Category: throwback

  • பாடலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பெண்கள்… ஒரே பதிவில் வாயடைத்த வாலி!

    பாடலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பெண்கள்… ஒரே பதிவில் வாயடைத்த வாலி!

    வாலிபக்கவிஞர் என்று கவிஞர் வாலியை அழைக்க காரணம் அவரது பாடலில் அந்த விஷயம் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். இது மாதர் சங்கத்தினரையும் உசுப்பி எழச் செய்தது. அதனால் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, அதற்குப் பதிலடி கொடுத்துள்ளார் வாலி. வாங்க என்ன விவரம்னு பார்க்கலாம்.

    ஒரு காலகட்டத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் திரைப்படப்பாடல்களில் பெண்கள் என்ற தலைப்பிலே ஒரு கருத்தரங்கத்தை நடத்தினர். அதில் கவிஞர் வாலி இயற்றிய பல பாடல்கள் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாயின. அவற்றுக்கு எல்லாம் கவிஞர் வாலி ஒரு கட்டுரையில் அழகாகப் பதில் சொல்லி இருந்தார். பெண்ணால் பிறந்து பெண்ணுடன் வாழ்ந்து பெண்ணை ஈன்றெடுக்கும் எந்த ஆண்மகனும் தற்கால சமூகத்தில் பெண்ணைக் கொச்சைப்படுத்தி பேசவோ, எழுதவோ மாட்டான். படப்பாடல்கள் பாடலாசிரியர்களின் கருத்து அல்ல என்பதை முதலிலே புரிந்து கொள்ள வேண்டும்.

    ஒரு படப்பாடல் படத்தின் கதாநாயகனோ, கதாநாயகியோ தாங்கி  நிற்கும் கருத்தை வெளிப்படுத்துகிறதே தவிர, படைப்பாளியின் கருத்தை வெளிப்படுத்துவதில்லை. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும். அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் என்ற பாடலை என்னுடைய கருத்தாக ஏற்றுக் கொண்டு இருந்தால், மக்கள் பெரிய அளவிலே குழம்பிப் போயிருப்பார்கள். எந்த மூன்றெழுத்தை நான் சொல்ல வருகிறேன் என்பது அவர்களது சிந்தையை சல்லடை கண்களால் துளைத்துவிடும்.

    அது கதாபாத்திரத்தின் கருத்து. அதுவும் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்த எம்ஜிஆரின் இமேஜை சார்ந்த கருத்து என்பது மக்களுக்குத் தெளிவாகவே புரிந்து இருந்தது. அதனால் தான் மூன்றெழுத்து என்று எம்ஜிஆர் குறிப்பிடுவது திமுக என்று உணரப்பட்டு கொட்டகையில் கரவொலி எழும்ப காரணமாக அமைந்தது. நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார் என்ற பாடலை என்னுடைய கருத்தாக மக்கள் ஏற்றுக் கொண்டு இருந்தால் நான் நகைப்புக்கு உரியவனாக இருப்பேன்.

    அந்த வரிகளை நான் எம்ஜிஆர் உதடுகளில் உட்கார்த்தி வைத்தேன். அப்படி ஆணையிடவும், அதை நடத்திக் காட்டவும் அவருக்கு அருகதையும், ஆற்றலும் உள்ளதாக மக்கள் எண்ணியதின் விளைவே அந்தப் பாடலுக்கு பெருமை சேர்த்தது. கனியன் பூங்குன்றனார் பாடிய தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற மந்திர வாக்கியத்தை மாதர் சங்கத்தினர் மனனம் செய்வது நல்லது என்று அந்தக் கட்டுரையிலே குறிப்பிட்டுள்ளார் கவிஞர் வாலி.

  • MGR: எம்.ஜி.ஆர் படத்துக்கு பாட்டெழுதிய கே.பாக்யராஜ்!.. அந்த படத்துக்கா?..

