Author: adminram

  • அந்தரத்தில் அனிருத்!.. அடேங்கப்பா என்னாம்மா ஃபீல் பண்ணி பாடுறாரு!.. களைகட்டிய கச்சேரி!..

    அந்தரத்தில் அனிருத்!.. அடேங்கப்பா என்னாம்மா ஃபீல் பண்ணி பாடுறாரு!.. களைகட்டிய கச்சேரி!..

    தமிழ் திரைப்பட இசையில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள இளம் இசையமைப்பாளர்களில் முன்னணியில் இருப்பவர் தான் நம்ம ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்திரன். இளம் வயதிலேயே தனது இசைத் திறமையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், இன்று வரை தனது தனித்துவமான இசை ஸ்டைலின் மூலம் அவர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார்.

    ஆரம்பத்தில் தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வந்த அனிருத் சமீப காலமாக அவர் இசையமைக்கும் படங்கள் எல்லாம் பெரிதாக ஓடாமல் பல்பு வாங்கி வருகின்றன. இந்தியன் 2, தேவரா சமீபத்தில் வெளியான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி வரை ஏகப்பட்ட படங்கள் சொதப்பினாலும், அந்த படங்களில் கூட அனிருத்தின் இசை தனித்தே நிற்கிறது. சினிமா பட்ங்களை விட இசை கச்சேரிகள் மூலம் ஏகபோகமாக சம்பாதித்து வருகிறார்.

    இந்நிலையில், அவர் சமீபத்தில் நடத்திய கச்சேரியின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளார். அவரது இசைப் பயணம் 2012ஆம் ஆண்டு தனுஷ் நடித்ஹ்ட 3 திரைப்படத்தின் மூலம் தொடங்கியது. அந்த படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி டி பாடல் உலகளவில் வைரலாகி, அனிருத்தை ஒரே இரவில் பிரபலமாக்கியது. இந்த பாடல் தமிழ் இசையை சர்வதேச அளவில் அறிமுகப்படுத்திய முக்கியமான படைப்பாகவும் கருதப்படுகிறது.

    அதனைத் தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி, மாஸ்டர், ஜெயிலர், விக்ரம் போன்ற பல வெற்றி படங்களுக்கு இசையமைத்து தனது திறமையை தொடர்ந்து நிரூபித்துள்ளார். இளம் தலைமுறையினரின் மனதில் ஆழமாக பதிந்துள்ள அவரது இசை, புதுமையான ஸ்டைலும் மனதை கவரும் பீட்ஸ்களும் கொண்டதாக அமைகிறது.
    மேலும், ரஜினிகாந்த், தனுஷ், விஜய், கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தது அவரது வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளது. அனிருத் பல விருதுகளையும் பெற்றதுடன், அவரது கச்சேரிகள் மற்றும் சர்வதேச அளவில் வளர்ந்த ரசிகர் வட்டாரம் அவரை இந்திய இசை உலகின் முக்கியமான முகங்களில் ஒருவராக உயர்த்தியுள்ளது.

    இந்நிலையில், அனிருத் சமீபத்தில் பாரிஸ் நகரில் நடத்திய கச்சேரியில் அந்தரத்தில் பறந்துக்கொண்டே பாடிய சாகசத்தை புகைப்படங்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்வு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இசையில் புதிய முயற்சிகளை தொடர்ந்து செய்து வரும் அனிருத் தமிழ் சினிமாவின் எதிர்கால இசையை வடிவமைக்கும் திறமையான கலைஞராக தொடர்ந்து திகழ்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    அனிருத்துக்குப் போட்டியாக தற்போது சாய் அபயங்கர் வந்துள்ள நிலையில், டியூட், கருப்பு, அல்லு அர்ஜுனின் ராக்கா படம் வரை சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். இருவருக்கும் இடையே தான் இப்போதைக்கு போட்டியே என்கின்றனர்.

  • மரண மாஸ் காட்டுறாரே மாதம்பட்டி ரங்கராஜ்!.. 2 பொண்டாட்டி சர்ச்சைக்கு நடுவே செம கெத்து!

