Tag: ajithkumar

  • அஜித் கூட நடிப்பீங்க!. என் கூட நடிக்க மாட்டீங்களா?!.. நடிகையிடம் கேட்ட விஜய்!…

    நடிகர் விஜய் 30 வருடங்களுக்கு மேல் சினிமாவில் நடித்தவர். ரஜினிக்கு பின் அதிக ரசிகர்களை உருவாக்கியவர் விஜய். அதே நேரம் விஜய்க்கு சம போட்டியாளராக வந்தவர்தான் அஜித். இருவருமே துவக்கத்தில் காதல் படங்களில் நடித்தனர். ஒரு கட்டத்தில் இருவருமே ஆக்சன் ரூட்டுக்குமாறு மாறினார்கள். ஆக்‌ஷன் ஹீரோவாக இருந்தவர்கள் ஒருகட்டத்தில் மாஸ் ஹீரோவாகவும் மாறினார்கள். விஜய்க்கு அடுத்து அஜித்துக்குதான் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்.

    விஜயின் பல படங்களோடு அஜித்தின் படங்கள் போட்டி போட்டிருக்கிறது. விஜயின் வாரிசு படத்தோடு அஜித்தின் துணிவு படம் போட்டி போட்டு வெளியாகி நல்ல வசூலையும் பெற்றது.. விஜய் இப்போது சினிமாவை விட்டு அரசியலுக்கு சென்றிருக்கிறார். அஜித்தோ கார் ரேஸ்களில் கலந்து கொண்டு வருகிறார்.

    90களில் முக்கிய நடிகையாக இருந்தவர் மீனா. ரஜினியுடன் முத்து, வீரா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அஜித்துடன், ஆனந்த பூங்காற்றே, வில்லன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், விஜயுடன் மீனா நடிக்கவே இல்லை.

    இந்நிலையில்தான், மீனா ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘விஜய் சார் என்னிடம் ஒருமுறை ‘என்னுடன் நீங்கள் நடிக்க மாட்டேன் என சொல்லி விட்டீர்கள்.. ஆனால் அஜித்துடன் 3 படங்களுக்கு மேல நடிச்சிருக்கீங்க’ என்று நேரடியாக கேட்டார். அதற்கு கால்ஷீட்தான் சார் காரணம்.. ஒரு படம் வரும்போது வேறுபடத்தில் கமிட் ஆகியிருந்ததால் உங்களுடன் நடிக்க முடியவில்லை’ என்று சொன்னேன். நான் விஜயுடன் நடிக்கவில்லை என்றாலும் என் மகள் அவரின் தெறி படத்தில் நடித்து விட்டார்’ என சொல்லியிருக்கிறார் மீனா.

  • Campa-வுக்கு பின் மீண்டும் விளம்பர படத்தில் அஜித்!.. AK ஒரு முடிவோடதான் இருக்காரு!..

    நடிகர் அஜித்துக்கு சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி பைக் கார் ரேஸ்களில் கலந்து கொள்வது, பைக்கில் நீண்ட தூரம் பயணிப்பது, துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து கொள்வது, ரிமோட் ஹெலிகாப்டர் இயக்குவது என நிறைய பிடித்த விஷயங்கள் இருக்கிறது.

    கடந்த சில வருடங்களாகவே அஜித் தொடர்ந்து கார் ரேஸ் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். மலேசியாவில் சமீபத்தில் போட்டியில் அடுத்து துபாயில் மீண்டும் துவங்க உள்ளது. இதற்காகவே அஜித்குமார் கார் ரேஸிங் என்கிற நிறுவனத்தையும் அவர் துவங்கவிருக்கிறார்.

    இந்நிலையில்தான் சமீபத்தில் ஒரு விளம்பர படத்தில் அஜித் நடித்தது சர்ச்சை ஏற்படுத்தியது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் Campa Cola Enger drink விளம்பர படத்தில்தான் அஜித் நடித்திருந்தார். ‘மக்களின் உடல்நிலையை பாதிக்கும் குளிர்பான விளம்பரத்தில் அஜித் எப்படி நடிக்கலாம்?’ என சமூக ஆர்வலர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்.