    MGR: எம்.ஜி.ஆர் படத்துக்கு பாட்டெழுதிய கே.பாக்யராஜ்!.. அந்த படத்துக்கா?..

    80களில் தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் என கலக்கியவர் கே.பாக்யராஜ். குறிப்பாக கே.பாக்யராஜின் படங்களுக்கு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. அப்போதெல்லாம் மேட்டனி ஷோ என சொல்லப்படும் மதிய காட்சிக்கு பெண்கள் கூட்டம் கூட்டமாக் சென்று தியேட்டரில் பாக்யராஜ் படங்களைத்தான் பார்ப்பார்கள்.

    அந்த அளவுக்கு அதிக ரசிகைகளை பாக்யராஜ் பெற்றிருந்தார். ஒருபக்கம் மறைந்த நடிகர் மற்றும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் தீவிர ரசிகராக பாக்கியராஜ் இருந்தார். அவர் சென்னை வந்த போது எம்ஜிஆரை சந்திக்க முயன்று அது நடக்கவில்லை. ஆனால் அதே பாக்யராஜ் திரைப்படங்களை இயக்க துவங்கியதும் அவரின் படங்களை பார்த்து எம்.ஜி.ஆர் பாராட்டினார்.

    அதோடு ஒரு கட்டத்தில் பாக்யராஜை தனது கலை வாரிசு எனவும் எம்.ஜி.ஆர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அப்படிப்பட்ட கே. பாக்யராஜ் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவரின் மரணம் திரையுலகிற்கே பேரிழப்பாக அமைந்தது. இந்நிலையில்தான் சில மாதங்களுக்கு முன்பு ஒரு விழாவில் பேசிய கே.பாக்யராஜ் சினிமாவில் நுழைவதற்கு முன்பு எம்.ஜி.ஆரின் படத்திற்கு பாடல் எழுதிய சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

    நான் சென்னை வந்து சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த போது கவிஞர் புலமைப்பித்தன் என்னிடம் ‘தம்பி உன்னுடைய கையெழுத்து அழகாக இருக்கிறது.. நான் எழுதவுள்ள பாடல் ஒன்றை நீ காப்பி பண்ணு’ என்று கூப்பிட்டார். நானும் சென்றேன். அப்படி நான் போய் பார்த்தால் அது தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த பல்லாண்டு வாழ்க திரைப்படம்.

    அந்த படத்தில் இடம்பெற்ற ‘ஒன்றே குலமென்று பாடுவோம்’ பாடலை புலமைப்பித்தன் சொல்ல நான் எழுதினேன்.. தலைவரைத்தான் சந்திக்க முடியவில்லை.. தலைவரின் படத்திற்கு பாடல்களை காப்பி பண்ணும் வாய்ப்பாவது நமக்கு கிடைத்ததே’ என்று நான் மிகவும் சந்தோஷப்பட்ட தருணம் அது’ என மிகவும் நெகிழ்ச்சியுடன் பாக்கியராஜ் பேசியிருந்தார்.

  • Nayagan: 50 ஆயிரம் பேசி 6 லட்சம் சம்பளம் வாங்கிய ஜனகராஜ்!.. நாயகனில் நடந்த சம்பவம்!..

    Nayagan: 50 ஆயிரம் பேசி 6 லட்சம் சம்பளம் வாங்கிய ஜனகராஜ்!.. நாயகனில் நடந்த சம்பவம்!..

    மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன், சரண்யா, ஜனகராஜ், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்து 1987ம் வருடம் வெளியான திரைப்படம் நாயகன். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். கமலின் சினிமா கெரியரில் இது ஒரு முக்கிய படமாக அமைந்ததோடு தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட சிறந்த படங்களில் நாயகனும் இடம் பிடித்தது.

