Tag: MGR

  • இப்படி வாரி வாரி வழங்குறீங்களே… உங்களுக்குன்னு வேணாமா? நிருபரின் கேள்விக்கு எம்ஜிஆரின் ‘நச்’ பதில்!

    புரட்சித்தலைவர், பொன்மனச் செல்வர் என்றால் நமக்கு சட்டென்று நினைவுக்கு வருபவர் எம்ஜிஆர். இவரை எட்டாவது கொடை வள்ளல் என்றும் சொல்லலாம். அந்த அளவுக்கு ஏழைகளுக்கு வாரி வாரி வழங்குவார். அவரைப் பின்பற்றி வந்தவர்தான் கருப்பு எம்ஜிஆர் என்றழைக்கப்படும் விஜயகாந்த். இருவரும் இப்போது நம்மிடையே இல்லை என்றாலும் இவர்களது அருஞ்செயல்கள் அவர்களை இன்றும் நம்மிடையே நினைவுபடுத்தி வருகின்றன. அந்த வகையில் எம்ஜிஆர் குறித்து ஒரு சுவாரசியமான சம்பவத்தைப் பார்ப்போம்.

    ‘உங்களுக்குன்னு சொத்துக்களைச் சேர்த்து வச்சிருக்குணும்னு எண்ணம் இல்லாமல் இப்படி வாரி வாரி வழங்கிக்கிட்டே இருக்கீங்களே. அதுக்கு என்ன காரணம்?’னு எம்ஜிஆரைப் பார்த்துக் கேட்கிறார் ஒரு நிருபர். அதற்கு எம்ஜிஆர் சொன்ன பதில் இதுதான். சொத்துக்கள் கடைசி வரை நம்மிடம் இருக்கும்னு நினைக்கிறது தப்புங்கறதுதான் என் கருத்து.

    என்னை முதன் முதலா ஹீரோவாக நடிக்க வைத்தவர் ஜூபிடர் சோமு. ஒரு காலத்தில் இந்த ஸ்டுடியோ அவருக்கு சொந்தமாக இருந்தது. அவர் எதிரில் வந்து நிக்கவே பயப்படுவோம். இப்போ அதே ஸ்டுடியோவுக்கு பங்குதாரரா இருக்கேன். என்னை விட அனுபவத்திலும் ஆற்றலிலும் பன்மடங்கு உயர்ந்தவர்.

    அவருக்கே அப்படி ஒரு நிலைமை வந்ததுன்னா நான் மட்டும் எத்தனை நாள் இந்த ஸ்டுடியோவுக்கு முதலாளியா இருக்க முடியும்? எனக்கு இது புரியுது. ஆனா சிலர் சட்டத்தின் பாதுகாப்பு நமக்கு இருக்குன்னு சொத்தையும், பணத்தையும் சேர்த்து வச்சிக்கிறாங்க. நம்ம பாதுகாப்பில் இல்லாதது. சட்டத்தின் பாதுகாப்பில் நாம எத்தனை நாள் வாழ முடியும்?

    அது மட்டுமா? இந்த செல்வம் எல்லாம் யார் தந்தது? மக்கள் தந்தது தானே? அவர்கள் தந்ததில் இருந்து தான் நான் தருகிறேன். தேவைக்கு மேல் பணத்தை சேர்த்து வைப்பதில் ஏற்படற மகிழ்ச்சியை விட பயனுள்ள வகையில் மற்றவர்களுக்கு உதவும்போது அடையற மகிழ்ச்சியையே நான் பெரிசா நினைக்கிறேன்னு சொன்னார் எம்ஜிஆர்.

  • எம்ஜிஆருக்கு முன்பணம் கொடுக்க முடியாமல் திணறிய சந்திரபாபு… உதவி செய்தது அவரா?

    பிரபல நகைச்சுவை நடிகரான சந்திரபாபு புரட்சித்தலைவர் எம்ஜிஆரை வைத்து எடுத்த படம் மாடி வீட்டு ஏழை. அந்தப் படம் தொடர்ச்சியாக போகாமல் இடையில் நின்று போனது. அதற்குக் காரணம் எம்ஜிஆருக்கு சம்பளம் கொடுக்க சந்திரபாபுவிடம் பணம் இல்லை. குறைந்தபட்சம் எம்ஜிஆருக்கு 25 ஆயிரம் ரூபாயாவது முன்பணம் கொடுக்கணும். ஆனால் அவரிடம் பணம் இல்லை.

    இதனால் தோழி சாவித்திரியிடம் கேட்க அவரும் உதவும் மனப்பான்மை கொண்டவராக இருந்ததால் உடனடியாக 25 ஆயிரம் ரூபாயை சந்திரபாபுவிடம் கொடுத்து விட்டார். இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிற உங்களுக்கும் முன்பணம் கொடுக்கணும்னு தான் நினைக்கிறேன்.

