Tag: ajithkumar

  • அஜித் மாதிரி என்னால நடிக்க முடியாது!.. ரீமேக் கதையில் நடிக்க மறுத்த பாலையா!..

    ஒரு மொழியில் வெளியான ஒரு படத்தை மற்றொரு மொழியில் எடுப்பது என்பது பல வருடங்களாகவே நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான். 80களில் பல ஹிந்தி படங்களை தமிழில் எடுத்து அதில் ரஜினி, கமல் ஆகியோர் நிறைய படங்களில் நடித்திருக்கிறார்கள். ரஜினி நடித்த பில்லா படம் கூட ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்த படம்தான்.

    அதேபோல் சில தெலுங்கு படங்கள் தமிழில் ரீமேக் ஆகியிருக்கிறது. அதேபோல் ஏராளமான தமிழ் திரைப்படங்கள் தெலுங்கில் ரீமேக் ஆகி வருகிறது.. அவ்வளவு ஏன்?.. விஜய் தற்போது நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் கூட தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து சூப்பர் ஹிட் நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்தான்..

    பாலைய படத்தை ரீமேக் செய்து விஜய் நடிப்பது ஒரு புறம் என்றால் அஜித் நடித்த ஒரு படத்தை தெலுங்கில் நடிக்க பாலையா சம்பவம் பற்றி பார்ப்போம்.
    பாலையாவை வைத்து சில நேரடி தெலுங்கு திரைப்படங்களை இயக்கியவர் கே.எஸ்.ரவிக்குமார். அவரின் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம்தான் வரலாறு. இந்த படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடித்திருப்பார்.. குறிப்பாக அதில் ஒரு வேடத்தில் பெண்மை போன்ற நளினம் கொண்ட ஒரு பரதநாட்டிய கலைஞராக நடித்திருப்பார்..

    இந்த படத்தில் அஜித்குமாரின் நடிப்பை ரஜினி, அமீர்கான் போன்ற பெரிய நடிகர்களே பாராட்டியிருந்தார்கள். இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய கே.எஸ்.ரவிக்குமார் ‘வரலாறு படத்தை தெலுங்கில் பாலையாவை வைத்து ரீமேக் பண்ண நினைத்தேன். அப்போ வரலாறு படத்தை பார்த்துட்டு ‘அஜித் போல என்னால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது.. நான் பண்ணா அந்த கதாபாத்திரத்திற்கு இருக்கும் மரியாதையே போயிடும். அஜித் அவ்வளவு சூப்பரான நடிச்சிருக்கார்.. அதை கெடுக்க வேண்டாம்’ என சொல்லிவிட்டார்’ என கூறியிருக்கிறார்.

  • பல நாட்களுக்கு பின் ஷூட்டிங்கில் அஜித்!.. வைரல் போட்டோ!…

    விஜய்க்கு போலவே நடிகர் அஜித்துக்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உண்டு. அதேநேரம் அஜித் விஜயை போல அரசியலுக்கு வரவில்லை. அரசியலில் அவருக்கு ஆர்வமும் இல்லை. ஒருபக்கம் கடந்த சில வருடங்களாகவே அஜித் ஒரு டீமை உருவாக்கி தொடர்ந்து பல நாடுகளிலும் நடக்கும் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொண்டு வருகிறார்..

    இப்போது கூட அவர் அபுதாம்பியில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டு வருகிறார். அவரை சந்திக்க பல திரைப் பிரபலங்களும் அங்கு செல்கிறார்கள்.
    ஒருபக்கம் குட் பேட்லி திரைப்படத்திற்கு பின் அஜித் இப்போது வரை எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. அவரின் அடுத்த படத்தை இயக்கப் போவது ஆதிக் ரவிச்சந்திரன்தான் என்பது உறுதியானாலும், தயாரிப்பாளர் இன்னமும் உறுதிசெய்யப்படவில்லை.

