Tag: ajithkumar

  • சிம்புவ பாத்து அசந்துபோன அஜித்!.. அப்படியே ஒரு அட்வைஸ்!.. மலேசியா அப்டேட்!…

    மலேசியாவில் இருக்கும் அஜித்தை நடிகர் சிம்பு சந்தித்த புகைப்படங்களும், வீடியோக்களும் நேற்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. நடிகர் சிம்பு மற்ற நடிகர்களைப் போல கேப் விடாமல் தொடர்ந்து படங்களில் நடிக்கும் நடிகர் இல்லை. கடந்த பல வருடங்களாகவே அவரின் ஒரு படத்திற்கும் மற்றொரு படத்திற்கும் இடையே நிறைய இடைவெளி ஏற்படுகிறது. அதோடு கெட்டப்பையும் தோற்றத்தையும் அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்கிறார். இதெல்லாம் மாறினாலும் அவரின் படம் என்னவோ வெளியாவது இல்லை.

    அவரின் பத்து தல படம் ரிலீஸாகி இரண்டு வருடங்கள் கழித்து தக் லைப் படம் வந்தது. ஆனாலும் அந்த படமும் பாக்ஸ் ஆபிஸில் ஊத்திக் கொண்டது. அதன்பின் மூன்று புதிய படங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் சிம்பு. அதில் முதல் படமே டேக்ஆப் ஆகவில்லை. எனவே வெற்றிமாறன் கூப்பிட்டதால் அரசன் படத்தில் நடிக்கப் போனார். அதுவும் புரமோஷன் வீடியோவோடு நின்று போனது.

    பல பஞ்சாயத்துகளுக்கு பின் தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் கோவில்பட்டியில் துவங்கியிருக்கிறது. மலேசியாவிலிருந்து விமானம் மூலம் மதுரை சென்று இந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார் சிம்பு. ஒருபக்கம், மலேசியாவில் ஒரு நகைக்கடை திறப்புவிழாவுக்கு போன சிம்பு ஏற்கனவே அங்கு கார் ரேஸுக்காக வந்திருத அஜித்தை சந்தித்து பேசியிருக்கிறார்.

    இது தொடர்பான வீடியோக்கள் நேற்று இணையத்தில் வைரலானது. சிம்புவின் கெட்டப்பை பார்த்த அஜித் ‘இந்த லுக் உங்களுக்கு நன்றாக இருக்கிறது. இதையே மெயின்டெயின் பண்ணுங்க’ என்று சொன்னாராம். மேலும் ‘இடைவெளி விடாமல் தொடர்ந்து நிறைய படங்களில் நடியுங்கள்’ என்றும் அறிவுரை சொல்ல ‘சரி சார்’ என்று பவ்யமாக பதில் சொல்லியிருக்கிறார் சிம்பு.

  • கை கொடுத்த அஜித்!.. செம ஹேப்பி!.. ஃபேன் கேர்ள்ட் மொமண்ட் க்யூட் வீடியோ!…

    விஜய் போலவே நிறைய பெண் ரசிகைகளை வைத்திருப்பவர் நடிகர் அஜித்குமார். அமராவதி படத்தில் துவங்கில் தற்போது வரை பல படங்களிலும் நடித்து விட்டார். 90களில் சாக்லேட் பாய் லுக்கில் அஜித்தை பல பெண்களுக்கும் பிடித்திருந்தது. பல படங்களிலும் பெண்களை கவரும் ஆணழகனாக வந்து மனதை கொள்ளையடித்தார் அஜித்.

    90களில் இவர் நடித்ததில் 90 சதவீத படங்கள் காதல் படங்கள்தான் இவருக்கு பெண் ரசிகைகளை கொண்டு வந்தது. அஜித் கடந்த சில வருடங்களாகவே வெளிநாடுகளில் கார் ரேஸ்களில் ஈடுபட்டு வருகிறார். அப்போதெல்லாம் ரேஸ் நடக்கும் ஊரில் வசிகும் பெண் ரசிகைகள் அவரை சந்திக்க சென்று அவருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொள்கிறார்கள். ஏற்கனவே இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்கலில் தொடர்ந்து வெளியாகி வருகிறது..

