Tag: MGR

  • ரசிகர்களுக்குள் நடக்க இருந்த பெரும் மோதல்… தவிர்க்க எம்ஜிஆர், சிவாஜி செய்த ஐடியா!

    ரசிகர்களுக்குள் நடக்க இருந்த பெரும் மோதல்… தவிர்க்க எம்ஜிஆர், சிவாஜி செய்த ஐடியா!

    தமிழ்சினிமா உலகின் அடையாளங்களாக இருந்த நட்சத்திரங்கள்னா ஒண்ணு மக்கள் திலகம் எம்ஜிஆர். இன்னொன்னு நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவங்க ரெண்டு பேருக்கும் இடையே பலத்த போட்டி இருந்தது குறையவில்லை. ஆனால் அவங்க ரெண்டு பேருக்கும் இடையில் எப்படிப்பட்ட நட்பு இருந்ததுன்னு தெரியுமா? இதோ அதற்கான ஒரு சம்பவத்தைப் பாருங்கள்.

    1957ல் நான் விரும்பும் நட்சத்திரம் என்ற பெயரில் குமுதம் ஒரு போட்டியை நடத்த வேண்டும் என்று விரும்பியது. அதனுடைய முக்கிய நோக்கம் என்னன்னா நான் விரும்பும் நட்சத்திரம் எம்ஜிஆரா.., சிவாஜியா… என்று ரசிகர்களைப் பார்த்துக் கேட்பதுதான்.

    அப்படிப்பட்ட போட்டியை நடத்தினால் நிச்சயமாக தங்களுடைய ரசிகர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் வரும் என்று உணர்ந்ததால் எம்ஜிஆர், உடனடியாகக் குமுதம் பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதினார். ‘இது போன்ற போட்டியை நாங்க வரவேற்கவும் இல்லை. ரசிக்கவும் இல்லை… என்று எழுதினார்.

    எம்ஜிஆர் மட்டுமல்ல. அவர் அப்படி ஒரு கடிதம் எழுதியதைத் தொடர்ந்து நடிகர் திலகம் சிவாஜியும் குமுதம் பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதினார். இப்படி ஒரு போட்டியை நீங்க நடத்தப் போறீங்க என்ற செய்தி வந்தபோதே உங்க நிருபரைக் கூப்பிட்டு ‘இது போன்ற போட்டியை நடத்தாதீங்கன்னு நான் திட்டவட்டமாக சொல்லிட்டேன். அதனால அன்புகூர்ந்து இதுபோன்ற போட்டியை நீங்க நடத்தாதீங்க’ன்னு எழுதினார்.

    ரெண்டு பேருக்கும் நடுவில் எப்படிப்பட்ட போட்டி இருந்த போதும் ஒரு பிரச்சனைன்னு எப்படி இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக செயல்பட்டார்கள் என்பதை எடுத்துச் சொல்வதற்காகத் தான் இந்த சம்பவத்தை நான் குறிப்பிட்டு இருக்கிறேன் என்கிறார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.

  • ஜெயலலிதா கேட்ட கடவுள் பற்றிய கேள்வி… அசத்தலாகப் பதில் சொன்ன எம்ஜிஆர்!

    ஜெயலலிதா கேட்ட கடவுள் பற்றிய கேள்வி… அசத்தலாகப் பதில் சொன்ன எம்ஜிஆர்!

    புரட்சித்தலைவர் படங்களில் அனல் பறக்க தத்துவ கருத்துக்கள் புரட்சிகரமாக இருக்கும். அவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் நச் நச்சென்று இருக்கும். ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்வர். ஆனால் அவரது படங்களில் கடவுள் சம்பந்தமான காட்சி அதிகம் இருக்காது. அவருக்கு கடவுள் பக்தி உண்டா, இல்லையா என்று பார்க்கலாம்.

    எம்ஜிஆருடைய தாயாரான சத்யபாமா அம்மையார் மிகுந்த கடவுள் பக்தி கொண்டவர். ஒரு பக்கம் காளியை வணங்கினார். இன்னொரு பக்கம் திருமாலை வணங்கினார். எம்ஜிஆருக்கு இஷ்ட தெய்வம் எது? எந்தெந்த தெய்வங்களை எல்லாம் வணங்கினார் என்பது பற்றி பொம்மை பத்திரிகையில் எம்ஜிஆரைப் பேட்டி காண வாய்ப்பு கிடைத்த போது ஜெயலலிதா அவரைப் பார்த்துக் கேட்டார்.