    இந்நிலையில், அபுதாபியில் ஒரு ஷூட்டிங்கில் அஜித் கலந்து கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியிருக்கிறது. இது ஒரு விளம்பர படம் எனவும், இந்த விளம்பர படத்தை இயக்குனர் ஏஎல் விஜய் இயக்குவதாகவும் சில சொல்கிறார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை. அஜித்தின் கார் ரேஸ் தொடர்பான டாக்குமென்டரி படத்தை ஏஎல் விஜய்தான் இயக்கி வருகிறார். எனவே இது அதற்கான படப்பிடிப்பு என கருதப்படுகிறது..

  • Ajith: அந்த இயக்குனருடன் இணையும் அஜித்!.. இது வேறலெவல் டிவிஸ்ட்!….

    தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக பார்க்கப்படுபவர் அஜித். பல வருடங்களாகவே நடிகர் விஜய்க்கு சரியான போட்டி நடிகராக அஜித் வலம் வந்தார். தற்போது விஜய் அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில் அஜித் முக்கிய நடிகராக பார்க்கப்படுகிறார். ஒருபக்கம் அஜித் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து கார் ரேஸ் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

    துபாய், ஐரோப்பிய நாடுகள், மலேசியா என பல நாடுகளிலும் நடந்த கார் ரேஸ் போட்டி தற்போது மீண்டும் துபாயில் நடந்து வருகிறது. இதில் அஜித்தின் டீம் கலந்து கொண்டு வருகிறது.. ஒருபககம், அஜித்தின் புதிய புதிய படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவது உறுதியாகியிருந்தாலும் இந்த படத்துக்கு இதுவரையிலும் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை.. அதற்கு முக்கிய காரணம் அஜித் 185 கோடி சம்பளம் கேட்கிறார்.. அவ்வளவு சம்பளத்தை அவருக்கு கொடுக்க இங்கே தயாரிப்பாளர்கள் யாரும் இல்லை. எனவே பேச்சுவார்த்தை இழுபறியிலேயே இருக்கிறது.

    இந்நிலையில்தான் ஆதிக் ரவிச்சந்திரன் படத்திற்கு பிறகு அஜித் ஏ.எல் விஜய் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் தற்போது அஜித்தின் கார் ரேஸ் தொடர்பான டாக்குமெண்ட்ரியை இயக்குனர் ஏ.எல் விஜய்தான் எடுத்து வருகிறார்..

    அவருடன் பழகியதில் அவரை அஜித்துக்கு பிடித்து போனதால் ‘மீண்டும் நாம் இணைந்து ஒரு படம் செய்வோம்’ என அஜித் அவரிடம் சொல்லியிருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அஜித்தை வைத்து க்ரீடம் படத்தை ஏ.எல். விஜய் இயக்கியுள்ளார். அஜித்தை வைத்து ஏ.எல். விஜய் இயக்கும் திரைப்படம் ஒரு குடும்ப காமெடி படமாக இருக்கும் என சொல்கிறார்கள்.. இது அஜித்தின் 65வது திரைப்படமாக இருக்கும்.

  • புரட்யூசரே கிடக்காம போயும் அஜித் திருந்தலயே!.. வாய்ப்பை தட்டி தூக்கிய பாலையா!…

    விஜய் இருந்தவரைதான் அஜித்துக்கு மார்க்கெட். விஜய் அரசியலுக்கு சென்று விட்டதால் அஜித்தின் புதிய படத்தை எடுக்க எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை என பலரும் பேச துவங்கி விட்டனர். அதற்கு முக்கிய காரணம் அஜித் கேட்கும் 185 கோடி சம்பளம்தான்.

    அதேநேரம் இந்த படத்தை இயக்குவது ஆதிக் ரவிச்சந்திரன் என்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது. இந்நிலையில்தான் தேடி வந்த ஒரு தயாரிப்பாளரை மிஸ் பண்ணியிருக்கிறார் அஜித். தெலுங்கில் முக்கிய தயாரிப்பாளராக இருப்பவர் தில் ராஜ். விஜயை வைத்து வாரிசு படத்தைக் கூட இவர்தான் தயாரித்திருந்தார்..

