Tag: ajithkumar

  • எவ்வளவு தோல்விப்படங்கள் கொடுத்தாலும் அஜித் மாஸா நிக்கிறாரே..? அதெப்படி..?

    தமிழ்த்திரை உலகில் அல்டிமேட் ஸ்டார் என்றாலே சட்டென்று நம் நினைவுக்கு வருபவர் தல அஜித் தான். இப்போது எந்தப் பட்டமும் எனக்கு வேண்டாம் என தைரியமாக சொன்னார். எனக்கு ஏகே என்றும் அஜித்குமார் என்றும் அழைத்தாலே போதும் என்றார். இவர் இப்படி இருக்க அதன்பிறகுதான் கமலும் இதுபோன்று எனக்குப் பட்டம் எதுவும் தேவையில்லைன்னு துறந்தார். அஜித்துக்கு பல தோல்விப்படங்கள் தொடர்ந்தாலும் கூட இன்னும் பேரும் புகழுடனும் கொஞ்சம் கூட அசராமல் நிக்கிறாரே என்ற கேள்வி அனைவருக்கும் எழும். அதற்கான பதிலைப் பார்க்கலாமா…

    எத்தனை தோல்விகளைக் கொடுத்தாலும் அஜித் ரசிகர்கள் மனம் தளராமல் எதையும் எதிர்பார்க்காம அவர் பின்னாடி நிக்கிறாங்களே… அதுக்கு என்ன காரணம்னு ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் அளித்த பதில் இதுதான்.

    நமக்கு ஒருவரைப் பிடிச்சிடுச்சுன்னா எதுவுமே நமக்குத் தெரியாது. அவரை ஒரு வெற்றிகரமான மனிதராகத்தான் நாம பார்ப்போம். அஜித்தைப் பொருத்தவரைக்கும் கோடிக்கணக்கில் ரசிகர்களை அவர் குவித்து வைத்து இருக்கிறார். அந்த ரசிகர்கள் எல்லாரும் அந்தளவுக்கு அவரை நேசிக்கிறாங்க. அப்படி இருக்கும்போது அந்தத் தோல்வி ஒரு சதவீதம் கூட அவர்களைப் பாதிக்காது என்பதுதான் உண்மை. இது எல்லாத்தையும் தாண்டி அஜித் தன்னம்பிக்கையின் உச்சம்.

    அப்படிப்பட்ட நடிகருடைய ரசிகர்களுக்கும் அந்தத் தன்னம்பிக்கை இருக்கத்தானே செய்யும் என்று பதில் அளித்துள்ளார் சித்ரா லட்சுமணன். 2015ல் என்னை அறிந்தால் படத்துக்குப் பிறகு வேதாளம், விவேகம், நேர்கொண்ட பார்வை, வலிமை, விடாமுயற்சி என பல தோல்விப்படங்கள் வந்தன. விசுவாசம், துணிவு, குட் பேட் அக்லி ஆகியவைதான் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

    ரசிகர் மன்றத்தை வேண்டாம் என்று கலைத்தவர் அஜித் தான். ஆனாலும் ரசிகர்கள் அஜித் படம் என்றாலே கொண்டாடித் தீர்த்து விடுகிறார்கள். அஜித் இவ்வளவுக்கும் படங்களில் மட்டும் நடிக்கவில்லை. கார்இ பைக் ரேஸ் என்று சுற்றிக் கொண்டே இருக்கிறார். அதற்கான பந்தயங்களிலும் கலந்து கொள்கிறார். இருந்தாலும் அஜித் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அவ்ளோ வரவேற்பு உள்ளது.

  • அஜித்தை தட்டி தூக்கிய ரஜினி பட இயக்குனர்!.. ஆதிக் ரவிச்சந்திரன் என்னாச்சி?!..

    Ajith kumar: அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்கப்போகிறார் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால், அஜித் படங்களை பொறுத்தவரை எந்த ஒரு அப்டேட்டும் உடனே வெளியாகாது. அஜித் நிறைய இடைவெளி விட்டு, நிறைய யோசித்து, பல இயக்குனர்களிடம் கதை கேட்டு பின்னரே முடிவு செய்வார். அதற்குள் அப்டேட் கேட்டு அவரின் ரசிகர்கள் டயர்ட் ஆகிவிடுவார்கள்.

