Tag: ajithkumar

  • புது படத்துக்கு அஜித் வாங்கும் சம்பளம்!. பட்ஜெட் மட்டும் இவ்வளவு கோடியா?!…

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி படம் சரியாக போகாத நிலையில் இந்த படம் அஜித்துக்கு கை கொடுத்தது. ஏனெனில் ரசிகர்கள் அஜித்திடம் என்னவெல்லாம் எதிர்பார்ப்பார்களோ அது எல்லாமே படத்தில் இருந்து. ஒரு பக்கா மாஸ், ஆச்ஷன் படமாக குட் பேட் அக்லி உருவாகியிருக்கிறது.

    விடாமுயற்சி படத்தில் வில்லன் குரூப்பிடம் மாட்டிகொண்டு அடிவாங்கிய அஜித்தை ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே, மாஸாக வெளிவந்த குட் பேட் அக்லி படம் அஜித்திக்கு முழு திருப்தியை கொடுத்தது. அஜித் ஒரு பக்கம் சினிமா, ஒரு பக்கம் கார் ரேஸ் என பயணித்து வருகிறார்.

    விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களிலும் நடித்து முடித்துவிட்டுதான் அவர் கார் ரேஸில் கலந்துகொள்ளப்போனார். இந்த வருடம் அக்டோபர் மாதம் வரை அவருக்கு அங்கே கார் ரேஸ் இருக்கிறது. அதை முடித்துவிட்டு அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார். அவர் நடிக்கவுள்ள புதிய படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளார்.

    இந்த படத்தை வேல் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த வரும் நவம்பர் மாதம் துவங்கவிருக்கிறது. அதோடு பிப்ரவரி மாத இறுதிக்குள் ஷூட்டிங் முடிந்துவிடும் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தில் அஜித்தின் சம்பளம் 180 கோடி எனவும், ஆதிக் ரவிச்சந்திரனுக்கு 12 கோடி சம்பளம் எனவும் சொல்கிறார்கள்.

    இவர்கள் இருவரின் சம்பளமுமே 192 கோடி என்கிற நிலையில் மொத்தமாக 260 கோடிக்குள் படத்தை முடித்துவிடுகிறேன் என ஆதில் சொல்லி இருக்கிறாராம். ஆனால், எப்படியும் 280லிருந்து 300 கோடி வரை ஆகும் என சொல்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். இந்த படத்தில் நடித்து முடித்துவிட்டு மீண்டும் மார்ச் மாதம் ரேஸுக்கு போகவிருக்கிறார் அஜித்.

    மார்க் ஆண்டனி, குட் பேட் அக்லி போல இந்த படமும் பக்கா மாஸ் கேங்ஸ்டர் படமாக இருக்கும் என்றே கணிக்கப்படுகிறது. அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்குவது அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

  • இது என்னோட நேரம்!.. இனிமே பின்வாங்க மாட்டேன்!.. அஜித் இப்படியெல்லாம் பேசுவாரா?!…

    Ajithkumar: சினிமாவில் அஜித் வித்தியாசமானவர் என்றே சொல்லலாம். தான் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட கலந்துகொள்ள மாட்டார். சினிமா தொடர்பான எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளமாட்டார். நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும் என வற்புறுத்தினால் ‘என்னை மிரட்டுகிறார்கள் என முதலமைச்சரை வைத்துக்கொண்டே மேடையில் பேசுவார்.

    அஜித் கடைசியாக கலந்துகொண்டது அவர் நடிப்பில் வெளியான அசல் பட புரமோஷன் நிகழ்ச்சியில்தான். அது நடந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது. ஒருபக்கம் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி கார் ரேஸ்களிலும் கலந்துகொள்கிறார். ஏற்கனவே துபாயில் இவரின் டீம் 3வது பரிசை வென்றது. இப்போது ஐரோப்பிய நாடுகளில் நடந்து வரும் ரேஸ்களில் அஜித் கலந்துகொண்டு வருகிறார்.