    தற்போது அஜித் மலேசியாவில் நடக்கும் கார் ரேஸில் கலந்து கொண்டிருக்கிறார். இதைத்தொடர்ந்து டந்த இரண்டு நாட்களாகவே அவரை பார்க்க ரசிகர்கள் பலரும் கார் ரேஸ் நடக்கும் இடத்திற்கு செல்கிறார்கள். நேரம் கிடைக்கும்போது அஜித்தும் அவர்களுடன் உரையாடி புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்.

    இந்நிலையில், மலேசியாவில் கார் ரேஸ் நடக்கும் இடத்தில் அஜித் நடந்து வரும்போது அவரை பார்ப்பதற்காக அங்கு காத்திருந்த ஒரு இளம் பெண்ணிடம் அஜித் ஸ்டைலாக கை கொடுத்து விட்டு சென்றார். சந்தோஷத்தில் அந்த பெண் கொடுத்த ரியாக்ஷன் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • STR: திடீரென அஜித்தை சந்தித்த சிம்பு!.. வீடியோ செம வைரல்!…

    நடிகர் அஜித் கடந்த பல மாதங்களாகவே தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். முதலில் துபாயில் துவங்கிய கார் ரேஸ் அதன்பின் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றது. துபாயில் நடந்த கார் ரேஸில் அஜித்தின் டீம் மூன்றாவது பரிசை வென்றது. ரேஸில் கிடைக்கும் இடைவெளியில் திரைப்படங்களிலும் நடித்து வந்தார் அஜித். அப்படித்தான் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களில் நடித்தார். தற்போது மீண்டும் கார் ரேஸில் இருக்கிறார் அஜித்.

    தற்போது மலேசியாவில் நடைபெற நடைபெற்று வரும் கார் ரேஸில் அஜித் கலந்து கொண்டிருக்கிறார். இதற்காக சமீபத்தில் அஜித் மலேசியா சென்ற வீடியோவும் இணையத்தில் வெளியானது. இந்நிலையில்தான் நடிகர் சிம்பு திடீரென அஜித்தை மலேசியாவில் சந்தித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தான் ஒரு அஜித் ரசிகர் என்ன சிம்பு பல வருடங்களுக்கு முன்பே பேட்டி கொடுத்தார்.

    ஒரு நிகழ்ச்சிக்காக சிம்பு மலேசியா சென்று இருந்தார். அப்போது அஜித் கார் ரேஸில் இருப்பதை கேள்விப்பட்டு கார் ரேஸ் நடக்கும் இடத்திற்கு சென்று அஜித்தை சந்தித்திருக்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் ரசிகர்களும், சிம்பு ரசிகர்களும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.

  • கார் ரேஸை வைத்து ஒரு படம்!.. அவர்தான் இயக்குனரா?!.. அஜித் பக்கா ஸ்கெட்ச்!..

    நடிகர் அஜித்குமாருக்கு சிறு வயது முதலே கார் மற்றும் பைக் ஓட்டுவதில் அதிக ஆர்வம் உண்டு. சினிமாவில் நடிப்பதற்கு முன்பு கூட தன் வீட்டின் அருகில் இருக்கும் ஒரு பைக் பட்டறைல்தான் அவர் அதிக நேரம் செலவழித்திருக்கிறார். சினிமாவில் நடிக்க துவங்கியது கூட பைக் வாங்குவதற்கும், பைக் ரேஸ்களில் கலந்து கொள்வதற்கும்தான் என்று அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

    சினிமாவில் நடித்து வந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்து பைக் ரேஸ்களில் கலந்து கொண்டார். இதனால் விபத்துகளில் சிக்கி அவரின் முதுகில் பலமுறை அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. ஒரு கட்டத்தில் கார் ரேஸ்களிலும் கலந்து கொள்ள துவங்கினார். ஆனால் திருமணத்திற்கு பின் அவர் கார் ரேஸ்களில் கலந்து கொள்ளவில்லை ஆனால், சமீப காலமாக அஜித் தொடர்ந்து கார் ரேஸ்களில் கலந்து கொண்டு வருகிறார்.

    இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. இந்நிலையில்தான் ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் நடித்து கார் ரேசை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட F1 திரைப்படம் போல ஒரு கார் ரேஸ் சம்மந்தப்பட்ட கதையில் நாமும் நடிக்க வேண்டும் என்கிற ஆசை அஜித்துக்கு வந்திருக்கிறதாம். ஏற்கனவே ஒரு பேட்டியில் இதை அஜித்தே கூறியிருந்தார்.

    அஜித்தை வைத்து பில்லா படத்தை இயக்கிய விஷ்ணுவர்தனை அழைத்து கார் ரேஸ் தொடர்பாக ஒரு கதையை உருவாக்க சொல்லி இருக்கிறார் அஜித். எல்லாம் சரியாக அமைந்தால் கார் ரேஸ் தொடர்பான ஒரு படத்தில் அஜித் நடிப்பது உறுதி.

  • நீங்க படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர்.. அந்த விஷயத்தில் மாஸ் காட்டும் ரஜினி

    தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த். தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர். அந்த காலகட்டத்தில் ஹீரோ என்றால் நல்ல சிவப்பாக இருக்க வேண்டும் நல்ல உயரம் தெளிவான தமிழ் உச்சரிப்பு இவை அனைத்தும் ஒரு ஹீரோவிற்கான அடையாளமாக இருந்தது. ஆனால் இதற்கு அப்படி எதிர்மறையாக கருப்பு நிறம் கன்னடம் கலந்த தமிழ் உச்சரிப்பு அதுவும் கடகடவென டயலாக் பேசுவது என்பது ரஜினியின் அடையாளமாக இருந்தது.

    ஒரு ஹீரோவிற்கான ஃபார்முலாவை முற்றிலுமாக உடைத்து மக்களின் நாயகனாக திரையில் அடித்து தூள் கிளப்பினார். மக்களும் நம்மில் இருந்து ஒருவன் அங்கு கலக்குகிறான்டா என கொண்டாட ஆரம்பித்தார்கள். இதனால் எண்பதுகளின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்து சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றார். சமகாலங்களில் கமல்ஹாசன் ஒரு ஹீரோவுக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டிருந்தாலும் மக்கள் ரஜினி திரையில் செய்யும் ஸ்டைலுக்கும் பஞ்ச் வசனத்திற்கும் இவரை தலையில் வைத்து கொண்டாட ஆரம்பித்தார்கள்.

    ரசிகர்களின் பல்சை பக்காவாக பிடித்த ரஜினி அதிலிருந்து தனக்கென ஒரு பார்முலாவை உருவாக்கி தமிழ் மக்களை தன் வசம் கட்டிப்போட்டார். ரஜினியைப் பற்றி பல விமர்சனங்கள் வந்தாலும் படப்பிடிப்பு தளத்திலிருந்து அவரைப் பற்றி தயாரிப்பாளரோ இயக்குனரோ இதுவரை எந்தவித புகார்களையும் அளித்ததில்லை.

    இதுவே அவரின் வெற்றிக்கு மூலக்காரணம். தமிழ் சினிமாவில் இன்னும் ஒரு நடிகர் 75 வயது வரை ஹீரோவாக நடித்து கொண்டிருக்கும் பொழுது பின்பற்றக்கூடிய முக்கியமான நல்ல பழக்கங்களில் ஒன்று அவர் படப்பிடிப்புக்கு நேரம் தவறாமல் வருவதுதான். சொன்ன நேரத்திற்கு வருவது ரஜினியின் வழக்கம். அதை ரஜினி தற்போது நடித்து முடித்துள்ள கூலி படம் வரை கடைப்பிடித்து வருகிறார்.

    கூலி படம் வருகிற 14-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். இவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் இளசுகளிடம் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது. சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று படத்திற்கு கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. லியோவில் தவற விட்டதை இந்த முறை கூலி படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ் பிடிப்பார் என்று ட்ரெய்லர் பார்த்ததிலிருந்து தெரிகிறது.