    மலையாளத்தில் உன்னி முகுந்தனை த்து ஹனீஃப் அடேனி என்பவர் இயக்கிய திரைப்படம் மார்கோ. ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் இந்த படத்தில் இருந்தாலும் படம் சூப்பர் ஹிட். இந்த இயக்குனரை வைத்து படம் தயாரிக்க விருப்பப்பட்ட தில் ராஜூ அவரை அழைத்து அஜித்துக்கு ஒரு கதையை தயார் பண்ண சொல்லியிருக்கிறார். அவரும் மிகவும் ஆர்வத்துடன் ஒரு கதையை உருவாக்கி தில் ராஜிடம் சொல்லியிருக்கிறார். கதை பிடித்துப் போனதால் அவரை அஜித்திடம் கதை சொல்ல வைத்திருக்கிறார் தில் ராஜ்

    ஆனால் பல நாட்கள் அமையும் அஜித்திடமிருந்து எந்த பதிலும் வரவில்லையாம். நடிக்கிறேன்.. நடிக்கவில்லை.. கதை பிடித்திருக்கிறது.. பிடிக்கவில்லை.. ஒரு படத்தில் நடித்துவிட்டு உங்கள் படத்தில் நடிக்கிறேன் என எதுவுமே அஜித் தரப்பிலிருந்து சொல்லப்படவில்லையாம். இதில் கடுப்பான தில் ராஜ் இயக்குனரை அழைத்து ‘அஜித் இல்லையென்றால் பரவாயில்லை. இதே கதையை நீங்கள் பாலையாவிடம் சொல்லுங்கள் என அனுப்பி வைக்க கதையை கேட்டு ஓகே சொல்லிவிட்டார் பாலையா.

    ஒருபக்கம் தனது படத்துக்கு தயாரிப்பாளரே கிடைக்காத நிலையில் அஜித், ஒருபக்கம் இப்படி தேடி வந்த தயாரிப்பாளரை மிஸ் பண்ணியும் இருக்கிறார்..

  • கார் ரேஸ் மீது வந்த காதல்!.. விதை போட்டது அங்கதான்!.. அஜித் சொன்ன பிளாஷ்பேக்!..

    நடிகர் அஜித் எப்போது அமராவதி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினாரோ அப்போது முதலே அவர் அடிக்கடி பைக் மற்றும் கார் ரேஸ்களில் ஈடுபடும் செய்திகள் வெளியாகி வந்தது. அப்போதெல்லாம் இப்போது போல சமூக வலைதளங்கள் இல்லை என்பதால் அது வெளியே தெரியவில்லை..

    ஒருபக்கம் சினிமாவில் நடிப்பது, ஒருபக்கம் பைக் மற்றும் கார் ரேஸில் ஈடுபடுவது என தொடர்ந்து வந்தார் அஜித். அதனால் பலமுறை விபத்தில் சிக்கி அவரின் முதுகு கால் பகுதிகளில் அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டது. பல வருடங்களுக்குப் பின் கடந்த சில வருடங்களாக அஜித் தொடர்ந்து கார் ரேஸ் போட்டிகளில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் தினமும் வெளியாகி வருகிறது..

    கார் ரேஸில் தனக்கு எப்படி ஆர்வம் வந்தது என்பது பற்றி ஊடகம் ஒன்றில் பேசியிருக்கிறார் அஜித். ‘எனது ஆர்வம் 1970 களில் துவங்கியது.. அப்போது எனக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும்.. என் தந்தையின் நண்பர்களில் சிலர் இந்திய சாம்பியன்ஷிப் ரேசில் கலந்து கொள்வார்கள்.. அப்படித்தான் மோட்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் எனக்கு அறிமுகமானது..

    ajithrace
    ajithrace

    அதிலிருந்துதான் எனக்கு ரேஸ் மீது ஆர்வம் வந்தது. கூடவே விஜய் மல்லையா அணியில் ரேஸ் ஓட்டும் வருவது நிறுவனத்தில்தான் என் தந்தை பணியாற்றினார். விஜய் மல்லையாதான் முதல் இந்திய ஃபார்முலா 1 அணியை உருவாக்கியவர். எனவே அவரது புரோட்டோடைப் ரேஸ் கார்கள் எல்லாம் எங்கள் வீட்டு பக்கத்தில்தான் இருக்கும்.. அதை பார்த்துதான் நான் வளர்ந்தேன்.. இதற்கான விதை அப்போது விதைக்கப்பட்டிருக்கலாம்..

