Author: adminram

  • Vijay: விஜய் என் காலில் விழுந்து அழுதார் – வெங்கட் பிரபு சொன்ன அந்த சம்பவம்

    தமிழ் சினிமாவில் வசூல் கிங் என்றால் தற்போதைக்கு விஜய் மட்டுமே. அவரது ஒவ்வொரு படமுமே வசூலில் ஒரு பெஞ்ச் மார்க் ஏற்படுத்தும். தற்போது அரசியல் கட்சி துவங்கி முழு அரசியல்வாதியாகவே மாறிவிட்டார். அவரது கடசி படமான ஜன நாயகனுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து கடந்த 2024ம் ஆண்டு வெளியான படம் கோட். கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை கொடுத்தது. அந்த படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவத்தை வெங்கட்பிரபு பகிர்ந்துள்ளார்.

    அவர் கூறியபோது, காந்தி கதாபாத்திரம் அவனுடைய பையனிடம் கை எடுத்து கும்பிட்டு என்னை மன்னிச்சிடுடா என்று சொல்கிற மாதிரிதான் நான் எழுதியிருந்தேன். ஆனால் விஜய் சார் தான் இல்லடா நான் என் பையன் காலில் விழுந்து அவன் காலை பிடித்து அழுது மன்னிப்பு கெட்கிறேன் என்று சொன்னார். கொஞ்ச நேரம் அந்த காட்சி பற்றி பேசிகொண்டிருந்தோம்.

    அப்போது விஜய் இரு இப்போ நடித்து காட்டுகிறேன் என்று கூறி அந்த ரோட்டுலயே என் காலில் விழுந்து அழுது காட்டினாரு. அந்த சீன் தவறாக போய்விடக்கூடாது என்று நான் நினைத்தேன். ஆனால் திரையரங்கில் அந்த காட்சியின் எமோஷன் நன்றாகவே ஒர்கவுட் ஆகியது என்று கூறினார்.

  • Ayyanar thunai: உங்களுக்கு அறிவு இருகா? சோழனிடம் கோபப்பட்ட நிலா – அய்யனார் துணை சீரியல் ப்ரமோ

    Ayyanar thunai: உங்களுக்கு அறிவு இருகா? சோழனிடம் கோபப்பட்ட நிலா – அய்யனார் துணை சீரியல் ப்ரமோ

    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் இன்று வெளீயான ப்ரமோ பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது. இன்றைய ப்ரமோவில்

    ராகவின் அலுவலகத்திற்கே நேராகச் சென்ற நிலாவிடம், ராகவ் உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறுகிறார். இதனை கேட்ட நிலா நீங்க இப்படி பேசக்கூடாது எனக்கு திருமணம் ஆகிவிட்டது, சோழன்தான் என் கணவர் என்று கூறுகிறார். இதனைகேட்ட ராகவ் உனக்கு கல்யாணம் ஆன கதை எல்லாம் தெரியும், உங்களுக்கு நடந்தது பொய் கல்யணம் ஊருக்கு தான் நீங்கள் கணவன் மனைவி என்று சோழன் கூறியதை சொல்கிறார் ராகவ்.

    இன்னொரு பக்கம், சேரன் ராகவிடம் தங்களது “பொய் கல்யாணம்” குறித்த ரகசியத்தைச் சொன்னதை அறிந்து நிலா அதிர்ச்சியடைகிறார். சேரனைப் பார்த்து “உங்களுக்கு அறிவு இருக்கா இல்லையா?” என நிலா சகட்டுமேனிக்குத் திட்டும் காட்சிகளுடன் இன்றைய ப்ரமோ முடிவடைகிறது.

  • M.R.Radha: எம்.ஆர்.ராதா நடித்த டாப் 10 படங்கள்…மறக்க முடியுமா ரத்த கண்ணீர்?

    நடிகவேள் என்று அழைக்கப்படும் எம்.ஆர்.ராதா தமிழ் சினிமாவின் ஒரு தனித்துவமான ஆளுமை கொண்டவர். அவரது கணீர் குரலும், பகுத்தறிவு கலந்த நக்கல் வசனங்களும் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றன. பல படங்களில் அவர் நடித்திருந்தாலும் என்றும் மறக்க முடியாத 10 படங்களை இங்கு காண்போம்.