    கடவுள் பக்தி உண்டா என்று ஜெயலலிதா கேட்டபோது உண்டு என்று எம்ஜிஆர் பதில் அளித்தார். நீங்கள் கோவிலுக்குப் போவீர்களா என்று கேட்டார் ஜெயலலிதா. அதற்கு எம்ஜிஆர், திருப்பதிக்கு 2 முறை போய் வந்திருக்கிறேன். முதல் தடவை நான் திருப்பதிக்குச் செல்லும்போது எனக்கு 12 அல்லது 13 வயது இருக்கும். அப்போது நான் நாடகக் கம்பெனியில் நடித்துக் கொண்டு இருந்தேன்.

    2வது தடவை நான் சென்றது மர்மயோகி படம் வெளியானபோது. திருப்பதியைப் பொருத்தவரைக்கும் நான் 2வது முறை போனதுதான் கடைசி. அதற்குப் பிறகு திருப்பதிக்கு நான் போகவில்லை. வேறு கோவில்களுக்கு நான் சென்று இருக்கிறேன். கடவுள் மீது தீராத பக்தி எனக்கு உண்டு. அதனால்தான் கோவிலுக்குப் போகிறேனே தவிர அங்கு போய் சாமிக்கிட்ட எனக்கு அது வேணும், இது வேணும்னு கேட்டு ஒரு நாளும் நான் பிரார்த்தனை செய்தது இல்லை என பதில் சொல்லி இருக்கிறார்.

  • MGR: நீ காசு கொடுக்க வேணாம்பா!. எம்.ஜி.ஆருக்கு புண்ணிய பாடமெடுத்த மூதாட்டி..

    MGR: நீ காசு கொடுக்க வேணாம்பா!. எம்.ஜி.ஆருக்கு புண்ணிய பாடமெடுத்த மூதாட்டி..

    மக்களால் வள்ளல் என அழைக்கப்பட்டவர் எம்ஜிஆர்.. சினிமா மூலம் மக்களிடமிருந்து அவர் என்ன சம்பாதித்தாரோ அதை எல்லாவற்றையும் அவர் மக்களுக்காகவே திருப்பிக் கொடுத்தார் என்பதால்தான் அந்த பட்டம் அவருக்கு கிடைத்தது. 60களில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் எம்ஜிஆர்.. அவர் நடிப்பில் வெளிவந்த 99 சதவீத படங்கள் சூப்பர் ஹிட் படங்கள்தான். எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம் என நினைக்காமல் தனது திரைப்படங்களில் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும், மக்களுக்கும் நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டும் என்று நினைத்தவர் எம்ஜிஆர்..

    எம்ஜிஆர் சினிமாவில் நடித்து சூப்பர்ஸ்டாரக மாறி பல லட்சங்கள் சம்பளம் வாங்கி அரசியல் கட்சியை துவங்கி மூன்று முறை முதலமைச்சராக இருந்ததுதான் பலருக்கும் தெரியும்.. ஆனால் சிறு வயது முதல் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்கும் வரை அவர் பல நாட்கள் பட்டினி கிடந்ததும், அவர்களின் குடும்பம் வறுமையில் வாடியதும் பலருக்கும் தெரியாது.. இன்னும் சொல்லப்போனால் வறுமை காரணமாகத்தான் சத்யா அம்மாள் எம்ஜிஆர், சக்கரபாணி ஆகிய இரு மகன்களையும் சிறுவயதிலேயே நாடகத்திற்கு அனுப்பினார்.. இருவரும் நாடகத்தில் சம்பாதித்த காசில்தான் அவர்களின் குடும்பம் சாப்பிட்டது..

    இந்நிலையில்தான், பேச்சாளர் சுகிசிவம் ஒரு நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர் பற்றிய ஒரு முக்கிய தகவலை கூறியிருக்கிறார். எம்ஜிஆர் சிறுவயதில் தினமும் காலை வீட்டுக்கு அருகே உள்ள ஒரு மூதாட்டியிடம் காலணா கொடுத்து புட்டு வாங்கி செல்வாராம். அதை அவர், அவரின் அண்ணன் மற்றும் அம்மா சத்யா மூன்று பேரும் சாப்பிடுவார்களாம்.. ஒருநாள் புட்டு வாங்க காலணா கூட அவரிடம் இல்லை. ஆனால், தன்னுடைய பசியை விட அம்மா பசியோடு இருக்கக்கூடாது.. அம்மாவுக்கு உணவு கொடுக்க வேண்டும் என நினைத்த எம்ஜிஆர் அந்த புட்டுக்கடைக்கு சென்றிருக்கிறார்.

    ஆனால் காசு இல்லாமல் எப்படி வாங்குவது? எப்படி கேட்பது? என்கிற தயக்கம்.. கடைக்கு அருகில் செல்வது.. தயங்கி நிற்பது.. கடைக்கு அருகில் போவது.. தயங்கி நிற்பது என இருந்த அவரைப்பார்த்த அந்த மூதாட்டி ‘டேய் ராமச்சந்திரா.. உனக்கு என்னாச்சி?.. தினமும் காலணா புட்டு வாங்குவியே!.. ஏன் இப்படி தயங்கி நிக்கிறே?’ என்று கேட்டிருக்கிறார்..