    ஆனால் அதை எங்கே இருந்து கொடுப்பது? நானே உங்ககிட்ட வாங்கித்தான் எம்ஜிஆருக்குக் கொடுக்கிறேன் என்று சொன்னார் சந்திரபாபு. அப்போது சாவித்திரியும் நான் உங்ககிட்ட முன்பணம் கேட்டேனா? நீங்க படப்பிடிப்பை ஆரம்பிங்க. உங்களுக்கு எப்போ கொடுக்க முடியுமோ அப்போ கொடுங்க. எந்த அவசரமும் இல்லைன்னு அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

    சாவித்திரியைப் பொருத்தவரை வெளியுலகில் மட்டும் இல்லாமல் திரை உலகைச் சார்ந்த தனது நண்பர்களுக்கும் எந்தளவு உறுதுணையாக இருந்தார் என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் அறியலாம். அந்தளவு பெருந்தன்மையோடு சாவித்திரி உதவியும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கவில்லை என்பதும் உண்மை. அந்தப் படத்தினால சந்திரபாபு மிகப்பெரிய நட்டத்தை சந்திக்க நேர்ந்தது என்பதும் சோகமான விஷயம். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

    சந்திரபாபு தயாரிக்க நினைத்த மாடிவீட்டு ஏழை படத்திற்கு எம்ஜிஆரால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. காலதாமதம் ஆனது. அதனால் படம் கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது இயக்குனராக அறிமுகமாக இருந்த சந்திரபாபுவுக்கு பெரிய நஷ்டம். படத்துக்கு சந்திரபாபு கணிசமாக முதலீடு செய்தார்.

    இருந்தும் சில நிதி நெருக்கடிகள் படத்தை நகர விடாமல் செய்தன. கடைசியாக எம்ஜிஆர் நடிக்க முடியாமல் போனது. தொடர்ந்து அதே பெயரில் 1981ல் படம் வெளியானது. இதை பூம்புகார் பிக்சர்ஸ் தயாரித்தது. கதை எழுதியவர் மு.கருணாநிதி. அமிர்தம் இயக்கிய அந்தப் படத்தில் சிவாஜி, ஸ்ரீபிரியா, சுஜாதா உள்பட பலர் நடித்தனர்.

  • Flash back: கவிஞர் சொன்னதைக் கேட்டு கடும் கோபம் கொண்ட எம்ஜிஆர்… காட்சியை மாற்றச் சொன்னா ஆளையா மாற்றுவாரு?

    மலைக்கள்ளன் படத்தில் எம்ஜிஆர் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்று குதிரையில் அமர்ந்தபடி பாட்டுப் பாடிக்கொண்டே வருவார். இந்தப் பாடலை எழுதியவர் தஞ்சை ராமையாதாஸ். வாங்க மச்சான் வாங்க, மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ ஆகிய ஹிட் பாடல்களைக் கொடுத்தவர். இன்றும் திருமண வீட்டில் ஒலிக்கும் புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே பாடலையும் எழுதியவர் இவர்தான்.

    இவர் பாடலாசிரியர் மட்டும் அல்ல. கதாசிரியரும் கூட. சினிமாவில் மட்டும் அல்ல. பல நாடகக்குழுக்களுக்கும் நாடகங்கள் எழுதிக் கொடுத்துள்ளார். அந்த சமயம் தஞ்சை ராமையதாஸிடம் இயக்குனர் டி.ஆர்.ராமண்ணா எம்ஜிஆரை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறேன். உங்களிடம் கதை இருக்கிறதா என கேட்டுள்ளார்.

    பகடை பன்னிரெண்டு என ஒரு கதையை நாடகத்திற்காக எழுதி இருந்தார். அப்போது திரைப்படத்திற்காக அந்தக் கதையைக் கொஞ்சம் மாற்றி எழுத அதுவே குலேபகாவலி என்ற படமானது. அப்போது ஏற்பட்ட நட்பில் எம்ஜிஆரை வைத்து லலிதாங்கி என்ற படத்தைத் தயாரித்தார். 1935ல் வெளியான லலிதாங்கி படத்தின் ரீமேக்தான் இது.

    10ஆயிரம் அடி வரை வளர்ந்த இந்தப் படத்தில் திடீரென சிக்கல் ஏற்பட்டது. ஒரு காட்சியில் கடவுளை துதி பாடும் வகையில் எம்ஜிஆர் பாடல் ஒன்று இருந்தது. அப்போதுதான் எம்ஜிஆர் திமுகவில் இணைந்து இருந்தார். அதனால் ‘கட்சிக் கொள்கைக்கு எதிராக நான் கடவுளை துதிபாடும் வகையில் நடிக்க மாட்டேன்’ என்றார். ‘நீங்கள் காட்சியையும், பாடலையும் மாற்றுங்கள்’ என்றார்.