    விமர்சனரீதியாக பலரின் பாராட்டை பெற்றது இப்படம். மும்பையில் தமிழர்களிடம் செல்வாக்கு பெற்றிருந்த வரதராஜ முதலியார் என்பவரின் உண்மை கதையை அடிப்படையாக வைத்து இந்த படத்தின் கதை, திரைக்கதையை மணிரத்தினம் உருவாக்கியிருந்தார். கமலும் மிகச் சிறப்பான நடிப்பை இந்த படத்திற்காக கொடுத்திருந்தார்.
    இந்த படத்தின் கமலின் நண்பராக படம் முழுக்க வரும் கதாபாத்திரத்தில் ஜனகராஜ் நடித்திருந்தார். இந்த படத்தில் பல காட்சிகளில் ஜனகராஜ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்..

    இந்த படத்தை தயாரித்தவர் முத்தா இராமசாமி. இந்நிலையில், முத்தா ராமசாமியின் தம்பி மகள் அதாவது முக்தா சீனிவாசனின் மகள் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய போது இந்த படம் பற்றிய ஒரு தகவலை பகிர்ந்து கொண்டார்.

    nayagan

    இந்த படத்தை தயாரிப்பது என என் பெரியப்பா முடிவு செய்ததும் ஜனகராஜிடம் பேசினார். ஏற்கனவே என் பெரியப்பா தயாரித்த சில படங்களில் ஜனகராஜ் நடித்திருந்ததால் இருவருக்கும் நல்ல பழக்கம் உண்டு. ஜனகராஜ் 5 நாட்கள் மட்டுமே நடித்தால் போதும் என மணிரத்னத்தின் உதவியாளர் கூறினார். எனவே, அவர் ஒரு லட்சம் சம்பளம் கேட்டார். ஆனால் என் பெரியப்பாவோ ‘ரூ.40 ஆயிரம் கொடுக்கிறேன்’ என்றார். அதன்பின் ‘50 ஆயிரம் கொடுங்கள்’ என ஜனகராஜ் பேசி முடித்தார்.

    ‘சரி மொத்தம் 5 நாட்கள் மட்டும் நீ நடித்தால் போதும்.. தினமும் 10 ஆயிரம் கொடுத்து விடுகிறேன்’ என சொல்ல ஜனகராஜ் சம்மதித்தார். ஆனால் படத்தின் சூட்டிங் துவங்கிய பின் ஜனகராஜின் கதாபாத்திரம் மேலும் மேலும் விரிவுபடுத்தப்பட்டு மொத்தம் 60 நாட்கள் அந்த படத்தில் அவர் நடித்தார்.

    எனவே என் பெரியப்பா அவருக்கு சம்பளமாக ரூ.6 லட்சம் ரூபாய் கொடுத்தார். என் பெரியப்பா எப்போதெல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு செல்கிறாரோ அப்போதெல்லாம் அவரை பார்த்தவுடன் ஜனகராஜ் ‘தெய்வமே நான் வந்துவிட்டேன் தெய்வமே’ என்று சொல்லி ஓடி வந்து கட்டி பிடித்துக் கொள்வார்’ என அவர் சொல்லியிருக்கிறார்.

  • Kamal: இனிமே உன்ன வச்சி படமெடுக்க மாட்டேன்!. பாலச்சந்தரை டென்ஷன் ஆக்கிய கமல்..

    Kamal: இனிமே உன்ன வச்சி படமெடுக்க மாட்டேன்!. பாலச்சந்தரை டென்ஷன் ஆக்கிய கமல்..

    களத்தூர் கண்ணம்மா உள்ளிட்ட சில படங்களில் சிறுவனாக நடித்த கமலுக்கு வாலிப வயதை எட்டியதும் எந்த துறையை தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம் வந்தது.. சினிமாத்துறையில் நடன இயக்குனர் ஆவதா? நடிகனாவதா? அல்லது வேறு ஏதாவது செய்யலாமா? என்ற குழப்பத்தில் அவர் இருந்தர்.