    அதற்கு எம்ஜிஆர் ‘இல்லம்மா என்கிட்ட இன்னைக்கு காலணா இல்லை.. ஆனா வீட்ல அம்மா பசியோட இருக்காங்க.. உங்ககிட்ட எப்படி கேட்கிறதுன்னு யோசிக்கிறேன்’ என சொல்ல ‘டேய் உன்கிட்ட நான் காசு கேட்டனா?.. நீ புட்டு எடுத்துட்டு போ.. காசு அப்புறமா குடு’ என சொல்லியிருக்கிறார்.. புட்டை எடுத்துக்கொண்ட எம்ஜிஆர் மூதாட்டியிடம் ‘நான் காசு கொடுக்காம இந்த ஊரை விட்டு போயிட்டா என்னம்மா பண்ணுவீங்க?’ என்று கேட்டிருக்கிறார்.. அதற்கு பதில் சொன்ன அந்த மூதாட்டி ‘டேய்.. நீ காசு கொடுத்தா அதை வியாபார கணக்குல எழுதுவேன்.. நீ கொடுக்கலைன்னா அதை புண்ணிய கணக்குல எழுதுவேன் போடா’ என்று சொன்னாராம்..

    லாப நஷ்டக் கணக்கு பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவ வேண்டும். அது புண்ணியம் என்கிற எண்ணத்தை சிறுவயதிலேயே எம்ஜிஆருக்கு பலரும் இப்படி சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். அதேபோல், அவர் நடிகரான பின் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணத்தை விதைத்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

  • MGR: எம்ஜிஆருக்கு எதிரா பாடல் வரியை வச்ச பாக்யராஜ்! தலைவர் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா

    எம்ஜிஆருக்கு இப்பொழுது வரை தீவிர ரசிகர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ரசிகர்கள் என்பதை விட அவரை கடவுளாக வணங்கி வருவதை நாம் பார்த்து வருகிறோம். கடவுளுக்கு அப்பாற்பட்டு எவரும் இல்லை என்றுதான் சொல்வார்கள். ஆனால் எம்ஜிஆர் செய்த சில நல்ல விஷயங்கள், அவர் மக்களிடம் நடந்து கொண்ட விதம் குறிப்பாக ஏழை மக்களை அவர் நடத்திய விதம் என இவை எல்லாவற்றையும் பற்றி நாம் படிக்கும் போது பிரமிப்பாகத்தான் இருக்கிறது.

    அவர் காலத்தில் நாம் இல்லாமல் போய்விட்டோமே என்று வருத்தமாகவும் இருக்கிறது. அவர் நடிக்கும் படங்களில் பெரும்பாலும் அம்மாவைத்தான் கடவுளுக்கு நிகராக காட்டுவார். அதே போல் குடி, புகை என எதுவுமே எம்ஜிஆர் காட்டியதே கிடையாது. தன்னுடைய படங்கள் இளைஞர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கவேண்டுமே தவிர கெட்டு போவதற்கான பாதையை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருப்பார்.

    அப்படித்தான் மக்களிடம் நன் மதிப்பை பெற்று அரசியலிலும் ஒரு நம்பிக்கை மிக்க தலைவராகவும் உயர்ந்தார். இந்த நிலையில் தன்னுடைய கலையுலக வாரிசு என பாக்யராஜை சொன்னதற்கான காரணம் ஒரு வேளை இப்படியாகக் கூட இருக்கலாம் என பாக்யராஜ் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். பாக்யராஜின் படங்கள் பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தியே இருக்கும். பெண்களுக்கு உண்டான மரியாதை , மதிப்பு என பாக்யராஜ் அதை திறம்பட வைத்திருப்பார்.

    ஒரு வேளை இதையெல்லாம் பார்த்துவிட்டு கூட எம்ஜிஆர் சொல்லியிருக்கலாம் என பாக்யராஜ் கூறினார். மேலும் பாக்யராஜின் படங்களை தவறாமல் பார்த்து விமர்சனத்தையும் கொடுப்பாராம் எம்ஜிஆர். குறிப்பாக டார்லிங் டார்லிங் படத்தில் சுமனை இரண்டு அடியாவது அடிச்சிருக்கணும். விட்டுட்டனு சொன்னாராம் எம்ஜிஆர். அதற்கு பாக்யராஜ் ‘இல்லங்க கராத்தேனு எல்லாருக்கும் தெரியும். அதனால் எப்படினு’ விட்டுட்டேன்னு சொல்லியிருக்கிறார் பாக்யராஜ்.