    ஆனால் இதற்கு தஞ்சை ராமையாதாஸ் சம்மதிக்கவில்லை. அதற்குப் பதிலாக ஹீரோ எம்ஜிஆரையே

    படத்தில் இருந்து தூக்கிவிட்டார். அவருக்குப் பதிலாக சிவாஜியை வைத்து ராணி லலிதாங்கி என்ற பெயரில் படமாக்கினார். அது 1957ல் வெளியானது. இதே போல அறிவாளி என்ற படத்தில் முதலில் எம்ஜிஆர் நடிக்க வேண்டியது. ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதற்குப் பதிலாக சிவாஜி நடிப்பில் வெளியானது.

  • எம்ஜிஆர், விஜயகாந்த் செஞ்சது எல்லாம் தெரியலையா? விஜய் இனியாவது கவனிப்பாரா?

    விஜய் தவெக கட்சி தொடங்கியதுல இருந்து எப்பவாவது தான் அரசியல் கருத்துகளைப் பேசுகிறார். அதுவும் ஆளும் கட்சியையே எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதுகுறித்து பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் என்ன சொல்றாருன்னு தெரியுமா?

    விஜய்க்கு எப்போ அரசியல் கட்சியை ஆரம்பிச்சி ஆட்சியைப் பிடிக்கணும்கற எண்ணம் வந்துட்டோ அப்பவே அவரு படங்கள்ல மெல்ல மெல்ல அரசியல புகுத்துறதுதான் சரி. விஜயகாந்த் கூட அவரோட படங்கள்ல அவரு கட்சிக் கொடியைக் கொண்டு வருவாரு. மோதிரத்துல கூட தேமுதிக இருக்கும். பாரதிராஜா தலைமையில நெய்வேலி அனல் மின்நிலையத்துல பெரிய போராட்டத்துக்குப் போனோம்.

    காவிரி கர்நாடகப் பிரச்சனையில் இங்க இருக்குற மின்சாரத்தை அங்கே கொடுக்கக்கூடாதுங்கறதுக்காக ஒரு மனுவா கொடுக்கலாம்னு போனோம். அப்போ கட்சிக்கொடியை யாருமே பயன்படுத்தக்கூடாது. நடிகர் சங்கமாக அதாவது கலையுலகைச் சார்ந்தவர்களாக நாம போவோம்னு தான் முடிவு பண்ணினாங்க.

    வெவ்வேறு கட்சியைச் சேர்ந்தவங்க வர்றதனால இப்படித்தான் போகணும்னு தீர்மானமே போட்டாங்க. கரெக்டா ஊர்வலம் ஆரம்பிச்சி வண்டலூர் தாண்டறதுக்குள்ள தேமுதிகவினர் கட்சிக்கொடியோட வந்து கலந்துக்கிட்டாங்க. அப்போ அவரு எவ்ளோ தெளிவா இருந்துருக்காரு. நம்ம கட்சி எல்லா இடங்களிலும் வரணும்னு நினைச்சிருக்காரு.

    அந்த மாதிரி தான் விஜயும் ஒவ்வொரு முறையும் தன் கட்சித் தொடர்பான விஷயங்களைச் சொல்லிக்கிட்டே இருக்கணும். அல்லது மக்களுக்காகப் பிறந்தவன் தான் நான். மக்களைக் காப்பாத்த வந்தவன் நான் அப்படிங்கறதை சொல்லிக்கிட்டே இருக்கணும். இதுதான் ஃபார்முலா. எம்ஜிஆர் ஜெயிச்சதுக்கும் அதுதான் காரணம். அதை ஏன் விட்டாருன்னு தான் கேட்க வேண்டியிருக்கு.

    ஜனநாயகன்ல ஏதோ கொஞ்சம் பேசுனாருன்னா அது அரசியலாகத்தான் இருக்கும். முதல் கர்ஜனை என்பது அரசியல் மாநாடு தொடங்கும்போதே பேச ஆரம்பிச்சிட்டாரு. விஜய் அன்றாடம் அரசியல் கருத்துகளைச் சொல்லணும். எல்லா விஷயங்களுக்கும் கருத்து சொல்லணும். கருத்துகளை உடனுக்குடன் சொல்லணும். முருகர் மாநாடு தொடர்பாக விஜய் பேசல. அமீர் கூட கோயிலுக்குள்ள அரசியலைக் கொண்டு வராதீங்கன்னு சொல்றாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • ஜெய்சங்கருக்குக் கிடைக்க வேண்டிய 2 அருமையான வாய்ப்பு… ஆனால் தட்டிப் பறித்ததோ எம்ஜிஆர், ஜெமினி!

    ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் 2 மிக முக்கியமான படங்களைத் தவறவிட்டவர் ஜெய்சங்கர். இவ்வளவுக்கும் ஏவிஎம்மின் பிள்ளைகளான சரவணன், குமரன், பாலசுப்பிரமணியம் அனைவருடனும் நெருங்கிய நட்பு கொண்டவர் மக்கள் திலகம் ஜெய்சங்கர். எம்ஜிஆர் நடித்த அன்பே வா கலரில் உருவானது.

    அந்தப் படத்தில் முதலில் ஜெய்சங்கர் நடிப்பதாக இருந்தது. அவரைத் தான் ஹீரோவாகப் போடணும்னு ஏவிஎம். நினைத்தார். இதற்கிடையில் எம்ஜிஆரின் கால்ஷீட் உடனடியாகக் கிடைக்கவே அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு எம்ஜிஆரை நடிக்க வைத்தார்கள்.

    அதே போல ஜெய்சங்கர் தவற விட்ட இன்னொரு முக்கியமான படம் ராமு. ஜெய்சங்கர் கதாநாயகனாக நடித்த குழந்தையும், தெய்வமும் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனால் தனது அடுத்த படத்திலும் ஜெய்சங்கரையே ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டும் என ஏவிஎம் நினைத்தனர்.

    இந்த நிலையில்தான் ராமு என்ற ஒரு படத்தை ஏவிஎம் எடுக்கப்போவதை ஜெமினிகணேசன் அறிந்தார். உடனே அவர் மெய்யப்பச் செட்டியாரைத் தொடர்பு கொண்டு அந்தப் படத்தில் எப்படியாவது எனக்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    அப்போது நீ வாங்கற சம்பளம் அதிகம். நான் இந்தப் படத்தை சின்ன பட்ஜெட்ல எடுக்கலாம்னு நினைக்கிறேன்னு ஏவிஎம். சொன்னாராம். அதற்கு ஜெமினி நீங்க என்ன சம்பளம் கொடுக்குறீங்களோ கொடுங்க. ஆனா நான் தான் இந்தப் படத்தில ஹீரோவா நடிப்பேன்னு சொன்னாராம் ஜெமினி.

    ஜெமினி ஏற்கனவே களத்தூர் கண்ணம்மா படத்தில் நடித்து ஹிட் கொடுத்தவர். அதனால் அவரது பேச்சைத் தட்ட முடியாத ஏவிஎம். தன்னுடைய மகன்களிடம் அந்தப் படத்தில் ஜெய்சங்கருக்குப் பதிலாக ஜெமினிகணேசனை ஒப்பந்தம் செய்யலாம்னு சொன்னார்.

    அப்பாவின் பேச்சைத் தட்ட முடியாத சரவணன், குமரனுக்கோ ஜெய்சங்கரை மாற்ற துளி கூட விருப்பமில்லை. என்றாலும் அப்பா சொன்னதை தட்டாமல் இருவரும் ஏற்றனர். அதனால்தான் ராமு என்கிற மிகப்பெரிய வெற்றிப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு ஜெமினிகணேசனுக்கு அமைந்தது. ஜெய்சங்கருக்கு அது மிஸ் ஆனது.

  • போதையைக் கையாண்ட டைரக்ஷன் டீம்.. ரஜினி விட்ட டோஸ்ல என்ன ஆனாங்கன்னு பாருங்க!

    நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா பற்றிய பேச்சுதான் வலைதளங்கள் எங்கும் அடிபடுகிறது. போதைப்பொருள் தான் எல்லாத்துக்கும் காரணம். இது ஒரு புறம் இருக்க சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே ஒரு காலத்தில் சிகரெட், மதுப்பழக்கத்துக்கு அடிமையாகத் தான் இருந்துள்ளார். அதன்பிறகு அவர் எப்படியோ அந்தப் பழக்கங்களில் இருந்து மீண்டுவிட்டார்.

    அப்போது அவர் சொன்னது இதுதான். பின்விளைவுகள் தெரியாம நான் பயன்படுத்தியதால் இன்னைக்கு எமன் வாயில் இருந்து மீண்டு வந்து உங்க முன்னாடி நிக்கிறேன். தயவு செய்து யாரும் இதுமாதிரி போதைப் பொருள்களைப் பயன்படுத்தாதீங்க. ரஜினி எல்லாத்தையும் அனுபவிச்சிட்டு சொல்றாருன்னு சொல்வாங்க. என் என் இடத்துல மற்றவங்க யாராவது இருந்தா காணாமப் போயிருப்பாங்க. உங்களுடைய பிரார்த்தனைதான் நான் இப்பவும் சினிமாவில் நிற்கக் காரணம் என்கிறார் ரஜினி.