    அதன்பின், தங்கப்பன் என்கிர நடன இயக்குனரிடம் கமல் உதவியாளராக சேர்ந்தார். ஆனால் அவரை அங்கே பார்த்த நடிகர் ஜெமினி கணேசன் ‘நீ எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய். என்னுடன் வா’ என கமலை அங்கிருந்து கூட்டி சென்ற இடம் இயக்குனர் கே.பாலச்சந்தரின் அலுவலகம்.

    ‘இவனை நீ நடிகனாக்க வேண்டும்’ என ஜெமினி கணேசன் சொல்ல அதற்குக் சம்மதித்த பாலச்சந்தர் தான் இயக்கும் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் கமலை நடிக்க வைத்தார். இதன் காரணமாகவே கமல் நட்சத்திரமாக மாறினார். பாலச்சந்தரின் பல படங்களிலும் கதாநாயகனாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின் தொடர்ந்து பல இயக்குனர்களின் படங்களிலும் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார் கமல்ஹாசன்..

    unnaal mudiyum

    பாலச்சந்தரின் இயக்கத்தில் கமல்ஹாசன் கடைசியாக நடித்த திரைப்படம் உன்னால் முடியும் தம்பி. இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது ஒரு சம்பவம் நடந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு கமல் தாமதமாக வர உதவி இயக்குனர் ஒருவர் ‘ஏன் சார் இவ்வளவு லேட்டா வறீங்க?’ என்று கேட்டிருக்கிறார்.

    அப்போது கமல் ‘நான் என்ன மாதிரியான படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.. நீங்க சீரியல் போல ஒரு படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்’ என சொல்லிவிட்டாராம். இதை அந்த உதவி இயக்குனர் பாலசந்தரிடம் சொல்ல கோபமடைந்த பாலச்சந்தர் ஒரு மாலையை கமலின் கழுத்தில் போட்டு ‘இதுதான் நான் உன்னை வைத்து இயக்கம் கடைசி திரைப்படம்’ என சொல்லியிருக்கிறார். சொன்னது போலவே அந்த படத்திற்கு பின் கமலை வைத்து பாலச்சந்தர் எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • சிவாஜியா கொக்கா? அவருக்கிட்ட இதெல்லாம் நடக்குற காரியமா?

    சிவாஜியா கொக்கா? அவருக்கிட்ட இதெல்லாம் நடக்குற காரியமா?

    சிவாஜியை தமிழ்சினிமா உலகின் பிதாமகன், தெய்வப்பிறவி, சிம்மக்குரலோன், நடிகர் திலகம் என்றெல்லாம் சொல்வோம். அவரது நடிப்புக்கு ஈடு இணை இல்லை என்றே சொல்லலாம். தமிழ் சினிமா உலகின் நடிப்பு அகராதி யார் என்றால் கண்ணை மூடிக்கொண்டு சிவாஜி கணேசன் என்று சொல்லி விடலாம். அதனால் தான் என்னவோ அவரது முதல் படத்தின் முதல் டயலாக்கே சக்சஸ் என்று ஆரம்பித்துள்ளது. அதைத் தக்க வைத்தவர் சிவாஜி. அப்படிப்பட்ட நடிகர் திலகத்தைப் பற்றி ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வி ரசிக்கும்படியாக இருந்தது. சிவாஜிகிட்ட அதெல்லாம் நடக்குமா என்ற ரீதியில் தான் அவரது கேள்விக்குப் பதில் உள்ளது. இது பற்றி பார்ப்போமா… 

    சிவாஜி நடிச்ச கதாபாத்திரங்கள்ல அவருக்கு ஒட்டாத கதாபாத்திரங்கள்னு பேசப்பட்டதா? என்று ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் அளித்த பதில் இதுதான்.  சிவாஜி நடிச்ச கதாபாத்திரங்கள்ல அவருக்கு ஒட்டாத கதாபாத்திரங்கள் கூட இருந்து இருக்கும். ஆனால் படம் பார்க்கின்ற நீங்கள் அதை உணர முடியாதபடி ஒரு மாயம் செய்து விடுவார் சிவாஜி. அதனால எந்த கதாபாத்திரம் அவருக்கு ஒட்டாம திரையில இருந்ததுன்னு நாம கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம் என்கிறார் சித்ரா லட்சுமணன். 