    வலிமை படம் உருவான போது சுமார் ஒன்றரை வருடம் எந்த அப்டேட்டும் வெளிவரவில்லை. அஜித் ரசிகர்கள் பொறுமையிழந்து பல இடங்களிலும் வலிமை அப்டேட் கேட்ட கதை நடந்தது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்த விடாமுயற்சி படமும் முடிவதற்கு பல மாதங்கள் ஆனது. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பின்னரே படம் வெளியானது. ஆனால், அப்படம் சூப்பர் ஹிட் அடிக்கவில்லை.

    அதேநேரம், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் அஜித் ரசிகர்களை முழு திருப்திப்படுத்தியது. எனவே, அப்படம் ஓரளவுக்கு வசூலை பெற்றுவிட்டது. அஜித்துக்கு ஒரு பழக்கம் உண்டு. ஒரு இயக்குனரை பிடித்துவிட்டால் அவரின் இயக்கத்தில் தொடர்ந்து நடிப்பார். அப்படித்தான் ஹெச்.வினோத் இயக்கத்தில் தொடர்ந்து 3 படங்களில் நடித்தார்.

    அதேபோல் குட் பேட் அக்லி படத்திற்கு பின்னரும் ஆதிக்கின் இயக்கத்திலேயே ஒரு படத்தில் அஜித் நடிக்க திட்டமிட்டிருக்கிறார். ஆனால், தயாரிப்பாளர் உறுதி செய்யப்படவில்லை. ஏனெனில் அஜித் கேட்கும் 180 கோடி சம்பளத்தை கொடுக்க யாரும் முன்வரவில்லை. ஒருவழியாக ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இப்படத்தை தயாரிக்க முன் வந்திருக்கிறார்.

    ஒருபக்கம் அஜித்தை வைத்து படம் இயக்கும் ஆசையில் தனுஷ் இருக்கிறார். ஆனால், அவர் இதுவரை அஜித்தை சந்தித்து கதை சொல்லவில்லை. அதேபோல், அஜித்தை வைத்து படம் இயக்கும் முயற்சியில் கார்த்திக் சுப்பாராஜும் ஈடுபட்டிருக்கிறார். இதில் ஏதேனும் ஒன்று அஜித்துக்கு பிடித்தால் ஆதிக் படத்திற்கு பின் இந்த படம் துவங்கும் என சொல்லப்படுகிறது.

    கார்த்திக் சுப்பராஜ் ரஜினியை வைத்து பேட்ட எடுத்தார். சூர்யாவை வைத்து ரெட்ரோ எடுத்தார். விஜயை வைத்து படமெடுக்க சில முறை முயற்சி செய்தும் விஜய்க்கு கதை பிடிக்கவில்லை. எனவே, அஜித் பக்கம் போயிருக்கிறார் கார்த்திக் சுப்பாராஜ். இது நடந்துவிட்டால் விஜயை தவிர மற்ற பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்கிவிட்ட திருப்தி அவருக்கு வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • காதல் கோட்டை படத்தில் நடிக்க வேண்டியது இவரா?!.. இது லிஸ்ட்லயே இல்லயே!…

    Kadhal Kottai: அகத்தியன் இயக்கத்தில் அஜித் – தேவயாணி நடித்து 1996ம் வருடம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் காதல் கோட்டை, கதாநாயகனும், கதாநாயகியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமலேயே கடிதம் மூலம் காதலித்துக் கொள்வார்கள். படத்தின் இறுதிக்காட்சியில்தான் இருவரும் சந்திப்பார்கள் என்பதுதான் படத்தின் கதை. வளரும் நேரத்தில் அஜித்துக்கு காதல் கோட்டை ஒரு முக்கிய படமாக அமைந்தது. இந்த படத்திற்காக சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை அகத்தியன் வாங்கினார்.