    ஆனால், அதற்குள் அஜித் அடுத்த விளம்பர படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டார். Nova Real Estate என்கிற நிறுவனத்திற்கான விளம்பர படத்தில்தான் அஜித் நடிக்கவுள்ளாராம். இந்த விளம்பர படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் நடக்கவிருக்கிறது. விடாமுயற்சி படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த ஓம்பிரகாஷ்தான் இந்த விளம்பர படத்தையும் எடுக்கவுள்ளாராம்.

    அஜித் கார் ரேஸிங் செய்வதற்கு ஒரு சீசனுக்கு 25 முதல் 45 கோடி வரை செவவாகும். அதற்கு ஸ்பான்சர் வேண்டும் என்பதற்காகவே அஜித் விளம்பர படங்களில் நடிக்க துவங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • நயன்-விக்கி துபாய்க்கு போனதுக்கு அஜித் மட்டும் காரணமில்ல!.. இப்படி ஒரு விஷயம் இருக்கா?!…

    ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடக்க தொடங்கியவர் நயன்தாரா. அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்து ஒரு கட்டத்தில் நம்பர் ஒன் நடிகையாக மாறினார். லேடி சூப்பர்ஸ்டார் என்கிற பட்டமும் இவருக்கு கிடைத்தது. ஒருகட்டத்தில் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா மாறினார்.

    விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்தார். நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் திருமணத்திற்கு பின் இரண்டு ஆண் குழந்தைகளை வாடகை தாய் மூலம் பெற்றெடுத்து இருவரும் வளர்த்து வருகிறார்கள்.

    சமீப காலமாகவே நயன்தாரா நடிப்பில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில்தான் சமீபத்தில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் துபாய் சென்று அஜித் பங்கேற்கும் கார் ரேஸ் நடக்கும் இடத்திற்கு சென்று அவருடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

    இந்நிலையில்தான் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் துபாய் சென்றதற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. சமீபத்தில் துபாய் புர்ஜ் கலிபாவில் ஒரு பிரம்மாண்டமான விட்டை அவர்கள் வாங்கியிருக்கிறார்கள். அந்த வீட்டில்தான் பொங்கலையும் கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோவை ஏற்கனவே சமூகவலைத்தளங்களில் இருவரும் பதிவிட்டார்கள்.

    அந்த வீடியோவில் கூட வீட்டுக்கு பின்னால் பல உயரமான கட்டிடங்கள் தெரியும். அப்படி துபாய் வீட்டுக்கு சென்றிருந்தபோதுதான் அஜித்தின் அழைப்பை ஏற்று அவர்கள் இருவரும் கார் ரேஸ் நடக்கும் இடத்திற்கு சென்றதாக சொல்லப்படுகிறது.

  • அஜித்த திட்டாதீங்க!.. இது விளம்பர படமே இல்ல!.. விஷயமே வேற!.. நல்லவேளை சொன்னாங்க!…

    தமிழ் சினிமாவில் விஜய்க்கு அடுத்து அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக இருப்பவர் அஜித்குமார். சினிமாவில் எந்த குடும்பப் பின்னணி இல்லாமல் நுழைந்து மிகவும் கஷ்டப்பட்டு போராடி மேலே வந்தவர். பல தோல்விப்படங்களை கொடுத்தும் சினிமாவில் இப்போது முக்கிய நடிகராக மாறியிருக்கிறார்.

    அஜித் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு சில விளம்பர படங்களில் நடித்திருக்கிறார்.. ஆனால் சினிமாவில் நடிக்க தொடங்கிய பின் அவர் இதுவரை என்ன விளம்பர படங்களிலும் நடித்ததில்லை. ஆனால் மலேசியாவில் கார் ரேஸில் கலந்து கொண்டிருக்கும் அஜித் கேம்பகோலா குளிர்பான விளம்பரத்தில் நடிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.

