Category: throwback

  • ஒரு வருடம் படம் ஓடினா வெற்றியா? அமீருக்குப் பாடம் புகட்டிய ஸ்ரீதர்!

    ஒரு வருடம் படம் ஓடினா வெற்றியா? அமீருக்குப் பாடம் புகட்டிய ஸ்ரீதர்!

    பருத்தி வீரன்… இது இளைஞர்களை ஒரு காலத்தில் செமயாக ஆட்டம் போட வைத்த படம். ஒரு வருடம் ஓடி ரசிகர்களைக் கொண்டாட்டத்தில் துள்ளச் செய்தது. இந்தப் படத்தில் தான் கார்த்தி அறிமுகம். படத்தை இயக்கியவர் அமீர். இவர் தன் வாழ்க்கையில் நடந்த மிகவும் நெகிழ்ச்சியான சந்திப்பு இயக்குனர் ஸ்ரீதர் உடன் தான் என்கிறார். இதுகுறித்து அவர் மேலும் என்ன சொல்றாருன்னு பாருங்க. 

    புதுமை இயக்குனரான ஸ்ரீதர் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டுல இருந்த காலகட்டத்துல அவரை சந்திக்கக்கூடிய வாய்ப்பு அமீருக்குக் கிடைத்தது. அமீரை இயக்குனர் ஸ்ரீதருக்கு அறிமுகப்படுத்தி வைத்த மனைவி தேவசேனா, இவர் தான் அமீர். இவர் டைரக்ட் பண்ண படம்தான் பருத்திவீரன். அது ஒரு வருடம் ஓடியது என்றார். உடனே ஒரு சிரிப்பு சிரித்த ஸ்ரீதர், ஒரு வருஷம் ஓடுனா தான் வெற்றிப்படமா என்ன? என்னோட கல்யாணப்பரிசு, காதலிக்க நேரமில்லை, நெஞ்சில் ஓர் ஆலயம் எல்லாம் பல வாரங்களைக் கடந்து ஓடிருக்கு. ஆனா நான் அதை எல்லாம் வெற்றியாக எடுத்துக் கொண்டதே இல்லை.

    ஒரு படத்தோட வெற்றி என்பது எது தெரியுமா? படம் பார்க்குறவனை பல நாள்களுக்கு தூங்க விடாமல் பண்றதுதான் ஒரு உண்மையான படத்தின் வெற்றி. உருக்கமான படமா இருந்தால், பார்க்குறவனை அது கதற வைக்கும். மகிழ்ச்சியான படம்னா எல்லா கஷ்டத்தையும் மறந்து அவனைக் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும். அதுதான் படைப்பாளியோட வெற்றி. ஒரு படத்துக்கு கதை மனசுல உருவாகிடுச்சுன்னா அதுக்கு அப்புறம் நான் இந்த உலகத்தையே மறந்துடுவேன். சாப்பிடும்போதும், தூங்கும்போதும் அந்தக் கதையைப் பத்தியே தான் நினைச்சிக்கிட்டு இருப்பேன்.

    படப்பிடிப்பு தினத்தன்று செட்டுக்கு போறதுக்கு முன்னாடி அந்தப் படத்துக்கான வசனங்கள், ஷாட் எல்லாம் ரெடியா இருக்கும். என்னுடைய குறிப்புகளை அறிந்து கொண்டு, என்னுடைய உதவியாளர்கள் பரபரப்பாக வேலை செய்வார்கள். படப்பிடிப்பு தளத்துல நான் உட்கார்ந்து யாராலும் பார்த்து இருக்க முடியாது. ஓடிக்கிட்டே இருப்பேன். காலம் இப்படி என்னை உட்கார வச்சிட்டுன்னு ஸ்ரீதர் சொன்ன போது, என் கண்கள் கசிந்ததை என்னால நிறுத்தவே முடியல.

    என்னைப் பொருத்தவரைக்கும் எனக்கு முன்னோடியாக இருந்த பல இயக்குனர்களை சந்தித்துப் பேசக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதுல ஸ்ரீதரை சந்தித்து நான் பேசியதுதான் என் வாழ்க்கையிலேயே மிகவும் நெகிழ்ச்சியான சந்திப்பு என ஒரு பத்திரிகைப் பேட்டியில் பதிவு செய்துள்ளார் அமீPர். 