    இந்த முறை இவரது ரைட்டிங் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் அடுத்த வாரம் ரிலீஸ் ஆக உள்ளதால் அதற்கான ப்ரீ புக்கிங் பட்டையை கிளப்பி வருகிறது. இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இதுவரை இல்லாத அளவிற்கு ப்ரீ புக்கிங் ரெக்கார்டுகளை உடைத்து சாதனை படைத்து வருகிறது. இந்தப் படத்துடன் கிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியாக உள்ள வார்-2 திரைப்படத்தின் புக்கிங் இதில் பாதி அளவு கூட தரவில்லை. 75 வயதிலும் இளம் ஹீரோகளுக்கு டஃப் கொடுத்து வருகிறார் ரஜினிகாந்த்.

    அது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் விஜய் மற்றும் அஜித்துக்கு இன்றும் தண்ணி காட்டி வருகிறார் ரஜினி. ரஜினி நடித்த தனது முதல் படமான அபூர்வ ராகங்கள் நடித்த போது விஜய்க்கு வயது ஒன்று அஜித்துக்கு வயது 4. ஆனால் தற்போது இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களாக உச்சம் தொட்டுள்ளனர். இருந்தாலும் உலக அளவில் புகழ்பெற்று நம்பர் ஒன் இடத்தில் இருப்பது ரஜினி தான். இந்த அசுர வளர்ச்சி சினிமா உலகமே வியந்து பார்க்கிறது.

  • கையை விரித்த தயாரிப்பாளர்கள்!. சம்பளத்தை குறைத்த அஜித்!.. ஏகே-வுக்கு இது தேவையா?!…

    Ajithkumar: கடந்த சில வருடங்களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் உள்ள பெரிய நடிகர்களின் சம்பளம் எல்லாம் தாறுமாறாக உயர்ந்துவிட்டது. அதற்கு காரணம் பெரும்பாலான படங்கள் பேன் இண்டியா வகையில் உருவாகி வருகிறது. அதாவது தெலுங்கில் எடுக்கப்பட்டு அது தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. அதில் அதிக வசூல் வருவதால் பேன் இண்டியா நடிகர்களின் சம்பளமும் அதிகரித்துவிட்டது.

    அல்லு அர்ஜூன், ராம் சரண், பிரபாஸ், கேஜிஎப் யாஷ் போன்றவர்களின் சம்பளமெல்லாம் இப்படித்தான் உயர்ந்தது. அவர்களாவது பேன் இண்டியா நடிகர்களாக இருக்கிறார்கள். ஆனால், ரஜினி, விஜய், அஜித் போன்றவர்களெல்லாம் இன்னும் பாகுபலி போலவோ, கேஜிஎப் போலவே ஒரு சூப்பர் ஹிட் பேன் இண்டியா படத்தை கொடுக்கவில்லை.

    ஆனால், சம்பளத்தை மிகவும் அதிகமாகவே கேட்கிறார்கள். இவர்களுக்கு இடையே ‘யாருக்கு அதிக சம்பளம்?’ என்கிற போட்டியே நடக்கிறது. கோலிவுட்டை பொறுத்தவரை அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் இருக்கிறார். ஏனெனில், இவரின் படங்கள் 400 கோடிக்கும் மேல் வசூலை பெறுகிறது. தற்போது நடித்துள்ள ஜனநாயகன் படத்தில் அவருக்கு 225 கோடி சம்பளம் என சொல்லப்படுகிறது.

    ஆனால், அஜித்தெல்லாம் தொடர் வெற்றியை கொடுக்கும் ஒரு நடிகர் இல்லை. ஆனாலும், விஜயின் சம்பளத்தில் 60 சதவீதம் கேட்கிறார். ‘விஜய்க்கு கொடுக்கும்போது எனக்கும் கொடுங்கள்’ என்பதே அஜித்தின் பார்வையாக இருக்கிறது. அஜித்தின் விடாமுயற்சி படம் ஓடவில்லை. அதேபோல், குட் பேட் அக்லி படமும் பெரிய வெற்றியை பெறவில்லை. இந்த படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு 70 கோடி நஷ்டமே ஏற்பட்டது.