    1. ரத்தக்கண்ணீர் (1954)

    1954ல் இந்த படம் வெளியானது. இப்படம் எம்.ஆர்.ராதாவின் திரைவாழ்க்கையில் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். மேலைநாட்டு மோகத்தில் தன் கலாச்சாரத்தை மறக்கும் ஒரு பணக்காரன், தன் மனைவியை விட்டுவிட்டு ஆட்டக்காரி பெண்ணுடன் வாழ்வார். திடீரென தொழுநோயால் பாதிக்கப்பட்டு பின் மனம் திருந்தி மரணம் அடைவார். இந்த படம் அவரது நடிப்பு மற்றும் வசனங்களால் இந்த தலைமுறை வரை ரசிக்கப்படுகிறது.

    1. பாகப்பிரிவினை (1959)

    1959ல் இப்படம் வெளியானது. சிவாஜி கணேசனுடன் இணைந்து இவர் நடித்த படம். வில்லன் வேடத்தில் அற்புதமாக நடித்திருப்பார். அதாவது ஒரு சுயநலமிக்க கதாபாத்திரத்தில் நடித்து, குடும்ப உறவுகளுக்குள் விரிசல் உண்டாக்கும் ஒரு மனிதனாக நடித்திருப்பார்.

    1. பாவமன்னிப்பு (1961)

    1961ல் இப்படம் வெளியானது. சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகியோருடன் இணைந்து எம்.ஆர்.ராதா நடித்த படம் இது. இதில் மதவாதத்தைக் கிண்டல் செய்யும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து, சமூகச் சிந்தனையுள்ள வசனங்களை ஆங்காங்கே பேசி அசத்தியிருப்பார்.

    1. பலே பாண்டியா (1962)

    1962ல் வெளியான இப்படத்தில் சிவாஜி கணேசன் மூன்று வேடங்களில் நடித்திருக்கும் இந்த் அபடத்தில் எம்.ஆர்.ராதா வில்லன் வேடத்தில் நடித்திருப்பர். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியான இப்படம் நல்ல வெற்றியை பெற்றது.

    1. ஆலயமணி (1962)

    சிவாஜி ஹீரோவாக நடித்த இந்த படத்தில் தனுஷ்கோடி என்ற கதாபாத்திரத்தில் மனிதர் வாழ்ந்திருப்பார். சிவாஜியுடன் இவரது போட்டி மிகுந்த காட்சிகள் இதில் மிகச் சிறப்பாக இருக்கும்.

    1. பார்த்தால் மட்டும் போதுமா (1962)
      இந்த படத்திலும் வில்லன் வேடத்தில் நடித்திருப்பார். அதாவது இரண்டு குடும்பங்களுக்கிடையே பகையை உண்டு பண்ணும் வேடம். நகைச்சுவையும் வில்லத்தனமும் கலந்த இவரது பாணி இப்படத்திற்குப் பெரிய பலம்.
    2. கற்பகம் (1963)

    ஜெமினி கணேசன் நடித்த இப்படத்தில், எம்.ஆர்.ராதா ஒரு பிடிவாத குணம் கொண்ட முதியவராக (தாண்டவம்) நடித்திருப்பார். கிராமத்து பெரிய மனிதராக இவரது நடிப்பு மிகவும் யதார்த்தமாக இருந்தது.

    1. புதிய பறவை (1964)

    சிவாஜி கணேசன் நடித்த ஒரு க்ளாசிக் த்ரில்லர் படம் இது. இதில் ஒரு மர்மமான மனிதனாக வந்து கதையின் திருப்புமுனைக்கு மிக முக்கிய காரணமாகத் தனது நடிப்பை வழங்கியிருப்பார்.

    1. சித்தி (1966)

    குடும்ப உறவுகளுக்குள் நடக்கும் போராட்டங்களைச் சொல்லும் இப்படம், எம்.ஆர்.ராதாவின் குணச்சித்திர நடிப்புக்கு ஒரு சான்றாகும்.

    1. தசாவதாரம் (1976)

    பழைய தசாவதாரம் படத்தில் இவர் கம்சன், இரணியன் போன்ற பல புராண கால வில்லன் வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார். பக்திப் படங்களில் கூடத் தனது நக்கல் பாணியைத் தொடர்ந்தவர் இவர்.

  • Leader Title Glimpse: எப்படியிருகிறது லீடர் டைட்டில் க்ளிம்பஸ் ?