  • என் கேரியரை காலி செய்த டி.ராஜேந்தரின் அந்த பாடல் – வேதனைபட்ட டி.எம்.சௌந்தர்ராஜன்

    என் கேரியரை காலி செய்த டி.ராஜேந்தரின் அந்த பாடல் – வேதனைபட்ட டி.எம்.சௌந்தர்ராஜன்

    60லிருந்து 80 களின் துவக்கம் வரை பின்னணி பாடகர்களில் பிஸியாக இருந்தவர் டி.எம்.சௌந்தர்ராஜன். எம்.ஜி.ஆர் துவங்கி சிவாஜி, ஜெமினி என அந்த கால ஹீரோக்கள் ஆகட்டும் ரஜினி, விஜயகாந்த் என் 80களின் முன்னணி நடிகர்களுக்கு பின்னணி பாடியவர் இவர். இவரது சிறப்பு எம்.ஜி.ஆருக்கு ஒரு பாணியிலும், சிவாஜிக்கு ஒரு பாணியிலும் பாடி அசத்துவதுதான்.

    1980ம் ஆண்டு வெளியான படம் ஒரு தலை ராகம். டி.ராஜேந்தர் இசையமைத்து இயக்கிய முதல் படமிது. ஆனால் ஏதோ காராணத்தினால் இயக்கம் என்று அப்படத்தின் தயாரிப்பாளரான இப்ராஹிமின் பெயரில் வந்தது. மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படத்தில் டி.எம்.சௌந்தர்ராஜன் ஒரு பாடலை பாடியிருப்பார்.

    இது குறித்து ஒருமுறை டி.எம்.எஸ் ஒரு பேட்டியில் கூறியிருந்தபோது,  டி.ராஜேந்தர் ஒரு பாடலை ஒருதலை ராகம் படத்திற்காக பாட அழைத்தார். நான் ஒரு ராசியில்லா ராஜா என துவங்கும்  அந்த பாடலை நான் பாட மறுத்தேன். ஆனால் அவர் விடாப்பிடியாக வற்புறுத்தி என்னை பாட வைத்தார். அந்த பாடல் ஹிட் ஆனது. ஆனால் அதற்கு பின் எனக்கு பாட வாய்ப்பே வரவில்லை. அந்த பாடலோடு என் கேரியரே காலியானது என்று கூறியிருந்தார்.

  • 58 ஆண்டுகள் நிறைவு செய்த தில்லானா மோகனாம்பாள்

    58 ஆண்டுகள் நிறைவு செய்த தில்லானா மோகனாம்பாள்

    தமிழ் திரையுலக வரலாற்றில் என்றும் அழியாத காவியமாகத் திகழும் ‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படம் வெளியாகி 58 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 1968-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி வெளியான இத்திரைப்படம், தமிழ்நாட்டின் பாரம்பரிய நாதஸ்வர இசையையும் பரதநாட்டியக் கலையையும் திரையில் அழகாகப் பதிவுசெய்து, இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

    thillana mohanambal

    கொத்தமங்கலம் சுப்பு கலைமணி  என்ற புனைப்பெயரில் ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதிய புகழ்பெற்ற  தில்லானா மோகனாம்பாள்  நாவலை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டது. இதனை ஏ.பி. நாகராஜன் திரைக்கதை அமைத்து, தயாரித்து இயக்கியிருந்தார்.நாதஸ்வரக் கலைஞர் சிக்கல் சண்முகசுந்தரத்திற்கும் , பரதநாட்டியக் கலைஞர் மோகனாம்பாளுக்கும்  இடையே ஏற்படும் காதல், மோதல் என கலந்து கட்டி கொடுத்திருப்பர் இயக்குனர். படத்திற்காக உண்மையான நாதஸ்வர கலைஞர்ராகவே மாறியிருப்பர் சிவாஜி கணேசன். அவரது  உடலமைப்பும் விரலசைவுகளும் அவ்வளவு தத்ருபமாக இருக்கும்., அதே வேலை பத்மினியின் நவரச பாவனை நடனமும் கதாபாத்திரமும் படத்திற்கு மிகப்பெரிய பங்கினை கொடுத்தது.

