Author: adminram

  • anomie movie: மீண்டும் ஒரு துருவங்கள் 16? ரகுமானின் அனோமி ரிலீஸ் தேதி அறிவிப்பு

    ரகுமான், பாவனா நடிப்பில் உருவாகியுள்ள அனோமி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது.

    80களில் முன்னணி நட்சத்திரமாக இருந்தவர் நடிகர் ரகுமான். இவரது நிலவே, மலரே, புது புது அர்த்தங்கள் உள்ளிட்ட பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. 80களில் பெண் ரசிகைகள் அதிகம் இருந்த நடிகர்களில் ரகுமானும் ஒருவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர் நடித்த துருவங்கள் 16 அட்டகாசமான வெற்றியை பெற்றது.

    இந்த நிலையில் ரகுமான் நடிகை பாவனாவுடன் இணைந்து நடிக்கும் படம் அனோமி. யாஸ் மாரத் ஏன்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ஒரு க்ரைம் சைக்காலஜிக்கல் த்ரில்லர் வகையை சார்ந்த கதை கொண்ட படமாகும். ஒரு சைக்கோ கொலைகாரனைப் பிடிப்பதற்காக காவல்துறையினர் மேற்கொள்ளும் தீவிர தேடுதல் வேட்டையே இப்படத்தின் மையக்கரு.

    சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் நல்ல படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. இந்த நிலையில் அனோமி வருகிற பிப்.6ம் தேதி வெளியாகிறது. அனோமி நடிகை பாவனாவின் 90வது படமாகும். அதுமட்டுமல்லாமல் இபப்டத்தினை இணை தயாரிப்பாளராகவும் பாவனா தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்

    கடந்த வாரம் வெளியான முக்கியமான படங்கள் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் திரையரங்குகளில் சில புதிய படங்கள் வெளியாகின்றன. இது குறித்து இங்கு காண்போம்.

    காந்தி டாக்ஸ் (Gandhi Talks):

    விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி மற்றும் அதிதி ராவ் நடிப்பில் உருவாகியுள்ள காந்தி டாக்கிஸ் இந்த வாரத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பட்டியலில் உள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த பேசும்படத்திற்கு பின் வெளிவர உள்ள இது வசனங்கள் இல்லாத ஒரு ‘சைலன்ட் மூவி என்பது குறிப்பிடத்தக்கது.
    இப்படத்தினை கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கியுள்ளார். இசை ஏ.ஆர்.ரகுமான். ஏற்கெனவே இரு பாடல்கள் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    கருப்பு பல்சர் (Karuppu Pulsar):

    இது ஒரு ஆக்ஷன் மற்றும் மிஸ்டரி கலந்த த்ரில்லர் திரைப்படமாகும். லப்பர் பந்து படத்திற்கு பின் அட்டகத்தி கார்த்தி இரு வேடங்களில் நடித்து வெளிவரும் படம் கருப்பு பல்சர். மற்றும் மன்சூர் அலிகான், கலையரசன், ரேஷ்மா வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குனர் ராஜேஷின் உதவி இயக்குனராக பணியாற்றிய முரளி கிரிஷ் இப்படத்தினை இயக்கியுள்ளார்.

    லாக்டவுன் (Lockdown):

    லைக்கா புரொடெக்சன் தயாரிப்பில் அனுபமா மகேஸ்வரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படம் நீண்ட நாட்களாகவே வெளியாகாமல் இருந்தது. இப்படம் ஒரு உளவியல் சார்ந்த திரில்லர் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சார்லி, நிரோஷா, லிவிங்ஸ்டன் மற்றும் அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்
    இயக்கம்: ஏ.ஆர். ஜீவா.

    கிரானி (Granny):

    வடிவுக்கரசி முக்கிய வேடத்தில் நடித்துள்ள கிரானி ஒரு ஹாரர் த்ரில்லர் திரைப்படம். விஜயகுமாரா இயக்கியுள்ள இப்படத்திற்கு செல்லையா பாண்டியன் இசையமைத்துள்ளார்

  • Euphoria movie: 20 ஆண்டுகளுக்கு பின் இணையும் ஒக்கடு ஜோடி: யூஃபோரியா – ரிலீஸ் தேதி இதோ!

