Tag: ajithkumar

  • இந்த காம்போ எதிர்பார்க்கவே இல்லையே!… அஜித்தின் அடுத்த படத்தினை இயக்க போவது இவரா?

    Ajithkumar:தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தன்னுடைய திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில், அடுத்தடுத்த படங்களுக்கான அப்டேட்கள் தொடர்ந்து கசிய தொடங்கி இருக்கிறது.

    துணிவு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு விடாமுயற்சி என பெயர் வைக்கப்பட்டது. ஆனால் அப்படத்தை இயக்க இருந்த விக்னேஷ் சிவன் சொன்ன கதை அஜித்திற்கு பெரிய அளவில் திருப்தியை கொடுக்காததால் அவரை உடனே படத்தில் இருந்து விலக்கினார்.

    இதையும் படிங்க: இதனால் தான் திடீரென வெளியானது குட் பேட் அக்லி ஃபர்ஸ்ட் லுக்… செம ஐடியா தான்!

    அவருக்கு பதில் இயக்குனர் மகிழ் திருமேனி விடாமுயற்சி திரைப்படத்தை இயக்கி வருகிறார். சென்ற வருட கடைசியில் தொடங்கிய படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கியும் 50 சதவீத படப்பிடிப்பை மட்டுமே  முடித்திருப்பதாக படக்குழு தரப்பில் இருந்து தகவல்கள் கசிந்து இருக்கிறது. இந்த படத்தை நம்பினால் இப்போது வேலைக்காது என முடிவெடுத்தார் அஜித்.

    உடனடியாக கதை கேட்டு ஆதிக் ரவிச்சந்திரனை தன்னுடைய அடுத்த படத்தின் இயக்குனராக முடிவெடுத்தார். படத்திற்கு குட் பேட் அக்லி என பெயரிடப்பட்டுள்ளது  முதற்கட்ட படப்பிடிப்பும் கடந்த வாரம் ஹைதராபாத்தில் தொடங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இப்படத்தை இந்த வருட இறுதிக்குள் முடித்து அடுத்த தைப்பொங்கலில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வேலை செய்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: போதுமப்பா விட்ருங்க.. சீக்கிரம் கோட் படத்தினை கழட்டிவிட போகும் தளபதி விஜய்… அடுத்த ப்ளான் என்ன தெரியுமா?

    சமீபத்தில் அஜித்தை சந்தித்த மோகன் ராஜா கதை சொல்லி இருந்தாராம். அஜித்துக்கும் அந்த கதை பிடித்துவிட ஏகே64 திரைப்படத்தினை ராஜா இயக்க இருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது. தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை முடித்துக் கொண்டு இப்படத்தில் இணையவும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

  • இதனால் தான் திடீரென வெளியானது குட் பேட் அக்லி ஃபர்ஸ்ட் லுக்… செம ஐடியா தான்!

    GoodBadUgly: நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் குட் பேட் அக்லி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், அதுகுறித்த முக்கிய காரணம் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் கடந்த வருடம் அவரது பிறந்த நாளில் அறிவிக்கப்பட்டது. ஆனால் பெரிய குழப்பத்தை தாண்டி படத்தின் படப்பிடிப்பு பல மாதங்கள் தள்ளிப்போய் கடந்த வருட கடைசி நாள் படப்பிடிப்பு தொடங்கியது. இருந்தும் அஜர்பைஜானில் நடந்த படப்பிடிப்பு தயாரிப்பு குழுவுக்கு பெரிய செலவு வைத்து விட்டதாகவே கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: இனிமே மரண அடிதான்.. சூர்யா ரேஞ்சுக்கு மாறிய சூரி!.. கருடன் டிரெய்லர் சொல்வது என்ன?..

    இதை தொடர்ந்து விசா பிரச்சினை, அஜர்பைஜானியின் காலநிலை என பல பிரச்சனைகள் உருவெடுத்தது. இதனால் படக்குழு பலமுறை சென்று திரும்பியது லைக்கா நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்பை தற்போது நடத்த முடியாமல் தயாரிப்புக் குழு முடக்கி வைத்திருக்கிறது. இனிமேல் விடாமுயற்சியை நம்பி பயனில்லை என நினைத்த அஜித் உடனே தன்னுடைய அடுத்த படத்தில் களம் இறங்கி இருக்கிறார்.

