Category: throwback

  • படப்பிரச்சனையில் அவமதித்த சந்திரபாபு..! எம்ஜிஆர் கொடுத்த சூப்பர் ட்ரீட்மெண்ட்!

    படப்பிரச்சனையில் அவமதித்த சந்திரபாபு..! எம்ஜிஆர் கொடுத்த சூப்பர் ட்ரீட்மெண்ட்!

    சந்திரபாபுவுக்கும், எம்ஜிஆருக்கும் இருந்த கருத்து மோதலுக்கு முடிவு கட்டியது யாரு? வாங்க பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் என்ன சொல்றாருன்னு பார்ப்போம். 

    சந்திரபாபுவுக்கு அதிகமாக திரைப்பட வாய்ப்புகள் இல்லாத சமயத்துல டிஆர்.ராமண்ணாக்கிட்ட இருந்து அவருக்கு ஒரு போன் வந்தது. நான் டிஆர்.ராமண்ணா பேசுறேன். அடுத்து ஒரு படம் தயாரிக்கலாம்னு இருக்கேன். நீங்க எந்த நேரம் சரியா இருக்கும்னு சொன்னீங்கன்னா நான் வீட்டுக்கு வந்து கதை சொல்றேன் என்றார் டிஆர்.ராமண்ணா. உங்ககிட்ட போய் நான் கதை கேட்பேனா? உங்க கம்பெனியைப் பொருத்தவரைக்கும் கதையும் கேட்க மாட்டேன். படத்துல நடிக்கிறதுக்கு எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்கன்னும் நான் கேட்க மாட்டேன். நிச்சயமா நான் நடிக்கிறேன் என்றார் சந்திரபாபு.

    அது சரி யார் ஹீரோன்னு கேட்க, எம்ஜிஆர் தான் ஹீரோவா நடிக்கிறாருன்னு சொன்னார் டிஆர்.ராமண்ணா. அந்த ஆளுக்கிட்டன்னு சந்திரபாபு ஆரம்பிக்க, அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் விடுங்கன்னு சொன்னார் டிஆர்.ராமண்ணா. சரி. இந்தப் படத்துல நடிக்க எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்கன்னு கேட்டார் சந்திரபாபு. எதிர்பார்க்காத ஒரு தொகையை சொன்னார் டிஆர்.ராமண்ணா. சந்திரபாபு ஒரு 50 ஆயிரம் ரூபாய் கேட்கலாம்ன இருந்தாரு. ஆனா ஒரு லட்ச ரூபாய் சொன்னார் டிஆர்.ராமண்ணா. அதுக்குப் பின்னால சந்திரபாபு நடிக்க என்ன தயக்கம்? படத்தை ஒப்புக்கொண்டார். அதன் பெயர் பறக்கும் பாவை. 

    படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டு இருந்தபோது எம்ஜிஆரின் உதவியாளர் சந்திரபாபு பக்கத்துல வந்து ஐயா உங்களைப் பார்க்கணும்னு சொல்றாரு என்றார். ஐயா என்னைப் பார்க்கணும்னா ஐயா தான் இங்கே வரணுமே தவிர நான் போய் அவரைப் பார்க்க முடியாது என்று சந்திரபாபுவிடம் இருந்து பதில் வந்தது. அவர் இப்படி பதில் சொன்ன உடனே, அந்த நபருக்கு என்ன பண்றதுன்னே புரியல. இதைப் போய் எப்படி எம்ஜிஆர்க்கிட்ட சொல்றது? மெல்ல தயங்கி தயங்கி அந்த நபர் எம்ஜிஆரிடம் இந்த விஷயத்தைச் சொன்னார். அடுத்த 10வது நிமிஷம் எம்ஜிஆர் புறப்பட்டு வந்தார். எம்ஜிஆர் வந்த உடனே தான் உட்கார்ந்து இருந்த நாற்காலியை விட்டு எழுந்திருக்கக்கூட இல்லை சந்திரபாபு. நீங்க என் மேல ரொம்ப கோபமா இருக்கீங்கன்னு தெரியுது. உங்ககிட்ட சில விஷயங்கள் கேட்குறேன். அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க.

