Tag: MGR

  • ஹாலிவுட் நடிகை கூட இப்படி பந்தா காட்டல… எம்ஜிஆரே அசந்துட்டாரே!

    நடிகையர் திலகம் சாவித்திரி நடிப்புக்காகவே ரசிகர்களைக் கவர்ந்தார். நாட்டியப் பேரொளி பத்மினி நடனத்தால் ரசிகர்களை வசீகரித்தார். அபிநய சரஸ்வதி சரோஜா தேவியைப் பற்றி சொல்லவே வேண்டாம். துருதுருப்பான பேச்சும் நடிப்பும்தான் அவரது பலம். புன்னகை அரசி என்றால் அது கே.ஆர்.விஜயா தான்.

    எப்போதும் புன்னகையோடு இருப்பதால் கே.ஆர்.விஜயாவை புன்னகை அரசி என்றார்கள். ஆனால் இந்தப் புன்னகைக்குப் பின்னாலும் சோகம் இருந்தது. வாங்க பார்க்கலாம்.

    1963ல் சினிமாவுக்கு நடிக்க வந்தார் கே.ஆர்.விஜயா. அதற்கு முன்பே பழனி பகுதியில் இருந்தபோது நாடகங்களில் நடித்தார். அப்போது நாடகத்துக்காக வந்த எம்.ஆர்.ராதா அவர் நன்றாக நடிக்கிறார். சினிமாவில் நடிக்க வைக்கலாம் என்று நினைத்தார். அவரது தெய்வநாயகி என்ற பெயரை ‘கே.ஆர்.விஜயா’ என்று மாற்றினார்.

    சினிமாவுக்காக அவரது போட்டோவைப் போட்டு போஸ்டர் ஒட்டி விளம்பரம் செய்தாராம். அப்படி அவருக்கு தேடி வந்ததுதான் கற்பகம் என்ற சினிமா வாய்ப்பு. முதல் படத்திலேயே ஜெமினிகணேசனுக்கு ஜோடியானார்.

    அப்போது அவரது வயது 13. தொடர்ந்து எம்ஜிஆர், சிவாஜியுடன் கூட ஜோடியாக படங்களில் நடித்தார். படப்பிடிப்பில் பிரச்சனை வராது. கால்ஷீட்டில் பிரச்சனை வராது. எந்த சாமி படமாக இருந்தாலும் விரதம் இருந்து கோவில் குளத்தில் குளித்து ஈரப்புடவையுடன் அங்கப்பிரதட்சணம் செய்து விட்டு அர்ச்சனை செய்தபின்தான் முதல் காட்சியில் நடிப்பார்.

    கேரளாவின் சிட்பண்ட்ஸ் நிறுவனரான வேலாயுதம் நாயர் அவருக்குப் பழக்கம் ஏற்பட காதலில் விழுந்தார். 1966ல் இவர்களது திருமணம் நடந்தது. ஆனால் அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். அப்போதே சொந்தமாக ஹெலிகாப்டர் வைத்து இருந்தாராம்.

    ஊட்டியில் நல்ல நேரம் படப்பிடிப்பு நடந்தது. அப்போது எம்ஜிஆர் காரில் தான் சென்றாராம். ஆனால் கே.ஆர்.விஜயா சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்திலும், அங்கிருந்து ஊட்டிக்கு ஹெலிகாப்டரிலும் சென்றாராம். அப்போது ஊட்டியில் உள்ள ஓட்டல் அறையில் தான் எம்ஜிஆரே தங்குவாராம்.

    ஆனால் கே.ஆர்.விஜயாவை ஹெலிகாப்டரில் கோவைக்கு அவரது கணவர் அழைத்து வந்து தங்க வைப்பாராம். மீண்டும் காலையில் ஹெலிகாப்டரில் ஊட்டிக்குச் சென்று படப்பிடிப்பில் கலந்து கொள்வாராம். இப்படி ஹாலிவுட் நடிகை மாதிரி பந்தா காட்டியவர் தான் கே.ஆர்.விஜயா.

    திருமணம் முடிந்தபிறகு சினிமாவில் இருந்து விலக முடிவு செய்தாராம். ஆனால் ‘நீ வீட்டில் இருந்தால் சோம்பேறி ஆகி விடுவாய். அதனால் சினிமாவுக்குப் போ’ என்று சொல்லி விடுவாராம். கணவரின் பெருந்தன்மை கே.ஆர்.விஜயாவுக்கு சந்தோஷமாக இருந்ததாம். ஆனால் இதற்குப் பின்னால் பெரிய காரணம் இருந்ததாம்.

    வேலாயுதம் செய்து வந்த வேலைகளில் சுங்கத்துறை, வருமான வரி அதிகாரிகள் அடிக்கடி விசாரணை என்ற பெயரில் தொல்லை கொடுத்து வந்தார்களாம். அதனால் அவர்களை சரிகட்ட அவர்களுக்குப் பார்ட்டி கொடுப்பாராம். அப்போது அவருக்கு நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஒருவர் தேவைப்பட்டதாம்.