    காதல் கோட்டை படத்தில் ஹீரா, தலைவாசல் விஜய், கரண் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். தேவாவின் இசையில் எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட் அடித்தது. ஆனால், இந்த படம் பல நடிகர்களை தாண்டியே அஜித்திடம் வந்தது. அது பற்றி பார்ப்போம்:

    இயக்குனர் அகத்தியன் பல தயாரிப்பாளர்களிடமும் இந்த கதையை சொன்னார். ஆனால், யாருக்கும் நம்பிக்கை வரவில்லை. கதாநாயகனும், கதாநாயகியும் படம் முழுக்க சந்திக்காமலேயே இருந்தால் ரசிகர்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள் என அவர்கள் நினைத்தார்கள். விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கூட அகத்தியன் கதை சொன்னார். அவர் சில மாதங்கள் காத்திருக்க சொன்னார். ஆனால் உடனே ஷூட்டிங் துவங்க வேண்டிய சூழ்நிலை என்பதால் விஜய் அதில் நடிக்கவில்லை.

    எனவே, சீரியல் நடிகர் அபிஷேக்கை போட்டு படத்தை எடுத்தார் அகத்தியன். பல நாட்கள் படப்பிடிப்பு நடந்தநிலையில், அந்த தயாரிப்பாளருக்கும், அகத்தியனுக்கும் இடையே முட்டிக்கொண்டது. இதுபற்றி பேட்டில் ஒன்றில் சொன்ன அபிஷேக் ‘பிரச்சனை ஆனதும் நான் மும்பை சென்றுவிட்டேன். 10 மாதங்கள் கழித்து வந்து பார்த்தால் அந்த படம் தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தது. அஜித் நடித்திருந்தார். படம் பார்த்துவிட்டு அழுதுவிட்டேன். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை’ என சொல்லியிருந்தார்.

    இந்நிலையில், நடிகர் சித்தப்பு சரவணன் ஊடகம் ஒன்றில் பேசிய போது ‘காதல் கோட்டை கதை என்னிடமும் வந்தது. அகத்தியனை கூட்டிக்கொண்டு சில தயாரிப்பாளர்களிடம் கதை சொல்ல வைத்தேன். நிறைய ரயில் காட்சி இருந்ததால் அதை மாற்றி பஸ்ஸில் வைக்கலாம் என சொல்வார்கள். அதைக்கேட்டு அகத்தியன் வெளியே போய்விடுவார். ஒருமுறை அவர் கதையை கேட்டு ஒரு தயாரிப்பாளர் அட்வான்ஸும் கொடுத்தார். ஆனால், அதுவும் நடக்கவில்லை’ என சொல்லியிருக்கிறார்.

    காதல் கோட்டைக்கு முன்பே அஜித்தை வைத்து வான்மதி படத்தை இயக்கியிருந்தார் அகத்தியன். அந்த படத்தை தயாரித்தது சிவசக்தி பாண்டியன் என்கிற தயாரிப்பாளர். யாரும் செட் ஆகவில்லை என்பதால் அவரிடம் பேசி அஜித்தை வைத்தே படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார் அகத்தியன்.

  • ரஜினி, அஜித் ரெண்டு பேரோட அடுத்த படத்துக்கு தயாரிப்பாளர்கள் போட்டா போட்டி… டைரக்டர் யாரு..?

    தமிழ்த்திரை உலகில் தற்போது விஜய் தனது கடைசி படமாக ஜனநாயகன் என்பதை அறிவித்துள்ளதால் அங்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தை பிடிக்கப்போவது யார் என்று பல்வேறு கேள்விகள் வருகின்றன. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் கையில் தான் விஜய் துப்பாக்கியைக் கொடுத்தார்.

    அதனால் அவர்தான் அந்த இடத்தைப் பிடிப்பார் என்கிறார்கள். இது இப்படி இருக்க இப்போது ரஜினி, அஜித் படங்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. ரெண்டு பேருக்குமே தயாரிப்பாளர்கள் நான் நீ என்று போட்டி போடுகிறார்களாம். என்ன விவரம்னு பார்க்கலாமா…

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நித்திலன் சுவாமிநாதனுடன் இணைந்து அடுத்து படம் பண்ணப் போறதா சொல்றாங்க. இதே போல அஜித்தின் அடுத்த பட இயக்குனர் பற்றியும் பல கருத்துகள் வருகின்றன. அதுபற்றி பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் என்ன சொல்றாருன்னு பாருங்க.