    யோவ்.. நான் சினிமாவில் 10 பேரை அடிக்கிறேன்னா ஹீரோ எனும் போது ரசிகர்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள். ஓரளவு தெரிஞ்சால் போதும். அவனுக்கு கராத்தே தெரியும்னா நீயும் ரெண்டு அடி அடிச்சிருந்தால் ரசிகர்கள் கொஞ்சம் சந்தோஷப்பட்டிருப்பார்கள் என்று கூறினாராம் எம்ஜிஆர். அதே போல் தூறல் நின்னு போச்சு படத்தில் நம்பியாரை பாக்யராஜ் பயன்படுத்திய விதமும் எம்ஜிஆருக்கு மிகவும் பிடித்திருந்ததாம்.

    அதில் கதை கேளு கதை கேளு பாடலில் மன்னாதி மன்னனையே பார்த்தவன்டா, மதுரை வீரனையே எதிர்த்தவன்டானு நம்பியார் பாடுவது மாதிரி வரிகள் இருக்கும். இதை எல்லாரும் வேண்டாம்னு சொன்னார்களாம். எம்ஜிஆருக்கு எதிராக கெத்து காட்டுவது மாதிரி இருக்கும்னு பாக்யராஜிடம் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் பாக்யராஜ் இல்ல, எம்ஜிஆரை பெருமைப்படுத்துற மாதிரிதான் இருக்கும்னு வச்சிருக்காரு பாக்யராஜ்.

    படத்தை பாக்யராஜுடன் எம்ஜிஆர் பார்க்க, இந்த வரிகளை கேட்டதும் வாயை பொத்தியவாறு சிரித்தபடியே பாக்யராஜின் தொடையை அடித்துக் கொண்டு பார்த்து ரசித்தாராம் எம்ஜிஆர்.

  • எம்.ஜி.ஆருக்கு வந்த பிரச்சனை இப்போது விஜய்க்கும்!.. அரசியலுக்கு வந்தா இப்டிதான்!…

    சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலோ அல்லது படங்களில் அரசியல் பேசினாலோ அவர்களின் திரைப்படங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் இதுவரை கொடுக்கப்படாததால் நாளை வெளியாகவிருந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

    யாரோ ஒருவர் புகார் கொடுத்ததாகவும் அதனால் மறு தணிக்கைக்கு அனுப்பியிருப்பதாகவும். ஏற்கனவே படம் பார்த்தவர்கள் இல்லாமல் வேறு சிலர் படம் பார்க்கவேண்டும்.. அதற்கு அவகாசம் வேண்டும் எனவும் தணிக்கை வாரியம் தரப்பு நேற்று நீதிமன்றத்தில் கூறியது. இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி நாளை (ஜனவரி 9) தீர்ப்பு வழங்கப்படும் என கூறியிருக்கிறார். நாளை தீர்ப்பு கொடுத்தாலும் உடனடியாக ஜனநாயகன் வெளியாகுமா என்பதை தெரியவில்லை. ஏனெனில் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே நேற்று இரவு கேவிஎன் நிறுவனம் அறிவித்துவிட்டது.

    இதன் பின்னணியில் அரசியல் காரணம் இருப்பதாகவே பெரும்பாலானோர் கருதுகிறார்கள். சிலரோ அப்படி எதுவும் இல்லை.. தணிக்கை வாரியம் ஒரு படத்தை காரணம் இல்லாமல் நிறுத்தமாட்டார்கள் என சொல்கிறார்கள்.
    விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறிவிட்டார். அதோடு பாஜக தனது கொள்கை எதிரி.. திமுக தனது அரசியல் எதிரி என தொடர்ந்து சொல்லி வருகிறார். மேலும் அதிமுக-பாஜக கூட்டணியில் விஜயை இணைக்க எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.. எனவே அந்த கோபத்தைத்தான் இப்படி காட்டுகிறார்கள் என விஜய் ரசிகர்கள் பொங்குகிறார்கள்.

    jananayagan

    விஜய் சந்தித்த இதே பிரச்சினையை பல வருடங்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர் சந்தித்திருக்கிறார். அவரின் நாடோடி மன்னன் படத்திற்கு பிரச்சனை வந்தது. அதேபோல், 1966ம் வருடம் எம்ஜிஆர் நடிப்பில் அன்பே வா படம் சென்சாருக்கு சென்றபோது பாடலில் வந்த ‘உதயசூரியனின் பார்வையிலே’ என்கிற வரி இருந்தது. அது திமுக ஆட்சியை குறிப்பதாக சொல்லி தணிக்கை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    எனவே அந்த பாடல் வரியை ‘புதிய சூரியனின் பார்வையிலே’ என மாற்றப்பட்டு, அதை டி.எம்.எஸ் மீண்டும் பாடி மீண்டும் ரெக்கார்ட் செய்து மீண்டும் தணிக்கைக்கு அனுப்பி சென்சார் வாங்கினார்கள். எனவே, ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. தற்போது ஜனநாயகன் படமும் அதுபோல ஒரு பிரச்சினையைத்தான் சந்தித்திருக்கிறது.