    உங்க படத்துல நடிக்க வாய்ப்பு கொடுங்கன்னு எந்தக் காலகட்டத்துலயாவது நான் கேட்டுருக்கேனா? உங்க கஷ்டத்துக்கு எல்லாம் காரணமான தயாரிக்கும் பொறுப்பு நீங்களே எடுத்த முடிவு. அது நான் சொல்லி செஞ்சதா? இல்ல நீங்களா எடுத்த முடிவா? கடுமையான வட்டிக்கு உங்க சொத்தெல்லாம் அடமானம் வச்சி கடன் வாங்க சொன்னது நானா? படம் எடுக்கணும்னு என்னை சந்திச்சி நீங்க பேசிய போது, என்னை வச்சிப் படம் எடுக்கணும்னா கொஞ்சம் பொறுமையா இருக்கணும். நிச்சயமா காலதாமதம் ஆகும்னு நான் உங்ககிட்ட சத்தியம் வாங்கிட்டேனா, இல்லையா? என்னுடைய எத்தனை படங்களின் படப்பிடிப்பு நின்னு போயிருக்கு? ஏன் என்னுடையதே கூட ஒரு சில படங்கள் நின்னுபோயிருக்கு. அதெல்லாம் உங்களுக்குத் தெரியாதா?

    உங்களுக்கும் எனக்கும் நடுவுல எத்தனை பேரு இருக்காங்க? அவங்கள்ல யாராவது நம்மை ரெண்டு பேருக்கும் உள்ள இந்தக் கருத்து வேறுபாடை நீக்குறதுக்கு ஏதாவது முயற்சி பண்ணினாங்களா? நீங்க ஆத்திரத்துல என்னைப் பத்தி தப்பு தப்பா பத்திரிகைக்காரங்ககிட்ட பேசுன மாதிரி என்னைக்காவது நான் உங்களைப் பத்திப் பேசிருக்கேனா? இது எல்லாத்துக்கும் மேல நான் என்ன தான் உங்களை ஆத்திரப்படுத்தி இருந்தாலும் நான் தகப்பனா மதிக்கிற எங்க அண்ணனை நாற்காலியா தூக்கி நீங்க அடிக்கப் போனீங்களே? அது சரிதானா? உங்க அப்பாவை நான் இப்படி அடிக்கப் போயிருந்தா நீங்க மன்னிப்பீங்களா? நாடோடி மன்னன் வெற்றி விழாவுல நான் என்ன பேசுனேன்? சந்திரபாபு ஒரு மாபெரும் கலைஞன்னு பேசுனேன். அதே எண்ணத்துலதான் இன்னிக்கும் இருக்கேன்.

    அதனாலதான் நாம ரெண்டு பேரும் இந்தப் படத்துல சேர்ந்து நடிக்கிறோம். கிறிஸ்துமஸ் அன்னைக்கு உங்களுக்கு ஒரு கேக்கும், பணமும் வந்ததே. அது யாரு அனுப்பிச்சிருப்பாங்கன்னு பல மணி நேரம் நீங்க குழம்பி இருப்பீங்க. அந்த ரெண்டையும் கொடுத்து அனுப்பிச்சது நான் தான். இந்த பறக்கும் பாவை படத்துல நீங்க நடிக்கிறீங்கன்னா அதுக்கு காரணமும் நான் தான். இந்தப் படத்துல உங்களை ஒப்பந்தம் பண்ணச் சொல்லி நான் தான் டிஆர்.ராமண்ணாகிட்ட சொன்னேன். அவங்க உங்களுக்குச் சொன்ன லட்ச ரூபாய் சம்பளத் தொகையும்… நான் சொல்லி அவர் சொன்னது தான்.

    உங்க வேதத்துல ஒரு கன்னத்துல அடிச்சா மறு கன்னத்தையும் காட்டுன்னு ஒரு வரி வரும். நான் மறுகன்னத்தைக் காட்டல. அதுக்குப் பதிலா கிறிஸ்துமஸ் கேக்கை உங்களுக்கு அனுப்பி வெச்சேன். பாபு சார் நீங்க நல்ல மனுஷன். நல்ல கலைஞன். இன்னும் மாபெரும் கலைஞனா வரணும். இன்னும் பெரிய மனுஷனா வளரணும்னு நான் ஆசைப்படுறேன்னு எம்ஜிஆர் சொன்ன போது சந்திரபாபு கண்களில் இருந்து கண்ணீர் கசிந்தது. மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னால, சந்திரபாபு கண்கள்ல இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வந்ததுன்னா அது அன்னைக்குத்தான் என்கிறார் சித்ரா லட்சுமணன்.    

  • ‘நடுநிசி நாய்கள்’ ரிசல்ட் தெரிஞ்சே தான் பண்ணேன்… ஓப்பனாக பேசிய GVM!

    ‘நடுநிசி நாய்கள்’ ரிசல்ட் தெரிஞ்சே தான் பண்ணேன்… ஓப்பனாக பேசிய GVM!