    ரஜினிகாந்தை வைத்து படம் எடுக்க 2 நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில இருக்காங்க. ஒண்ணு ஐசரி கணேஷ். இன்னொன்னு ரெட் ஜெயண்ட் நிறுவனம். இந்த ரெண்டு நிறுவனத்துக்கும் ரஜினிகாந்த் நிச்சயமா ஒரு படம் பண்ணப் போறாரு. அதுல எந்த சந்தேகமும் இல்லை. இந்த ரெண்டு தயாரிப்புல எதுக்கு முதல்ல நடிக்கிறாருன்னு தெரியல. அதை முடிவு பண்ணினதுக்கு அப்புறம் தான் டைரக்டர் யாருன்னு முடிவு பண்ணுவாங்க. அதுக்கு அப்புறம்தான் இதைப் பற்றிய அறிவிப்புகள் எல்லாம் வரும்.

    அஜித்தோட அடுத்த படத்துக்கு ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்குனர்னு முடிவு ஆகிடுச்சு. ஆனா தயாரிக்க 2 நிறுவனங்கள் போட்டிப் போட்டுக்கிட்டு இருக்காங்க. யாருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கப் போகுதுன்னு தெரியல. ஆதிக் ரவிச்சந்திரனைத் தொடர்ந்து அஜித் நடிக்கப் போற அடுத்த படத்துக்கு கார்த்திக் சுப்புராஜ் தான் டைரக்டர். இது ரசிகர்களால் எதிர்பார்க்கக்கூடிய ப்ரஷ்ஷான காம்பினேஷன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • அந்த ஹீரோயின் வேணும்னு சொல்ல தெரியுது.. இது தெரியலயா? அஜித்தை கலாய்த்த கே.ராஜன்

    தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். தற்போது அவர் தன்னுடைய ஒரே ஃபேஷனான கார் ரேஸில் கலந்து கொண்டு வருகிறார். பல நாடுகளில் நடக்கும் கார் ரேஸில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அக்டோபர் மாதம் வரை தனது முழு கவனத்தையும் ரேஸில்தான் செலுத்த இருக்கிறார் அஜித். அதன் பிறகு தான் தன்னுடைய அடுத்த பட அறிவிப்பை வெளியிடுவார்.

    இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. பிளாக்பஸ்டர் வெற்றியும் அடைந்தது. இந்தப் படத்திற்கு முன்பு வரை அஜித் தன்னுடைய படங்களின் பெயர்களை தமிழிலேயே வைத்து வந்தார். இது ரசிகர்கள் மத்தியிலும் சரி திரை பிரபலங்கள் மத்தியிலும் சரி அஜித் மீது ஒரு பெரிய மரியாதையை கொடுத்தது.

    இந்த நிலையில் குயிலி என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பிரபல சினிமா தயாரிப்பாளர் கே ராஜன் படத்திற்கு தமிழ் பெயர் கொடுப்பதற்கான முக்கியத்துவத்தை பற்றி பேசி இருந்தார். ஒரு காலத்தில் ஆங்கிலத்திலேயே பெயர் வைத்து வந்த நிலையில் கருணாநிதி இனிமேல் தமிழ் பெயர்களில் வெளியாகும் படங்களுக்கு மானியம் கிடைக்க ஒரு உத்தரவை பிறப்பித்தார்.

    அதிலிருந்து தமிழிலேயே படங்களின் பெயர்கள் வெளியாகின. அதில் அஜித்தும் தன்னுடைய படங்களின் பெயரை தமிழிலேயே கொண்டு வந்தார். ஆனால் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி. அது என்ன பெயர்? அந்த ஹீரோயின் வேணும் என்று மட்டும் சொல்ல தெரிகிறது. இது அவருக்கு சொல்ல தெரியலையா .இங்கிலீஷில் டைட்டில் வைக்காதீங்க என சொல்ல வேண்டியது தானே.

    இன்னொரு ஹீரோ இப்போது பொதுநலத்திற்கு வருகிறார். அவருடைய படங்களின் பெயர்களும் ஆங்கிலத்தில் தான் வந்தன. சர்க்கார் என்று சொன்னார். ஏன் அதற்கு தமிழ் பெயர் இல்லையா. இதில் தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என வந்துவிட்டார். சரி அரசியல் இப்போது வேண்டாம். அதனால் இனிமேல் தமிழிலேயே பெயர்களை வைக்க முன்வர வேண்டும் என தன்னுடைய பேச்சை முடித்துக் கொண்டார் கே ராஜன்.