    thillana mohanambal

    ஜில் ஜில் ரமாமணி  என்ற கதாபாத்திரத்தில் மனோரமா காட்டிய சுட்டித்தனமான நடிப்பும் பேச்சு வழக்கும்  அனைவராலும் ரசிக்கப்பட்டது, அந்த வேடம் சிறந்த துணை நடிகைக்கான தமிழக அரசின் விருதையும் மனோரமாவுக்கு பெற்றுத் தந்தது. தவில் கலைஞராக டி.எஸ். பாலையாவின் இயல்பான நடிப்பும்,  நாகேஷின் நகைச்சுவையும் இப்படத்திற்குப் பலம் சேர்த்தன.

    படத்தின் வெற்றிக்கு மற்றொரு காரணம் கே.வி.மகாதேவன் இசையையும் சொல்லலாம். மறைந்திருந்து பார்க்கும்,  நலந்தனா போன்ற பாடல்கள் காலம் கடந்தும் இன்றளவும் பேசப்படுவதே இதற்கு ஒரு சான்று. 

    இத்திரைப்படம் கடந்த  1968ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது.  இப்படம் வெளியாகி கிட்டதட்ட 58 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 

  • அப்பவே ஜன நாயகன் வினோத் வியந்து பார்க்கும் டைரக்டரா வருவாருன்னு தெரிஞ்சது – நட்டி

    அப்பவே ஜன நாயகன் வினோத் வியந்து பார்க்கும் டைரக்டரா வருவாருன்னு தெரிஞ்சது – நட்டி

    ‘சதுரங்க வேட்டை’ என்ற படம் வந்தபோது, அந்த படத்தின் இயக்குநர் பெயர் என்ன? யார் அவர்? என்று கேட்க வைத்தவர். இன்று உலகெங்கும் விஜய் எனும் உச்ச நட்சத்திரத்தின் கடைசி படத்தை எடுத்து தெரியும் அளவுக்கு அவருடைய வளர்ச்சி பாராட்ட வேண்டிய ஒன்று.

    அந்த பாராட்டுக்கும், ‘சதுரங்க வேட்டை’ டு ‘ஜன நாயகன்’ மற்றும் இதற்கு இடையே எடுத்த படங்களுக்கும் சொந்தக்காரர் ஹெச்.வினோத். இவர் இயக்கிய முதல் படத்தில் ஹீரோவாக நடித்தவர் நட்டி.

    Jana Nayagan

    சமீபத்தில், நட்டி கொடுத்த பேட்டியில் ஹெச்.வினோத் குறித்து பேசுகையில் “வினோத் சார் வந்து என்கிட்ட ‘சதுரங்க வேட்டை’ கதையை சொல்றதுக்கு முன்னாடி, சில விஷயங்கள்லாம் உங்ககிட்ட கேட்டுக்கலாமான்னு சொன்னார்.

    நான் கேளுங்கன்னு சொன்னேன். அவர் நீங்க அடி வாங்கணும் பரவாலையான்னு கேட்டார். நிஜமா அடிக்காத வரைக்கும் சந்தோஷம் சாருன்னு சொன்னேன். அப்புறம் இந்த படத்துல உங்க கேரக்டர் நெகட்டிவ் shade-ல இருக்கும், அது உங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லையே சாருன்னு கேட்டார்.

    Sathuranga Vettai

    அதெல்லாம் பிரச்சனை இல்ல சாருன்னு சொன்னேன். நீங்க ஒரு திருடன் அப்படின்னு உங்களுக்கு பேர் வந்தா, ஒத்துக்குவீங்களா?-ன்னு கேட்டார். படத்துல தான சார் அதுனால என்ன சாருன்னு சொன்னேன். அப்புறமா தான் மொத்த கதையும் சொன்னார். நான் கதை கேட்டுட்டு கிளாப் பண்ணேன். 