    ஒரு படப்பிடிப்பின்போது ரஜினி உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். ஒரு வாடை வந்து கொண்டே இருந்ததாம். மேக்கப்மேனையும், அசிஸ்டண்டையும் கூப்பிட்டு ரஜினி யாராவது ஏதாவது பிடிக்கிறாங்களான்னு கேட்டுருக்காங்க. அப்புறம் அது டைரக்ஷன் டீம்ல இருந்து வந்ததாம். ரஜினியே நேரடியா கூப்பிட்டு ‘நான் செட்ல இருக்குற வரைக்கும் யாராவது அடிச்சீங்கன்னா தொலைச்சிடுவேன்.

    தூர ஓடிப்போயிடுங்க’ன்னு எச்சரித்தாராம். அந்த டீம் வெட்கப்பட்டு கூனிக்குறுகி அதை நிறுத்தினாங்களாம். இதே மாதிரி 25 வருஷத்துக்கு முன்னாடின்னா ரஜினி சொல்லிருக்க மாட்டாராம். பட்டு அனுபவிச்சி வந்ததாலதான் சொன்னாராம். எம்ஜிஆரு ஒரு படத்துல மதுவைத் தொட்டுருவாரு. ‘தைரியமாகச் சொல்லி மனிதன் தானா’ன்னு ஒரு பாட்டு வரும். தொட்டதுக்காக அழுவார்.

    இதெல்லாம் திருந்திருவாங்கன்னு தான் படத்தில் அப்படி எடுத்தாங்களாம். சுருளிராஜன் குடிச்சி குடிச்சி 42 வயசுல இறந்து போனார். மிகச்சிறந்த நடிகர். அப்பேர்ப்பட்ட அவர் இறந்ததுக்குக் காரணம் இந்தக் குடிப்பழக்கம்தான். இன்னைக்கு ஸ்ரீகாந்த், கிருஷ்ணா போ..தைப்பொருளைப் பயன்படுத்திருக்காங்க.

    அதையும்தாண்டி எவ்வளவு சமூகப்பொறுப்புகள் இருக்கு? பெரிய பெரிய இயக்குனர்கள் எல்லாம் இப்படிப் போதையை வைத்து படம் எடுக்கலாமா? விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி மாதிரி ஒரு பையன் பபிள்கம்மை வாயில திணித்து வச்சிருக்கான். இன்னொரு நடிகர் மாதிரி ஒருவன் கையில குளுக்கோஸ் பவுடரைக் கொட்டி முகர்ந்து பார்த்துள்ளான்.

    ரொம்ப ட்ரீட்மெண்ட் கொடுத்த பிறகுதான் அவனைக் காப்பாத்துனாங்களாம். சமூக பொறுப்புள்ள இயக்குனர்கள் என்றால் இப்படி எல்லாம் படம் எடுப்பாங்களா? மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

  • Flash BacK: எம்ஜிஆரை மயக்க நினைத்த வயாகரா நடிகை… தலைவரிடம் இந்த ஆட்டம் எல்லாம் பலிக்குமா?

    பல போராட்டங்களுக்குப் பிறகுதான் எம்ஜிஆர் கதாநாயகன் ஆனார். ஒரு படம் வெற்றின்னா 2 படம் தோல்வி. அப்படித்தான் அவருக்கு சினிமா உலகம் இருந்தது. மலைக்கள்ளன் படம் அப்போதுதான் வந்தது. நட்சத்திர அந்தஸ்தைக் கொடுத்தது. அப்போது இயக்குனர் டிஆர்.ராமண்ணா எம்ஜிஆரை வைத்து ஒரு படத்தை உருவாக்க முடிவு செய்தார்.

    அவர் எம்ஜிஆர், சிவாஜி என இருவரையும் இணைத்து கூண்டுக்கிளி என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்தின் தோல்வி அடுத்தடுத்து இவர்களை இணையவிடாமல் செய்தது. இருதரப்பு ரசிகர்களுக்கும் இடையே மோதல் உருவானது. அதனால் இருவரும் இனி சேர்ந்து நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தனர்.

    டி.ஆர்.ராமண்ணாவுக்கு எம்ஜிஆரை வைத்து எப்படியாவது ஒரு வெற்றியைக் கொடுக்க வேண்டும் என நினைத்தார். அதனால் குலேபகாவலி என்ற படத்தை இயக்கினார். 1001 அற்புத இரவுகள் என்ற கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம். அன்றைய வாலிப வயாகரா, கனவுக்கன்னி டி.ஆர்.ராஜகுமாரி இயக்குனரின் சகோதரிதான்.