  • அப்பா மாதிரி இருக்கீங்க.. நீங்க ஹீரோவா…எம்.ஜி.அரிடம் கேட்ட தாய்லாந்து நடிகை

    இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஓர் சொல்ல வேண்டும் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து மறைந்தவர் எம்.ஜி.ஆர். இவர் இறந்து இத்தனை ஆண்டுகாலம் ஆனாலும் இன்றும் அவர் பெயரை உச்சரிக்காத ஆட்கள் இல்லை.

    தமிழ் சினிமாவில் 60,70களில் வசூல் மன்னனாக இருந்தவர் எம்ஜிஆர். அவரது தோல்வி படம் கூட நல்ல வசூலை கொடுக்கும் என்பார்கள். சினிமா மட்டுமல்ல அரசியலிலும் முத்திடை பத்தித்தவர் அவர். எம்ஜிஆர் சினிமா கேரியரில் உலக சுற்றும் வாலிபன் படம் மிக முக்கியமானது. அந்த காலத்திலேயே உலகின் முக்கிய நாடுகளுக்கு சென்று படப்பிடிப்பை நடத்தினார். தற்போது வரை உலகம் சுற்றும் வாலிபன் எங்கு ரீ ரிலீஸ் செய்தாலும் வசூல் கொட்டிக் கொண்டுதான் உள்ளது.

    இந்த நிலையில் பிர்டபல் யூடியுப் சேனல் ஒன்இல் இயக்குனர் பாரதி மோகன் பேட்டியளித்தார். அப்போது உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பு சமயத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்ரை கூறினார். அவர் கூறியதாவது,

    உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பு சமயத்தில் தாய் லாந்து நடிகை ஒருவரை தேடினர்.அபோது தொலைக்காட்சியில் நடித்துகொண்டிருந்த மீட்டா ரூங்ரட் (Metta Roongrat) தேர்வு செய்யப்பட்டார். அவரை சந்திக்க சாதாரணமாக சென்றாராம் எம்.ஜி.ஆர். அப்போது அந்த நடிகை நடிக்க சம்மதம் படத்தின் ஹீரோ யார் எனக் கேட்டாராம். அதற்கு எம்ஜிஆர் நான்தான் என்று கூறினாராம். உடனே தாய்லாந்து நடிகை என்ன சொல்கிறீர்கள் நீங்கள் அப்பா மாதிரி இருகிறீர்களே என்று கூறினாராம். இதனை எம்ஜிஆர் அப்படத்தின் ஒளிப்பதிவாளரிடம் கூறினாராம் எம்ஜிஆர். அதற்கு அவர்கள் நீங்கள் இவ்வாறு சென்று இருக்க கூடாது சரி பார்த்துகொள்ளலாம் என்று கூறினாராம்

    இந்த நிலையில்படப்பிடிப்புக்கு அந்த நடிகை வந்தாராம். அப்போது எம்ஜிஆர் பேண்ட் சர்ட் கோட்டுடன் அணிந்து கண்ணாடி போட்டபடி நின்று கொண்டிருந்தாராம். எம்ஜிஆரை கண்ட அந்த நடிகை மிகவும் ஆச்சர்யமாக பார்த்து வாவ் சூப்பரா இருக்கிங்க, இப்போ உங்க வயசே தெரியலயே என்று கூறினாராம். அவர்கள் இருவரும் இணைந்து நடித்ததுதான் பச்சகிளி முத்துசரம் முல்லைகொடி யாரோ என்ற பாடல்.

  • அதிநவீன தொழில்நுட்பத்துடன் ரீ ரிலீஸாகும் எம்ஜிஆர் படம்… டிரெய்லரே மாஸ் காட்டுதே!

    தமிழ்த்திரை உலகில் மக்கள் திலகம், புரட்சித்தலைவர், பொன்மனச் செம்மல் என்றாலே சட்டென்று நம் நினைவுக்கு வருபவர் எம்ஜிஆர்தான். இவரது படங்கள் எத்தனை முறை ரிலீஸ் ஆனாலும் சலிக்காது. அந்த வகையில் இப்போது ரீ ரிலீஸாக உள்ள படம் என்னன்னு பார்க்கலாமா…

    1975ல் எம்ஜிஆர், ராதாசலுஜா இணைந்து நடித்த படம் இதயக்கனி. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் இடம்பெற்ற நீங்க நல்லா இருக்கணும் பாடல் கட்சியின் கொள்கைப் பாடலாகவே மாறிப்போனது. இப்போது எங்கு கூட்டம் நடந்தாலும் கூட இந்தப் பாட்டைத் தான் போட்டு எம்ஜிஆர் மாதிரி வேஷம் போட்டு ஆடுவார்கள்.