    அதனால் தான் கே.ஆர்.விஜயாவைத் திருமணம் செய்தாராம். குழந்தை பிறந்தபிறகும் கூட சினிமாவை நிறுத்தி விடுகிறேன் என கே.ஆர்.விஜயா சொல்ல வேலாயுதமோ நான் கவனித்துக் கொள்கிறேன். நீ சினிமாவில் தொடர்ந்து நடின்னு சொன்னாராம். கே.ஆர்.விஜயா சம்பாதித்த பணத்தைக் கூட ‘உன் பணம் எனக்கு வேண்டாம். நீ ரியல் எஸ்டேட்டில் அதை முதலீடு செய்’ என்று அவரையும் உள்ளே நுழைத்து விட்டாராம். அதனால் தான் புன்னகை அரசியாகவே கே.ஆர்.விஜயா திகழ்ந்தார் என்கிறார்கள்.

  • தன்னை திட்டிய நடிகரை அழவைத்த எம்.ஜி.ஆர்!.. கொடைவள்ளல் இப்படிப்பட்டவரா?!..

    எம்.ஜி.ஆர் எல்லோருக்கும் உதவும் குணம் கொண்ட ஒரு மனிதராகவே கடைசிவரை இருந்தார். தன்னால் முடிந்தவரை தன்னை சுற்றியுள்ள, தன்னிடம் உதவி கேட்ட, தனக்கு தெரிந்த, தன்னுடன் பழகிய பலருக்கும், பல வழிகளிலும் உதவியிருக்கிறார். இதுபோக பொதுமக்களுக்கும் பலருக்கும் அவர் செய்த உதவிகள் ஏராளம்.

    இது ஒருபுறம் எனில் தன்னைப் பற்றி தரக்குறைவாக பேசியவர்கர்களுக்கும், தவறாக விமர்சனம் செய்தவர்களுக்கும் அவர் உதவியிருக்கிறார். சினிமா உலகில் எம்.ஜி.ஆரை கடுமையாக விமர்சித்தவர் கண்ணதாசன். ஏனெனில், காமராஜர் காங்கிரஸ் ஆதரவாளர். எம்.ஜி.ஆரோ திமுகவில் இருந்தார். எனவே, அரசியல் மேடைகளில் எம்.ஜி.ஆரை கண்ணதாசன் விமர்சித்தார்.

    ஆனால், எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த நேரத்தில் தமிழக அரசவைப்புலவராக நியமித்து கவுரவப்படுத்தினார். அதேபோல், சந்திரபாபுவை வைத்து ஒரு படத்தை தயாரித்து அதுவரை சினிமாவில் சம்பாதித்த பணம், சொத்துக்களை இழந்தார். அதோடு, கடனாளியாகவும் மாறினார். கண்ணதாசனின் வீடு ஒன்று ஜப்தி ஆக இருந்த நிலையில் எம்.ஜி.ஆர்தான் அதை மீட்டுக் கொடுத்தார்.

    அதேபோல், சினிமா உலகில் எம்.ஜி.ஆரை எப்போதும் நக்கலடித்து பேசியவர் காமெடி நடிகர் சந்திரபாபு. தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர் யார்? என ஒருமுறை ஒரு செய்தியாளர் கேட்டதற்கு ‘நான்தான்’ என பதில் சொன்னார். ஆனால், அதே சந்திரபாபு சினிமாவில் படங்களை தயாரித்து கடனாளியாக மாறி மிகவும் கஷ்டப்பட்டார்.

    சினிமாவில் வாய்ப்புகளெல்லாம் போய் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டதெல்லாம் நடந்தது. எம்.ஜி.ஆருக்கும் அவருக்குமான உறவிலும் விரிசல் ஏற்பட்டது. குடிக்கு அடிமையாகி சினிமாவில் நடிக்காமல் இருந்தார். அவரின் நெருங்கிய நண்பர்களும் அவரை கைவிட்டார்கள். அப்போது கிறிஸ்துமஸ் பண்டிகை வந்தது. கிறிஸ்துவரான சந்திரபாபுவுக்கு கிறிஸ்துமஸை கொண்டாட கூட பணம் இல்லை.

    அப்போது எம்.ஜி.ஆரின் மேனேஜர் சந்திரபாபு வீட்டுக்கு வந்து எம்.ஜி.ஆர் கொடுத்து அனுப்பியதாக சொல்லி ஒரு வாழ்த்து மடலை கொடுத்தார். அந்த வாழ்த்துமாடலை சந்திரபாபு பிரித்துபார்த்தபோது அதில் 5 ஆயிரம் பணம் இருந்தது. அதுவரை எம்.ஜி.ஆரிடம் பேசாமல் இருந்த சந்திரபாபு உடனே அவருக்கு போன் செய்தார். மறுமுனையில் பேசிய எம்.ஜி.ஆர் ‘பாபு உங்கள் பிரச்சனை எனக்கு தெரியும். பறக்கும் பாவை படத்தில் உங்களை ஒப்பந்தம் செய்திருக்கிறேன். ஒரு லட்சம் ரூபாய் சம்பளம். நாளை முன் பணமாக 10 ஆயிரம் ரூபாய் உங்களிடம் கொடுப்பார்கள். அதை வாங்கிக்கொண்டு கிறிஸ்துமஸையும், புது வருடத்தையும் நன்றாக கொண்டாடுங்கள்’ என சொல்ல சொல்ல சந்திரபாபு எதுவும் பேச முடியாமல் நா தழுக்க நின்று கொண்டே இருந்தார். அவர் சொன்ன ஒரே வார்த்தை ‘தேங்க் யூ மிஸ்டர் ராமச்சந்திரன்’

  • பிரிந்து இருந்த எம்ஜிஆர், கண்ணதாசன்… சேர்த்து வைத்த சூப்பர்ஹிட் பாடல் அதுதான்..!