    பூமிகா நடித்த யூஃபோரியா வருகிற பிப்.6ம் தேதி வெளியாகிறது.

    இளைஞர்கள் மற்றும் தற்போதைய சமூகம் எதிர்கொள்ளும் சவால்களை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கில்லி படத்தின் ஒரிஜினல் வெர்சன்படமான ஒக்கடு, ருத்ரமாதேவி வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் குணசேகரன் இப்படத்தினை இயக்கியுள்ளார். ஒக்கடு படத்தில் நாயகியாக நடித்த பூமிகாஇயக்குனர் குண்செகரனோடு 20 ஆண்டுகளுக்கு பின் இப்படத்தில் இணைந்துள்ளார். மேலும் கௌதம் வாசுதேவ் மேனன், சாரா அர்ஜுன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    வருகிற பிப்ரவரி மாதம் 6ம் தேதி இப்படம் வெளியாகிறது. தமிழில் இப்படத்தினை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் ரிலீஸ் செய்கிறது.

  • OTT: ஓடிடியில் இந்த வாரம் என்ன படங்கள் வெளியாகிறது தெரியுமா?

    இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ள படங்கள் குறித்து இங்கே காண்போம்.

    வா வாத்தியார்

    இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளிவந்த படம் வா வாத்தியார். தீவிர எம்.ஜி.ஆர் ரசிகரான ராஜ்கிரண், தனது பேரன் கார்த்தியை நல்லவனாக வளர்க்கிறார். ஆனால், பேரன் நம்பியாரால் ஈர்க்கப்பட்டு ஒரு ஊழல் நிறைந்த போலீஸ் அதிகாரியாக மாறுகிறார். ஒரு கட்டத்தில் அவர் உடலில் ஏற்படும் விசித்திரமான மாற்றத்தால் மீண்டும் எம்.ஜி.ஆரின் குணாதிசயங்கள் அவருக்குள் வருகிறது. அதன் பின் நடக்கும் கலாட்டா தான் கதை. மோசமான விமர்சனத்தை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் படுதோல்வி அடைந்தது.

    இந்த படம் நாளை அமேசான் பிரைமில் ஸ்ட்ரீமாகிறது. திரையரங்கில் பலத்த அடி வாங்கிய வா வாத்தியார் ஓடிடியில் என்ன ஆகபோகிரது என்பது நாளை தெரிந்துவிடும்.

    சர்வம் மாயா – மலையாளம் மற்றும் தமிழ் டப்பிங்

    நிவின் பாலி, அஜு வர்கீஸ், ரியா ஷிபு நடிப்பில் வெளிவந்த படம் சர்வம் மாயா. குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை நகைச்சுவையாகவும் ,பீல் குட் படமாக வெளிவந்தது. நலல் வரவேற்பை பெற்ற இப்படம் வருகிர 30ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

    சாம்பியன் – தெலுங்கு மற்றும் தமிழ் டப்பிங்

    கால்பந்து விளையாட்டை பின்னணியாகக் கொண்ட ஒரு படம். தனது லட்சியத்திற்காக ஒரு இளைஞன் சந்திக்கும் போராட்டங்களே இப்படத்தின் மையகதை. ஓரளவிற்கு வரவேற்பை பெற்ற இப்படம் வருகிற 29ம் தேதி நெட்பிலிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகிறது

  • Bhagyashri borse: கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு…பாக்யஸ்ரீயின் லேட்டஸ்ட் போட்டோஸ்

    பாக்யஸ்ரீ போர்ஸ் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர். மாடலிங் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்த இவர், 2023-ல் யாரியான் 2 என்ற இந்தி படத்தின் மூலம் அறிமுகமானார்.

    குறுகிய காலத்திலேயே தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். சமீபத்தில் வெளிவந்த காந்த படம் அவருக்கு தெந்திந்திய திரையுலகில் நல்ல அடையாளத்தை கொடுத்தது.