    இந்தப் படம் அந்த வகையில் எம்ஜிஆரின் அரசியல் பயணத்துக்கு உறுதுணையாகவே இருந்தது. படத்தில் மனோகர், தேங்காய்சீனிவாசன், ஐசரிவேலன், வெண்ணிற ஆடை நிர்மலா, பண்டரிபாய், ராஜசுலோசனா உள்பட பலர் நடித்துள்ளனர். மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். இன்பமே உந்தன் பேர் பெண்மையோ என்ற பாடல் அவ்வளவு அழகு… அவ்வளவு அற்புதம்… எப்போது கேட்டாலும் மனதை வசீகரிக்கக்கூடியது.

    படத்தில் கூலிங்கிளாஸ் மஞ்சள் சட்டை சகிதம் எம்ஜிஆர் வரும் காட்சிகள் எல்லாமே பட்டையைக் கிளப்பும் ரகங்கள்தான். 50 ஆண்டுகளைக் கடந்தும் இன்று வரை மக்கள் மனதில் நீங்காமல் இடம்பிடித்து வருகிறது. அந்த வகையில் எம்ஜிஆர் பேவை சார்பில் இந்தப் படம் மீண்டும் ரீ ரிலீஸாகிறது.

    வரும் 4.7.2025ம் தேதி 100 திரையரங்குகளில் 4 கே டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் சினிமாஸ்கோப்பில் படம் வெளியாகிறது. சத்யா மூவீஸின் 60வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் இந்தப் படம் ரீ ரிலீஸ் ஆகிறது. உலக எம்ஜிஆர் பேரவை அமைப்புகள் இந்தப் படத்தை பெருமையுடன் வழங்குகிறது. பிரான்ஸ், புதுவை, அமீரக பேரவைகள் என்றும் டிரெய்லரில் டைட்டில் கார்டு போடப்பட்டுள்ளது.

    ‘உழைக்கும் தொழிலாளர்களே, என் உடன்பிறப்புகளே, என் ரத்தத்தின் ரத்தமே’ என்று எம்ஜிஆர் பேசும்போது மீண்டும் நாம் எம்ஜிஆர் காலகட்டத்தில் வாழும் உணர்வு உண்டாகிறது.

    கூலித்தொழிலாளி ஒருவர் எங்க எஜமான் ஏழைகளுக்குக் கொடுத்து கொடுத்து கைசிவந்தவர் மட்டுமல்ல. கருணையைக் காட்டிக் காட்டி மனசும் சிவந்த பொன்மனச் செம்மல் ஐயா அவரு என்று சொல்லும் போது ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் ஒரு பரவச உணர்வு உண்டாகிறது என்றே சொல்லலாம்.

    தேங்காய் சீனிவாசன் ஒரு காட்சியில் அவர் பாடியே புல்லட் ஃபரூப். துப்பாக்கியே அவருக்கிட்ட தோத்துருக்கு. தோட்டாவுக்கே டாட்டா காட்டினவர்தான் எங்க பாஸ்னு சொல்கிறார். அப்போது திரையரங்கில் விசில் பறப்பது நிச்சயம்.

    படத்தின் டிரெய்லரைக் காண: https://www.youtube.com/watch?v=5qsTTEG6kw0

  • எம்ஜிஆர் தயாரித்த படங்கள் லிஸ்ட்… ஜெயலலிதாவுக்கு வந்த கோபம்

    முதலாவதாக எம்ஜிஆர் பிக்சர்ஸ் சார்பில் 1958ல் வெளியான படம் நாடோடி மன்னன். முதன் முதலில் இயக்கிய படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 150 நாளுக்கு மேல் ஓடி வெற்றி பெற்ற படம். மதுரை தங்கம் தியேட்டரில் 120 நாள்கள் ஓடி சாதனை செய்த படம். சரோஜாதேவி எம்ஜிஆருடன் நடித்த முதல் படம். பாதி கருப்பு வெள்ளை, பாதி கலர் என எடுத்த படம். எஸ்எம்.சுப்பையா நாயுடு இசையில் சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன.

    இரண்டாவதாக எம்ஜிஆர் தயாரித்த படம் அடிமைப்பெண். இது 1969ல் வெளியானது. இந்தப் படத்தை கே.சங்கர் இயக்கினார். கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டது. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் இரட்டை வேடத்தில் நடித்தனர்.

    மிகப்பெரிய வெற்றிப்படம். சிறந்த பாடல்கள் இடம்பெற்றன. எம்ஜிஆருக்காக எஸ்பிபி முதன் முதலாக குரல் கொடுத்த ஆயிரம் நிலவே வா பாடல் இடம்பெற்ற படம். அதிக வசூல் சாதனை பெற்ற படம்.