    கண்ணதாசனும், எம்ஜிஆரும் இருவேறு துருவங்களாகப் பிரிந்து இருந்த காலம் அது. அரசியல் காரணங்களுக்காக எம்ஜிஆரை கண்ணதாசன் கடுமையாக விமர்சிப்பார். அதனால தன்னோட படங்களுக்குக் கண்ணதாசனை பாடல் எழுத எம்ஜிஆர் கூப்பிடுறது இல்ல. அந்த நேரத்தில் அவர் வாலியைப் பயன்படுத்தினார். அதுமட்டும் அல்லாமல் ஏராளமான பாடலாசிரியர்களையும் உருவாக்கி வைத்து இருந்தார். இந்த நேரத்துல எம்ஜிஆரையும், கண்ணதாசனையும் இணைத்தது ஒரு பாடல். அந்த சுவாரசியத்தைப் பார்ப்போமா…

    சிவாஜியின் பல படங்களை இயக்கியவர் பிஆர்.பந்துலு. அப்போது சில படங்கள் சரியாகப் போகவில்லை. அதனால் பொருளாதார நெருக்கடியில் இருந்துள்ளார். அந்த நேரத்துல என்ன செய்யலாம்னு பார்த்தபோது அவரது நண்பர்கள் எம்ஜிஆரை வைத்து ஒரு படம் பண்ணுங்க. எல்லா கடன் பிரச்சனையும் தீர்ந்துடும்னு சொல்லிருக்காங்க.

    அதனால எம்ஜிஆருக்கு என்ன கதை பண்ணலாம்னு யோசிச்சிருக்காரு. அப்போ அவரது கதை இலாகாவில் கே.ஜே.மகாதேவன் சாகசம் நிறைந்த ஒரு கதையை சொல்ல அது அவருக்குப் பிடித்து விட்டது. உடனே பிஆர்.பந்துலு எம்ஜிஆரிடம் சொல்ல அவருக்கும் பிடித்து விட்டது. உடனே வாலியை அழைத்து நாம அடுத்த படம் பிஆர்.பந்துலுவோடு சேர்ந்து பண்ணலாம். கதை ரொம்ப நல்லாருக்குன்னு சொல்லிருக்காரு எம்ஜிஆர்.

    அதுதான் ஆயித்தில் ஒருவன் படம். இந்தப் படத்தில் அடிமைகளை மீட்டுக் கொண்டு எம்ஜிஆர் கப்பலில் தப்பித்துச் செல்கிறார். மன்னரின் மகள் எம்ஜிஆரைக் காதலிக்கிறார். சுதந்திர உணர்வை பிரதிபலிக்கும் வகையில் பாடல் வேண்டும். இந்த சூழலில் அப்படி ஒரு பாட்டு தேவை. எம்எஸ்.வி. இசை அமைக்கிறார்.

    இந்த சூழலுக்கு ஒரு பாட்டைப் போட்டுக் கொடுத்தால் வாலி எழுதுற பாட்டு இயக்குனருக்கும், எம்எஸ்விக்கும் பிடிக்கல. எம்ஜிஆர் வளர்த்த கவிஞர்கள் எழுதுவதும் செட்டாகல. கடைசியில எம்எஸ்வி., பிஆர்.பந்துலுவிடம் கண்ணதாசன்தான் இந்தப் பாடலுக்கு சரியா எழுதுவாரு. அவரைப் பாருங்கன்னு சொல்றாரு. நானே இப்ப தான் சிவாஜிகிட்ட இருந்து வந்துருக்கேன். என்னால போய் கொடுக்க முடியாது. நீங்க போய் பாருங்கன்னு சொல்றாரு. உடனே எம்எஸ்வி., கண்ணதாசனிடம் பேசி இருக்கிறார்.

    உடனே எம்ஜிஆரிடம் எம்எஸ்வி. இதற்கு அனுமதி கேட்க உங்களுக்குப் பிடிச்சிருந்தா பாட்டு வாங்குங்கன்னு சொல்லி அனுமதி வழங்கி விட்டார். கண்ணதாசனும் முதலில் இதுகுறித்து ஆச்சரியமாகக் கேட்டு பின்னர் சம்மதித்துள்ளார். அதன்பிறகு உடனே அவசரம். போன்லயே சொல்லுங்கன்னு எம்எஸ்வி. கேட்டுள்ளார்.

    அப்போது கண்ணதாசனின் அறைக்குள் ஒரு பறவை பறந்து செல்ல உடனே அவருக்கு ஒரு ஐடியா வந்துள்ளது. அதுதான் முதல் வரி. அடுத்ததாக எம்ஜிஆர் எப்படி ஆடுவார் என யோசிக்க ஒரு கையை மேலே நீட்டுவார். ஒரு கையை கீழே நீட்டுவார். அப்படின்னா என்னன்னு யோசிக்க 2வது வரி ஓகே ஆகிடுச்சு. அதுதான் ‘அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும். இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்…’ என்ற சூப்பர்ஹிட் பாடல். இது படக்குழு அனைவருக்குமே பிடித்துப் போனது. இந்தப் பாடலுக்குப் பின் பிரிந்த நட்பு ஒன்றிணைந்தது.

