Author: adminram

  • LIK vs Mr X: தமிழ் சினிமாவை காப்பாத்தப்போவது யாரு?.. சார் இங்கே ஒரே பைத்தியமா இருக்காங்க சார்!..

    LIK vs Mr X: தமிழ் சினிமாவை காப்பாத்தப்போவது யாரு?.. சார் இங்கே ஒரே பைத்தியமா இருக்காங்க சார்!..

    ஒரு படம் வெளியானால் இயக்குநர்களை தான் பலரும் பாராட்டுவார்கள். அந்த படத்தில் மற்ற இடங்களில் குறைகள் இருந்தால் சுட்டிக் காட்டுவார்கள். ஆனால், சமீப காலமாக தமிழ் சினிமா தொடர்ந்து டல் அடித்து வரக் காரணமே இயக்குநர்கள் தான் என்கின்றனர்.

    கடந்த வாரம் விக்னேஷ் சிவன் 100 கோடி பட்ஜெட்டில் எடுத்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் இதுவரை இந்தியாவில் வெறும் 35 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. உலகளவில் 50 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சனிக்கிழமையான நேற்றும் படத்துக்கு பெரிதாக கூட்டம் வரவில்லை. இந்நிலையில், இந்த வாரம் மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கெளதம் ராம் கார்த்திக் நடித்த மிஸ்டர் எக்ஸ் படமும் மண்ணைக் கவ்வி விட்டதாக கூறுகின்றனர்.

    பிரதீப் ரங்கநாதனுக்காக இந்த வசூல்: விக்னேஷ் சிவன் இயக்கிய படங்களிலேயே லவ் இன்சூரன்ஸ் கம்பெனி அதிக வசூல் ஈட்டும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அதற்கு காரணம் பிரதீப் ரங்கநாதன் தான். லவ் டுடே, டிராகன், டியூட் என தொடர்ந்து 100 கோடி வசூல் ஈட்டியதாக போஸ்டர் அடித்து வெளியிட்டனர். இந்த படம் 50 கோடியை கடக்கவே படாதபாடு பட்டுவிட்டது. நல்லவேளை 210 கோடி பட்ஜெட்டில் திட்டமிட்டதை போலவே இதே மொக்கை கதையை விக்னேஷ் சிவன் படமாக்கியிருந்தார் என்றால் இன்னமும் ஒரு 100 கோடி இழப்பு தயாரிப்பாளருக்கு ஏற்பட்டு இருக்கும் என்கின்றனர்.

    மிஸ்டர் எக்ஸ் வசூல்: ஆர்யா, கெளதம் கார்த்திக்கு எல்லாம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. நல்லா ஹேண்ட்ஸம் ஆகவும் சிக்ஸ் பேக் வைத்து வாட்ட சாட்டமாகவும் இருக்கின்றனர். ஆனால், இயக்குநர்களை தேர்வு செய்வதில் தொடர்ந்து தவறு செய்து வருகின்றனர். எஃப்ஐஆர் படமே அதிகபட்சமாக 24 கோடி வசூல் ஈட்டிய நிலையில், பெரிய பட்ஜெட்டில் அவர் இயக்கத்தில் உருவான மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் 2 நாட்களில் அதிகபட்சமாக 1.36 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. தமிழ் சினிமா இந்த ஏப்ரல் மாதத்தில் ரொம்பவே டல் அடித்து வருகிறது. தனுஷின் கர திரைப்படமாவது கை கொடுக்குமா? அல்லது இட்லி கடை போல கவிழ்த்து விடுமா என தியேட்டர் ஓனர்கள் முதல் திரையுலகமே அச்சத்தில் உள்ளது.

  • என்னோட பிளஸ் பாயிண்டே என் உருவ அழகுதான்!.. வாட்டர்மெலான் திவாகர் இன்னும் திருந்தல மாமா!..

    என்னோட பிளஸ் பாயிண்டே என் உருவ அழகுதான்!.. வாட்டர்மெலான் திவாகர் இன்னும் திருந்தல மாமா!..