    இந்த நிலையில் அவரது சமீபத்திய புகைப்படங்கள் சோசில்யல் மீடியாவில் ரசிர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

  • Chiranjeevi: சூப்பர்ஹிட் ஆன படம்: இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த சிரஞ்சீவி

    சிரஞ்சீவி, நயந்தாரா நடிப்பில் 2026 சங்கராந்தி பண்டிகையையொட்டி வெளிவந்த படம் மன சங்கர வரபிரசாத் காரு (Mana Shankara Vara Prasad Garu). அனில் ரவிபுடி இயக்கிய இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு சிரஞ்சீவிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது இப்படம். பாக்ஸ் ஆபிஸில் ரூ 350கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது. சிரஞ்சீவியின் முந்தைய சாதனையான சைரா நரசிம்மா ரெட்டி படத்தின் வசூலை இப்படம் முறியடித்துள்ளது.

    இந்த நிலையில் படத்தின் மாபெரும் வெற்றியால் ம்கிழ்ச்சியடைந்த சிரஞ்சீவி, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்விதமாக இயக்குனர் அனில் ரவிபுடிக்கு ரேஞ்ச் ரோவர் சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • 5 ரூபாய் புரோட்டா கடை நடத்தும் ரசிகர்: தங்கசங்கிலி அணிவித்து பாரட்டிய ரஜினி

    மதுரை வண்டியூர் பகுதியைச் சேர்ந்த அல்போன்ஸ் என்பவர் தீவிர ரஜினி ரசிகர். இவர் அதே பகுதியில் மாந்தோப்பு பரோட்டா கடை என்ற பெயரில் வெறும் 5 ரூபாய்க்கு பரோட்டா வழங்கி வருகிறார். விலைவாசி உயர்ந்த போதிலும் கடந்த பல ஆண்டுகளாக இதே விலையில் புரோட்டா விற்பனை செய்து வருகிறார். இவரது சேவை சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது. இவரது கடையின் பெயர் பலகையில் ரஜினிகாந்தின் புகைப்படம் பிரதானமாக இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    தன்னுடைய ரசிகர் ஒருவர் நீண்ட நாட்களாக இந்த அற்புத சேவையை நடத்தி வருவதை அறிந்த ரஜினிகாந்த் அவரை சந்திக்க ஆசைபட்டார்.உடனடியாக அவரை குடும்பத்துடன் வருமாறு அழைப்பு விடுத்தார். இதையடுத்து அல்போன்ஸ் தனது குடும்பத்துடன் சென்னையில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்திற்கு வந்தார். அல்போன்ஸை நேரில் சந்தித்த ரஜினி, அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார். அவருடன் ரஜினி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. மேலும் அல்போன்ஸிற்கு தங்க சங்கிலி அணிவித்து கௌரவித்தார்.

    இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அல்போன்ஸ் கூறியபோது, தலைவரை சந்திப்பது என் வாழ்நாள் கனவு. நான் செய்யும் சேவையை அறிந்து அவரே என்னை அழைத்து பாராட்டியது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் பல காலம் இந்த சேவையைத் தொடருவேன் என்று கூறினார்.

  • என்னால்தான் அரசு பேருந்திலிருந்து அந்த வார்த்தையையே தூக்கிட்டாங்க- ஏ.வெங்கடேஷ் ருசிகர தகவல்

    90களில் முக்கிய இயக்குஅன்ர்களில் ஏ. வெங்கடேஷுக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு. தமிழ் திரையுலகில் விறுவிறுப்பான திரைக்கதைக்கும், குறுகிய காலத்தில் படத்தை முடிப்பதற்கும் பெயர்பெற்றவர் இவர். இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சரத்குமார் நடித்த மகாபிரபு படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து விஜய் நடிப்பில் செல்வா, நிலாவே வா, பகவதி , அர்ஜூன் நடிப்பில் வாத்தியார், துரை, குத்து உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். அங்காடி தெரு முலம் நடிகராகவும் அறிமுகம் ஆனார் வெங்கடேஷ்.