    எங்க இருந்தீங்க வினோத் சார் இவ்ளோ நாளா?-ன்னு கேட்டேன். அவர் நான் இங்கதான் சார் இருக்கேன்னு சொன்னார். பிரமாதமா இருக்கு நான் இதுல கண்டிப்பா பண்றேன்னு சொன்னேன். இந்த படம் பண்ணும்போதே இது வெற்றியடையும்ன்னு எனக்கு தெரிஞ்சது. அப்புறம் வினோத் சார்கிட்டயும் வேற ஒரு விஷயம் இருக்குன்னும், இவர் தமிழ் சினிமால வியந்து பார்க்க கூடிய ஒரு டைரக்டரா வருவாருன்னும் எனக்கு தோணுச்சு” என்று கூறியுள்ளார்.

  • “‘ஜன நாயகன்’ இயக்குநர் ஹெச்.வினோத் எவராலும் சலனப்படுத்த முடியாத சக்தி” – ‘நந்தன்’ இரா.சரவணன்!

    “‘ஜன நாயகன்’ இயக்குநர் ஹெச்.வினோத் எவராலும் சலனப்படுத்த முடியாத சக்தி” – ‘நந்தன்’ இரா.சரவணன்!

    சினிமாவில் படிப்படியாக முன்னேறி சாதிப்பவர்கள் பலருக்கு முன் உதாரணமாக இருப்பார்கள். இந்த வகையைச் சேர்ந்த ஒரு சினிமா இயக்குநர் தான் ஹெச்.வினோத்.

    முதலில் சின்ன பட்ஜெட்டில் நட்டியை வைத்து ‘சதுரங்க வேட்டை’ என்ற படத்தை எடுத்து யார் இந்த இயக்குநர்? என ஆச்சர்யப்பட வைத்தார். பின், கார்த்தியை வைத்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை கொடுத்து தான் ஒரு தரமான இயக்குநர் என்று நிரூபித்தார்.

    அதன் பிறகு டாப் ஹீரோவான அஜித்தை வைத்து ‘நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு’ என மூன்று படங்களை பண்ணிவிட்டு, இப்போது முன்னணி நடிகரும், தமிழ்நாட்டின் முதல்வருமான விஜய்யை வைத்து ‘ஜன நாயகன்’ படத்தை எடுத்திருக்கிறார். விஜய்யின் கடைசி படமான இது நேற்று முன் தினம் (ஜூலை 23) தான் ரிலீஸ் ஆனது.

    Thunivu

    இயக்குநர் ஹெச்.வினோத்தின் நெருங்கிய நண்பரும், சசிகுமாரின் ‘நந்தன்’ பட இயக்குநருமான இரா.சரவணன் கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் “வினோத் என்கிற அரக்கன்! அஜீத் சாரின் ‘துணிவு’ ரிலீஸான நேரம். இயக்குநர் வினோத்துடன் சபரிமலையில் இருந்தோம்.

    நல்ல கூட்டம் என்பதால், அருகே ஓர் அறை எடுத்துத் தங்கினோம். ‘துணிவு’ படம் குறித்த ரிசல்ட் பாஸிடிவ்வாக வந்தாலும், விமர்சனம் குறித்து தெரிந்துகொள்ள அவ்வளவு ஆவல். சபரிமலையில் கவரேஜ் கிடைக்கவில்லை. ‘திங்க் மியூஸிக்’ சந்தோஷ் ஒரு பக்கம், நான் ஒரு பக்கம் என கவரேஜ் தேடி ஓடிக்கொண்டு இருந்தோம். ‘படம் பக்கா…’ என விமர்சனங்கள் வர, அறைக்கு ஓடி வந்தேன். கையைத் தலையணை போல் வைத்துக்கொண்டு, கால் நீட்டித் தூங்கிக் கொண்டிருந்தார் வினோத். 

    H vinoth

    “யோவ் நீயெல்லாம் மனுஷனாய்யா…” என எழுப்பினேன். நல்ல உறக்கத்தில் இருந்த வினோத் சலித்தபடி நிமிர்ந்தார். “படத்தைக் கழுவிக் கழுவி ஊத்துறாங்க… நீங்க தூங்கிட்டு இருக்கீங்க?”. “ஊத்தட்டும் விடுய்யா…” என்றபடி மீண்டும் படுத்துக் கொண்டார். “ஐயோ, நண்பா… படம் சூப்பர்னு கொண்டாடுறாங்க…” என்றேன். 

