Tag: ajithkumar

  • அஜித் அரசியலுக்கு வருவார்னு ஜாதகத்திலேயே இருக்கு!.. புள்ளி விபரம் சொல்லும் இயக்குனர்…

    சாக்லேட் பாயாக சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து காதல் கதைகளில் நடித்து ஒரு கட்டத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறியவர்தான் அஜித்குமார். சில படங்களில் ஆக்‌ஷனில் அதிரடி காட்டிவிட்டு பின்னர் மாஸ் ஹீரோவாகவும் மாறினார். பில்லா மற்றும் மங்காத்தா ஆகிய படங்கள் அதற்கு உதவியது. இந்த 2 படங்களும் அவருக்கு பல ரசிகர்களையும் பெற்று தந்தது.

    பொதுவாக ரசிகர் கூட்டம் அதிகமாக வைத்திருக்கும் நடிகர்கள் அரசியல் கட்சி துவங்குவார்கள். ஏனெனில், எம்.ஜி.ஆரை பார்த்து நாமும் தமிழகத்தில் முதலமைச்சராகலாம் என்கிற ஆசை பலருக்கும் உண்டு. ரஜினி, கமல், விஜய் என எல்லோரும் அரசியல் தொடர்பாக தங்களின் ரசிகர்களை கொண்டு வந்தவர்கள்தான்.

    இதையும் படிங்க: அடேங்கப்பா!.. அஜித் தெறி மாஸா இருக்காரே!.. கார் அருகே என்னம்மா போஸ் கொடுத்து நிக்கிறாரு ஏகே!..

    ஆனால், மிகப்பெரிய ரசிகர் கூட்டம் வைத்திருக்கும் அஜித்துக்கோ அரசியலில் துளி ஆர்வமும் இல்லை. ஓட்டு போடுவதோடு என் அரசியல் முடிந்துவிட்டது என ஒதுங்கியே இருக்கிறார். ஒரு தேர்தலில் அவரின் ரசிகர் மன்றங்கள் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட ஒரே காரணத்திற்காக தனது மொத்த ரசிகர் மன்றங்களையும் கலைத்தவர்தான் அஜித்.

    அதோடு, தனக்கு அரசியலில் வரவேண்டும் என்கிற ஆசை எப்போதும் இல்லை என தொடர்ந்து அவர் சொல்லி வருகிறார். ஆனால், எம்.ஜி.ஆரிடம் மக்களுக்கு பிடித்த அந்த முக வசீகரம் அஜித்திடம் இருக்கிறது என சில அரசியல் விமர்சகர்களே சொன்னார்கள். தனது கட்சியில் அஜித்தை இணைக்க ஜெயலலிதாவே முயற்சி எடுத்தார். ஆனால், அஜித் மறுத்துவிட்டார்.

    இந்நிலையில், ஜோடி பட இயக்குனர் பிரவீன் காந்த் ஊடகம் ஒன்றில் பேசிய போது ‘தமிழக அரசியலில் ஒரு பெரும் புள்ளியாக அவர் உருவெடுப்பார் என அவரின் ஜாகத்திலேயே இருக்கிறது. அஜித், விஜய் எல்லாம் எத்தனை வருடமாக சினிமாவில் இருக்கிறார்கள். அவர்களுக்கு பின் எவ்வளவு நடிகர்கள் வந்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் இருவரும் இப்போதும் டாப்பில் இருக்கிறார்கள்.

    அதற்கு காரணம் வில் பவர்தான். பவர் என்றால் அரசியல்தான். வில் பவர் இருப்பவர்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார்கள். அஜித் எதிர்காலத்தில் அரசியலுக்கு வர வாய்ப்பிருக்கிறது’ என அவர் பேசினார்.

  • அஜித் வீசிய அடுத்த வெடிகுண்டு!… விடாமுயற்சியில் சிக்கி தவிக்கும் மகிழ் திருமேனி!.

    விடாமுயற்சி திரைப்படத்தை எந்த நேரத்தில் துவங்கினார்களோ இப்போது வரை முடியாமல் இழுத்து கொண்டே இருக்கிறது. அஜித் கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் 2023ம் வருடம் ஜனவரியில் வெளியானது. அதன்பின் ஒன்றரை வருடம் ஆகியும் அஜித்தின் அடுத்த படம் வெளியாகவில்லை.

    இதற்குடையில் விக்னேஷ் சிவனுடன் ஒரு படம் ஓகே செய்யப்பட்டு பின்னர் விக்னேஷ் சிவனை தூக்கிவிட்டு மகிழ் திருமேனிதான் இயக்குனர் என்றார்கள். விடாமுயற்சி படத்திற்கு போகாமல் இருந்திருந்தால் மகிழ் திருமேனி இந்நேரம் இரண்டு திரைப்படங்களை இயக்கி முடித்திருப்பார். ஆனால், கடந்த ஒரு வருடமாக இந்த படத்தில் சிக்கி தவித்து வருகிறார் அவர்.