    மரண மாஸ் காட்டுறாரே மாதம்பட்டி ரங்கராஜ்!.. 2 பொண்டாட்டி சர்ச்சைக்கு நடுவே செம கெத்து!

    சமீப காலமாக மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் க்ரிசில்டா இடையே ஏற்பட்ட வழக்குகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முக்கியமான திருப்பமாக ரங்கராஜ் ஜாய் க்ரிசில்டாவை தனது இரண்டாவது மனைவியாக ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், அவர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

    மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் க்ரிஸில்டாவுக்கு பிறந்த குழந்தை தனது குழந்தை இல்லை என்று சொன்ன நிலையில், அவர் மீது எழுந்த டிஎன்ஏ சர்ச்சை வழக்கில், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையின் முடிவுகள் பின்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இதனிடையே, ஜாய் க்ரிசில்டா தனது மீது குற்றச்சாட்டுகளை வெளியிடுவதைத் தடுக்க ரங்கராஜ் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் அந்த மனுவை நிராகரித்தது. இதனால் இந்த விவகாரம் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தில் நீடித்து வருகிறது.

    இந்த சர்ச்சையின் பின்னணி 2025ஆம் ஆண்டில் தொடங்கியது. ஜாய் க்ரிசில்டா, ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்ட பின்னர் ஏமாற்றி விட்டுச் சென்றதாக குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து போலீஸ் புகார், மகளிர் ஆணையத்தில் மனு, நீதிமன்ற விசாரணைகள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் வழக்கு முன்னேறியது. மேலும், அவர் மாதத்திற்கு சுமார் ₹6.5 லட்சம் பராமரிப்பு தொகை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

    இத்தனை சர்ச்சைகள் நடந்து கொண்டிருந்தாலும், ரங்கராஜ் தனது மீடியா மற்றும் தொலைக்காட்சி பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார். குறிப்பாக, ஏப்ரல் 4 முதல் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியில் அவர் மீண்டும் ஜட்ஜாக பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து போட்டியாளர்கள் மாதம்பட்டி ரங்கராஜை ட்ரோல் செய்வது போல காமெடி செய்து வருகின்றனர்.

    மேலும், இரண்டு மனைவிகள் இருப்பதை ஒப்புக்கொண்டதாக கூறப்படும் இந்த சூழ்நிலையில், ரங்கராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன. கையில் இளநீர் உடன் செம ஸ்டைலாக மாஸாக கெத்தாக போஸ் கொடுத்துள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ். 2 மனைவி வைத்துக் கொண்டு இருக்கும் ஆணழகன் என்று அவரது ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

  • ப்ரீத்தி முகுந்தன் முதல் கயாடு லோஹர் வரை!.. குத்தாட்டம் போடும் சாய் அபயங்கர்.. ஹீரோ ஆகப்போகிறாரா?

    ப்ரீத்தி முகுந்தன் முதல் கயாடு லோஹர் வரை!.. குத்தாட்டம் போடும் சாய் அபயங்கர்.. ஹீரோ ஆகப்போகிறாரா?

    இசை உலகில் வேகமாக கவனம் பெற்றுவரும் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தனது தனித்துவமான இசை பாணி மற்றும் புதுமையான முயற்சிகளால் இளைஞர்களை பெரிதும் கவர்ந்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.

    2024 ஆம் ஆண்டு வெளியான “கட்சி சேர” என்ற ஆல்பம் பாடல் மூலம் பிரபலமான சாய் அபயங்கர், அதனைத் தொடர்ந்து வெளியிட்ட “ஆச கூட” பாடலின் மூலம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார். இந்த பாடல் 150 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்ததுடன், அவருக்கென ஒரு வலுவான ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியது. தொடர்ந்து, “பென்ஸ்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அவர், தற்போது பல திரைப்படங்களில் இசையமைக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

    பென்ஸ் திரைப்படம் இன்னமும் வெளியாகாத நிலையில், அதற்குள் அவருக்கு 8 படங்களில் இசையமைக்க வாய்ப்புகள் குவிந்தன. டியூட் படம் தான் அவர் இசையில் வெளியான முதல் படம். அந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களை கவர்ந்துள்ளன. அடுத்ததாக சூர்யாவின் கருப்பு திரைப்படம் சாய் இசையில் வெளியாக காத்திருக்கிறது. அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்துக்கும் சாய் அபயங்கர் தான் இசை.