    “சரிய்யா…” – எழாமலே பதில் சொல்லித் தூக்கத்தைத் தொடர்ந்தார். ‘திங்க் மியூஸிக்’ சந்தோஷ் வந்து ஆளைப் புரட்ட, அப்போதும் வேண்டா வெறுப்பாகத்தான் எழுந்தார். “நாம செய்ய வேண்டிய வேலையைச் செஞ்சுட்டோம். படம் நல்லா இருந்தாலும் இல்லாட்டியும் இனி நம்மளால ஒண்ணும் பண்ண முடியாது. வாழ்த்தினாலும் வறுத்தாலும் ஏத்துக்கத்தான் வேணும்…” என்றார். அறிவில், தெளிவில் அப்படியோர் அரக்கன் வினோத். எவராலும் சலனப்படுத்த முடியாத சக்தி. ‘நல்லதும் கெட்டதும் நமக்குள்தான்’ என்று இயங்குகிற அபூர்வன்” என்று பதிவிட்டிருந்தார்.

  • இன்றைய திரைப்பட இசை எப்படி இருக்கு? பொறுக்க முடியாமல் இளையராஜா சொன்ன பதில்!

    இன்றைய திரைப்பட இசை எப்படி இருக்கு? பொறுக்க முடியாமல் இளையராஜா சொன்ன பதில்!

    1976ம் ஆண்டு தான் அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இளையராஜா இசை அமைப்பாளராக அறிமுகமானார். அவர் அறிமுகமான அந்த தினத்தில் இருந்து இன்று வரை தமிழக ரசிகர்கள் கொண்டாடுகிறவராக இருக்கிறார். அவர் சமீப காலத்து இசையைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று ஒரு நிருபர் கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

    என்னுடைய கவலைகள் எல்லாம் சப்தங்கள் மீதுதான். நேற்று ஒரு படத்துக்காக பின்னணி இசை அமைத்துக் கொண்டு இருக்கும்போது திடீரென ஒரு ஒலி எழுந்தது. 10, 15 வினாடிகள் தான் கேட்டிருப்பேன். எனக்கு தலைசுற்றல் வந்து நான் தடுமாறிப் போனேன். பக்கத்துல இருந்த உதவியாளரைப் பார்த்தார். இந்த சவுண்ட் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது சார் என்றார் அவர். சிந்தித்துப் பார்த்தால் அதே மாதிரியான சப்தங்களைத்தான் இன்றைய இளைஞர்கள் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

    அந்த ஒலிகள் அவர்களுக்குள்ளே என்ன மாதிரியான பாதிப்புகளை உண்டாக்கும் என்று நினைத்தால் மனதிலே கவலை வருகிறது. நமது மண்ணின் இசை எல்லாமே இயற்கை வாத்தியங்கள் தந்தவை. அதை இப்போது உள்ளவர்க்ள ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க அப்படின்னு தெரியலன்னு அந்த பத்திரிகை நிருபருக்கு பதில் சொல்லி இருக்கிறார் இளையராஜா. 

  • சாவித்திரிக்குப் பாட மறுத்த எஸ்.ஜானகி… ஆனா அடுத்து நடந்த ட்விஸ்ட் இதுதான்!

    சாவித்திரிக்குப் பாட மறுத்த எஸ்.ஜானகி… ஆனா அடுத்து நடந்த ட்விஸ்ட் இதுதான்!

    அண்மையில் மறைந்த இசைக்குயில் எஸ்.ஜானகிக்குப் மிகப்பெரிய பெயரைப் பெற்றுத் தந்த பாடல்னா அது சிங்கார வேலனே தேவா தான். கொஞ்சும் சலங்கையில் இடம்பெற்ற பாடல் இது. எஸ்.எம்.சுப்பையா நாயுடு தான் இசை அமைத்தார். அந்தப் பாடலை எஸ்.ஜானகி பாடியதற்குப் பின்னால ஒரு கதை இருக்கு. இதை அவரே ஒரு பத்திரிகை பேட்டியில் இவ்வாறு பகிர்ந்துள்ளார். 