    உண்மையாக சொல்லப் போனால் ரேசிங் நான் எனக்காக செய்யவில்லை.. எனக்கு இந்த விளையாட்டு மீது அளவு கடந்த காதல் உண்டு. என்னால் முடிந்தவரை நீண்ட காலத்திற்கு ஒரு பந்தய ஓட்டுனராக இருக்க நான் நிச்சயமாக விரும்புகிறேன்’ என சொல்லியிருக்கிறார்..

  • ரேஸில் கடைசியா வந்தும் அஜித் செய்த தரமான சம்பவம்!.. ஏகே ஒரு ஜென்டில்மேன்!..

    நடிகர் அஜித் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். சிறுவயதிலிருந்தே அஜித்துக்கு பைக் மற்றும் கார் ரேஸ் ஆகியவற்றில் அதிக ஆர்வம் உண்டு. மோட்டார் ஸ்போர்ட்ஸில் சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் அவரிடம் இருந்தது. அதேநேரம் திருமணத்திற்கு பின் அவரை கார் ரேஸில் ஈடுபட அவரின் மனைவி ஷாலினி அனுமதிக்கவில்லை.

    தற்போது பல நாடுகளில் நடக்கும் கார் ரேஸ்களில் அஜித்தின் டீம் தொடர்ந்து பங்கேற்று வருகிறது. துபாய், ஐரோப்பிய நாடுகள், மலேசியா ஆகிய நாடுகளில் நடந்த கார் ரேஸ்களில் அஜித் டீம் கலந்து கொண்டது. தற்போது துபாயில் மீண்டும் கார் ரேஸ் துவங்கியிருக்கிறது
    . துபாயில் கார் ரேஸ் நடக்கும் மைதானத்திற்கு பல ரசிகர்களும் அஜித்தை பார்ப்பதற்காகவே செல்கிறார்கள்.. அதில் பலரும் அஜித்துடன் புகைப்படங்களை எடுத்துக் கொள்கிறார்கள்..

    இந்நிலையில்தான் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.. சமீபத்தில் நடந்த கார் ரேஸ் போட்டியில் அஜித் கடைசியாக வந்திருக்கிறார். அதாவது தோல்வி அடைந்திருக்கிறார்.. அந்த நேரம் பார்த்து அவரிடம் போட்டோ எடுப்பதற்காக 500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர்.

    இதைத் தெரிந்து அஜித் தோற்றுப் போன மனநிலையிலும் அவர்கள் எல்லோரிடமும் தனித்தனியாக நின்று போட்டோக்கு போஸ் கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்தி அனுப்பி வைத்தாராம். இது தொடர்பான சில புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களிலும் வெளியானது.

  • இப்ப விஜய் இல்ல.. அஜித்துக்கு மார்க்கெட் இல்ல!.. பிரபலம் பேட்டி!….

    நடிகர் அஜித்தும் விஜயும் சமகாலத்தில் தமிழ் சினிமாவில் வளர்ந்தவர்கள்தான்.. அஜித் சாக்லேட் பாய் லுக்கில் ரசிகர்களை இழுத்தால் விஜயோ தனது நடனத் திறமை மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.. இருவருமே துவக்கத்தில் காதல் கதைகளில் நடித்து படிப்படியாக ஆக்சன் ரூட்டுக்கு மாறினார்கள்.. அதேபோல் ஒரு கட்டத்தில் இருவருமே மாஸ் நடிகர்களாகவும் மாறினார்கள்..

    பில்லா, தீனா, மங்காத்தா போன்ற படங்களை அஜித் பயன்படுத்திக்கொண்டார். அதேபோல் பகவதி, திருமலை போன்ற படங்களை விஜய் பயன்படுத்திக் கொண்டார்.. விஜய் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது தெரிந்து அதற்கேற்ப சம்பளம் வாங்கினார் அஜித். எனவே விஜயை வைத்துதான் அஜித்துக்கு சம்பளம் என்கிற நிலையும் சினிமாவில் உருவானது..