  • அஜித் ரெக்கமண்ட் செய்த நடிகை.. நடிக்க மறுத்து அட்வான்ஸையும் திரும்ப தந்த சம்பவம்

    அஜித் கெரியரில் முக்கிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் பில்லா. அந்த படத்திற்கு முன்பு வரை அவர் நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.அதனால் அஜித்தை பல வகைகளில் விமர்சனம் செய்து வந்தனர். அப்பொழுதுதான் ரஜினியை சந்திக்கும் வாய்ப்பு அஜித்துக்கு கிடைக்க ஏன் நீங்கள் என்னுடைய பில்லா படத்தை ரீமேக் செய்து நடிக்க கூடாது என்ற ஒரு கேள்வியை ரஜினி கேட்டார்.

    அதன் பிறகு தான் பில்லா படத்தில் நடிக்க முடிவு செய்தார் அஜித். விஷ்ணுவர்தன் அந்த படத்தை மிக அற்புதமாக ஹாலிவுட் ரேஞ்சுக்கு படத்தை எடுத்துக் கொடுத்தார். ஸ்டைலிஷ் மன்னன் என ரஜினிக்கு பிறகு அஜித்தை அழைக்க ஆரம்பித்தனர். இந்தப் படத்தால் நயன்தாராவுக்கும் பெரிய பேர் கிடைத்தது .முதன்முறையாக இந்த படத்தின் மூலமாகத்தான் பிகினி உடையில் நயன்தாரா நடித்தார்.

    யாருமே எதிர்பார்க்கவில்லை. நயன்தாரா இந்த அளவு கவர்ச்சியைக் காட்டி பிகினி உடையில் நடிப்பார் என்று. ஆனால் நயன்தாராவுக்கு முன்னாடி அந்த படத்தில் நடிக்க வேண்டியது அசின். இந்த படத்தில் அசின் நடித்தால் நன்றாக இருக்கும் என அஜித்தான் சொல்லி இருக்கிறார். கதையை அசினிடம் சொல்லி அட்வான்ஸ் கொடுக்கப்பட்டு விட்டது. போட்டோ சூட் எடுக்கலாம் என அசினை அழைத்து பிகினி உடையை கொடுத்து போட்டோ ஷூட் எடுக்க சொல்லி இருக்கிறார்கள்.

    asin

    asin

    ஆனால் அசின் நான் இந்த மாதிரி ஆடை எல்லாம் போட்டு நடிக்க மாட்டேன் என சொன்னாராம். இருந்தாலும் விஷ்ணுவர்தன் வெளிநாட்டில் இருக்கும் ஒரு ஸ்டைலிஷான தமிழ் பெண் கதாபாத்திரம். அதனால் இப்படித்தான் இருக்கும்ல் நீங்கள் எதிர்பார்க்கிற கவர்ச்சி இருக்காது எனக் கூறுயிருக்கிறார். இருந்தாலும் தான் வாங்கிய அட்வான்ஸையும் திருப்பி கொடுத்து வந்து விட்டாராம் அசின். ஆனால் இந்த படத்திற்கு பிறகு தான் நயன்தாரா மார்க்கெட் பெரிய அளவில் உயர்ந்தது.

  • கழுத்துல நட்சத்திரம் மின்னுதே!.. தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா!.. பிரியா வாரியர் சிரிப்பே அழகு!..

    இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி என அடுத்தடுத்து 2 படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் பிரியா வாரியர். அனிகா சுரேந்திரனுக்கு பதில், இவரையே மெயின் ஹீரோயினாக போட்டிருக்கலாம் என ரசிகர்கள் பலரும் கூறினர்.

    அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படத்தில் பிரியா வாரியரை திடீரென நெகட்டிவ் ரோலில் நடிக்க வைத்து விட்டார் ஆதிக் ரவிச்சந்திரன். ஆனாலும், அதிலும், தனது திறமையை காட்டி, சிம்ரன் போல இடுப்பழகை காட்டி “தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா” பாடலுக்கும் நடனமாடி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விட்டார் பிரியா வாரியர்.