    மார்க் ஆண்டனி வெற்றிக்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் மூன்று வேடங்களில் அஜித் நடிக்க இருக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. இதில் அஜித் கேங்ஸ்டர் லுக்கில் இருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவரின் நடிப்பில் வெளியான கடைசி சில படங்கள் எல்லாமே எலைட் லுக்கில் தான் இருந்தது. இதைத் தொடர்ந்து பல வருடம் கழித்து கலகலப்பான அஜித்தை மீண்டும் பார்க்கலாம் என ரசிகர்கள் கிசுகிசுக்கின்றனர்.

    இதையும் படிங்க: ஷூட்டிங்கே இன்னும் தொடங்கல… பாலிவுட்டில் இருந்து சிம்புவுக்காக இறக்கப்பட்ட முன்னணி நடிகை…

    இந்நிலையில் எந்த நல்ல நாளும் இல்லாமல் குட்  பேட் அக்லி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதற்கு பின்னால் ஒரு வைரல் காரணம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது. அங்கு படத்தின் செட்டை போட்ட 700 ஊழியர்கள் அஜித்திடம் செல்பி எடுத்துக் கொள்ள விரும்பினார்கள். 

     அவர்கள் கோரிக்கையை அஜித்தால் மறுக்க முடியாமல் போக அவரும் அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களிடம் இருந்த அஜித்தின் படத்தின் லுக் கசிவதை படக்குழு விரும்பவில்லை. இதனாலே உடனே பர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

  • திடீரென கேட்ட அஜித்!.. சிவகார்த்திகேயனுக்கு வந்த அந்த ஆசை!.. நடக்குமான்னு பார்ப்போம்!…

    நடிகர் அஜித் எப்போதும் வளர்ந்து வரும் சில இளம் நடிகர்களை ரசிப்பார். அவர்களுடன் தொடர்பில் இருப்பார். அவர்களுக்கு தேவையான உதவி செய்வதோடு முக்கியமான அறிவுரைகளையும் சொல்லுவார். மிர்ச்சி சிவா, சிவகார்த்திகேயன் என இந்த லிஸ்ட்டில் பலரும் இருக்கிறார்கள்.

    மிர்ச்சி சிவாவிடம் பழகி வந்த அஜித் அவரின் திருமணத்திற்கு 50 லட்சம் அன்பளிப்பாக கொடுத்தார் என சொல்லப்படுவதுண்டு. ஆனால், தமிழ்படம் படத்தில் தன்னையே அவர் கலாய்த்து நடித்ததால் அவர் மீது கோபம் கொண்ட அஜித் அவரின் உறவை துண்டித்துகொண்டார் எனவும் ஒரு செய்தி இருக்கிறது.

    இதையும் படிங்க: கில்லி பாத்துட்டு உன்ன லவ் பண்ணேன்… பிரகாஷ்ராஜிடம் சண்டை போட்ட பெண்மணி!…

    ஒருபக்கம், சிவகார்த்திகேயன் ஆங்கராக இருந்தபோதிலிருந்தே அவரை ரசித்தவர் அஜித்குமார். ஒரு சினிமா நிகழ்ச்சியிலும் சிவகார்த்திகேயன் ஆங்கரிங் செய்யும்போது மேடைக்கு இயக்குனர் வெங்கட்பிரபுவை அழைத்தார். அப்போது ‘இவர் கதை இல்லாம கூட படம் எடுப்பார். ஆனா தம்பி பிரேம்ஜி இல்லாம படம் எடுக்க மாட்டார்’ என சிவகார்த்திகேயன் கலாய்த்த போது அஜித் குலுங்கி குலுங்கி சிரிக்கும் வீடியோ இப்போதும் சமூகவலைத்தளங்களை சுற்றி வருகிறது.

    ajith

    அதன்பின் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை படிப்படியாக பார்த்து ரசித்தவர்தான் அஜித். அஜித் நடித்த ஏகன் படத்தில் ஒரு காட்சியில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பார். அதோடு, ‘சினிமாவில் நடிப்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். சொந்த தயாரிப்பில் மட்டும் இறங்காதீங்க’ என அவருக்கு அறிவுரையும் சொன்னார் அஜித். ஆனால், அவரின் பேச்சை கேட்காமல் சொந்த தயாரிப்பில் ஈடுபட்டு 100 கோடி கடனாளி ஆகி சமீபத்தில்தான் அதிலிருந்து மீண்டார் சிவகார்த்திகேயன்.