  • எம்ஜிஆருக்கு ஒரு நடிகையைப் பிடித்து விட்டால்…. தொடருவது என்னன்னு தெரியுமா?

    புரட்சித்தலைவர் எம்ஜிஆருடன் அதிக படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தவர் ஜெயலலிதா. இருவரின் படங்களும் பெரும்பாலும் சூப்பர்ஹிட்தான். எம்ஜிஆரைப் பொருத்தவரை ஒரு புது நடிகையைப் பார்த்ததும் பிடித்துவிட்டால் ஜோடியாக நடிக்க வைப்பார். அது ஒர்க் அவுட் ஆனால் தொடர்ந்து 5 படங்களில் அவர் தான் ஹீரோயின். அப்படித்தான் சரோஜாதேவி, ஜெயலலிதா, லதாவைச் சொல்லலாம். அந்த லிஸ்ட்ல வந்தவர் தான் நடிகை மஞ்சுளா.

    ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் மஞ்சுளா. சாந்தி நிலையம் படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். தெலுங்கிலும் இவர் நடித்து பெயர் பெற்றார்.

    ஒருமுறை ஏவிஎம் ஸ்டூடியோவில் மஞ்சுளாவின் போட்டோ ஷூட் நடந்ததாம். அப்போது எம்ஜிஆர் அந்த வழியாகப் போக, தற்செயலாக மஞ்சுளாவைப் பார்த்துள்ளார். அழகா துருதுருன்னு இருக்கிறாளே. இந்தப்பொண்ணு. நம்ம படத்துல கதாநாயகியாக நடிக்க வைக்கலாமேன்னு நினைத்து மஞ்சுளாவின் பெற்றோரிடம் கேட்டாராம். அதற்கு அவர்களும் உடனே சந்தோஷத்தில் சம்மதித்துள்ளார்களாம்.

    அந்த வகையில் எம்ஜிஆரின் ரிக்ஷாக்காரன் தான் மஞ்சுளா ஜோடியாக நடித்த முதல் படம். சிறப்பான நடிப்பு. அப்போது 16 வயதுதான். அடுத்து உலகம் சுற்றும் வாலிபன், இதயவீணை, நேற்று இன்று நாளை, நினைத்ததை முடிப்பவன். ஒப்பந்தம் முடிந்ததும் சிவாஜியுடன் ஜோடி சேர்ந்தார் மஞ்சுளா.

    அப்போது டாக்டர் சிவா, எங்கள் தங்க ராஜா, அவன்தான் மனிதன், என் மகன், அன்பே ஆருயிரே, மன்னவன் வந்தானடி, உத்தமன், அவன் ஒரு சரித்திரம், நெஞ்சங்கள் என்று வரிசையாகப் படங்களில் நடித்தார். மஞ்சுளாவைப் பொருத்தவரை அழகிலும் சரி. நடிப்பிலும் சரி. யாரும் குறை சொல்ல முடியாத சூப்பர் நடிகை.

    சில நடிகைகள் அழகுப் பதுமையாக இருப்பார்கள். நடிப்பு ஒழுங்கா வராது. சில நடிகைகள் அழகின்றி இருப்பார்கள். ஆனால் சூப்பராக நடிப்பார்கள். ஆனால் அழகு, நடிப்பு இரண்டும் ஒருங்கே அமைந்தது என்றால் மஞ்சுளாவை நாம் சொல்லாமல் இருக்க முடியாது.

  • இளமைத் துடிப்பில் எம்ஜிஆரை அவமதித்த நடிகை… 27 வருடங்களுக்குப் பிறகு மன்னிப்பு கேட்டுள்ளாரே!

    எம்ஜிஆர் தொடர்ந்து ராஜா, ராணி கதை அம்சம் கொண்ட படங்களிலேயே நடித்து வந்தார். அதன்பிறகு முதன்முதலாக சமூக கதை அம்சம் கொண்ட படத்தில் நடித்தார். அப்படி அவர் நடித்த முதல் படம்தான் தாய் மகளுக்குக் கட்டிய தாலி.

    1959ல் வெளியானது. அறிஞர் அண்ணா கதை எழுதினார். அவரது தொண்டர் ராம அரங்கண்ணல் சினிமாவிற்கேற்ப திரைக்கதை எழுதினார். ஆர்.ஆர்.சந்திரன் இயக்கினார். சாதிபாகுபாடுக்கு சவுக்கடி கொடுக்கும் கதை.

    இந்தப் படத்தில் கதாநாயகி ஜமுனா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்த போது ஜமுனா கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு இருந்தார். அப்போது எம்ஜிஆர் வந்து கொண்டு இருந்தார். அப்போது ஒருவர் ‘என்னம்மா எம்ஜிஆர் வந்து கொண்டு இருக்கிறார். நீங்கள் கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருக்கிறீர்களே…’ என்றார்கள். அப்படி சொன்னவரைக் கோபத்துடன் முறைத்துப் பார்த்தார் ஜமுனா. அதன்பிறகும் கால் மேல் கால் போட்டுத்தான் அமர்ந்து இருந்தார் ஜமுனா.