    அஜித் படத்துக்குப் பிறகு தமிழில் பல பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு படத்தில் கூட இன்னமும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கோலிவுட்டில் கிடைக்கவே இல்லை. ஏற்கனவே கைவசம் உள்ள 2 இந்தி படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

    இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடலை ஒட்டியபடி ரொம்பவே மெல்லிசான ஆடையை அணிந்துக் கொண்டு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதிலும், அவர் கழுத்தை ஒட்டியபடி இருக்கும் அந்த பெரிய நட்சத்திரம் போட்ட டாலர் செயின் கவனத்தை கவர்கிறது.

    பிரியா வாரியருக்கு நல்ல நடிப்புத் திறமை உள்ளது என்றும் தொடர்ந்து பல தமிழ் படங்களில் அவர் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

  • அஜித்தின் புதிய படத்தில் அந்த நடிகை?!.. ஜோடி பொருத்தம் செமயா இருக்குமே!….

    Ajithkumar: விடாமுயற்சி படம் சரியாக போகாத நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த படம்தான் குட் பேட் அக்லி. கதை, லாஜிக் என பெரிதாக ஒன்றுமில்லை என்றாலும் அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்தும் காட்சிகளை பார்த்து பார்த்து வைத்திருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். ஏற்கனவே மார்க் ஆண்டனி ஹிட் கொடுத்த நிலையில் இவர் இயக்கிய அடுத்த படம் குட் பேட் அக்லி.

    பக்கா கேங்ஸ்டர் கதையில் அஜித்தை மிகவும் கலர்ஃபுல்லாக காட்டி ரசிக்க வைத்திருந்தார் ஆதிக். ஒவ்வொரு காட்சியிலும் தியேட்டர்களில் விசில் பறந்தது. ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்களும் மாஸாக அமைந்தது. இந்த படத்தில் அஜித்தின் மனைவியாக திரிஷா நடித்திருந்தார்.

    அஜித்துக்கு ஒரு பழக்கம் உண்டு. ஒரு இயக்குனரை பிடித்துவிட்டால் அவரின் இயக்கத்தில் தொடர்ந்து நடிப்பார். ஏற்கனவே சிறுத்தை சிவா, ஹெச்.வினோத் ஆகியோரின் இயக்கங்களில் அப்படி நடித்திருக்கிறார். அந்தவகையில் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளார்.

    குட் பேட் அக்லி படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தோடு ஆதிக்குக்கு முட்டிக்கொண்டதால் இந்த படத்தை அந்நிறுவனம் தயாரிக்கவில்லை. இப்போது இந்த படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக செய்திகள் கசிந்திருக்கிறது.

    வருகிற நவம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்கி மார்ச் மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர். எனவே படம் அஜித்தின் பிறந்தநாளான 2026 மே 1ம் தேதி வெளியாகலாம். ஒருவேளை இது நடக்கவில்லை எனில் ஜூன் மாதம் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் கேஜிஎப், கோப்ரா போன்ற படங்களில் நடித்த ஸ்ரீதி ஷெட்டி நடிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

    அக்டோபர் மாதம் வரை அஜித் கார் ரேஸில் கலந்துகொள்ளவிருக்கிறார். அதன்பின் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை நடித்துவிட்டு மார்ச் மாதம் மீண்டும் கார் ரேஸில் கலந்துகொள்ளவிருக்கிறார்.

  • சூர்யாவுக்கு டஃப் கொடுத்த ஏஆர் முருகதாஸ்.. இந்த குத்து குத்துறாரே? வைரலாகும் வீடியோ

    ஏஆர் முருகதாஸ்:

    தீனா படத்தின் மூலம் முதன் முதலில் இயக்குனராக அறிமுகமானார் ஏ ஆர் முருகதாஸ். தற்போது சிவகார்த்திகேயனை வைத்து மதராசி என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இது சிவகார்த்திகேயனுக்கு 23 வது திரைப்படமாக அமைந்துள்ளது. இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் அந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தமிழில் தீனா, கஜினி, ரமணா ,துப்பாக்கி போன்ற படங்களின் மூலம் மிகவும் பிரபலமானார் ஏ ஆர் முருகதாஸ்.