    ஸ்டைலிஷான காதல் மற்றும் ஆக்ஷன் படங்களை இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் நிறைய நமக்கு கொடுத்திருக்கிறார். அவர் சற்று வித்தியாசமாக ஒரு சீரியல் கில்லர் கேரக்டரை சுற்றி கதைக்களம் அமைத்து சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ஜானரில் ‘நடுநிசி நாய்கள்’ என்ற படத்தையும் எடுத்தார்.

    2011-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன இந்த படத்தில் சீரியல் கில்லராக வீரா நடிக்க, முக்கிய ரோல்களில் சமீரா ரெட்டி, உதய் கார்த்திக், அஸ்வின் ஆகியோர் நடித்திருந்தார்கள். இதற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருந்தார், ஆண்டனி எடிட்டராக பணியாற்றியிருந்தார். ஆடியன்ஸ் கௌதமிடம் இருந்து இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை, அதனால் இது தோல்விப்படமானது.

    சமீபத்தில், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கொடுத்த பேட்டியில் இப்படம் குறித்து பேசுகையில் “‘நடுநிசி நாய்கள்’ வந்து complete-ஆ ஒரு experimental படம் தான். ‘விண்ணைத்தாண்டி வருவயா’ படத்துக்கு அப்புறம் தான் இந்த படம் பண்ணேன்.

    Nadunisi Naaygal

    இதை ஒரு கோடி பட்ஜெட்டுக்குள்ள ஷூட் பண்ணி முடிச்சோம். இந்த படத்துல songs & background score கிடையாது. வெறும் sound effects மட்டும் தான். ரொம்ப டெக்னிக்கலா வொர்க் பண்ணோம். இந்த மாதிரி ஜானர் படங்களை சில பேர் தான் விரும்பி பார்ப்பாங்க.

    சோ, நாங்க அதோட ரிசல்ட் என்னன்னு தெரிஞ்சே தான் பண்ணோம். அதுக்குண்டான publicity மட்டும் பண்ணி ரிலீஸ் பண்ணோம். படத்தோட ரிலீஸ் அன்னைக்கு 4 shows-ம் full ஆச்சு. ஆனா, ரெண்டாவது நாள்ல இருந்து தியேட்டர்ல ஆடியன்ஸ் வரல. படமும் மூன்றே நாட்கள்ல தியேட்டர்ல இருந்து எடுத்துட்டாங்க” என்று கூறியுள்ளார்.

  • கிறிஸ்துமஸ் கொண்டாட காலணா இல்லாமல் தவித்த சந்திரபாபு… எம்ஜிஆர் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்!

    கிறிஸ்துமஸ் கொண்டாட காலணா இல்லாமல் தவித்த சந்திரபாபு… எம்ஜிஆர் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்!

    எல்லோருடைய வாழ்க்கையிலும் இரவும் வரும். பகலும் வரும். ஆனா சந்திரபாபு வாழ்க்கையில் மட்டும் அவரது சில நடவடிக்கைகள் காரணமாக ஒரு காலகட்டத்தில் அவரது வாழ்க்கையே இருண்டு போய் இருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில தான் அந்த ஆண்டு கிறிஸ்துமஸ் வந்தது. கிறிஸ்துமஸ் கொண்டாட கேக் வாங்கவோ, புதுத்துணி வாங்கவோ சந்திரபாபு கையில காலணா இல்லை. அப்படிப்பட்ட நேரத்துல அவரது வீட்டுக்கதவு தட்டப்பட்டது.

    சந்திரபாபு தம்பி கதவைத் திறந்தபோது வெளியில் நின்றிருந்த நபர் ஒரு பெரிய பாக்ஸை அவர் கையில் கொடுத்தார். இதை ஐயா உங்கக்கிட்ட கொடுத்துட்டு வரச் சொன்னார்னு சொல்லிவிட்டு அவர் கிடுகிடுவென போய்விட்டார். யார் அந்த ஐயான்னு சந்திரபாபு பார்க்குறதுக்குள்ள அவர் காரில் ஏறிப் பறந்து விட்;டார். சந்திரபாபு தம்பி ஜவஹர் அந்த பாக்ஸை அண்ணன் கையில் கொடுத்த போது பிரிச்சிப் பாருன்னு சொன்னார். அந்தப் பாக்ஸை பிரித்தார்.