    மிஸ்ஸியம்மா படத்துல நடித்த சாவித்திரிக்காக ஒரு அற்புதமான பாடலைப் பாடி இருந்தார் எஸ்.ஜானகி. அந்தப் பாடலை சாவித்திரி கேட்டு விட்டு இவரோட குரல் வேணாம். எனக்கு எப்போதும் பாடக்கூடிய  பி.லீலாவையே கொண்டு வந்து பாட வைங்கன்னு அந்தப் படத்தின் இசை அமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிடம் தெரிவித்துள்ளார். அவரும் வேற வழியில்லாம ஜானகி பாடிய பாடலைத் தூக்கிப் போட்டு விட்டு லீலாவை வைத்துப் பதிவு செய்து விட்டார்.

    இந்த விஷயம் தெரிந்த எஸ்.ஜானகி இனி சாவித்திரிக்குப் பாடலே பாடக்கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டார். கொஞ்சும் சலங்கை படத்தில் இந்தப் பாடலைப் பாடுவதற்கான வாய்ப்பு எஸ்.ஜானகிக்கு வந்தது. இத சாவித்திரிக்காகப் பாடும் பாடல்னா நிச்சயமா நான் பாட மாட்டேன் என்றும் சொல்லி விட்டார். எஸ்.எம்.சுப்பையா நாயுடுக்கிட்ட நேரடியாக சொல்லிவிட்டார் ஜானகி. அவங்களைப் பொருத்தவரைக்கும் நாதஸ்வர இசையோடு பாடலைப் பாடக்கூடிய ஒரு பாடகியே உங்களுக்கு சரியா அமையல. எஸ்.ஜானகி பாடுனாலே அந்தப் பாட்டு சிறப்பாக அமையும் என்பது எல்லாருடைய கருத்து.

    அதனால எஸ்.ஜானகிக்கிட்ட சொல்லும்போது இது சாவித்ரி பாடுற மாதிரி நாங்க படம் எடுக்கப் போறது இல்லை. குசலக்குமாரி நடனம் ஆடுவது போல் தான் எடுக்கப் போறோம். அதனால நீங்க பாடிக் கொடுங்கன்னு கேட்டதாகவும் எஸ்.ஜானகியே தெரிவித்துள்ளார். அதனால தான் இந்தப் பாட்டை பாடுனாங்களாம் ஜானகி. பாட்டைப் பாடிட்டு நான் வந்துட்டேன். ஆனா படத்தைப் பார்த்த போதுதான் சாவித்திரிக்காகத் தான் என்னைப் பாட வைத்து இருக்கிறார்கள் என்ற விஷயம் எனக்குத் தெரிய வந்தது. எனக்கு இது முன்பே தெரிந்து இருந்தால் அந்தப் பாட்டை பாடியிருக்கவே மாட்டேன் என்றும் அந்தப் பேட்டியில் பதிவு செய்துள்ளார் ஜானகி.   

  • ரஜினிக்காக ஏ.ஆர்.முருகதாஸ் எழுதிய ‘ரமணா’-வில் விஜயகாந்த் வந்தது எப்படி?

    ரஜினிக்காக ஏ.ஆர்.முருகதாஸ் எழுதிய ‘ரமணா’-வில் விஜயகாந்த் வந்தது எப்படி?

    இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜயகாந்த் காம்பினேஷனில் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பினை பெற்ற படம் தான் ‘ரமணா’. இதை ‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் வி.ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார்.

    இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு தான் ஒளிப்பதிவு செய்திருந்தார். சமீபத்தில், இவர் கொடுத்த பேட்டியில் ‘ரமணா’ படம் குறித்து பேசுகையில் “ரஜினிகாந்த் சாரை மைண்ட்ல வச்சு தான் ஏ.ஆர்.முருகதாஸ் ‘ரமணா’ கதையை எழுதினார். அவர் அந்த கதையை ‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ ரவிச்சந்திரன் சார்கிட்ட சொன்னார்.