    பைக்கை எடுத்துக்கொண்டு வெகு தூரம் பயணிப்பது, துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் கலந்துகொள்வது, ரிமோட் மூலம் இயங்கும் ஹெலிகாப்டர்களை இயக்குவது என சினிமாவை தாண்டி அஜித்துக்கு நிறைய விஷயங்கள் மீது ஆர்வமுண்டு. எனவே, நேரம் கிடைக்கும்போதெல்லாம் அதை செய்து வருகிறார்.

    குட் பேட் அக்லி படத்தை முடித்துவிட்டு ரேஸுக்கு போனவர் இந்த மாதம் அக்டோபர் வரை ரேஸில் கலந்துகொள்கிறார். அதன்பின் 5 மாதங்கள் சினிமாவில் நடித்துவிட்டு அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் மீண்டும் ரேஸுக்கு போகவிருக்கிறார். இனிமேல் சினிமா, கார் ரேஸ் என இரண்டிலுமே அவர் தொடர்ந்து பயணிக்க திட்டமிட்டிருக்கிறார்.

    இந்நிலையில், கார் ரேஸின் போது ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த அஜித் ‘என்னைப் பற்றி மற்றவர்கள் சொல்லும் விமர்சனங்களை வைத்து என்னை நான் மதிப்பிட்டு கொள்ள மாட்டேன். நான் ஒரு வெற்றியாளராக இருக்க விரும்புகிறேன். நான் சினிமாவில் நடிக்க வந்தபோது என் தமிழ் உச்சரிப்பு நன்றாக இல்லை என்றர்கள். எனக்கு தமிழ் சரியாக பேசவரவில்லை. இது தொடர்பாக வந்த விமர்சனங்களுக்கு பிரகு என் பலவீனங்களை சரி செய்ய முயற்சி எடுத்து அதை சரி செய்தேன்.

    சினிமாவை போல கார் ரேஸிலும் காயங்கள் உண்டாகும். ஆனால், பயிற்சி எடுப்பேன். விரைவாக கற்றுக்கொள்வேன். எனது நேரம் வந்துவிட்டது. இது என்னுடைய நேரம். என்னவானாலும் பின் வாங்க மாட்டேன்’ என பேட்டி கொடுத்திருக்கிறார் அஜித்.

  • ஹை பட்ஜெட் கேங்ஸ்டர் படம்!. ஆதிக்கை அஜித் மீண்டும் டிக் செய்தது எப்படி?…

    Ajithkumar: சாக்லேட் பாயாக இருந்து மாஸ் ஹீரோவாக மாறியிருப்பவர் அஜித். துவக்கத்தில் காதல் கலந்த ஆக்‌ஷன் படங்களில் மட்டுமே நடித்து வந்த அஜித் பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் அவரை மாஸ் நடிகராக மாற்றியது. எனவே, அஜித்தும் அந்த ரூட்டிலேயே பயணிக்க துவங்கினார். நல்ல கதைகளில் நடிக்க வேண்டும் என்பதை விட விஜய்க்கு டஃப் கொடுக்க வேண்டும் என்பதே அஜித்துக்கே டார்கெட்டாக மாறியது.

    எனவே, விஜயின் வாரிசு படம் வெளியானபோது தனது துணிவு படத்தை ரிலீஸ் செய்தார். துணிவு படம் நல்ல வசூலை பெற்றது. அதே அஜித் மகிழ் திருமேனியுடன் இணைந்து விடாமுயற்சி என்கிற நல்ல கதையிலும் நடித்தார். இந்த படத்தில் வில்லன் ஆட்களிடம் அடிவாங்குவது போல கூட சில காட்சிகளில் நடித்தார்.

    இதனாலேயே இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. எனவேதான், ஆதிக் ரவிச்சந்திரனோடு இணைந்து குட் பேட் அக்லி படத்தில் நடித்தார். இந்த படத்தில் தனது ரசிகர்கள் தன்னிடம் என்ன எதிர்பார்ப்பார்களோ அதை அனைத்தையும் கொடுத்தார் அஜித். அதனாலேயே இப்படம் ஹிட் அடித்தது.