    இதில் இருந்து பார்க்கும்போது நடிப்பின் இமயம், நடிப்பின் சக்கரவர்த்தி சிவாஜி என்பது நமக்கு நன்கு தெரிய வருகிறது. அவர் எப்படி நடித்தாலும் அது ரசிக்கும்படியாகத் தான் இருக்கும். இதுல அவருக்கு நடிப்பு வரலன்னு யாராலும் சொல்ல முடியாது. அந்த நடிப்பும் சாதாரணமாக இருந்தாலும் அது அந்த கேரக்டராகவே மாறி இருக்கும். அதுதான் சிவாஜியின் திறமை. இப்படி ஒரு கேரக்டரை சிவாஜியால்தான் நடிக்க முடியும்னு அந்தக் காலத்தில் பலரும் சொல்வார்கள். அது இன்று வரை தொடர்கிறது என்றால் அதற்கு காரணம் நடிப்பை நேசித்து ரசித்து செய்தவர் சிவாஜி என்றால் அது மிகையில்லை. 

  • காமெடிப்படங்களில் கலக்கிய சிவாஜி… இயக்குனருக்குக் கொடுத்த பதிலடி!

    காமெடிப்படங்களில் கலக்கிய சிவாஜி… இயக்குனருக்குக் கொடுத்த பதிலடி!

    நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த படம் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி. அது ஒரு முழுநீள நகைச்சுவை படம். அப்படி ஒரு வாய்ப்பு எப்படி கிடைத்தது? அதில் நடிக்க எப்படி சம்மதித்தீர்கள் என ஒரு நிருபர் சிவாஜியைக் கேட்டார். அந்தப் படத்தை பிஆர்.பந்துலு தயாரித்தார். ப.நீலகண்டன் டைரக்டர். மராத்தி மொழியி கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். ஆபாசம் இல்லாம ஒரு நகைச்சுவை படத்தை எடுக்க வேண்டும் என்ற ஆசையில அந்தப் படத்தை எடுத்தாங்க.  

    அந்தப் படத்தின் இயக்குனரான ப.நீலகண்டனை எனக்கு சின்ன வயசுல இருந்தே நல்லா தெரியும். பராசக்தி படத்தில் நான் நடிக்க சென்றபோது அவர் அங்கு இருந்தார். இவங்களை எல்லாம் ஏன் உள்ளே விடுறீங்கன்னு என்னைப் பார்த்துக் கேட்டவர். அப்படிப்பட்ட அவர் எங்கிட்ட வந்து நீங்க என் படத்துல நடிக்கணும்னு கேட்டா அது யாருக்கு வெற்றி? அதனால தான் அந்தப் படத்துல நான் நடிச்சேன்.

    கல்யாணம் பண்ணியும் பிரம்மாச்சாரி படத்தைப் பொருத்தவரைக்கும் அதோட சிறப்பு என்னன்னா நீங்க படத்தை பார்த்து ரசிக்கிற மாதிரியே அந்தப் படத்தோட வசனத்தை மட்டும் கேட்டாலும் ரசிக்க முடியும். கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி மாதிரி நான் நடித்த இன்னொரு நகைச்சுவை படம் சபாஷ் மீனா. அதுல நானும் சந்திரபாபுவும் இணைந்து நடித்தோம் என்ற பத்திரிகை நிருபர் ஒருவருக்குப் பதில் சொல்லி இருக்கிறார் சிவாஜி. 

  • பாராட்டு, விமர்சனம் ரெண்டையும் லாவகமாகக் கையாண்டவர் ஜன நாயகன் வினோத்!

    பாராட்டு, விமர்சனம் ரெண்டையும் லாவகமாகக் கையாண்டவர் ஜன நாயகன் வினோத்!