    சமீபத்தில் ப்ரோவோக் யூடியூப் சேனலுக்கு பேட்டிக் கொடுத்த போது மீண்டும் சர்ச்சையை கிளப்ப கேமராவை உடைக்கச் சென்ற நிலையில், அந்த யூடியூப் சேனலுக்கும் அவருக்கும் சண்டை வெடித்தது. ஏற்கனவே விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சென்று மாகாபா ஆனந்த், புகழ், கானா வினோத் தன்னை குடித்துவிட்டு அடித்து உதைத்தனர் என போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சமூக வலைதளங்களில் ரீல்ஸ் போடுபவர்களை எல்லாம் விஜய் டிவி பிக் பாஸ் பிரபலங்களாக மாற்றி வருவதன் விளைவு முன்பு மீரா மிதுன், இப்போ வாட்டர்மெலான் திவாகர் என ரசிகர்கள் விஜய் டிவியை குறை கூறி வருகின்றனர்.

    தமிழ் புத்தாண்டு நல்ல நாள் அதுவுமாக ஸ்டேஷனில் வந்து நிக்க வேண்டும் என தலையில் எழுதியிருக்கு அதனால் தான் வந்து நிற்கிறேன் என்றும் பெண்களிடம் ரொம்ப தவறாக நடந்துக் கொண்டார். திருமணமான நடிகையை அவரது கணவர் முன்பே தோள் மீது கை போட்டு, இன்னைக்கு ஒரு நாள் என்கூட வரியான்னு சொல்லிட்டு இதான் காமெடி என்கிறான் அந்த கருமம் புடிச்சவன் என மாகாபா ஆனந்த் கோபத்தை கொட்டினார்.

    இந்நிலையில், பத்திரிகையாளர்களை மீண்டும் சந்தித்த வாட்டர்மெலான் திவாகர் தனது பிளஸ் பாயிண்ட்டே தனது உருவ அழகு தான் என்றும் கல்லூரி படிக்கும் போதே, கோடீஸ்வர சேர்மேன்கள் எல்லாம் தன்னை வந்து பார்த்து இவன் ரொம்ப அழகா இருக்கான், இவன் முகத்துல ஏதோ இருக்கு, பெரிய ஆளா வருவான்னு சொல்றாங்க, நான் ரொம்ப பெரிய ஆள் என்பதால் என்மீது பொறாமைப்பட்டுக் கொண்டு எனக்கு எதிரான சதி செய்யுறாங்க என வாட்டர்மெலான் பேசிய வீடியோவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

  • நான் உனக்கு அம்மாவா?.. திடீரென டென்ஷனான ஸ்ருதிஹாசன்.. இதெல்லாம் ரொம்ப ஓவர்ம்மா!..

    நான் உனக்கு அம்மாவா?.. திடீரென டென்ஷனான ஸ்ருதிஹாசன்.. இதெல்லாம் ரொம்ப ஓவர்ம்மா!..

    மும்பையில் நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்ற நடிகை ஸ்ருதிஹாசனை சந்தித்த பாப்பராஸிகள் போட்டோ எடுப்பதற்காக மேடம் ஒரு போஸ் என சொல்லி போட்டோ எடுப்பது வழக்கம். விமான நிலையத்திலேயே பலர் குடிகொண்டு பிரபலங்கள் வந்து இறங்கியதும் போட்டோக்களையும் வீடியோக்களையும் எடுத்து வருகின்றனர்.

    நடிகை ஸ்ருதிஹாசன் வந்து இறங்கிய நிலையில், பாப்பராஸி ஒருவர் அம்மா ஒரு நிமிஷம் என சொல்ல, யார் நான் உனக்கு மம்மாவா என இந்தியில் பேசி அவரை திட்டி விளாசி விட்டார். அந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

    பெண்களை அம்மா, அக்கா, மேடம் என அழைப்பதில் ஒன்றும் தவறில்லையே, ஆன்ட்டின்னு கூப்பிட்டுருந்தா டென்ஷன் ஆகலாம். இதற்கெல்லாமா போய் திட்டுவாங்க, தமிழ்நாட்டில் நான் தான் அண்ணன், நான் தான் அப்பா என பலரும் உறவு கொண்டாடி வருகின்றனர் தேர்தலுக்காக, இந்த நேரத்தில் இவர் இப்படி கோபப்படுகிறாரே என கலாய்த்து வருகின்றனர்.

    இதுவே சினிமா பிரபலங்கள் அழைத்தால் ஸ்ருதிஹாசன் சிரித்துக் கொண்டிருப்பார். ஆனால், சாதாரண மனிதர்கள் அழைத்தால் இப்படித்தான் சீறி விழுவார் என்று திட்டத் தொடங்கியுள்ளனர்.