    இப்போது மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் அஜித். அஜித் இப்போது கார் ரேஸில் இருக்கிறார். இந்த மாதம் அக்டோபர் வரை அவருக்கு அங்கே கார் ரேஸ் இருக்கிறது. அதை முடித்துவிட்டு இந்த வருடம் நவம்பர் முதல் அடுத்த வருடம் பிப்ரவரி வரை இந்த புதிய படத்தில் அஜித் நடிப்பார் என்கிறார்கள்.

    அதன்பின் மார்ச் மாதம் முதல் மீண்டும் அஜித் கார் ரேஸில் கலந்துகொள்ளவிருக்கிறார். இந்நிலையில், அஜித்தை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ள அடுத்த படம் மிகவும் அதிக பட்ஜெட் கொண்ட கேங்ஸ்டர் படம் என சொல்லப்படுகிறது. அதோடு, அஜித்தின் புதிய படத்திற்கு 4 இயக்குனர்களை தேர்வு செய்து வைத்திருந்தார் அஜித். ஆனால், அவர்கள் சொன்ன கதையை விட ஆதிக் சொன்ன ஒன்லைன் நன்றாக இருந்ததால் அவர்களை ரிஜெக்ட் செய்துவிட்டு ஆதிக் இயக்கத்தில் நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறார் என்கிறார்கள்.

  • சின்ன பொண்ணா இருந்தாலும் கொடுக்கிற மரியாதைய பாருங்க.. வைரலாகும் அஜித் வீடியோ

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். அவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்திருந்தார். அதற்கு முன் வெளியான விடாமுயற்சி திரைப்படம் மோசமான விமர்சனத்தை பெற்ற நிலையில் குட் பேட் அக்லி ஒட்டுமொத்த வெற்றியையும் பெற்று கொடுத்தது.

    படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். படம் முழுக்க முழுக்க ரசிகர்களுக்கான படமாகவே அமைந்ததனால் அஜித் ரசிகர்கள் உட்பட மற்ற ரசிகர்களும் இரண்டரை மணி நேரம் திருப்தியாக கழித்தோம் என்ற மனநிலையில் தான் படத்தை பார்த்துவிட்டு சென்றனர். அஜித் என்றாலே மாஸ் ஓபனிங் ஆக்சன் காட்சிகள் பில்டப் என ஒரு கமர்ஷியல் பேக்கேஜாக இருக்க வேண்டும் என்றுதான் ரசிகர்கள் விரும்புகின்றனர்.

    அதை விடாமுயற்சி திரைப்படம் முற்றிலுமாக ஏமாற்றியது. அதற்கு 10 மடங்கு திருப்பிக் கொடுத்தது குட் பேட் அக்லி திரைப்படம். தற்போது அஜித் கார் ரேஸில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஐரோப்பாவில் நடைபெறும் கார் ரேசில் பங்குகொண்டு வருகிறார் அஜித் .அவருடைய அடுத்த படத்திற்கான வேலைகள் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றன .

    அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கப் போகிறார். படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்த வருடம் அக்டோபர் மாதத்திற்குள் கார் ரேஸ்சை முடித்துவிட்டு அதன் பிறகு தனது அடுத்த கட்ட படத்தின் வேலையை ஆரம்பிக்க இருக்கிறார் அஜித். இந்த நிலையில் கார் ரேஸ் வெளிநாடுகளில் நடந்து கொண்டிருந்தாலும் அங்கும் இருக்கிற தமிழ் மக்கள் அஜித்தை பார்ப்பதற்காக செல்வதை நாம் வீடியோக்களில் பார்த்து வருகிறோம் .

    அவரிடம் ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு தங்களுடைய மகிழ்ச்சியை ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சிறுமி ஒருவர் அஜித்திடம் ஆட்டோகிராப் வாங்க அவரிடம் ஏதோ பேசிவிட்டு போட்டோவும் எடுத்துக் கொண்டார் அஜித். சிறு பிள்ளையாக இருந்தாலும் அவர் மீது கை போடாமல் அருகில் அப்படியே நின்று போட்டோ எடுத்துக் கொண்டார் அஜித்.