    அதில் மிகப்பெரிய ஸ்பென்சர் கேக் இருந்தது. கூடவே ஒரு கவர். அதுக்குள்ள 5000 ரூபாய் பணம். யாரு அந்தப் பரிசை அனுப்பிச்சிருப்பாங்கன்னுனு சந்திரபாபு யோசித்தார். நெருங்கிய நண்பன் யாராவது தான் நம்மோட கஷ்டத்தை தெரிஞ்சிக்கிட்டு அனுப்பிருப்பான்னு நினைக்காரு. ஜெமினிகணேசன், சாவித்ரி, இல்லன்னா ஏஎல்.சீனிவாசன்னு பல பெயர்கள் அவரது மனதில் வந்து வந்து போனது. ஆனால் உண்மையிலேயே அவருக்கு யார் பணத்தை அனுப்பி வச்சாரோ அவரது பெயர் மட்டும் சந்திரபாபுவின் மனதில் வரவே இல்லை.

    அதுக்குக் காரணம் சந்திரபாபுவுக்கும், அவருக்கும் அந்தக் காலகட்டத்துல இருந்த மனக்கசப்பு. சந்திரபாபு பிரச்சனையில இருக்காருன்னு தெரிந்து கொண்டு அவருக்கு அந்தப் பரிசை அனுப்பி வைத்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர். கேக் அனுப்பியது மட்டுமல்ல. அதுக்குப் பின்னாலும் பல உதவிகளைச் சந்திரபாபுவுக்காக செய்தவர் தான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். 

  • ‘முந்தானை முடிச்சு’-க்காக ஏவிஎம் சரவணனுக்கு கே.பாக்யராஜ் போட்ட கண்டிஷன்!

    ‘முந்தானை முடிச்சு’-க்காக ஏவிஎம் சரவணனுக்கு கே.பாக்யராஜ் போட்ட கண்டிஷன்!

    தமிழ் சினிமாவில் ‘திரைக்கதை மன்னன்’ என்ற பட்டத்துடன் கெத்தாக வலம் வந்தவர் தான் கே.பாக்யராஜ். ஆரம்ப காலத்தில் அவரே இயக்கி, ஹீரோவாகவும் நடித்து பல சூப்பர் ஹிட் படங்களை ரசிகர்களுக்கு கொடுத்தார்.

    சமீபத்தில், கே.பாக்யராஜ் மரணமடைந்த செய்தி கேட்டு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும், தமிழ்நாட்டு மக்களும் அதிர்ச்சியடைந்தனர். கே.பாக்யராஜ் 1983-ஆம் ஆண்டு நடித்து, இயக்கிய படம் தான் ‘முந்தானை முடிச்சு’.

    இதில் கதாநாயகியாக ஊர்வசி நடித்திருந்தார். ‘ஏவிஎம் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் எம்.குமரன், எம்.சரவணன், எம்.பாலசுப்ரமணியன் இப்படத்தை தயாரித்தனர். தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார்.

    அவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த ஒரு பேட்டியில் ‘முந்தானை முடிச்சு’ படம் குறித்து பேசுகையில் “பாக்யராஜ் சார் ‘முந்தானை முடிச்சு’ கதைய சொல்றதுக்கு முன்னாடி என்கிட்ட ஒரு கண்டிஷன் போட்டார். என்னன்னா கதைய நான் உங்க ஆபிஸுக்கு வந்து உங்க ரூம்ல உட்கார்ந்து சொல்ல மாட்டேன்.

    Mundhanai mudichu

    Palmgrove hotel-ல ரூம் நம்பர் 88-க்கு வந்திருங்க, நான் கதை சொல்றேன்னு சொன்னார். ஏன் சார்? நான் என்னோட ரூம்ல தான் எல்லா கதையுமே கேட்பேன்னு சொன்னேன். இல்ல சார், தயவு செஞ்சு நான் சொல்றதை கேளுங்கன்னு சொன்னார்.

    அப்புறம் நான், குமரன், பாலு மூன்று பேரும் அவர் சொன்ன இடத்துக்கு போனோம். பாக்யராஜ் சார் கூட இருந்தவங்கல வெளியே அனுப்பிட்டு, கதை சொல்ல ஆரம்பிச்சாரு. இடைவேளையின் போது எங்களுக்கு காபி கொடுக்கச் சொல்லிட்டு அவர் வெளியே போனார்.