    இந்நிலையில், ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் என்ற வதந்தி குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில், “எனக்கு நடிப்பில் போதுமான அனுபவமும் திறமையும் இன்னும் இல்லை. நான் அந்த துறையில் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. எனவே தற்போது ஏஜிஎஸ் தயாரிக்கும் பெரிய படத்துக்கு நான் இசையமைப்பாளராக மட்டுமே கமிட் ஆகியுள்ளேன்” என்று விளக்கம் அளித்துள்ளார்.

    மேலும், எதிர்காலத்தில் பல்வேறு இசை முயற்சிகளுடன் ரசிகர்களை கவர திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது திறமை, விடாமுயற்சி மற்றும் புதுமையான அணுகுமுறையால், சாய் அபயங்கர் இசைத்துறையில் வலுவான வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருகிறார். அவரது அடுத்தடுத்த வெளியீடுகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.

  • விஜய்யை கடுமையாக தாக்கி அரசியல் பேசியது போதும்.. போஸ் வெங்கட்டின் புது வெப்சீரிஸ் ரெடி!..

    விஜய்யை கடுமையாக தாக்கி அரசியல் பேசியது போதும்.. போஸ் வெங்கட்டின் புது வெப்சீரிஸ் ரெடி!..

    மே மாதம் ஜியோஹாட்ஸ்டாரில் ப்ரீமியர் ஆகவுள்ள புதிய ஃபேமிலி வெப் சீரிஸான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ குறித்தான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

    ஜியோஹாட்ஸ்டாரில் இதற்கு முன்பு வெளியாகி வரவேற்பு பெற்ற ‘உப்பு புளி காரம்’ தொடரின் தயாரிப்பு குழுவிடமிருந்து வரும் இந்த புதிய தொடர், நவீன குடும்ப உறவுகளை புதுமையாகவும் ஈர்க்கக்கூடிய வகையிலும் சொல்லியிருக்கிறது. நகைச்சுவை, உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையின் நெருக்கத்தை இணைக்கும் இந்தக் கதையில் நான்கு உடன்பிறந்தவர்களின் தனித்தனி தொழில், குணநலன் மற்றும் வாழ்க்கைத் தேர்வுகளை சமாளிக்கும் விதத்தையும், குடும்ப பிணைப்பால் ஒன்றிணைந்திருக்கும் உறவுகளையும் மையமாகக் கொண்டுள்ளது.

    இந்தத் தொடரில் போஸ் வெங்கட் மற்றும் காயத்ரி சாஸ்த்ரி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டெக்ஸ்டைல்ஸ் ஷோரூம் நடத்தி வரும் போஸ் வெங்கட் கட்டுப்பாடான குடும்ப தலைவர். குடும்பத்தை ஒருங்கிணைத்து வைத்திருக்கும் அமைதியான இல்லத்தரசியாக காயத்ரி சாஸ்த்ரி நடித்துள்ளார். மேலும் ராஜ் அய்யப்பா, நிகிலா சங்கர், லூதுஃப், கிஷோர், ஷ்ரவ்னிதா, புரமோதினி உள்ளிட்ட பலரும் இந்தத் தொடரில் நடித்துள்ளனர்.

    100 அத்தியாயங்களைக் கொண்ட இந்த வெப்சீரிஸை ‘உப்பு புளி காரம்’, ‘போலீஸ் போலீஸ்’ போன்ற தொடர்களை இயக்கிய சிதம்பரம் மணிவண்ணன் இயக்கியுள்ளார். மென்மையான உணர்வுகள், நகைச்சுவை என அனைத்து தரப்பினரும் தொடர்புபடுத்திக் கொள்ளும்படி இந்த தொடர் எடுக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு வாரமும் ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரின் எபிசோட் வெளியாகும். குடும்ப மதிப்புகள் மற்றும் சமகால வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இத்தொடர், பார்வையாளர்களுக்கு ஆழமான மற்றும் விறுவிறுப்பான கதையை வழங்க இருக்கிறது.