    இதை பார்த்த நம் நெட்டிசன்கள் சின்ன பொண்ணாக இருந்தாலும் அவர் மீது கை போடாமல் மிகவும் டீசன்டாக நடந்து கொண்டார் அஜித். ஆனால் இப்ப இருக்கிற ஒருவருக்கு அது பற்றி எதுவும் தெரியவில்லை என விஜயை மறைமுகமாக விமர்சித்திருக்கிறார் அந்த ரசிகர்.


  • அஜித் கேட்கும் சம்பளம்!. தலதெறிக்க ஓடும் தயாரிப்பு நிறுவனங்கள்!.. ஏகே செய்வது சரியா?!…

    Ajithkumar: சினிமா உலகில் நடிகர்களுக்கான சம்பளம் என்பது பல கோடிகளுக்கு உயர்ந்துவிட்டது. அதுவும் ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கு சம்பளம் எக்குதப்பாக எகிறி வருகிறது. அமராவதியில் அறிமுகமான போது அஜித் வாங்கிய சம்பளம் 40 ஆயிரம். அதன்பின் சில லட்சங்கள் வாங்கினார்.

    சினிமாவில் ஒரு நடிகரின் சம்பளம் என்பது அவரின் படங்கள் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்தே அமையும். அஜித்தின் படங்கள் தொடர் வெற்றியை பெறுவது இல்லை. அவரின் வலிமை படம் பெரிய வெற்றியை பெறவில்லை. அடுத்து வந்த துணிவு படம் வெற்றி பெற்றது. அடுத்து வந்த விடாமுயற்சி படம் தோல்வி அடைந்தது. அடுத்து வந்த குட் பேட் அக்லி ஓரளவுக்கு வசூலை பெற்றாலும் சூப்பர் ஹிட் அடிக்கவில்லை.

    ஆனாலும், அஜித் படத்திற்கு படம் தனது சம்பளத்தை ஏற்றிகொண்டே போகிறார் என்கிறார்கள். அதற்கு காரணம் விஜய் வாங்கும் சம்பளம்தான். அஜித் விஜயையே தனது போட்டி நடிகராக கருதுகிறார். விஜய்க்கு என்ன சம்பளம் என தெரிந்துகொண்டு அதிலிருந்து சில கோடிகள் குறைத்து கேட்கிறார் என்கிறார்கள்.

    வாரிசு படத்திற்காக விஜய் 110 கோடி சம்பளம் வாங்கிய போது அதே படத்தோடு வெளிவந்த துணிவு படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் 70 கோடி சம்பளம் வாங்கினார் என சொல்லப்பட்டது. அஜித்தின் சம்பளம் முதன் முதலாக 100 கோடியை தாண்டியது விடாமுயற்சி படத்தில்தான். விஜயோ இப்போது 200 கோடி சம்பளத்தை தாண்டிவிட்டார். ஜனநாயகன் படத்திற்காக 200 கோடி மற்றும் ஜிஎஸ்டி சேர்த்து 225 கோடி வாங்கியிருக்கிறார் என்கிறார்கள்.

    எனவே, அஜித்தும் 175 கோடி வரை சம்பளம் கேட்பதாக சொல்லப்படுகிறது. அதனால்தான் அவரின் அடுத்த படத்திற்கு யார் தயாரிப்பாளர் என்பது இதுவரை முடிவாகவில்லை என்கிறார்கள். ஏனெனில், இந்த படத்திற்கு ஆதிக் சொல்லும் பட்ஜெட் 275 கோடி. குட் பேட் அக்லி படத்தால் தயாரிப்பாளருக்கு 60 கோடி வரை நஷ்டம் என்கிறார்கள். எனவேதான் அந்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அஜித் – ஆதிக் படத்திலிருந்து ஒதுங்கிக்கொண்டது.

    அஜித் கேட்கும் சம்பளத்தை கொடுத்தால் நஷ்டம் ஏற்படும் என கணக்குப்போட்ட வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனமும் ஒதுங்கிக்கொண்டது. அதேபோல், அஜித்தை வைத்து பல படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமும் ஒதுங்கிக்கொண்டது. எனவேதான், தனது சொந்த செலவில் ஆதிக்கிற்கு ஆபிஸ் போட்டு கொடுத்திருக்கிறார் அஜித். அங்குதான் இப்போது படத்திற்கான கதை விவாதம் நடைபெற்று வருகிறது.