    மீண்டும் வந்து இரண்டாம் பாதி கதைய சொல்லி முடிச்சார். அவர் சொல்லி முடிச்சதும், இது கண்டிப்பா சூப்பர் ஹிட் படமா வரும் சாருன்னு சொன்னேன். அப்புறம், ஏன் இங்க வந்து சொல்ல சொன்னீங்கன்னு கேட்டபோது, உங்க ரூம்ல டெலிபோன் அடிக்கடி வரும், divert ஆகாம முழு ஸ்கிரிப்ட்டையும் சொல்லத்தான் சாருன்னு சொன்னார். அவர் அந்த படத்தை ரொம்ப அருமையா எங்களுக்கு பண்ணிக் கொடுத்தார்” என்று கூறியிருந்தார்.

  • எம்ஜிஆர் படத்துக்கு வைத்த பெயர் கமல் படத்துக்கா? டைரக்டர் ஸ்ரீதருக்கு என்னாச்சு?

    எம்ஜிஆர் படத்துக்கு வைத்த பெயர் கமல் படத்துக்கா? டைரக்டர் ஸ்ரீதருக்கு என்னாச்சு?

    புதுமை இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் கமல், அம்பிகா நடித்த படம் நானும் ஒரு தொழிலாளி. இந்தப் பெயரை முதலில் ஸ்ரீதர் சூட்டி இருந்தது எம்ஜிஆரும், அவரும் இணைந்த ஒரு படத்திற்காக. உரிமைக்குரல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எம்ஜிஆர் நடிக்க, ஸ்ரீதர் இயக்கத்தில் ஒரு படம் வெளியானது. அந்தப்படத்தின் படப்பிடிப்பு கூட 2, 3 நாள்கள் நடைபெற்றது.

    அந்தப் படத்தின் பெயர் தான் நானும் ஒரு தொழிலாளி. 2 நாள்கள் படப்பிடிப்பு நடத்திய பிறகு அந்தப் படத்தின் கதை அமைப்பு சரியாக வரும் என்கிற எண்ணம் ஸ்ரீதருக்கு வரல. அதனால எம்ஜிஆரை சந்தித்த அவர், இந்தப் படத்தின் கதையை நான் யோசித்து யோசித்துப் பார்த்தேன். சரியா வரும்னு எனக்குத் தோணல. அதனால இப்போதைக்கு இந்தப் படத்தின் படப்பிடிப்பை நிறுத்திடலாமா என்று எம்ஜிஆரிடம் கேட்டார் ஸ்ரீதர்.

    ஒரு படைப்பாளியான உங்களுக்கே அந்தப் படத்தின் கதை சரியாக அமையாதுன்னு தோணுறபோது அந்தப் படத்தின் படப்பிடிப்பை நடத்துறதுல என்ன லாபம் இருக்கு? நீங்க நல்லதா ஒரு கதையை ரெடி பண்ணுங்க. அதுக்குப் பின்னால நாம ஆரம்பிச்சிடலாம்னு எம்ஜிஆர் சொல்லி விட்டார். இதற்கு இடையில ஸ்ரீதர் ஒரு கன்னடப் படத்தை இயக்கப் போய் விட்டதால, நானும் ஒரு தொழிலாளி படம் அப்படியே டிராப் ஆனது. அந்தப் பெயரைத் தான் பின்னாடி கமல்ஹாசனை வைத்து எடுத்த படத்துக்கு வைத்தார் ஸ்ரீதர். 

  • ‘இயற்கை’-ல நடிக்காமல் மிஸ் பண்ண 2 ஹீரோக்கள்… எஸ்.பி.ஜனநாதனை நம்பிய அருண் விஜய்!

    ‘இயற்கை’-ல நடிக்காமல் மிஸ் பண்ண 2 ஹீரோக்கள்… எஸ்.பி.ஜனநாதனை நம்பிய அருண் விஜய்!

    2021-ஆம் ஆண்டு மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய முதல் படம் தான் ‘இயற்கை’. இதில் ஹீரோ, ஹீரோயினாக ஷாம், குட்டி ராதிகா நடித்திருந்தனர்.

    மேலும், கெஸ்ட் ரோலில் அருண் விஜய் கப்பல் கேப்டனாக நடித்திருந்தார். இப்படத்திற்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. 2020-ல் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் கொடுத்த ஒரு பேட்டியில் இந்த படம் குறித்து பேசுகையில் “‘இயற்கை’ படத்துக்கு ஹீரோ, ஹீரோயின்லாம் ஓகே பண்ணியாச்சு. 

    அந்த கப்பல் கேப்டன் கேரக்டர்ல நடிக்க மட்டும் யாருமே ஓகே சொல்லல. அது ஒரு கெஸ்ட் ரோல் தான். ஆனா, அது மிகவும் உயர்வான கேரக்டர். ஏன்னா, படம் முழுக்க ஹீரோயின் அந்த கப்பல் கேப்டனுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருப்பா.