    தொடரின் கதாபாத்திரங்கள், ஈர்க்கக்கூடிய கதை சொல்லல் என ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடர் ஜியோஹாட்ஸ்டாரின் அசல் உள்ளடக்கங்களில் மற்றுமொரு புதிய வரவு.இந்த வருடம், மே மாதம் முதல் ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடர் ஜியோஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும்.

  • அந்த 1000 கோடியை எடுத்து வைங்க!.. அலப்பறை கிளப்ப ரெடியான ஜெயிலர் 2!.. படப்பிடிப்பு நிறைவு!

    அந்த 1000 கோடியை எடுத்து வைங்க!.. அலப்பறை கிளப்ப ரெடியான ஜெயிலர் 2!.. படப்பிடிப்பு நிறைவு!

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. டைரக்டர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக வெளியான “ஜெயிலர்” படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் மேலும் விறுவிறுப்பாகவும், அதிரடி காட்சிகளால் நிரம்பியதாகவும் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

    இந்த படத்தில் ரஜினிகாந்த் மீண்டும் பவர்ஃபுல் ரோலில் நடிக்கிறார். அவருடன் மோகன்லால், சிவராஜ்குமார், விஜய் சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர். படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடைபெற்றதாகவும், முக்கிய ஆக்ஷன் காட்சிகள் மிகுந்த கவனத்துடன் படமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கும் இசையமைத்து வருகிறார் என்பதும் ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம், உலகம் முழுவதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. வெளியான முதல் வாரத்திலேயே பல கோடி ரூபாய் வசூல் செய்த இப்படம், தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் நிலைத்த வெற்றியை பெற்றது. 2.0 படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்து அதிக வசூல் ஈட்டிய படம் ஜெயிலர் தான். மேலும் அனிரூத் இசையமைத்த பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மொத்தத்தில், இந்த படம் 600 கோடி ரூபாயைத் தாண்டிய வசூலை எட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த சாதனையால், “ஜெயிலர்” படம் ரஜினிகாந்துக்கு திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்நிலையில் ஜெயிலர் 2 படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விரைவில் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    “ஜெயிலர் 2” படம் திரையரங்குகளில் வெளியானவுடன் மாபெரும் வரவேற்பைப் பெறும் என திரையுலக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், படக்குழுவினர் உடன் ரஜினிகாந்த் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • ஆடு பகை.. குட்டி உறவு!.. சத்தியராஜுக்கு எதிராக விஜய்க்கு ஆதரவு கொடுத்து சிபிராஜ் போட்ட போஸ்ட்!..

    ஆடு பகை.. குட்டி உறவு!.. சத்தியராஜுக்கு எதிராக விஜய்க்கு ஆதரவு கொடுத்து சிபிராஜ் போட்ட போஸ்ட்!..

    நடிகர் சத்யராஜ் திமுகவுக்கு ஆதரவாக நட்சத்திர பேச்சாளராக களத்தில் இறங்கிய நிலையில், தலைவா படத்தில் அவர் நடித்ததையே மறந்துவிட்டு விஜய்க்கு எதிராக மோசமாக பேசினார். ஆனால், அவரது மகன் சிபிராஜ் விஜய்க்கு ஆதரவாக வெளியிட்ட நீண்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட் தற்போது வைரலாகி வருகிறது.

    “1993-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி, பொள்ளாச்சி சக்தி ஹோட்டல் டெரஸில் அப்பாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள நீங்கள் எஸ்.ஏ. சந்திரசேகர் சார் மற்றும் கேப்டன் விஜயகாந்த் மாமாவுடன் வந்திருந்தபோதுதான் நான் உங்களை முதன்முதலில் சந்தித்தேன். இந்த அடக்கமான இளைஞர், என்னையும் சேர்த்து லட்சக்கணக்கான இதயங்களை வென்று, எதிர்காலத்தில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுப்பார் என்று அப்போது நான் சிறிதும் அறிந்திருக்கவில்லை!