    இந்நிலையில்தான், ஆதிக் ரவிச்ச்சந்திரன் இயக்கத்தில் அஜித் அடுத்து நடிக்கவுள்ள புதிய படத்திற்கு அஜித் தரப்பில் 180 கோடி சம்பளம் கேட்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் முடியாது என கைவிரித்துவிட்டது. எனவே, ஏஜிஎஸ், சன் பிக்சர்ஸ், வேல்ஸ் இண்டர்நேஷனல் உள்ளிட்ட 5 தயாரிப்பு நிறுவனங்களிடம் பேசி இருக்கிறார்கள். அஜித் சொன்ன சம்பளத்தையும் படத்தின் பட்ஜெட்டையும் கேட்டுவிட்டு அவர்கள் எல்லோருமே முடியாது என சொல்லிவிட்டனர்.

    கடைசியாக மீண்டும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திடமே அஜித் தரப்பு பேசியிருக்கிறது. அஜித்துக்கு 100 கோடி மட்டுமே சம்பளமாக கொடுப்போம் என அவர்கள் சொல்ல, அஜித் தரப்பு இறங்கி வந்து 130 கோடி என பேசி முடித்திருக்கிறார்களாம். அனேகமாக இது இறுதி செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.

  • அஜித்தின் புதிய படத்தை தயாரிக்கப்போவது அவரா?!.. யார்தான்பா புரடியூசர் சொல்லுங்கப்பா?!..

    அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் யார் என்பதுதான் இப்போது கோலிவுட்டில் பெரும் குழப்பமாக இருக்கிறது. இதுவரை அஜித்தின் படங்களுக்கு தயாரிப்பாளர் சுலபமாக கிடைத்துவிடுவார். அதற்கு காரணம் விஜயை விட குறைவான சம்பளத்தையே அஜித் வாங்கி வந்தார். வாரிசு படமும் துணிவு படமும் ஒன்றாக வெளியானது.

    வாரிசு படத்திற்காக விஜய் 110 கோடி சம்பளம் வாங்கினார். துணிவு படத்திற்கு அஜித் வாங்கிய சம்பளம் 70 கோடி. அதாவது விஜயை விட 50 கோடி குறைவாகவே வாங்கினார். கோட் படத்திற்காக விஜய் 200 கோடி சம்பளம் பெற்றபோது, குட் பேட் அக்லி படத்திற்கு அஜித் 165 கோடி வாங்கினார்.

    ஒரு நடிகர் தன்னுடைய படங்கள் எவ்வளவு வசூலை பெறுகிறது?.. தயாரிப்பாளருக்கு எவ்வளவு லாபத்தை கொடுக்கிறது? என்பதை வைத்துதான் தனது சம்பளத்தை முடிவு செய்ய வேண்டும். ஆனால், விஜய் எவ்வளவு சம்பளம் வாங்கிறார் என்பதை தெரிந்துகொண்டு தனது சம்பளத்தை அஜித் முடிவு செய்கிறார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். ஏனெனில், பல வருடங்களாகவே இருவரும் போட்டி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். ஜனநாயகன் படத்திற்கு விஜய் வாங்கியுள்ள சம்பளம் 225 கோடி என்கிறார்கள்.

    குட் பேட் அக்லி படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு அப்படம் 70 கோடி நஷ்டத்தை கொடுத்திருக்கிறது. அடுத்து ஆதிக் இயக்கும் படத்தை இந்நிறுவனமே தயாரிப்பதாக இருந்தது. ஆனால், அஜித் தரப்பில் 180 கோடியை சம்பளமாக கேட்க 100 கோடி மட்டுமே கொடுக்க முடியும் என சொல்லிவிட்டது மைத்ரி மூவி மேக்கர்ஸ்.