    நடிகை ஸ்ருதிஹாசன் 6முறை காதலித்து காதலில் தோற்றுவிட்டேன் என சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் மற்றும் இளைய மகளான அக்‌ஷரா ஹாசன் இருவருக்குமே இன்னமும் திருமணம் ஆகவில்லை என்பது கூடுதல் தகவல்.

    கூலி படம் தோல்வியை சந்தித்த பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாமல் ஹைதராபாத் மற்றும் மும்பை என சுற்றி வருகிறார் ஸ்ருதிஹாசன். தமிழில் கடைசியாக சாய் அபயங்கர், கயாடு லோஹர் நடனமாடிய பவழமல்லி பாடலை பாடியிருந்தார். விஜய் சேதுபதியுடன் ஸ்ருதிஹாசன் நடித்த ட்ரெயின் படமும் மிஷ்கினின் பிசாசு 2 படத்தை போல ரிலீஸ் ஆகாமல் உள்ளது.

  • ரொம்ப நாள் கழிச்சு ரைசா வில்சனுக்கு கிடைச்ச பட வாய்ப்பு.. மிஸ்டர் எக்ஸ் பிடிஎஸ் போட்டோக்கள் வைரல்!..

    ரொம்ப நாள் கழிச்சு ரைசா வில்சனுக்கு கிடைச்ச பட வாய்ப்பு.. மிஸ்டர் எக்ஸ் பிடிஎஸ் போட்டோக்கள் வைரல்!..

    பிக் பாஸ் போட்டியாளராக முதல் சீசனில் களமிறங்கியவர் தான் ரைசா வில்சன். அதற்கு முன்னதாகவே தனுஷ், கஜோல், அமலா பால் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோல் அசிஸ்டண்ட்டாக நடித்திருப்பார். பிக் பாஸ் வீட்டில் ஹரிஷ் கல்யாண் உடன் இவருக்கு நல்ல நெருக்கம் ஏற்பட்டது.

    நிகழ்ச்சி முடிந்த உடனே இருவரும் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து ஹிட்டும் கொடுத்தனர். அடுத்து ஹரிஷ் கல்யாண் நடித்த தனுசு ராசி நேயர்களே படத்திலும் ரைசா வில்சன் இணைந்து நடித்தார். ஆனால், திடீரென ஹரிஷ் கல்யாணுக்கு திருமணமாக இவர்கள் இனைந்து நடிப்பது நின்று போனது.

    ரைசா வில்சன் தனது முகத்தை அழகாக்க எடுத்த சிகிச்சை விபத்தாக மாறி அவரது முகத்தையே வீங்க வைத்த நிலையில், அந்த மருத்துவருக்கு எதிராக பஞ்சாயத்தைக் கூட்டினார். அதன் பின்னர், பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை.

    மனு ஆனந்த் இயக்கத்தில் வெளியான எஃப்ஐஆர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரைசா வில்சன் மீண்டும் மனு ஆனந்த் இயக்கிய மிஸ்டர் எக்ஸ் படத்திலும் காமினி எனும் கதாபாத்திரத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கவர்ச்சி ரோலில் நடித்துள்ளார்.

    ஆர்யா, கெளதம் ராம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர் உடன் ரைசா வில்சன் நடித்த நிலையில், அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் சமயத்தில் எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு படக்குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    பல பிக் பாஸ் நடிகைகள் ஆரம்பத்தில் சினிமா வாய்ப்புகள் கிடைத்தாலும் அதன் பின்னர் காணாமல் போய்விடுகின்றனர். ஓவியா, யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா, லாஸ்லியா, ஷிவானி நாராயணன் என பலர் ஹீரோயினாக மாறினாலும் பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைப்பதில்லை. அந்த வரிசையில் ரைசா வில்சனும் இணைந்த நிலையில், 2026லும் அவர் நடித்த படம் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ரைசா வில்சனுக்கு வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • சூர்யா ரசிகர்களே பொக்கு பொக்குன்னு அடிக்கிறாங்க.. புலம்பித் தள்ளிய ஆர்.ஜே. பாலாஜி.. கருப்பு கதறல்!..

    சூர்யா ரசிகர்களே பொக்கு பொக்குன்னு அடிக்கிறாங்க.. புலம்பித் தள்ளிய ஆர்.ஜே. பாலாஜி.. கருப்பு கதறல்!..