    ஏனெனில் விஜயின் போட்டி நடிகராக அஜித் திரைத் துறையில் வலம் வந்தார்.. ஆனால் தற்போது விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு சென்றுவிட்டார்.. இந்நிலையில்தான் அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்க இதுவரை தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. ஏனெனில் அஜித் 185 கோடி சம்பளம் கேட்கிறார். அதை கொடுக்க யாரும் முனவரவில்லை. அவர் தயாரிக்கிறார்.. இவர் தயாரிக்கிறார்.. என சமீப காலமாக செய்திகள் வெளியானாலும் இதுவரை எதுவும் உறுதி செய்யப்படவில்லை.. அஜித்தின் புதிய படத்தை தயாரிக்க சில தயாரிப்பாளர்கள் முன் வந்தாலும் ‘அஜித்துக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்க முடியாது. இவ்வளவு கோடி அட்வான்ஸ்.. லாபத்தில் குறிப்பிட்ட சதவீத பங்கு’ என்றுதான் பேசுகிறார்களாம்.

    இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பிரபல பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் ‘விஜய் சினிமாவில் இருந்த வரைக்கும்தான் அஜித்துக்கு மார்க்கெட் இருந்தது.. விஜயின் போட்டி நடிகர் என சொல்லி அவரும் ஒரு ரசிகர் கூட்டத்தை திரட்டினார்.. தற்போது அஜித்தின் படத்தை தயாரிக்க ஒரு தயாரிப்பாளர் கூட முன்வரவில்லை’ எனக் கூறியிருக்கிறார்..

  • அடங்காத அஜித்!.. இப்படியே போனா சினிமாவுக்கு மொத்தமா முழுக்குதான்!…

    அஜித் நடிப்பில் கடைசியாக ஆதிக் ரவிச்சந்திர இயக்கதில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது.. அதன்பின் இப்போது வரை அஜித் எந்த புதிய படத்திலும் நடிக்கவில்லை.. அதே நேரம் அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன்தான் இயக்கப் போகிறார் என்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது.

    ஆனால் எனக்கு 185 கோடி சம்பளம் கொடுக்க வேண்டும் என அஜித் கேட்டதால் எந்த தயாரிப்பாளரும் இந்த படத்தை தயாரிக்க முன்வரவில்லை. தமிழ்நாட்டில் யாரும் தயாரிப்பாளர் கிடைக்காததால் மும்பை சென்று சில சிலரிடம் பேசினார்கள். ஆனால் அதுவும் நடக்கவில்லை
    . இந்நிலையில், கார் ரேஸுக்காக துபாயில் இருக்கும் அஜித்துக்கு ஒரு தொழிலதிபர் பழக்கமாகியிருக்கிறார். அவர் பெரிய தொழிலதிபர் என்பதால் அஜித்தை வைத்து படமெடுக்க ஆசைப்பட்டிருக்கிறார்.

    அவரிடம் அஜித் ‘எனக்கு 170 கோடி சம்பளம் கொடுத்து விடுங்கள்’ என சொல்ல அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார்.. அடுத்தகட்ட வேலைகள் துவங்கும் நிலையில் ‘170 கோடி சம்பளம் மற்றும் படத்தின் லாபத்தில் குறிப்பிட்ட சதவீதம் பங்கு’ என அஜித் கேட்க அதிர்ச்சியடைந்த அந்த தொழிலதிபர் ‘இந்த ப்ராஜெக்ட்டே வேண்டாம்.. உங்களுக்கு நண்பராக மட்டுமே இருக்கிறேன்’ என சொல்லிவிட்டாராம். சம்பல விஷயத்தில் அஜித் இப்படி மிகவும் கறாராக இருந்தால் அவரின் சினிமா கெரியரே காலியாகிவிடும்’ என கோலிவுட் வட்டாரத்தில் பேசி வருகிறார்கள்.

  • ஏகே, சிம்பு வரிசையில் துபாயில் செட்டிலாகும் சிவகார்த்திகேயன்?!.. இதுதான் காரணமா?!….