    இதையும் படிங்க: அஜித் செட்டே ஆகல!.. பிடிக்கவே இல்லை!. சுனாமி வந்து தூக்கட்டும்னு நினைச்சேன்.. புலம்பும் இயக்குனர்!

    பட வேலைகள் துவங்கி 4 மாதங்கள் கதை சரியாக செட் ஆகாமல் இழுத்துக்கொண்டே போனது. அஜித் ஒரு பக்கம் பைக்கை எடுத்துக்கொண்டு உலகை சுற்ற போய்விட்டார். ஒருவழியாக கதையை உறுதி செய்ய அசர்பைசான் நாட்டில் ஷூட்டிங் நடத்துவோம் என சொல்லிவிட்டார் அஜித். ஆனால், மழை, பனிப்பொழிவு என சில காரணங்களால் படப்பிடிப்பு தடைபட்டது.

    அதன்பின் அப்படத்தை தயாரிக்கும் லைக்காவுக்கு ஏற்பட்ட நிதிநெருக்கடி காரணமாக அஜித்துக்கு சொன்ன படி மாத தவணை சம்பளம் கொடுக்கவில்லை. எனவே, அஜித் கால்ஷீட் கொடுக்காமல் இருந்தார். இதனால் அப்படத்தில் நடித்த திரிஷா உள்ளிட்ட நடிகர்கள் வேறு படங்களுக்கு போய்விட்டனர். அர்ஜூன் லியோ படத்தை முடித்துவிட்டு, தனது மகள் திருமணத்தை நடத்த போய்விட்டார்.

    vidamuyarchi

    எல்லோரின் கால்ஷீட்டையும் வாங்கி படப்பிடிப்பை நடத்த படாதபாடு பட்டார் மகிழ் திருமேனி. ஒருபக்கம், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திற்கு நடிக்க போனார் அஜித். அதோடு, விடாமுயற்சி ஷுட்டிங்கை உடனே துவங்கவில்லை எனில் குட் பேட் அக்லி படத்தை முடித்துவிட்டுதான் வருவேன் என லைக்காவுக்கு அழுத்தம் கொடுத்தார் அஜித்.

    எல்லா நடிகர், நடிகைகளையும் சேர்த்து எடுக்க வேண்டிய காட்சிகள் 15 நாட்கள் எடுக்க வேண்டியிருக்கிறது. இதில் ஒரு சண்டை காட்சியும் அடக்கம். விரைவில் படக்குழு அசர்பைசானுக்கு கிளம்பவிருக்கிறது. இந்நிலையில், சண்டைக்காட்சியை மட்டும் சென்னையில் செட் போட்டு எடுங்கள் என சொல்லிவிட்டாராம் அஜித். எனவே, என்ன செய்வது என முழித்து வருகிறாராம் மகிழ் திருமேனி. இந்த படம் முடிந்து வெளியானால் நிம்மதி என்கிற மனநிலையில் அவர் இருப்பதாகவே சொல்லப்படுகிறது.

  • அஜித் செட்டே ஆகல!.. பிடிக்கவே இல்லை!. சுனாமி வந்து தூக்கட்டும்னு நினைச்சேன்.. புலம்பும் இயக்குனர்!

    சினிமாவில் ஒரு இயக்குனர் ஒரு கதையை உருவாக்குவார். அந்த கதைக்கு இவர்தான் சரியாக இருப்பார் என இயக்குனருக்கு ஒரு எண்ணம் வரும். அல்லது புதுமுக நடிகர்களை நடிக்க வைக்கலாம் எனவும் சிலர் யோசிப்பார்கள். எதுவாக இருந்தாலும் அந்த கதைதான் அதை தீர்மானிக்கும். கதை என்ன சொல்கிறதோ, கதை எதை கேட்கிறதோ அதை செய்ய வேண்டும்.

    அதை விட்டுவிட்டு கதைக்கு செட் ஆகாத நடிகர்களை நடிக்க வைத்தால் அந்த படம் கண்டிப்பாக தோல்வியையே சந்திக்கும். இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் பாலச்சந்தர் ஆகியோர் தனது படங்களில் நிறைய புதுமுக நடிகர், நடிகைகளை அறிமுகம் செய்து வைத்ததற்கு காரணம் அதுதான். அதனால்தான் அவர்கள் வெற்றி பெற்றனர்.

    ji

    ஆனந்தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. அதன்பின் ரன், சண்டக்கோழி என அதிரடி ஆக்சன் படங்களை எடுத்தார். தொடர் வெற்றிப்படங்களை கொடுத்ததால் இவரின் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் ஆசைப்பட்டனர்.