    விஜய்க்கு மாஸ் படம்:

    அதிலும் துப்பாக்கி திரைப்படம் அவருடைய கெரியரையே மாற்றிய ஒரு திரைப்படமாக அமைந்தது. விஜய்க்கும் ஒரு மாஸ் ஆக்சன் திரைப்படமாக மாறியது. அதன் பிறகு ரஜினியை வைத்து தர்பார் என்ற படத்தை இயக்கினார் .அந்த படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. அதிலிருந்து தமிழில் ஏ ஆர் முருகதாஸுக்கு மார்க்கெட் குறைய தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தெலுங்கில் மகேஷ்பாபுவை வைத்து ஒரு படத்தை எடுத்தார்.

    மதராசி:

    அந்த படம் யாரும் எதிர்பார்க்காத ஒரு தோல்வியை தழுவியது. அப்போதிலிருந்தே ஏ ஆர் முருகதாஸை நெருங்க பல நடிகர்கள் யோசித்தார்கள். ஆனால் சிவகார்த்திகேயன் அவருடன் இணைந்து பணிபுரிய வேண்டும் என ஆசைப்பட்டு இப்போது மதராசி திரைப்படத்தில் நடித்து வருகிறார் .இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார்.

    மகளுடன் குத்தாட்டம்:

    இவர்களுடன் இணைந்து விக்ராந்த், டான்சிங் ரோஸ் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசரை பட குழு வெளியிட்டது .அதிலிருந்து இந்த படத்தின் மீது மக்கள் மத்தியில் பெரிய அளவு எதிர்பார்ப்பை பெற்று இருக்கிறது. இந்த படம் வரும் செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாக இருக்கின்றது .

    இந்த நிலையில் ஏ ஆர் முருகதாஸ் அவருடைய மகளின் பூப்புனித நீராட்டு விழாவை அவருடைய சொந்த ஊரான கள்ளக்குறிச்சியில் நடத்தி வருகிறார். இந்த விழாவில் தன் மகளுடன் ஏ ஆர் முருகதாஸ் இணைந்து சூர்யா நடித்த ரெட்ரோ படத்தில் வரும் கனிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார் .அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    அந்த வீடியோ காண: https://x.com/NanDhanDaBossUh/status/1934468483682808216

  • பில்லா 3ம் பாகமே எடுக்கலாம்!.. மனைவி ஷாலினியுடன் செம மாஸாக வந்த ஏகே!.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்!..

    நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் நிகழ்ச்சி ஒன்று புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மேற்கொண்ட பார்வை படத்தில் இருந்தேன் நடிகர் அஜித்குமாரின் உடல் எடை அதிகரித்திருந்த நிலையில், விஸ்வாசம், வலிமை, குட் பேட் அக்லி ஆரம்பக் காட்சிகள் என பருமனான உடல் அமைப்புடனே நடித்த வந்தார்.

    கார் பந்தயத்திற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டு அஜித்குமார் 25 கிலோ வரை உடல் எடையை குறைத்த நிலையில், விடாமுயற்சி படத்தின் சவதீகா பாடல் மற்றும் குட் பேட் அக்லி படத்தில் சில காட்சிகளிலும் ஸ்லிம் அஜித் ஆக நடித்து அசத்தினார்.

    நடிகர் அஜித்குமார் அடுத்து நடிக்க உள்ள படத்தில் எல்லாம் இதே போன்ற ஒல்லியான பக்கவாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பில்லா 3 படமே எடுக்கலாம் என்றும் லேட்டஸ்டாக தனது மனைவி ஷாலினியுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில், விஷ்ணுவர்தனுடன் அஜித்குமார் கைகோர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.

    அஜித் குமார் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தான் நடிக்க போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், அடுத்த படமும் தரமான சம்பவமாகத்தான் இருக்கப் போகிறது.

    ஜன நாயகன் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்பது உறுதி ஆகிவிட்ட நிலையில், வசூல் மன்னனாக ரஜினிகாந்தை தொடர்ந்து அஜித்குமார் இருப்பார் என்கின்றனர்.