    இதையும் படிங்க: சினிமாவுல வெற்றிடமே இல்லையா… என்ன இப்படி ‘பொசுக்’குன்னு சொல்லிட்டாரு சூரி..!

    இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன் ‘அஜித் சார் என்னிடம் ஒருமுறை ‘சிவா நீங்க பைக் ரேஸ் ஓட்டுவீங்களா?’ எனக்கேட்டார். ஊரில் நண்பர்களோடு ஜாலியாக ஓட்டுவதோடு சரி.. உங்க அளவுக்கு எல்லாம் எனக்கு வண்டி ஓட்டத் தெரியாது’ என அவரிடம் சொன்னார்.

    அஜித் சார் செய்வது மிகப்பெரிய விஷயம். நாடு நாடாக போய் பைக் ஓட்டுகிறார். அவரிடம் இருக்கும் பைக்குகள் என்னிடம் இல்லை. அப்படி ஒரு பைக்கை வாங்கி ஓட்ட கற்றுக்கொண்டு ஒருமுறை அவருடன் செல்ல வேண்டும் என்பது என் ஆசை’ என சிவகார்த்திகேயன் சொல்லி இருக்கிறார்.

  • சன் பிக்சர்ஸ் போட்ட 2 கண்டிஷன்!… கடுப்பான அஜித்!.. கலாநிதிமாறனுக்கு அல்வாதான்!..

    அஜித் இப்போது நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. படப்பிடிப்பு சில மாதங்கள் நடந்த நிலையில் இப்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. ஒரே நேரத்தில் பல படங்களை தயாரித்ததால் லைக்கா நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

    ஒருகட்டத்தில் கடுப்பான அஜித் மே மாதம் இறுதிக்குள் விடாமுயற்சி படத்தை முடித்துவிடுங்கள். இல்லையெனில் ஜூன் மாதம் குட் பேட் அக்லி படத்திற்கு போய்விடுவேன். அதன்பின் அந்த படத்தை முடித்த பின்னரே விடாமுயற்சி படத்திற்கு வருவேன் எனவும் சொல்லிப்பார்த்தார்.

    இதையும் படிங்க: டைரக்டர் பிரச்னையே முடிஞ்சிதானு தெரியலை… தயாரிப்பாளரும் பிரச்னையா? தளபதி69ல் என்ன தான் நடக்குது?

    ஆனாலும், வேட்டையன் படத்தை முடிக்கும் நிலையில் இருக்கும் லைக்காவால் விடாமுயற்சி படத்தை தொடர முடியவில்லை. லைக்கா படத்தை முடித்து அதை வியாபாரம் செய்து அதில் வரும் பணத்தில்தான் விடாமுயற்சி பட வேலையை மீண்டும் அவர்கள் துவங்குவார்கள் எனத்தெரிகிறது.

    எனவே, ஜூன் மாதம் அஜித் ஆதிக் ரவிச்சந்திரனின் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்கான வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. இந்த படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கவுள்ள ஒரு புதிய படத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார்.

    இதையும் படிங்க: கிட்டத்தட்ட 15 மணி நேரம் நிக்கணும்! ‘குக் வித் கோமாளி’ தாமுவுக்கு இப்படி ஒரு பிரச்சினையா?

    ஆனால், இப்போது இந்த படத்தில் சன் பிக்சர்ஸ் இருக்குமா என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது. ஏனெனில், இந்த படத்திற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் 2 கண்டிஷன்களை போட்டிருக்கிறது. ஒன்று, அஜித் கேட்ட சம்பளத்தை கொடுக்க முடியாது என சொல்லிவிட்டது. அதோடு, இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு அஜித் 2 மணி நேரம் ஒதுக்க வேண்டும் என கறாராக சொல்லிவிட்டதாம்.

    இதெல்லாம் அஜித்தின் லிஸ்டலையே கிடையாது. அவர் எந்த புரமோஷன் நிகழ்ச்சிக்கும் வரமாட்டார். எனவே, சிறுத்தை சிவா இயக்கும் படம் வேறு தயாரிப்பு நிறுவனத்தின் கைக்கு போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சிவா – அஜித் கூட்டணியில் வெளியான விஸ்வாசம் படம் சூப்பர் ஹிட் அடித்ததால் இந்த கூட்டணி மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது.