    இந்த நிலையில் சமீபத்தில் வர் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறுகையில், ஒரு நாள் அரசு பேருந்தில் இது உங்கள் சொத்து, சேதப்படுத்த வேண்டாம் என்று எழுதப்பட்டிருந்தது. இதனை கண்ட ஒருவன் உண்மையாகவே இது என்னுடைய சொத்து என்று கூறினால் என்ன செய்வார்கள் என்று யோசித்தேன். இதை காமெடியாக செய்தால் என்ப்படி இருக்கும் என்று எண்ணிதான் பகவதி படத்தில் அந்த காட்சியை வைத்தேன். அது நல்ல வரவேற்பை பெற்றது. அந்த காமெடி வைரலானபின்பு தான் பேருந்திலிருந்து அந்த வாக்கியத்தை நீக்கினார்கள் என்று கூறினார்.

  • 1000 நாட்களை கடந்த கார்த்தியின் 10 ரூபாய் உணவகம்

    நடிகர் கார்த்தி அவர்கள் லாப நோக்கம் இல்லாமல், ஏழை எளிய மக்களுக்காக கார்த்தி மக்கள் நல மன்றம் மூலம் ஒரு மலிவு விலை உணவகத்தைச் செயல்படுத்தி வருகிறார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது தலைமை அலுவலக வாசலில் இந்த உணவகத்தை நடத்தி வருகின்றார். இந்த உணவகத்தில் ரூ 50 மதிப்புள்ள தரமான வெஜிடபிள் பிரியாணி/பிரிஞ்சி போன்ற உணவுகள் வெறும் ரூ10-க்கு வழங்கப்படுகின்றன. இந்த உணவகம் தினமும் பகல் 12 மணியிலிருந்து 1.30 வரை உண்டு.

    இந்த உணவகத்தில் பலதரப்பு மக்கள் தினமு வந்து உணவருந்தி செல்கின்றனர். மூன்று ஆண்டுகளாக னடைபெறு, இந்த உணவக 1000 நாட்களை கடந்துள்ளது.

  • Baby girl review: நிவின் பாலிக்கு கை கொடுத்ததா?- பேபி கேர்ள் விமர்சனம்

    மலையாள திரையுலகில் முன்னணி நடிகரான நிவின் பாலி நடிப்பில் வெளியாகியுள்ள படம் பேபி கேர்ள்.அருண் வர்மா இயக்கியுள்ள இந்த படத்தில் நிவின் பாலியுடன் ஜெய் பீம் புகழ் லிஜோ மோல், சங்கீத் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். . திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவமனையில் இருந்து, பிறந்து மூன்று நாட்களே ஆன ஒரு பெண் குழந்தை காணாமல் போவதும் அதனை தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களுமே படத்தின் கதை. ஆரம்பம் முதல் இறுதி வரை புலனாய்வு திரில்லராக உருவாகியுள்ளது இப்படம்.

    சர்வம் மயா படத்தின் வெற்றிக்கு பிறகு நிவின் பாலி நடிக்கும் படம் என்பதால்,இப்படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்தது என்பதே உண்மை. நிவின் தனக்கான வேடத்தை சிறப்பாக செய்துள்ளார். அவருக்கு இப்படம் சிறந்த கம்பேக் என்று கேரள ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அதேபோல், லிஜோ மோலின் நடிப்பும் அற்புதமாக உள்ளது. சாம் சி.எஸ்-ன் இசை த்ரில்லர் படத்திற்குத் தேவையான பதற்றத்தை அதிகரிக்கிறது.

    படத்தின் முதல் பாதியில் அதாவது இடைவேளை வரை அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பில் செல்கிறது. இரண்டாம் பாதியில் சில காட்சிகள் தொய்வாகவே உள்ளது. ஆனாலும் குறைகளை தவிர்த்து பார்த்தால் இப்படம் திரில்லர் பட ரசிகர்களுக்கு செம ரீட்டாகவே உள்ளது.

    கேரளாவை பொருத்தவரை இப்படத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது.படத்தின் பாசிட்டிவ் விமர்சனங்களை அடுத்து வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என்று கேரள திரையுலகில் பேசப்படுகிறது.