    லெஜெண்ட் சரவணா நடிப்பில் அடுத்த் வெளியாக உள்ள லீடர் டைட்டில் க்ளிம்பஸ் இன்று வெளியானது.

    தொழிலதிபரான லெஜ்ண்ட் சரவணன் அவ்வப்போது தனது கடை விளம்பரத்தில் நடித்து வந்தார். திடீரென தி லெஜெண்ட் படம் மூலம் சினிமாவில் நுழைந்தார். அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட அந்த படம் சரியாக போகவில்லை. அதுமட்டுமல்லாமல் சோசியல் மீடியாவில் அவரை ட்ரோல் செய்து வந்தனர்.

    ஆனாலும் மனம் தலராத அவர் இரண்டாவது படத்திற்காக தன்னை தயார் செய்துவந்தார். காக்கிசட்டை, கொடி ,கருடன் என வெற்றிபடங்களை தந்த துரை செந்தில்குமார் இயக்கத்தில் லீடர் படத்தில் நடித்து முடித்தார். இந்த படத்திற்காக தனது தோற்றத்தை மாற்றினார். படம் தொடர்பான அவரது ஸ்டில்ஸ்கள் வெளியான போதே படம் குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டது. லீடர் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

    இந்த நிலையில் லீடர் படத்தின் டீசர் வெளியானது. அதில் சரவணன் அதிரடியாக சண்டையில் கலக்கியுள்ளார். தன்னை ஒரு மாஸ் ஹிரோவாக மாற்றியுள்ளார் என்பது நன்றாகவே தெரிகிறது. முதல் படத்தின்போது வெளியான எதிர்மறை கருத்துக்களுக்கு இப்படம் மூலம் பதிலளித்துள்ளார். இந்த டீசரை பார்த்த ரசிகர்கள் லெஜெண்ட் அண்ணாச்சி வேற லெவலில் கலக்கியிருக்கிறார் என பதிவிட்டு வருகின்றனர்.

    அப்பாவுக்கும் மகளுக்கும் இருக்கும் பாசத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருப்பதாக டீசரை பார்க்கையில் தெரிகிறது.

  • மெகா கூட்டணியால இருக்கு! தனுஷ் படத்தில் இணைந்த சூப்பர் ஸ்டார்.. ஹைப் ஏத்த ஆரம்பிச்சுட்டாங்க

    தனுஷ் தற்போது கரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்குகிறார். இதனை தொடர்ந்து தனுஷ் 55வது படத்தினை அமரன் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை தனுஷின் சொந்த நிறுவனமான வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் RTake Studios இணைந்து தயாரிக்கின்றன. (முதலில் கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்பு செழியன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் படத்தின் பட்ஜெட் அதிகரிக்கவே அவர் விலகிகொண்டார். இப்படதிற்கு சாய் அப்யங்கர் இசையமைக்கிறார்.

    டி 55ல் இரண்டு நாயகிகள் நடிக்க உள்ளார்கள். மாரி 2 படத்திற்குப் பிறகு மீண்டும் தனுஷுடன் சாய் பல்லவி இணைகிறார். இன்னொரு நாயகியாக பராசக்தி பட நாயகி லீலா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

    இந்த நிலையில் இப்ப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க மெகாஸ்டார் மம்முட்டி நடிக்கிறார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழுவிஅன்ர் இன்று வெளியிட்டுள்ளனர். மம்முட்டி இணைவதன் மூலம் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இப்படம் 2026 கோடை விடுமுறையில் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Goundamani: இப்போ நீங்க ரெண்டு தடவ தமிழ்நாடு கேட்டுச்சா?: கவுண்டமணி குறித்து பகிர்ந்த வடிவுக்கரசி

    தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் தனி இடம் கவுண்டமணிக்கு உண்டு.

    கவுண்டமணியின் உண்மையான பெயர் சுப்பிரமணி. அவர் மேடை நாடகங்களில் நடிக்கும்போது சக நடிகர்கள் பேசும் வசனங்களுக்கு உடனுக்குடன் கவுண்டர் கொடுப்பதில் வல்லவர் என்பதால் இப்பெயர் வந்ததாக கூறப்படுகிறது. திரைத்துறையில் அவ்ர் நாகேஷ் நடித்த சர்வர் சுந்தரம் படத்தில் சிறு வேடத்தில் அறிமுகம் ஆனார். ஆனால் அவ்ருக்கான அடையாளத்தை 16 வயதினிலே படம் கொடுத்தது. ரஜினிகாந்தின் உதவியாளராக நடித்த அவர் “மயிலு… ஒரு டீ சொல்லு” என்ற கதாபாத்திரம் இவரைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.