    கதை ஓகே ஆயிருச்சு. ஆனா, ரவிச்சந்திரன் சார் வந்து ரஜினி சாரை இப்ப பிடிக்க முடியாது ரொம்ப கஷ்டம். விஜயகாந்த் சார் தான் நமக்கு கொஞ்சம் நெருக்கத்துல இருக்காருன்னு சொன்னார். ஏன்னா, அவங்க வந்து ஆல்ரெடி விஜயகாந்த் சாரை வச்சு ‘வானத்தைப்போல’-ங்குற படத்தை தயாரிச்சிருந்தனால, அவருக்கும், இவருக்குமான தொடர்பு நல்லா இருந்துச்சு. 

    Ramana shooting spot MS Prabhu

    அப்புறம் ரவிச்சந்திரன் சார் முருகதாஸ் கிட்ட, ரஜினி சாரை வச்சு படம் பண்ண எவ்ளோ வருஷம் வெயிட் பண்ணனும்ன்னு தெரியல. இன்னொன்னு, இந்த கதைய அவர் பண்ணுவாரான்னும் தெரியல. ஆனா, விஜயகாந்த் சாரை வச்சு நம்ம இதை உடனே படமாக்கிடலாம்ன்னு சொன்னார்.

    அப்புறம் முருகதாஸுக்கும், விஜயகாந்த் சார் இந்த கதைக்கு கரெக்ட் சாய்ஸா தான் இருப்பாருன்னு மனசுல பட்டதும் தான், ஓகே இவர வச்சே பண்ணிடலாம்ன்னு சொல்லிட்டார்” என்று கூறியுள்ளார்.

  • கோவத்துல 5 நிமிஷத்துல இளையராஜா போட்ட பாட்டு!. விஜயகாந்துக்கு எவர்கிரீன் ஹிட்..

    கோவத்துல 5 நிமிஷத்துல இளையராஜா போட்ட பாட்டு!. விஜயகாந்துக்கு எவர்கிரீன் ஹிட்..

    இளையராஜா திறமையான இசையமைப்பாளர் மட்டுமல்ல.. மிகவும் வேகமாக பாடல்களை உருவாக்கும் திறமை கொண்டவர். அதனால்தான் இசையமைக்க துவங்கி நான்கு வருடங்களில் அவர் நூறு படங்களுக்கு இசையமைத்து முடித்திருந்தார். தற்போது அவர் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார். 80களில் அவர் இசையமைத்த பல பாடல்கள்தான் இப்போதும் இசை ரசிகர்களின் ஃபேவரைட் பாடலாக இருக்கிறது. பலரின் கார் பயணங்களில் அந்த பாடல்கள்தான் தற்போதும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

    ஆர்.வி உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த், சுகன்யா நடித்து இசைஞானி இளையராஜா இசையமைத்த திரைப்படம் சின்னக் கவுண்டர். இந்த திரைப்படம் 1992ம் வருடம் பொங்கலுக்கு வெளியாகி விஜயகாந்துக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. வழக்கமாக அதிரடியான ஆக்சன் ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்த விஜயகாந்தை இந்த படத்தில் பக்குவமாக, அமைதியாக பேசும் நபராக ஆர்.வி. உதயகுமார் நடிக்க வைத்திருந்தார்..

    இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே மனதை வருடக்கூடிய பாடல்கள் என்றாலும், எஸ்.பி.பி, எஸ்.ஜானகி இணைந்து பாடிய ‘முத்து மணி மாலை’ பாடல் பலருக்கும் பிடித்த பாடலாகும்.  இந்நிலையில்தான் இந்த பாடல் உருவான விதம் பற்றி இப்படத்தின் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

    muthumani

    முத்து மணி மாலை பாட்டு சின்ன கவுண்டர் படத்திற்காக கம்போஸ் பண்ணது இல்லை. இளையராஜா சார் வேற ஒரு பாட்டை கம்போஸ் பண்ணி நான் வறதுக்கு முன்னாடியே ரிகர்சலுக்கு அனுப்பிட்டார்.. நான் வந்து அந்த பாட்ட கேட்டுட்டு ‘சார் இந்த பாட்டு எனக்கு பிடிக்கல’ன்னு சொன்னேன்.. கோவத்துல என்ன செமையா திட்டினாரு. நான் வெளியே போயிட்டேன்..