    நாங்க நாலு பேர் பாடல் வெளியிட்டதில் இருந்தே சூர்யா ரசிகர்கள் பொக்கு பொக்குன்னு போட்டு பொளக்குறாங்க என சமீபத்தில் அளித்த பேட்டியில் ஓபனாக கூறியுள்ளார் ஆர்ஜே பாலாஜி. சூர்யாவை வைத்து கருப்பு படத்தை இயக்கியுள்ள அவர் படத்தில் அந்த பாடலே இடம்பெறாது என்றும் கூறியுள்ளார்.

    தயாரிப்பாளரின் பணத்தில் ஜாலியாக ஸ்வாசிகா உள்ளிட்டோருடன் வில்லனுக்கான இன்ட்ரோ பாடலாக உருவான நாங்க நாலு பேரு பாடலில் ஆர்ஜே பாலாஜி நடனமாடியிருந்தார். ஆனால், கடைசியில் அந்த பாடல் படத்திலேயே இடம் பெறாது என சொல்லியுள்ள நிலையில், அப்புறம் எதுக்காக எடுக்க வேண்டும் என்றும் வெறும் லிரிக் வீடியோ மட்டும் ஏன் விட வேண்டும் என ரசிகர்கள் மீண்டும் பொக்கு பொக்குன்னு பொளக்க ஆரம்பித்துள்ளனர்.

    அஜித்தின் வலிமை படத்திற்கு பிறகு ரசிகர்கள் அதிகமாக அப்டேட் கேட்டது கருப்பு படத்துக்குத்தான் என்றும் படத்தை அறிவித்ததில் இருந்து இதுவரை 2 வருஷம் அந்த படத்துக்காக வேலை பார்த்துள்ளேன் என்றும் ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார்.

    அஜித் படம் வந்தால் விஜய் ரசிகர்கள் அடிப்பார்கள், விஜய் படம் வந்தால் அஜித் ரசிகர்கள் அடிப்பார்கள். ஆனால், கருப்பு பட அப்டேட் வந்தால் சூர்யா ரசிகர்கள் எங்களைத்தான் போட்டு அடிக்கின்றனர் என சோஷியல் மீடியாவில் வாங்கிய அடிகளை அடுக்கி உள்ளார்.

    நாங்க நாலு பேரு பாடல் ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், சாய் அபயங்கர் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டார் என்றும் முதலில் நாங்க ராத்து ராசன் பாடலை வெளியிடவே நினைத்தோம். ஆனால், என்னோட டீம் அண்னா இந்த பாடலை இறக்குங்க செம வைபாக இருக்கும் என உசுப்பேத்தி விட்டு உடம்பை ரணகளமாக்கிட்டாங்க என சொல்லியுள்ளார்.

    வரும் மே 14ம் தேதி சூர்யா, த்ரிஷா, ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள கருப்பு படம் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. கங்குவா, ரெட்ரோ என அடிவாங்கி வரும் சூர்யா கருப்பு படம் மூலம் கம்பேக் கொடுப்பாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

  • மீண்டும் ஜெய் பீம் இயக்குநர் இயக்கத்தில் நடிக்கப் போகும் சூர்யா!.. அடுத்தடுத்து சரவெடிதான்!..

    மீண்டும் ஜெய் பீம் இயக்குநர் இயக்கத்தில் நடிக்கப் போகும் சூர்யா!.. அடுத்தடுத்து சரவெடிதான்!..

    ஜெய் பீம் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா நடித்த சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்ற நிலையில், அவர் அடுத்ததாக இணையும் இயக்குநர் குறித்த தகவல்கள் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகின்றன.

    ஜெய் பீம் திரைப்படம் 2021ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற சமூக நீதி சார்ந்த படமாகும். இந்தப் படத்தை டி.ஜே. ஞானவேல் இயக்கியிருந்தார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், பழங்குடியினர் மீது போலீஸ் நடத்தும் அத்துமீறலை மையமாகக் கொண்டு உருவானது. இதில் நீதிக்காக போராடும் வழக்கறிஞராக சூர்யா நடித்திருந்தார். குறிப்பாக “சந்துரு” என்ற கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே மிகுந்த பாராட்டைப் பெற்றது.

    இதனைத் தொடர்ந்து, தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கருப்பு திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ளார். வணிக அம்சங்களும் உணர்ச்சி கூறுகளும் இணைந்த இப்படம் வரும் மே 14 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதைத் தொடர்ந்து, சூர்யாவின் அடுத்த படமாக விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் ஜூலை மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு கதைக்களங்களில் தொடர்ந்து நடித்து வரும் சூர்யா, தனது திரைப்பயணத்தில் புதுமைகளை முயற்சி செய்து வருகிறார்.