    அதோடு இந்த விளம்பர படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார் எனவும் சொல்லப்பட்டது. அதோடு சமீபத்தில் இந்த விளம்பரம் தொடர்பான சில புகைப்படங்களும் வெளியானது. இதற்கு சில சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘மக்களின் உடல்நிலையை பாதிக்கும் குளிர்பானம் தொடர்பான விளம்பரத்தில் அஜித் நடிக்கலாமா?’ என்று அவர்கள் சமூகவலை பொங்கி வந்தார்கள்.

    ஆனால் இது தொடர்பான ஒரு உண்மை வெளியே தெரிய வந்திருக்கிறது.. அஜித் குளிர்பான விளம்பரத்தில் நடிக்கவில்லை. சம்பந்தப்பட்ட Campa Engery என்கிற நிறுவனம் அஜித்தின் கார் ரேஸுக்கு ஸ்பான்சர் செய்கிறது.. எனவே கார் ரேஸ் உடையில் அஜித் அதை புரமோட் செய்கிறார்.

    அது தொழில் ரீதியான அணுகுமுறை.. இது அஜித்தின் கார் ரேஸ் தொடர்பானது.. அஜித் விளம்பர படங்களில் நடிப்பது என்றால் எப்போதோ நடித்திருப்பார்.. இதை நிறைய பேர் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற செய்தி தற்போது வெளியாகியிருக்கிறது.

  • AK64: அடுத்த பட அக்கப்போரு!.. நல்லவேளை கார் ரேஸை வச்சி தப்பிச்சிட்டாரு ஏ.கே!..

    அஜித்துக்கு சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடும் போட்டி, ரிமோட் ஹெலிகாப்டர், பைக்கில் பல நூறு கிலோ மீட்டர் தனியாக பயணம் செய்வது என அவருக்கு பிடித்த பல விஷயங்களில் அவருக்கு ஆர்வம் அதிகம். மோட்டார் ரேஸ் துறையில் சாதிக்க பணம் வேண்டும் என்பதற்காகத்தான் அஜித் சினிமாவுக்கே நடிக்கவந்தார் என சொல்வதுண்டு.

    90களில் சினிமாவில் நடித்துக்கொண்டே பைக் ரேஸ்களிலும் கலந்துகொண்டு வந்தார் அஜித். அப்போது சிலமுறை விபத்தில் சிக்கி அவரின் உடலில் பல இடங்களில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. அதனால், உடலில் அவருக்கு பல பிரச்சனைகளையும் ஏற்பட்டது.

    ஆனாலும் பைக் மற்றும் கார் ரேஸ் மீதான காதல் அஜித்துக்கு இன்னும் குறையவே இல்லை. திருமணத்திற்கு பின் பல வருடங்கள் கார் ரேஸ்களில் கலந்து கொள்ளாமல் இருந்த அஜித் தற்போது மீண்டும் கார் ரேஸ்களில் கலந்து கொள்ள துவங்கி விட்டார். தற்போது மலேசியாவில் நடக்கும் கார் ரேஸில் அவர் கலந்து கொண்டு வருகிறார்.

    ajith

    ஒருபக்கம் அவரின் அடுத்த படத்தின் அறிவிப்பு எப்போது வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு அவரின் ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை. குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனே அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் என அறிவிக்கப்பட்ட நிலையில் பல மாதங்களாகியும் இன்னும் அடுத்த அப்டேட் வெளியாகவில்லை. அதற்கு முக்கிய காரணம் அஜித் கேட்கும் 185 கோடி சம்பளம்தான். அஜித்துக்கு அவ்வளவு சம்பளம் கொடுக்க தமிழ்நாட்டில் உள்ள தயாரிப்பாளரும் தயாராக இல்லை. எனவே மும்பைக்கு சென்று கூட தயாரிப்பாளர்களை தேடி பார்த்தார்கள். ஆனால் பலன் இல்லை. அந்த படம் அப்படியே தேங்கி நிற்கிறது.