  • குட் பேட் அக்லி பார்த்து மிரண்டு போன பாலையா!.. ஆதிக்குக்கு அடிச்ச செம லக்!..

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து அவரின் ரசிகர்களை 100 சதவீதம் திருப்திப்படுத்திய படம்தான் குட் பேட் அக்லி. ஏனெனில், இந்த படத்திற்கு முன் வெளியான விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை. எனவே, அப்படம் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தது.

    ஆனால், அடுத்து வந்த குட் பேட் அக்லி படத்தில் ரசிகர்கள் அஜித்தை எப்படி பார்க்க வேண்டும் என ஆசைப்படுவார்களோ அதை அப்படியே காட்டியிருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். மங்காத்தா, பில்லா படத்திற்கு பின் ஒரு பக்கா மாஸ் ஹீரோவாக இந்த படத்தில் நடித்திருந்தார் அஜித்.

    எனவே, இப்[படம் அஜித் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. இப்படம் 250 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு பெரிய ஹீரோக்களின் கால்ஷீட் கிடைக்காமல், தன்னை நிரூபிக்க முடியாமல் ஆதிக் சோர்வில் இருந்தபோது ‘நாம் இணைந்து ஒரு படம் பண்ணுவோம்’ என சொல்லி நம்பிக்கை கொடுத்தார் அஜித்.

    அந்த உற்சகாத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் மார்க் ஆண்டனி படத்தை எடுத்து ஹிட் கொடுத்தார். இந்த படத்தின் வெற்றிதான் குட் பேட் அக்லி உருவாக காரணமாக இருந்தது. அஜித்துக்கு ஒரு பழக்கம் உண்டு. ஒரு இயக்குனரை பிடித்துவிட்டால் அவரின் இயக்கத்தில் தொடர்ந்து சில படங்கள் நடிப்பார். எனவே, அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக்கே இயக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

    இந்நிலையில், இந்த படத்தை தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா சமீபத்தில் பார்த்து மிரண்டு போய்விட்டாராம். இது நம்ம ஸ்டைல் ஆச்சே.. தூக்குடா அந்த செல்லத்த’ என சொல்ல மாமனார் பிரபுவோடு ஆந்திரா சென்று பாலையாவை பார்த்திருக்கிறார் ஆதிக். சிவாஜி மகனோடு ஆதிக் வந்ததில் மேலும் உற்சாகம் அடைந்த பாலையா ‘உங்கள் இயக்கத்தில் நான் ஒரு படம் நடிக்கிறேன். கதையை ரெடி பண்ணுங்க’ என சொல்லிவிட்டாராம்.

    ஆனால், இதை முடிவு செய்வது அஜித்தான் என சொல்லப்படுகிறது. தன்னுடைய அடுத்த பட இயக்குனர் ஆதிக் என முடிவு செய்துவிட்டால் அதை ஆதிக் தட்ட முடியாது. ஒருவேளை அஜித்தின் முடிவு வேறாக இருந்தால் பாலையாவை ஆதிக் இயக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

  • கோட் விஜய்யை போட்டுத்தாக்கிய ஓஜி சம்பவம்!.. ஆதிக் காட்டுத்தனம்!.. குட் பேட் அக்லி பாட்டு எப்படி?..

    அட்டகாசம் படத்தில் “உனக்கென்ன உனக்கென்ன” பாடலை போட்டு விஜய்க்கு எதிராக அஜித் சம்பவம் செய்ததை போல மீண்டும் ஒரு சம்பவத்தை ஓஜி சம்பவம் பாடல் மூலம் செய்திருக்கிறார். கோட் என விஜய் கடந்த ஆண்டு படம் நடித்த நிலையில், அதன் கிளைமேக்ஸில் ஒஜி என ஒரிஜினல் கேங்ஸ்டராக வந்திருப்பார். தற்போது அஜித் குட் பேட் அக்லி படத்தில் ஒஜியாக வருகிறார்.

    ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் முதல் பாடலே ஒஜி சம்பவம் என்கிற பெயரில் தான் உருவாகியுள்ளது. போதாக்குறைக்கு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அவரும் ஸ்டூடியோவில் மைக்கை மாட்டிக் கொண்டு காட்டுத்தனமாக கத்தி பாடுகிறார்.

    தொண்டையெல்லாம் கிழியப் போகிறது என ஜி.வி. பிரகாஷ் குமார் ஏற்கனவே ப்ரோமோவில் சொன்ன நிலையில், அந்த லெவலை தாண்டி அஜித்துக்காக ரியல் ஃபேன் பா நான் என கத்தி பாடியிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.

    அஜித் குமாரின் அனைத்து கேங்ஸ்டர் படங்களில் இருந்தும் ஒரு தரமான சம்பவத்தை ரசிகர்களுக்கு டைம் டிராவல் செய்தது போல குட் பேட் அக்லி படத்தில் கொடுத்து ரசிகர்கள் தியேட்டருக்குச் சென்று அஜித்தை எப்படி பார்க்க ஆசைப்படுகிறார்களோ அந்த விஷயத்தை 100 சதவீதம் பூர்த்தி செய்யும் விதமாக ஆதிக் கொடுத்திருப்பார் என்பது இந்த பாடலை பார்த்தாலே தெரிகிறது.

    துப்பாக்கி, பீரங்கி எல்லாம் வந்தாலும் ஓஜி சம்பவம் செய்யும் என பாடல் வரிகளில் இடம்பெற்றுள்ள நிலையில், துப்பாக்கி விஜய் மற்றும் கோட் விஜய்யை டைரக்ட் அட்டாக் செய்துள்ளார் அஜித் குமார் என்கின்றனர்.

  • பில்லா 3 ஆ… அஜித் இயக்குனர் சொன்ன அதிரடி பதில்…தெறிக்கவிடும் ரசிகர்கள்

    Ajith: நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்து பில்லா 3 உருவாகும் என பேசப்பட்டு வந்த நிலையில் அப்படத்தின் இயக்குனர் விஷ்ணுவர்தன் சுவாரஸ்ய தகவலை தற்போது வெளியிட்டிருக்கிறார்.

    அஜித் – விஷ்ணுவர்தன் கூட்டணி

    ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த பில்லா படத்தின் ரீமேக்காக வெளிவந்தது அஜித்தின் பில்லா. இப்படத்தினை விஷ்ணுவர்தன் இயக்கி இருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். அஜித்துடன் நயன்தாரா, பிரபு, நமீதா, ரஹ்மான் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

    அஜித்தை இயக்க முதலில் கிடைத்த இரண்டு வாய்ப்பை மிஸ் செய்த விஷ்ணுவர்தன் மூன்றாவதாக கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டார். அஜித்துக்கு சூப்பர் ஸ்கிரிப்ட் எழுதிக்கொண்டு செல்ல ரீமேக் படத்தில் தான் நடிக்க முடிவெடுத்து இருப்பதாக கூறிவிட்டாராம்.

    விஷ்ணுவர்தனின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்தார். 6 பாடல்களை கொண்ட இப்படத்தில் இரண்டு ரீமிக்ஸும் இருந்தது. முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் இரண்டாம் பாகமும் எடுக்கப்பட்டது.

    பில்லா3

    இந்நிலையில் பேட்டி ஒன்றில் விஷ்ணுவர்தனிடம் பில்லா 3 இயக்கப்படுமா எனக் கேள்வி முன்வைக்கப்பட்டது. கண்டிப்பாக மூன்றாம் பாகம் எல்லாம் வராது. ஆனால் அஜித்துடன் பேச்சுவார்த்தையில் இருக்கிறோம். விரைவில் ஒரு படம் இயக்கப்படும் எனவும் தெரிவித்து இருக்கிறார்.