  • இரண்டு நாளுக்கு தான் இந்த பில்டப்பா?.. அஜித் படக்குழுவால் கடுப்பான ரசிகர்கள்..

    Ajith movie: ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இத்திரைப்படத்தின் ஷூட்டிங் அப்டேட்டால் ரசிகர்கள் கடுப்பில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    துணிவு படத்தினை முடித்த கையோடு விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு வந்தது. ஆனால் தட்டிமுட்டி ஷூட்டிங் தொடங்குவதற்கே சென்ற வருடத்தின் கடைசியாகி விட்டது. இருந்தும் அஜர்பைஜானில் ஷூட்டிங்கை வைக்க அஜித் தான் வலியுறுத்தினாராம். இதனால் லைகா நிறுவனத்துக்கு பெரிய தொகை செலவாகி விட்டதாம்.

    இதையும் படிங்க: ஈரம் சொட்ட சொட்ட சும்மா அள்ளுது!.. தாய்லாந்தில் ஜாலி பண்ணும் விஜே பாரு!..

    இது ஒருபுறமிருக்க விடாமுயற்சி முடியுமாறு தெரியாத நிலையில் அஜித் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி விடாமுயற்சி ஷூட்டிங் முடியட்டும் என அஜித்தே காத்திருந்தாராம். ஆனால் வேட்டையனை முடித்துவிட்டே லைகா இந்த பக்கம் திரும்புவார்களாம்.

    இதனால் அது வேலைக்கு ஆகாது என முடிவெடுத்த அஜித் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கிற்கு கிளம்பிவிட்டார். மூன்று கேரக்டரில் இப்படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார். நேற்று பூஜையுடன் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. ஐதராபாத்தில் தொடங்கிய இந்த ஷூட்டிங்கின் முதல் ஷெட்யூல் இன்றே முடிக்கப்பட்டுவிட்டதாம்.

    இதையும் படிங்க: விடாமுயற்சி அப்புறம் பாப்போம்!. டீலில் விட்ட அஜித்!.. குட் பேட் அக்லி ஷூட்டிங் ஸ்டார்ட்!..

  • அஜித் இதனாலதான் போட்டோ எடுத்தா கோபப்படுறாரா? ரகசியத்தை போட்டுடைத்த நடிகர்

    தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் நடிகராக வளர்ந்திருக்கிறார் நடிகர் அஜித். தற்போது அஜித் விடாமுயற்சி படத்தின் படவேலைகளில் பிஸியாக இருக்கிறார். அதனை அடுத்து ஆதி ரவிச் சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் இணைய இருக்கிறார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதால் ஜூன் மாதத்தில் இருந்து ஆதித் ரவிச்சந்திரன் உடன் அந்த புதிய படத்தில் இணைந்து பணியாற்ற இருக்கிறார் அஜித்.

    அடுத்தடுத்து பல பெரிய படங்களில் ஒப்பந்தமாகி இருக்கும் அஜித் இன்று தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரமாக வளர்ந்து நிற்கிறார் என்றால் அவருடைய தன்னம்பிக்கையும் விடாமுயற்சியுமே காரணமாகும். எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் வந்த அஜீத் இன்று கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசம் வைத்திருக்கிறார். இரண்டு மூன்று படங்களில் நடித்து அதில் இருந்து ரசிகர் மன்றத்தை வைத்திருக்கும் நடிகர்கள் மத்தியில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கோலிவுட்டின் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வரும் அஜித் ரசிகர் மன்றமே வேண்டாம் என கலைத்திருக்கிறார்.

    இதையும் படிங்க: ரஜினி கமலைத் தாண்டி பாலசந்தருக்கு பிடித்த நடிகர்! இவர யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீங்க

    அதுதான் திரை பிரபலங்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் ரசிகர்கள் தான் என அனைவருக்கும் தெரியும். அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் விஜய் ரசிகர்கள் ரஜினி ரசிகர்கள் என தங்கள் தலைவர்களை கொண்டாட ரசிகர்கள் செய்யும் அட்டகாசம் தாங்க முடியாது. ஆனால் இதை அஜித் எப்பொழுதுமே ஏற்றுக் கொண்டதே இல்லை.