    நல்லவேளை அஜித் இப்போது கார் ரேஸில் இருக்கிறார்.. எனவே, அவர் ரேஸில் இருப்பதால்தான் சினிமாவில் நடிக்காமல் இருக்கிறார் என பலரும் நினைக்கிறார்கள். இல்லை என்றால் அஜித்தின் அடுத்த படத்திற்கு தயாரிப்பாளரே கிடைக்கவில்லை என்கிற இமேஜ் வெளியே கசிந்திருக்கும். இது அஜித்துக்கு அவமானமாகவும் இருந்திருக்கும்.. நல்லவேளை கார் ரேஸ் அவரை அவரின் இமேஜை காப்பாற்றி விட்டது என்று சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

  • Ajith: நான் ஒன்னும் சி.எம் ஆகணும்னு ஆசைப்படலயே!.. இயக்குனரிடம் சொன்ன அஜித்!..

    அமராவதி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் அஜித். அதன்பின் பல படங்களிலும் சாக்லேட் பாயாக நடித்து வந்த அஜித் ஒரு கட்டத்தில் ஆக்சன் ஹீரோவாக மாறினார். குறிப்பாக தீனா, பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் அஜித்தை ஒரு மாஸ் நடிகராக மாற்றியது. இந்த படங்கள்தான் அஜித்துக்கு அதிக ரசிகர்களையும் கொண்டு வந்தது.

    அதன்பின் கடந்த பல வருடங்களாகவே அஜித் பக்கா ஆக்சன் ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். கடைசியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தில் கூட மாஸான ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றிருந்தது
    . அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார் அஜித்.

    பொதுவாக ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்கள் வில்லனாக நடிக்க சொன்னால் சம்மதிக்க மாட்டார்கள். ஏனெனில் ரசிகர்களிடம் அவர்களின் இமேஜ் மாறிவிடும் என நினைப்பார்கள். அதோடு தொடர்ந்து வில்லனாக நடிக்க மட்டுமே கேட்பார்கள் என்பதால் அந்த மாதிரி வாய்ப்பு வந்தால் தவிர்த்து விடுவார்கள். ஆனால் வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா படத்தில் அஜித் படம் முழுவதும் நெகட்டிவ் வேடத்திலேயே நடித்திருப்பார். இந்த படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்றது.

    இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்த வெங்கட் பிரபு ‘மங்காத்தா படத்தின் கதையை நான் அஜித் சாரிடம் சொன்னபோது ‘இதில் நீங்கள் ரொம்ப மிகவும் கெட்டவராக வரீங்க!.. மக்கள் உங்களை வெறுக்க வாய்ப்பிருக்கு’ என்று சொன்னேன். ஆனால் அவரோ ‘நான் ஒன்னும் சி.எம் ஆகணும்னு ஆசைப்படலயே.. நான் ஒரு நடிகன்.. எனக்கு வேற மாதிரி தீனி வேணும்’னு சொன்னார் என சொல்லியிருக்கிறார்.

  • அஜித் விஜய் எவனும் லாயக்கில்ல!.. கோபத்தில் பொங்கிய காமெடி நடிகர்!….

    சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது 1960 களிலிருந்தே தொடர்கிறது. அறிஞர் அண்ணா தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தில் அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்றவர்கள் இணைந்தார்கள்.

    இன்னும் சொல்லப்போனால் திமுகவில் எம்எல்ஏ ஆன முதல் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்தான். எம்ஜிஆர் கூட பல வருடங்கள் திமுகவில் இருந்துவிட்டுதான் அதிமுகவை தொடங்கினார். ஆனால் எம்ஜிஆருக்கு பின் அரசியல் கட்சி துவங்கியவர்கள் பெரிதாக அரசியலில் சாதிக்கவில்லை. சிவாஜி கணேசன், பாக்கியராஜ், டி.ராஜேந்தர், விஜயகாந்த், கமல்ஹாசன், சரத்குமார் என ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கிறது.