    நீங்கள் இனி நடிக்கப் போவதில்லை என்ற உண்மையை எங்களால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், ஒரு ரசிகனாக, நடிகனாக, சகோதரனாக மற்றும் நண்பனாக, நீங்கள் ஒரு புதிய பாதையைத் தேர்ந்தெடுக்கும் முடிவை மதிப்பது முக்கியம் என்று நான் உணர்கிறேன், மேலும் நான் எப்போதும் உங்களுக்குத் துணையாக நிற்பேன்.பல ஆண்டுகளாக, நீங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ என் வாழ்வில் ஒரு முக்கியப் பங்கை ஆற்றியுள்ளீர்கள்.

    உங்கள் மீதான எங்கள் பரஸ்பர அன்பால் நாங்கள் ஒன்றுபட்டிருந்ததால்தான் எனது பல நெருங்கிய நட்புகள் உருவாயின. அப்போது என் காதலியாக இருந்து பின்னர் மனைவியான ரேவதியுடனான எனது முதல் சந்திப்பு, 20-11-2000 அன்று ஆல்பர்ட் திரையரங்கில் ‘பிரியமானவளே’ திரைப்படத்தைப் பார்த்தபோது நிகழ்ந்தது.

    உங்களின் மரியாதைக்குரிய மற்றும் வலிமைமிக்க போட்டியாளர்களைப் போற்றிய என் அன்புக்குரியவர்களுக்கு எதிராக உங்களைப் பாதுகாக்கும்போதுதான், நான் நடத்திய சூடான, அதே சமயம் ஆரோக்கியமான வாக்குவாதங்களும் விவாதங்களும் பெரும்பாலும் நிகழ்ந்தன.எனது வெற்றிகளைப் போலவே உங்கள் வெற்றிகளையும் நான் ரசித்தேன்.

    பல ஆண்டுகளாக உங்களுடன் நான் செலவிட்ட தனிப்பட்ட தருணங்கள், குறிப்பாக எனது திருமணத்திற்குப் பிறகு இரவு உணவிற்காக உங்கள் வீட்டிற்கு வந்தபோதும், எனது ‘லீ’ திரைப்படத்தின் வெளியீட்டு விழாவில் நீங்கள் கலந்துகொண்டபோதும், எனது திரைப்படங்கள் வெற்றிபெற வாழ்த்தி நீங்கள் எனக்கு அனுப்பிய மெசேஜ்களும், நான் உங்களை அழைக்கும்போதோ அல்லது குறுஞ்செய்தி அனுப்பும்போதோ எனக்குக் கிடைத்த உடனடி பதில்களும் என் வாழ்வின் மிகவும் பொக்கிஷமான நினைவுகளில் அடங்கும்.

    நான் ஒரு சினிமா பின்னணியிலிருந்து வந்திருந்தாலும், சினிமா உலகிற்குள் நுழைய நீங்கள் எனக்கு ஒரு முக்கிய உத்வேகமாக இருந்தீர்கள்.உங்கள் திரைப்படங்கள் பெரும்பாலும் வெறும் பொழுதுபோக்காகக் கருதப்பட்டாலும், அவை உண்மையான அன்பு, நட்பு, கடின உழைப்பு மற்றும் பலவற்றின் மதிப்பை எங்களுக்குக் கற்றுக்கொடுத்தன.

    பெரும்பாலான சுய-உதவி இலக்கியங்களால் வழங்க முடியாத வாழ்க்கையைப் பற்றிய ஆழமான பார்வைகளை உங்கள் குட்டிக் கதைகள் வழங்கின. கடந்த மூன்று தசாப்தங்களாக எங்களை ஊக்கப்படுத்தியதற்கும், மகிழ்ச்சியாகவும் பொழுதுபோக்காகவும் வைத்திருந்ததற்கும் நன்றி! நீங்கள் எங்களுக்கு அளித்த அந்த அற்புதமான திரையுலகத் தருணங்களை நாங்கள் எப்போதும் பொக்கிஷமாகப் போற்றுவோம்!

    ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்ச நானே கேக்க மாட்டேன் ! இது வெறும் ஒரு திரைப்பட வசனம் மட்டுமல்ல; நீங்கள் வாழ்ந்து காட்டும் வாழ்க்கை தத்துவமே இது! வென்று வா தலைவா ! நாங்க இருக்கோம்!” என சிபிராஜ் பதிவிட்டுள்ளார்.

  • உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு!.. அமர்க்களம் ரீ ரிலீஸ் ட்ரெயலர் வந்துடுச்சு!..

    உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு!.. அமர்க்களம் ரீ ரிலீஸ் ட்ரெயலர் வந்துடுச்சு!..

    நடிகர் அஜித் குமார் நடித்த அமர்களம் திரைப்படம் 1999ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படம் அஜித் குமாரின் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அமர்க்களம் படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

    இந்நிலையில், அமர்க்களம் திரைப்படம் மீண்டும் வெளியிடப்பட உள்ளதால், இப்படத்தின் ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளது. பழைய நினைவுகளை மீண்டும் கொண்டு வரும் வகையில், இந்த ட்ரெய்லர் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

    இயக்குநர் சரண் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் அஜித் குமாருடன் ஷாலினி, ரகுவரன், நாசர், ராதிகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரத்வாஜ் இசையமைத்த இப்படத்தின் அனைத்து பாடல்களும் அப்போது பெரும் வரவேற்பைப் பெற்று இன்றும் ரசிகர்களால் நினைவுக்கூறப்படுகின்றன.

    இப்படத்தில் அஜித் குமார் ஒரு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் ஒரு போலீஸ் அதிகாரியின் மகளை கடத்த வேண்டிய நிலை உருவாகிறது. ஆரம்பத்தில் போலியாக தொடங்கும் அந்த உறவு, பின்னர் உண்மையான காதலாக மாறுகிறது. காதல், ஆக்ஷன், பழிவாங்குதல், உணர்ச்சி போன்ற பல அம்சங்களை ஒருங்கிணைத்து கதை நகர்கிறது.

    மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு காலத்திலேயே அஜித் குமார் மற்றும் ஷாலினி இடையே காதல் மலர்ந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் இருவரும் 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். ரசிகர்களிடையே மிகவும் விரும்பப்படும் தம்பதியராக இவர்கள் இன்றளவும் பார்க்கப்படுகின்றனர்.

    அமர்க்களம் திரைப்படம் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது. காலத்தை கடந்தும் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கும் இப்படம், இன்றளவும் பலரால் விரும்பி பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது.

    இந்நிலையில், அமர்க்களம் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 24ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. இதனை முன்னிட்டு படக்குழு ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது. பழைய நினைவுகளை மீண்டும் அனுபவிக்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். திரையரங்குகளில் இந்த படத்தை மீண்டும் காண ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மே 1ம் தேதி அஜித் குமாரின் பிறந்தநாள் வருவதை முன்னிட்டு ஒருவாரம் முன்பே அமர்க்களம் படம் ரீ ரிலீஸ் ஆகிறது.

  • பிரேக்ஃபாஸ்ட் என்ன மாதிரியான படம் தெரியுமா?.. இளம் நடிகை ரோஸ்மின் ஓபன் டாக்!..

    பிரேக்ஃபாஸ்ட் என்ன மாதிரியான படம் தெரியுமா?.. இளம் நடிகை ரோஸ்மின் ஓபன் டாக்!..