    15 நிமிஷம் கழிச்சி என்னை கூப்பிட்டு ‘உனக்கு என்ன மாதிரி பாட்டு வேணும்?’ என கேட்டார். ‘என்னோட சின்ன கவுண்டர் எதார்த்தமான ஆளு.. நீங்க போட்டிருக்க பாட்டு ரொம்ப பில்டப்பா இருக்கு.. அது வேணாம்’னு சொன்னேன்.. செம கோவத்துல ஆர்மோனியத்தை இழுத்து போட்ட டியூன்தான் ‘முத்து மணி மாலை’..  அஞ்சு நிமிஷத்துல அந்த பாட்ட கம்போஸ் பண்ணி முடிச்சிட்டாரு’எனக் கூறியிருக்கிறார்.

  • இளையராஜா காட்டிய கோபம்!.. கதறி அழுத லிவிங்ஸ்டன்!.. பாக்யராஜிடம் சேர்ந்தது எப்படி?…

    இளையராஜா காட்டிய கோபம்!.. கதறி அழுத லிவிங்ஸ்டன்!.. பாக்யராஜிடம் சேர்ந்தது எப்படி?…

    மறைந்த நடிகர் மற்றும் இயக்குனர் கே.பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து அதன்பின் நடிகராக மாறியவர் லிவிங்ஸ்டன். இயக்குனராகும் ஆசையில் இருந்த அவரை விஜயகாந்த் தான் நடித்த பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தில் நடிகராக மாற்றினார். அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் லிவிங்ஸ்டன் நடித்தார். சசி இயக்கத்தில் இவர் நடித்த சொல்லாமலே திரைப்படம் இவருக்கு முக்கிய படமாக அமைந்தது..

    அதேபோல் லிவிஸ்டன் ஹீரோவாக நடித்த சுந்தர புருஷன் திரைப்படம் ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அதன்பின் பல திரைப்படங்களிலும் லிவிங்ஸ்டன் ஹீரோவாக நடித்திருக்கிறார். தற்போது அவர் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது கே.பாக்யராஜ் மறைந்துவிட்ட நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட லிவிங்ஸ்டன் ஒரு முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார்.

    பாக்யராஜ் சாரின் ஒரு படத்திற்கு ஏ.வி.எம் ஸ்டுடியோவில் பூஜை நடந்து கொண்டிருந்தது. இளையராஜா சார் இசையமைக்கும் பணியில் ஈடுபட்டிர்நுதார். அப்போது எனக்கு எதுவும் தெரியாது.. நேராக இளையராஜாவிடம் சென்று அவரின் தோளை தட்டி ‘நான் நன்றாக பாடுவேன். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்’ என்று கேட்டேன்.. இளையராஜா என்னை பார்த்து முறைத்தார். அருகில் இருந்த அவரின் உதவியாளர் என்னை கழுத்தை பிடித்துக் கொண்டு தள்ளிக் கொண்டு வெளியே வந்தார்..

    யார்யா நீ? எங்க வந்து வாய்ப்பு கேக்குற? என என்னை கண்டபடி திட்டினார்.. என் அப்பா கூட என்னை அப்படி திட்டியதில்லை. நான் அழுதுகொண்டே நின்று கொண்டிருந்தேன்.
    இதை பாக்யராஜ் சார் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் உதவியாளர்களை அனுப்பி என்னை கூப்பிட்டார்..

    அவரிடம் சென்றதும் ‘யாரு நீ? அவர்கிட்ட போய் என்ன கேட்ட?’ என்று கேட்டார். \இல்ல சார் நான் நல்லா பாடுவேன்.. அதான் அவரிடம் வாய்ப்பு கேட்டேன்’ என்று சொன்னேன். ‘ அதுக்கு இப்படியா  போய் கேட்ப?’ என்று சொல்லி என்னை அவரின் உதவியாளராக சேர்த்துக் கொண்டார். இப்படித்தான் என் சினிமா வாழ்க்கை துவங்கியது.. அவருடன் பணி புரிந்ததெல்லாம் மலரும் நினைவாக இருக்கிறது’ என்று சொல்லி லிவிங்ஸ்டன் அதற்குக் மேல் பேச முடியாமல் கண் கலங்கினார்.