    இதை எம்ஜிஆர் கண்டும் காணாதது போல சென்றுவிட்டார். அந்தப் படம் தோல்விப்படமாகவே அமைந்தது. சொல்லப்போனால் ஜமுனா ஒரு ராசியில்லாத நடிகை என்றே சொல்லப்பட்டார். அதற்கு அடுத்து எம்ஜிஆர் நடித்த படங்களில் ஜமுனாவின் பெயர் கதாநாயகிக்கு பரிந்துரைக்கப்படும்போது எம்ஜிஆர் மறுயோசனை இன்றி மறுத்துவிட்டார்.

    எம்ஜிஆருடன் ஒரே படத்தில் மட்டும் கதாநாயகியாக நடித்த நடிகைகளின் பட்டியலில் ஜமுனாவும் இடம்பிடித்தார். பிற்காலத்தில் அம்மா நடிகையாகவும் மாறினார். அதே சமயத்தில் எம்ஜிஆர் முன்னணி நடிகராக வலம் வந்து அரசியலில் ஜெயித்து முதல்வர் ஆனார். அதன்பிறகு ஒரு நாள் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது நடந்த ஒரு சினிமா நிகழ்வில் ஜமுனாவும் கலந்து கொண்டார்.

    ‘நான் எம்ஜிஆருடன் இணைந்து நடித்த காலகட்டத்தில் சிறு வயது பெண். அப்போது எனக்கு அவ்வளவாக பக்குவம் இல்லை. அதனால் புரட்சித்தலைவரிடம் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டேன். அதை நினைத்துப் பல நாள்கள் வருத்தப்பட்டேன். ஆனால் அதை எம்ஜிஆர் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.

    இருந்தாலும் இப்போது அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்’ என்றார். அதன்பிறகு எம்ஜிஆர் பேசும்போது ‘சினிமாவில் பெரியவர், சிறியவர் என்று யாருமில்லை. எல்லாருக்கும் சம மரியாதை கொடுத்து பேசுவது நல்லது’ என்றார். இதன்படி ஜமுனா தான் செய்த தவறுக்காக 27 வருடங்கள் கழித்து எம்ஜிஆரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Flash back: யோவ் உனக்கு அறிவு இருக்காய்யா..? பாரதிராஜாவைத் திட்டிய எம்ஜிஆர்…!

    ஒரு கைதியின் டைரி படத்தை இயக்கியவர் பாரதிராஜா. கதை எழுதியவர் பாக்கியராஜ். இந்தப் படத்தில் கமல் முற்றிலும் மாறுபட்ட 2 வேடங்களில் நடித்துள்ளார். ரேவதிதான் கதாநாயகி. ஜனகராஜ், மலேசியா வாசுதேவன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. அப்போது ஊட்டியில் உள்ள கார்டன் மூடியிருப்பதாக பாரதிராஜாவுக்குத் தகவல் வந்தது. அன்று தான் அங்கு பாடல் காட்சி எடுக்க வேண்டி இருந்தது. இதனால் பாரதிராஜா டென்ஷன் ஆனார்.

    என்ன விவரம் என்று கேட்க அப்போது தமிழக முதல்வர் எம்ஜிஆர் ஒரு அரசாங்க விஷயமாக ஊட்டி வந்து இருப்பதாகவும் கெஸ்ட் ஹவுஸில் ஓய்வு எடுத்து வருவதாகவும் அதனால் படப்பிடிப்பு நடத்த அனுமதி இல்லை என்றார்கள். அந்த நிலையில் பாரதிராஜா அந்த டென்ஷனைப் படப்பிடிப்பில் உள்ள மற்றவர்களிடம் காட்ட ஆரம்பித்தார். உடனே சரி சிம்ஸ் பார்க்கில் சூட்டிங்கை வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னார் பாரதிராஜா.

    ஆனால் அப்போது பாரதிராஜாவுடன் போட்டோகிராபர் சங்கர் ராவும் இருந்தார். அவர் எம்ஜிஆரின் பல படங்களில் பணியாற்றியவர். அவருக்கு நெருக்கமான நட்பு கொண்டவர். அவர் என்ன சொன்னார்னா ‘சிம்ஸ் பார்க் தூரம் அதிகம். அங்கு போய் படப்பிடிப்பை முடிக்க முடியாது. அதற்குப் பதிலாக நான் ஒரு வழி சொல்றேன்’னு சொன்னார்.

    அதென்னன்னு கேட்க நாம இருவரும் எம்ஜிஆரைப் போய்ப் பார்த்து நிலைமையைச் சொல்வோம் என பாரதிராஜாவிடம் கூறினாராம். பாரதிராஜாவும் சங்கர் ராவ் மீது இருந்த நம்பிக்கையில் எம்ஜிஆரைப் பார்க்க சென்றார். விவரம் அறிந்த எம்ஜிஆர் அப்படியா, நானும் பணி முடிந்து ஓய்வில் தான் இருக்கிறேன். சூட்டிங்கைப் பார்த்து நாளாச்சு. நானும் கிளம்பி வருகிறேன் என்றாராம்.