    இவர்கள் இருவரும் இணைந்து குலேபகாவலி கதையை சினிமாக்க முடிவு செய்தனர். அந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் டி.ஆர்.ராஜகுமாரி நடிப்பது உறுதியானது.

    படத்தின் கதைப்படி குலேபகாவலி நாட்டில் அல்லி தர்பார் நடத்தும் 3 இளம்பெண்களிடம் எம்ஜிஆரின் சகோதரர்கள் கொத்தடிமைகள் ஆக்கப்படுகின்றனர். எம்ஜிஆர் தனது புத்திசாலித்தனத்தால் அவர்களை மீட்டு பகாவலி மலரை எடுத்து வந்து தன் தந்தையின் கண்களுக்குப் பார்வை கிடைக்கச் செய்கிறார். இதுதான் குலேபகாவலியின் கதை.

    படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்தது. படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனரும் டி.ஆர்.ராமண்ணாவுக்கு குலேபகாவலி மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. ஆள்மயக்கி கதாபாத்திரத்தில் டி.ஆர்.ராஜகுமாரி கனகச்சிதமாக நடித்திருந்தார்.

    இவரோடு ராஜசுலோச்சனா, ஜி.வரலட்சுமி, ஈ.வி.சரோஜா என அல்லிராணிகள் ஆட்டம் போட்டனர். பாடல்கள் எல்லாமே சூப்பர். மயக்கும் மாலை பொழுதே நீ வா வா என்ற பாடல் கூண்டுக்கிளிக்காக எழுதப்பட்டது. கேவி.மகாதேவன் இசையில் விந்தன் எழுதிய பாடல். இது அந்தப் படத்தில் பயன்படுத்தப்படவில்லை. அதற்குப் பதிலாக குலேபகாவலியில் பயன்படுத்தப்பட்டது.

    இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் எம்எஸ்வி., பாடலை எழுதியவர் தஞ்சை ராமையா தாஸ். இந்தப் படத்தில் நிஜப்புலியுடன் எம்ஜிஆர் மோதுகிறேன் என சொன்னார். கட்டிப்புரண்டு சண்டை போட்டார். நிஜப்புலி கட்டளைக்குக் கீழ் படிய மறுத்தது. ஆனாலும் வெற்றி வேண்டுமானால் நிஜப்புலியுடன் சண்டை போட்டே ஆக வேண்டும் என உறுதியாக இருந்து நிஜப்புலியுடன் சண்டை போட்டாராம்.

  • தேவர் சொல்லி மறுப்பே சொல்லாத எம்ஜிஆர்… காரணம் அதுதானாம்!

    இன்னைக்கு சினிமாவுல நன்றி மறத்தல் வந்து ரொம்ப சர்வசாதாரண விஷயம். சாப்பிட்ட அந்த ஈரக்கை காயறதுக்குள்ள நன்றியை மறந்துடுவாங்கன்னு சொல்வாங்க. ஆனா நன்றி மறக்காமல் இருந்ததுக்கான சம்பவங்கள் நிறைய இருக்கு.

    ஒருமுறை ஜெமினி ஸ்டூடியோவுல ஜூனியர் ஆர்டிஸ்டுக்கான செலக்ஷன் நடக்குது. அப்போ எம்ஜிஆர் ராமச்சந்திரனா இருந்த நேரம். அவரு அங்கே வாராரு. ‘நீ என்னய்யா கட்டையா இருக்கே. வெள்ளையா இருந்தா மட்டும் போதுமா?’ன்னு ரிஜெக்ட் பண்ணிடுறாங்க. அப்போ எம்ஜிஆர் மனம் உடைஞ்சிப் போயிடுறாரு.

    அப்போ அங்க பெருத்த உடலோடு பயில்வான் மாதிரி அங்கே வந்து ஒருத்தர் நிக்கிறாரு. ‘தம்பி பார்க்குறதுக்கு பிரமாதமா இருக்குறீங்க. எதிர்காலத்துல நீங்க பெரிய நடிகரா ஆகிடுவீங்க…’ அவரு மனசுக்கு உள்ளே இருந்து சொன்னாரா? உதட்டுல இருந்து சொன்னாரான்னு தெரியல. பொதுவாகவே அவரு கணிச்சிருக்காரு.