    Arun vijay vikram madhavan

    நான் விக்ரம் சார் & மாதவன் சார்கிட்டலாம் அந்த கேரக்டர்ல நடிக்க கேட்டேன். அவங்க கதைலாம் கேட்டுட்டு பிடிச்சிருக்குன்னு சொன்னாங்க. ஆனா, பண்ணல. அப்புறம் நான் பல ஹீரோக்கள்கிட்ட கேட்டு பார்த்தேன், யாருமே பண்ணல. 

    அருண் விஜய் சார்கிட்ட சொன்னபோது, அவர் என்ன நம்புனார். நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன். ஏன்னா, அவர் ஓகே சொல்லாட்டி, இந்த படம் நகர்ந்திருக்காது. அதுக்கு அப்புறம் உடனே ஷூட்டிங்கிற்கான வேலைகளை தொடங்கிட்டோம்” என்று கூறியிருந்தார்.

  • ஹீரோவாவே நடிச்சிட்டிருந்த ராஜ்கிரண் சாருக்கு ‘பாண்டவர் பூமி’-ல கேரக்டர் ரோல் பண்ண மனசு இடம் கொடுக்கல… சேரன் ஷேரிங்ஸ்!

    ஹீரோவாவே நடிச்சிட்டிருந்த ராஜ்கிரண் சாருக்கு ‘பாண்டவர் பூமி’-ல கேரக்டர் ரோல் பண்ண மனசு இடம் கொடுக்கல… சேரன் ஷேரிங்ஸ்!

    நடிகர் ராஜ்கிரண் ஆரம்பத்தில் ‘என் ராசாவின் மனசிலே, அரண்மனை கிளி, எல்லாமே என் ராசாதான்’ என ஹீரோவாக நடித்து வந்தார். அவரை குணச்சித்திர நடிகராக மாற்றிய படம் ‘பாண்டவர் பூமி’ தான்.

    இயக்குநரும், நடிகருமான சேரன் இயக்கியிருந்த இந்த படத்தில் ஹீரோ, ஹீரோயினாக அருண் விஜய், ஷமிதா நடித்திருந்தனர். சமீபத்தில், இயக்குநர் சேரன் கொடுத்த பேட்டியில் ராஜ்கிரண் குறித்து பேசுகையில் “எனக்கு ‘பாண்டவர் பூமி’ கதைக்கு ஒரு மூத்த அண்ணன் கேரக்டரில் நடிக்க ஒருத்தர் தேவைப்பட்டார்.

    Pandavar Bhoomi rajkiran

    அப்போ ராஜ்கிரண் சார் ஒரு பெரிய தேக்கத்துல இருந்தார். தொடர்ச்சியா அவர் நான்கைந்து படங்கள் பண்ணி சரியா போகல. ஒரு டைம்ல வந்து ரஜினி சாருக்கு equal-ஆ பேசப்பட்ட ஒரு நடிகர். முதன்முதலா தமிழ் சினிமாவில் ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகர் ராஜ்கிரண் சார் தான். அப்போ ரஜினி சாரே அவ்ளோ சம்பளம் வாங்கல.

    நான் போய் ராஜ்கிரண் சார்கிட்ட ‘பாண்டவர் பூமி’ கதையை சொல்லப்போகும் போது வீட்ல தனிமையா யாருமே இல்லாம இருந்தார். அப்புறம் நான் கதையை சொன்னேன், ஆனால் அவர் நடிக்க மறுப்பு தெரிவிச்சார். ஏன்னா, ஒரு ஹீரோவாவே சினிமாவில் டிராவல் பண்ண ஒருத்தர், இந்த படத்துல ஒரு கேரக்டர் ரோல்ல நடிக்க அவரோட மனசு இடம் கொடுக்கல. அப்புறம் நான் அவர் மனசு நோகாதபடி ஓரளவுக்கு சம்பளம் பேசி இதுல நடிக்க ஓகே சொல்ல வச்சேன்” என்று கூறியுள்ளார்.

  • ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’-ல நடிக்கவே மாட்டேன்னு சத்யராஜ் சார் சொன்னார். ஆனா… பொன்ராம் சொன்ன ஃபிளாஷ்பேக்!

    ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’-ல நடிக்கவே மாட்டேன்னு சத்யராஜ் சார் சொன்னார். ஆனா… பொன்ராம் சொன்ன ஃபிளாஷ்பேக்!