    ஒவ்வொரு படத்திலும் மக்களுக்கு ஒரு நல்ல மெசேஜ் சொல்ல வேண்டும் என்று நினைப்பவர் இயக்குநர் ஹெச்.வினோத். ‘சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு’ ஆகிய ஐந்து படங்களுக்கு பிறகு வினோத் இயக்கியுள்ள ஆறாவது படம் தான் ‘ஜன நாயகன்’. 

    இதில் கதாநாயகனாக நடிகரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜய் நடித்துள்ளார். கடந்த வாரம் திரைக்கு வந்த இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

    ஹெச்.வினோத் குறித்து அவரது நண்பரும், ‘கத்துக்குட்டி, உடன்பிறப்பே’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநருமான இரா.சரவணன் 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் “‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் ரிலீஸான நாள். இயக்குநர் ஹெச்.வினோத்தும் நானும் கடற்கரையோரம் அமர்ந்திருந்தோம்.

    Era saravanan theeran valimai

    ஒரே வாழ்த்து மழை. அடித்துக்கொண்டே இருந்தது அவர் போன். எதையும் தலைக்கு ஏற்றிக்கொள்ளாமல் இயற்கை, மரம், மழை எனப் பிரசங்கம் பேசிக் கொண்டிருந்தார் வினோத். தீரனைப் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. இரவு நெடுநேரம் ஆனதால், கடற்கரையோரம் காவல் துறை வாகனம் வந்தது.

    யார் என அதட்டியவர்கள் தீரன் பட இயக்குநர் எனத் தெரிந்து கைகுலுக்கினார்கள். போலீஸ் பட்ற சிரமங்களை அழுத்தமா சொல்லி இருக்கீங்கன்னு பேசுறாங்க சார்… என்றார்கள். அப்போதும் படம் குறித்தோ கதை குறித்தோ வினோத் எதுவும் பேசவில்லை. 

    அஜீத்குமாரின் ‘வலிமை’ ரிலீஸான நேரம். அதேபோல் வினோத்துடன் அமர்ந்திருந்தேன். மாற்று விமர்சனங்கள் கும்மியடித்துக் கொண்டிருந்தன. அப்போதும் இன்றைய அரசியல், இயற்கை, மரங்கள் எனப் பேசிக் கொண்டிருந்தார் வினோத். பாராட்டு, விமர்சனம் என எதையும் இவ்வளவு லாவகமாகக் கையாண்ட ஒருவரை இதுவரை நான் பார்த்ததில்லை” என்று பதிவிட்டிருந்தார்.

  • ஒரே வேட்டி, சட்டை.. மரத்தடியில் படுக்க வைத்த பாரதிராஜா… முதல் மரியாதையை அசைபோட்ட சிவாஜி!

    ஒரே வேட்டி, சட்டை.. மரத்தடியில் படுக்க வைத்த பாரதிராஜா… முதல் மரியாதையை அசைபோட்ட சிவாஜி!

    இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் திரைவாழ்க்கையிலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடைய திரை வாழ்க்கையிலும் முதல் மரியாதை முக்கியமான திரைப்படம். அந்தப் படத்தில் நடித்த அனுபவம் பற்றி தன் வாழ்க்கை வரலாற்று நூலில் சிவாஜிகணேசன் பகிர்ந்துள்ளார். என்னன்னு பாருங்க. 

    பாரதிராஜா சின்ன பிள்ளையில இருந்து எனக்குத் தெரிந்தவர். எனக்கு வேண்டியவரும் கூட. அவருடைய படத்தில நான் நடிக்கணும்னு கேட்டுக்கிட்டார். அப்போ எனக்கு உடல் நலம் சரியில்லை. ஆனாலும் அவருடைய வேண்டுகோளை ஏற்று நான் அந்தப் படத்தில நடிக்க நான் ஒப்புக் கொண்டேன். சூட்டிங்கிற்காக ஒரு மாசம் மைசூர் சென்று இருந்தேன்.

    சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சியில் காவிரி கரையில ஒரு மரத்தடியில என்னை உட்கார வச்சார். காலுக்கு செருப்பு கூட இல்லாம ஒரே ஒரு வேட்டி சட்டை கொடுத்து அங்கேயே என்னைப் படுக்க வைத்து இருந்தார் பாரதிராஜா. கிராமிய சூழலில் எடுக்கப்பட்ட அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

    முதல் மரியாதைக்கு அப்புறமும் பாரதிராஜா டைரக்ஷன்ல நான் ஒரு படம் நடிச்சேன். அந்தப் படத்தினுடைய பெயர் பசும்பொன். அதுல நான், சிவக்குமார், ராதிகா எல்லாரும் நடிச்சோம். பாரதிராஜாவோடு பணியாற்றியது மறக்க முடியாத ஒரு அனுபவம் என்று பதிவு செய்துள்ளார் நடிகர் திலகம் சிவாஜி.

  • காதலா, சோகமா, சிருங்கார ரசமா? கண்டுபிடிங்கப்பா… தித்திக்க வைத்த இளையராஜாவின் எவர்கிரீன் பாடல்!

    காதலா, சோகமா, சிருங்கார ரசமா? கண்டுபிடிங்கப்பா… தித்திக்க வைத்த இளையராஜாவின் எவர்கிரீன் பாடல்!

     

    சோக ராகத்தில் சிருங்கார ரசம் ஏற்றி 2 தாளங்களில் நம்மை ரசிக்க வைத்தவர் இசைஞானி இளையராஜா. திருமண அழைப்பிதழ்களில் திருக்குறளுக்குப் பின் அதிகம் அச்சிடப்பட்ட கவிப்பேரரசு வைரமுத்துவின் 2 வரிகள். இந்தப் பாடலை கவிக்கோ அப்துல் ரகுமான் எந்தளவுக்குக் கொண்டாடினார்? இவ்ளோ சிறப்புக்குரியது எந்தப் பாட்டு? வாங்க பார்க்கலாம். 

    1982ல ஸ்ரீதர் இயக்கத்தில் இசைஞானி இளையராஜாவோட இசையில கார்த்திக், சி.ஜி. மற்றும் பலர் நடித்து வெளியான படம் நினைவெல்லாம் நித்யா. இந்தப் படத்துல எல்லா பாட்டுமே தேன். அதிலும் வைரமுத்து ஒரு பாட்டு எழுதத்தான் அழைக்கப்படுகிறார். ஆனால் அவர் எழுதியதைப் பார்த்து அசந்து போன ஸ்ரீதர் எல்லா பாட்டையுமே நீங்களே எழுதுங்கன்னு சொல்றார். ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் என்ற ஒரு பாட்டையும் அந்தப் படத்தில் எழுதுகிறார் வைரமுத்து.

    இந்தப் பாட்டை பந்தோராளி என்ற ராகத்தில் இசைஞானி இசை அமைத்துள்ளார். இந்த ராகத்துக்கு இன்னொரு பேரு காமவர்த்தினி. இது கொஞ்சம் பக்தி. இன்னொரு பக்கம் லேசான சோகம் ததும்பக்கூடிய ராகம். ஆனா இந்தப் பாட்டுலயும் சிருங்கார ரச முயற்சியைக் கொண்டு வந்து இருந்தார் இளையராஜா. இந்த ராகத்துக்கு தமிழ்ல சாதாரிப்பண் என்று பேரு. இது முல்லை நிலத்துக்கானது. அதாவது காடும் காடு சார்ந்த இடத்துக்கும் ஆனது.