    அந்த வார்த்தை வந்து எம்ஜிஆருக்குப் பெரிய உற்சாகமா இருந்தது. அந்த உற்சாகத்தோடு வெளிப்பாடு தான் பிற்காலத்தில எம்ஜிஆர் பெரிய ஹீரோவா ஆகுறாரு. சொன்னவரு பெரிய தயாரிப்பாளரா ஆகுறாரு.

    அவருதான் சான்டோ சின்னப்பா தேவர். அவரோட தேவர் பிலிம்ஸ்ல தான் எம்ஜிஆர் நிறைய படங்கள் கொடுத்தாரு. தேவர் சொல்லி எம்ஜிஆரு மறுப்பே சொல்ல மாட்டாரு. காரணம் என்னன்னா அன்னைக்கு தேவர் சொன்ன அந்த ஒரு வார்த்தை. அந்த நன்றிக்கடன் தான். அது என்னைக்குமே மறக்காதவர் எம்ஜிஆர்.

    சாண்டோ சின்னப்பா தேவரின் தயாரிப்பில் 1956ம் ஆண்டு முதல் 1972 வரை 16 படங்களில் நடித்துள்ளார் எம்ஜிஆர். தேவர் பிலிம்ஸில் எம்ஜிஆர் நடித்த முதல் படம் தாய்க்குப் பின் தாரம். சூப்பர்ஹிட் ஆனது. தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன், குடும்பத்தலைவன், தர்மம் தலைகாக்கும், நீதிக்குப் பின் பாசம், வேட்டைக்காரன், தொழிலாளி, கன்னித்தாய், முகராசி, தனிப்பிறவி, தாய்க்குத்தலைமகன், விவசாயி, தேர்த்திருவிழா, காதல் வாகனம், நல்ல நேரம் ஆகியவை தேவர் பிலிம்ஸில் எம்ஜிஆர் நடித்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கவை.

  • எம்.ஜி.ஆரை சீண்டிய இயக்குனர்!.. காரை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்!. ஒரு பிளாஷ்பேக்!..

    எம்.ஜி.ஆருக்கு மிகவும் தீவிரமான ரசிகர்கள் இருந்தார்கள். அவரை வாழும் கடவுளாகவே பார்த்தார்கள். அதனால்தான் எம்.ஜி.ஆர் மூன்று முறை தொடர்ந்து தமிழகத்தின் முதல்வராக இருந்தார். எம்.ஜி.ஆர் சினிமாவில் எப்படியோ அப்படித்தான் நிஜவாழ்விலும் இருப்பார் என்றே அவர்கள் நம்பினார்கள். எம்.ஜி.ஆரும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடியே வாழ்ந்துவிட்டு போயிருக்கிறார்.

    கொடுத்து சிவந்த கரங்கள் என சொல்வது எம்.ஜி.ஆருக்கு மிகவும் பொருந்தும். தன்னால் முடிந்தவரை பல ஏழை மக்களுக்கு உதவினார். குறிப்பாக பல ஏழைகளின் வாழ்வாதாரம் உயர எம்.ஜி.ஆர் காரணமாக இருந்திருக்கிறார். அதனால்தான் அவரை மக்கள் வள்ளல் என்றே அழைத்தனர். எம்.ஜி.ஆருக்கு ஒன்றென்றால் அவரின் ரசிகர்கள் பொங்கிவிடுவார்கள்.

    எங்க வீட்டு பிள்ளை படத்தின் துவக்கத்தில் எம்.ஜி.ஆரை நம்பியார் சாட்டையால் அடிப்பது போல சில காட்சிகள் வரும். இதைப்பார்த்து கொதிப்படைந்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள் தியேட்டரிலிருந்து வெளியேறி நேராக நம்பியார் வீட்டுக்கு போய்விட்டனர். ‘நீ எப்படி எங்கள் தலைவரை சாட்டையால் அடிக்கலாம். வீட்டை விட்டு வெளியே வா’ என ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன்பின் நம்பியார் எம்.ஜி.ஆருக்கு போன் செய்து இதை சொல்ல எம்.ஜி.ஆர் அங்கு சென்று தனது ரசிகர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தார்.

    அதேபோல், ஒருமுறை நம்பியாரின் காரை மறித்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள் ‘எங்க தலைவனை நீ எப்படி அடிக்கலாம்?’ என சண்டை போட்ட சம்பமும் நடந்தது. அதாவது, திரையில் பார்க்கும் சண்டை காட்சிகளை உண்மை என்றே அவர்கள் நம்பினார்கள். எங்க வீட்டு பிள்ளை படத்தில் எம்.ஜி.ஆர் சாட்டையால் அடி வாங்கியதை பார்த்து சில நரிக்குறவர்கள் தங்களை சாட்டையால் அடித்துகொண்டனர். இப்படி நிறைய உதாரணம் இருக்கிறது.