    தற்போது விடாமுயற்சி படத்தினை முடித்த அஜித்குமார் அடுத்த திரைப்படமான குட் பேட் அக்லியில் பிஸியாக நடித்து இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் விரைந்து முடிக்கப்பட்டு படம் வரும் ஜனவரி மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதை தொடர்ந்து பெரிய பிரேக்கிற்கு பின்னர் அடுத்த படத்தில் அஜித் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் பிரசாந்த் நீலுடன் இணைவார் என பேசப்பட்டு வந்த நிலையில் சிறுத்தை சிவா மற்றும் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் இணைய இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • அஜீத்தைக் கடும் கோபத்துக்கு ஆளாக்கிய இயக்குனர்… டுவிஸ்ட் வைத்த தயாரிப்பாளர்

    ஆஸ்கர் மூவீஸ் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு அஜீத் குறித்தும் அவரது கோபம் பற்றியும் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு.

    அஜீத் அந்த பிரபல இயக்குனரோட பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்க ஒரு ஹோட்டலுக்கு வர்றாரு. அப்போ அங்கு பல பிரபலங்களும் வந்துருக்காங்க. அங்கே உள்ளவங்க கிட்ட அந்த இயக்குனர் பிசியா பேசிக்கிட்டு இருந்துருக்காரு. அப்போ அஜீத் சார் அங்கு வந்து அந்த இயக்குனரோட அசிஸ்டண்டுக்கிட்ட நான் வந்துருக்கேன்னு சொல்லுன்னு சொல்றாரு.

    அப்போ அவரு உள்ளே போய் சொல்லிட்டு வந்துடறாரு. ஆனா ரொம்ப நேரம் உட்கார்ந்து பார்த்த அஜீத் திரும்பவும் அந்த அசிஸ்டண்டு கிட்ட சொல்லி விடுறாரு. ஏற்கனவே நீங்க வந்ததை சொல்லிட்டேன் என்றவர் மீண்டும் அஜீத் சொன்னதற்காக இயக்குனரின் அறைக்கதவை திறந்து சொல்லிட்டு வர்றாரு. வந்ததும் அஜீத்திடம் சென்று சார் இப்ப கொஞ்சம் பிசியா இருக்காரு. இன்னொரு நாள் உங்களை சந்திப்பாராம்னு சொல்லிடறாரு.

    அதைக் கேட்டதும் அவரோட முக ரியாக்சனே மாறிடுது. அஜீத்துக்கு முகத்துல அவ்ளோ கோபம் இருந்ததை நான் அன்னைக்குத் தான் பார்த்தேன். நானே மிரண்டுட்டேன். அப்போ ஒரே ஒரு வார்த்தை தான் சொன்னாரு. அவரு அந்தக் கோபத்தைப் பக்குவமா தான் வெளிக்காட்டுனாரு. ‘ஒன் டே வில் கம்’னு சொல்லிட்டுப் போயிடறாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    அந்த டைரக்டர் அஜீத் சார் பெரிய ஆளா ஆனதுக்குப் பிறகு பல தடவை அவருக்கிட்ட வந்து வாய்ப்புகள் கேட்குறாரு. ஆனா அவரைப் பக்கத்துலயே அஜீத் சார் நெருங்க விடல. அஜீத் சாருடன் வேலை பார்க்குறவங்களுக்கு எல்லாம் வீடு கட்டிக் கொடுத்துருக்காரு. அவர் சொல்ல வேண்டிய கருத்தைத் தைரியமாகச் சொல்பவர். அவருக்கு தல தலன்னு பட்டத்தை வேணாம்னு இன்னைக்கும் ஒதுங்கி இருக்காரு.

    அந்த வகையில அந்த இயக்குனர் யாரு என்பதை பேட்டியின் கடைசியில் ஒரு க்ளூ கொடுத்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சொல்லி முடிக்கிறார். அவர் டேம் பேர்ல படம் எடுத்த ஒரு டைரக்டர் என்று சொல்கிறார். அவர் சொல்வதை வைத்துப் பார்க்கும் போது அமராவதி படம் என்று தெரிகிறது.