    எனவே, சன் பிக்சர்ஸ், லைக்கா, ஏஜிஎஸ் என பல தயாரிப்பாளர்களிடமும் அஜித் தரப்பில் பேசப்பட்டது. அஜித் படங்களுக்கு இருக்கும் வியாபாரத்தை கணக்குப்போட்ட அந்நிறுவனங்கள் ‘அவ்வளவு சம்பளம் கொடுக்க முடியாது’ என கைவிரித்துவிட்டது. எனவே, தனது மாமனார் பிரபுவின் சிவாஜி பிலிம்ஸ் நிறுவனத்திடம் கேட்கலாமா என்கிற எண்ணமும் ஆதிக்கிற்கு வந்தது.

    இந்நிலையில், இப்போது தமிழில் பல படங்களையும் வாங்கி ரிலீஸ் செய்துவரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் பெயர் அடிபடுகிறது. இந்நிறுவனம்தான் குட் பேட் அக்லி படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்தது. இதற்கு முன்பெல்லாம் அட்வான்ஸாக சில கோடிகளை வாங்கிக்கொண்டு ஒவ்வொரு மாதமும் 5 கோடியை தனது அக்கவுண்ட்டில் போட்டுவிட வேண்டும் என அஜித் சொல்லிவந்தார். ஆனால், இப்போது சம்பளத்தில் பாதியை அட்வான்ஸாக கொடுத்துவிட்டு மீதியை ஷூட்டிங் முடிந்தவுடன் கொடுக்க வேண்டும் என்கிறாராம்.

    எனவேதான், சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தை இழுபறியில் இருக்கிறது என்கிறார்கள். எல்லாம் சரியாக அமைந்தால் இந்நிறுவனே அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்கும் என கணிக்கப்படுகிறது.

  • அந்த மாதிரி படம் கிடைச்சா நான் எப்பவும் ரெடி!.. அசால்ட் பண்லாம்!.. அஜித் பேட்டி!…

    Ajithkumar: நடிகர் அஜித்துக்கு சினிமா என்பது தொழில் மட்டுமே. பைக் ரேஸில் கலந்துகொள்வதற்கு பணம் வேண்டும் என்பதற்காகத்தான் அவர் சினிமாவில் நடிக்கவே போனார். இதை அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். சினிமாவில் சம்பாதித்ததை வைத்தே அவர் நிறைய பைக் மற்றும் கார் ரேஸ்களில் கலந்துகொண்டார். ஒருகட்டத்தில் அதில் விபத்துக்கள் ஏற்பட்டு உடலில் பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதால் கார் ரேஸ்களில் கலந்து கொள்வதை நிறுத்தினார்.

    அதன்பின் பல வருடங்கள் அவர் கார் ரேஸில் கலந்துகொள்ளவில்லை. ஆனால், விடாமுயற்சி பட வேலைகள் துவங்கிய போது துபாயில் நடந்த கார் ரேஸில் அஜித்தின் டீம் கலந்து கொண்டது. அந்த டீமுக்கு அஜித்தே கேப்டனாக இருந்தார். அவர் கார் ரேஸில் கலந்துகொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது.

    துபாய் போட்டியில் அஜித்தின் டீம் 3வது பரிசை வென்றது. இதற்காக தமிழ்நாடு அரசு முதல் நடிகர்கள், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் வரை பலரும் அவருக்கு வாழ்த்து கூறினார்கள். கடந்த பல மாதங்களாகவே அஜித் தொடர்ந்து வெவ்வேறு நாடுகளில் நடக்கும் கார் ரேஸ்களில் கலந்துகொண்டு வருகிறார்.

    விடாமுயற்சி படத்தை முடித்துவிட்டு குட் பேட் அக்லி படத்தில் நடித்தார். அதை முடித்துவிட்டு கார் ரேஸுக்கு போய்விட்டார். விடாமுயற்சி படத்தை ஓப்பிடும்போது குட் பேட் அக்லி ஓரளவுக்கு வசூலை பெற்றது. ஒருபக்கம், முன்பெல்லாம் ஊடகங்களுக்கு எந்த பேட்டியும் கொடுக்காமல் இருந்த அஜித் இப்போது கார் ரேஸ் நடக்கும் இடங்களில் ஆங்கில ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.