    60களில் குடும்ப பாங்கான படங்களை இயக்கி பிரபலமாக இருந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஜெமினி கணேசன் நடித்து வெளியான பணமா பாசமா என்கிற படம் ஆசியாவிலேயே 2வது பெரிய தியேட்டரான மதுரை தங்கம் தியேட்டரில் 100 நாட்கள் ஓடி வசூலை அள்ளியது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ‘இந்த படம் வசூல் சக்ரவர்த்திகளின் படங்களின் வசூலை முறியடித்துவிட்டது’ என எம்.ஜி.ஆரை மறைமுகாக தாக்கி பேசினார்.

    பேசிவிட்டு வெளியே வந்து பார்த்தபோது அவரின் கார் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இதுபற்றி தங்கம் தியேட்டர் அதிபரிடம் முறையிட அவரோ ’மதுரையில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அதிகம். அவரின் பட போஸ்டரை பார்த்தாலே கையில் இருக்கும் பீடியை மறைத்துக்கொள்வார்கள். அந்த அளவுக்கு மரியாதை கொடுக்கும் ரசிகர்கள் எம்.,ஜி.ஆரை நீங்கள் தாக்கிப்பேசினால் சும்மா விடுவீர்களா?.. பத்திரமாக வீட்டுக்கு போங்க’ என என சொல்லி அனுப்பி வைத்தாராம்.

  • ரஜினி செய்த கேரக்டர்ல நீங்க நடிக்கணும்னா எதைத் தேர்ந்தெடுப்பீங்க? கமலின் நெத்தியடி பதில்

    கமல் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டர்களை ஏற்று நடிக்கக்கூடியவர். ஒரே படத்திலும் அசத்தலாக பல வேடங்களில் நடித்து வேரியஸ் வெரைட்டி காட்டுவதில் கில்லாடி.

    அந்த வகையில் ரஜினியும், கமலும் இணைபிரியா நண்பர்கள். இருவருக்கும் திரையுலகில் மட்டுமே ஆரோக்கியமான போட்டி. இருவரும் தனித்தனியாக படங்கள் வரும்போது பரஸ்பரம் ரசித்துப் பாராட்டிக் கொள்வார்கள். அந்த வகையில் ஆருயிர் நண்பர்கள் என்றே சொல்லலாம்.

    அப்படி இருக்க ரஜினி நடித்த எந்தக் கேரக்டர்ல நீங்க நடிக்க ஆசைப்படுறீங்கன்னு தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கமலிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் இதுதான்.

    எனக்கு ஒரு நல்ல சம்பவம் ஞாபகத்துக்கு வருது. நான் ஏன் பிறந்தேன் படத்துல மக்கள் திலகம் பண்ணிக்கிட்டு இருக்காரு. மேக மூட்டமா இருக்கு. மத்தவங்க எல்லாம் வேற ஒரு லொகேஷன் பார்க்கப் போயிருக்காங்க. சில திறமைகளை ஜோக் சொல்வாங்க. புலியூர் சரோஜா இருந்தாங்கன்னா அவங்க ஜோக் சொல்வாங்க. குலுங்கி குலுங்கி சிரிப்பாரு மக்கள் திலகம்.

    அவரு சிரிக்கிறதைப் பார்க்கணும்கறதுக்காக ஒண்ணு ஒண்ணா பண்ணிக் காட்டுவோம். ஆடத் தெரிஞ்சவங்க ஆடுவாங்க. பல்டி அடிக்கத் தெரிஞ்சவங்க பல்டி அடிப்பாங்க. அவரு வர்றதுக்கு முன்னாடி நான் ஏதோ அவரைப் பத்திக் கிண்டல் அடிச்சிட்டேன். போட்டுக் கொடுத்துட்டாங்க. நான் ஏன் பிறந்தேன் பாட்டு.

    அதை அப்படியே நடிகர் திலகம் மாதிரி மக்கள் திலகத்துக்குப் பண்ணிக் காட்டுனேன். தலையை சற்றே ஆட்டிவிட்டு விரலைக் காட்டி என்னை அழைத்தார். இதை நான் பண்ணினா நல்லாருக்குமான்னு கேட்டார்.

    அந்த அறிவுரை தான் இப்போ. அவங்க அவங்களுக்குன்னு ஒண்ணு இருக்கு. அதை அவங்க பண்ணினாதான் நல்லாருக்கும். நாங்க பண்ணும்போது ஒரு மிமிக்ரியா கூட இருக்கும். இன்னும் சிலர் கேலி பண்றதா கூட தப்பா நினைச்சிக்குவாங்க ரசிகர்கள். அவர் நினைக்க மாட்டாரு என்று பதிலடி கொடுத்து விட்டார் கமல்.