    இந்த லிஸ்டில் விஜயகாந்த் மட்டுமே அரசியலில் ஓரளவுக்கு சாதித்து எதிர்க்கட்சித் தலைவராக மாறினார். மற்றவர்களால் ஒரு எம்.எல்.ஏ சீட்டை கூட வாங்க முடியவில்லை. சினிமா நடிகர்களுக்கும், மக்களுக்கான இடையே பெரிய இடைவெளி இருக்கும். அவர்கள் மக்களோடு மக்களாக இறங்கி பழக மாட்டார்கள். அவர்களின் கால்கள் எப்போது ஆகாயத்தில் இருக்கும். நடிகர் விஜய் கூட தற்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். ஆனால் அவர் வேனில் இருந்து பிரச்சாரம் செய்து விட்டு சென்று விடுகிறாரே தவிர களத்தில் நிற்கவில்லை.

    நடிகர்கள் அப்படித்தான் சொகுசாக வளர்வார்கள். அரசியலுக்கு வர வேண்டுமெனில் மக்கள் பிரச்சினைகளை பேசி களத்தில் அவர்களுக்காக நிற்க வேண்டும். பல வருடங்கள் சமூக சேவை செய்ய வேண்டும். அப்படி செய்தால் மக்களே அவர்களை தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் இப்போதுள்ள நடிகர்கள் வீட்டிலிருந்து நேராக கோட்டைக்கு போய்விட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அரசியலில் படிப்படியாக வளராமல் ஒரே தேர்தலில் முதலமைச்சராகி விட வேண்டும் எனவும் ஆசைப்படுகிறார்கள்.

    இந்நிலையில், தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்த நடிகர் ஜெயமணி ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘எம்ஜிஆர்ய்க்கு அப்புறம் அரசியலில் எந்த நடிகராலும் பெருசாக வர முடியவில்லை. எம்ஜிஆர் மக்களோடு மக்களாக இருந்தார். அவருக்கு பின் கேப்டன் விஜயகாந்த் சினிமா நடிகர்களுக்கு அவ்வளவு செஞ்சார்..

    ஆனா இப்ப இருக்க விஜய் ஆகட்டும் அஜித் ஆகட்டும்.. எவனும் லாயக்கில்லை.. கேரியரை கொண்டு போய் கேரவானில் தனியா தின்னுட்டு எவன் எப்படி போனா என்னனு இருக்காங்க.. முதல்ல சினிமாவில் இருக்கவங்கள ஒழுங்கா பாத்துக்க.. அப்புறம் நீ மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வா’ என பொங்கி இருக்கிறார்.

    இதே ஜெயமணிதான் சில மாதங்களுக்கு முன் ‘ஒரு நடிகர் இருக்கிறார்.. ரொம்ப பெரிய ஹீரோ. நான் நேராவே பார்த்திருக்கேன்.. நாங்க ஷாட் முடிஞ்சு உட்கார்ந்து இருந்தோம். அப்போது அந்த நடிகரை பார்க்க ரசிகர்கள் வந்தாங்க.. உடனே பவுன்சர்களை கூப்பிட்டு அவங்களை அடிச்சி விரட்டுங்கன்னு சொன்னாரு. ஆனா அந்த ரசிகர்கள் அவர் பக்கத்தில் வந்தவுடனே ‘வாங்க போட்டோ எடுத்துக்கலாம்’னு சொன்னாரு.. அப்படியே நடிப்பாங்க.. அவர் சிஎம் ஆகவும் ஆசைப்படுறாரு’ என சொல்லியிருந்தார்.

  • Ajith: ஆம்புலன்சில் வந்து டப்பிங் பேசிய அஜித்!.. அட அந்த படமா?!..

    அமராவதி திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அஜித். தொடர்ந்து சாக்லேட் பாயாக பல படங்களிலும் நடித்து வந்த அஜித் ஒரு கட்டத்தில் ஆக்சன் ஹீரோவாக மாறினார். தீனா, பில்லா, மங்காத்தா போன்ற திரைப்படங்கள் அவருக்கு நிறைய ரசிகர்களை பெற்று தந்தது.
    பல வருடங்களாகவே விஜய்க்கு போட்டியாக அஜித் இருந்து வருகிறார். விஜய்க்கு அடுத்து அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக அஜித் இருக்கிறார். அதனால்தான் சமூகவலைத்தளங்களில் விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் தொடர்ந்து மோதி வருகிறார்கள்.