    அமராவதி என்பது ஒரு அணையின் பெயர் தான். அந்தப் படத்தை இயக்கியவர் செல்வா. அந்தப் படத்தில் அஜீத்துக்கு சங்கவி ஜோடியாக நடித்தார். கல்யாண் குமார், கவிதா, நாசர், சார்லி, தலைவாசல் விஜய் உள்பட பலரும் நடித்துள்ளனர். ஜீத் கதாநாயகனாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 1993ல் வெளியானது.

  • அஜித் என் வீட்டுக்கே வந்து கேட்டார்!. என் வாழ்க்கையே மாறிடிச்சி!.. உருகும் யுவன்…

    Yuvan shankar raja: இசைஞானி இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா. இளையராஜா பீக்கில் இருந்தபோது ரோஜா, ஜென்டில்மேன், காதலன் என ஏ.ஆர்.ரஹ்மான் மேலே ஏறி வந்தார். அவரின் இசை இளசுகளிடம் பெரும் வரவேற்பை பெற்றது. ரஹ்மானின் வெஸ்டர்ன் இசையில் ரசிகர்கள் மயங்கிப்போனார்கள்.

    அப்போது யுவன் சங்கர் ராஜாவின் நண்பர்கள் ‘இனிமேல் உங்க அப்பாலாம் இல்ல. ரஹ்மான் வந்துட்டாரு’ என சொல்ல, விமானியாக வேண்டும் என்கிற ஆசையில் இருந்த யுவன் நாமும் இசையமைப்பாளராக வேண்டும். நமது அப்பாவோடு இசை நின்று விடக்கூடாது என முடிவெடுத்திருக்கிறார். இதை அவரே பல பேட்டிகளிலும் சொல்லி இருக்கிறார்.

    ரஹ்மானை போலவும் யுவனும் மிகவும் சிறு வயதிலேயே சினிமாவில் இசையமைக்க வந்தார். துவக்கத்தில் சில ஹிட் பாடல்களை கொடுத்தார். யுவனை பொறுத்தவரை திடீரென ஹிட் பாடல்கள் மூலம் பிரபலமாவார். அதன்பின், சில வருடங்கள் களத்திலேயே இருக்க மாட்டார். முன் பனியா முதல் மழையா, நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி அருகில் வருவேன், தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன், பறவையே எங்கு இருக்கிறாய் போன்ற மறக்க முடியாத மனதை மயக்கும் பாடல்களை கொடுத்திருக்கிறார்.

    ஆனால், யுவனிடம் இருக்கும் ஒரே பிரச்சனை என்னவெனில் அப்பாவை போல வேகமாகவும், அர்ப்பணிப்புடனும் வேலை செய்ய மாட்டார். கொஞ்சம் சோம்பேறி. ஒரு பாடலுக்கு 3 மாதம் கூட எடுத்துக்கொள்வர். துபாயில் நட்சத்திர ஹோட்டலில் ரூம் போடுங்கள். அங்குதான் எனக்கு மெட்டு வரும் என்பார். அதனால்தான் அவரின் பக்கம் பல இசையமைப்பாளர்கள் போவதில்லை என சொல்லப்படுகிறது.

    பல வருடங்கள் கழித்து விஜயின் கோட் படத்தில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்கு காரணம் வெங்கட்பிரபு மட்டுமே. அஜித்தின் முக்கியமான கம்பேக் படங்களின் வெற்றிக்கு காரணமாக யுவன் இருந்திருக்கிறார். பில்லா, மங்காத்தா ஆகிய படங்களில் யுவன் போட்ட தீம் மியூசிக் அஜித் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட்டாக இருக்கிறது.

    இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய யுவன் ‘பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நல்ல இசையை கொடுத்தேன். ஆனால், படம் சரியாக போகவில்லை. என்னை ராசியில்லாத இசையமைப்பாளர்கள் என சொன்னார்கள். அப்போதுதான் அஜித் எனது வீட்டிற்கு வந்து ’தீனா படத்துகு நீதான் இசையமைக்க வேண்டும்’ என கேட்டார். அந்த படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகி எனக்கு வரிசையாக வாய்ப்புகள் வர துவங்கியது’ என சொல்லி இருக்கிறார்.