    அந்தவேளையில் பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ்க்கு ஹார்ட் அட்டாக் அதனால் கோவையில் ஒரு மருத்துவமனையில் சேர்த்திருப்பதையும் சங்கர் எம்ஜிஆரிடம் தகவல் தெரிவித்துள்ளார். உடனே எம்ஜிஆர் பாரதிராஜாவிடம் ‘யோவ் உனக்கு அறிவு இருக்காய்யா? இப்போ படப்பிடிப்பா முக்கியம். தம்பி உயிரு தான்யா முக்கியம்’னு கடிந்து கொண்டார் எம்ஜிஆர்.

    உடனே தனது குடும்ப டாக்டரை போன் பண்ணி வரவழைத்து அவருக்கு சிகிச்சை அளித்து அவரது உயிரையும் காப்பாற்றியுள்ளார். அதன்பிறகு இனி தம்பியின் உயிருக்குக் கவலை இல்லை. படப்பிடிப்பை நடத்துங்கள் என்றாராம். அதுமட்டும் அல்லாமல் படக்குழுவினர் 100 பேருக்கு மதிய விருந்துக்கும் ஏற்பாடு செய்தாராம். அதில் 90 பேருக்கு அசைவ உணவும் பரிமாறப்பட்டதாம்.

  • Flash BacK: எம்ஜிஆரின் அதீத தலையீடு… மெல்லிசை மன்னருக்கு வந்த அந்த எண்ணம்!

    புரட்சித்தலைவர் எம்ஜிஆருடைய பல திரைப்படங்களுக்கு இசை அமைத்த பெருமை மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதனுக்கு உண்டு. எம்எஸ்வி. இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனதே எம்ஜிஆரின் படம்தான். அதுதான் ஜெனோவா.

    அப்படி இருந்தும் இவர்கள் இருவருக்கும் இடையில் இந்தப் பாடல் விஷயத்தில் உரசல்கள் இருந்து கொண்டே இருந்தது என்பதுதான் உண்மை. இதுகுறித்து மெல்லிசை மன்னர் எம்எஸ்வி. என்ன சொல்றாருன்னு பார்க்கலாம்.

    ஆரம்பகட்டத்துல எம்ஜிஆரின் படங்களுக்கு நான் இசை அமைத்தபோது அவரோட தலையீடு இருந்ததே இல்லை. ஒரு காலகட்டத்துக்குப் பின்னாலே என்னை அழைத்த எம்ஜிஆர் இனிமே நீ பாடல்களுக்கு இசை அமைக்கும்போது ‘முதல்ல எனக்கு அந்த டியூனைப் பாடிக் காட்டணும். நான் ஓகேன்னு சொன்ன பிறகுதான் அந்தப் பாடலை நீ பதிவு பண்ணனும்’னு எங்கிட்ட சொன்னார் எம்ஜிஆர்.

    நானும் சரி என்று ஒப்புக் கொண்டேன். ஆனால் நான் அப்படி ஒப்புக்கொண்டது தவறோ என்று நினைக்கும்படி பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. எம்ஜிஆரின் அதீத தலையீடு காரணமாகவே ஒரு சில பாடல்கள் நன்றாக அமையாமல் போய்விட்டனவோ என்ற எண்ணம் எனக்கு உண்டு என்று ஒரு பத்திரிகை பேட்டியில் மெல்லிசை மன்னர் எம்ஸ்.விஸ்வநாதன் பதிவு செய்துள்ளார். மேற்கண்ட தகவலைப் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    எம்ஜிஆரைப் பொருத்தவரை சினிமாவில் பல விஷயங்களை விரல் நுனியில் தெரிந்து வைத்து இருந்தார். டெக்னிகல் விஷயங்களிலும் உதாரணத்திற்கு கேமரா கோணங்களிலும் அவர் கவனம் செலுத்துவார்.

    அவர் இயக்கிய படங்களின் வெற்றியே இதற்கு சாட்சி. உலகம் சுற்றும் வாலிபன், நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆகிய படங்களை இயக்கியவர் எம்ஜிஆர் தான். அவரின் படங்களில் பாடல்கள் எல்லாமே சிறப்பாக வரக் காரணம் அவர் இசை அமைப்பாளரின் கூடவே இருந்து தனக்குத் தேவையான பாடல்களை வாங்கி விடுவார் என்கிறார்கள். ஆனால் இங்கு எம்எஸ்வி. இப்படி தெரிவித்து இருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது.

  • திருமணத்திற்கு அதிகாலையில் வந்த எம்ஜிஆர்… அடுத்தும் ராஜேஷூக்கு காத்திருந்தது இன்ப அதிர்ச்சி!

    தமிழ்த்திரை உலகில் மறக்க முடியாத குணச்சித்திர நடிகர் ராஜேஷ் இன்று காலமானார். திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இறுதிக்கட்டத்துல அவரது வாழ்க்கை சிறப்பாக இல்லை என்று தன் நண்பர்களிடம் ராஜேஷ் கூறியுள்ளாராம்.