    உலகம் சுற்றும் வாலிபன் படம் 1973ல் வெளியானது. எம்ஜிஆர் தயாரித்தார். இரட்டை வேடங்களில் நடித்தார். வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட படம். பிரம்மாண்டமான பொருள்செலவில் எடுக்கப்பட்டது. நீண்ட நாள் தயாரிப்பில் இருந்தது. எம்ஜிஆருடன் மஞ்சுளா, லதா, சந்திரகலா உள்பட பலர் நடித்தனர். இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுக்காதது ஜெயலலிதாவுக்கு ரொம்ப வருத்தத்தை உண்டாக்கியது. எம்எஸ்வி.யின் இசையில் பாடல்கள் சூப்பர். அதிக நாள்கள் ஓடி சாதனை படைத்தது. எம்ஜிஆர் இயக்கிய 2வது படம் இது.

    எம்ஜிஆர் தயாரித்த 4வது படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன். எம்ஜிஆர் இயக்கிய படம். அவருடன் லதா ஜோடியாக நடித்தார். எம்ஜிஆர் முதல்வர் ஆன பிறகு நடித்த படம். 1978ல் வெளியானது. மன்னர் காலத்துப் படமாக இருந்ததால் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வெற்றி பெறவில்லை. 75 நாள்கள் ஓடியது. எம்எஸ்வி.யின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். எம்ஜிஆர் நடித்த கடைசி படம்.

  • எம்ஜிஆருக்குப் போட்டியா வந்தாரா மு.க.முத்து? பிரபலம் சொல்லும் பதில் என்ன?

    மறைந்த நடிகர் மு.க. முத்து பற்றி ஒரு செய்தி உண்டு. அவர் எம்ஜிஆர் மாதிரி சினிமாவில் நடிக்கிறார். அவருக்குப் போட்டியா என்றெல்லாம் கேள்வி எழுந்தது. இதுகுறித்து பிரபல சினிமா பத்திரிகையாளர் தேனி கண்ணன் என்ன சொல்கிறார்? வாங்க பார்க்கலாம்.

    எம்ஜிஆருக்குப் போட்டியா முக.முத்துன்னு எல்லாம் எடுத்துக்கக்கூடாது. ஏன்னா எம்ஜிஆர் கொடுத்த வெற்றியும்இ கடந்து வந்த பாதைகளும், அவர் நடித்த படங்களும் அதுக்கான வசூலும் வேற. ஆனா அரசியலுக்கு ஒரு காய் நகர்த்த வேண்டும் என்ற சிந்தனையோட முக.முத்துவை சிலர் நகர்த்திக் கொண்டு வச்சிருப்பாங்கன்னு வேணா பார்த்துக்கலாம்.

    ஆனா எம்ஜிஆர் அதை எப்படி எடுத்துக்கிட்டாருன்னுதான் பார்க்கணும். எம்ஜிஆர் தன்னோட படங்களுக்குப் பெரிய பலமாக நினைச்சது பாடல்களைத் தான். பாடல்கள் என்ன செய்யும்னா பெரிய லெக்சர் நடத்தி கூட்டத்தை நடத்தி சொல்லக்கூடிய விஷயத்தை ரீச் பண்ண முடியாமப் போகும்போது ஒரு 3 நிமிட பாடல் வந்து சொல்லிடும்.

    அது கடைக்கோடியில இருக்குற ரசிகர்களுக்கும் போய்ச் சேரும். அதனால பாட்டை வந்து எம்ஜிஆர் தனக்கான பெரிய ஆயுதமாகவே வச்சிக்கிட்டாரு. அதனால தான் ஒவ்வொரு படத்துக்கும் பாடல்கள் எப்படி வரணும்கறதை அவரே வடிவமைச்சாரு. இதயவீணை படத்துக்கு 5 டியூன்ல இருந்து ஒவ்வொரு இசைக்கண்ணிகளாக எடுத்து ஒரே பாட்டா வச்சாரு.

    எம்ஜிஆர் பாடலைத் தன்னோட ஆயுதமா நினைச்சாலும் அவரால பாட முடியாது. ஆனா மு.க.முத்துவால் நல்லா பாட முடியும். அருமையான குரல் வளம் உள்ளவர். எம்ஜிஆர் படத்துக்கு உள்ள மாதிரி மு.க.முத்துவுக்கும் பெரிய டீம் இருக்கு. எம்ஜிஆர் என்ன சொல்றாருன்னா உன் படத்தை எல்லாம் எனக்குப் போட்டுக் காட்ட மாட்டியான்னு ஒரு தடவை கேட்டுள்ளார்.