    அவர் பெரும்பாலும் அவருடைய நேரத்தை சுதந்திரமாக கழிக்க விரும்புபவர். படப்பிடிப்பு போக யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என விரும்புபவர். இந்த நிலையில் ஆடுகளம் நரேன் அஜித்தை பற்றி ஒரு தகவலை பகிர்ந்தார். இருவரும் சேர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருக்கின்றனர். அந்த படப்பிடிப்பு சமயத்தில் அஜித்துடன் ஏற்பட்ட அனுபவங்களை ஆடுகளம் நரேன் ஒரு பேட்டியில் கூறுகிறார்.

    அஜித் ஆடுகளம் நரேனிடம் எனக்கு சமையல் செய்வது பிடிக்கும். பரிமாறுவதும் பிடிக்கும் என கூறுவாராம். படப்பிடிப்பு முடிந்ததும் ஆடுகளம் நரேனிடம் அஜித் உங்களுக்கும் காட்சி முடிந்து விட்டது. எனக்கு முடிந்து விட்டது. வாருங்களேன். அங்கு கொஞ்சம் தனியாக உட்கார்ந்து பேசுவோம் என அழைப்பாராம். அதற்கு நரேன் இங்கேயே அமர்ந்து பேசலாமே என கூறும் போது இங்கு எதுக்கு சார்? இங்கே உட்கார்ந்து பேசினால் கொஞ்சம் டிஸ்டபர்ன்ஸ் அதிகமாக இருக்கும். அதனால் அங்கு தனியா அமர்ந்து பேசுவோம் என செட்டில் இருந்து சிறிது தூரம் விலகி பேசிக் கொண்டிருப்பார்களாம்.

    இதையும் படிங்க: தக் லைஃப் படத்தில் ஜெயம் ரவி ரோல் இவருக்கு தானாம்… அசால்ட்டாக தட்டி தூக்கிய நடிகர்…

    அந்த நேரத்தில் ஒரு ரசிகர் ஓடி வந்து படம் எடுக்க வந்தாராம். அதை பார்த்ததும் அஜித் கோவப்பட்டு கத்தி விட்டாராம். உடனே ஆடுகளம் நரேன் எதுக்கு சார் இவ்வளவு கோபப்படுறீங்க என கேட்கும் போது பின்ன என்ன சார் நாம் நம்முடைய பிஸியான செட்யூலில் நமக்கு கிடைக்கும் நேரமே சிறிதளவு தான். அந்த நேரத்திலும் நம் மனதில் பட்டதை பேசிக் கொண்டிருக்கிறோம்.

    அதுவும் இப்படி சொல்லாமல் வந்து போட்டோ எடுப்பது எனக்கு பிடிக்காது. ஏனெனில் நான் தலையை சொரிந்து கொண்டிருப்பேன். கன்னத்தை தடவி கொண்டிருப்பேன். மூக்கை நோண்டிக் கொண்டிருப்பேன். இப்படி இருக்கும்போது அவர்கள் போட்டோ எடுத்தால் நன்றாகவா இருக்கும்? வந்து என்னிடம் கேட்டு போட்டோ எடுத்தால் நான் தாராளமாக எழுந்து நின்று போஸ் கொடுக்கப் போகிறேன் எனக் கூறினாராம். உடனே அந்த ரசிகாரிடம் போய்விட்டு நாளை வாருங்கள். போட்டோ எடுக்கலாம் என தன்மையாக சொல்லி அனுப்பினாராம். இப்படிப்பட்ட மனிதர் தான் அஜித் என ஆடுகளம் நரேன் கூறினார். இதிலிருந்து அவருக்கு உண்டான ஸ்பேஸை கொடுக்க வேண்டும் என்பது தெளிவாக தெரிகிறது.