    ஒரு சில படங்கள் அந்த நடிகரின் ரூட்டை அப்படியே மாற்றி அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும். அப்படி நம்ம சிவகார்த்திகேயனுக்கு அமைந்த படம் தான் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’.

    இந்த படத்தை இயக்குநர் பொன்ராம் தான் இயக்கியிருந்தார். இதில் ஹீரோயினாக ஶ்ரீதிவ்யா நடித்திருந்தார். அவருக்கு அப்பாவாக சத்யராஜ் நடித்திருந்தார்.

    சத்யராஜின் கேரக்டரும், அவரது நடிப்பும் இப்படத்தில் ஹைலைட்டாக இருந்தது. சமீபத்தில், இயக்குநர் பொன்ராம் நடிகர் சத்யராஜ் குறித்து பேசுகையில் “நான் சத்யராஜ் சாரை மீட் பண்ணி ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ முதல் பாதி கதையை சொன்னேன்.

    Varuthapadatha Valibar Sangam

    அவர் பிடிக்கலன்னு சொல்லிட்டார். அப்புறம் நான் சொன்னேன், சார் இந்த கேரக்டர் நீங்க பண்ணப் போறீங்கன்னு நினைச்சு நான் கதை பண்ணல. புரொடக்ஷன்ல தான் உங்ககிட்ட போய் சொல்ல சொன்னாங்க, நான் வந்து சொல்லிட்டேன். ஆனா, நீங்க பண்றீங்கன்னா நான் கண்டிப்பா திரும்ப கதைல வொர்க் பண்றேன் சாருன்னு சொன்னேன்.

    அதுக்கு அவர் நீங்க என்ன பண்ணாலும் இந்த ரோல்ல நான் நடிக்கவே மாட்டேன் பொன்ராம் சாருன்னு சொன்னார். அப்புறம் நான் இதோட க்ளைமேக்ஸ் மட்டும் கேட்டுட்டு முடிவு பண்ணுங்கன்னு சொல்லி சொன்னேன். க்ளைமேக்ஸ் சொன்னதும் என்கிட்ட sorry சொல்லிட்டு, இந்த படத்தை நான் தான் பண்றேன்னு சொல்லிட்டார்.

    ஆனா, எனக்காக கதைல கொஞ்சம் வொர்க் பண்ணுங்க பொன்ராம் சார் என் ஸ்டைலுக்கு தகுந்த மாதிரின்னு சொன்னார். நானும் அவர்கிட்ட பண்றேன் சாருன்னு சொல்லிட்டு, அதுக்கு அப்புறம் full-ஆ ஸ்கிரிப்ட்ல அவர் கேரக்டருக்காக வொர்க் பண்ணி சொன்னேன். அவருக்கு ரொம்ப குஷியாயிருச்சு. அதுக்கு அப்புறமா ஷூட்டிங் ஸ்பாட்ல எனக்கு முழுசா சப்போர்ட் பண்ணி அந்த ரோல்ல நடிச்சு கொடுத்தார்” என்று கூறியுள்ளார்.

  • கமல் கேட்ட மில்லியன் டாலர் கேள்வி… சிவாஜி சொன்ன சூப்பர் பதில்!

    கமல் கேட்ட மில்லியன் டாலர் கேள்வி… சிவாஜி சொன்ன சூப்பர் பதில்!

     

     

     

    பல ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி. அது கமல், சிவாஜி இருவருக்குமான ஒரு அரிய உரையாடல். தற்போது வைரலாகப் பரவி வருகிறது இந்த வீடியோ. இதுல கமல், சிவாஜியிடம் ஒரு கேள்வி கேட்கிறார். 1954க்குப் பிறகு நடிக்கிற எல்லா நடிகர்களுக்கும் உங்களோட பாதிப்பு இருக்கு. எனக்கும் அது முக்கியமா இருக்கு. எனக்கு அந்தக்காலத்துல நீங்க பண்ணியிருந்த சில விஷயங்களைப் பார்க்கும்போது வயித்தெரிச்சலா இருக்கும். உங்களுக்கு இன்ஸ்பிரேஷன் யாரு? எனக்கு அது போட்டு உறுத்திக்கிட்டே இருக்கும்.