    அதற்கு உடனே மு.க.முத்து தன்னோட டீமை அழைச்சி வந்து எம்ஜிஆருக்குப் படத்தைப் போட்டுக் காட்டினாராம். அப்போது எம்ஜிஆர் அவரிடம், உனக்கென ஒரு தனிபாணியை அமைச்சிக்கிட்டு முன்னுக்கு வரணும்னு சொல்றாரு. அதே நேரம் அவரு கையில கட்டி இருந்த ரேடோ வாட்சைக் கழட்டி அவருக்கு கட்டி வாழ்த்திருக்காரு எம்ஜிஆர். பிள்ளையோ பிள்ளை படத்தில் ஏழையின் சிரிப்பில் இறைவன் என்ற பாடலில் மு.க. முத்துவின் டிரஸ், கெட்டப் போட்டு ஆடுவது எல்லாம் அப்படியே எம்ஜிஆரைப் பார்த்த மாதிரி இருக்கு.

    எம்ஜிஆர் மாதிரியே ஓடுவார். கிருஷ்ணன் பஞ்சுவில் இருந்து எல்லாரும் இவரை எப்படியாவது முன்னாடி கொண்டு வரணும்னு உழைக்கிறாங்க. எம்ஜிஆர் முக.முத்துவின் பாடல்களை எல்லாம் கேட்டு ஷாக் ஆகிட்டாரு. முக.முத்துவுக்கு எழுதப்பட்ட பாடல்கள் எல்லாமே எம்ஜிஆரை நோக்கித்தான் எழுதப்பட்டன. எம்ஜிஆருக்கு நட்பில் நெருக்கமாக இருந்த வாலி தான் மு.க.முத்துவுக்கும் பாடல்களை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • ரஜினி, எம்ஜிஆர் ஸ்டில் அந்த ஒண்ணுதான் இருக்கு… வேற எதுவுமே இல்லையே… என்னாச்சு?

    எம்ஜிஆருடன் ரஜினி இருக்குற மாதிரி ஸ்டில் இருக்கவே இருக்காது. 1983ல் எம்ஜிஆருக்கு டாக்டர் பட்டம் கொடுக்குறாங்க. தமிழ்த்திரை உலகமே சேர்ந்து அவருக்கு நேரு ஸ்டேடியத்துல பாராட்டு விழா நடத்துறாங்க. தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் இருந்து ஒரு ஊர்வலமா நடிகர்கள் அனைவரும் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் போனாங்க. அண்ணா சாலை வழியா போய் நேரு ஸ்டேடியத்துல இறங்கி எம்ஜிஆருக்குப் பாராட்டு விழா நடத்துனாங்க.

    ஒரு பக்கம் பாரதிராஜாவும், பாக்கியராஜூம் நிற்பாங்க. இன்னொரு பக்கம், கமலும், ரஜினியும் நிற்பாங்க. எம்ஜிஆருக்குப் பொன்னாடை, மாலை போடுவாங்க. ரஜினிகாந்த் ஓரமா நின்னுக்கிட்டு இருப்பாரு. அந்த ஒண்ணுதான் ரஜினி எம்ஜிஆரு கூட நிற்பாரு.

    ரஜினி லதாவைக் காதலித்ததும் ஒரு காரணம்னு சொல்றாங்க. ரஜினியோட வளர்ச்சி எம்ஜிஆருக்குப் பிடிக்கலன்னும் ஊடகங்கள் எழுதுனாங்க. அதே மாதிரி ஜெயலலிதா முதல்வர் ஆன நேரம். அண்ணாமலை படத்திலும் ஜெயலலிதாவை எதிர்த்துப் பேசினதா ஒரு காட்சி இருக்கு.

    கிளி ஜோசியத்துல ஒரு பொம்பளையால உனக்குப் பிரச்சனை வரும்னு சொல்வாரு. அப்போ அங்கே குஷ்பு வருவாரு. வினுச்சக்கரவர்த்தி மினிஸ்டர். அவர் வீட்டுல நாத்தை எல்லாம் ரஜினி நட்டுவாரு. ‘நான் பாட்டுக்கு சிவனேன்னு என் வேலையைப் பார்த்துக்கிட்டு இருக்கேன். என்னைத் தேவையில்லாம சீண்டாதீங்க. சீண்டுனா தேவையில்லாத விளைவை எல்லாம் சந்திப்பீங்க’ன்னு ரஜினி சொல்வார். மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

    ஆனால் ரஜினியின் ஆருயிர் நண்பரான கமல் குழந்தை நட்சத்திரமாக எம்ஜிஆரின் ஆனந்த ஜோதி படத்தில் நடித்துள்ளார். திரையுலகில் அனைவரும் எம்ஜிஆரை வாத்தியார் என்றே அன்புடன் அழைப்பர். அந்த வகையில் கமல், பாக்கியராஜ், ரஜினி என பலரும் அப்படித்தான் அழைப்பார்கள். ஆனால் ரஜினி இந்த விஷயத்தில் எம்ஜிஆருடன் நெருங்கிப் பழகாதது ஆச்சரியமாக இருக்கிறது.