    மாடலிங் துறையில் தடம் பதித்து, அதே நம்பிக்கையுடன் சினிமாத்துறையிலும் தடம் பதிக்க இயக்குநர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் மூலம் அறிமுகமாகிறார் நடிகை ரோஸ்மின். இந்தப் படத்தில் அவருக்கு வழக்கமான கதாநாயகி கதாபாத்திரத்தை தாண்டி, வலுவான கதாபாத்திரம் அமைந்துள்ளது. ‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களில் இயக்குநர் காந்தி கிருஷ்ணாவின் கதாநாயகிகள் எப்படி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்களோ அதுபோலவே தனக்கும் வலுவான கதாபாத்திரம் இந்த படத்தில் அமைந்துள்ளதாக ரோஸ்மின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    படத்தில் தனது அனுபவம் பற்றி ரோஸ்மின் பகிர்ந்து கொண்டதாவது, “‘செல்லமே’ படத்தில் ரீமா சென் கதாபாத்திரம் மிகவும் வலுவானது. அதேபோலதான், ‘ஆனந்ததாண்டவம்’ படத்திலும் அப்பாவியான அதேசமயம் வலுவான கதாபாத்திரத்தில் தமன்னா நடித்திருப்பார். ரீமா சென், தமன்னா கதாப்பாத்திரங்கள் தான் கதையை நகர்த்தி செல்லும் வகையில் முக்கியமானதாக இருக்கும். இந்தப் படங்கள் மற்றும் கதாநாயகிகளின் கதாபாத்திரங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகை. அதனால், காந்தி கிருஷ்ணா சாரின் படத்தில் எனக்கு கதாநாயகிக்கான வாய்ப்பு வந்தபோது மிகவும் மகிழ்ந்தேன். இந்தப் படத்தில் நடித்திருப்பது எனக்கு பெருமை”.

    மேலும், “‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தில் பல உணர்வுப்பூர்வமான அதேசமயம் கியூட்டான ரொமாண்டிக் தருணங்களுடன் கூடிய வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என்னுடைய பன்முக நடிப்புத்திறமையை வெளிப்படுத்தியிருக்கும் இந்த கதாபாத்திரம் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும். அவர்களும் என்னுடைய கதாபாத்திரத்தில் தங்களை பொருத்திப் பார்ப்பார்கள் என நம்புகிறேன். இந்த கதாப்பாத்திரம் நிச்சயம் அவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றார்.

    இப்படத்தில் ராணவ், ரோஸ்மின், சம்பத் குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன், அமிதா ரங்கநாத் மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும், ஏப்ரல் 24 அன்று ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

  • போயஸ் கார்டனில் வீடு வாங்க இன்ஸ்பிரேஷனா இருந்திருக்கேன்.. ‘கர’ விழாவில் காலரை தூக்கிவிட்ட தனுஷ்!

    போயஸ் கார்டனில் வீடு வாங்க இன்ஸ்பிரேஷனா இருந்திருக்கேன்.. ‘கர’ விழாவில் காலரை தூக்கிவிட்ட தனுஷ்!

    நடிகர் தனுஷ் நடிப்பில் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாக உள்ள கர திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் தனுஷ் தனது வாழ்க்கை மற்றும் திரைப் பயணத்தை பற்றி வெளிப்படையாக பேசியது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவான கர படத்தில் தனுஷுடன் மமிதா பைஜூ, கே. எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவான இப்படம், ஒரு மனிதன் தனது கடந்த காலத்துடன் போராடி, குடும்பத்தையும் மக்களையும் காப்பாற்றும் த்ரில்லராக எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், தனது போயஸ் கார்டன் வீட்டைப் பற்றி பேசிய தனுஷ், விமான நிலைய ஊழியர் ஒருவர் தன்னுடன் புகைப்படம் எடுக்க கேட்டதாக கூறினார். அந்த ஊழியர் யாரிடமும் பொதுவாக புகைப்படம் எடுக்க மாட்டார். ஆனால், தனுஷ் போயஸ் கார்டன் குறித்து பேசிய வார்த்தைகள் அவருடைய மகனுக்கு ஒரு உந்துதலாக இருந்ததாக தெரிவித்தார். எனவே, அதை மோட்டிவேஷனாக எடுத்துக்கொள்வதா அல்லது வெறும் பொழுதுபோக்காக எடுத்துக்கொள்வதா என்பது அவரவர் விருப்பம் என்று தனுஷ் கூறினார்.