    இதையும் படிங்க: பல்ப் வாங்கிய பாட்டை ஹிட்டடிக்க ஆசைப்பட்ட விஜய் ஆண்டனி… தளபதி படத்தில் நடந்த தில்லாலங்கடி…

  • அஜித்துக்கு காலின் பாதத்தில் உணர்வே கிடையாது!.. சுந்தர் சி சொன்ன ஷாக்கிங் தகவல்…

    சினிமாவில் எந்த பின்னணியும் இல்லாமால் தானே வாய்ப்பு தேடி மேலே வந்தவர்தான் அஜித் குமார். ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க போய் அப்படத்தின் இயக்குனர் இறந்து, அந்த படமும் ஓடவில்லை. அதன்பின் அமராவதி எனும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் அவருக்கு கை கொடுத்தது.

    ‘அட பார்க்க அழகா இருக்கிறாரே’ என இவருக்கு பெண் ரசிகைகளும் உருவானார்கள். தொடர்ந்து காதல் படங்களில் சாக்லேட் பாயாக நடிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் ஆக்‌ஷன் ரூட்டுக்கு மாறி பில்லா, மங்காத்தா படங்கள் மூலம் மாஸ் ஹீரோவாக மாறி பல ரசிகர்களுக்கும் பிடித்தமான நடிகராக மாறினார்.

    இதையும் படிங்க: விருமாண்டி பார்ட் 2ல கமல் நடிக்கிறாரா?.. லீக்கான போட்டோவால் ன்ஃபியூஸான ரசிகர்கள்!..

    பல வருடங்களாகவே விஜய்க்கு டஃப் கொடுக்கும் போட்டி நடிகராக இருந்து வருகிறார். அஜித்துக்கு நடிப்பு என்பது தொழில் மட்டுமே. ஆனால், பைக் ஒட்டுவது, கார் ரேஸில் கலந்து கொள்வது, ரிமோட் ஹெலிகாப்டர் இயக்குவது என அவருக்கு பல ஆர்வங்கள் உண்டு. கார், பைக் ஓட்டும்போது உடலில் பலமுறை அவருக்கு அடிபட்டிருக்கிறது.

    முதுகில் பல அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டிருக்கிறது. இதனால், அவரின் உடலில் பல மாற்றங்களும் ஏற்பட்டது. அவருக்கு அடிக்கடி உடல் எடை கூடுவது கூட அதனால்தான் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், அஜித்தை வைத்து ‘உன்னை தேடி’ என்கிற படத்தை இயக்கிய சுந்தர் சி அவரை பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

    இதையும் படிங்க: சூரிய வெளிச்சத்தில் சுகமா இருக்கும் நிவேதா பெத்துராஜ்!.. கமெண்ட்டுகளை மட்டும் பார்த்துடாதீங்க!..

    அந்த படத்தில் நடிக்கும்போது அவருக்கு காலில் உணர்வுகளே இல்லை. முதுகில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையால் அப்படி ஆகிவிட்டது. நாம் காலில் ஒரு அடி எடுத்து வைத்தால் அதை நமது மூளை உணரும். அடுத்த அடி எடுத்து வைப்போம். ஆனால், அவருக்கு அந்த உணர்வு இல்லை. அவர் கீழே பார்த்துதான் நடக்க வேண்டும். ஒருநாள் சாலக்குடியில் படப்பிடிப்பு நடத்தினோம். தண்ணீரில் நடந்து செல்ல வேண்டும். அந்த தண்ணீர் ஜில்லென இருந்தது. எங்களால் நடக்கவே முடியவில்லை.

    ஆனால், அஜித் சாதாரணமாக நடந்து வந்தார். ‘நீங்க ஹீரோதான். அதுக்காக இப்படியா?’ என சிரித்துகொண்டே கேட்டேன். அதற்கு அவர் ‘எனக்கு எதுவுமே தெரியல சார்’ என சொன்னார். இதையெல்லாம் மீறித்தான் அவர் இந்த உயரத்துக்கு வந்திருக்கிறார்’ என சுந்தர் சி சொல்லி இருக்கிறார்.

  • அஜித்தின் மாஸ்ஹிட் பாடலை குதறி கொடுத்த யுவன் ஷங்கர் ராஜா… திணறிய இயக்குனர்…

    Ajithkumar: கோலிவுட்டின் மாஸ்ஹிட் ஹீரோவான அஜித்தின் சில மாஸ்ஹிட் பாடல்கள் பல வருடம் கழிந்தாலும் அந்த கிரேஸை விடாமல் கொண்டு இருக்கும். அப்படி ஒரு பாடலை இசையமைப்பாளர் செய்த கொடுமையால் படக்குழு திண்டாடிய சுவாரஸ்ய நிகழ்வு குறித்த தகவல்கள்.

    நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். கிட்டத்தட்ட தனக்கென மிகப்பெரிய அடையாளத்தினை கொண்டவர். அவர் நடிப்பில் பெரிய ஹிட் படங்கள் வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது. இருந்தும் அவரை ஸ்டைலிஷாக காட்டிய திரைப்படம் என்றால் பில்லா தான்.

    இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் கொடுத்த எம்.பி. பதவியை ஏற்க மறுத்த நடிகை!.. இதுதான் காரணமா?..

    ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பில்லாவும் ரீமேக்காக உருவான இப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தினை விஷ்ணுவர்தன் இயக்கி இருந்தார். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்தார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. ஆனால் படத்தின் முக்கியமான பாடலான மை நேம் ஈஸ் பில்லா பாடல்  இழுத்துக்கொண்டே சென்றதாம்.

    விஷ்ணுவர்தனும் ஓயாமல் யுவனுக்கு கால் செய்து என்ன ஆனது என்பது குறித்து கேள்வி எழுப்பி கொண்டே இருக்கிறார். யுவனும் வேறு படத்தின் சிக்கலில் சிக்கியதால் நேரத்தை தள்ளிக்கொண்டே சென்றுவிடுகிறார். குறிப்பிட்ட அந்த பாடலின் ஷூட்டிங் நாளும் வந்தது. ஆனால் பாடல் இன்னமும் வந்தபாடு இல்லை. ஷூட்டிங் செய்ய வேண்டும். அதனால் அஜித்தை பாடலுக்கு சில காட்சிகளை விஷ்ணுவர்தன் இயக்கிவிட்டார்.

    இதையும் படிங்க: பயோபிக் ட்ரெண்ட் தொடங்கிட்டாங்களோ… ரஜினிகாந்த் எடுத்திருக்கும் திடீர் முடிவு?

    டான்ஸ் மாஸ்டர் கல்யாணோ மியூசிக் இல்லாமல் எப்படி டான்ஸ் ஆட வைப்பது என தயங்கியப்படி கேட்டு இருக்கிறார். மீண்டும் யுவனிடம் வம்பு செய்து பிச்சி புடிங்கி எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தாராம். பிட் பாடலாக வந்ததை பார்த்து அஜித் என்ன ஆனது எனக் கேட்க நிலைமை சொல்லி இருக்கிறார் விஷ்ணுவர்தன். அதன்பின்னரே அஜித்தும் பரவாயில்லை என நடித்து முடித்தாராம். 

  • கலைஞர் முன் அஜித் பேசிய ’அந்த’ சம்பவம்… பிரச்னைக்கு காரணமான ஷாலினி… என்ன நடந்தது?

    Shalini Ajith: நடிகர் அஜித்துக்கு தன்னுடைய மனைவி மீது இருக்கும் காதல் கோலிவுட்டே அறிந்த சேதி தான். அந்த விஷயத்தில் பிரச்னை வந்தால் சும்மா இருப்பாரா? அப்படி உருவானது தான் கலைஞர் விழாவில் அஜித் பேசிய அந்த தக் லைஃப் சம்பவமும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

    தற்போதைய அஜித் எந்த பட புரோமோஷனுக்கும் வெளிவருவது இல்லை. பொது மேடைகளில் ஆள் இல்லை. இப்படி தன்னை தனிப்படுத்தி கொண்டு இருப்பவர். ஒரு காலத்தில் எல்லா இடங்களிலும் முதல் ஆளாக வந்து நிற்பார். பல சினிமா மேடைகளில் அவரை பார்க்க முடிந்தது.

    இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் கொடுத்த எம்.பி. பதவியை ஏற்க மறுத்த நடிகை!.. இதுதான் காரணமா?..

    ஆனால் ஒரு கட்டத்தில் அது முடிவுக்கு வந்தது. பாசதலைவனுக்கு பாராட்டு விழா என்ற நிகழ்ச்சி கோலிவுட்டினரால் கொண்டாடப்பட்டது. இதன் மேடை ஏறிய அஜித்குமார், கலைஞர் அய்யாவிற்கு வேண்டுகோள், இனிமேல் சென்சிட்டிவான விஷயங்களுக்கு, சமூக விஷயங்களுக்கு சினிமா ஆட்கள் தலையிட வேண்டாம் என நினைக்கிறேன். ஒவ்வொரு முறை இப்படி ஒரு விஷயம் நடக்கும் போது சினிமாவில் பொறுப்பில் இருக்கும் சிலர் எங்களை கட்டாயப்படுத்தி விழாவிற்கு வர வைக்கிறார்கள்.