    இந்தப் பாட்டுக்குள்ள இளையராஜா 2 தாளத்துக்குள்ள பண்ணிருப்பாரு. ஆனா கொஞ்சம் கொஞ்சமா ஜானகி ‘ஹம்’ பண்ணுவாங்க. அப்புறம் இது 3, 4ல வரும். முதல்ல எடுக்குறதுக்கு மட்டும் ஒரு தாளம். அப்புறம் பாட்டுக்குள்ள இன்னொரு தாளம். காதலர்கள் எல்லை கணக்கு வழக்கு இல்லாதது. மேகம் தான் பந்தல். உன் கூந்தல் என் ஊஞ்சல். உன் வார்த்தை சங்கீதங்கள்னு சொல்லிருப்பாரு கவிப்பேரரசு வைரமுத்து. இதில் முதல் சரணத்துல ரொம்ப அழகா சொல்லிருப்பாரு.

    ‘இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை… இதழ்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை…’ இந்த இடத்தைக் கற்பனை மட்டும் பண்ணிப் பாருங்க. ஒரு பக்கம் வண்டு. இன்னொரு பக்கம் காதலர்கள், இதழ். அடுத்தடுத்த மவுதமே சம்மதம் என்று. தீண்டுதே மன்மத வண்டுன்னு ஒரு சின்ன ஹம்மிங்கோடு சிருங்கார ரசத்தைக் கொடுப்பாங்க.

    2வது சரணத்துல ‘வசந்தங்கள் வாழ்த்தும்பொழுது உனது கிளையில் பூவாவேன். இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்… பூவிலே மெத்தைகள் தைப்பேன். கண்ணுக்குள் மங்கையை வைப்பேன். கடைசில நீ கட்டும் சேலைக்குள் நூலாவேன்’னு அவ்ளோ அழகா சொல்லிருப்பாரு. வசந்தங்கள் வாழ்த்தும்பொழுது வரிகளைத் தான் இன்றும் திருமண அழைப்பிதழில் அச்சடிக்கிறாங்க. மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.   

  • 33 ஆண்டுகள் நிறைவு செய்த ஜென்டில்மேன்

    33 ஆண்டுகள் நிறைவு செய்த ஜென்டில்மேன்

    இயக்குனர் ஷங்கர் இயக்கிய முதல் படம் ஜென்டில்மேன். தொடர் தோல்விகளால் இறங்கு முகத்திலிருந்த  அர்ஜூனுக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. கே.டி.குஞ்சுமோன் மிகபிரமாண்டமாக இப்படத்தினை தயாரித்திருந்தார்.

    ஜென்டில்மேன் படத்தில் அர்ஜூனுடன் மதுபாலா, சுபஸ்ரீ, கவுண்டமணி, செந்தில், சரண்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் கவுண்டமணி செந்தில் காமெடி மிகவும் பிரபலம். அண்ணே நீங்கள் பத்தாங்கிளாஸ் பெயிலுனே, நான் 8ம் கிளாஸ் பாசுண்ணே என்ற வசனங்கல் இப்படத்தில் பலராலும் ரசிக்கப்பட்டது.

    gentle man

    இட ஒதுக்கீட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தின் வசனத்தை பாலகுமாரன் எழுதியிருந்தார். மறைந்த ஜீவா ஒளிப்பதிவு செய்திருந்தார்.

    gentel man

    இப்படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்கு ஏ.ஆர்.ரகுமான் இசைக்கு உண்டு. படத்தின் அனைத்து பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பின. ஒட்டகத்த கட்டிக்கோ,  உசிலம்பட்டி பெண்குட்டி, பார்க்காதே பார்க்காதே, என்வீட்டு தோட்டதில் போன்ற பாடல்கள் மெகா ஹிட் ரகங்கள். அதிலும் குறிப்பாக பிரபுதேவா, கௌதமி தோன்றிய சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே பாடம் அன்றைய இளைஞர்களை ஆட்டம் போட வைத்தது.  முதலில் சரத்குமார் நடிப்பதாக இருந்து பின் அதில் அர்ஜூன் நடித்து வெளிவந்தது.

    கடந்த 1993ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி வெளியான இப்படம் இன்றோடு 33 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.