    இந்நிலையில், மீண்டும் ஒரு முக்கிய தகவலாக, ஜெய் பீம் படத்தின் வெற்றிக் கூட்டணியான சூர்யா மற்றும் இயக்குநர் டி.ஜே. ஞானவேல் இருவரும் மீண்டும் இணைந்து புதிய படம் ஒன்றில் பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டணி மீண்டும் உருவாகும் என்ற செய்தி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜெய் பீம் போன்ற சமூக உணர்வுகள் மிக்க படத்தை வழங்கிய இந்த இணைப்பு, மீண்டும் ஒரு வலுவான கதையுடன் திரையில் வருமா என்ற ஆவலில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ரஜினிகாந்தை வைத்து வேட்டையன் படத்தை இயக்கிய ஞானவேலுக்கு அந்த படம் பெரிய வெற்றியைக் கொடுக்கவில்லை. இந்நிலையில், மீண்டும் சூர்யாவுடன் இணைந்து கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார்.

  • உயிர், உலக் நல்லா வளர்ந்துட்டாங்களே.. LIK ஃப்ளாப் ஆனாலும் ஹேப்பியா இருக்கும் விக்கி, நயன்!..

    உயிர், உலக் நல்லா வளர்ந்துட்டாங்களே.. LIK ஃப்ளாப் ஆனாலும் ஹேப்பியா இருக்கும் விக்கி, நயன்!..

    நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் என்பதால் அடிக்கடி கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது. சமீபத்தில் கூட இவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர். அதனைத் தொடர்ந்து, தங்கள் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். அந்தப் புகைப்படங்கள் ரசிகர்களின் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

    இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” திரைப்படம் ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கிடையில், கடந்த ஆண்டு சமூக ஊடகங்களில் பெரிதும் வைரலான “நார்மல் பீப்பிள்” குறித்த கருத்து தொடர்பாக அவர் சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளார். அந்த கருத்து பொதுமக்களை குறிவைத்து கூறப்பட்டதல்ல; அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

    மேலும், நடிகர் தனுஷ் உடனான தனது நட்பு முறிவு குறித்து விக்னேஷ் சிவன் மனமுடைந்த நிலையில் பேசியது ரசிகர்களிடையே அதிக கவனத்தை பெற்றுள்ளது. “என் வாழ்க்கையில் அது ஒரு பெரிய இழப்பு” என்று அவர் உணர்ச்சியுடன் கூறியுள்ளார்.

    நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரட்டை மகன்கள் உள்ளனர்; அவர்களுக்கு “உயிர்” மற்றும் “உலக்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. குடும்ப வாழ்க்கையையும் தொழிலையும் சமநிலைப்படுத்தி சிறப்பாக முன்னெடுத்து வருகின்றனர்.

    நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான “மன சங்கர வர பிரசாந்த் காரு” தெலுங்கு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது அவர் “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், யஷ் உடன் நடித்த டாக்ஸிக், மம்மூட்டி, மோகன்லால் உடன் நடித்த பேட்ரியாட் படங்கள் ரிலீஸுக்கு ரெடியாக உள்ளன. பாலிவுட்டில் சல்மான் கான் ஜோடியாகவும் கமிட் ஆகியுள்ளார். இப்படியாக பிஸியான தொழில் வாழ்க்கையிலும், குடும்பத்திற்கும் சம அளவு முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

    இந்த நிலையில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தங்கள் குழந்தைகளான உயிர் மற்றும் உலகுடன் எடுத்துக் கொண்ட சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

  • தவெகவில் இணைந்த தாமரைச்செல்வி.. தங்க சங்கிலி பஞ்சாயத்து தீர்ந்துடுச்சாம்மா?..

    தவெகவில் இணைந்த தாமரைச்செல்வி.. தங்க சங்கிலி பஞ்சாயத்து தீர்ந்துடுச்சாம்மா?..

    பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பரவலாக அறியப்பட்ட நடிகை தாமரை செல்வி, தற்போது தவெக தலைவர் விஜயின் கட்சியான தவெகவில் இணைந்துள்ளார். இதை உறுதிப்படுத்தும் வகையில், கட்சியில் இணைந்த போது எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

    தாமரை செல்வி ஆரம்பத்தில் கிராமப்புறங்களில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தவர். பாரம்பரிய இசை நாடகங்கள் மற்றும் மேடை நிகழ்ச்சிகள் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி, மெதுவாக மக்கள் கவனத்தை பெற்றார். பின்னர், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சுமார் 90 நாட்கள் வீட்டில் இருந்து ரசிகர்களின் ஆதரவை பெற்றார். அவரது இயல்பான நடத்தை, நேர்மையான பேச்சு மற்றும் உணர்ச்சிவசப்பட்ட தருணங்கள் ஆகியவை அவரை பொதுமக்கள் மனதில் தனி இடம் பெறச் செய்தன.

    தனிப்பட்ட வாழ்க்கையைப் பொருத்தவரை, தாமரை செல்வியின் முதல் திருமணம் பல சிக்கல்களால் முடிவடைந்தது. அவருக்கு ஒரு மகன் உள்ளார். பின்னர் பார்த்தசாரதி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையை முன்னெடுத்து வருகிறார். மேலும், பிக் பாஸ் ஜோடிகள் போன்ற நிகழ்ச்சிகளில் தனது கணவருடன் இணைந்து பங்கேற்று ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளார்.

    பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, சீரியல் மற்றும் சினிமா வாய்ப்புகளிலும் கவனம் செலுத்தி வரும் தாமரை செல்வி, “சின்ன மருமகள்” என்ற தொடரில் நடித்து வந்தார். இந்த தொடரில் நடித்துக் கொண்டிருந்த நடிகை ஸ்வேதாவின் கணவர், தாமரை செல்வியிடமிருந்து மூன்று பவுன் சங்கிலியை வாங்கி அடகு வைத்து திருப்பிக் கொடுக்க மறுப்பதாக குற்றம் சாட்டி வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் தாமரை செல்வி மீண்டும் செய்திகளில் இடம்பிடித்தார்.

    இந்நிலையில், தற்போது அவர் நடிகர் விஜய்யின் தவெக கட்சியில் இணைந்திருப்பது அவரது அரசியல் பயணத்தின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது. இதனால், இனி அவர் அரசியல் மற்றும் நடிப்பு ஆகிய இரண்டையும் இணைத்து எவ்வாறு முன்னெடுத்துச் செல்கிறார் என்பது குறித்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

  • ஆமையுடன் கடலில் ரேஸ் விட்ட பிக் பாஸ் வர்ஷினி.. நீச்சல் உடையில் சும்மா இணையத்தையே சூடாக்குறாரே!..

    ஆமையுடன் கடலில் ரேஸ் விட்ட பிக் பாஸ் வர்ஷினி.. நீச்சல் உடையில் சும்மா இணையத்தையே சூடாக்குறாரே!..

    நடிகை வர்ஷினி, பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சமூக ஊடகங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், தற்போது நீச்சலுடையில் கடலில் நீந்திக்கொண்டிருக்கும் அவரது வீடியோ வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

    வர்ஷினி ஒரு நடிகை, மாடல் மற்றும் பாடகி ஆவார். இவர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால், வெறும் 22 நாட்களில் வீட்டிலிருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த காதல் ஜோடிகளுக்கிடையே ஏற்பட்ட குழப்பங்களில் அவர் ஈடுபட்டதாகக் கூறப்பட்டதால், சிலரால் விமர்சிக்கப்பட்டார். அதே சமயம், அவரது கவர்ச்சியான தோற்றத்திற்காக அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமும் உருவாகியுள்ளது.

    மேலும், கடந்த ஆண்டு சந்தானம் நடித்த DD Next Level படத்தில் சிறிய ஆனால் கவர்ச்சியான காட்சியில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சொட்ட சொட்ட நனையுது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவ்வாறு, தன்னிடம் வரும் பட வாய்ப்புகளை வர்ஷினி தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்.

    சமீப காலமாக, ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வந்த அவர், தற்போது பிகினி உடையில் கடலில் மீன்கள் மற்றும் ஆமைகளுடன் நீந்திக்கொண்டிருக்கும் வீடியோவை வெளியிட்டு, மீண்டும் தனது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

    இந்த சம்மருக்கு ஏற்ற சரியான வீடியோ இதுதான் என்றும் அந்த ஆமை போலவே உங்க பிகினியும் இருக்கு, மீன், ஆமையெல்லாம் கடித்து விடாதா, பயமே இல்லை உங்களுக்கு என ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

  • மிஸ்டர் எக்ஸ் விமர்சனம்.. ஆர்யாவுக்கும், கெளதம் ராம் கார்த்திக்கும் மறுபடியும் பல்பு தான்!..