    தொடர்ந்து காமெடி வேடங்களில் நடித்துவந்தவருக்கு கரகாட்டகாரன் அவரை டாப் லெவலுக்கு கொண்டு சென்றது. அதன்பின் அவர் பல படங்களில் இரண்டாம் நாயகனாகவே பார்க்கப்பட்டார். உள்ளத்தை அளித்தா, மன்னன், மேட்டுக்குடி என பல படங்களை சொல்லலாம்.

    பொதுவாகவே கவுண்டமணியுடன் நடிக்க பலர் அச்சப்படுவார்களாம். காரணம் ஏதாவது சொல்லி நக்கல் அடித்துவிடுவாராம். இந்த நிலையில் நடிகை வடிவுக்கரசி கவுண்டமணி குறித்து கூறுகையில், கவுண்டமணி சார் கூட நடிக்கும்போது கவனமாக நடிக்க வேண்டும். ஒரு தடவ ஒன் மோர் டேக் கேட்டால் , இப்போ நீங்க ரெண்டு தடவ நடிக்கலனு தமிழ்நாடு கேட்டுச்சா என்பார். யாராவது நல்லா இருக்கீங்களானு கேட்டால் இப்போ இல்லனா என்ன பன்ன போறீங்க என்பார். அவர் ரொம்ப நக்கல் பிடித்தவர். ஆனால் அவர் எவ்வளவு நக்கலடித்தாலும் யாரும் கோபபடமாட்டார்கள் என்று வடிவுக்கரசி கூறினார்.

  • With love: வித் லவ் படத்தின் முதல் விமர்சனம்: ரஜினி இப்படி சொல்லிட்டாரே

    சசிகுமார் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் டூரிஸ்ட் பேமிலி. இபடத்தினை இயக்கிய அபிஷன் ஜீவிந்த் அடுத்து நாயகனாக அரிமுகம் ஆகும் படம் வித் லவ். ட்டூரிஸ் பேமிலி, லவ்வர் படத்தின் இணை இயக்குனராக பணியாற்றிய மதன் இப்படத்தினை இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்தினை சௌந்தர்யா ரஜினிகாந்த் மகேஷ் ராஜ் என்பவருடன் இணைந்து தயாரித்துள்ளார்.

    சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றது. ட்ரைலரை பார்த்த பலரும் இப்படம் நிச்சயம் ஹிட் என்றே கூறுகின்றனர். இதனால் படக்குழுவினர் மேலும் உற்சாகமாயுள்ளனர்.

    இந்த நிலையில் நாளை மறு நாள் வெளியாக உள்ள வித் லவ் படத்தின் சிறப்பு காட்சி நேற்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், ஸ்ருதிஹாசன், அனிருத், சசிகுமார், சமுத்ரகனி என பலர் கலந்துகொண்டனர். படம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், Very Nice என்று கூறினார். மேலும் சௌந்தர்யா நன்றாக பணியாற்றியுள்ளார் என்றும் கூறினார்.

  • karuppu pulsar review: தினேஷுக்கு கை கொடுத்ததா கருப்பு பல்சர் – விமர்சனம்

    karuppu pulsar review: தினேஷுக்கு கை கொடுத்ததா கருப்பு பல்சர் – விமர்சனம்

    ‘லப்பர் பந்து’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, நடிகர் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘கருப்பு பல்சர்’. யஷோ என்டர்டெயின்மென்ட் சார்பில் டாக்டர் முரளி கிருஷ்ணன் தயாரிப்பில், இயக்குநர் முரளி கிரிஷ் எஸ் ஒரு வித்யாசமான ‘ஹாரர்-த்ரில்லர்’ முயற்சியை கையில் எடுத்திருக்கிறார்.

    கதை:

    சென்னையில் வாட்டர் பியூரிஃபையர் சர்வீஸ் செய்து வரும் நாயகன் தினேஷ், மேட்ரிமோனி மூலம் அறிமுகமாகும் ரேஷ்மா வெங்கடேஷிடம் காதலில் விழுகிறார். தன்னிடம் இருப்பது சாதாரண மோபட் (XL) தான் என்றாலும், காதலியை கவர தன்னிடம் ‘கருப்பு பல்சர்’ இருப்பதாக ஒரு சின்னப் பொய் சொல்கிறார். அந்தப் பொய்யை நிஜமாக்க அவர் ஒரு பழைய கருப்பு பல்சர் பைக்கை வாங்க, அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது ஆட்டம். அந்த பைக்கோடு சேர்ந்து வரும் அமானுஷ்யங்களும், அதன் பின்னணியில் இருக்கும் ரத்தமும் கண்ணீரும் கலந்த பிளாஷ்பேக்கும் தான் படத்தின் மீதிக்கதை.

    தினேஷின் பலமே எதார்த்தமான நடிப்புதான். இந்தப் படத்திலும் ஒரு நடுத்தர வர்க்க இளைஞனின் பயம், பதற்றம் மற்றும் காதலை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகிக்கு கதையில் பெரிய பங்கில்லை என்றாலும் அவருடைய காட்சிகளில் நன்றாகவே செய்திருக்குறார்.

    மன்சூர் அலிகான், சரவண சுப்பையா மற்றும் கலையரசன் ஆகியோர் தங்கள் பங்களிப்பை சிறப்பாகவே செய்துள்ளார்கள். பேய் படங்கள் என்றாலே பங்களா, தோட்டம் என்ற டெம்ப்ளேட்டை உடைத்து, ஒரு பைக்கை மையமாக வைத்து ஹாரர் கதையை நகர்த்திய இயக்குநரின் முயற்சி பாராட்டத்தக்கது. இன்பாவின் பின்னணி இசை த்ரில்லர் காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் படம் நிச்சயம் கவனிக்கதக்க வகையில் இருந்திருக்கும். மொத்ததில் கருப்பு பல்சர் ஒருமுறை பார்க்கலாம்

    சினிரிப்போர்டர்ஸ் ரேட்டிங்: 3/5

     

  • பொங்கல் ரேசில் நின்று விளையாடும் ஜீவா: 3வது வாரத்தில் தலைவர் தம்பி தலைமையில்

    இந்த பொங்கலுக்கு சிவகார்த்திகேயன், மோகன் ரவி நடிப்பில் பராசக்தி, கார்த்தி நடிப்பில் வா வாத்தியார், ஜீவா நடிப்பில் தலைவர் தம்பி தலைமையில் ஆகிய மூன்று படங்கள் வெளியாகின. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பராசக்தி பொங்கலுக்கு முன்பாகவே வெளியாகி பொங்களுக்கு கூட தாக்குபிடிக்க முடியாமல் தினறியது. வா வாத்தியார் கார்த்தி படங்களிலேயே மிகவும் குறைவான வசூல் செய்து அட்டர் பிளாப் ஆனது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத தலைவர் தம்பி தலைமையில் ஜாக்பாட் அடித்தது.

    நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் ஜீவாவுக்கு இப்படம் ஒரு மிகப்பெரிய வெற்றியாக இப்படம் அமைந்துள்ளது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் 35 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

    இந்த நிலையில் இப்படம் தொடர்ந்து 3வது வாரமாக திரையரங்குகளில் ஓடிகொண்டிருக்கிறது. இதனை கொண்டாடும்விதமாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

  • புகை பிடிக்கும் ஸ்ருதிஹாசன் – ஆகாசம்லோ ஒக தாரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

    Aakasamlo Oka Tara

    ஆகாசம்லோ ஒக தாரா (Aakasamlo Oka Tara) படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

    தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட்டுகளாக கொடுத்துவரும் நடிகர் துல்கர் சல்மான் தெனிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் தேந்தெடுக்கும் படம் ஒவ்வொன்றும் வித்யாசமாகவே இருக்கும். இவரது லக்கி பாஸ்கர், காந்தா படங்களே உதாரணம்

    இந்த நிலையில் துல்கர் சல்மான் நடித்துவரும் படம் ஆகாசம்லோ ஒக தாரா. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் இணைந்துள்ளார். இதனை படப்பிடிப்பு குழு இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் த்யாரிக்கும் இந்த படம் ஒரு பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது.பவன் சடினேனி இப்படத்தை இயக்குகிறார். ஜி.வி.பிரகஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

    புதுமுக நடிகை சாத்விகா வீரவள்ளி துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அவருடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரில் ஸ்ருதிஹாசன் அவரது உதட்டில் இருக்கும் சிகரெட்டும், மேலெழும் புகையும், அந்த கதாபாத்திரத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. .