    அவள் ஒரு தொடர்கதை படத்தில் சின்ன ரோலில் ராஜேஷ் நடித்தார். சிவாஜியின் தீவிர ரசிகர். ஜோசியத்தில் ஈடுபாடு கொண்டவர். நீங்கதான் திருமணத்தை நடத்தி வைக்கணும்னு சிவாஜியை அழைத்தார் ராஜேஷ். அவரும் சம்மதித்தார். நண்பர்களின் விருப்பத்திற்கேற்ப ராஜேஷ் எம்ஜிஆரையும் திருமணத்திற்கு அழைத்தார்.

    அன்றைய தினம் அவர் முதல்வராக இருந்ததால் நிறைய அரசு அலுவல்கள் இருந்தன. அதனால் வர வாய்ப்பில்லை. ஆனால் என்னோட ஆசிர்வாதம் எப்பவும் உனக்கு உண்டுன்னு எம்ஜிஆர் சொன்னாராம். அதே நேரத்தில் சிவாஜிக்கும் கல்யாணத்திற்குப் போவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்ததாம்.

    எம்ஜிஆர் கல்யாணத்து அன்று ராஜேஷை போய் சந்திக்க வேண்டும் என்பதால் காலை 6.3 மணிக்கு திடீர்னு கிளம்பி அவர் வீட்டுக்குப் போய் சந்தித்து ஆசிர்வாதம் பண்ணிவிட்டு ஒரு சூட்கேஸைக் கொடுத்தாராம். அதில் 5 லட்சம் ரூபாய் இருந்ததாம். ராஜேஷ் அதுவரை எம்ஜிஆர் மீது வைத்திருந்த ஒரு நம்பிக்கை தூள் தூளாகப் போனதாம்.

    சிவாஜியும் அன்றைய தினம் சூட்டிங் இருந்ததால் கல்யாணத்திற்கு வர முடியவில்லை என்ற தகவலைச் சொல்லி விட்டாராம். மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் திண்டுக்கல் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

    நடிகர் ராஜேஷ் ஆசிரியராக இருந்து அந்த வேலையை சினிமா மோகத்தால் உதறித்தள்ளிவிட்டு நடிக்க வந்தவர். இவரது தமிழ் உச்சரிப்பு வெகு நேர்த்தியாக இருக்கும். நடிகர் எஸ்எஸ்.ஆருக்குப் பிறகு இவரது வசன உச்சரிப்பு தான் அழகு. நடிகர் ராஜேஷ் சிவாஜியைப் போல இருந்ததால் அவரது நடிப்பையும் பலர் ரசித்தனர். அதே வேளையில் சிவாஜியின் நடிப்புக்கு ராஜேஷ் தீவிர ரசிகராகவும் இருந்தார்.

    அவர் சமீபத்தில் ஐசரி கணேஷ் திருமணத்தில் அவரை சந்தித்தபோது 99 வயது வரை எப்படி வாழ வேண்டும் என சொல்லித்தருகிறேன். வீட்டுக்கு வாங்க என்றும் தெரிவித்து இருந்தாராம்.

  • அம்பிகாவுக்கும், ராதாவுக்கும் எம்ஜிஆர் வாரிக் கொடுத்தது எல்லாம் உண்மையா? பிரபலம் சொல்லும் தகவல்

    புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வாரி வாரிக் கொடுக்கும் வள்ளல் என்பது நமக்குத் தெரிந்த விஷயம். அதே நேரம் அவர் கஷ்டப்பட்டவங்களுக்குத் தான் அப்படிக் கொடுப்பார் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம்.

    ஆனால் அக்கா தங்கை நடிகைகளான அம்பிகாவுக்கும், ராதாவுக்கும் கொடுத்து இருக்கிறார். அது உண்மையா என ரசிகர்கள் பலரும் நெட்டில் கேள்வி எழுப்பி வந்த வண்ணம் உள்ளனர். இதற்கு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் இப்படி பதில் சொல்லி இருக்கிறார். என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…

    தமிழ்சினிமாவில் அரசியலில் தனக்கென தனி இடம் பிடித்து இன்று அவர் மறைந்தாலும்கூட மக்களின் மனதில் வாழ்ந்து வருபவர் எம்ஜிஆர். சினிமாவில் ஆட்சி செய்த அவர் அரசியலிலும் தொடர்ந்து 3 முறை மக்களின் முதல்வராக இருந்தார். நடிகராக இருந்தபோது அரசியலுக்கு வந்தபோதும் தனது வாழ்நாளில் பலருக்கும் உதவிகளை செய்துள்ளார். அதன்மூலம் மக்களின் மத்தியில் இன்றும் நிலைத்து நிற்கிறார்.

    அந்த வகையில் கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகைகளாக இருப்பவர்கள் அம்பிகா, ராதா. இவர்கள் சிவாஜி, ரஜினி, கமல், மோகன், பிரபு, விஜயகாந்த் என பலருடனும் இணைந்து வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார்கள். ராதாவின் திருமணத்திற்குப் பிறகு நடிப்பில் இருந்து விலகினார்.

    bharathiraja

    bharathiraja

    ஆனாலும் அவரது அக்கா அம்பிகா தற்போது வரை சினிமாவில் நடித்து வருகிறார். சீரியலிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது இருவரும் ஏஆர்எஸ். கார்டனை வாங்கினார்கள். அப்போது அந்த இடத்தை எம்ஜிஆர் இலவசமாகக் கொடுத்து இருந்தால் அப்போது எதிர்க்கட்சியாக உள்ளவர்கள் சும்மா விட்டு இருப்பார்களா?