    இந்நிலையில், சமீபத்தில் அவரிடம் ‘F1 படத்தில் பிராட் பிட் நடித்தது போல உங்களையும் ஒரு கார் பந்தயம் தொடர்பான படத்தில் பார்க்க முடியுமா?’ என கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன அஜித் ‘ ஏன் முடியாது. என் படங்களில் வரும் சண்டைக் காட்சிகளில் நானேதான் நடிக்கிறேன். அப்படிப்பட்ட வாய்ப்புகள் வந்தால் நான் ஏன் நடிக்காமல் இருக்க போகிறேன்?. Fast & Furious அல்லது, F1 போன்ற படங்களின் அடுத்த பாகங்களில் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்’ என சொல்லியிருக்கிறார்.

    அஜித் இப்போது 24H கார் பந்தயத்தில் கலந்து கொண்டு வருகிறார். இந்த போட்டி இந்த வருடம் செப்டம்பர் மாதம் வரை நடக்கவுள்ளது. அதை முடித்துவிட்டு நவம்பர் முதல் பிப்ரவரி வரை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். அதன்பின் மீண்டும் 2026 மார்ச் முதல் கார் ரேஸில் கலந்துகொள்ள திட்டமிட்டிருக்கிறார் அஜித்.

  • ஒரே வருடத்தில் 2 வித்தியாசமான படங்களில் கலக்கிய ஹீரோக்கள்!.. இறங்கி அடித்த அஜித்!…

    பொதுவாக பல நடிகர்கள் ஒரே ஸ்டைலில் படம் நடிப்பார்கள். இந்த நடிகர் படமென்றால் இப்படித்தான் இருக்கும் என்கிற இமேஜும் உருவாகும். ரஜினியெல்லாம் அப்படித்தான். இவரின் படங்கள் என்றாலே மாஸான காட்சிகள், பன்ச் வசனங்கள், சண்டை காட்சிகள் ஆகியவை இடம் பெற்றிருக்கும். அவரின் ரசிகர்களும் அதைத்தான் எதிர்பார்ப்பார்கள்.

    அதே நேரம் படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி சில நடிகர்கள் நடிப்பார்கள். அப்படி ஒரே வருடத்தில் வித்தியாசம் காட்டி 2 படங்களில் நடித்த நடிகர்கள் பற்றி இங்கு பார்ப்போம். நடிகர் சூர்யா கவுதம் மேனன் இயக்கத்தில் காக்க காக்க படத்தில் உதவி கமிஷனராக அசத்தலாக நடித்திருப்பார். இந்த படம் 2003 ஆகஸ்டு மாதம் வெளியானது. இந்த படத்திற்கு பின் முற்றிலும் வேறுபட்டு பாலாவின் இயக்கத்தில் பிதாமகன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் 2003 அக்டோபர் மாதம் வெளியானது.

    நடிகர் விஜய் ஷங்கரின் இயக்கத்தில் நடித்த நண்பன் படம் 2002ம் வருடம் ஜனவரியில் வெளியானது. இந்த படத்தில் அமைதியான கல்லூரி மாணவனாக நடித்திருந்தார் விஜய். சண்டை காட்சி இல்லாத ஒரே விஜய் படம் இது மட்டுமே. அதே வருடம் நவம்பர் மாதம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படம் பக்கா ஆக்‌ஷன் படமாக வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்தது.

    கவுதம் மேனன் இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக அஜித் நடித்த திரைப்படம் என்னை அறிந்தால். 2015 பிப்ரவரியில் வெளியான இந்த படத்தில் அசத்தலான ஆக்‌ஷன் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அதே வரும் நவம்பரில் வெளியானது வேதாளம். சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் அஜித் பக்கா ரவுடியாகவும், வில்லன்களை பழிவாங்குபவராகவும் நடித்திருந்தார்.

    கமலை பொறுத்தவரை அவர் இதுபோல பல படங்களில் நடித்திருக்கிறார். உதாரணத்திற்கு சொல்ல வந்தால் அவரே கதை எழுதி தயாரித்து இயக்கி நடித்த விருமாண்டி படம் 2004ம் வருடம் ஜனவரி மாதம் வெளியானது. அதே வரும் ஆகஸ்டு மாதம் சரணின் இயக்கத்தில் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படம் வெளியானது.

    ரஜினியை பொறுத்தவரை சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடித்த பாட்ஷா படம் 1995ம் ஜனவரியில் வெளியானது. அதே வருடம் அக்டோபர் மாதம் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் முத்து படம் வெளியானது. பாட்ஷாவில் இருந்தது போல மாஸான காட்சிகள் இதில் ஒன்று கூட இருக்காது.

  • 300 கோடி கொடுப்பது அவரா?!.. அஜித் படத்தை தயாரிக்க பணம் கொடுப்பது யார் தெரியுமா?!…

    Ajithkumar: அஜித்தின் விடாமுயற்சி படமும், குட் பேட் அக்லி படமும் அடுத்தடுத்து வெளியானது. இந்த இரண்டு படங்களிலும் நடித்து கொடுத்துவிட்டு கார் ரேஸுக்கு போனார் அஜித். துபாயில் உள்ள கார் ரேஸை முடித்துவிட்டு இப்போது ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் கார் ரேஸ்களில் கலந்துகொண்டு வருகிறார்.

    விடாமுயற்சி படம் பெரிய வெற்றி பெறவில்லை. ஏனெனில், அஜித்தின் ரசிகர்கள் எதிர்பார்த்த மாஸ் காட்சிகள் அந்த படத்தில் இடம் பெறவில்லை. ஆனால், அடுத்து வந்த குட் பேட் அக்லி படம் அஜித் ரசிகர்களை முழுக்கவே திருப்திப்படுத்தியது. ஏனெனில், அவர்கள் அஜித்திடம் எதிர்பார்த்த மாஸ் காட்சிகள் எல்லாமே அந்த படத்தில் இருந்தது.

    இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளார் என்கிற செய்தி வெளியானது. ஆனால், குட் பேட் அக்லி உருவாகும்போது தயாரிப்பு நிறுவனத்திற்கும் அவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் இந்த படத்தை அவர்கள் தயாரிக்கவில்லை என சொன்னார்கள்.

    அதையும் மீறி முயற்சிகள் செய்தபோது அஜித் கேட்ட 180 கோடி சம்பளத்தை கொடுக்க முடியாது என அந்நிறுவனம் கைவிரித்துவிட்டது. ஏனெனில் படத்தின் மொத்த பட்ஜெட் 300 கோடியை எட்டுகிறது. அதன்பின் சன் பிக்சர்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் முயற்சி செய்தும் யாரும் முன்வரவில்லை.

    அப்போதுதான் பிரபல வினியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்த படத்தை தயாரிக்கப்போகிறார் என செய்தி வெளியானது. குட் பேட் அக்லி படத்தை கூட இவர்தான் தமிழகத்தில் வெளியிட்டார். இவர் சின்ன தயாரிப்பாளர்தான். இவர் எப்படி 300 கோடி பட்ஜெட்டில் அஜித் படத்தை தயாரிக்கப்போகிறார் என்கிற கேள்வி திரையுலகில் எழுந்திருக்கிறது.

    இந்நிலையில்தான் இது தொடர்பான செய்தி வெளியே கசிந்திருக்கிறது. ராகுல் ரெட்ஜெயண்ட் உள்ளிட்ட பல நிறுவனங்களில் வேலை செய்திருக்கிறார். அஜித்தை வைத்து போனி கபூர் 3 படங்களை தயாரித்த போது அந்த படங்களிலும் வேலை செய்திருக்கிறார். அந்த 3 படங்களுக்கும் மும்பையை சேர்ந்த ஒரு ஃபைனான்சியர்தான் பணம் கொடுத்திருக்கிறார். அவர்தான் இப்போது ஆதிக் இயக்கும் படத்திற்கு ஃபைனான்ஸ் செய்ய வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள்.