    யாருமே ஒரிஜினல் கிடையாது. அம்மான்னு சொல்றதுகூட சொல்லிக் கொடுத்துத்தான் சொல்றோம்னு கமல் கேள்வி கேட்க, அதற்கு சிவாஜி சொன்ன பதில் இதுதான். நான் சின்னபிள்ளையில இருந்து அநேகமா ஆங்கிலப்படம் பார்க்குறது உண்டு. மிடாசாலின்டினோ பண்ணின சைலன்ட் மூவில ஹீக்குன்னு ஒரு படம் ஆக்ட் பண்ணிருக்காரு. அதுதான் அவர் பண்ணின டாக்கி பிக்சர். அதுல இருந்து எவ்ளோ படங்கள் பார்த்துக்கிட்டு வாரேன். மற்ற நடிப்புல இருந்து நம்ம நடிப்பு தனிப்பட்ட முறையில இருக்கணும்னு சின்னப்பிள்ளையில இருந்து ட்ரை பண்ணிக்கிட்டு இருக்குறதால ஒருவேளை சக்சஸ் பண்ண முடியுதோ, என்னமோன்னு பதில் சொல்கிறார்.

    அப்பவும் கமல் முடிஞ்சுதோ, என்னமோன்னு பணிவா சொல்றீங்க. முடிஞ்சிருக்கு என்று முத்தாய்ப்பாக புள்ளி வைக்கிறார். நாங்க கொஞ்சம் ஒரு மாதிரி நடந்தா சிவாஜி மாதிரி நடக்குறீங்க. உங்களுக்குன்னு ஒரு ஸ்டைல் இல்லையான்னு கேட்கிறாங்க. திருவிளையாடல் படத்துல ஒரு மாதிரியா நடக்குறீங்க. புருவத்தைத் தூக்குனா சிவாஜி மாதிரி வருதுங்குறாங்க. இதெல்லாம் எங்கே இருந்து புடிச்சீங்கன்னு கமல் கேட்கிறார். அதற்கு சிவாஜி சொன்ன பதில் இது. இதெல்லாம் ட்ரை பண்ணி நாமளே தெரிஞ்சிக்கறதுதான். மத்தவங்க சொல்லிக் கொடுத்து வர்றது இல்லை.

    நடிப்புங்கறது வேற. கல்லூரி வைக்கலாம். சொல்லிக் கொடுக்கலாம். ஆனா நம்மக்கிட்ட இருந்து வர்றது இருக்கே. நம்ம அடிவயித்துல இருந்து வர்ற எக்ஸ்பிரஷன் இதெல்லாம். அதெல்லாம் நாமளே தான் பிராக்டிஸ் பண்ணணுமோ ஒழிய, யாரும் சொல்லிக் கொடுத்து வர்றது இல்லை. என்ன கேரக்டர்னு நாம தெரிஞ்சிக்கிட்டா, அது சக்சஸ் ஆகப் போகுது. ஜஸ்ட் லைக் தேட்னு சொல்லவும், உங்களுக்கு ஜஸ்ட் லைக் தேட். அங்கே செட்ல பல பேரு முக்கிக்கிட்டு இருக்காங்க. அதுல நானும் ஒருவன்னு கமல் சொல்கிறார். 

  • மறக்க முடியுமா: 27 ஆண்டுகள் நிறைவு செய்த சங்கமம்

    மறக்க முடியுமா: 27 ஆண்டுகள் நிறைவு செய்த சங்கமம்

    பாட்ஷா, ஆஹா வெற்றிப்படங்களை தொடர்ந்து சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த படம் சங்கமம். ரகுமான் நாயகனாக நடித்த அந்த படத்தில் விந்தியா நாயகியாக அறிமுகம் ஆகி இருந்தார். மணிவண்ணன், விஜயகுமார், வடிவேலு, டெல்லிகணேஷ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். அந்த கால கட்டத்தில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருந்த பிரமிட் பிலிம்ஸ் சார்பில் வி. நடராஜன் இப்படத்தை தயாரித்திருந்தார்.

    sangamam movie

    இப்படத்தின் மிகப்பெரிஅய் தூண் ஏ.ஆர்.ரகுமான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மழைத்துளி மழைத்துளி, வராக நதிக்கரை ஓரம், சௌக்கியமா கண்ணே, முதல் முறை கிள்ளிப் பார்த்தேன், மார்கழி திங்கள் அல்லவா மற்றும் ஆலால கண்டா போன்ற அனைத்து பாடல்களும் இன்றும் இளைஞர்களால் கொண்டாடப்படுகிறது.

    sangamam movie

    சங்கம வெளியானபோது இப்படம் தில்லானா மோகனாம்பாளின் வெர்சன் என்று பலரும் கூறினார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்பில்  வெளியான இப்படம் ரசிகர்களை ஏனோ பெரிதாக கவரவில்லை. சுமாரான வெற்றியையே பெற்றது.

    கடந்த 1999ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி வெளியான சங்கமம் இன்றுடன் 27 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.