    அப்போதுதான் அஜித்தை வைத்து ஜீ எனும் படத்தை இயக்கினார் லிங்குசாமி. இந்த படத்தின் கதாநாயகியாக திரிஷா நடித்திருந்தார். ‘தேவன் கோவில் மணி’ என்கிற மனதை மயக்கும் மெலடி பாடலும் இப்படத்தில் இடம் பெற்றிருந்தது. ஆனால், இந்த படத்தின் கதை, திரைக்கதை ரசிகர்களை கவரவில்லை. எனவே, படம் தோல்வி அடைந்தது.

    Lingusamy
    Lingusamy

    அடுத்து விஷாலை வைத்து சண்டக்கோழி படத்தை கொடுத்தார் லிங்குசாமி. அப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் இயக்கிய பீமா ஓடவில்லை. ஆனால், அடுத்து இயக்கிய பையா படம் வெற்றி பெற்றது. அடுத்து இயக்கிய வேட்டை, அஞ்சான், சண்டக்கோழி 2, தி வாரியர் ஆகிய படங்கள் ஓடவில்லை.

    இந்நிலையில், ஜி படம் பற்றி பேசிய லிங்குசாமி ‘அந்த படத்தில் எனக்கு மிகவும் இளமையான தோற்றம் கொண்ட ஒரு பையனே தேவைப்பட்டான். ஆனால், ‘அஜித் நடிக்க ஆசைப்படும் போது அதை தவிர்க்க வேண்டாம்’ என எல்லோரும் சொன்னார்கள். ஆனால், அஜித் வந்தபின் எனக்கு எதுவுமே பிடிக்கவில்லை. அந்த படம் எடுக்கும்போது சுனாமி வந்து எடுத்த பிலிம் எல்லாம் அடித்துக்கொண்டு போய்விட வேண்டும் என்று கூட ஆசைப்பட்டேன்’ என வேதனையுடன் பேசி இருக்கிறார் லிங்குசாமி.

  • கிளப்பிட்டாங்கய்யா… கிளப்பிட்டாங்கய்யா… அஜீத் அரசியலுக்கு வருகிறாரா…? வந்தா விஜய் மாதிரி இருக்காதாம்…!

    அஜீத் அரசியலுக்கு வருவார் என பல ஜோசியர்கள் உறுதியா சொல்லிக்கிட்டு இருந்தாங்க. இப்ப அந்த நியூஸ் மறைந்து போனது. ஆனா மீண்டும் இதுபற்றிய பேச்சுகள் வர ஆரம்பித்து விட்டது. இதுபற்றி என்ன சொல்றீங்கன்னு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் கேட்கிறார். அதற்கு அவர் என்ன பதில் சொல்கிறார் என்று பார்ப்போம்.

    நான் ஒரு ஜோசியர்கிட்ட 5 வருஷத்துக்கு முன்னாடி பேசினேன். ‘அஜீத் கண்டிப்பா அரசியலுக்கு வருவாரு. அவரு மிகப்பெரிசா ஜெயிக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு’ன்னு சொன்னாரு. ‘யாரை சொல்றீங்க?’ன்னு திரும்பவும் கேட்டேன். ‘நடிகர் அஜீத் தான்’னு சொன்னாரு. அவருக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை.

    MGR Ajith
    MGR Ajith

    சினிமாவே அவர் புரொபஷனலா அணுகுபவர். அவருக்கு நிறைய எக்ஸ்ட்ரா இன்ட்ரஸ்ட் இருக்கு. பைக் ரேஸ்ல ஆர்வம் இருக்கு. குடும்பத்தைப் பத்திரமா பார்த்துக்கிறாரு. எம்ப்ளாயீஸ பார்க்குறாரு. அஜீத்துக்கு எம்ஜிஆர் மாதிரி ஜாதகமாம். அவரோட ஜாதகத்துல அவரு கண்டிப்பா உச்சத்துக்கு வருவாரு. அதனால அரசியல்லயும், மக்கள் பணியிலும் அஜீத் கண்டிப்பா ஈடுபடறதுக்கான வாய்ப்பு இருக்குன்னு அந்த ஜோதிடர் சொன்னாரு. இது அவரோட 50வது வயசுக்கு அப்புறம் வரும்.

    அவருக்கான ஒரு கட்டம் இருக்குன்னா அதை நோக்கிப் பயணிக்கிறதுல தப்பு இல்ல. இப்போ விஜய் சாருக்கும் அந்த கட்டம் இருக்கு. சினிமாவுல ஓரளவுக்குத் தான் மக்களோட அன்பு கிடைக்கும். ஆனா பொலிட்டிகல் பவர்ங்கறது மிகப்பெரிய விஷயம். இன்று பவன் கல்யாண் உச்சத்துல இருக்காருன்னா அது மாதிரி உச்சம் கிடைக்க விஜய் சாருக்கும் வாய்ப்பு இருக்கு. நான் கண்டிப்பா அந்த உச்சத்தைத் தொட முடியும்கற நம்பிக்கையில தான் விஜய் சார் அரசியல்ல இறங்கியிருக்காரு.

    அஜீத்துக்கும் ஜாதகத்துல பலரும் சொல்றது என்னன்னா அரசியல்ல அந்த வாய்ப்பு இருக்கு. இப்ப அவர் தான் அதை முடிவு பண்ணனும். அரசியலுக்கு 2026ல வரணுமா? 2031லயான்னு. அவர் அதை முடிவு பண்ணிட்டாருன்னா அவரோட அரசியலுக்கான தலைமை ரெடியா இருக்கு. இவரு தனியா கட்சி ஆரம்பிக்கத் தேவையில்லை. இவர் தங்கள் பார்ட்டியில இருந்தா நாம ஜெயிச்சிடலாம்னு அவங்க தயாரா இருக்காங்க. 2026ல வர மாட்டாரு.

    இதையும் படிங்க… விஜய் போடும் பக்கா பிளான்… முழுநேர அரசியல் அந்தப் படத்திற்குப் பிறகுதானாம்…! பிரபலம் தகவல்

    இது குறுகிய காலம். 2031ல அவரு நினைச்சாருன்னா அவரு வர வாய்ப்பு அதிகமா இருக்கு. மக்களைப் பொருத்தவரை அவருக்கு பெரிய இமேஜ் இருக்கு. வாழு, வாழவிடு என்ற அவரது குறிக்கோள் எல்லாருக்கும் பிடிச்சிருக்கு. இப்போ விஜய் அரசியல்ல இறங்குறாரு. அதோட தாக்கம் எப்படி இருக்குன்னு கவனிப்பார். அவரைப் பொருத்த வரை 100 சதவீதம் உன்னிப்பாகக் கவனிக்கக்கூடியவர். ஆனால் இப்போதைக்கு எந்த முடிவும் அவர் எடுக்க மாட்டார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ஆனா அஜீத்துக்கு ஒரு சதவீத ஆர்வம் கூட இப்போது இல்லை. எம்ஜிஆர் மாதிரி அவருக்கான சூழல் வரும்போது அதுவே அவரை அரசியலுக்கு வரவழைத்து விடும் என்கிறார் சித்ரா லட்சுமணன்.

     

     

     

  • பல கோடி மதிப்புள்ள லம்போகினி காரை வைத்திருக்கும் திரைப்பிரபலங்கள்!.. அஜித்தான் டாப்பு!..

    பொதுவாக திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் விலை மதிப்புள்ள கார் வைத்திருப்பார்கள். கார்களின் மீது அதிக பிரியம் உள்ள சில நடிகர்கள் அதிக கார்களை வைத்திருப்பார்கள். நடிகர் கவுண்டமணி 10க்கும் மேற்பட்ட கார்களை வைத்திருந்ததாக கூட ஒரு செய்தி உண்டு.

    காமெடி நடிகரே அப்படி எனில் ஹீரோக்கள் பற்றி சொல்ல வேண்டுமா!.. எல்லா பெரிய நடிகர்களிடமும் விலை உயர்ந்த சில கார்கள் இருக்கிறது. ஆடி, ரோல்ஸ் ராய்ஸ், பி.எம்.டபிள்யூ போன்ற கார்கள் அவர்களிடம் இருக்கிறது. அதேபோல், அதிக பட்ஜெட்டுகளில் படமெடுக்கும் பெரிய தயாரிப்பாளர்களும் விலையுயர்ந்த கார்களை வைத்திருப்பது வழக்கம்.

    இதையும் படிங்க: தக் லைஃப்’ படத்தில் நடிகருக்கு ஏற்பட்ட விபத்து.. மீண்டும் மீண்டுமா?!.. அட இவருக்கா?…

    இது கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என எல்லாவற்றுக்கும் பொருந்தும். விலை உயர்ந்த காரை வைத்திருப்பதை ஒரு கவுரமாகவே பலரும் கருதுவார்கள். இந்நிலையில், விலை உயர்ந்த கார்களில் ஒன்றான லம்போகினி காரை வைத்திருக்கும் திரைப்பிரபலங்கள் பற்றி இங்கே பார்ப்போம்.

    மலையாளம் மற்றும் தமிழில் படங்களில் கலக்கி வரும் நடிகர் பஹத் பாசில் ஒரு லம்போகினி காரை வைத்திருக்கிறார். இதன் விலை 3 கோடியே 15 லட்சம். அடிக்கடி இந்த காரை அவர் பயன்படுத்துகிறார். தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆர்.கே வைத்திருக்கும் லம்போகினி காரின் விலை 3 கோடியே 45 லட்சம்.

    car

    மலையாள நடிகர் பிரித்திவிராஜ் வைத்திருக்கும் லம்போகினி காரின் விலையும் 3 கோடியே 15 லட்சம்தான். அதேபோல், தமிழில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் வைத்திருக்கும் லம்போகினி காரின் விலை 3 கோடியே 69 லட்சம் ஆகும். இதில், அஜித் வைத்திருக்கும் லம்போகினி காரின் விலைதான் மிகவும் அதிகம்.

    அதன்விலை 34 கோடி என சொல்லப்படுகிறது. அஜித் ஒரு கார் பிரியர் என்பது எல்லோருக்கும் தெரியும். இவரிடம் பல வகையான கார் மற்று பைக்குகள் இருக்கிறது. குறிப்பாக பல லட்சம் மதிப்புள்ள பல பைக்குகளை அஜித் வைத்திருக்கிறார். அடிக்கடி அந்த பைக்குகளை எடுத்துகொண்டு நண்பர்களுடன் ஊர் சுற்ற போய்விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • முதல்ல எனக்கு செட்டில் பண்ணுங்க!.. விடாமுயற்சிக்கு வேட்டு வைத்த உதயநிதி!.. ஷூட்டிங் நடந்த மாதிரிதான்!

    சினிமா என்பது கோடிகள் புரளும் தொழில். அதுவும், ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற நடிகர்களை வைத்து படமெடுத்தால் சில நூறு கோடிகள் தேவைப்படும். ஹீரோக்களின் சம்பளமே 100 கோடிக்கும் மேல். அதோடு, படத்தின் படப்பிடிப்பு பணத்தால் நிற்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    அதனால்தான் ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே தங்களின் கால்ஷீட்டை கொடுக்கிறார்கள். ஏஜிஎஸ், லைக்கா, சன் பிக்சர்ஸ் போன்ற நிறுவனங்கள்தான் பெரிய நடிகர்களை வைத்து படமெடுக்கும் நிலையில் இருக்கிறது. அப்படி லைக்கா நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் திரைப்படம்தான் விடாமுயற்சி.

    இதையும் படிங்க: அர்ஜூனால் ஸ்தம்பித்து நிற்கும் ‘விடாமுயற்சி’! இருக்குற பிரச்சினை போதாதுனு இது வேறயா?

    துவக்கம் முதலே இந்த படம் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. பனிப்புயல், மழை போன்ற காரணங்களால் அசர் பைசான் நாட்டில் நடந்த படப்பிடிப்பு தடைபட்டது. அதன்பின் லைக்கா நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியதால் ஒரு மாதத்திற்கும் மேல் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கவில்லை.

    லைக்கா நிறுவனம் ஒரே நேரத்தில் ரஜினியின் வேட்டையன், கமலின் இந்தியன் 2, அஜித்தின் விடாமுயற்சி ஆகிய 3 படங்களை தயாரித்து வந்தது. ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாமல் திணறியது. இதனால்தான் விடாமுயற்சி படப்பிடிப்பு தடைபட்டது. இந்தியன் 2 படத்தையும் தொடர முடியவில்லை.

    அப்போதுதான் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இந்தியன் 2 படத்தில் முதலீடு செய்தது. அதன்பின்னரே அந்த படம் டேக் ஆப் ஆனது. ஆனால், விடாமுயற்சி டேக் ஆப் ஆகவில்லை. இதனால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்க போனார் அஜித். ஒரு செட்யூல் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. இப்போது அவர் விடாமுயற்சிக்கு கால்ஷீட் கொடுக்க தயாராக இருக்கிறார். இப்போது அஜித்தை விட்டால் குட் பேட் அக்லி படத்தை முடித்துவிட்டுதான் அவர் வருவார்.

    udhyanithi

    இந்நிலையில்தான், இந்த மாத இறுதியில் படப்பிடிப்பை துவங்கும் என செய்திகள் வெளியானது. இந்தியன் 2 படத்தை வியாபாரம் செய்து அதில் வரும் பணத்தில் விடாமுயற்சி படப்பிடிப்பை முடித்துவிடலாம் என லைக்கா திட்டமிட்டது.

    ஆனால், ‘நாங்கள் முதலீடு செய்த பணத்தை எடுத்த பின்னர் நீங்கள் எடுத்துகொள்ளுங்கள்’ என உதயநிதி சொல்லிவிட்டதால் கையை பிசைந்து நிற்கிறது லைக்கா நிறுவனம். விடாமுயற்சி படத்தை எப்படியாவது முடித்து தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருக்கிறது லைக்கா. ஆனால், நடப்பதையெல்லாம் பார்த்தால் அது நடக்குமா என்பது தெரியவில்லை.

  • சிவாஜி குடும்பத்துக்கு தோல்வி!.. அஜித் கொஞ்சம் கூட நன்றி இல்லாதவன்!.. கொந்தளிக்கும் பிரபலம்..

    சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் வரைதான் கையை கட்டி நிற்பார்கள். ஒரு இடத்தை பிடிக்கும் வரை அடக்கி வாசிப்பார்கள். நன்றியுடன் இருப்பார்கள். அல்லது இருப்பது போல நடிப்பார்கள். அதுவே ஒரு இடத்தை பிடித்து பிரபலமாகிவிட்டால் அவர்களின் நடவடிக்கையே மாறிவிடும். தன்னை யாரெல்லாம் வளர்த்திவிட்டார்களோ அவர்களையே மறந்துவிடுவார்கள்.

    அவர்களோடு பேசுவதையும், சந்திப்பதையும் கூட தவிர்த்துவிடுவார்கள். இதற்கு உதாரணமாக பல நடிகர்களை சொன்னாலும் இதில் வடிவேலு முக்கியமானவர். தன்னை சென்னை அழைத்து வந்து தனது அலுவலகத்தில் தங்க வைத்து படத்தில் நடிக்க வாய்ப்பு தூக்கிவிட்ட ராஜ்கிரணை வளர்ந்தபின் மதிக்காமல் இருந்தவர்தான் வடிவேலு.

    இதையும் படிங்க: சொல்லி அடித்த விஜயகாந்த்!.. தோல்வியை சந்தித்த விஜய பிரபாகரன்!.. சோகத்தில் ரசிகர்கள்…

    அவ்வளவு ஏன்?.. சின்னக்கவுண்டர் படத்தில் வடிவேலுக்கு வாய்ப்பு கொடுத்த விஜயகாந்தை பின்னாளில் எப்படியெல்லாம் வடிவேல் திட்டினார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒருபக்கம், ஒரு படத்தில் ஒரு ஹீரோ நடித்து அப்படம் தோல்வி அடைந்தால் அதே தயாரிப்பாளர்களுக்கு மீண்டும் கால்ஷீட் கொடுக்க மாட்டார்கள். ரஜினி மட்டுமே இதற்கு விதிவிலக்கு.

    அமராவதி படம் மூலம் அஜித்தை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்த சோழா பொன்னுரங்கத்திற்கு அதன்பின் கால்ஷீட் கொடுக்கவே இல்லை அஜித். அவர் பலமுறை அஜித்தை சந்திக்க முயன்றும் கூட அது நடக்கவில்லை. அப்படி பல தயாரிப்பாளர்களை கைவிட்டிருக்கிறார் அஜித்.

    manickam
    manickam

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சொந்தமாக ‘சிவாஜி பிலிம்ஸ்’ என்கிற நிறுவனம் இருக்கிறது. சிவாஜியின் மறைவுக்கு பின் மன்னன் உள்ளிட்ட சில படங்களை அவர்கள் தயாரித்துள்ளனர். அப்படி அஜித்தை வைத்து எடுத்த படம்தான் ‘அசல்’. இப்படத்தை சரண் இயக்கி இருந்தார். ஆனால், இப்படம் தோல்வி.

    இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் ‘அசல் படத்தால் பிரபுவுக்கு பல கோடிகள் நஷ்டம். சிவாஜி நிறுவனம் நிதிநெருக்கடியில் இருந்தபோது ரஜினி அவர்களை அழைத்து சந்திரமுகி படத்தை தயாரிக்க சொல்லி வாய்ப்பு கொடுத்தார். ஆனால், அசல் படம் தோல்வி அடைந்தபின் அஜித் அவர்களை கண்டுகொள்ளவே இல்லை. அந்த நல்ல மனசு அஜித்துக்கு எப்போதும் இல்லை. அவன் நன்றி இல்லாதவன்’ என கோபமாக பேசினார். இவர்தான் ‘அஜித் என்னிடம் பணம் வாங்கிவிட்டு திருப்பி தரவே இல்லை’ என சில மாதங்களுக்கு முன்பு பேட்டி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

  • விடாமுயற்சி ஷூட்டிங் நின்னதுக்கு காரணமே அஜித்தான்!. அட என்னப்பா சொல்றீங்க!…

    அது என்னவோ!.. சிம்பு படம் என்றாலே பஞ்சாயத்து என்பது போல அஜித் படம் என்றால் துவங்குவது முதல், படப்பிடிப்பு நடப்பது மற்றும் படம் முடியும் வரை தாமதம் என்கிற நிலை உருவாகி விட்டது. வலிமை படம் 2 ஆண்டுகளுக்கு மேல் எடுக்கப்பட்டது. அதற்கு கொரோனா ஊரடங்கு ஒரு காரணம் என்றாலும் வேறு சில காரணங்களும் இருந்தது. அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டே ஓய்ந்து போனார்கள். இப்போது அவர்களுக்கே இது பழகிவிட்டது.

    அஜித்துக்கு சினிமாவில் நடிப்பது என்பது தொழில் மட்டுமே. சினிமாவில் நடிப்பதை விட பைக்கை எடுத்துக்கொண்டு ஊரை சுற்றுவதில் அவருக்கு அதிக ஆர்வம் உண்டு. அதனால்தான் அவர் நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஷூட்டிங் இல்லையென்றால் உடனே தனது பைக் கேங்கை கூட்டிகொண்டு எங்கேயாவது போய்விடுவார்.

    இதையும் படிங்க: ஹைதராபாத் ரோட் சிக்னலில் சாகசம் செய்யும் அஜித்! வைரலாகும் வீடியோ.. தல வேற லெவல்

    விஜயின் வாரிசு படம் வெளியான போது தனது துணிவு படத்தை போட்டியாக களம் இறக்கினார் அஜித். அதில் வெற்றியையும் அவர் பார்த்தார். வாரிசு படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்து அது ரிலீஸ் ஆகி, அதன்பின் வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடிக்க துவங்கி, தனக்கான காட்சிகளை முடித்து கொடுத்துவிட்டார் விஜய்.

    ஆனால், துணிவு படத்திற்கு பின் துவங்கப்பட்ட அஜித்தின் விடாமுயற்சி படம் இப்போது வரை முடிந்தபாடில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு அசர்பைசான் நாட்டில் துவங்கி 6 மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. பனிப்புயல், மழை என பல காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டதாக சொல்லப்பட்டது.

    இதையும் படிங்க: நைட்டு 12 மணிக்கு இயக்குனரின் வீட்டுக்கு போய் வாய்ப்பு கேட்ட அஜித்!. இவரா இப்போ இப்படி மாறிட்டாரு!.

    மேலும், ஒரே நேரத்தில் விடாமுயற்சி, வேட்டையன் என பெரிய நடிகர்களின் படங்களை லைக்கா நிறுவனம் தயாரித்ததால் பொருளாதார நெருக்கடியில் சிக்கியதாகவும் அதனால்தான் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில்தான் ஒரு புதிய செய்தி வெளியாகியுள்ளது.

    அசர்பைசான் நாட்டில் படப்பிடிப்பை நடத்த சொன்னதே அஜித்தான். அங்கு ஒரு நாள் படப்பிடிப்பு நடத்துவதற்கான செலவே பல லட்சம். அப்படி இருக்கும்போது சம்பளத்தை கொஞ்சம் குறைத்துக்கொள்ளுமாறு லைக்கா தரப்பில் கேட்க ‘அதெல்லாம் முடியாது’ என சொல்லிவிட்டாராம் அஜித். அதனால்தான் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஒருவழியாக இந்த மாத இறுதியில் அசர்பைசான் நாட்டில் கடைசிக்கட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறது படக்குழு.

  • நீங்க நல்லா நடிச்சாலும் படம் ஏன் ஓடுறதில்ல?!.. அஜித்திடம் கேட்ட கேள்வி!.. ஏகே சொன்ன நச் பதில்!..

    1993ம் வருடம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கிய அஜித் கடந்த 30 வருடங்களாகவே நடித்து வருகிறார். அதுவும் கடந்த 15 வருடங்களாக மாஸ் ஹீரோவாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். பில்லா படத்தில் ஸ்டைலீஸ் ஹீரோவாகவும், மங்காத்தா படத்தில் மாஸ் ஹீரோவாகவும் மாறினார்.

    ஒருகட்டத்தில் விஜய்க்கு நிகராக இவருக்கும் ரசிகர்கள் உருவானார்கள். இத்தனைக்கும், 15 வருடங்களுக்கு முன்பே தனது ரசிகர் மன்றங்களை கலைத்தவர் அஜித். ஆனாலும், அவருக்கு ரசிகர்கள் குறையவில்லை. இன்னும் சொல்லப்போனால் அதன்பின்னரே அவருக்கு ரசிகர்கள் உருவனார்கள்.

    இதையும் படிங்க: நைட்டு 12 மணிக்கு இயக்குனரின் வீட்டுக்கு போய் வாய்ப்பு கேட்ட அஜித்!. இவரா இப்போ இப்படி மாறிட்டாரு!.

    15 வருடங்களுக்கு முன்பு வெளியான படம்தான் பில்லா. இது ரஜினி நடித்த படத்தின் ரீமேக் ஆகும். இந்த படம் உருவானதன் பின்னணியில் ஒரு கதை இருக்கிறது. ஒருமுறை ரஜினியை அஜித் சந்தித்தபோது ரஜினி சாதாரணமாக விசாரிக்க ‘நானும் தொடர்ந்து நடிக்கிறேன் சார். ஆனா படங்கள் பெருசா ஓடுறதே இல்ல’ என சொல்லி இருக்கிறார்.

    அப்போது ரஜினி ‘என் பில்லா படத்தை ரீமேக் செய்து நடியுங்கள்’ என சொல்ல அப்படித்தான் பில்லா படம் உருவானது. அது அஜித்துக்கு வெற்றிப்படமாகவும் அமைந்தது. அஜித்தின் கேரியர் அப்படத்தின் வெற்றியால்தான் டேக் ஆப் ஆனது. 2000ம் ஆண்டுகளில் அஜித்தின் பல படங்கள் தோல்வியை பெற்றது. அஜித் நன்றாக நடித்த முகவரி, சிட்டிசன் ஆகிய படங்களும் கூட வசூலை பெறவில்லை.

    இதையும் படிங்க: அஜித்குமார் இதையே தான் பண்ணிட்டு இருக்காரு… கிரீடம் படத்தில் இருந்து குட் பேட் அக்லி வரை… இத கவனிச்சீங்களா?

    இதுபற்றி பேட்டி ஒன்றில் அவரிடம் கேட்கப்பட்டது. அதாவது ‘சமீபகாலமாக நீங்கள் நடிக்கும் படங்களில் உங்கள் நடிப்பு நன்றாகவே இருக்கிறது. ஆனால், படங்கள் ஓடுவதில்லை. சரியான கதையை நீங்கள் தேர்வு செய்வதில்லை என்பதுதான் காரணமா?’ என கேட்கப்பட்டது.

    இதில் கோபமடைந்த அஜித் ‘நான் ஒரு நடிகன். நடிப்பது மட்டும்தான் என் வேலை. ஒரு படம் ஓடுகிறது எனில் இயக்குனர் காரணம் என சொல்கிறார்கள். ஆனால், தோற்றுவிட்டால் நான் எப்படி காரணம் ஆக முடியும்?.. ஒரு படம் ஓடும் என கணிக்க தெரிந்தால் நான் இயக்குனராகி இருப்பேன். நடிகராக இருந்திருக்க மாட்டேன். படம் ஓடவில்லை எனில் அது இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் தவறுதானே தவிர என்னுடைய தவறு அல்ல’ என அப்போதே பொங்கியிருந்தார் அஜித்.

  • அஜித்குமார் இதையே தான் பண்ணிட்டு இருக்காரு… கிரீடம் படத்தில் இருந்து குட் பேட் அக்லி வரை… இத கவனிச்சீங்களா?

    Ajithkumar: கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்குமார் நடிப்பில் கிரீடம் படத்தில் இருந்து கடைசியாக உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படம் வரை ஒரே விஷயத்தினை கையில் எடுத்து தொடர்ச்சியாக நடித்து கொண்டு இருக்கிறார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக நடித்து வரும் அஜித் சமீப காலங்களாகவே தன்னுடைய படங்களில் வித்தியாசத்தை கையில் எடுத்திருப்பதாக பலர் பேசி வந்தனர். ஆனால் உன்னிப்பாக கவனிக்கும் போது அவர் நடிப்பில் வெளியான கிரீடம் படத்திலிருந்து ஒரு விஷயத்தை மட்டுமே மாத்தி மாத்தி செய்து கொண்டிருக்கிறார்.

    இதையும் படிங்க: நான் நடிச்சி ஆடி காரு.. ஆவணி காரு வாங்க விரும்பல… கண் கலங்கிய ராமராஜன்

    ஏஎல்விஜய் இயக்கத்தில் அவர் நடிப்பில் வெளியான கிரீடம் படத்தில் போலீசாக நடித்திருப்பார். அப்படத்தைத் தொடர்ந்து வெளியான பில்லா படத்தில் டானாக நடித்திருப்பார். அதற்கு அடுத்த படமான ஏகன் திரைப்படத்தில் போலீஸாக நடித்திருப்பார். அடுத்த படமான அசல் திரைப்படத்தில் மீண்டும் டானாகவே நடித்திருந்தார்.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படத்தில் போலீசாக நடித்திருப்பார். அப்படத்தை தொடர்ந்து வெளியான பில்லா படத்தின் இரண்டாம் பாகத்தில் மீண்டும் டானாக நடித்திருப்பார். அதை எடுத்து ஆரம்பம் திரைப்படத்தில் மீண்டும் போலீசாக நடித்திருப்பார். தொடர்ந்து வெளியான வீரம் திரைப்படத்தில்  தம்பிகளுக்கான அண்ணனாக மட்டுமில்லாமல் சண்டை செய்யும் டானாகவும் நடித்திருந்தார். 

    இதையும் படிங்க: இதற்காகவே தியேட்டருக்கு வேலைக்கு போனேன்!.. ராமராஜன் என்ன சொல்றார் பாருங்க!..

    இதை தொடர்ந்து லைகா புரோடக்‌ஷன் தயாரிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் போலீஸாக நடிக்க இருக்கிறாராம். ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் டான்னாக நடிப்பார் என்பது பர்ஸ்ட் லுக்கிலே தெரிந்துவிட்டது. இரண்டே ரோலை மாற்றி மாற்றி செய்து வரும் அஜித் எப்போ இதை மாத்துவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.