    அதைத் தொடர்ந்து, கர பட நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் விக்னேஷ் ராஜா, “தனுஷ் சாருடன் இணைந்து பணிபுரிந்தது ஒரு பல்கலைக்கழகத்தில் படித்த அனுபவம் போல இருந்தது. அவரது குழுவினர் அனைவரும் மிகுந்த கவனத்துடன் செயல்படுகின்றனர். படம் தொடங்குவதற்கு முன்பே திரையரங்கிற்கு வந்து அமர்ந்து, ஒரு காட்சியும் தவறாமல் பார்க்க வேண்டும். ஐந்து நிமிடம் தாமதமானால் சில விஷயங்களும், பத்து நிமிடம் தாமதமானால் பல விஷயங்களும் புரியாமல் போகலாம்” என்று கூறினார்.

    மேலும், படம் பார்த்த பிறகு தங்களது கருத்துக்களை பகிரலாம். ஆனால், படத்தின் கதை மற்றும் இடைவேளை காட்சிகளை வெளிப்படையாக வெளியிட வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

  • காந்தாரா ஹீரோவை சிரிக்க வைத்த கருணாஸ் மகன்!..யூத் படத்துக்கு இப்படியொரு பாராட்டு!..

    காந்தாரா ஹீரோவை சிரிக்க வைத்த கருணாஸ் மகன்!..யூத் படத்துக்கு இப்படியொரு பாராட்டு!..

    காந்தாரா படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமான இயக்குநர் ரிஷப் செட்டி கென் கருணாஸ் நடிப்பில் வெளியான யூத் படத்தை பற்றி அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

    காந்தாரா அத்தியாயம் 1 திரைப்படம் முன்னதாக வெளியான காந்தாரா படத்திற்கு முன்னால் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் காட்டுப்பகுதி மக்களின் வாழ்க்கை முறைகள் மன்னராட்சி காலத்தில் நடந்த கட்டுப்பாடுகள் என பலவற்றையும் காட்டியிருந்தார். காந்தாரா 400 கோடி வசூலித்து சாதனை படைத்தது.

    அதை தொடர்ந்து ரிஷப் செட்டி தற்போது ஜெய் அனுமான் என்ற பான்-இந்தியா புராண படத்தில் நடிக்கிறார்.இது ஒரு மிதாலஜிக்கல் படமாக இருக்கும் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 2026-இல் அவர் இயக்கத்தை விட நடிப்பில் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

    சமீபத்தில் ஒரு விருது விழாவில் காந்தாரா படத்தின் பயணத்தைப் பற்றி பேசிய அவர்
    அந்த படத்தின் வெற்றிக்கு தனது மனைவியின் உதவியே முக்கிய காரணம் என்று கூறியுள்ளார். மேலும், அவர் இளைஞர்களை சமூக சேவையில் ஈடுபட வேண்டி வலியுருத்தியிருந்தார்.

    பான்-இந்தியா ஸ்டாரான ரிஷப் செட்டி காந்தாரா படத்தின் மூலம் தனக்கென தனி ஸ்டைல் உருவாக்கிவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் கென் கருணாஸ் இயக்கி நடித்திருந்த யூத் திரைப்படத்தை பற்றி பதிவிட்ட அவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு படம் முழுவதும் நான் சிரித்துக்கொண்டே இருந்தேன். யூத் திரைப்படம் அன்பு, நட்பு மற்றும் ஆழமான உணர்ச்சிகளால் நிரம்பியுள்ளது. இது அனைத்து பெற்றோர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மனமார்ந்த அஞ்சலி.

    தனி ஒருவராக இவ்வளவு நுணுக்கமான ஆழத்துடன் எழுதி, இயக்கி, நடித்திருப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கது. ஒவ்வொரு நடிகரும் திரையில் மிகவும் இயல்பாக உயிர் பெற்றுள்ளனர். சுராஜ் வெஞ்சரமுடு சார், தேவதர்ஷினி மேடம் மற்றும் கென்னின் நண்பர்கள் குழு அசத்திட்டாங்க, கென் தமிழ் சினிமாவுக்கு ஒரு சொத்தாக இருப்பீர்கள் என மனதார பாராட்டியுள்ளார். சமீபத்தில், யூத் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது.