கொடுக்க வேண்டும். மனிதர்கள் மாறலாம், ஆனால் அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பும் காதலும் மாறக் கூடாது,” என்று அவர் கூறினார்.

    மேலும், “வீட்டில் பல சமரசங்களைச் செய்து, குடும்பத்தை தாங்கி நிற்பவர்கள் பெண்கள். அவர்களுக்கு நாம் இன்னும் பல மடங்கு அதிகமான அன்பையும் மரியாதையையும் கொடுக்க வேண்டும்,” என்று தெரிவித்தார். அவரது இந்தக் கருத்துக்கு அரங்கமே கைதட்டி வரவேற்பு அளித்தது.
     

  • ஏப்ரல் இல்லை… ஆகஸ்ட் 14! – விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விழாவில் மமிதா பைஜுவை கலாய்த்த டிடி… வைரலான தருணம்!

    ஏப்ரல் இல்லை… ஆகஸ்ட் 14! – விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விழாவில் மமிதா பைஜுவை கலாய்த்த டிடி… வைரலான தருணம்!

    கோவையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. நடிகர் சூர்யா, நடிகை மமிதா பைஜு, இயக்குநர் வெங்கி அட்லூரி, படக்குழுவினர் மற்றும் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், மமிதா பைஜு பேசிய வார்த்தைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.

    மேடையில் பேசிய மமிதா பைஜு, இயக்குநர் வெங்கி அட்லூரிக்கு  நன்றி தெரிவித்தார். “வெங்கி சார் என்னை இவ்வளவு அழகாக வழிநடத்தியதற்கு மிக்க நன்றி. இந்தக் கதாபாத்திரத்திற்கு நான் முழுமையாக முயச்சித்துள்ளேன் என்று நம்புகிறேன். உங்களுடன் மீண்டும் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதே என் விருப்பம்,” என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

    தொடர்ந்து நடிகர் சூர்யாவைப் பற்றி பேசும்போது, “சூர்யா சாருடன் பணியாற்றியது ஒரு அற்புதமான அனுபவம். நீங்கள் எங்களெல்லோருக்கும் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல, மிகவும் அன்பான மற்றும் அற்புதமான இணை நடிகர். உங்களுடன் நடித்தது என் திரைப்பயணத்தில் மறக்க முடியாத தருணமாக இருக்கும்,” என்று பாராட்டினார்.

    அதியடுத்து, “இந்தப் படம் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகிறது. அனைவரும் கண்டிப்பாக பாருங்கள்,” என்று தவறுதலாகக் கூறிவிட்டார். உடனே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் டிடி சிரித்தபடியே, “ஏப்ரல் இல்லை மமிதா, ஆகஸ்ட் 14!” என்று திருத்திக் கூறினார். தனது தவறை உணர்ந்த மமிதா பைஜு, சிரித்தபடியே “ஆமாம்… ஆகஸ்ட் 14-ம் தேதி. அனைவரும் திரையரங்குகளில் வந்து ஆதரவு அளிக்க வேண்டும்,” என்று கூறினார்.

    இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ளதுடன், மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    ஏற்கனவே வெளியான படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் இந்த ஆண்டின் முக்கிய குடும்ப பொழுதுபோக்கு படங்களில் ஒன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு திரையுலகிலும் ரசிகர்களிடமும் அதிகரித்துள்ளது.

  • யஷ்ஷை முந்தும் நானி!.. தி பாரடைஸ் டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?..

    யஷ்ஷை முந்தும் நானி!.. தி பாரடைஸ் டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?..

    நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியாகும் தேதியை  படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

    இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் நானியுடன் கயாடு லொஹர், மோகன் பாபு, சோனாலி குல்கர்னி மற்றும் ராகவ் ஜூயல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    படத்தின் கதை 1980-களின் செகந்திராபாத் நகரின் சேரி பின்னணியில் நடக்கிறது. அமைப்பு ரீதியான ஒடுக்குமுறை, சமூக பாகுபாடு மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக போராடும் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டதாக படம் உருவாகியுள்ளது. 

    paradise

    கன்னட நடிகர் யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், நானியின் ‘தி பாரடைஸ்’ டீசர் ஆகஸ்ட் 6ம் தேதி வெளியாகிறது. மேலும் , தொடர்ந்து டீசர் மற்றும் ட்ரெயிலர் வெளியாவதால் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் இரு படங்களின் மீதான எதிர்பார்ப்பும் ஒரே நேரத்தில் அதிகரித்துள்ளது.

    சமூகப் பின்னணி, சரித்திர உணர்வு மற்றும் அதிரடி கலந்த கதைக்களத்துடன் உருவாகும் ‘தி பாரடைஸ்’, நானியின் திரைப்பட பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான படமாக அமையும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

  • “போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பது நீண்ட நாள் ஆசை!” – ‘வதந்தி 2’ குறித்து மனம் திறந்த சசிகுமார்

    “போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பது நீண்ட நாள் ஆசை!” – ‘வதந்தி 2’ குறித்து மனம் திறந்த சசிகுமார்

    பிரைம் வீடியோவில் வெளியாகவுள்ள ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ வெப் தொடரில் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளதாக நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

    தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் கதையை முதன்முதலில் கூறியபோது, தலைப்பில் இடம்பெற்றிருந்த ‘மிஸ்டரி ஆஃப் மணி’ என்பதை பார்த்தவுடன், “நான் மணி கதாபாத்திரத்திலா நடிக்கிறேன், இல்லை போலீஸ் அதிகாரியாகவா?” என்று ஆர்வமாக கேட்டதாக நினைவுகூர்ந்தார்.

    தொடர்ந்து பேசிய சசிகுமார், “என்னை ரசிகர்கள் பெரும்பாலும் ‘சுப்ரமணியபுரம்’ போன்ற படங்கள் மூலம் ரவுடி அல்லது கிராமத்து இளைஞர் கதாபாத்திரங்களில் பார்த்துள்ளனர். அதனால் இதிலும் அதுபோன்ற வேடம்தான் இருக்கும் என முதலில் நினைத்தேன். ஆனால், இயக்குநர் என்னை போலீஸ் அதிகாரியாக பார்க்க விரும்புவதாக கூறியபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது,” என்றார்.

    “இந்தக் கதாபாத்திரம் திரையில் மிகவும் நம்பகத்தன்மையுடன் வந்திருப்பதில் எனக்கு முழு திருப்தி உள்ளது. இதன் மூலம் இனி மேலும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

    இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸின் பணியைப் பாராட்டிய சசிகுமார், “‘வதந்தி’ முதல் சீசன் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தது. இரண்டாவது சீசன் முற்றிலும் புதிய கதை மற்றும் புதிய கதாபாத்திரங்களுடன் உருவாகியுள்ளது. இந்த தொடரில் எனது கதாபாத்திரத்திற்கு முழு நியாயமும் செய்திருக்கிறேன் என்ற நம்பிக்கை உள்ளது,” என்றார்.

    புதிய கதைக்களம், வித்தியாசமான விசாரணை பின்னணி மற்றும் சசிகுமாரின் போலீஸ் அதிகாரி தோற்றம் ஆகிய காரணங்களால் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • “அப்பா உருவாக்கிய பெயரை காப்பாற்றுவது என் பொறுப்பு!” – ஜேசன் சஞ்சய் உணர்ச்சிப்பூர்வ பேச்சு

    “அப்பா உருவாக்கிய பெயரை காப்பாற்றுவது என் பொறுப்பு!” – ஜேசன் சஞ்சய் உணர்ச்சிப்பூர்வ பேச்சு

    தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், இயக்குநராக அறிமுகமாகியுள்ள தனது முதல் திரைப்படமான ‘சிக்மா’ படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், தொகுப்பாளினி டிடி உடனான சமீபத்திய நேர்காணலில் தனது குடும்பம், தந்தையின் அறிவுரை மற்றும் இயக்குநர் பயணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

    அப்போது பேசிய ஜேசன் சஞ்சய், “என் தந்தை வரலாற்று சிறப்பு மிக்க ஒரு புரட்சியை உருவாக்கியுள்ளார். அது எனக்கு மட்டுமல்ல, எங்கள் குடும்பம் முழுவதற்கும் கூடுதல் பொறுப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பொறுப்பை நான் தொடர்ந்து சுமக்க வேண்டியுள்ளது. தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, மிகவும் கவனமாகவும் விழிப்புடனும் செயல்பட்டு அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்பதே என் எண்ணம்” என்று கூறினார்.

    மேலும், தனது தந்தை வழங்கிய முக்கியமான அறிவுரை குறித்து பேசும்போது, “எனக்காக தனி அடையாளத்தையும் தனி பெயரையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதையே அப்பா வலியுறுத்தினார். ‘உனக்கு எப்போது உதவி தேவைப்பட்டாலும் என்னிடம் கேள். ஆனால் முயற்சிகளை நீயே முன்னின்று செய்ய வேண்டும். நானாக முன்வந்து எதையும் செய்து தரமாட்டேன்’ என்று அவர் கூறிய அறிவுரை எனக்கு மிகவும் பிடித்தமானது” என்றார்.

    ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. இந்தப் படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். அதிரடி மற்றும் த்ரில்லர் அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்தப் படம், இளம் தலைமுறை ரசிகர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜேசன் சஞ்சயின் முதல் இயக்குநர் முயற்சி என்பதால் திரையுலகில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தீவிரமாக பங்கேற்று வரும் ஜேசன் சஞ்சய், தனது முதல் படத்தின் மூலம் இயக்குநராக தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கும் முயற்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • டாக்ஸிக் டிரைலர் ரிலீஸ் எப்போது? வெளியான செம மாஸ் அப்டேட்!..

    டாக்ஸிக் டிரைலர் ரிலீஸ் எப்போது? வெளியான செம மாஸ் அப்டேட்!..

    கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ திரைப்படத்தின் ட்ரெய்லர், வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

    இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட ஆக்ஷன்–க்ரைம் திரில்லர் திரைப்படம், ஆகஸ்ட் 26, 2026 அன்று உலகம் முழுவதும் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    yash

    படத்தில் நடிகர் யஷ்ஷுடன் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி மற்றும் ருக்மணி வசந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம், போர்த்துகீசிய காலனி ஆதிக்கம் முடிவுக்கு வந்துகொண்டிருந்த காலகட்டத்தில் கோவாவை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

    படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் போஸ்டர்கள் ஏற்கனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகவுள்ள ட்ரெய்லர் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த எதிர்பார்ப்புகளுக்கு டாக்ஸிக் எந்தளவு பதிலளிக்கிறது என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.