    அதுவும் இல்லாமல் அந்த ஏஆர்எஸ் கார்டன் அரசு நிலமும் கிடையாது. அது தனியார் நிலம். அவர்களிடம் இருந்து தான் ராதா அந்த இடத்தை வாங்கினார். அந்த இடத்துக்குப் பக்கத்து இடம் பாரதிராஜாவுடையது. இருவரும் இணைந்துதான் அந்த இடத்தை வாங்கினார்கள். மேலும் இந்த இடம் ஒண்ணே முக்கால் ஏக்கர்தான். ஆனால் இன்றைய மதிப்பு பல ஆயிரம் கோடி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Alaigal oyvathillai

    Alaigal oyvathillai

    அக்கா தங்கைகளாக சினிமாவில் வலம் வந்து வெற்றிக்கொடி நாட்டியவர்கள் அம்பிகாவும், ராதாவும். இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அழகில் சளைத்தவர்கள் அல்ல. இவர்கள் 80களில் படத்தில் நடித்தாலே போதும். படம் வெற்றி தான். இவர்கள் இணைந்து நடிக்காத முன்னணி நடிகர்களே கிடையாது என்று சொல்லலாம்.

    அந்தவகையில் பாரதிராஜா தான் ராதாவை அறிமுகப்படுத்தினார். அலைகள் ஓய்வதில்லை என்ற தனது முதல் படத்திலேயே ராதா முத்தாய்ப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • எம்ஜிஆரை ஜெய்சங்கர் எப்படி கூப்பிடுவாருன்னு தெரியுமா? இதுதான் காரணமா இருக்குமோ?!

    மக்கள் திலகம், புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல், ஏழைகளின் இதயக்கனின்னு போற்ப்பபடுபவர் எம்ஜிஆர். தனது கருத்துகள் ஒவ்வொன்றும் திரைப்படங்களில் நல்ல பயனுள்ள தத்தவங்களாக இருக்க வேண்டும் என்பதில் எம்ஜிஆர் நோக்கமாகக் கொண்டு இருப்பார். உதாரணத்துக்கு அவருடைய படங்களை இப்போது பார்த்தாலும் உங்களுக்குத் தெரியும்.

    அவர் பேசும்போது தத்துவங்கள் இயல்பாக வந்து கொட்டும். அது நமக்கு கொஞ்சமும் சலிப்பாகவும் இருக்காது. சிலர் பேசும்போது அடிக்கடி கருத்துகளைச் சொன்னால் அவர்களை நக்கலாகக் ‘கருத்து கந்தசாமி’ன்னு சொல்வதுண்டு. ஆனால் எம்ஜிஆரை யாரும் அப்படி அழைக்க மாட்டார்கள்.

    அவரது படங்களில் பாட்டு பைட் சூப்பராக இருக்கும். அது தவிர எம்ஜிஆருக்கு காமெடி சென்ஸ்சும் அதிகமாக இருக்கும். நாகேஷூடன் இவர் சேர்ந்து நடிக்கும் காட்சி என்றால் அது பிரமாதமாக இருக்கும்.

    mgr

    mgr

    இவருடைய சிரிப்பும், நடனமும், பேசும் ஸ்டைலும், சண்டையிடும் வேகமும் பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தும். அதனால் தான் அன்று முதல் இன்று வரை எம்ஜிஆர் படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் அவ்வளவு மவுசு உள்ளது.

    அந்த வகையில் ஜெய்சங்கரும் எம்ஜிஆர், சிவாஜி காலகட்டத்தில் தனக்கென தனி பாதையை அமைத்துக் கொண்டு வளர்ந்து வந்த நடிகர் தான். இவரை தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்டு என்றே ரசிகர்கள் அழைத்தனர். துப்பறியும் பாணி கதை அம்சம் கொண்ட படங்கள் அவ்வளவு விறுவிறுப்பாக இருக்கும்.

    ஹாலிவுட் நடிகர்களில் ஜேம்ஸ்பாண்டு வேடம் ஏற்று பலரும் நடிப்பார்கள். அவர்களுக்கு இணையாக நடித்து அசர வைப்பார். அவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆரை எப்படி அழைப்பார்னு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் வாசகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ‘சார்’னு மரியாதையுடன் அழைப்பார் என்கிறார் சித்ரா லட்சுமணன்.

    enga veeru pillai

    enga veeru pillai

    எம்ஜிஆரை பெரும்பாலான ரசிகர்கள் ‘வாத்தியார்’னு அன்போடு அழைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாத்தியார் என்றால் பாடம் நடத்துபவர் என்று பொருள். மாணவர்களுக்குப் பாடம் நடத்துபவர் ஆசிரியர். இவரையும் ஆங்கிலத்தில் டீச்சர், சார்னு சொல்வாங்க. மக்களுக்குப் பாடம் நடத்துபவர் எம்ஜிஆர். அப்படின்னா ஜெய்சங்கர் சொன்னது சரிதானே.