    சமீபகாலமாகவே திரை பிரபலங்கள் துபாயில் வீடு வாங்குவதை ஒரு கௌரவமாக கருதுகிறார்கள்.. ஏற்கனவே பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் பலரும் துபாயில் வீடு வாங்கியிருக்கிறார்கள்.
    தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நடிகர் அஜித்குமார் ஏற்கனவே துபாயில் இரண்டு ஆடம்பர பங்களாவை (வில்லா) வாங்கியிருக்கிறார்.

    தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நடிகர் அஜித்குமார் ஏற்கனவே துபாயில் இரண்டு ஆடம்பர பங்களாவை வாங்கியிருக்கிறார். அதேபோல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எப்போதும் துபாயில்தான் இருக்கிறார். இசையமைக்கும் பணியை கூட அவர் அங்கிருந்துதான் செய்து வருகிறார். அதேபோல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் துபாயில் சொந்தமாக ஸ்டுடியோவை துவங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது. கடந்த பல வருடங்களாகவே அவர் அங்கேயே வசித்து வருகிறார்.

    அதேபோல் கடந்த சில வருடங்களாகவே நடிகர் சிம்பு துபாயில்தான் தங்கியிருக்கிறார். ஷூட்டிங் என்றால் மட்டுமே அவர் இந்தியா வருகிறார். சமீபத்தில் துபாயில் ஒரு வீடு வாங்கும் முயற்சியில் சிம்பு இறங்கியிருக்கும் செய்தியும் வெளியானது. அந்த வீட்டின் மதிப்பு 57 கோடி எனக்கு சொல்லப்பட்டது.

    இந்நிலையில்தான், நடிகர் சிவகார்த்திகேயன் துபாயில் இரண்டு வீடுகளை வாங்கியிருப்பது தெரிய வந்திருக்கிறது.. அனேகமாக சிவகார்த்திகேயன் குடும்பத்தோடு துபாயில் செட்டிலாக வாய்ப்பிருப்பதாக சிலர் சொல்கிறார்கள். இந்தியாவைப் போல துபாயில் சம்பாதிக்கும் பணத்தில் அதிக வரி கட்ட தேவை இல்லை. எனவேதான் திரைப் பிரபலங்கள் பலரும் துபாயில் செட்டிலாக ஆசைப்படுகிறார்கள் என சொல்லப்படுகிறது.

  • ரீ-ரிலீஸிலும் மாஸ் காட்டும் மங்காத்தா!. முதல் நாள் வசூல் இவ்வளவு கோடியா?!…

    வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்குமார் நடித்த 201ம் வருடம் வெளியான திரைப்படம்தான் மங்காத்தா. இந்த படம் அஜித்தின் 50-வது படமாக அமைந்தது. பொதுவாக தமிழ் சினிமாவில் ஹீரோ நல்லவராக இருப்பார்.. கெட்டவன் என ஒரு வில்லனை காட்டுவார்கள்.. ஆனால் இந்த படத்தைப் பொறுத்தவரை அஜித் உட்பட எல்லா கதாபாத்திரங்களுமே கெட்டவர்கள்தான்.

    ஆனாலும் இந்த படத்தை ரசிகர்கள் ரசித்தார்கள். இந்த படத்திலிருந்துதான் ஹீரோவை கெட்டவனாக காட்டினாலும் ஹிட் என்கிற நிலை தமிழ் சினிமாவில் உருவானது. மங்காத்தா பல கோடி வசூலையும் பெற்றது. ஒருபக்கம், யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது

    இந்தப் படத்தில் திரிஷா, வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி. வைபவ், மகத் ராகவேந்திரன், அர்ஜுன், அஞ்சலி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்நிலையில்தான், மங்கக்கா திரைப்படம் நேற்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழகத்தில் உள்ள பல திரையரங்குகளிலும் இப்படம் வெளியானது.

    அஜித்தின் குட் பேட் அக்லி வெளியாகி பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில்லும், அவரின் அடுத்த படம் என்னவென்று தெரியாத நிலையிலும் மங்காத்தா படம் ரிலீஸ் செய்யப்பட்டதால் இந்த படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில்தான் மங்காத்தா திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே தமிழகத்தில் 5.50 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.