    சினிமாவில் நடிப்பது போக பைக் ரேஸ், கார் ரேஸ், பைக் நீண்ட தூரம் பயணிப்பது, துப்பாக்கிச்சுடும் போட்டியில் கலந்து கொள்வது என அஜித்துக்கு பிடித்த விஷயங்கள் நிறைய இருக்கிறது. இப்படி பல விஷயங்களில் ஆர்வம் இருந்தாலும் சினிமா என்று வந்துவிட்டால் அஜித் சின்சியராக இருப்பார். அதற்கு உதாரணமாக ஒரு விஷயத்தை அஜித்தை வைத்து தீனா படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் சொல்லியிருக்கிறார்.

    தீனா படம் முடிந்தபோது அஜித் பைக் ரேஸில் கலந்து அவருக்கு விபத்து ஏற்பட்டு அவரின் முதுகில் அடிபட்டிருந்தது. ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிவிடவே அஜித் ஆம்புலன்சில் வந்து அந்த படத்திற்காக டப்பிங் பேசி கொடுத்தார். அவ்வளவு சின்சியரானவர்தான் அஜித்’ என்று பேசியிருக்கிறார்.

    அஜித் இப்போது மலேசியாவில் நடக்கும் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொண்டு வருகிறார். அடுத்து இவர் நடிக்கவுள்ள புதிய படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். அஜித்துக்கு 185 கோடி சம்பளம், மொத்த பட்ஜெட் 300 கோடி என்பதால் தயாரிப்பாளர் யார் என இதுவரை முடிவாகாமல் இருக்கிறது.

  • இயக்குனரை கழட்டிவிட்ட அஜித்!.. 3 கதை பிடிச்சிருந்தும் இப்படி ஆகிப்போச்சே!..

    இயக்குனர் கௌதம் மேனனிடம் சினிமா கற்றவர் மகிழ் திருமேனி. சில படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்துவிட்டு ஒரு கட்டத்தில் இயக்குனராக மாறினார் மகிழ் திருமேனி.
    அதில் அருண் விஜயை வைத்து அவர் இயக்கிய தடையறத் தாக்க திரைப்படம் பேசப்பட்டது. நல்ல சஸ்பென்ஸ் ஆக்சன் திரில்லர் படத்தை எடுப்பவர் என்கிற பெயர் மகிழ் திருமேனிக்கு கிடைத்தது.

    தொடர்ந்து மிகாமன், தடம் உள்ளிட்ட சில படங்களை இயக்கினார் மகிழ் திருமேனி. உதயநிதியை வைத்தும் ஒரு திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஒருபக்கம், விஜய்க்கு அவர் மூன்று கதைகளை சொல்லி விஜய்க்கு மூன்றுமே பிடித்து போனது. ஆனால் அந்த நேரத்தில் உதயநிதி படத்தை முடித்துக் கொடுக்க வேண்டியிருந்ததால் மகிழ் அங்கு போய்விட்டதால் விஜயை இயக்கம் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. அதேநேரம் அஜித் அவரை அழைத்து விடாமுயற்சி படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார்.

    ajith

    அந்த படத்தின் ஷூட்டிங்பின் போது விஜய்க்கு சொன்ன 3 கதைகளை அஜித்திடம் சொல்ல அந்த கதைகள் அஜித்துக்கு மிகவும் பிடித்த போய் விட்டது. அஜித்துக்கு ஒரு பழக்கம் உண்டு. ஒரு இயக்குனருடன் இணைந்து அந்த படம் ஹிட் அடித்துவிட்டால் அந்த இயக்குனரின் இயக்கத்தில் தொடர்ந்து 3 படங்களில் நடிப்பார். அப்படித்தான் சிறுத்தை சிவா, ஹெச்.வினோத் ஆகியோர் இயக்கத்தில் நடித்தார்..