    மிஸ்டர் எக்ஸ் விமர்சனம்.. ஆர்யாவுக்கும், கெளதம் ராம் கார்த்திக்கும் மறுபடியும் பல்பு தான்!..

    அபிஷன் ஜீவிந்த், கென் கருணாஸ் எல்லாம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி வெற்றிப் படங்களை கொடுத்து வரும் நிலையில், ஆர்யா, கெளதம் கார்த்திக்கு எல்லாம் என்ன ஆனது இப்படியொரு இடியாப்ப சிக்கல் கதையை தேடி நடித்து டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்காங்க என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

    விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகனை வைத்து எஃப்ஐஆர் திரைப்படத்தை எடுத்த மனு ஆனந்த் அந்த படத்தை விட சூப்பர் படத்தைக் கொடுக்கிறேன் என தனது பேட்டியில் துரந்தர் எல்லாம் கொண்டு வந்து ரிலீஸுக்கு முன்பாக பேசினார்.

    ஆனால், படத்தை பார்த்தவுடன் இதுக்காக இவ்ளோ பில்டப் என்றும் இதுக்கு லெஜண்ட் சரவணா நடித்த லீடர் படமே ஸ்பை த்ரில்லர் படத்தை எப்படி எடுக்கணும்னு பாடம் நடத்தும் போல இருக்கே என ரசிகர்கள் தியேட்டரிலேயே கத்தத் தொடங்கி விட்டனர்.

    இடியாப்ப சிக்கல் கதை: நாட்டையே காப்பாற்றும் மிஸ்டர் எக்ஸ் ஆனால், அது ஆர்யாவும் இல்லை, கெளதம் கார்த்திக்கும் இல்லை என்கிற இடத்திலேயே இருவருக்கும் விபூதி அடித்துவிட்டு இயக்குநர் புதுசாக செட்டாகாத டோப்பாவை மாட்டி சரத்குமாரை ஹீரோவாக ஆரம்பத்தில் காட்டிவிட்டார். அப்புறம் அதே சரத்குமார் தான் ஆர்யாவின் அப்பா, இந்தியாவையும் உங்க அப்பாவையும் காப்பத்துறது தான் உன்னோட மிஷன் இம்பாசிபிள் என மஞ்சு வாரியர் மிஷனை தூக்கி தாலி கட்டி குடும்ப வாழ்க்கை நடத்த திட்டமிட்ட ஆர்யாவிடம் கொடுக்க, அவருக்கு வில்லனாக கெளதம் கார்த்திக் ரைசா வில்சன் உடன் ஜோடி போட்டு குதிக்க, கடைசியில் டைரக்டர் மெயின் வில்லனே நான் தான் என வச்ச ட்விஸ்ட்டை பார்த்து விட்டு ஆளவிடுங்கடா சாமி என தெறித்து ஓட ஆரம்பித்து விட்டனர் ரசிகர்கள்.

    ஆர்யா, கெளதம் கார்த்திக்கு மீண்டும் பல்பு தான்: இப்படித்தான் ஆர்யா கேப்டன் படத்தில் நடித்தார். ஹாலிவுட் தரத்தில் படம் எடுக்கிறேன் என பிரடேட்டர்களை எல்லாம் கொண்டு வந்து உப்புமா படத்தைக் கொடுத்து காண்டாக்கினர். அதே வகையில் தான் இந்த படமும் கதை நல்லா இருந்தாலும் திரைக்கதை, உருவாக்கப்பட்ட விதம் எல்லாம் படு மோசம்.

    பிரதமர் மோடிக்கிட்ட பேசிட்டு இருந்துட்டே அடுத்த 10 நிமிஷத்துல கல்பாக்கம் அனல் மின் நிலையத்துக்கு வந்து கிளைமேக்ஸில் மஞ்சு வாரியர் சண்டை போடுறது எல்லாம் காமெடியின் உச்சம். இந்தியாவின் உளவுத்துறையை பெருமைப்படுத்துறோம்னு படம் எடுப்பாங்க பார்த்தால், ட்ரோல் பண்ணி வச்சிருக்காங்க. சரத்குமாருக்காக படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

    ரேட்டிங்: 2.5/5.