    எங்களுக்கு அரசியல் வேண்டாம். சினிமாவையும், அரசியலையும் ஒன்றாக இணைக்காதீர்கள் எனப் பேசி இருப்பார். இது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் கருணாநிதி அருகில் இருந்த ரஜினிகாந்த் எழுந்து நின்று கைத்தட்டினார். இது பெரிய பிரச்னையாகி பின்னர் அஜித் மன்னிப்பு கேட்டதாக கூட ஒரு தகவல் இருக்கிறது. ஆனால் இந்த பேச்சுக்கு பின்னால் இருந்தது ஷாலினி தானாம்.

    இதையும் படிங்க: பயோபிக் ட்ரெண்ட் தொடங்கிட்டாங்களோ… ரஜினிகாந்த் எடுத்திருக்கும் திடீர் முடிவு?

    பொதுவாக மனைவியை தன் கை பக்கத்திலே வைத்து கொள்ளும் பழக்கம் கொண்டவர் அஜித். ஆனால் அந்த நிகழ்ச்சியில் அஜித் ஒரு பக்கம், ஷாலினி ஒரு பக்கம். ஏற்கனவே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கொடுத்த தொல்லை எனக் கடுப்பானவர் தான் மேடையில் அப்படி பேசியதாக கூறப்படுகிறது.

  • குட் பேட் அக்லி படத்தில் மீனா மற்றும் சிம்ரனா? ஷாக்கான படக்குழு… உண்மை என்ன தெரியுமா?

    GoodBadUgly: தமிழ் சினிமாவில் அஜித் நடிக்கும் அடுத்த படம் குட் பேட் அக்லி. இப்படத்தின் நாயகி வேட்டை மும்முரமாக நடந்து வருகிறது. இதில் சில ஆச்சரிய தகவல்களும் வெளியாகி இருக்கிறது.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் படம் குட் பேட் அக்லி. இப்படத்தினை ஆதிக் ரவிசந்திரன் இயக்கி வருகிறார். படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில் 2025 பொங்கல் தினத்தில் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: இன்னும் எத்தனை நாளுக்குப்பா இழுப்பீங்க… கோபியால் கடுப்பான ரசிகர்கள்…

    விடாமுயற்சி திரைப்படத்தின் ஷூட்டிங் தொடர்ச்சியாக தள்ளி போவதால் அஜித் குட் பேட் அக்லி படத்தில் தன்னுடைய கவனத்தினை திருப்பி இருக்கிறார். இதையடுத்து இப்படத்தின் அடுத்த கட்ட பணிகள் தொடங்கி இருக்கிறது. ஹைதராபாத்தில் ராமோஜி பிலிம் சிட்டியில் மே 10ந் தேதி படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

    இண்ட்ரோ சாங் மற்றும் சண்டை காட்சிகள் முதல் ஷெட்யூலில் படமாக்கப்படலாம். படத்தின் ஷூட்டிங் தொடங்கும் நாளில் பர்ஸ்ட் லுக் போஸ்ட் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கிறது. சில மாதங்கள் வெளிநாட்டில் தங்கி மொத்த கதையை எழுதிக்கொண்டு ஆதிக் சென்னை திரும்பி இருக்கிறார்.

    இதையும் படிங்க: டாப் 5 நடிகைகளின் 50வது படம் வெற்றியா? தோல்வியா?!.. தட்டி தூக்கிய தமன்னா!…

    மேலும் இப்படத்தின் மீனா மற்றும் சிம்ரன் நடிப்பதாக ஒரு தகவல்கள் உலா வருகிறது. ஆனால் அது முழுக்க முழுக்க பொய்யான தகவல்கள் தான். இதுவரை நாயகி குறித்த முடிவை படக்குழு எடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது. நடிகை ஸ்ரீலீலா கூட இன்னும் உறுதி செய்யப்படவில்லையாம்.