    ஆனால் விடாமுயற்சி படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால் அஜித் மகிழ் திருமேனியை கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள். படத்தின் தோல்விதான் காரணமா இல்லை வேறு எதாவது காரணமா என்பது தெரியவில்லை. அஜித்திடமிருந்து அழைப்பு வராததால் விஜய் சேதுபதியை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கம் முயற்சியில் மகிழ் திருமேனி ஈடுபட்டிருக்கிறாராம்.

  • அஜித் – சிம்பு மீட்டிங் இருக்கட்டும்!. டீசர்ட்ல இருக்க பேர கவனிச்சீங்களா!….

    சிம்புவும், அஜித்தும் நேற்று மலேசியாவில் சந்தித்துக் கொண்ட விஷயம்தான் நேற்று முதலில் எக்ஸ் தளத்தில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அஜித் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். துபாய் ஐரோப்பிய நாடுகள் முடிந்து தற்போது மலேசியாவில் கார் ரேஸ் நடக்கிறது. அதற்காக அங்கு சென்றிருந்த அஜித்தைத்தான் சிம்பு மீட் பண்ணியிருக்கிறார்.
    இந்த சந்திப்புக்கு பின்னால் ரசிகர்களுக்கு தெரியாத பல விஷயங்கள் இருக்கிறது.

    முதலில் அஜித் மலேசியா போனதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது. ஒன்று அங்கு நடக்கும் கார் ரேஸ்.. மற்றொன்று அஜித் Campa என்கிற குளிர்பான விளம்பரத்திலும் Nova என்கிற ரியல் எஸ்டேட் விளம்பரத்திலும் நடிக்கவிருக்கிறார், அதேபோல் இயக்குனர் ஏ.எல் விஜய் அஜித் தொடர்பான டாக்குமெண்ட்ரி படம் ஒன்றை இயக்கி வருகிறார். அங்கு அஜித்தின் எல்லா நடவடிக்கைகளையும் அவர் ஷூட் செய்து வருகிறார்.

    ஒருபக்கம் மலேசியாவில் ஒரு நகைக்கடையை திறந்து வைக்க சிம்பு மலேசியா சென்றார். அந்த விழாவை முடித்துவிட்டு விமான நிலையம் செல்லும் வழியில் அந்த கார் ரேஸ் மைதானம் இருக்க அஜித் இருப்பது தெரிந்து அடிப்படையில் அஜித் ரசிகரான சிம்பு அவரை பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார்.

    இது அஜித்துக்கு சொல்லப்பட அவரும் ‘வாங்க’ என்று சொல்ல சிம்பு அங்கு சென்றுருக்கிறார். அஜித்தை வரவேற்று உபசரித்து ‘நீங்கள் நிறைய படங்களில் நடிக்க வேண்டும்’ என்று அறிவுரை சொல்லியிருக்கிறார்
    அஜித். சிம்பு அஜித் சந்தித்துக்கொண்ட புகைப்படங்களும் , வீடியோக்களும் ஏற்கனவே வெளியானது. அதில் சிம்புவும் அஜித்தும் அணிந்திருந்த டீசர்ட்களில் Campa Engery பெயரும் Nova என்கிற பெயரும் அச்சடிக்கப்பட்டிருந்தது..

    simbu ajith

    இந்த இரண்டு விளம்பரங்களையும் அஜித்தின் ஃபேவரைட் இயக்குனர் சிறுத்தை சிவாதான் இயக்கப் போகிறார். அதற்காக அவரும் சமீபத்தில் மலேசியா சென்றார். அஜித் கலந்து கொண்டிருக்கும் கார் ரேஸ்களில் இந்த இரண்டு நிறுவனங்களும் ஸ்பான்சராக இருக்கலாம் என கருதப்படுகிறது. அங்கு சென்ற சிம்பு ‘எனக்கும் ஒரு டீசர்ட் கொடுங்க சார்’ என்று கேட்க அவருக்கும் ஒரு டீசர்ட் கொடுத்திருக்கிறார் அஜித்.